Loading

அத்தியாயம் 21

ஆடவனின் கையணைப்பில் புதைந்து கொண்ட நிதர்ஷனாவிற்கு, அவனை விட்டு விலகும் தைரியம் துளியும் இல்லை. அவனது இறுகிய அணைப்பின் பிடிவாதத்தில் விலகிச் செல்லவும் வாய்ப்பில்லையே!

சூடான வெப்பக்காற்று அவளது செவியறையில் மோத, “இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் ஆலம்பனா… இன்னும் நீ எத்தனைத் தடவை என்னை மறந்தாலும் சரி, அத்தனைத் தடவையும் உன்னைப் புதுசா லவ் பண்ணுவேன்! உன்னையும் லவ் பண்ண வைப்பேன்! மறந்துட்டா விட்டிட்டுப் போயிடுவான்னு இனி கனவுல கூட நினைக்காத… கொன்னுடுவேன்!” என்றான் ஒட்டு மொத்த நேசத்தையும் மிரட்டலில் ஏந்தி.

அவனது கலப்படக் கண்களில் மீண்டுமொரு முறை இதயத்தைத் தொலைத்தவள், “வலி கொடுத்துட்டே இருக்கச் சொல்றியா அரக்கா?” என்றாள் உள்ளம் வெதும்பி.

“நீ கூட இருந்துட்டே எவ்ளோ வலி வேணும்னாலும் குடு. தள்ளிப் போய் கொடுக்காதடி!” அவனது சிவந்த வதனம் மேலும் சிவந்தது.

“மறுபடியும் இதே மாதிரி நடந்தா? பேபி…” எனச் சொல்லும்போதே அவளது வாயை மூடியவன், “ட்ரஸ்ட் மீ… இன்னும் ஒரே ஒரு ஸ்டெப்பை மட்டும் நீ தாண்டிட்டால் போதும். அதுக்கு அப்புறம், கண்டிப்பா நம்ம பேபி பெத்துக்கலாம். ஒரு பிரச்சினையும் வராது…” என அவள் கன்னம் தாங்கினான்.

“என்ன ஸ்டெப்?” அவள் புருவம் சுருக்கிக் கேட்க,

“சொல்றேன்… அதுக்கு முன்னாடி இனி இப்படி ஒரு முட்டாள்தனம் செய்ய மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு!” என்றான்.

“ஏதாச்சும் சர்ஜரி பண்ணனுமா?”

“கிட்டத்தட்ட”

“அப்போ நீயும் எனக்கு ப்ராமிஸ் பண்ணு யாஷ்… ஒருவேளை அதுல நான் பொழைக்கலைன்னா, இல்ல கோமாவுக்குப் போயிட்டா, தயவு செஞ்சு நீ என்னை விட்டுப் போயிடுவேன்னு!” கண்ணில் நீர் நிரம்பித் தளும்பியது அவளுக்கு.

தாடை இறுக அவளை முறைத்தவன், “ஓகே… ஐ அக்ரீ!” என்றான் உடனடியாக.

அவனது அழுத்தமும் பிடிவாதமும் அவள் அறிந்ததே! நிச்சயம் தனக்குச் சரி செய்ய இயலும் என்ற அவனது முழு நம்பிக்கையே இந்த அழுத்தத்திற்குக் காரணமென்று புரிய, அவன்மீது வீற்றிருந்த அளப்பரிய நம்பிக்கையில் அவளது மனத்திலும் சிறு தெளிவு பிறந்தது.

ஆகினும், அவனது முகத்தில் கண்ட சிறு கோபத்தையும் காணப் பிடிக்காமல், காலை எக்கி ஆடவனின் சிவந்த இதழ்களில் குட்டி முத்தம் வைத்தாள்.

“உன் சிரிப்பைப் பார்த்து ரொம்ப நாள் ஆகுது அரக்கா, சிரியேன்!” தலை சாய்த்துக் கேட்டவளின் கன்னத்தை இறுக்கிப் பிடித்தவன், இம்முறை ஆழ்ந்த முத்தத்தை அவன் பரிசளித்தான்.

வெகு நாள்கள் கழித்துக் கிடைத்த காதலனின் அண்மை நிதர்ஷனாவைக் கிறங்க வைத்தது.

“உன் ரெட்டிஷைப் பார்த்தும் கூட ரொம்ப நாள் ஆகுதுடி. ஐ மிஸ் யூ அ லாட்!” எனக் கிசுகிசுப்பாய் கூறியவன் இதழ் முத்தத்தைத் தாபமாய் தொடர, அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டவளும் பிரிவின் தாக்கத்தில் ஈடு கொடுக்கத் தொடங்கினாள்.

இருவரும் கட்டிப் பிடிக்கும்போதே குடும்பத்தினர் அந்த இடத்தைக் காலி செய்து விட்டனர்.

நிவேதன் தான், தங்கையும் மச்சானும் மீண்டும் இணைந்ததில் கண் கலங்கி நின்றான்.

அவன் தோள்மீது கை போட்ட கதிரவனோ, “டேய்! நான் தான் சொன்னேன்ல. அவன் எப்படியா இருந்தாலும் அவளை கரெக்ட் பண்ணிடுவான். இப்ப உன் நிலைமை தான் கவலைக்கிடம்!” எனக் கண்மணியின் அறையைக் கண் காட்ட, நிவேதனுக்குக் கிலி பிடித்தது.

“இங்க எல்லாருக்கும் உன்னைப் பிடிக்கும் நிவே… தேவை இல்லாமல் கண்டதை யோசிச்சு, உனக்குன்னு இருக்குற வாழ்க்கையைக் கெடுத்துக்காத…” என்றிட, “அதை உனக்கும் சொல்லிக்கலாம்!” என முணுமுணுத்தான்.

அதில் இருவருமே தத்தம் நேசத்தினை எண்ணி உள்ளுக்குள் கலங்கினர்.

வேண்டுமட்டும், முத்தத்திலும் அணைப்பிலும் தனது நீண்ட ஏக்கத்தைத் தீர்த்துக் கொண்டவர்கள் மெல்ல விலகினர்.

“ரித்தியை நீயாச்சும் மேரேஜ் பண்ணிருக்கச் சொல்லிருக்கலாம்ல யாஷ்… என்னால அவங்க மேரேஜும் நின்னுடுச்சு.” எனக் கவலையாக உரைத்தாள் நிதர்ஷனா.

“அவள் நீ இல்லாமல் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா… அதுக்கு மேல உனக்கும் உன் சிஸ்டர்க்கும் இருக்குற பிரச்சினைல நான் தலையிட முடியாது.” எனத் தோளைக் குலுக்க,

“அவளுக்கு இருக்கு. மொதோ கையைக் காலைக் கட்டிக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்.” எனத் திட்டிக் கொண்டாள்.

பின், “இந்த நிவேவ பாரேன். கண்மணியை விரும்பியும் என்ன காரியம் செஞ்சு வச்சுருக்கான்னு எருமை மாடு…” எனக் கடிந்தவள், “ஏன் அவனுக்கு என்ன குறை? அவனுக்கு உன் தங்கச்சியைக் கட்டித் தர மாட்டியா… உலகத்துல எங்க போய் தேடுனாலும் அவனை மாறிக்க ஒருத்தனை எல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது தெரியுமா?” என்று மூச்சிரைத்தாள்.

“ஆமா ஆமா, அவனை மாதிரி ஒரு அடி முட்டாளைக் கண்டிப்பா கண்டுபிடிக்க முடியாது!” யாஷ் ஏளனமாகக் கூற, அவளோ கொந்தளித்தாள்.

“யோவ் அரக்கா… அவனை முட்டாள்னுலாம் சொல்லாத…” நீட்டிய விரலை வளைத்தவன்,

“என் சிஸ்டரை அழ வச்சவனை முட்டாள்னு தான் திட்ட முடியும். இந்த முட்டாள்தனம் அவனுக்கு மட்டும் இல்ல. உங்க மூணு பேருக்குமே அப்படியே இருக்கு. காதலை விட்டுக் கொடுக்குறேன் பேர்வழின்னு எல்லா வலில இருந்தும் எஸ்கேப் ஆகிடுறீங்க.” என்றான் முறைப்பாக.

அதில் முகம் சுருங்கியவள், “அப்படி எல்லாம் இல்ல யாஷ்… ஹே! மூணு பேர்னா கதிருமா?” என விழி விரித்தாள்.

“ம்ம், சிந்தா!”

“அட! அன்னைக்குக் கூட நைட்டு கதிர் அப்பா பத்திச் சிந்தாட்ட பேசிட்டு இருந்தீல்ல. அப்போ இருந்த ஷாக்ல கவனிக்கல. இவனுங்களை மந்திரிச்சு விடுறேன் இரு…” என்று விறுவிறுவென வீட்டினுள் சென்றாள்.

போகும்போதே கையில் ஒரு விளக்கமாறையும் சேர்த்தே எடுத்துச் சென்றாள்.

பேசிக் கொண்டிருந்த இரு ஆடவர்களையும் விளக்கமாறால் விளாசி விட்டாள்.

“மனசுல பெரிய தியாகச் செம்மல்னு நினைப்பாடா உங்களுக்கு? எவ்ளோ திமிரு இருந்தா, லவ்வ விட்டுக் கொடுப்பீங்க.” என்று அடி வெளுக்க, கிருஷ்ணவேணி தான் வந்து தடுக்க வேண்டியதாகப் போயிற்று.

“நிதா, விடு நிதா….”

“விடுங்க பெரிம்மா… எனக்காக உயிரைக் கொடுப்பாராம் இவரு. செருப்பால அடிப்பேன் நாயே…” என நிவேதனைப் பொளக்க, “ஏய்! வலிக்குது எரும…” எனக் கத்தினான்.

கதிரவனோ, வீட்டைச் சுற்றி ஓடினான்.

“நீ மட்டும் என்ன… நீயும் தான காதலைத் தியாகம் பண்ண நினைச்ச?”

“நான் பண்ணதும், நீங்க பண்ணதும் ஒண்ணா? பரதேசி, ஒழுங்கா நில்லு!” என்று அவன் மீது விளக்கமாறை விட்டெறிய ஒரு தூணில் சாய்ந்து யாஷ் பிரஜிதன் மட்டுமல்லாது, சத்தம் கேட்டு அங்கு வந்த சிந்தாமணியும் கண்மணியும் கூட வெகு தீவிரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அடேய் மச்சான்… உன் பொண்டாட்டியை ஆஃப் பண்ணுடா…” நிவேதனின் கத்தலில் காதைக் குடைந்து கொண்டானே தவிர, அடிக்க விட்டு வேடிக்கை பார்த்தான்.

“அண்ணி… குச்சி விளக்குமாறு தரவா?” கண்மணி வேறு ஏற்றி விட்டாள்.

சிந்தாமணியோ, “அக்கா, விளக்கமாறுலாம் வலிக்காது. ஒரு பெரிய கம்பி தரவா?” எனக் கேட்க, “எடுத்துட்டு வா சிந்தா…” என உக்கிரமாக மாறிய தோழியைக் கண்டு மிரண்ட கதிரவன்,

“அடிப்பாதகத்தி…” எனச் சிந்தாமணியை அடிக்கத் துரத்த அவள் வாசலுக்கே ஓடி விட்டாள்.

இதில் ஆஹில்யன் தான் இவர்களைத் தடுப்பதா வேண்டாமா எனத் திருதிருவென விழித்தபடி நிற்க, அப்போது தான் அலைபேசி அழைப்பைப் பேசி விட்டு வந்த ரித்திகா, நிதர்ஷனாவைத் திட்டப் போனாள்.

அவளோ அதே தர்ம அடியை அவளுக்கும் கொடுக்கத் தொடங்கியதில், துள்ளிக் குதித்து ஓடினாள் ரித்திகா.

“கல்யாணம் பண்ணுடின்னா, காரணம் சொல்லி அந்த மனுஷனை ஒரு வருசமா டீல்ல விடுவியா… ஏதோ என் மாம்ஸ் கொஞ்சம் அப்பாவியா இருக்குறனால சரியா போச்சு. இல்லன்னா உன்னைக் கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணிருப்பாரு. இல்ல மாம்ஸ்!” என அவனைக் கோர்த்து விட, “நீ ஏம்மா, சும்மா இருக்குற சங்கை ஊதுற!” என மிரண்டான்.

ஒரு கட்டத்தில் அவளது விளக்கமாறைப் பிடித்து விட்ட ரித்திகா, “என் கல்யாணத்துல என் தங்கச்சி இருக்கணும்னு நினைச்சது தப்பா?” என முறைப்பாய் கேள்வி எழுப்ப,

ஒரு கணம் திகைத்த நிதர்ஷனா, “ஆனாலும் என்னால உங்க கல்யாணம் நின்னது கஷ்டமா இருக்கு ரித்தி” என்றாள் வருத்தத்துடன்.

ஆஹில்யனும், “போ நிதா… நானும், ரித்தியும் இன்னும் பல வருஷத்துக்கு லவ் பண்ணிட்டே இருக்கச் சொன்னாலும் இருப்போம். எந்த ஒரு மனக்கஷ்டத்துலயும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுனு நான் உறுதியா இருக்கேன். அப்படி கல்யாணம் பண்ணியே ஆகணும்னா, நான் பாஸ் கூட மேரேஜ் நடக்க இருந்தப்பவே அவளை கம்பெல் பண்ணிருப்பேன்.” என்றவனை ஆதூரமாக ஏறிட்டாள் ரித்திகா.

“நீ இல்லாதப்ப இவனைக் கல்யாணம் பண்ணிருந்தால் கூட, என்னால கடமைக்குன்னு அவன்கூட வாழ முடியாது நிதா… நான் அவனைக் கல்யாணம் பண்ணும்போது, முழு மனசோட சின்னக் கசப்பும் இல்லாம பண்ணிக்கனும்னு நினைக்கிறேன். என் இடத்துல நீ இருந்திருந்தா என்ன செஞ்சுருப்ப?” எனக் காட்டமாகக் கேட்க, நிதர்ஷனா அவளைக் கட்டிக் கொண்டாள்.

“சாரி ரித்தி… எனக்கு கில்டியா இருக்கு. என் ஒருத்தியால எல்லாரோட லைஃப்லயும் கஷ்டம்ல…”

தானும் அவளை ஆதரவுடன் அணைத்த ரித்திகா அவளது தலையில் கொட்டி, “ஹே லூசு… அப்படிப் பார்த்தா இதுக்குலாம் காரணம் நீ இல்ல. அந்த அலெஸ்ஸும் நம்மளைப் பெத்ததும் தான். அவங்க செஞ்ச இந்தக் குளறுபடி தான், இப்ப வரை நம்ம எல்லாரும் மனசு கஷ்டப்பட காரணமே! உன்னை ப்ளேம் பண்ணாத நிதா. நீ திரும்பி வந்தது எனக்கு எவ்ளோ ஹேப்பி தெரியுமா?” என இருவரும் பாசத்தை மழையெனப் பொழிய,

“அப்பாடா! இதுங்க சீன்ல நம்மளை அடிக்கிறதை மறந்திடுச்சுங்க…” எனக் கண்மணியை ஓரக்கண்ணில் தேடினான் நிவேதன்.

அவள் மீண்டும் அறைக்குள் அடைந்திருப்பது தெரிந்து, நைசாக அவளைப் பார்க்க அறைப்பக்கம் செல்லப் போனான்.

யாஷ் பிரஜிதன் அவனைக் கவனித்துப் பார்வையில் அனலைக் கக்க, அசடு வழிந்த நிவேதன் பரிதாபமாக அவனைப் பார்த்து வைத்ததில், யாஷிற்குச் சிரிப்பும் வந்து விட்டது.

“போ!” என அறையை நோக்கிக் கையைக் காட்ட, லேசாய் வெட்கம் கொண்டவன் பின்னந்தலையைக் கோதியபடி கண்மணியின் அறைக்குச் சென்றான்.

இங்கோ சிந்தாமணியை அடிக்கத் துரத்தியதில், அவள் பக்கத்து வீட்டில் நுழைந்து விட்டாள்.

யாஷ் பிரஜிதன் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுக் கதவிற்குக் கடவுச் சொல்லைப் போட்டுத் திறந்து உள்ளே செல்ல, அவனைப் பின் தொடர்ந்து கதிரவனும் சென்றதும் கதவு தானாய் அடைத்து விட்டது.

“ஐயோ! கதவு லாக் ஆகிடுச்சு. எனக்கு உள்ள இருந்து திறக்க பாஸ்வோர்ட் தெரியாது.” எனப் பதறிக் கதவைத் திறக்க முயல, அதுவோ ‘தவறான கடவுச்சொல்’ என்ற எச்சரிக்கை காட்டியது.

“ஹையோ! கையில போன் இல்லையே…” எனத் தவித்தவளின் முதுகில் கதிரவனின் மூச்சுக்காற்று மெல்லத் தீண்டியதில் உறைந்து போனாள்.

“க..கதிர்!” அவள் விலக முற்பட அவளைக் கதவோடு அணை கட்டியவன், “சிந்தா…” என்றழைத்தான் அவளது தாடையை நிமிர்த்தி.

அவளுக்கு விழிகள் கலங்கியது. “தள்ளுங்க கதிர்…” கோபமும் தவிப்பும் ஒருங்கே தோன்ற அவனது கையைத் தட்டி விட்டாள்.

“என்னால முடியல சிந்தா… உன்னை விட்டு விலக நினைச்சாலும் என்னால முடியல.”

“அதுனால தான் இன்னொரு பொண்ணை நிச்சயம் பண்ணிக்கிட்டீங்களோ?” சாதாரணமாய் கேட்க விழைந்தாலும் குரல் கமறியது.

“உங்களுக்கு நிச்சயதார்த்தம்னு உங்க அம்மா எல்லாரையும் இன்வைட் பண்ணுனப்ப, எனக்கு எப்படி வலிச்சிருக்கும்? இதுல நிச்சயதார்த்தத்துக்குப் பத்திரிகை வேற அனுப்பி இருக்காங்க…”

“ஆமா, ஆமா… ஏன் இங்க இருந்து யாருமே வரல? நீ வருவன்னு எதிர்பார்த்தேன்.” கதிரவன் ரசனையாகக் கூறினான்.

சிவந்த விழிகளால் அவனை எரித்தவள், “வந்து உங்களுக்குக் கல்யாணத் தேதி குறிக்கவா? உணர்ச்சி இல்லாத ஜென்மம் நீங்க தான்… என்னால முடியாது!” என்று எரிந்து விழுந்தாள்.

“ஏய் பைத்தியம்! நான் சொன்னேனா எனக்கு என்கேஜ்மெண்ட்னு… எனக்கு என் அத்தை பொண்ணைப் பேசி வச்சது கூட, அன்னைக்கு ஹாஸ்பிடல்ல என் அம்மா லூஸ் டாக் விட்டப்ப தான் தெரியும். அதுக்கு அப்புறமும் என்கிட்ட சொல்லாம அவங்களா தான் நிச்சயம் வச்சாங்க. அன்னைக்குக் காலைல வரை எனக்கே தெரியாது.

உன்னை மறுக்கவும், உன்மேல இருக்குற காதலை மறைக்கவும் எனக்கு நிறையக் காரணம் இருந்துச்சு சிந்தா… ஆனா, உன்னைத் தவிர வேற யாரோட நிழலையும் தொடக்கூட என்னால முடியாது. என்னால நிச்சயம் பண்ணிக்க முடியாதுன்னு என் அம்மாகிட்ட சண்டை போட்டு அன்னைக்கு எங்கேஜ்மெண்ட்டை நிறுத்திட்டேன். என் அம்மா என்னைச் செம்ம அடி அடிச்சாங்க தெரியுமா…

விஷயம் கேள்விப்பட்டு, யாஷ் தான் தெய்வம் மாறி வந்து என்னைக் காப்பாத்துனான். அப்போ தான் அவனுக்கு நம்ம விஷயம் தெரியும்னே எனக்குத் தெரிஞ்சுது. என்னைச் செம்மயா திட்டுனான். உடனே இளா அங்கிள்கிட்டக் கூட பேசுனான். உன் குடும்பத்தை நினைச்சுத் தயக்கம் தான் எனக்கு அதிகமா இருந்துச்சே தவிர, உன்னைப் பிடிக்காம எப்படிப் போகும்?

நீ என்கிட்ட ப்ரொபோஸ் பண்றதுக்கு முன்னாடி இருந்தே உன்மேல அவ்ளோ லவ் இருந்துச்சு சிந்தா. நீ லவ்வ சொல்லுறப்ப எனக்குக் கஷ்டமா தான் இருந்துச்சு… உன்னை மறுக்குறது எவ்ளோ வலிச்சுது தெரியுமா?” எனும்போதே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் சிந்தாமணி.

அவளுக்கோ அவன் பேசப் பேச உள்ளுக்குள் குற்றாலச் சாரலே அடித்தது.

மார்பில் சரிந்திருந்த பாவையின் முதுகைச் சுற்றி வளைத்துக் கொண்ட கதிரவனின் உதடுகள் சிரிப்பில் மலர்ந்தது.

“என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமா சிந்தா?” தெரிந்து கொண்டே கேட்டான்.

“அவ்ளோ, அவ்ளோ பிடிக்கும்! உங்களுக்கு?”

“எவ்ளோ பிடிக்கும்னு வாயில சொல்லட்டா? இல்ல…” என இழுத்தான்.

நாணம் மறைத்தவள், “வாயிலயே சொல்லுங்க!” என்று சிணுங்க, “சொல்லிட்டா போச்சு…” எனக் குனிந்து அவளது கன்னத்தில் மீசையின் தடம் தெரிய அழுத்த முத்தமிட்டான்.

அதில் சிலிர்த்தவளுக்கோ வெட்கம் தாளவில்லை. காதலைச் சொல்லி அவன் பின்னே சுற்றியவள் தான். ஆனால் அக்காதலை ஏற்கும்போது மனத்தில் பதற்றம் அதிகமாய் இருந்தது.

“கதிர், ப்ளீஸ்…” அவனை விட்டு விலக எத்தனிக்க, மறுகன்னத்திலும் தனது தடத்தைப் பதித்தவன், “ஐ லவ் யூ சிந்தா… ஐ லவ் யூ சோ மச். பெருசா வசதி எல்லாம் இல்ல. ஆனா உன்னை நல்லா பார்த்துப்பேன் சிந்தா… உனக்கு ஓகேவா?” என மீண்டும் வினவ, இப்போது தனது காதலை அவன் கன்னத்தில் காட்டுவது அவளது முறையாகிற்று.

———-

“கண்மணி…”

தயக்கத்துடன் அவளை அழைத்தான் நிவேதன்.

ஜன்னல் வழியே பின்பக்கத் தோட்டத்தை வெறித்திருந்த கண்மணி, அவனை எதிர்பாராது திகைத்து விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

அவனோ அவளை எப்படிச் சமன்செய்வதென்று புரியாது தவித்து நின்றான்.

“சாரி கண்மணி!”

“சாரி எல்லாம் தெரியாம செய்யறதுக்குத் தான், தெரிஞ்சே ஹர்ட் பண்றதுக்கு இல்ல…” மெல்லிய கோபம் துளிரக் கூறினாள்.

“புரியுது, உன் கோபம் நியாயம் தான்!” என மருகியவன்,

“எனக்கு ஹாஸ்பிடல்ல நினைவு தெரிஞ்சு, உன்னை முதன் முதல்ல பார்க்கும்போதே என் மனசுல அப்படியே பதிஞ்சுட்ட கண்மணி… உன் மேல வளர்ந்த உணர்வை வளர்க்கவும் பயம், வெட்டவும் பயம்… எந்த விதத்துலயும் நான் உனக்குத் தகுதி இல்லைன்றது மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு கண்மணி. வரதராஜனோட பையன்ற அடையாளத்துல எனக்குக் கிடைச்ச இந்த எலைட் கம்பெனியோட பதவி எனக்கு என்னைக்கும் திருப்தியைத் தராது.

அந்தப் பதவி நான் வளர்ந்த முறையையும், என் அடையாளத்தையும் மாத்தப் போறது இல்லையே. அதுக்கு அப்புறம் நிதாவோட பிரச்சினைனு…

கண்மணி… அன்னைக்கு ஏர்போர்ட்ல உன் கண்ணுல இருந்து வந்த தண்ணியைப் பார்க்கும்போது எனக்குச் செத்துடலாம் போல இருந்துச்சு. எனக்குத் தெரியும், உன்னை அதிகமா காயப்படுத்திட்டேன்னு… எ..எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல கண்மணி… நீ என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்…” என்றான் வேதனையாக.

அவனை உணர்வற்று ஏறிட்டவள், “நீங்க என்னைப் பார்த்தப்பறம் தான விரும்புனீங்க. நான் உங்களைப் பார்க்குறதுக்கு முன்னாடி இருந்தே விரும்புனேன் நிவே. நிதா அண்ணி உங்க மேல வச்சிருந்த அன்பு எனக்குப் பிரமிப்பைக் கொடுத்துச்சு. அந்த அளவு அன்பு வச்சிருக்காங்கன்னா, நீங்க எந்த அளவு அதே அன்பை அவங்களுக்குக் குடுத்திருப்பீங்கன்னு நினைக்கும்போது உருவமே தெரியாத உங்கமேல ஒரு கிரேஸ்.

பெத்த அம்மா யாரு, உறவுகள் யாருன்னு தெரிஞ்சப்ப கூட அண்ணி முகத்துல துளிச் சந்தோசம் இல்ல. ஆனா நீங்க அவங்க கூடப் பிறந்தவங்க இல்லைன்னு தெரிஞ்சப்ப, இது தெரிஞ்சா நீங்க உடைஞ்சிடுவீங்கன்னு தன்னோட பிறப்பையே உங்ககிட்ட இருந்து மறைக்க நினைச்சவங்களோட பாசத்தை விட, அப்படியான பாசத்தை அவங்களுக்குக் குடுத்த உங்களைப் பார்க்கணும்னு மனசு துடிச்சுச்சு.

ஹாஸ்பிடல்ல ஹாலுசினேஷன்ல என்னை விரும்புனதா சொன்னப்பவே, உங்ககிட்ட மொத்தமா என் மனசை இழந்துட்டேன். என் குடும்பத்தை நினைச்சு, காதலால அவங்க பட்ட கஷ்டத்தை நினைச்சு முதல்ல என் காதலைப் புதைச்சுட்டேன் தான்.

ஆனா, உங்கமேல இருக்குற காதல் என்னைக்கும் யாருக்கும் கஷ்டத்தைத் தராதுன்னு நம்புனேன். ஆனா எனக்கே கஷ்டத்தைக் குடுக்கும்னு நான் நினைக்கல…” எனும்போதே கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள். அப்படியும் கண்ணீர் கன்னத்தைத் தாண்டி வழிந்தது.

அவளது கூற்றில் திகைத்து உறைந்தான் நிவேதன். அவளது நேசத்தின் அளவு அவனை அதிகம் உடைய வைத்தது. உருகவும் வைத்தது.

அதுவும் ஒரே கணம் தான், ஓடிச்சென்று அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பாராது அதிர்ந்த கண்மணிக்கு கையெல்லாம் நடுங்கி விட்டது.

“ரொம்ப ரொம்ப சாரி கண்மணி… நான் ஒரு பைத்தியக்காரன்! கைக்குக் கிடைச்ச காதலைக் கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்த்திருக்கேன். ப்ளீஸ் கண்மணி… ஒரே ஒரு சான்ஸ் குடு! கண்டிப்பா இனி ஒரு தடவை உன்னைக் காயப்படுத்த மாட்டேன்டா, ப்ளீஸ்டா!” என்று உருகித் தவித்துத் திளைத்து அணைப்பின் வேகத்தை அதிகரிக்க, அவளோ பேச்சற்று நின்றாள்.

தன் மீதிருக்கும் கோபம் தான் காரணமென்று வருந்தியவன், தான் அணிவித்த கண்ணாடி வளையல்களை விரல்களால் வருடி விட்டான்.

அவளது வழுவழு கரத்தைப் பற்றி வளையல்களைப் பின்னால் நகர்த்திக் கன்னத்தில் வைத்துத் தேய்த்தவன், “இந்த வளையலையும் சரி, நம்ம உறவையும் சரி… உடைய விட மாட்டேன் கண்மணி. என்னை மன்னிப்பியா?” ஆடவனின் ஆழ்ந்த ரசனைக் குரலில் அவளது அணுக்கள் உருக்கத்துடன் சிதைந்தது.

வார்த்தைகளற்ற பெண்ணின் மௌனம் அவனுக்கு வலியைத் தோற்றுவிக்க, “பேசு கண்மணி, திட்டியாச்சும் பேசு!” என்றான் வருத்தமாக.

அவன் நகரும் வரை அவளது உயிர்மூச்சே தொண்டைக்குள் சிக்கிக் கொள்ளும் அவலம்! அவளது நிலை புரியாது அவன் வேறு நெருக்கத்தில் கொல்ல, வெளியில் ஆதிசக்தியின் குரல் கேட்டதில் தான் கண்மணியை விட்டு விலகினான்.

வெளியில் காரசார விவாதம் கேட்க, தன்னவளுக்குத் தான் கொடுத்த உதாசீனத்தைத் தானும் வேதனையுடன் ஏற்றுக் கொண்டவன், அவள் முகம் காண இயலாது வெளியில் சென்றான்.

தயக்கத்திற்கு விடுதலை கொடுத்து அவள் பேசத் தொடங்கும்போதே அவன் வெளியேறி இருக்க, கண்மணி தான் ‘இவரை…’ என்று பல்லைக் கடித்தாள்.

——–

ஆதிசக்தி பரிதவிப்புடன், “யாஷ்… ஏஞ்சலினா சொல்றதைக் கேட்கும்போது ரொம்பப் பயமா இருக்கு. இவ்ளோ நாள் சைனா கவர்மெண்ட் அமைதியா இருந்ததே பெரிய விஷயம். அதுவும் நீ உழைப்பைத் தூக்கிக் குடுத்ததுனால தான். ஆனா இப்ப அதுனால, இத்தாலி கவர்மெண்ட் எலைட் கம்பெனிக்குப் பெரிய நெருக்கடி தர்றாங்க. அவள் உன்னை உடனே இத்தாலி வரச் சொல்றா… அவள் சொல்றதும் கரெக்ட் தான் யாஷ். நீ ஒரு தடவை போயிட்டு வந்துடு!” என்றார்.

அதன்பிறகே நிகழ்வு உணர்ந்தவளாக நிதர்ஷனா, “யோவ் அரக்கா, உனக்கு அறிவு கிறிவு இருக்கா? எவ்ளோ கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்ச ஒரு விஷயத்தைச் சைனாக்காரனுக்கு எதுக்குக் குடுத்த? எனக்காகன்னாலும் என்னால இதை அக்செப்ட் பண்ணிக்க முடியல.” எனக் கடிந்தாள்.

“ப்ச் நிதா… பிரச்சினை பண்ண கவர்மெண்ட்டே ஆளை அனுப்புமோன்னு எனக்குப் பக்குன்னு இருக்கு. அதைப் பத்தி நான் கவலைப்பட்டா, இப்ப கண்டுபிடிச்சதைக் கொடுத்ததைப் பத்திப் பேசிட்டு இருக்க…” ஆதிசக்தி கடுப்பாக,

“அடப் போங்க அத்தை… அதெல்லாம் உங்க பையனுக்கு ஜுஜுபி! அதுக்குலாம் பிளான் பண்ணாம இறங்கி இருக்க மாட்டாரு…” எப்பவும் போல அவன் மீதிருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை அவனது கலப்படக் கண்கள் ரசித்தது.

அவனது ரசனையை ஒதுக்கியவள், “ஆனா இனி அந்த ஸ்பேஸ் ப்ராஜக்ட் உனக்கு இல்லையா அரக்கா?” என்றவளின் கேள்வியில் டஜன் கணக்கில் வருத்தம் வழிந்தோடியது.

“நோ வொரி ஆலம்பனா…” என அவளது மூக்கு நுனியை ஒற்றை விரலால் சுண்டி விட்டவன், “ப்ராஜக்டை குடுத்தது உண்மை தான். அவங்க லான்ச் பண்ணப் போறதும் உண்மை தான். ட்ரையல் பீரியட்ல கூட கரெக்ட்டா ஒர்க் ஆகும். ஆனா அந்த ப்ராஜக்ட் ஸ்பேஸ்க்குப் போகாது!” எனக் கண் சிமிட்டினான்.

“புரியலையே…” நிதர்ஷனா உதட்டைச் சுளித்தாள்.

அவளது தோள்மீது கையைப் போட்டவன், “லைவா ஸ்பேஸ்க்கு அனுப்பும்போது சில செட்டிங்ஸ் சேஞ்ச் பண்ணனும். அதை நான் மென்ஷன் பண்ணல. சோ ஆப்வியஸ்லி ப்ராஜக்ட் பெயிலியர் ஆகும். ரிஜெக்ட் ஆகும். அகைன் என்கிட்ட தான் வரும்!” என்று தோளைக் குலுக்கிட,

“வாவ்!” எனத் துள்ளிக் குதித்தாள் அவள்.

ஆதிசக்தியோ அதிர்ந்து, “என்ன யாஷ் பண்ணி வச்சுருக்க? அது ஒர்க் ஆகலைன்னு தெரிஞ்சா சைனாக்காரன் உன் மேல ரொம்பக் கோபமாகிடுவான்…” எனப் பதறிட,

அதற்கு யாஷ் பதில் கூறும் முன்னே நிதர்ஷனா அசட்டையாய், “அவன் கோபப்பட்டா அவனுக்குத் தான் லாஸ் அத்தை… நீங்க என்ன இந்த பீல்டுல இருந்துட்டே இப்படிப் பயப்படுறீங்க. நீங்க எல்லாம் எப்படித் தான் ஆராய்ச்சி எல்லாம் பண்ணுனீங்களோ…” எனக் கிண்டல் செய்ய, ஆதிசக்தி அவளைத் தீப்பார்வை பார்த்தார்.

தன்னவளின் பழைய குறும்பைக் கண்டு கரைந்த யாஷ் பிரஜிதன், “மம்மா… எனக்கு ஒன் வீக் டைம் குடுங்க, இவளோட சர்ஜரி முடியட்டும். எல்லாத்தையும் நான் உங்களுக்கு க்ளியர் பண்றேன்.” என்றான் கண்மூடித் திறந்து.

அவன் மீதிருந்த நம்பிக்கையில் அவரும் பொறுமை காத்தார் பயத்துடன்.

ஏற்கெனவே அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால், நிதர்ஷனாவின் அறுவை சிகிச்சையை ஒரு வாரத்தில் முடித்து விடும் எண்ணம் அவனுக்கு.

சிகிச்சைக்குத் தேவையான முன்னேற்பாடு சிகிச்சைகளை உடனே தொடங்க அவன் ஆயத்தமானான்.

அன்று இரவு, பால்கனியில் நின்று தேய்பிறையைக் கண்டு தேய்ந்திருந்தவளுக்கோ, இதே போல அறுவை சிகிச்சைக்குப் பின் தானும் தேய்ந்து விடுவோமோ என்ற பயம் இருந்தது.

ஆனால், ஆடவனின் மீதிருந்த நம்பிக்கையில் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை அவள். இப்போது இந்நிமிடம் அவனுடன் இருக்கிறாள். அவ்வளவு தான்!

அவளைத் தேடி வந்தவனிடம், “இப்பவே சர்ஜரி வைக்கணுமா, கொஞ்ச நாள் ஆகக் கூடாதா?” என மட்டும் கேட்டுக் கொண்டாள்.

ஒருவேளை, இந்த ஒரு வாரமே அவனுடனான கடைசி நிமிடங்களாக இருந்தால்? இன்னும் சில நாள்கள் அவன் வாசனையைச் சுவாசிக்க வரம் கிடைக்குமே!

முன்பே இது புரிந்திருந்தால், இத்தனை மாதங்களை வீணடித்திருக்க மாட்டாள்.

அவளது கேள்விக்குப் பதில் கூறாதவன், அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

அவன் மௌனம் கொண்டதில் அவனை அதிகம் காயப்படுத்த விரும்பாதவள், “அப்போ நம்ம சென்னை போகணுமா?” எனக் கேட்க, “இல்ல சர்ஜரி இங்க தான்!” என்றான்.

“இங்கேயா?”

“ம்ம்! இந்த டேப்லெட்ஸ் போட்டுக்கோ. ரெஸ்ட் எடு. மார்னிங் உனக்கு டீடெய்ல்ஸ் சொல்றேன்…” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அறையை விட்டுச் செல்ல எத்தனிக்க, அவனது விலகல் வருத்தம் கொடுத்தது.

அவனுடன் கட்டியணைத்து உறங்கவே ஒவ்வொரு அணுவும் துடிக்க, “நீ தூங்கலையா யாஷ்?” எனக் கேட்டாள்.

“கொஞ்சம் ஒர்க் இருக்கு ஆலம்பனா… நீ தூங்கு! குட் நைட்” என்று கிளம்பியதில் அவளுக்கு முகம் சுருங்கிப் போனது.

சிறிது நேரத்தில் மனம் கேளாமல் மீண்டும் அறைக்கு வந்தான், அவள் உறங்குவதை உறுதிப்படுத்தும் பொருட்டு.

அவளோ உறங்காது கட்டிலில் காலைக் குறுக்கி அமர்ந்திருக்க, அவளை விழி இடுங்கப் பார்த்தவன் “நீ தூங்கலையாடி?” என்றான் கண்டிப்பாக.

“தூக்கம் வரல!” என முணுமுணுத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “எனக்கு ஏதோ ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உருவாகக் கூடாதுனு, என் கூட ரிலேஷன்ஷிப் வச்சுக்கிட்டேன்னு சொன்ன… இப்போ அந்த ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உருவானா பரவாயில்லையா, சர்ஜரியைப் பாதிக்காதா?” எனக் கேட்டாள் ஏக்கமாக.

“ஃப்பூ!” ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்ட யாஷ் பிரஜிதன், ஏற்கெனவே தன்னுணர்வைக் கொன்று கொண்டிருக்கிறான். இதில் இவள் வேறு! என்ற சலிப்புடன், “யூ ஆர் கில்லிங் மீ ஆலம்பனா!” என்றபடி அவளைத் தூக்கித் தனது மடியில் அமர வைத்துக் கொண்டவன் இறுக்கி அணைத்தான்.

அவன் நெஞ்சில் சட்டமாகப் புதைந்தவள், “உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் அரக்கா! இந்தக் கண்ணு என்னை வெட்கப்பட வச்சுட்டு, என்னைக் குறுகுறுன்னு பார்க்கும்ல, எல்லாத்தையும் மிஸ் பண்றேன்…” என உதட்டைப் பிதுக்கினாள்.

“நிது…” இன்னுமாய் அவளை மூச்சடைக்க வைத்தவன், “சர்ஜரி முடியட்டும், கடன்காரி! நானும் உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்டி!” என்றான் முகம் முழுக்க முத்தமிட்டு.

“போ! எனக்கு இப்ப ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமா இருக்கு. நீ தான் கம்மி பண்ணனும்.” எனத் தலை சாய்த்துக் கண் சிமிட்டினாள்.

அவளைச் சமாளிக்கும் விதம் புரியாமல், “ஹே ஆலம்பனா! ஒரு வாரம் தான்டி. அப்புறம் ஒரு 10 டேஸ் ரெஸ்ட்ல இருக்கணும். தென், ஹார்மோன்ஸை பாலன்ஸ் பண்றது தான் என் வேலையே!” என்று குறும்பாய் நெற்றி முட்டினான்.

அதில் சமாதானம் ஆகாதவள், “ஒருவேளை அதுக்கு வாய்ப்பே கிடைக்காமல் போயிட்டா? ஒரே ஒரு தடவை யாஷ்!” என்றவளின் அச்சமும் ஏக்கமும் புரியத் தன்னுள் சிதைந்தவன், அவளது கன்னத்தை அழுத்திப் பிடித்தான்.

“இதோ பாருடி! இந்த ரிஸ்க் உனக்கு மட்டும் இல்ல, எனக்கும் சேர்த்துத் தான். போனா, போறது உன் உயிர் மட்டும் இல்ல. என் உயிரும் தான்! புரிஞ்சுதா? என் கூட வாழணும்னு ஆசை இருந்தா, வந்தே ஆகணும்னு பிடிவாதத்தோட சர்ஜரிக்கு வா…” என்றவனின் விழிகளில் அனல் சாரல்.

அவனது பிடிவாதம் புரிந்து, கண்டதைச் சிந்தித்து விடுவானோ எனப் பயந்தாள்.

அதில் இயல்பாகி, “சரி சரி கோபப்படாத… நீ போய் வேலையே பாரு. நானே தூங்கிக்கிறேன்…” எனச் சிலுப்பியவள், அவனை விட்டு எழுந்து மெத்தையில் ஒருக்களித்துப் படுத்துக் கொள்ள, அவனுக்குக் கோபம் மறைந்து புன்னகையும் சேர்ந்தே எழுந்தது.

அவளைப் பின்னிருந்து அணைத்துப் படுத்தவன், பின்னங்கழுத்தில் மீசை உரச முத்தமிட, சிலிர்த்து இன்னுமாக உடலைக் குறுக்கினாள்.

தேகம் தாங்கிய தாபங்களை முத்தமிட்டே அணைத்த யாஷ் பிரஜிதனின் வெப்பச் சூட்டில் உருகி அவளும் உறங்கிப்போக, மோகத்தின் விளிம்பில் உறங்காமல் தவித்தது என்னவோ அவன் தான்!

“என்னைத் தூண்டி விட்டுட்டு இவள் தூங்கிட்டா!” எனத் தலையாட்டிச் சிரித்துக் கொண்டவனுக்கு, அலைபேசி அழைப்பு வந்தது. அவளை விட்டு விலகாமலே அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் அதில் ஒளிர்ந்த ‘ஏஞ்சலினா’ என்ற பெயரைக் கண்டு மெலிதாய் புன்னகைத்தான்.

“ஹாய் ஆண்ட்டி!” மெதுவாக ஆனாலும் அழுத்தமான குரலில் பேசினான்.

“உன் ஹாய் எல்லாம் இருக்கட்டும். நிதாவோட சர்ஜரிக்கு எல்லாம் பிரிப்பேரா? தஞ்சாவூர் வந்திருக்கன்னு ஆதி சொன்னா… சென்னைக்கு எப்போ ரிட்டர்ன்? நான் உன்னைப் பார்க்கச் சென்னைக்குத் தான் வந்திருக்கேன்.” என்றார் அவசரமாக.

“சர்ஜரிக்கு பக்கா ப்ரிப்பேர் தான். பட் நீங்க ஏன் சென்னைக்கு வந்தீங்க?”

“அவளோட சர்ஜரிக்குக் கூட இருக்கனும்ல யாஷ். அது மட்டுமில்ல, உன்னை அட்டாக் பண்ண இத்தாலி கவர்மெண்ட் ஆள் செட் பண்ணிருக்கான். ஐ வான்னா சேவ் யூ!” என்றவரின் குரலில் பதற்றம் நிறைந்தது.

“கமான் ஆண்ட்டி! என்னை அட்டாக் பண்ண ஆள் வந்தது உண்மை தான். ஆனா அது இத்தாலி ஆளு மாதிரித் தெரியலையே!” எனப் பெண்ணின் கூந்தலை ஆழ வாசம் பிடித்தபடி பேசினான்.

“என்ன யாஷ் நீ…” அவரது குமுறலைத் தடுத்தவன், “ஆண்ட்டி… ரிலாக்ஸ்! உங்களை பிக்கப் பண்ண ஏர்போர்ட்டுக்கு வந்த கார் எங்க?” அவனது கேள்வியைப் புரிந்து கொள்ள இயலாமல், “கார்ல தான் நான் போயிட்டு இருக்கேன் யாஷ், உன் பங்களாவுக்குத் தான் போறேன்.” என்றார்.

“காரை அப்படியே ஓரமா நிறுத்திட்டு டிக்கியை ஓபன் பண்ணுங்க… ஐ ஹேவ் அ சர்ப்ரைஸ் ஃபார் யூ, மை டியர் ஆண்ட்டி” என உல்லாசமாய் உரைத்தான்.

“வாட்? நான் வர்றதே உனக்குத் தெரியாது. அப்புறம் எப்படி எனக்கு சர்ப்ரைஸ்?” எனக் குழம்பியவர், காரை நிறுத்தச் சொல்லி விட்டு டிக்கியைத் திறந்து பார்த்து உறைந்து விட்டார்.

உள்ளே இரத்த வெள்ளத்தில் கோர்ட் சூட் அணிந்த மூன்று ஆடவர்களின் உடலைச் சுருட்டி வைத்திருந்தான்.

“யா..யாஷ்!”

“என்னை அட்டாக் பண்ண வந்தவங்க தான் ஆண்ட்டி. பொதுவா எனக்கு யாரும் கிஃப்ட் அனுப்புனா, எனக்கு அனுப்புனவங்களுக்கே ரிட்டர்ன் கிஃப்ட் அனுப்பித் தான் எனக்குப் பழக்கம். அதான் உங்களுக்கே திருப்பி அனுப்பிட்டேன்.” என்றவனின் குரலில் இத்தனை நேரம் இருந்த இளக்கம் துளியும் இல்லை.

ஏஞ்சலினாவிற்கு எங்கோ அபாய மணி அடிக்க, டிக்கியை மூடிய நொடியே அவரது இரு பக்கத்திலும் துப்பாக்கியுடன் நின்றனர் யாஷ் பிரஜிதனின் பாதுகாவலர்கள்!

“ஆண்ட்டி… என் கார்ட்ஸை உங்க பாதுகாப்புக்காக அனுப்பி இருக்கேன். என் ஆலம்பனாவுக்கு சர்ஜரி முடிஞ்சு சரியாகுற வரை, என் கார்ட்ஸ் உங்களைக் கண் கலங்காமல் பார்த்துப்பாங்க. உங்ககிட்ட நிறைய்ய்யப் பேசணும்… பேசலாம் மிஸஸ் ஏஞ்சலினா ஜோசப்! சிஸ்டர் ஆஃப் அலெஸ்ஸாண்ட்ரோ!” என நக்கலாகக் கூறிக்கொண்டே வந்தவன்,

“கவுண்ட் யுவர் டேஸ் யூ ப்ளடி பிட்ச்…” என இறுதி வரியைக் கனலுடன் கடித்துத் துப்பியதில், ஏஞ்சலினாவின் வயிற்றில் பயப்பந்துகள் தாராளமாக உருண்டோடியது.

அரக்கன் தொடரும்
மேகா

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
25
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்