
“ரித்தி என்னாச்சு” நிவேதனின் குரலில் தான் சுயநினைவுக்கு வந்தாள்.
நிவேதன் கண்மணி, கதிரவன் சிந்தாமணி நால்வரும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ரித்திகாவின் வரவில் அவளருகில் வந்திருந்தனர்.
துரிதமாக கண்ணீரை துடைத்துக்கொண்டவள், “ஒ ஒன்னும் இல்லையே” என மறுத்திட, “ஏன் அழுதுருக்க ரித்தி… என்ன பிரச்சினை…” எனப் பதறினான் நிவேதன்.
“நத்திங் நிவே.”
“இப்ப சொல்றியா இல்ல ஆஹில கேட்கவா?”
ஆஹில் பெயரைக் கூறியதும் ரித்திகாவின் கண்கள் மீண்டும் கலங்கியது.
“ரித்தி என்னனு சொல்லுடா ப்ளீஸ்” நிவேதனின் தவிப்பான குரலில் உடைந்தவள், “ஆஹியை காணோம் நிவே” என்றாள் அழுகுரலில்.
“காணோமா? ஹே உன் நண்பன் தான் ஏதாவது வேல குடுத்து அனுப்பி இருப்பான்” கதிரவன் கூறிட, “இல்ல… அப்டின்னா யாஷ் சொல்லிருப்பான். அவனுக்கே தெரியல…” என நடந்ததை விளக்கியவள் “அவன் ஏதோ டேஞ்சர்ல இருக்கான்னு மனசு அடிச்சுக்குது கதிர்…” என்றாள் தேம்பலுடன்.
“அப்படிலாம் இருக்காது அண்ணி. நீங்க வேணா பாருங்க அவரே வந்துடுவாரு…” கண்மணி ஆறுதல் கூறிட, நிவேதனோ “அப்படி எல்லாம் நம்பிட்டு இருக்க முடியாது. மச்சான்கிட்ட சொல்லலாம்” என துரிதப்படுத்த, ரித்திகா தடுத்தாள்.
“நாளைக்கு நிதாவோட சர்ஜரி நிவே. அவன் மைண்ட் ஃபுல்லா இங்க தான் இருக்கனும். அவனோட ஃபிஸிக்கல் மெண்டல் ப்ரெசன்ட் கண்டிப்பா அவளுக்கு தேவை. அவனை பேனிக் ஆக்க வேணாம். நான் அவனை தேடுறேன். சென்னைனா ஆப்ஷன் இருக்கும். இங்க எங்க போயிருப்பான்னு புரியல. அவனோட மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆன இடத்தை கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாம்…” என்றவளை ஆதூரமாய் பார்த்தான் நிவேதன்.
“இதோ பாரு ரித்தி. விஷயத்தை பெருசு பண்ணாத. உடனே அவன்கிட்ட சொன்னா, ஏதாச்சு செய்வான். அவனைப் பொறுத்தவரை நிதாவுக்கு குடுக்குற முக்கியத்துவம், யாருக்காகவும் நிக்காது” என உறுதியாகக் கூறியவனை தவிப்பாக ஏறிட்டவள்,
“புரியுது நிவே. ஆனா ஒருவேளை அவன் உண்மையாவே வேலையா போயிருந்தா. கொஞ்சம் வெய்ட் பண்ணி பார்க்கலாம்… அப்பறம் தேவை இல்லாம பதட்டப்படுத்துன மாதிரி ஆகிடும்” என்றதில், அவனது அலைபேசி அழைப்பிற்கு அழைத்து ஓய்ந்து போயினர்.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் நிதர்ஷனாவிற்கு விழிப்பு தட்டியது.
கூடவே சிறு புன்னகையும் அவள் இதழ்களை அலங்கரித்தது. முந்தைய இரவின் தாக்கம் உடலெங்கும் பூரிப்பாய் நிறைந்திருக்க, மனதிலும் கூட ஆழ்ந்த அமைதி.
வாழ்வோ சாவோ, இந்த நேசம் தரும் நிறைவை எந்த விதியாலும் சதியாலும் பறித்துக்கொள்ள இயலாது.
ஆசுவாசமாக குளித்து வந்தவள், நேராக ஆய்வுக்கூடத்திற்கே சென்று விட, அங்கோ சோஃபாவில் தலையை பின்னால் சாய்த்தபடி அப்போது தான் கண்ணை மூடி இருந்தான் யாஷ் பிரஜிதன்.
அவனது அடர்ந்த புருவத்தை நீவி விட்டதில் வெடுக்கென கண் விழித்தவன் புதிதாய் பூத்த ரோஜாவாக, சந்தன சோப்பின் மணத்துடன் ஈரம் காய்ந்து பொசுபொசுவென மாறி இருந்த கூந்தலையும் கண்டு ஒரு கணம் கண்ணிமைக்க மறந்தான்.
“தூங்கவே இல்லையா நீ?” சிறு கோபம் அவளிடம்.
“இன்னைக்கு என்னோட ஆலம்பனாவை முழுசா ரெகவர் ஆக்கிட்டு, முழு நைட்டும் டீப் ஸ்லீப் பண்ண போறேன்” தலைசாய்த்து கூறியவனை ரசித்தவள், “சர்ஜரி முடிஞ்சதும் நான் மயக்கத்துல தான் இருப்பேனா? எவ்ளோ நேரம் நடக்கும் யாஷ்?” விவரம் கேட்டுக்கொண்டாள். அவள் முகத்திலோ மனத்திலோ பயமேதும் இல்லை. நிச்சலனமாகவே இருந்தது.
“எவ்ளோ சீக்கிரம் முடிக்கிறோமோ அவ்ளோ நல்லது நிது. நாலுல இருந்து எட்டு மணி நேரம் ஆகலாம்.”
“அவ்ளோ நேரமா?”
“பட் டோன்ட் வொரி. உனக்கு அனஸ்தீஸியா குடுத்துடுவாங்க. வலி ஏதும் தெரியாது. ஸ்ட்ராங்கா இருக்கணும்” என்று கட்டளையிட்டான்.
“ஆனா நீ பார்த்துட்டு இருப்பியே உனக்கு வலிக்கும்ல… நியாயமா நீ தான் ஸ்ட்ராங்கா இருக்கணும். நீ எவ்ளோ ஸ்ட்ராங்கா என் பக்கத்துல இருக்கியோ நானும் அதே அளவு ஸ்ட்ராங்கா இருப்பேன்… டீலா?” எனக் கண்சிமிட்டியவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், “சியூர்டி… உனக்கும் சேர்த்து நான் ஸ்ட்ராங்கா இருக்கேன்” என்றான் உறுதியுடன்.
அன்றிரவு முழுதும் மொட்டை மாடியிலேயே அடைந்தனர் ஐவரும்.
மாறி மாறி ஆஹில்யனுக்கு அழைத்தும் பலனில்லை. ஆனால் அவனது எண்ணிலிருந்து ஒரு வீடியோ வந்தது.
யாரோ முகம் தெரியாத நபர்கள், ஆஹில்யனைக் கட்டி வைத்து அடித்துக்கொண்டிருந்தனர்.
ஏஞ்சலினாவின் இருப்பிடம் பற்றியும், யாஷ் பிரஜிதனின் ரகசிய இடங்களைப் பற்றியும் கேட்டு குருதி கொட்டும் அளவு அடிக்க, அவனோ வாய் திறக்காது கல் போல இருந்தான்.
“இன்னும் அரை மணி நேரத்துல இவன் உண்மையை சொல்லலன்னா, இவனோட பொணம் தஞ்சாவூர் ஆத்துல மிதக்கும். அடுத்த ஒரு மணி நேரத்துல உன் வீட்ல இருந்து இன்னொருத்தனை தூக்குவேன் யாஷ்” என்று ஒரு ஆண்குரல் கேட்க, ரித்திகாவிற்கு தலையே சுற்றியது.
நிவேதனோ, “இதுக்கு தான் சொன்னேன் அப்பவே மச்சான்கிட்ட விஷயத்தை சொல்லலாம்னு…” எனக் கடிந்து விட்டு விறுவிறுவென ஆய்வுக்கூடத்திற்குச் செல்ல, “நிவே” என நொந்தபடி அவன் பின்னே சென்றாள் ரித்திகா.
கதிரவனோ அந்த வீடியோவையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்மணியும் அங்கிருந்து நகர, சிந்தாமணி மட்டும் “என்ன கதிர் பார்க்குறீங்க?” என வினவினாள்.
“இந்த இடத்தை நான் எங்கயோ பார்த்துருக்கேன் சிந்தா. எங்கன்னு தான் ஞாபகம் வரல”
“இது ஏதோ குடோன் மாதிரி தான் இருக்கு”
“ம்ம்ம்ம் ஆனா ஏதோ தெரிஞ்ச இடம் மாதிரியே ஃபீல் ஆகுது” என்று நெற்றியைத் தட்டினான்.
“யாஷ் மாமாட்ட காட்டலாம் இந்த வீடியோவ வாங்க” என்று அவனை இழுத்துச் சென்றாள்.
நிவேதன் ஆய்வுக்கூடத்தில் நிதர்ஷனாவை எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் தயங்கி பின் ஆஹில்யனின் உயிரைக் காப்பதும் முக்கியமென உணர்ந்து யாஷ் பிரஜிதனிடம் விவரம் கூற, அவனிடம் சிறு அதிர்வு.
“என்ன லாங்குவேஜ்ல பேசுனாங்க? எங்க அந்த வீடியோ” என்றவனின் விழிகள் கலங்கி நின்ற ரித்திகாவை ஒரு கணம் தவிப்பாய் பார்த்தது.
“தமிழ்ல தான் மச்சான்” எனும்போதே கதிரவன் அந்த வீடியோ யாஷிடம் காட்ட, “இது ஏஐ வாய்ஸ்” என்றவன் முகம் முழுக்க உதிரம் வழிய கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாது அழுத்தமாக அமர்ந்திருந்த ஆஹில்யனை ஆதங்கமாக பார்த்தான்.
“இந்த இடியட் வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தான. அப்படியே இங்க யாரும் வந்தாலும் ஐ கேன் ஹேண்டில்” என எரிந்து விழுந்தவனுக்கோ இது இத்தாலியில் இருந்து வந்த மிரட்டலா அல்லது சைனாவில் இருந்து வந்ததா என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
ஆகினும், சைனா அரசு இன்னும் கூட அவனது விண்வெளி ஆராய்ச்சியை முடித்திருக்கவில்லை.
இத்தாலி அரசிடமும் இடைப்பட்ட நாளில் அவன் பேசி சரி செய்திருந்தான். அப்படி இருக்கையில் ஏஞ்சலினாவைக் கேட்டு யார் வர முடியும் என்ற சிந்தனை பரவிட, கதிரவன் கத்தினான்.
“யாஷ் இந்த இடம் எனக்குத் தெரியும். இது தஞ்சாவூர்ல தான் இருக்கு…”
“உனக்கு எப்படிடா தெரியும்?” நிதர்ஷனா கேட்டதில்,
“நான் சின்ன வயசுல அப்பா கூட இங்க வந்துருக்கேன். என் அத்தை வீடு இதுக்கு பக்கத்துல தான் இருக்கு. இங்க ஒரு ரைஸ் மில் இருக்கும். அதோட சேர்ந்தது தான் இந்த குடோன்…” என்றான் பரபரப்பாக.
“ஆர் யூ சியூர்?” யாஷ் கூர்மையாகக் கேட்க,
“ஆமா ஒரே ஒரு தடவை தான் நான் குடும்பத்தோட தஞ்சாவூருக்கு வந்துருக்கேன். அப்போ கூட இது அப்பாவோட சொந்த ஊர்னு எனக்குத் தெரியாது. ஒரு ஃபங்க்ஷனுக்கு வந்தோம்… எனக்கு ஏன் இது நல்லா ஞாபகம் இருக்குன்னா, ரைஸ் மில்லை சுத்தி பார்த்துட்டு நான் இந்த குடோன்குள்ள போய்ட்டேன். நான் உள்ள இருக்குறது தெரியாம குடோன் கதவை சாத்திட்டாங்க. நைட்டு முழுக்க நான் உள்ள தான் இருந்தேன். இந்த சுவத்துல பாருங்க, அரிசிலயே செஞ்ச பெயின்டிங் இருக்கு. நைட்டு முழுக்க நான் இந்த அரிசியை தான் எண்ணிட்டு இருந்தேன். காலைல தான் என்னை கண்டுபிடிச்சாங்க…” என்றான்.
“இதுலாம் எப்படா நடந்துச்சு நீ சொல்லவே இல்ல?” நிவேதன் கேட்டதில்,
“நான் நயன்த் படிக்கும்போதுடா. உங்ககிட்ட சொன்னா என்னைக் கிண்டல் பண்ணுவீங்கன்னு அப்டியே அதை புதைச்சுட்டேன்” என அசடு வழிந்தான்.
நிதர்ஷனா, “யாஷ்… நீ போ. மாம்ஸ கூப்பிட்டு வா” என அவசரப்படுத்த, ரித்திகா “இல்ல யாஷ் இங்க சர்ஜரிக்கு கண்டிப்பா இருக்கணும். இடம் தெரியும்ல நான் போறேன்” என்றாள்.
“இவரா எனக்கு ஆபரேஷன் பண்ண போறாரு. டாக்டர்ஸ் தான ரித்தி?”
“ஆமா தான், ஆனா டெக்னிகலா பண்ண அவன் தேவை. யாஷ் ப்ளீஸ், நீ இவளுக்கு சர்ஜரிக்கு ஸ்டார்ட் பண்ணு…” எனும்போது நிவேதனும், “மச்சான் நீ இங்க பாரு. நாங்க ஆஹில் மச்சானை காப்பாத்துறோம்…” என்றான் தீவிரமாக.
“உங்களைக் காப்பாத்திக்கவே நான் தான்டா வரணும்” யாஷ் முறைத்தாலும், “பீ சேஃப்… இடைல என்ன ஹெல்ப் தேவைப்பட்டாலும் எனக்கு உடனே சொல்லுங்க” என அவர்களை அனுப்பி வைத்தான்.
கண்ணை இறுக்கி மூடித் திறந்தவன், “அந்த பெட்ல படு. கொஞ்ச நேரத்துல டாக்டர்ஸ் ப்ரொசீஜர் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. ஸ்டே அலைவ்” என்று அதட்டலாக அழுத்தமாய் மொழிந்தான்.
“எல்லாம் நல்லபடியா நடக்கும் அரக்கா” அவன் கையை பற்றி அழுத்தியவள், அங்கு போடப்பட்டிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டாள்.
கண்மணியும் சிந்தாமணியும் அவர்களுடன் காரில் ஏறிக் கொள்ள, “நீங்க எங்க வர்றீங்க?” என்றான் கதிரவன்.
“உங்களுக்கு சண்டை போட ஆள் வேணும்ல…” சிந்தாமணி இளித்து வைக்க,
“டேய் நீங்க பேரா வர்றக்குள்ள, என் பேரை அங்க போட்டுத் தள்ளிடுவானுங்க போல. சீக்கிரம் போய் தொலைங்கடா…” என்று ரித்திகா கொந்தளித்ததில் நிவேதன் வேகமாக காரை எடுத்தான்.
ஒரு பெரிய ஆக்ஷன் பிளாக்கை எதிர்கொண்டு இரண்டு ஜோடிகளும் அந்த குடோனில் காலடி எடுத்து வைக்க, அங்கு ஏற்கனவே யாஷ் பிரஜிதனின் ஆள்கள் உள்புகுந்து எதிராளிகளை சுட்டுத் தள்ளி இருந்தனர்.
“நம்மளை உப்புக்கு சப்பாணியா வச்சுருக்குறதே அந்த வெளிநாட்டுக்காரனுக்கு வேலையா போச்சு…” நிவேதன் புலம்பியதில், “டேய் ஆளுங்க பார்க்க தடிமாடுங்க மாறி இருக்கானுங்க. ஏதோ வாழ்க்கைல இப்ப தான் காதல் கண்றாவி எல்லாம் பார்க்க ஆரம்பிச்சுருக்கோம். இவனுங்களை அடிச்சு நாம கோமாவுக்குப் போனா, உன் மச்சான்காரன் நம்மளை உசுரோடவே அடக்கம் பண்ணிடுவான்” என்ற கதிரவனின் கூற்றிலுள்ள நிஜம் புரிந்து அசட்டுப் புன்னகையை உதிர்த்து வைத்தான் நிவேதன்.
ஆஹில்யன் நாற்காலியில் கட்டப்பட்டு அப்படியே கீழே சரிந்திருந்தான்.
ரித்திகா வேகமாக ஆஹில்யனைத் தூக்கிட, கண்மணியும் அவளுக்கு உதவி செய்தாள்.
“அடி வாங்குறதுக்குன்னே அளவெடுத்து செஞ்ச மாதிரி வந்து மாட்டிக்கிட்டடா எருமை மாடு” அவனைத் திட்டினாலும், “ஆஹி இங்க பாருடா… நீ ஓகே வா?” எனக் கன்னத்தை தட்டி எழுப்பினாள்.
“அண்ணி கையெல்லாம் அவிழ்த்து விடுங்க” என்றபடி அவள் கால் கட்டை அவிழ்த்தாள்.
இன்னும் மயக்கம் தெளியாத ஆஹில்யனை நொந்து பார்த்த கதிரவன், “ஏன் ரித்தி… அவன் உனக்கு மூணு முடிச்சு போடுவான்னு பார்த்தா, உன்னை முடிச்ச அவுக்க வுட்டுட்டான்” என்றதில், நிமிர்ந்து அவனை முறைத்தவள், “மூடிட்டு கட்ட அவுருடா வெண்ண” எனக் குதறினாள் ரித்திகா.
நிவேதனோ, குண்டடி பட்டு சரிந்து கிடந்த கடத்தல்காரர்களை காலால் தள்ளி விட்டபடி குடோனுக்குள் முன்னேறி சென்றான்.
“ஏய் கிட்டவராத கொன்னுடுவேன்…” ஒருவன் குடோனின் இருண்ட அறைக்குள் இருந்து துப்பாக்கியை நீட்டினான்.
“யாரு உள்ள?” நிவேதன் கேட்டபடி மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்க, குண்டு அவன் காலுக்கு அடியில் வந்ததில் துள்ளிக் குதித்தான்.
“டேய் யாருடா நீ…” எனும்போது மீண்டும் குண்டு பாய முற்பட, மீண்டும் தப்பித்திருந்தான். அதற்குள் யாஷ் பிரஜிதனின் ஆள்கள், அந்தப் பகுதியை நோக்கிச் சுடத் தொடங்க, அவன் காலில் அடிபட்டு சரிந்து வெளிச்சத்தில் விழுந்தான்.
இங்கோ ஆஹில்யன் மெல்லக் கண்ணைத் திறக்க, அப்போது தான் ரித்திகாவிற்கு உயிரே வந்தது.
“ஆஹி ஆர் யூ ஆல்ரைட்?” கேட்டபடி ரித்திகா அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள, “நீ ஏன் வந்த ரித்தி? நிதாவோட சர்ஜரி” என்றவனை ஆதூரமாக ஏறிட்டவள், “யாஷ் பார்த்துப்பான்… நீ எப்படி இங்க மாட்டுன. யார்?கடத்துனா?” எனும்போதே விஷயம் கேள்விப்பட்டு இளவேந்தனும் ஆதிசக்தியும் அங்கு வந்து விட்டனர்.
“ரித்தி ஃபர்ஸ்ட் எல்லாரையும் கூட்டிட்டு இங்க இருந்து போ” ஆஹில்யன் கையில் ஏற்பட்ட வலியில் முகம் சுளித்துக் கூற, அவளோ “எங்கயும் வலிக்குதாடா. நீ வா ஹாஸ்பிடல் போகலாம்” என எழுப்பியதில், “அதுக்கெல்லாம் டைம் இல்ல ரித்தி…” என்றபோது தான் குண்டு சத்தமும் கேட்டது.
ஆஹில்யன் பரபரத்தான், “ஆண்ட்டி நீங்க நினைக்கிற மாதிரி கதிரோட அப்பா நடேசன் நல்லவன் இல்ல. ஏஞ்சலினாவைக் காப்பாத்த அவன் என்ன வேணாலும் செய்வான்” என்றதில்,
“ஏஞ்சலினாவை யார்கிட்ட இருந்து காப்பாத்த போறான்” ஆதிசக்தி குழம்பினார்.
அவனோ “ரித்தி யூ நோ தி சீரியஸ்னெஸ்” என்றதுமே அவளும் விழித்துக்கொண்டாள்.
நிவேதன், குண்டடியில் மயங்கி இருந்தவனின் முகத்தையே கூர்ந்து பார்த்து அதிர, அவனோ சட்டென கண்விழித்து, துப்பாக்கியை நிவேதனின் தொண்டைக்குழியில் வைத்து அழுத்தப் போக, சடுதியில் நிலையை உணர்ந்த நிவேதன் அவனது கையை மேலே தூக்கி விட்டதில், விட்டத்தில் குண்டு தெறித்தது.
கதிரவன் இன்னும் அதிர்வில் இருந்து மீளாதிருந்தான்.
கண்மணி நிவேதன் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, கட்டையால் அவரது குண்டடி பட்ட காலில் அடிக்க, வலியில் துடித்தவர் துப்பாக்கியை கீழே போட்டார்.
ஆனால் மறுநொடி, மற்றொரு காலால் கண்மணியின் வயிற்றில் ஓங்கி எத்தி விட, அவள் தூர சென்று விழுந்தாள்.
“கண்மணி…” நிவேதன் கத்தி எழப்போக, அவரோ அவனது கழுத்தைப் பிடித்து நெறித்ததில், கதிரவன் அங்கு வந்து விட்டான்.
ஒரு கட்டையால் தந்தையின் தலையில் அடிக்க, அவர் மயங்கிச் சரிந்தார்.
யாஷ் பிரஜிதனின் ஆள்கள் அவரைச் சுட்டு வீழ்த்த அருகில் வர, ஆஹில்யன் “ஸ்டாப். பாஸ் இவனை உயிரோட கொண்டு வர சொல்லிருக்காரு… நிவே கதிர் நீங்க கிளம்புங்க ப்ளீஸ்…” என்றான்.
கதிரவனும் நிவேதனும் இன்னும் திகைப்பிலேயே அசையாது இருக்க, கண்மணியின் கதறலில் தான் நிவேதன். உயிர்பெற்றான். அவன் செல்லும் முன் ஆதிசக்தி மகளைத் தூக்கி விட்டு, “என்னாச்சு கண்மணி… நீ ஓகே தான?” என்றார் பதற்றத்துடன்.
“வயிறு வலிக்குதுமா…” அழுகுரலில் கூறியதில் ஆஹில்யன் அதட்டினான்.
“நான் தான் சொல்றேன்ல போங்கன்னு. ரித்தி ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” அவனது நிலை உணர்ந்தவள், தமையனையும் கதிரவனையும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் செல்ல, ஆதிசக்தியும் இளவேந்தனும் கண்மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இங்கோ, மயக்க மருந்தின் வீரியத்தில் மெல்ல மெல்ல கண்கள் மங்கியது நிதர்ஷனாவிற்கு.
“அரக்கா… மாம்ஸ்?” மெல்ல முணுமுணுக்க, “ஹீ இஸ் சேஃப். யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லடி… யூ ஜஸ்ட் ஸ்டே காம். அண்ட் ஸ்லோலி க்ளோஸ் யுவர் ஐஸ்!” என்று மெதுவாக அவளது தலையை வருடிக்கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாய் யாஷ் பிரஜிதனின் உருவம் கண்ணை விட்டு மறைந்தது.
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்ட யாஷ் பிரஜிதன், செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவளது மூளைக்குள் சிக்கி இருக்கும் வைரஸை மருத்துவரின் மூலம் அழிக்க விழைந்தான்.
கிட்டத்தட்ட 8 மணி நேரம் நீடித்தது. நிவேதனுக்கு தங்கையைப் பார்ப்பதா? பேச்சற்று இறுகி இருந்த நண்பனை பார்ப்பதா? அல்லது மருத்துவமனைக்குச் சென்று தன்னவளைப் பார்ப்பதா என்றே தெரியவில்லை.
“மச்சான்!” கதிரவனின் தோளைத் தொட்டதில், “நான் ஓகேடா. நீ கண்மணியைப் பார்த்துட்டு வா!” என்றான் கண்ணீரை உள்ளிழுத்தபடி.
“டேய்… என்னன்னு விசாரிக்கலாம்டா.”
“என்ன விசாரிப்ப? அவர் உன்னை கொலை பண்ண வந்தாருல” நடுக்கத்துடன் கேட்டவனின் கையைப் பற்றிக்கொண்ட நிவேதன், “சாகனும்னு விதி இருந்திருந்தா இவ்ளோ சதில இருந்து தப்பிச்சு வந்துருக்க மாட்டேன். விடுடா. விசாரிச்சுக்கலாம். அவர் சைடு எதுவும் காரணம் இருக்கலாம்ல…” என்றான் நண்பனுக்காக.
“எந்த காரணம் இருந்தாலும், யாஷ் அவரை உயிரோட விடப்போறது இல்ல. முதல்ல, என் மனசாட்சி விடனும்ல. எல்லாத்துக்கும் காரணம் அவருன்னா…” நினைக்கவே பயந்து விழிகளை மூடிக்கொண்டான்.
சிந்தாமணிக்கு அவனது நிலையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது.
ரித்திகாவோ, “கவலையே படாத. நிதாவோட இந்த நிலைக்கு காரணமான இருந்த சொந்த அப்பாவையே கொன்னவனுக்கு, உன் அப்பாலாம் எம்மாத்திரம்” என்றதில், என்னது அலெஸ் செத்துட்டானா? என ஆடவர்கள் அதிர்ந்தனர்.
“ஆமா!”
“ஆனா ஏஞ்சலினாவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” சிந்தாமணி குழம்பினாள்.
ரித்திகா விவரித்தாள்.
“ஏஞ்சலினா… அலெஸ், வரதராஜனோட மாஸ்டர் மைண்ட். எங்ககிட்ட நல்லவ வேஷம் போட்டுக்கிட்டு, ஒவ்வொரு தடவையும் எங்களை ஏமாத்தி இருக்கா. அலெஸ்ஸாண்ட்ரோ செஞ்ச ரிசர்ச்கு, தூபம் போட்டதே அவள் தான். ஏஞ்சலினா, ஒரு டாக்டர். உலகப்புகழ் பெற்ற நியூரோவைராலஜிஸ்ட். மூளை, நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வைரஸ்களை ஆராயும் ஆராய்ச்சி நிபுணர்.
ஆனா அவளோட ஐடென்டிட்டி வெளி உலகத்துக்கு அவ்ளோவா தெரியப்படுத்துனது இல்ல. ஆதி ஆன்ட்டிக்கே அவளோட ஒரிஜினாலிட்டி தெரியாது. ஏன்னா, யாஷ் பிறந்த நேரத்துல தான், புதுசா ஒரு வைரஸ அவ உருவாக்கி இருக்கா. அதை செயல்படுத்த மனுஷங்களை பலி குடுத்துருக்கா. இதெல்லாம் அவள் செஞ்சது அமெரிக்கால. ஒரு பிஸினஸ்மேனோட பையனும் இதுல சிக்கி இருந்துருக்கான். அது பெரிய கேஸ் ஆகி, ஏஞ்சலினாவை அமெரிக்கா கவர்மெண்ட் ரிசர்ச் செய்யக்கூடாதுன்னு பேன் பண்ணிடுச்சு.
ஆனா அவள் விடல. மறுபடியும் இத்தாலிக்கு வந்து, கண் துடைப்புக்காக ஆராய்ச்சியை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுற மாதிரி காட்டிக்கிட்டா. ஆனா, அவளோட மூளையும், அலெஸ்ஸோட பையோ டெக்னாலஜி ப்ளஸ் ரோபோடிக் கான்செப்ட்கான வெறியும், வரதராஜனோட பிசினஸ் ஆர்வமும் ஒண்ணா சேர்ந்து ஆரம்பிச்சது தான், இப்ப நிதா அஃபெக்ட் ஆகிருக்குற நானோ வைரஸ்.
யாஷ் வளர வளர, ஏஞ்சலினாவை ஜஸ்ட் ஒரு ஹவுஸ் வைஃபா எலைட் கம்பெனில அவனுக்கு ஒரு கைடன்ஸ் அட்வைஸரா தான் பார்த்துருக்கான். அவருக்குள்ள ஒரு மிருகமே இருக்குனு அவனுக்கு மட்டுமல்ல யாருக்கும் தெரியல.
இதுல கதிர் அப்பாவோட ரோல் என்னன்னு அவர் தான் சொல்லணும்…”
என சொல்லி முடிக்கும் போதே, ஒரு மருத்துவர் வெளியில் வந்து “ரித்தி… ஆபரேஷன் சக்ஸஸ்” என்று வெற்றிக்குறி காட்டிச் செல்ல, நால்வரின் முகத்திலும் ஒரு மகிழ்வு வந்தது.
“அப்படின்னா அவளுக்கு இனி எந்த பிரச்சினையும் இருக்காதுல ரித்தி. இப்ப பார்க்கலாமா?” நிவேதனுக்கு கண்ணீர் முட்டியது.
“இருடா அண்ணா. அவள் அப்செர்வேஷன்ல இருக்கா. குறைஞ்சது 48 மணி நேரம் ஆகும். அவள் கண்ணு முழிக்க…” என்றதில், “அவ்ளோ நேரமா… ஆனா முழிச்சுடுவா தான?” என எச்சிலை விழுங்கினான் கதிரவன்.
“டோன்ட் வொரி… கண்டிப்பா முழிச்சுடுவா. டாக்டர் சொல்லிட்டுப் போன சக்ஸஸ்கு அர்த்தம் எல்லாமே தான்…” எனக் குதூகலமாக கூற, யாஷ் பிரஜிதன் விறுவிறுவென வெளியில் வந்து அவர்களுக்கு அருகில் இருந்த சோஃபாவிலேயே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
அவனைக் கண்டு பீதியான நிவேதன், “மச்சான் என்னாச்சு?” எனக் கேட்க, அவனிடம் பதிலே இல்லை.
ரித்திகாவும் சற்றே பயந்து “யாஷ், என்னடா அவள் ஓகே தான?” என அவனைப் பிடித்து உலுக்க, “ம்ம்” தலையை மட்டும் ஆட்டியவன் இன்னும் நெற்றியில் இருந்து கையை எடுக்கவில்லை. கண்ணையும் திறக்கவில்லை. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது.
“யாஷ் ஏதாவது பேசு… அவளுக்கு ஒன்னும் இல்லைன்னா நீ ஏன் இப்படி உக்காந்துருக்க. பயமா இருக்குடா. நாங்க அவளை பார்க்க போறோம்” என கதிரவன் எழுந்திட,
அதில் சட்டென கண் திறந்தவன், “நோ இன்ஃபெக்ஷன் ஆகும். யாரும் உள்ள அலோட் இல்ல” என்றவனின் சிவந்த வதனம் அதிகமாய் சிவந்திருந்தது.
நிவேதனோ, “டேய் அப்பறம் ஏன்டா கை நடுங்குது உனக்கு. உயிரே போகுது பயத்துல… என்ன ஆச்சுன்னு சொல்லித் தோலை” என்று கத்தியே விட்டான்.
அவனை விட அதிகமாய் யாஷ் பிரஜிதன் சீறினான்.
“பயமா இருக்குடா. நான் ஒன்னும் ரோபோ இல்லைல. ஆஃப்டர் ஆல் ஹியூமன் பீயிங். என் முன்னாடி தலையெல்லாம் ஓபனாகி, முழுக்க முழுக்க என்னோட கண்டுபிடிப்பையும் நம்பிக்கையையும் மட்டுமே நம்பி அரை உயிரா படுத்திருந்தவளை என்னால என்னால ஃபேஸ் பண்ண முடியல. ஐ காண்ட்! ஐ காண்ட்…” என்று மூச்சிரைத்தவனைத் தாவி அணைத்துக்கொண்டான் நிவேதன்.
“மச்சான் நீ அவளைக் காப்பாத்திட்ட. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது… ரிலாக்ஸ்” என்று மென்மையாக அவன் முதுகை தடவி கொடுக்க, அவனோ “ஐ காண்ட்! ஐ காண்ட்! ஐ காண்ட்!” எனப் புலம்பினான்.
நெஞ்சின் அழுத்தம் தீரத் தீர கண்ணிலிருந்து நீர் விடைபெற்று சென்றது.
எத்தனை பெரிய அழுத்தத்தை சுமந்திருக்கிறான் என்று புரிந்தது தான். இந்த தருணத்தில் மனம் விட்டு பயத்தையும் கண்ணீரையும் காட்டுவதற்காகவே இத்தனை நாள்களும் இறுகி இருந்திருக்கிறான் எனப் புரிய, “மனசு விட்டு அழுதுடு மச்சான். எல்லாத்தையும் உள்ளுக்குள்ளேயே போட்டு பொதைச்சு வைக்காத. உன் மனசுல சேர்த்து வச்ச குப்பையெல்லாம் கொட்ட தான நாங்க இருக்கோம்” என்ற நிவேதனுக்கும் அழுகை வந்ததோ என்னவோ குரல் கமறியது.
அந்த வாசகத்தில் என்ன கண்டானோ, அவன் தோளில் முகத்தைப் புதைத்து வெடித்து அழுதான் அந்த அரக்கன்.
கதிரவனும் வந்து இருவரையும் கட்டிக்கொள்ள, ரித்திகாவோ “டேய் நானு…” என அவளும் இணைந்து கொண்டாள்.
சிந்தாமணி தான் யாஷ் பிரஜிதனை விசித்திரமாகப் பார்த்து வைத்தாள்.
அலெஸ்ஸாண்ட்ரோ எப்படி செத்தானென்று இந்த இரு மரமண்டையங்களுக்கும் தெரிந்தால், அவனை விட்டு ஓடியே விடுவார்கள். ‘என்னவோ அடுத்தவங்க மண்டையை பொளக்குறது எல்லாம் என் அத்தை மகனுக்கு புதுசு மாதிரி, இவனுங்க கூட சேர்ந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்கானுங்களே!’ எனத் தலையில் அடித்துக்கொண்டாலும், அவர்களது பிணைப்பை ரசித்தே வைத்தாள்.
அரக்கன் தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
1
+1

