
அரக்கனின் அன்பினிலே பாகம் 2
Read Description ▼

புதுக்காதல் புனைந்திடவா
Read Description ▼

செவ்வானம் நாணுமோ பாவையாலே
Read Description ▼

அரக்கனின் அன்பினிலே பாகம்1
Read Description ▼

என்னோடு தான் நானில்லையே
Read Description ▼
“ஐ மீன், லவ்வை விலை குடுத்து வாங்க முடியாது. கால வரையறைக்குள்ள அடக்க முடியாதுன்னு ஃபீல் பண்ணிப் பேசுனீங்களே, அதான் கேட்டேன்” என்றான்.
“செத்தா தான் சுடுகாடு தெரியுமா என்ன? தெரிஞ்சவங்க செத்தாக் கூட புதைக்கச் சுடுகாட்டுக்குப் போவோம் தான. அந்த மாதிரி தான் இதுவும்!” காட்டத்துடன் கிருபாஷிணி கூறியதில் கரத்தை மேலே தூக்கியவன், “ஐ ஆம் சரண்டர்” என்றான் பவ்யமாக.
அவனது செயலில் விழித்துப் பின் சிரித்து விட்டாள்.
“டைம் ஆச்சு கிளம்புறேன்.” என எழுந்தவளோடு அவனும் எழுந்தான்.
“அப்போ மறுபடியும் ஒரு ‘ஆட்’ குடுக்கணுமா?”
அவன் மந்தகாசப் புன்னகை வீசி, “வேணாங்க, நீங்க சொன்ன மாதிரி டைம் வேஸ்ட் தான்.” என ஒப்புக் கொண்டவனை நிம்மதியுடன் ஏறிட்டவள், “ஹப்பாடா, இப்பவாவது புரிஞ்சுதே சந்தோஷம்!” என்றாள்.

மோகமடி நீ எனக்கு
Read Description ▼

மூங்கில் குழலான மாயமென்ன
Read Description ▼
உன் ரசிகன் நானல்லவா
Read Description ▼
உயிர் தொடும் நல்லிசையே பாகம் 1
Read Description ▼
உயிர் நீத்தும் உனதாவேன்
Read Description ▼
கனவில் வந்த நாயகனின் உயிர் காக்க நிஜத்தில் போராடும் சுட்டிப் பெண்ணின் காதல் கதை
தொலைந்ததடி ஜீவனும் உன்னில்
Read Description ▼

நின் மார்பில் படர்ந்திடவா
Read Description ▼
“உன்ன பத்தி பேசணும்ன்னா நான் யார்கிட்ட பேசணும்… “ஆர்ப்பாட்டம் இல்லாமல் விழிகளால் ஊடுருவியபடி கேட்டான்.
துவாரகாவிற்கு தான் இதயம் படபடவென துடிக்கத் தொடங்கியது.
வார்த்தைகள் தந்தியடிக்க, “என் என்ன பத்தி… என்னை பத்தி என்ன பேச போறீங்க?” என்றவளை மேலும் சோதிக்கவென்றே,
“உன்ன என்கூட கூட்டிட்டு போகனும். ஐ வான்ட் டூ டேக் யூ வித் மீ… மே ஐ நோ த ப்ரொசீஜர்” என்று கூலாக கூறியதில், ‘என்ன ஹோட்டல்ல ஆர்டர் டேக் அவே பண்ணணும்ன்ற மாதிரி கேக்குறான்’ என அவளுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.
“நீங்க என்ன பேசுறீங்க? அதுவும் கோவில்ல நின்னு?” அவளின் முகம் அஷ்டகோணலாகியது.
மர்மப் புன்னகை பூத்த உதய், “நான் என்ன தப்பா பேசிட்டேன்?” என்று தாடையை தடவியபடி சிந்திக்கும் பாவனை கொடுக்க,
“நீங்க பேசுனது தப்பு இல்லையா? உங்க கூட வர…” என மேலும் பேசக்கூட வராமல் அவள் தான் தடுமாறினாள்.
“லுக்… ‘என் கூட வா’ன்னு சொன்னா ஒரே அர்த்தம் தான் இருக்கா துவாரகா. கோவில்ல நின்னு நீ தான் டர்ட்டியா யோசிக்கிற! டூ பேட்!” மூக்கை சுருக்கி தலையை ஆட்டிக்கொண்டான்.

இணைவேனோ இமையோடு
Read Description ▼

தேன்மழை தாராயோ
Read Description ▼

நின்னையே உயிரென்று 2
Read Description ▼

உள்நெஞ்சே உறவாடுதே
Read Description ▼

என் காதல் நீயல்லவோ
Read Description ▼

இது ஒரு தல காதல்
Read Description ▼

நின்னையே உயிரென்று 1
Read Description ▼

உன்னுள் நான் யாரடி
Read Description ▼
“அவருக்கு என்ன ஆச்சு டாக்டர்? என்னை யாருன்னு கேட்குறாரு. ஹெல்த்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்க,
“ரிலாக்ஸ் மிஸஸ் சஹஸ்ரா. பேஷண்ட்க்கு நினைவு திரும்புனதே நல்ல சிம்ப்டம் தான். தலையில அடிபட்டதுனால, அம்னீசியா ஏற்பட்டு இருக்கு அவருக்கு. அதுக்காக அவரோட பாஸ்ட் எல்லாத்தையும் மறக்கல. சில விஷயங்களை, சில சம்பவங்களை மறந்துருக்காரு.” என்றவரை புரியாத பாவனையுடன் நோக்கினாள்.
——
நினைவுகள் கலைய, தீரன் அறைக்குள் மெதுவாக நுழைந்தாள் சஹஸ்ரா. அவன் அப்போது தான் படுக்கையில் இருந்து எழ முயற்சித்துக் கொண்டிருந்தான்.
அதில் அவசரமாக உதவிக் கரம் நீட்டியவள், “என்ன வேணும்? என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல…” என இயல்பாக அவனை அமர வைக்க, அவனிடம் பதில் இல்லை.
“தீ… தீரன்…” அவள் மெல்லிய குரலில் அழைக்க, ஆர்ப்பாட்டம் இல்லாமல் தன் தீர்க்க விழிகளை அவள் மீது செலுத்தினான்.
இதுவரை, அப்பார்வையை அறியாதவளுக்கு லேசாக உதறல் எடுத்தது.
அதே அழுத்தத்துடன், “யார் நீ?” என அவன் வினவ, மீண்டும் ஒரு அதிர்வு அவளுள் உருவாக,
பின், மெல்ல இயல்புக்கு வந்தவள், “நான் சஹஸ்ரா. உங்க… உங்க… வைஃப்.” என்றாள் தட்டுத் தடுமாறி.
ஒரு கணம் லேசர் பார்வை வீசியவன், “ஓ!” என்று விட்டு அமைதியானான்.
அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல், “நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் வெளிய இருக்கேன். ஏதாவது வேணும்ன்னா கூப்டுங்க.” என்றவள், வெளியில் செல்ல எத்தனிக்க கணவனின் குரல் அவளைத் தடுத்தது.
“நமக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுது?” தீரன் சலனமின்றி கேட்க,
“இருபது நாள் இருக்கும். கல்யாணம் ஆகி பத்து நாள்ல தான் உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. ஆனா, யாரும் என்கிட்ட சொல்லவே இல்ல. இப்ப தான் தெரியும்.” என்றாள் விழியைத் தாழ்த்தி.
சில நொடி மௌனத்திற்கு பிறகு, “கொஞ்ச நேரம் முன்னாடி அழுதியே… அது எனக்காகவா?” அவன் மீண்டும் கேள்வி எழுப்ப,
அதில் நிமிர்ந்தவள், புரியாமல் “ம்ம்… உங்களுக்கு தான அடிபட்டு இருக்கு. அதுவும் இப்ப நீங்க என் ஹஸ்பண்ட். அப்போ உங்களுக்காக தான் நான் அழுக முடியும்.” என்றதில்,
“ஓ! அவ்ளோ லவ்வா? நம்ம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோமா என்ன?” அவன் யோசனையுடன் கேட்க, சஹஸ்ரா திடுக்கிட்டுப் போனாள்.
இதற்கு என்ன பதில் கூறுவது?
“அது… அது…. வந்து…” பெண்ணவள் தடுமாற, ஆணவனோ சுவாரஸ்யத்துடன் அவளை ஏறிட்டு,
“சொல்ல முடியாத அளவு லவ் பண்ணுனோமோ. இவளோ யோசிக்கிற? ஒருவேளை உனக்கும் மெமரி லாஸ் ஆகிடுச்சா ச… சஹஸ்ரா… ரைட்?” என்று வினவளுடன் முடித்தான்.

மழையைத் தேடி நனைவோம்
Read Description ▼
மணப்பெண் அலங்காரத்தில், சிவப்பு நிற பட்டுப் புடவை உடுத்தி, குனிந்த தலை நிமிராமல் மெல்ல எட்டு வைத்து அவனருகில் அமர்ந்தாள். மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால், அவன் கண்கள் அவளையே சுற்ற, மந்திரங்கள் ஓதி, மாங்கல்யத்தை கையில் எடுக்கும் வரையிலும் அவள் நிமிரவில்லை. தாலியை ஐயரிடம் இருந்து பெற்றுக்கொண்டவன், சரியாக அவள் கழுத்தில் ஏற்றும் வேளையில், அவளது காதோரம் குனிந்து, “திருடுன என் பென் ட்ரைவ எப்ப தருவ?” எனக் கேட்டு கிசுகிசுத்தான். அதில் பட்டென நிமிர்ந்த சாரு இருக்கும் இடம் மறந்து கண்ணை சுருக்கி அவனை முறைத்து வைக்க, அம்முறைப்பில் தன்னை மீறி மெலிதாய் புன்னகைத்தவன், மாங்கல்யத்தை அணிவித்தான்.
____
கேலியும் கிண்டலுமாக, புது மண தம்பதியரின் பார்வைத் தீண்டலுமாக அந்நாள் நகர, அன்று இரவு படுக்கும் முன்னே, சாரு இடையில் தலையணைகளை வைத்து அடுக்கினாள். பிருத்வி அவளை ஏனென்று பார்க்க, “நீங்க நைட்டு உருண்டு என் பக்கம் வந்துடுறீங்க. இன்னைக்காச்சு உருளாம படுங்க.” என்றிட,
“ஹலோ நேத்ரங்கா. இது என் பெட். இதை ஃபுல் – ஆ நான் தான் யூஸ் பண்ணுவேன். பங்குக்கு வந்தது நீ தான். நான் உருண்டு தான் படுப்பேன். போடி.” என்று சட்டமாக கையையும் காலையும் நீட்டி படுத்துக் கொண்டான். அவள் ஓரமாக படுத்து, “க்கும், இங்க உருளுறதுக்கு கோவில்ல உருண்டா புண்ணியமாவது கிடைக்கும்…” என புலம்பிட, அவள் புறம் திரும்பியவன், விழிகளால் அவள் வடிவத்தை அளந்து, “இங்க உருண்டாலும் புண்ணியம் கிடைக்கும் நேத்ரங்கா!” என விஷமமாகக் கூற, அவள் புரியாமல் பார்த்தாள்.

தீயில் தென்றலாய் உறவிதுவோ
Read Description ▼
“இங்க வச்சே மர்டர் பண்ண போறீங்களா? வெரி நைஸ். எங்க பண்ணுங்க பாப்போம்…” திமிராக ஜிஷ்ணுவை கண்டவளை, அவனும் அடக்கப்பட்ட கோபத்துடன் வெறித்தான்.
“என்ன மிஸ்டர் ஜிஷ்ணு தர்மன் உங்க ஆளுக்கு ‘ம்ம்’ ன்னு சொல்லுங்க. வெயிட் பண்றாருல பாவம்…” என உச்சுக்கொட்டி பாவம் போல அவனை கேலி செய்திட,
அவளின் கேலிதனில் விழி உயர்த்தியவன், “ம்ம்…” என்றான் நக்கல் நகையுடன்.
அதில் அவன் கத்தியை எடுத்து அவளை நோக்கி குத்த வர, ஒரு நொடி அவள் முகத்தில் அதிர்வு படர்ந்தாலும்
மறுநொடியே லாவகமாக அக்கத்தியை தடுத்து அந்த அடியாளை ஓங்கி எத்தியதில் அவன் நான்கு அடி தள்ளி சென்று விழுந்தான்.
அவளோ கர்ஜனையாக, “கருப்பு கோர்ட்டு போட்ட பொண்ணு தான… ஈசியா தூக்கிடலாம்ன்னு நினைச்சீங்களாடா? உங்க அரசியல் செல்வாக்கையும் பலத்தையும் இந்த தாராகிட்ட காட்டாதீங்க…” என அடியாளை மிரட்டுவது போல ஜிஷ்ணுவை தெனாவெட்டாக ஏறிட்டவள்,
“இந்த கேஸ்ல, நான் ஜெய்ப்பேன் தர்மா. உண்மையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தி, உனக்கு எதிரா ஆதாரம் இல்லைன்னா கூட பொய்யா கூட உன்ன ஃப்ரேம் பண்ணி உள்ள தள்ளி தூக்கு தண்டனை வாங்கி குடுப்பேன். அதுவரை என் சுண்டு விரலை கூட உன்னால ஒன்னும் பண்ண முடியாது…” என்றவள் விழி இடுங்க ரௌத்திரத்தை கக்கினாள்.
இதனைக் கேட்ட ஜிஷ்ணுவோ, “ஹ ஹ ஹ ஹா ஹா…” என வாய் விட்டே சிரித்து விட்டு,
“வக்கீலே, இல்லாத சிசிடிவியை நீ இருக்குன்னு சொன்ன மாதிரி, அதே சிசிடிவியை நீ தான் வைச்சன்னு, நானும் பொய்யா பில்லு காட்டுவேன். உனக்கு சட்டத்துல இருக்குற ஓட்டை தெரியும். எனக்கு அதை எப்படி உருவாக்கணும்ன்னு தெரியும்.” என கண்ணிமைக்கும் நேரத்தில், அவள் கரத்திலிருந்த கத்தியை அவன் கரங்களில் மாற்றி இருந்தான்.
கூடவே, அவளை தன் கைவளைவுக்குள் சுற்றி வளைத்து, கத்தியை நேராக அவளின் வயிற்றுக்கு அருகில் வைத்து அழுத்தினான்.
“இப்போ கூட சத்தமில்லாம குத்தி போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்டி. ஆனா என்கிட்டயே சவால் விடுறீல சவாலு. பாப்போம்டி என் வெள்ளை சட்டை ஜெய்க்குதா இல்ல உன் கருப்பு கோர்ட்டு ஜெய்க்குதான்னு…” அமைதியாகவே சீறியவன், அவள் அணிந்த வக்கீல் கோர்ட்டை கோடு கிழித்தான்.
அப்போதும் சிறு அதிர்வை தவிர அவள் விழிகளில் பயம் இல்லை. அவனிடம் இருந்து விடுபட முயன்றவளுக்கு தோல்வியே கிட்ட, அவன் தான், அவளை பார்த்தபடியே அவளின் சுண்டு விரலில் லேசாக கீறினான்.
“சுண்டு விரலை கூட தொட முடியாதோ இப்போ ரத்தமே வர வச்சுட்டேன்” என்ற ஆணவம் அவனிடம் தெறிக்க வெற்றிப் புன்னகை சிந்தினான்.
வலியில் கையைப் பிடித்துக் கொண்டு அவனை தீயாக முறைத்தபடி நகர போனவள், அவன் கண்ணிமைக்கும் நேரம், அவன் கையில் இருந்த கத்தியைக் கொண்டே அவனின் மணிக்கட்டை பதம் பார்த்தாள்.
“ஏய்” என ஜிஷ்ணு பல்லைக் கடிக்க, அவளோ அவனிடம் இருந்து கடன் வாங்கிய வெற்றிப் புன்னகையை உதட்டில் ஏற்றி,
“இந்த வக்கீல் வசுந்தராகிட்ட மோதாதீங்க அரசியல்வாதி அடியாளே. எனக்கு சுண்டு விரல் போனா உனக்கு கையே போகணும்” என கர்வத்துடன் நிற்க, ஜிஷ்ணு அவள் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான்.
“எனக்கு கை போனா உனக்கு உயிரே போகணும்டி” என்று வெறுப்பை உமிழ்ந்தவனை அவளும் வெறுப்புடன் நோக்கினாள்.
**
“அடியாள்ன்னா இதை கூட பண்ணலைன்னா எப்படிடி?” காலரை தூக்கி விட்டு கொண்டவன், மறுபுறம் பார்த்தபடியே அவள் தோள் மீது கை போட, அவனை திரும்பி முறைத்தவள், அவன் கையை தட்டி விட்டாள்.
மீண்டும், அவள் தோள் மீது கரத்தை சுற்றி வளைத்தவனின், வெப்ப மூச்சு அவள் கன்னங்களை பதம் பார்க்க, ஜிஷ்ணு மூச்சை நன்றாக இழுத்து விட்டான். “இன்னைக்கு சோப் மாத்திட்டியா பேப்? வேற ஃபிளேவர் மாதிரி இருக்கு. எனக்கு சந்தன வாசம் தான் பிடிச்சுருந்துச்சு” உருகும் குரலில் அவளை வசமிழக்க வைத்தவனின் முகத்தை தள்ளியவள், “உன் பேச்சே சரி இல்ல. என்னடா என்ன லவ் பண்றியா?” எனக் கேட்டாள் அழுத்தமாக.
மறுநொடியே, “ச்சே ச்சே இல்ல.” என தோளைக் குலுக்கியவன், “ஆனா, உங்கிட்ட உரச பிடிச்சுருக்கு. உங்கிட்ட மட்டும் இப்படி பேச பிடிச்சு இருக்கு பேப்… நீ என்னை லவ் பண்றியா?” அவளின் ஒவ்வொரு விரலையும் சொடுக்கெடுத்தபடி, அவன் ரசனையாய் கேட்க, அவளோ “ப்ச், ப்ச்… இல்ல!” என்றாள் மறுப்பாக தலையாட்டி.
“ஓ!” என்றவன், அவள் கையை மட்டும் விடவில்லை. அவனையே ஓரக்கண்ணில் பருகிய வசுந்தரா, “ஆனா, நீ உரசுனா பிடிச்சுருக்கு. நீ கொழைஞ்சா மட்டும் கேட்க பிடிச்சு இருக்கு” என்றபடி அவன் தோள் மீது சாய்ந்து கொண்டவள், மெல்ல புன்னகைத்தாள்.
அவனும் அதே இளநகையுடன், அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு, உச்சந்தலையில் தன் முதல் முத்திரையை பதிக்க, அம்முத்தம் பெண்ணவளின் உள்ளங்கால் வரை சிலிர்ப்பைத் தந்தது.

அலைபாயுதே அகமல்லவா
Read Description ▼
சத்யரூபா பேயாட்டம் ஆடினாள். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? திடீர்னு மாப்பிள்ளை ஓடிப் போயிட்டான்னு ஈஸியாச் சொல்றீங்க? என் அக்காவோட கல்யாணம் என்ன ஆகுறது…” என்று கத்தித் தீர்த்தாள்.
வைஷாலி தான், “சத்யா பொறுமையா இரு.” என்று அவளை அமைதிப்படுத்த முயல, “நீ சும்மா இருக்கா. உனக்கு ஒண்ணும் தெரியாது” என்று தமக்கையை அதட்டியவள், “பதில் சொல்லுங்க அத்தை. இப்ப எல்லார் முன்னாடியும் நாங்க அசிங்கப்பட்டு நிக்கணுமா?” என்றாள் கோபத்துடன்.
இந்திரஜித் தான், “உன் சவுண்ட் சிஸ்டமை ஆன் பண்ணாத ரூப்ஸ். ஏதோ ஒரு லெட்டரை வச்சு, ஜீவி ஓடிப் போய்ட்டான்னு சொல்ல முடியாது. ஒருவேளை ஏதாவது பிரச்சனைல கூட மாட்டி இருக்கலாம்” எனத் தமையனுக்கு ஆதரவாகப் பேச,
“ஓ… பிரச்சனைல மாட்டுறவரு. தெளிவாக் கடுதாசி எழுதி வச்சுட்டுப் போறாரா” அவள் நக்கலாகக் கேட்டாள்.
“யாராவது அவனைக் கடத்தி இருந்தா?” விழிகளை உருட்டி இந்திரஜித் கேட்டதில், “உங்க அண்ணன் என்ன, டாடா பிர்லாவோட பேரனா, இல்ல ஆணழகனா? ஏதோ சின்னப் பையனைக் கடத்தி வச்ச மாதிரி சொல்றீங்க.” என்று எகிறினாள்.
“அமைதியாப் பேசு சத்யா. நம்ம பிரச்சனை நமக்கு மட்டும் தெரிஞ்சால் போதும் ஊருக்கே தெரிய வேண்டியது இல்ல.” இம்முறை அவன் குரலில் ஒரு அழுத்தம் மிகுந்தது.
“நாளைக்கே எல்லாருக்கும் எங்க குடும்ப மானம் பேசு பொருளாகுமே, அப்ப என்ன செய்வீங்க? எல்லார் கிட்டயும் போய் பேசாதன்னு சொல்லுவீங்களா…”
“விடியறதுக்குள்ள அவனைக் கண்டு பிடிக்கலாம்…”
“என்ன பேசுறீங்க? வேற ஒரு பொண்ணோட போகப் போறேன்னு எழுதி வச்சுட்டுப் போன உங்க அண்ணன், விடிஞ்சதும் மனசு மாறிடுவாரா? எனக்கு இப்பவே ஒரு முடிவு தெரியணும். மணமேடை வரைக்கும் வந்துட்டுக் கல்யாணம் நின்னு போனா, எவ்ளோ கஷ்டம் தெரியுமா?”
“இன்னும் மணமேடைக்கு வரவே இல்லையே ரூப்ஸ். காலைல வரைக்கும் டைம் இருக்கே.” எனக் கேலி புரிந்தவனை, தீயாகச் சுட்டவளை யாராலும் அடக்கத்தான் இயலவில்லை.
இறுதியில், “இப்ப என்ன தாண்டி பண்ணச் சொல்ற?” என்று கடுப்புடன் இந்திரஜித் கேட்டதில், “என் அக்காவை நீ கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் அழுத்தமாக.
இந்தத் திருப்பத்தை எதிர்பாராமல் அவன் தான் ஒரு கணம் திகைத்தான்.
—
விஷயம் அறிந்து அப்போது தான் உறங்கச் சென்ற இந்திரஜித், முகம் கடுகடுக்க அங்கு வந்தான்.
அவனை ஏறிட இயலாமல் சத்யா தலையைத் தரையில் புதைக்க, அவனோ, “எங்க உன் அக்கா?” என்றான் கோபத்துடன்.
அவனிடமும் அதே பதிலைக் கமறலுடன் கூறியதில், “இந்த லெட்டர்ல இருக்குறது உன் அக்கா கையெழுத்து தான? இல்ல, உன் அக்கா கழுத்துல கத்தியை வச்சு யாரும் எழுதச் சொன்னாங்களா?” படு நக்கலாகக் கேட்டதில்,
“அவள் கையெழுத்து தான்” என்றாள் தவிப்புடன்.
“ஒருவேளை அவளை யாராவது கடத்தி இருந்தா?” பதற்றத்துடன் அவள் நிமிர,
“உன் அக்கா என்ன அம்பானியோட கசின் சிஸ்டரா? இல்ல, உலக அழகியா? கடத்திக் காசு கேட்டால் கூட, ஒரு பிரயோஜனமும் இல்ல” என்று தோளைக் குலுக்கியவனை முறைக்கக் கூட இயலவில்லை.
“கொஞ்சம் வெய்ட் பண்ணிப் பார்க்கலாம் இந்தர். கண்டிப்பா வந்துடுவா”
“வந்துடுவாளா? திரும்பி வர்றதுக்கு எதுக்கு லெட்டர் எழுதி வச்சுட்டுப் போகணும் சத்யா? அவள் ஓடிப் போயிட்டா அவ்ளோ தான். இப்போ என் கல்யாணம் நின்னதுக்கு பதில் சொல்லு.”
“என்ன, உங்க கல்யாணம்? இதுவே திடீர்னு ஏற்பாடு பண்ணுனது தான?”
“அதுக்கு? எப்படினாலும் இன்னைக்கு மாப்பிள்ளை நான் தான… ஒரு பையனோட கல்யாணம் மணமேடை வரை வந்து நின்னா, எவ்ளோ அசிங்கம்னு தெரியுமா உனக்கு?” மூச்சு வாங்க அவள் கேட்ட கேள்வியையே அவன் கேட்க,
“அதான், இன்னும் மணமேடை வரை வரலையே…” அவளும் முணுமுணுத்தாள்.
“என் அண்ணனாவது டீசண்ட்டா, கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ஓடுனான். உன் அக்கா அமுக்குணி மாதிரி, நீ நேத்து என் அண்ணனை வாய்க்கு வந்தபடி பேசுனப்ப எல்லாம் சும்மா இருந்துட்டு, முகூர்த்த நேரத்துல பெரிய நாமமாப் போட்டுட்டு போய்ட்டா. இதுல பலியாடா என்னை ஆக்குனது தான் நீ பண்ணுன பெரிய தப்பு ரூப்ஸ். இப்ப எனக்கு என் கல்யாணம் நடந்தே ஆகணும். டாட்.” என்று வீம்பாய் நின்றவனைப் பாவமாக ஏறிட்டவள்,
“இப்போ என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க இந்தர்?” என்றாள் சலிப்பாக.
“நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!” அலுங்காமல் குலுங்காமல் அசட்டையாக அவள் மீது இடியை இறக்கினான்.

வண்ணமாய் பொங்குதே
Read Description ▼

காணாத நாளில்லை கண்ணா
Read Description ▼
“மிஸ். அக்னிகா வேலை நேரத்துல கிட்சன்ல இல்லாம இங்க என்ன பண்றீங்க?” என அப்போது தான் உள்ளே வந்த ருத்ரனின் அதட்டலில் டேபிளில் இருந்துபொத்தென கீழே குதித்தாள்.
விழுந்த வேகத்தில் அவள் தலையில் அணிந்திருந்த ‘செஃப் கேப்’ கீழே விழுந்திட, அதனை குனிந்து கேட்ச் பிடித்த ருத்ரன், “ஒரு கேப்ப ஒழுங்கா வைக்கத் தெரியல…” என்று விழி இடுங்க முறைத்தான்.
அதில், அசடு வழிந்தபடி அவன் கையில் இருந்த கேப்பை வாங்கியவள், “சீஃப்… தலையில கேப் வைக்க தெரியுதான்றது முக்கியம் இல்ல. கேஸ் வெடிக்காமல் சமைக்க தெரியுதான்றது தான் முக்கியம்…” என்றாள் குட்டிப் புன்னகையுடன்.
ஆனால், எதிரில் நின்றவனின் தீப்பார்வை மேலும் அதிகமாவதை உணர்ந்து, “நான் போய் தோசை கல்லு சூடாகிடுச்சான்னு பாக்குறேன் சீஃப்…” என்றபடி சமையலறையினுள் புகுந்திட, அவள் சென்ற திசையை மர்மமாய் ரசித்தான் ருத்ரன். சில நொடிகள் தான் அதுவும். சட்டென அவனறைக்குள் புகுந்து கொண்டவனின் விழிகள் ஏதோ ஏக்கத்தை தாங்கி இருந்தது.
தன்னுடன் வேலை செய்யும் மற்றொரு ‘செஃப்’ இடம் சில உத்தரவுகளை கொடுத்தவள், நிதானமாக புது விதமான கடுகு சட்னி ஒன்றை தயார் செய்தாள்.
கூடவே, அவித்த இட்லியை இதய வடிவில் அமைத்து அதனை தட்டில் அழகாக அடுக்கியவள் இரு கரத்தையும் பரபரவென தேய்த்தபடி தட்டினை எடுத்துக் கொண்டு ருத்ரனின் அறைக்குள் நுழைந்தாள்.
மறுநொடியே தன்னவனின் முகம் வாடி இருந்ததை உணர்ந்து கொண்டவள், “சீஃப்… இன்னைக்கு நியூ டிஷ் ஒன்னு பிரிப்பேர் செஞ்சுருக்கேன். அப்படியே டேஸ்ட் பார்த்துக்கிட்டே ப்ரேக் ஃபாஸ்ட் சாப்ட்டுடுங்க” என்று அவன் முன் தட்டை வைத்தவள் அடக்கமாக நின்றாள்.
“ஹ்ம்ம்… யூ ட்யூப்ல பார்த்து ஏதாவது செஞ்சுட்டு வந்துட்டு. நியூ டிஷ் ன்னு என்னையவே ஏமாத்துறீங்களா அக்னிகா?” எனத் தன்னை சரி செய்து கொண்டு கேட்டான், சற்றே நக்கலாக.
அவள் தான் புருவம் நெளித்து, “யூ ட்யூப்ல பார்த்தாலும் என்னோட சொந்த ஐடியா யூஸ் பண்ணிருக்கேன் சீஃப்…” என்றாள் சிலுப்பிக் கொண்டு.
அவளின் திறமை பற்றி அறிந்தாலும் மேலும் கேலியாக பார்த்த ருத்ரன், “எது? இந்த இட்லிய ஹார்ட் ஷேப்ல கட் பண்ணுனதா?” என ஏளனத்துடன் வினவியவன், அவளை செல்ல சொன்னான்.
இப்போதோ சிறிதான மென்னகையே வெளிவர, பேச்சற்று வெளியில் செல்ல போனவளை கரம் பிடித்து தடுத்தவன், “அப்பறம், இந்த ஹார்ட் ஷேப் இட்லி எல்லாம் கஸ்டமர்க்கு குடுக்க வேண்டாம்” என கட்டளையாக கூறிட, அவனை குறும்புடன் பார்த்தபடி அவளும் வெளியில் சென்றாள்.
அந்த இட்லியை மிருதுவாக கையில் எடுத்த ருத்ரன், “சாரிடி… இந்த ஹார்ட் எல்லாம் நீ எனக்கு மட்டும் தான் குடுக்கணும் ஃபயர் பாப்பா… உன் ஹார்ட் மொத்தமும் எனக்கு தான் சொந்தம்… உம்மா…” என மனதினுள் கொஞ்சிக்கொண்டு அதற்கு ஒரு முத்ததையும் பதித்தவன் அவள் செய்திருந்த சட்னியில் தோய்த்து ஒரு வாய் வைத்திட, எப்போதும் போல அதன் ருசியில் கண்ணை மூடித் தன்னை மறந்தான்.
பூனை போல அவனின் அறையை மெல்லத் திறந்த அக்னிகா, ருத்ரனின் பாவனையைக் கண்டு குதூகலித்து, “ச்சோ கியூட் கண்ணா! இந்த ஹார்ட் இட்லி உங்களுக்கு மட்டும் தான். யாருக்கும் பங்கு கிடையாது கண்ணா. உம்மா…” என காற்றிலேயே முத்தத்தைப் பறக்க விட்டாள் அவனறியாமல்.
.

ஊனோடு உறைந்து விடு
Read Description ▼
அவன், “ஹனி. நாளைக்கு காலைல பிளைட்” என்று சொன்னதும், அவளுக்கு தான் மனதெல்லாம் பாரமாக இருந்தது.
“துருவ் நான் உங்ககூடவே இருந்துடறேன் நான் போகல” என்று பாவமாய் சொல்ல,
“இல்லடா நீ போயிட்டு வா.” என அவளை சமாதானப்படுத்தினான்.
பின், “உதி” என்று அவன் அழைக்க, அவள் நிமிர்ந்து என்னவென்று பார்த்தாள்.
“நான் உன்கிட்ட ஒண்ணு கேட்டா, நீ என்னை தப்பா நினைக்க மாட்டீல”
அவள், அவனை முறைத்து, அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டு, “அடி வேணுமா உங்களுக்கு? உங்களை எப்படி நான் தப்பா நினைப்பேன்” என்று அவன் கன்னத்தைக் கடித்தாள்.
அதில் துருவ் புன்னகைத்து “நான் கேட்கவா?” என இழுத்ததும்,
“அட கேளுங்க துருவ்” என்றாள்.
“எனக்கு நீ வேணும் உதி.” என குழைவுடன் கூறியவனை, புரியாமல் பார்த்தவள், “நான் உங்ககூட தான இருக்கேன்” என்று கேட்க, அவன் அவளை அழுத்தமாய் பார்த்து, “எனக்கு நீ மொத்தமா வேணும். இப்பவே” என்று சொல்ல, அதன் பிறகே அதன் அர்த்தத்தை புரிந்து அவனையே திருதிருவென விழித்தாள்.
அவன் முழியை பார்த்து விட்டு, “என்ன ஹனி. நான் உன்னை மறுபடியும் ஏமாத்திடுவேன்னு நினைக்கிறியா?” என்று சற்று கமறிய குரலில் கேட்டதும், உத்ரா சட்டென்று துருவின் இதழில் இதழ் பதித்தாள்.
———————————————–
அந்த அறை முழுதும், மெழுகுவர்த்தி ஏற்றி இருக்க, பன்னீரின் மணம் அந்த அறை எங்கும் பரவ, அந்த அறையையே சுற்றி சுற்றி பார்த்தாள்.
“வாவ் சூப்பரா இருக்கு துருவ். இதை எப்போ அரேஞ் பண்ணுனீங்க” என்று கேட்க, அவன் பதிலேதும் சொல்லாமல், அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
பின், அவளின் கண்ணை மூடி, அறைக்கு வெளியே அழைத்து சென்று .. “கண்ணை திற ஹனி” என்று கையை எடுக்க, அவள் அதிர்ந்து நின்று விட்டாள்.
ஏன் எனில், அவள் இருந்தது ஒரு கப்பலில் தான். கருப்பு போர்வை போர்த்தியது போன்று சுற்றிலும் கருங்கடலாய் இருக்க, சில்லென்ற பனிக்காற்று அவள் உடலை ஊடுருவ, முழு நிலவு மெலிதான வெளிச்சத்தை அங்கு பரப்பிக் கொண்டிருந்தது.
அப்படியே கன்னத்தில் கையை வைத்தவள், “ஹையோ நம்ம கடலுக்கு நடுவுல இருக்கோமா. அச்சோ துருவ்… என்னால நம்பவே முடியல. அவ்ளோ அழகா இருக்கு.” என்று விழி விரித்து, வியந்தாள்.
அவளையே ரசித்தவன், அவளை முழுங்கும் பார்வை பார்க்க, அந்த பார்வையில் பெண்ணவள் திணறினாள்.
மெதுவாய் அவள் அருகில் வந்தவன், அவள் நெற்றியில் தொடங்கி முத்தங்களை வைத்து, கழுத்தில் சென்று முடித்தான்.
அவள் அணிந்திருந்த துப்பட்டாவை தூக்கி எறிந்தவன் உத்ராவின் கழுத்தில் முகம் புதைக்க, உத்ராவிற்கு, பயம் ஒரு பக்கமும், அவனின் அருகாமை தந்த மயக்கம் ஒரு புறமும் இம்சை செய்தது.
இருந்தும் அவனுக்கு ஒத்துழைக்க, திடீரென்று அவள் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் இருந்தது.
கண்ணைத் திறந்து பார்த்தவள் கண்டது, துருவ் அவள் கழுத்தில் ஏதோ ஒரு செயினை போட்டு கொண்டிருந்ததை தான்.
ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த முழிக்க, அவன், “ஹனி இது என்ன தெரியுமா. நான் உனக்கு போடுற தாலி செயின். இது உண்மையிலேயே தாலி தான். நான் செயின்ல கோர்த்து உனக்கு போட்டு விட்ருக்கேன். இது தாலின்னு வெளில இருந்து பாக்குற யாருக்கும் தெரியாது. உனக்கும் எனக்கும் மட்டும் தான் இது தெரியும்.
பாத்துக்கோ உதி. இப்போ இருந்து இந்த நிமிசத்தில இருந்து, நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். உன் ஒவ்வொரு அணுவும் எனக்கு மட்டும் தான் சொந்தம்.
அம்மா, அப்பா, சொந்தம், பிரெண்ட்ஸ் இவங்க முன்னாடி நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி, பஞ்ச பூதங்கள் சாட்சியா இப்போ நம்ம கல்யாணம் நடந்துருக்கு.”
அங்கிருக்கும் மெழுகுவர்த்தியை காட்டி, “அந்த நெருப்பு சாட்சியா, அந்த ஆகாயம் சாட்சியா, இந்த கடல் சாட்சியா, அந்த நிலவு சாட்சியா, இந்த இயற்கை சாட்சியா, நம்மளை தொடுற இந்த காற்றோட சாட்சியா, நம்ம இப்போ ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்…” என்று ஆழ்ந்த குரலில் பேசிவிட்டு,
“இந்த செயின் எந்த காரணத்துக்காகவும், எந்த சூழ்நிலையிலயும், நான் உன் பக்கத்துல இருந்தாலும், இல்லைனாலும் உன் கழுத்தை விட்டு இறங்க கூடாது. இது உன் நெஞ்சுல உரசுர ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு செகண்டும், உனக்கு என் ஞாபகம் மட்டும் தான் இருக்கனும்.
உன் ஒவ்வொரு செல்லுலையும், எப்பவும் என் ஞாபகம் மட்டும் தான் இருக்கணும். உன் மனசு முழுக்க, ஒரு மில்லி செகண்ட் அளவு கூட நீ என்னை மறக்க கூடாது,
ஹனி… லவ் யு டி… லவ் யு சோ மச் டி பொண்டாட்டி” என்று அவன் பேசி முடிக்க, அவள் தான் அவனின் காதலிலும், அவளின் மேல் அவனுக்கு இருக்கும் பொசெசிவ் நெஸ்சையும் கண்டு மலைத்து விட்டாள்.

ஹே! கிட்கேட் பெண்ணே!
Read Description ▼

வான்மேகம் தேன் தூவ
Read Description ▼
“வந்து… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, விக்ராந்தும் உங்களை மாதிரி இருந்து இருக்கலாம், இப்படி எல்லாம் லைஃப் கிரிக்ட்டிகல் ஆகி இருக்காதுன்னு யோசிச்சேன்.” என தயக்க குரலில் மெதுவாக கூறியவள், உடனேயே
“எனக்கு அவன் மேல எந்த அபிப்ராயமும் இல்ல. அவனோட ஞாபகம் கூட இல்ல தான். ஆனா ஏன் இந்த தாட் வந்துச்சுன்னு தெரியல ஆரவ். சாரி. உங்களை கல்யாணம் பண்ணிட்டு நான் அவனோட கம்பேர் பண்றது தப்பு தான…” என்றவளின் மடியில் ஒரு சொட்டு கண்ணீர் வந்து விழுக, அதே நேரம் அவன் மடியிலும் கண்ணீர் துளி ஒன்று சிதறியது.
அவள் பேச தொடங்கியதுமே தேகம் இறுகிப் போனது அவனுக்கு. பின், தன்னை சமன் செய்தவன், அவளின் நாடியைப் பற்றி நிமிர்த்த, அவளோ கண்ணை மூடிக் கொண்டு,
“என்ன தப்பா நினைக்காதீங்க ஆரவ். நான் யாருக்கும் துரோகம் பண்ணனும்ன்னு நினைக்கல. அவன் கூட வாழும் போதும் அவனுக்கு மனசார உண்மையா தான் இருந்தேன். உங்களுக்கும்…” என்ற போதே பேசிய அவளதரங்கள் சிறை செய்யப்பட்டது.
ஆற்றாமை தாங்காமல் எழுந்த கேவல்கள், அவனின் இதழுக்குள் மடிந்து விட, மெல்ல மெல்ல அவளின் கரங்கள் ஆடவனின் தோள்களில் பூ மாலையாக, அவனின் முரட்டு விரல்களும், பெண்ணின் இடையை சென்றடைந்தது.
இம்முறை அவள் தடுக்கவில்லை. தள்ளவும் இல்லை. தளரவும் இல்லை. அவனின் தோள் பட்டையை இறுக்கிப் பற்றிக் கொண்டாள்.
வான்மதியின் பின்னந்தலை கூந்தலையும், புடவை இடுக்கில் வெளிறிடும் இடையையும் சீராக பிடித்து விட்டவனின் இதழ்களும் மாயங்கள் புரிய, அந்த மயக்கம் அவளையும் தாக்கியதில் கிறங்கத் தொடங்கினாள்.
ஆரவின் அலைபேசி ஒலித்ததும் தான், வான்மதி தன்னிலை வந்து அவனை மெதுவாக தள்ளினாள்.
“போன் ஆரவ்…” என்றவளின் உதடுகள், சாயம் பூசாமலேயே கன்னத்திற்கு ஏதுவாக சிவந்திருக்க,
அவனோ பிடியை தளர்த்தாமல், “லவ் யூ கண்ணம்மா. ஐ லவ் யூ சோ மச். நீ என்ன கேள்வி கேட்டாலும், உன் மனசுல என்ன நினைச்சாலும் இதான் என் பதில். ஐ ஜஸ்ட் லவ் யூ. இதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும், ஏன் அவனை லவ் பண்ணி இருந்தாலும், எப்படி இருந்தாலும் ஐ லவ் யூ. உனக்கு என் மேல கடைசி வர லவ்வே இல்லைன்னாலும்…” என்று ஆழ்ந்த குரலில் பேசிக் கொண்டே சென்றவனின் இதழ்கள் இப்போது அவளின் விரல்களுக்குள் அடைபட்டது.
“நானும் ஐ லவ் யூ தான்.” என்றவள் முகத்தை உம்மென வைத்து வேகமாக கூற, அவனுக்கு தான் அனைத்தும் மறந்து புன்னகை மலர்ந்தது.
“லவ் யூ டூ…” என சிறு சிரிப்புடன் கூறியவன், காரை கிளப்ப, அவளோ ஆரவின் கையைப் பிடித்துக் கொண்டு, “இது என்ன கிஸ்ன்னு சொல்லவே இல்ல” எனக் கேட்டு விட்டு அவனின் தோளிலேயே முகத்தை மறைத்துக் கொண்டாள்.
ஆரவ் தான் விழி விரித்து, சத்தமாக சிரித்து விட்டவன், “நான் குடுத்தது அரெஸ்ட் கிஸ் கண்ணம்மா” என்றான் குறும்பாக.
அவளோ நிமிர்ந்து, “என்னது? அப்படின்னா?” என புரியாமல் கேட்க, “உன் லிப்ஸ அரெஸ்ட் பண்ணேன்ல. அதான் அரெஸ்ட் கிஸ்… இப்போ நல்லா பார்த்துக்கோ” என்றபடி அவளின் கீழுதட்டை சிறை பிடிக்க, அவளும் விரும்பியே அவனிடம் கைதியானாள்.
—
“இனிமே என்னால இங்க இருக்க முடியாது ஆரவ். நான் இங்க இருந்து போறேன்…” என்று அவனை தாண்டி நகர எத்தனித்தவளால் நகர இயலவில்லை. அவளின் புடவை கொசுவம் அவனின் நீண்ட கால்களில் அகப்பட்டு இருந்ததே!
ஆரவின் பொறுமை காற்றில் பறந்திருந்தது. “போறியா…? எங்கடி போவ?” விழி இடுங்க அவன் கத்த,
“ஆரவ் காலை எடுங்க. சாரிய விடுங்க.” என்றவள் உதடு பிதுங்க நின்றாள். முந்தைய நாள், அவன் புடவை கட்டுவது பிடிக்கும் என கூறியதால், இன்றும் புடவையையே அணிந்திருந்தாள்.
“இங்க பாருடி. மூச்சு நின்னு குழில இறங்கும் போது தான், நீ இங்க இருந்து வெளிய போகணும். அப்போ கூட, மூச்சை நிறுத்திட்டு, நானும் உன்கூட தான் வருவேன். செத்தாலும் என் நிழல் உன் கூடவே தான் இருக்கும். என் நிழலை தாண்டி போகணும்ன்னு நினைச்ச…!” கருவிழிகள் சிவந்து கனலை கக்க, பல்லைக்கடித்து பிடிவாதத்துடன் விரல் நீட்டி எச்சரித்தவன், “என் மூச்சு என்கிட்ட இருக்காது…” என்று மிரட்டி விட்டே அவள் புடவையில் இருந்து காலை எடுத்தான்.
பெண்ணவள் தான், அவனின் கோபத்திலும், மிரட்டலிலும் மிரண்டிருக்க, கண்மண் தெரியாமல் அவன் காட்டிய காதலில் சிக்குண்டு போனாள்.


என் முதலோடு முடிவானாய்
Read Description ▼
உத்ஷவியை ஏதோ ஒரு அறைக்குள் தள்ளிய அவ்வுருவத்திற்கு சொந்தக்காரனான ஸ்வரூப் அவ்தேஷ், அவள் மறுக்க மறுக்க அவளது முகமூடியைக் கழற்றினான்.அவளைப் பார்த்த கணம் திகைத்து, ‘காலைல இவளை தான பார்த்தோம்?’ எனச் சிந்தித்திட, அவளும் அவனை இங்கு எதிர்பாராமல் சற்றுத் திகைத்தாள்.
“யாரு நீ?” எதிரில் அவள் உருவகப்படுத்திய டைனோசராகிய மனிதன் அவளை விழிகளால் அளவெடுத்துக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே அவள் முகமூடி அவனால் பறிக்கப்பட்டிருக்க, கையில் இருந்த கிளவ்சையும் கழற்றி இருந்தவள், இடுப்பில் கை வைத்துச் சுற்றி முற்றிப் பார்த்தாள்.
அது ஏதோ பழைய ஜாமான் வைக்கும், ஸ்டோர் ரூம் போல இருந்தது.
அவள் முன் சொடுக்கிட்டவன், “உன்னை தான். யாரு நீ?” இம்முறை குரலில் அழுத்தம் மிகுந்தது.
“ப்ச்… என்னைத் தெரியல, நான் தான் இந்த ஜில்லா கலெக்டர்…” என நக்கலாகப் பார்த்தாள் அவள்.
அவன் மொக்கை வாங்குவான் என எதிர்பார்க்க, அவனோ பார்வையை மாற்றாமல் நின்றிருந்தான்.
அவளுக்கு தான் அவன் பார்வையே மூச்சு முட்டியது.
“இப்ப எதுக்கு இப்படிப் பார்க்குற? உன் வீட்டுல திருட வந்தேன். மாட்டிக்கிட்டேன். அவ்ளோ தான்.” எனத் தோளைக் குலுக்கினாள்.
அவளது ஷர்ட்டின் நடுவில் தொங்க விட்டிருந்த அவனின் குளிர் கண்ணாடி மீது பார்வையைப் படர விட்டவன், “கூலிங் க்ளாஸ் திருடியா நீ?” என அமர்த்தலாகக் கேட்டு, நொடியில் அதனை எடுக்கக் கையைத் தூக்கினான்.
தற்செயலாகக் கையால் தன்னை மறைத்துக் கொண்டவள், “என்னடா பண்ற?” என மிரள, “எனக்கு என் கிளாஸ் வேணும். நீ குடுக்குறியா இல்ல…” என இழுத்தபடி மீண்டும் கையை அவளை நோக்கி நீட்டினான்.
“இரு இரு…” அவனை முறைத்தபடி நிறுத்தியவள், அவளே கண்ணாடியை எடுத்துக் கொடுக்க, அதனை வாங்கி அவனது டீ ஷர்ட்டின் நடுவில் தொங்க விட்டுக் கொண்டவன் அவளைப் போலவே, “இட்ஸ் சோ ஹாட்” என்றான் விஷமமாக.
“ஹா என்னது…?” உத்ஷவி புரியாமல் கேட்க,
“கிளாஸைச் சொன்னேன்.” சொல்லி விட்டு மீண்டும் அவளை அளக்கும் வேலையைத் தொடர்ந்திட, அவன் கூறிய உள்அர்த்தம் புரிந்து, சூடானாள்.
இருந்தும் அதனை அடக்கிக் கொண்டு, “வழி விடு. நான் போகணும்.” என அவனைத் தாண்டிச் செல்ல எத்தனிக்க,
“இன்னும் ட்ரெஸ்குள்ள எதையெல்லாம் திருடி மறைச்சு வச்சுருக்க மிஸ்.திருடி.” எனக் கேட்டவனின் பார்வை ஏனோ அவளைச் சற்றே நடுங்க வைத்தது.
“இங்க பாரு. இங்க திருடுறதுக்கு ஒரு மண்ணும் இல்லன்னு உனக்கே நல்லாத் தெரியும். வேஸ்ட் ஆஃப் டைம் ஆகிடுச்சு. ஒழுங்கா என்னை விடு.” என மிரட்டினாள் பயத்தை மறைத்துக் கொண்டு.
“இது வரைக்கும் திருடல… ஓகே! ஆனா நீ எதைத் திருட வந்த?” அவனது கூர்மையான கேள்வியில் திணறியவள், “பணத்தை தான் திருட வந்தேன்.” என்றாள் எச்சிலை விழுங்கிக் கொண்டு.
“இஸ் இட்?” தீவிரத்துடன் கேட்டபடி, அவளை நோக்கி முன்னேறியதில், அவள் பின்னோக்கிச் சென்றாள்.
“ஆமா… கா…காசு தான் திருட வந்தேன்…” காற்று தான் வந்தது உத்ஷவிக்கு.
“ம்ம்ஹும்… நீ திறந்து பார்த்த ட்ரெஸ்ஸிங் டேபிள் ட்ராயர்ல பணம் இருந்துச்சே. அதை எடுத்துட்டுக் கிளம்பி இருக்கலாமே.” என அர்த்தப் பார்வை பார்க்க, ‘நான் அதைத் திறந்தது இவனுக்கு எப்படித் தெரிஞ்சுச்சு’ என்ற ரீதியில் விழித்தாள்.
அவனது விழிகள் இப்போது நெருப்பைக் கக்க, “சொல்லு. அந்தப் பணத்தை ஏன் எடுக்கல. பணம் இல்லன்னா வேற எதைத் திருட வந்த?” கிட்டத்தட்ட கர்ஜித்தவன் அவள் திகைத்து நிற்பதைக் கண்டு, இதழ்களைச் சிறிதாக வளைத்துக் குரூரப் புன்னகை சிந்தினான்.
“சோ நீ சொல்ல மாட்ட… ம்ம்… அப்போ பதில் சொல்ற வரை இங்கயே இரு.” என்று அவள் கண்ணிமைக்கும் நேரத்தில், அவளை ஸ்டோர் அறையில் அடைத்துப் பூட்டினான் ஸ்வரூப் அவ்தேஷ்.
“ஸ்வரூ, மழை கொஞ்சம் குறைஞ்சு இருக்கு. குடையைப் பிடிச்சுட்டுப் போயிடலாமா?” என உத்ஷவி அவனது எண்ணத்தைக் கலைக்க, இருவரும் இறங்கி ஒரே குடையில் நடக்கத் தொடங்கினர்.
“இந்தக் காலை ரொம்ப ஊணாத ஸ்வரூ…” என அவனது காலைப் பார்த்தே நடக்க, அவன் வாகாக அவளது தோள் மீது கையைப் போட்டுக் கொண்டான்.
“குடையைத் தூக்கிப் பிடிடி. சாரல் அடிக்குது.” என அதிகாரம் வேறு செய்ய, அவன் கையில் குடையைக் கொடுத்தவள், “ஏதோ சைட் அடிச்ச பாவத்துக்கு உனக்குக் குடை பிடிச்சுட்டு வந்தா நீ ரொம்ப ஓவராத்தான் போற டைனோசர்.” என வெகுவாய் சிலுப்பிக் கொண்டதில், அதரம் மடித்துப் புன்னகைத்தான். அவளை இன்னும் தன்னருகில் இறுக்கிக் கொண்டதில், இருவரின் தோள்களும் ஒன்றை ஒன்று உரசிக் கொள்ள, மண்வாசமும் மங்கையின் வாசமும் கலந்தடித்து ஆண்மகனின் கட்டுப்பாடுகளுக்கு ஆட்டம் காட்டியது

ஸ்பரிசங்கள் இனிதோ
Read Description ▼
இலங்கை தமிழில் ஓர் இனிமையான நெஞ்சை அழுத்தும் காதல் கதை.
மெல்ல அவனின் கரங்கள் புத்தகத்தின் பக்கத்தைத் திருப்பிட எண்ணங்களும் ஏதுவாய் நகர்ந்தன.
“நம்ம எப்போ கல்யாணம் கட்டிப்போம் யோகாப்பா…?” என நெஞ்சினோரம் சாய்ந்து, சட்டை நுனியை திருகியபடி அவள் கேட்ட கேள்விக்கு,
“கல்யாணம் கட்டுனா தான் பொஞ்சாதிங்களாங்கப்பா…?” என்றே மறுகேள்வி எழுப்பினான்


தீரா காயங்களும் தீர்ந்திடுமினி
Read Description ▼
ரௌடி பொண்ணுக்கும், சாதுவான பையனுக்கும் இடையில் நிகழும் மோதல், காதலே கதை.

உள்நெஞ்சே உறவாடுதே

உள்நெஞ்சே உறவாடுதே

மௌனமே வேதமா
Read Description ▼
நாயகனின் அலுவலகத்தில் புதியதாக சேர்ந்த நாயகி. அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் திக்கித்திக்கி சிதறினாலும், அவளின் உள்ளத்தில் பதிந்த வலியை அவன் உணர்ந்துவிட்டான். அன்பும் புரிதலும் அவன் குடும்பத்தின் ஆதரவும் சேரும் போது… அவள் வாழ்க்கை புதிய அர்த்தம் பெறுமா? அல்லது மீண்டும் மௌனம் மட்டுமே அவளின் விதியா?

மயங்காதே மைவிழியாலே(ளே)
Read Description ▼
கல்லூரி நினைவுகள்… ஒரு பழைய நண்பனின் மர்மமான மரணம்… ஆனால் அது தற்கொலையா? அல்லது யாரும் நம்பாத ஒரு கொலையா? ஆண்டுகள் கழித்து, விஞ்ஞானியாக மாறிய நாயகன் மீண்டும் அந்தக் கல்லூரிக்கு திரும்புகிறான். நாயகியுடன் இணைந்து, அவனின் கடந்த கால சாயல்கள், இரகசியங்களுடன் மீண்டும் உயிர்ப்பெடுக்கின்றன. மறைந்த மாணவர்கள், மங்காத காதல்கள், பதிலளிக்காத கேள்விகள்— அனைத்திற்கும் பின்னால் ஒரே சாவி: “ரசாயனத் துறையின் மர்மங்கள்…”

நேசமே சுவாசமாகி
Read Description ▼
நாயகியின் கனவோ ஒரு அன்பான வாழ்க்கை. ஆனால் விதியின் விளையாட்டு, அவளை அவன் கரங்களில் தள்ளிவிட்டது. காதலால் அல்ல, பழிக்காக நடத்தப்பட்ட ஒரு திருமண நாடகம்! வஞ்சம் கொண்டு நாயகியைக் கரம் பிடித்த நாயகனின் சொற்களில் காயப்படுத்தும் நோக்கும் இருக்க, அவளின் மௌனத்தில் அதிவேதனை… இருவரின் உள்ளங்களும் நெருக்கமாக இருக்க வேண்டிய நேரத்தில், கடந்த காலத்தின் நிழல்கள் இடையூறு செய்கின்றன. விதியின் சுழலில் திடீரெனப் பிரிந்த இரு இதயங்கள், மீண்டும் ஒன்றாகுமா? அல்லது காற்றில் கரைந்துவிடுமா?

அலைகடல் தீண்டும் ஆழமே
Read Description ▼
காதல் மலரத் தொடங்கிய தருணத்திலேயே, எதிர்பாராத சூழ்நிலையில் ஒரு திருமணம். ஆனால் புரிதல் வரத்தொடங்கிய இரு இதயங்கள் திடீரென பிரிந்துவிடும் போது அவளைக் கைவிட்டுவிட்டானா? அல்லது விதியின் சோதனைக்குப் பிறகு மீண்டும் அவளை தேடிச் செல்லப்போகிறானா?
தொலைந்ததடி ஜீவனும் உன்னில்
Read Description ▼

யுகம் மாறினும் மறவேன் வஞ்சிமுகம்
Read Description ▼
இன்றைய உலகில் வலுவான ஒரு தொழிலதிபர். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வீரமிக்க ஒரு மன்னன். இருவரின் உயிரும், விதியும், காதலும் — நேரத்தின் மர்மத்தில் சிக்கிக் கொள்கிறது.
காலம் அவர்களை இடம் மாற்றும் போது… விதி பலவித போராட்டங்களைத் தொடங்கி வைக்கிறது. நவீன யுகத்தின் சிக்கல்களா? அல்லது பழைய யுகத்தின் வஞ்சனைகளா?
காமெடி, காதல், சஸ்பென்ஸ், அதிரடி — அனைத்தையும் தழுவியது இந்த Time Swap பயணம், “யுகம் மாறினும் மறவேன் வஞ்சிமுகம்” உங்களை ஒவ்வொரு பக்கத்திலும் பரபரப்பில் ஆழ்த்தும்!
காலம் மாறினாலும் காதல் மாறுமா!

