
அத்தியாயம் 22
அறுவை சிகிச்சையைத் தஞ்சாவூரிலேயே ஏற்பாடு செய்திருந்தான் யாஷ் பிரஜிதன்.
அவனது கவனம் முழுக்க அறுவை சிகிச்சை மீதே இருக்க, நிதர்ஷனாவின் கவனம் முழுக்க அவன் மீதே படர்ந்திருந்தது.
“நான் நடிச்சேன்னு உனக்குத் தெரியும் தான? அப்புறம் ஏன் என்னை அனுப்பி விட்ட அரக்கா?” அலுவல் அறையில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவனிடம் பின்னிருந்து அணைத்தபடி வினவினாள்.
“இன்னொரு தடவை ஆக்ட் பண்ணறதுக்கான வாய்ப்பை உனக்குக் குடுக்கக் கூடாதுன்னு நினைச்சேன்.” கழுத்தைத் திருப்பிக் கூறியவனின் பின்னங்கழுத்தில் முத்தமிட்டவள், “அப்போ நான் அழுதது எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.
“என்னை விட்டுப் போகணும்னு முடிவு எடுக்குறது சூசைடுக்குச் சமம்னு எனக்குத் தெரியும் ஆலம்பனா, சோ ஐ கெஸ்ட்…” என்றவனின் வயிற்றை இறுக்கமாகக் கட்டிக் கொண்டவளின் புறம் திரும்பி அவள் நெற்றியில் முட்டினான்.
“நாளைக்கு இயர்லி மார்னிங் சர்ஜரி… நைட்டு 8 மணிக்கு மேல தண்ணி கூடக் குடிக்கக் கூடாது. சோ, சீக்கிரம் சாப்பிட்டுத் தூங்கு நிது…” என்றான்.
“நீ வா…”
“வேலை இருக்குடி! ப்ளீஸ்ஸ்ஸ்…” எனக் கொஞ்சியவனை உர்ரென்று முறைத்தவள், “போ, நீ பொய் சொல்ற. நான் சொன்னதை மனசுல வச்சுட்டுத் தான என் பக்கத்துலயே வர மாட்டுற…” என உதட்டைப் பிதுக்கினாள்.
அவன் புருவ மத்தியில் முடிச்சு விழுந்ததில், “கடமைக்காக என்னைத் தொடுறன்னு சொன்னது இன்னும் உன் மனசுல இருக்குல்ல?” என ஏக்கமாகக் கேட்டவளை முறைத்தான்.
“ஆர் யூ மேட் ஆலம்பனா? நீயும் நானும் எவ்வளவோ பேசியிருக்கோம். சில நேரம் மாறி மாறி ஹர்ட் பண்ணிருக்கோம். பட், என் மனசுல நீ குடுத்த லவ்வைத் தவிர, நீ குடுத்த பிளசண்ட் மொமெண்ட்ஸ் தவிர எதுவுமே இல்ல.”
“நிஜமாவா?” தலை சாய்த்துக் கேட்டவளின் கன்னம் கிள்ளியவன்,
“என் மைண்ட் முழுக்க சர்ஜரில தான் இருக்கு. ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ…” சோர்வாய் உரைத்த யாஷ் பிரஜிதனுக்கு மொத்தத் தைரியமும் வடிந்த நிலை.
ஆடவனின் கேசத்தைக் கோதி விட்டவளுக்கு அவனது மனச் சோர்வு புரிந்தது.
“நீ போய் சாப்பிட்டுத் தூங்கு நிது, கோ…” என வம்படியாக அனுப்பி விட, வாடிய முகத்துடனே அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் அறைக்குச் சென்றதுமே, அங்கு நிவேதனும் கதிரவனும் இருந்தனர்.
“ரூம்ல இல்லாம எங்க போன நீ?” நிவேதன் கேட்டபடி அவளுக்கு உணவை ஊட்ட எத்தனிக்க அவள் மறுத்தாள்.
“இப்ப பசிக்கல.”
“நீ எட்டு மணிக்குள்ள சாப்பிடணுமாம் நிதா…”
அவளிடம் பதிலே இல்லை.
“என்னாச்சு நிதா?” நிவேதன் மென்மையாய் கேட்டதும் தான் தாமதம்.
பொலபொலவென அழத் தொடங்கி விட்டாள்.
“ஏய், என்னாச்சு? எதுக்கு அழுவுற?” இரு ஆடவர்களும் பதறி விட, “தெரியல, எனக்கு அழுகையா வருது…” என்றவளைக் கண் கலங்க ஏறிட்டான் நிவேதன்.
“ஆபரேஷன் நினைச்சு பயமா இருக்கா?”
“அதை நினைச்சு நான் ஏன் பயப்படப் போறேன்? அந்த அரக்கன் கூட இருப்பான்ல.” என்றவளைக் குழப்பமாய் பார்த்தவன், “அப்புறம் ஏன் நிதா அழுவுற?” என்றான்.
“அதான் தெரியலனு சொல்றேன்ல…” என உதட்டைக் குவித்தாள்.
“ம்ம்ஹும், நீ சரிப்பட்டு வரமாட்ட. நான் போய் யாஷைக் கூப்பிடுறேன்.” கதிரவன் எழுந்திருக்க, “நீ கூப்பிட்டாலும் அவன் வரமாட்டான். அவனுக்கு இப்ப சர்ஜரி நினைப்பு தான். ஆனா எனக்கு அவன் நினைப்பு தான் இருக்கு. என்னைப் பார்த்துப் பேசக் கூட அவனுக்கு வலிக்குது. ஐ மிஸ் ஹிம் கதிரு…” என மீண்டும் அழத் தொடங்க, இருவரும் திருதிருவென விழித்து விட்டுப் பின் சத்தமாகச் சிரித்தனர்.
“ஏண்டா சிரிக்கிறீங்க?” நிதர்ஷனா கோபமாகப் பார்க்க,
நிவேதன், “அவன் என்ன, உன்னைக் கழற்றி விட்டுட்டு இன்னொரு பொண்ணோடயா சுத்திட்டு இருக்கான். எங்களுக்கே அவ்ளோ படபடப்பு இருக்கும்போது அவனுக்கு இருக்காதா நிதா? உனக்கு ஆபரேஷன் முடிச்சா தான் அவனால நிம்மதியா மூச்சு விட முடியும்…” என்றான்.
“வேடிக்கை பார்க்கப் போற உங்களுக்கே இப்படி இருக்குன்னா, தலையைப் பொளக்கப் போறதே எனக்குத் தான. அப்போ எனக்கு இருக்காதா? என்னால அவன் இல்லாம இருக்க முடியல நிவே… அவன் விலகிப் போனாலே கையெல்லாம் நடுங்குது. திரும்பி வருவேனா, வரமாட்டேனான்னு எனக்குத் தெரியல. அதுவரையாவது அவன்கூட ஒரு நிமிஷம் வீணாக்காமல் இருக்கணும்னு நினைக்கிறது தப்பா?”
“வாயை மூடு நிதா!” நிவேதன் கத்தி விட்டான்.
“அறிவு கெட்டத்தனமா பேசாத. அதெல்லாம் அவன் பார்த்துப்பான். உன்னைத் திரும்பி வரவைக்கத்தான இவ்ளோ கஷ்டப்படுறான். நீ திரும்பி வரணும். அந்த எண்ணத்தோட இரு!” தமையனின் அதட்டலில், “போ… வர வர அவன் கூடச் சேர்ந்துக்கிட்டு, அவனுக்காக என்னையே அடிக்கிற… திட்டுற… போங்கடா!” எனக் கோபம் காட்ட, நிவேதன் சட்டெனத் தணிந்தான்.
“அதில்ல நிதா… நீ இப்படிப் பேசுனதும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. இந்தப் பாரேன், என் தங்கப் பொண்ணுல. இப்போதைக்கு எதைப் பத்தியும் யோசிக்காம தூங்குவியாம்… ப்ளீஸ்!” எனக் கொஞ்சி சமாளித்தான்.
“ம்ம்” அரைமனதாகத் தலையசைத்தவளின் ஒவ்வொரு செல்களும் அவனைக் கேட்டே அலைப்புறுகிறதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பாள்?
“அதுசரி, ஆபரேஷன் ஆபரேஷன்னு ஆறு நாளா சொல்லிட்டு இருக்கீங்களே, எங்க ஒரு நர்ஸைக் கூடக் காணோம்.” என வடிவேலு பாணியில் கூறிட, நிவேதன் சிரித்தான்.
கதிரவனோ, “உனக்கு அவன் எதுவுமே சொல்லலையா? அவன் இந்த வீட்டையே ஆஸ்பத்திரியா மாத்தி வச்சிருக்கான். கீழ கிட்சன் பக்கம் ரூம்ஸ் எல்லாம் இருந்துச்சுல? அதெல்லாம் இப்ப இல்ல, உள்ள போனா படுபயங்கரமா வச்சிருக்கான்…” எனச் சொல்லி முடிக்கும் முன்னே மடமடவென அங்குச் சென்றாள்.
நிதர்ஷனாவை அனுப்பி விட்டதும், யாஷ் பிரஜிதன் வேக நடையுடன் அவ்வீட்டின் பின்பகுதியில் பல மாதங்களாக உருவாக்கியுள்ள சோதனைக் கூடத்திற்குச் சென்றான்.
நவீனத்தின் உச்சமாக மருத்துவ உபகரணங்களுடன் கூடிய செயற்கை நுண்ணறிவின் சக்தியாக உருவெடுத்திருந்தது.
சென்னையில் அவளைத் தங்க வைப்பதில் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பதில், அனைத்தையும் தஞ்சாவூருக்கு மாற்றி இருந்தான்.
உயர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் (High-security research lab)
கிருமி இல்லா அறுவை சிகிச்சை அறை (Sterile operation theatre)
மூளை ஸ்கேன் ஆய்வு அறை (MRI/brain scanning room)
தீவிர கண்காணிப்பு மீட்பு அறை (ICU recovery room)
அவசரகால மின்சார ஆதரவு அமைப்பு (Backup power systems)
மருத்துவ செயற்கை நுண்ணறிவு கணினி மையம் (Medical AI servers) என அனைத்து வசதிகளையும் ஒருங்கே கொண்டிருந்தது.
சில மருத்துவர்களும் அங்குத் தீவிரமாய் தங்களது வேலைகளைச் செய்து கொண்டிருக்க, “ஆல் செட்” எனக் கேட்டுக் கொண்டு அங்கு வந்தான் யாஷ்.
மூளை நரம்பியல் மருத்துவரும், “எஸ் யாஷ்… நாளைக்கு சர்ஜரி முடிஞ்சாவது எங்களை வீட்டுக்கு விடுவீங்களா?” எனக் கிண்டலாகக் கேட்க, “ஷ்யூர்!” என வலுக்கட்டாயமாகச் சிறு புன்னகை கொடுத்தவன், பல கோடிகளைக் கொடுத்து மருத்துவர்களை விலைக்கு வாங்கி இருந்தான்.
இதுவரை எலைட் நிறுவனத்தின் மூலம் அவன் சம்பாதித்த அனைத்தையும், இந்த ஆராய்ச்சிக்காகவும் தன்னவளைக் காப்பதற்காகவும் செலவளித்துள்ளான்.
ரித்திகா அவனிடம், “மார்னிங் சிக்ஸ்கு ஸ்டார்ட் பண்ணிடலாம்ல யாஷ்” எனக் கேட்கத் தலையை ஆட்டினான்.
அவனது மனப்போராட்டம் அவளுக்கும் புரிந்தது.
அவனை மென்மையாய் அணைத்து விடுவித்தவள், “சில்டா… யூ டிட் இட்!” என்று அவன் நெஞ்சில் குத்த, “ஐ ஆம் சோ ஸ்கேர்ட் பேப்… இந்த இடத்துல என்னால நிக்கவே முடியல. ஐ டோன்ட் நோ, நாளைக்கு அவள் பக்கத்துல என்னால கண்டிப்பா இருக்க முடியாது.” என்றவனின் கைகள் வெளிப்படையாக நடுங்கியதை வியப்பாய் ஏறிட்டாள்.
“தி கிரேட் யாஷ் பிரஜிதனுக்குப் பயம்னு வெளில தெரிஞ்சா என்ன ஆகுறது?” எனக் கிண்டல் செய்த ரித்திகா, “என்னடா நீ… எல்லாம் சரியாகி வர்றப்ப முக்கியமான ஸ்டேஜ்ல இப்படிப் பண்ணுனா எப்படிடா? நீ இருக்கணும் யாஷ், ப்ளீஸ் பீ பிரேவ்…” என அவன் கையைப் பிடித்துக் கொள்ள,
“ஐ காண்ட் பேப்!” என்றான் தளர்ந்து.
“ப்ச் யாஷ்?”
“என்னோட ஏஐ க்ரியேஷனைக் கூட நான் ஒரு உயிரா தான் பார்த்தேன் ரித்தி. அதுல ஏதாவது பிரச்சினை வந்தா கூட ஹர்ட் ஆகும். உயிரில்லாத ஏஐக்கே அப்படின்னா, ஷீ இஸ் மை சோல் பேப்… இவ்ளோ நாள் அவளுக்குச் சரியானா போதும்னு தோணுச்சு. இப்போ அவளை ஆபரேட் பண்றதைப் பார்க்க எனக்குத் தைரியம் இல்லைன்னு தோணுது. ஐ காண்ட் ஈவன் ப்ரீத் பேப்…” என அவள் தோளில் சாய்ந்து கொண்டவன்,
“அவளைப் பார்த்தால் கூட என்னை மீறி பர்ஸ்ட் ஆகிடுவேனோனு பயந்து அவளை அவாய்ட் பண்ணிட்டு வந்துட்டேன். நான் தைரியமா இருக்கறதுனால தான், என்மேல இருக்குற நம்பிக்கைல அவளும் தைரியமா இருக்கா… நான் பயந்தா அவளும் பயந்துடுவாள்ல?” குரல் நடுங்கப் பேசிய யாஷ் பிரஜிதனின் தலையில் தானும் சாய்ந்து கொண்டாள் ரித்திகா.
“சில நேரம் பர்ஸ்ட் ஆகலாம் யாஷ். தப்பில்ல. நீ அவாய்ட் பண்ணப் பண்ண உனக்குத் தான் ஸ்ட்ரெஸ். இந்த ஹார்டு சிச்சுவேஷனைக் கடந்துடலாம் யாஷ். ஜஸ்ட் சில மணி நேரம் தான் இந்தப் போராட்டம் எல்லாம். ட்ரஸ்ட் மீ! தப்புப் பண்ணனும்னு நினைச்சவங்களுக்கே எல்லாம் நடக்குதுன்னா, நமக்கு என்னடா… நம்ம எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான நினைக்கிறோம், நாமளும் நல்லாருப்போம்…” எனும்போதே யாஷ் பிரஜிதனின் சட்டையைப் பிடித்திருந்தாள் நிதர்ஷனா.
“நிதா, இங்க என்ன பண்ற?” யாஷ் கேட்கும் முன்னே, அவன் இதழ்களை வன்மையாய் சிறைப் பிடித்திருந்தாள்.
ரித்திகா தான், “ஹே, இது லேப்!” எனக் கத்தியும் அவளது முத்தத்தின் நீளம் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை.
“சிங்கிள்ஸ் சாபம் உங்களைச் சும்மா விடாது!” என்று சிரித்தபடி சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்த ரித்திகா, மருத்துவர்களையும் பிரேக் எடுத்துக் கொண்டு வரக் கூறினாள்.
“ம்ம்ம்ம்…” யாஷ் அவளை விலக்கி நிறுத்த முயல, அவளோ அவனது பின்னங்கழுத்தை விட்டாளில்லை.
அவளை நிறுத்த வழி தெரியாமல் லேசாய் இதழைக் கடித்து வைத்தான்.
“ஸ்ஸ்! ஆ… அரக்கா?” எனப் பல்லைக் கடித்து விலகிய நிதர்ஷனாவிடம், “என்னடி பண்ணிட்டு இருக்க? டாக்டர்ஸ் எல்லாம் இருக்காங்க…” எனக் கடிந்தாலும் சிவந்திருந்த பெண்ணின் இதழ்களின் மீதே விழிகளைப் பதிய வைத்திருந்தான்.
“இருந்தா என்னவாம்? நான் உன் பொண்டாட்டி தான…” எனச் சிலுப்பியவள், அந்தப் பிரமாண்ட கூடத்தை ஒரு கணம் கண்ணிமைக்காது பார்த்தாள்.
“ஏதோ இங்கிலீஸ் படத்துல வர்ற மாதிரி இவ்ளோ பெருசா பாலிசா இருக்கே யாஷ்… சென்னைல கூட வீட்லயே இதே மாதிரி ஒரு லேப் இருக்கும், ஆனா இது அதெல்லாம் விடப் பயங்கரமா இருக்கு.” என வியந்தாள்.
அதில் சிறிதாய் புன்னகைத்தவன், “இங்க உனக்குத் தேவையான மெடிக்கல் ஃஃபெசிலிடீஸும் இருக்கு ஆலம்பனா. சர்ஜரி முடிஞ்சு இங்க தான் நீ ஒன் வீக் ரெஸ்ட் எடுக்குற மாதிரி இருக்கும். அதான் எல்லாம் கம்ஃபர்ட்டா இருக்கணும்னு பண்ணேன்.” என மூக்கோடு மூக்கு உரசினான்.
“டாக்டர்ஸ் எல்லாம் இங்கயே இருந்து வேலை பார்க்குறாங்களா?” எனக் கேட்டவளை சோபாவில் அமர வைத்தவன், தானும் அவள் அருகில் அமர்ந்து “ம்ம் ஆமா… யாரையும் விடுற ஐடியா இல்ல.” என்றான் கம்பீரமாக.
அவளோ எழுந்து அவன் மடியில் அமர்ந்து கொள்ள,
“படுத்தாதடி! தள்ளி உக்காரு.” என்று மிரட்டிட, “முடியாது!” என்றாள் வேகமாக.
“ரூமுக்குப் போ ஆலம்பனா, சாப்பிட்டியா இல்லையா?”
“ம்ம்ஹும்”
“ப்ச்! என்னடி டைம் எய்ட் ஆகப்போகுது… போ நிது.”
“தூக்கிட்டுப் போ!” எனக் கையைத் தூக்கியவளைச் சோதனையாய் பார்த்தவன், “ஓவரா பண்றடி நீ…” என அதட்டியபடியே தூக்கினான்.
“ஆமா, நாளைக்கு என்ன பண்ணுவாங்க எனக்கு?” காலை ஆட்டியபடி கேட்டவளிடம்,
“உன் தலையை ஓபன் பண்ணி மூளை இருக்கா இல்லையான்னு பார்ப்பாங்க.” என்றான் நக்கலாக.
“அதை எதுக்கு ஓபன் பண்ணிப் பார்த்துட்டு, நானே சொல்லுவேன் இல்லைன்னு…” எனும்போதே அவளைப் படுக்கையில் படுக்க வைத்தவன், “ரொம்ப நாள் கழிச்சு உண்மையைச் சொல்லிருக்க கடன்காரி…” எனக் கேலி செய்தான்.
“உனக்கு ஃபுட் எடுத்துட்டு வரேன்.” என நகரப் போனவனின் கையைப் பிடித்தவள், “மூளை மட்டும் இல்ல, என் ஹார்ட்டும் கூட இங்க இருக்காது. ஏன்னா என் எல்லா பார்ட்ஸும் உங்கிட்ட ட்ரான்ஸ்பர் ஆகிருச்சு அரக்கா…” எனக் கண் சிமிட்டி அவளது நெஞ்சில் அவனின் கையை வைத்திட, கிறுகிறுத்துப் போனான் ஆடவன்.
“என்னை அவாய்ட் பண்ணிட்டுப் போயிட்டா நான் விட்டிடுவேனா… கொன்னுடுவேன் உன்ன.”
தன்னையே மிரட்டியவளைக் கண்டு குறுநகை புரிந்தவன், “கில் மீ ஆலம்பனா!” என்றான் கிறக்கமாக.
அவன் சொன்னதும் தான் தாமதம்… அவன் மீது பாய்ந்து அழுத்தமாய் முத்தமிட்டவள், அவன் மேனியெங்கும் முத்தத்தைத் தொடர்ந்து அவனை மயங்க வைத்தாள்.
அதற்கு மேலும் முடியாதவனாக அவளை மெத்தையில் தள்ளியவன், தனது டிஷர்ட்டைக் கழற்றி எறிந்திட, சில கணங்களில் அவனது வியர்வைத் துளிகள் அவள் மேனியில் வன்மையும் அதிகாரமுமாகக் கலந்தது.
மனம் தாங்கிய பாரம் முழுக்க நெருக்கத்தின் விளைவில் விடை பெற்றிருக்க, உலகம் மறந்து உறக்கம் துறந்து இருவரும் காமத்தின் பிடியில் கரைந்தனர்.
மனமின்றிப் பிரிந்த இருவரும், கண்மூடித்தனமாகக் கலந்ததினாலோ என்னவோ, அளவுக்கு அதிகமாகவே மூச்சிரைத்தனர்.
“ஃப்பூ ஃப்பூ!” எனப் பெருமூச்சுடன் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட யாஷ் பிரஜிதன், கழுத்தைத் திருப்பித் தன்னவளைப் பார்த்தான்.
எப்போதும் கூடிப் பிரிந்ததும் அவசரமாகத் தன்னை மறைத்துக் கொள்பவள், இன்று இன்னும் நிதானம் பெறாது மயக்கத்தில் இருந்தாள்.
இதழோரம் குறுநகை கொடுத்தவன், போர்வையில் இருவரையும் மறைத்துக் கொண்டு அவளைத் தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான்.
“கொஞ்ச நேரத்துல மூளையை மழுங்கடிச்சுட்டடி கடன்காரி!” செல்லமாகத் திட்டியதில் அவளிடம் சிறு நாணப் புன்னகை.
“கொஞ்ச நேரம் என் பக்கத்துல படுன்னு சொன்னேன்… அதுக்காக, நீ இவ்ளோ டர்ட்டியா நடந்துக்கோன்னு சொன்னேனா?” என அப்பாவியாய் கேள்வி எழுப்ப, “அடிப்பாவி! உன்ன…” என்றபடி அவள் இடையில் விரல்களால் கிச்சுக்கிச்சு மூட்டிட, “ஐயோ அரக்கா, கூசுது. ப்ளீஸ் ப்ளீஸ்…” எனத் துள்ளி எழுந்தாள்.
“இவ்ளோ நேரம் கூசலையாக்கும்?” அவன் அர்த்தமாகப் பார்க்க,
“ஹையோ! போ யாஷ்” என முகத்தை மூடிக்கொண்டவளிடம் கொள்ளை வெட்கம்.
“பாருடி, உன்னால ஒன்பது மணி ஆகிடுச்சு…”
“ஹலோ, இன்னும் ஒரு தடவை இன்னும் ஒரு தடவைன்னு இவ்ளோ நேரம் கெஞ்சுனது யாராம்?” அவள் சண்டைக்கு வர, “லேப்ல இருந்தவனை இங்க கடத்திட்டு வந்தது யாருடி?” என அவனும் முரண்டு பிடித்தான்.
நாக்கைத் துருக்கிய நிதர்ஷனா, “சரி விடு, நம்ம ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு… அதுனால…” என இழுக்க,
“ம்ம் அதுனால?” என்றபடி மீசையைக் கொண்டு அவள் கழுத்தில் குறுகுறுப்பு மூட்டினான்.
“அச்சோ!” எனச் சிணுங்கியவள், “அதுனால உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்… பொதுவா இன்னும் ஒரு…” என இழுக்கும் போதே, அவன் பெண்ணின் மீது கருமேகமாய் பரவினான்.
“ம்ம் இன்னும் ஒரு…” அவன் குறும்பாய் கேட்க, “ம்ம்ஹும் யாஷ்!” என வெட்கி அவன் கழுத்தினுள் புதைந்து கொண்டாள் நிதர்ஷனா.
தன்னவளின் கட்டளையை நிறைவேற்றும் ஆண்மகனாய் அவளுக்குள் அவன் அடங்கி இருந்தான்.
அப்படியே கண்ணயர்ந்தவளைத் தட்டி எழுப்பியவன், “ஏய் கடன்காரி! மணி பத்தாச்சு, சாப்பிட்டுத் தூங்கு. மார்னிங் வரை தண்ணி குடிக்கக் கூடாது.” என மீண்டுமொரு முறை எச்சரித்து, அவளுக்கு உணவை எடுத்து வந்தான்.
அரை உறக்கத்திலேயே சிணுங்கியபடி உண்டவள், “யாஷ் எனக்கு ஒரு டவுட்டு” என்றாள்.
“அர்த்த ராத்திரில சைண்டிஸ்ட்க்கு கூட டவுட் வராதுடி. நீ ஒரு டவுட்டும் கேட்க வேணாம், அமைதியா சாப்பிட்டுத் தூங்கு…” என வம்படியாக உறங்க வைத்தான்.
மீண்டும் ஆய்வுக் கூடத்திற்கு வந்தவனின் முகமே பிரகாசமாக இருந்தது. அத்தனை நேரமும் அவனது வதனம் தாங்கி இருந்த குழப்பமும், தவிப்பும் எங்குச் சென்று மறைந்ததென்று தெரியவில்லை. அவனது நாசி உணர்ந்த பாவையின் வாசம் ஒன்றே அவனுக்கு அனைத்து வித வலுவையும் தந்தது.
நண்பனின் முகம் பார்த்த ரித்திகாவிற்கும், அவனது பளிச்சென்ற தோற்றம் நமுட்டுப் புன்னகையைத் தந்தது.
“என்ன மேன், உன் ஆளு உன் முகத்துல டியூப் லைட் எதுவும் ஃபிக்ஸ் பண்ணிட்டாளா?”
அக்கேள்வியில் அரிசிப்பல் தெரிய அழகாய் புன்னகைத்தவன், “மே பி!” எனத் தோள் குலுக்கி விட்டுட்ஹ் துள்ளல் நடையுடன் மறுநாளைக்கான திட்டமிடல்களை மீண்டுமொரு முறை சரிபார்த்துக் கொண்டான்.
தலையாட்டிச் சிரித்த ரித்திகாவின் புறம் திரும்பியவன், “உன் ஆளு எங்க பேப்? ஈவ்னிங் இருந்தே ஆஹிலைப் பார்க்கல.” எனக் கேட்டதில் ரித்திகாவின் முகத்தில் சிறு அதிர்ச்சி.
மதிய வேளையில், யாஷ் பிரஜிதன் வெளியில் சென்றிருந்த போது அவன் அழைத்ததாகக் கூறித் தான் ஆஹில்யனும் சென்றான். ஆனால் இப்போது வரை அவன் திரும்பவில்லை.
யாஷ் ஏதேனும் வேலை கொடுத்திருப்பான் என அசட்டையாக இருந்தவளுக்கு யாஷ் பிரஜிதனின் கேள்வியில் தூக்கி வாரிப்போட்டது.
அவளிடமிருந்து பதில் வராத காரணத்தால் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் யாஷ்.
எச்சிலை விழுங்கியவள், “அது எனக்குக் கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டி இருந்ததுன்னு நான் தான் அனுப்புனேன் யாஷ். ஐ வில் பீ பேக்!” என வாய்க்கு வந்ததை உளறி விட்டு வேகமாய் அங்கிருந்து வெளியேறியவள், மொட்டை மாடியை அடைந்தாள்.
அவசரமாக ஆஹில்யனின் எண்ணிற்கு அழைக்க, அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.
உடலெல்லாம் நடுங்கி விட்டது ரித்திகாவிற்கு.
“ஆஹி, ப்ளீஸ் பிக்கப்!” என முணுமுணுத்தபடி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாலும் தோல்வியே கிட்டியது.
கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் எப்போது கழுத்தை அடைந்ததென்றே உணராது பதறிய மனத்தினை அமைதிப்படுத்தவும் இயலாது சிலையாகி இருந்தாள்.
அரக்கன் தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
35
+1
+1

