
அத்தியாயம் 29
கனிஷ்கா கொண்டு வந்த உணவுவகைகள் காய்கறிகள் என்றாலும் அதை விருப்பத்துடனே உண்ட சித்தார்த் தன் கூட வந்தவர்களை அழைத்து அவனின் இடத்திற்கு வரும்படி சொன்னவன் வெளியே வர ரிக்கோவுடன் சேர்ந்து சிரித்து கொண்டிருந்தாள் கனிஷ்கா. அவளின் அருகில் சென்றுஅமர அவனை விட்டு எழுந்து முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவர்களின் செய்கையை சிரிப்புடனே பார்த்து கொண்டிருந்தார் ரிக்கோ.
“உனக்கு எப்படி பேச்சு வராம போச்சு?” எனவும் அவனை முறைத்தவள் “அன்னைக்கு நடந்த விபத்தில் அதிர்ச்சியில் பேச முடியாம போச்சு” என்று சைகையில் சொல்ல அதை புரிந்து கொண்டவனுக்கு மனம் வலித்தது.
“சாரி..” என்று எழுந்து சென்றுவிட அவனை பார்க்க பாவமாக இருந்தது. ரிக்கோ அவளிடம் சென்று பேசுமாறு சொல்ல அவனிடம் சென்றாள்.
அவன் இருந்த பகுதி அடர்ந்தகாடு இல்லையென்றாலும் அங்கிருந்து வனம் நன்கு தெரியும். அங்கு வெறித்து பாரத்து கொண்டிருந்தவனின் கைகளை பிடித்து அழுத்த அவளை தன்புறம் திருப்பியவன் அவள் இதழ்களை சிறைபிடித்திருந்தான். இன்னமும் அவள் உயிரோடு இருப்பதை அவன் மனம் நம்ப மறுத்தது. அவளை தொட்டு பார்த்தவனின் மனம் புரிந்தவளும் அவனிடம் இருந்து விடுபட்டு அறைக்குள் அழைத்து சென்றாள்.
தரையில் அவன் அமர்ந்துவிட அருகில் அமர்ந்தவளை பார்த்தவன் “நிஜமா உனக்கு வேறு ஒன்னும் ஆகலையே கியூட்டி.. நீ இன்னமும் உயிரோட இருக்குறத என்னால் நம்ப முடியல” என்று கூற அவனை தன்புறம் இழுத்தவள் தன் அச்சாரத்தை அவன் இதழ்களில் தொடங்கினாள். அது மட்டும் அவனுக்கு போதும் என்று தோன்றவில்லை. ஆனாலும் தன்னை கட்டுப்படுத்தியவன் நிமிர்ந்து “அன்னைக்கு என்ன நடந்துச்சு?” என்று கேட்க நடந்ததை சைகையால் விளக்க சித்தார்த்துக்கு அந்த பழங்குடியினர் மீது இன்னும் அதிகமதிப்பும் அன்பும் வந்தது.
அன்று வில்சன் அவளை தொங்கவிட்டிருந்த கயிறை அறுத்து விட்டதும் “சித்து…” என்ற அலறலுடன் விழுந்தவள் அதிர்ஷ்டவசமாக ஒருபாறையின் நுனியில் மாட்டிக்கொண்டாள். பக்கத்தில் ஒரு கிளை தொங்கி கொண்டிருக்க அதைபற்ற முயற்சித்தவள் மீண்டும் நிலைத்தடுமாறி கீழே விழ வேட்டைக்காக போட்டிருந்த வலையில் விழுந்தாள். அது அவளின் அதிர்ஷ்டம் தான். அன்று மட்டும் அந்த வலையில் அவள் விழாமல் இருந்திருந்தால் உடல் சிதறி இறந்திருப்பாள். அந்த பக்கம் வந்த பழங்குடியின பெண்ஒருத்தி அவளை கண்டு தன் ஆட்களை வரசொல்லி அவர்களின் இடத்திற்கு கொண்டு சென்று மருத்துவம் பார்த்தனர். அவர்களின் மொழி அவளுக்கு புரியாமல் இருந்ததால் சைகைமொழியில் அவர்களிடம் பேசி கொள்வாள். இதுவரைக்கும் அவளை அவர்கள் வெளியே அனுப்பியது கிடையாது. அவர்கள் தன் இனத்தவரை தவிர வேறு யாரையும் ஏற்று கொள்ளமாட்டார்கள். இவளை தங்களில் ஒருத்தியாக ஏற்றது ஆச்சரியம் என்றால் இன்னொருவரை கொல்லவும் தயங்கமாட்டார்கள் அவர்கள்.
சொல்லி முடித்து அவனை பார்க்க “உனக்கு பேச்சே தேவையில்ல.. உன் கண்ணே அவ்வளவு பேசுது கியூட்டி..” என்றவன் அவளின் மூக்கு நுனியில் முத்தமிட அவனின் கன்னத்தில் கடித்து வைத்தவள் ரிக்கோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தாள்.
“சித்.. ராபர்ட் அண்ட் வில்லியம் வந்திருக்காங்க..” என்று கூப்பிட அவளுடன் வெளியே வந்தவன் இருக்கையில் அமர “ஏதாச்சும் முன்னேற்றம் இருக்கா?” என்று கேட்டான் ராபர்ட்.
“எஸ் ராபி.. இது அவங்களை கடத்த போட்ட பிளான் மாதிரி தெரியல.. வேற எதையோ குறி வச்சிருக்காங்க.. எல்லாரும் ஒவ்வொருநாளும் ஒரே நேரத்தில் கடத்தபட்டிருக்காங்க.. ஆனா அதுக்காக எந்த கோரிக்கையும் இன்னும் வரல.. அப்புறம் அவங்க எதுக்காக கடத்தபட்டிருக்காங்கன்னு தெரிஞ்சா தான் நாம ஸ்டெப் எடுக்க முடியும்” என்று சித்தார்த் கூற ரிக்கோ அதையே தான் ஆமோதித்தார்.
“நீ என்ன சொல்ற வில்லியம்?” ராபர்ட் கேட்க “சித் சொல்றது தான் எனக்கும் தோணுது.. அவங்க ப்ளட் க்ரூப் ரொம்ப சாதாரண வகை.. உடல் உறுப்புகள் எடுத்த மாதிரி எங்க இருந்தும் தகவல் வரல.. வில்சன் மெடிக்கல் சம்மந்தமான எல்லா அலுவலகமும் சீல் வச்சிட்டோம்.. அங்கேயும் எந்த தகவலும் இல்லை.. எதுக்காக கடத்தினான்னு அவனா சொல்லாம நமக்கு குளூ இல்ல” என்றான் வில்லியம்.
“இப்போ என்ன பண்றது சித்?” ராபர்ட் கேட்க கனிஷ்கா சித்தார்த்தின் முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள்.
“வெயிட் பண்ண வேண்டியது தான்..” என்றவன் கனிஷ்கா வெளியே நடக்கவும் சட்டென அவளை உள்ளே இழுத்து வந்தான்.
“பேசிட்டு இருக்கும் போது போகுற பழக்கம் இன்னும் போகலையா?”
“நீதான் வெயிட் பண்றியே.. நான் எதுக்கு?” என்று சைகையில் கேட்டவள் நடக்க மீண்டும் இழுத்து இருக்கையில் அமர வைத்தான்.
அந்த நேரம் அவனின் அலைபேசி ஒலிக்க அவளுக்கு எதிரில் அமர்ந்தவன் “ஹலோ..” என்று குரல்கொடுக்க அந்த பக்கம் “என்ன சித்? இன்னுமா கண்டுபிடிக்கல.. உன் வீட்டுக்கு வெளில போய் பாரு.. ஒருத்தன் செத்து போயிட்டான்..” என்று கூற அவசரமாக வெளியே வந்தான் சித்தார்த். அவனை தொடர்ந்து மற்றவர்களும் வர அங்கு பழங்குடியினரில் ஒருவன் இறந்து கிடந்தான்.
“ஹு இஸ் திஸ்?” என்று கர்ஜித்தவன் இறந்தவனின் அருகில் செல்ல முயன்ற கனிஸ்காவை பிடித்து உள்ளே இழுத்து வந்தான். ரிக்கோவிடம் அவனை அப்புற படுத்துமாறு கண்காட்டியவன் “யார் நீன்னு கேட்டேன்..” என்றான் கோபத்தோடு.
“இன்னுமா கண்டுபிடிக்கல.. சரி நானே சொல்றேன்.. ஐ அம் வில்சன் ப்ரண்ட்.. மை நேம் இஸ் ரிச்சர்ட்” என்று கூற “ரிச்சர்ட்..” என்று முணுமுணுத்தவன் “சொல்லு ரிச்சர்ட் உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டான்.
“உன் கூட ஒரு பெண் இருக்காளே.. பெயர் கூட கனிஷ்கான்னு சொன்னான் வில்சன்.. அவ எனக்கு வேணும்” என்றுகூற தன் கை முஷ்டிகள் இறுக “எதுக்கு?” என்று கேட்டான்.
“அந்த பொண்ணுக்கு பாம்பே பிளட் க்ரூப் தானே.. அவள வச்சு எத்தனையோ லட்சம் டாலர் சம்பாதிக்கலாம்”
“அவ வர மாட்டா..” என்று சித்தார்த் உறுதியாக கூற “அப்போ அடுத்த மூணுபேர் செத்து போவாங்க.. பரவாயில்லையா?” என்று கேட்க “வேண்டாம்..” என்று பதறினாள் கனிஷ்கா.
அவள் பேசியது அவனின் காதில் விழவாய்ப்பே இல்லை. மற்றவர்களும் அவன் ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் பேசுவதை கேட்டு கொண்டிருக்க அவனோ “அவளை விட்டுட்டு மற்றவர்களை கூட்டிட்டு போ.. அவர்கள் தேவையில்லாத சுமை..” என்று கூற “தேவையில்லாத சுமையில் தான் அவனோட இதயம் தேவைப்பட்டுதா உனக்கு?” என்று சித்தார்த் கேட்க ரிச்சர்ட் சிரித்தான்.
“அதுக்குள்ள செக் பண்ணிட்டியா? அவனை வச்சு நீ ஆராய்ச்சி பண்ணிட கூடாதுல்ல.. அதுதான் இதயத்தை எடுத்தேன்..” என்றவனை கொல்லும் வெறி வந்தது அவர்களுக்கு.
தன் முன்னே அமர்ந்திருந்து “நான் போறேன்” என்று உதட்டசைவால் சொன்னவளை அடித்துவிட எழும்பிய கரங்களை இறுக பற்றிகொண்டு அலைபேசியில் அந்த பக்கத்தில் இருந்து பேசியவனை கவனித்தான்.
“உனக்கு ஒரே ஆப்ஷன் தான் சித்.. அந்த பெண்ணை அனுப்பிட்டு இங்க இருக்கிற மற்ற மூணு பேரையும் கூட்டிட்டு போ.. இல்லனா ஒருத்தனை மாதிரி அடுத்தவனும் செத்து தான் கிடப்பான்..” என்று சொல்ல வேண்டாம் என்று பதறினாள் கனிஷ்கா. என்னதான் அவர்கள் கொடூரமானவர்களாய் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே.
அவளின் பதற்றம் புரிய தன் கைவளைவில் அவளை கொண்டு வந்தவன் “சொல்லு ரிச்சர்ட்.. என்ன பண்ணிடுவ? கொலை பண்ணுவ அவ்ளோ தானே.. ஆனா நீ என் கையில் கிடைச்சா என்ன தண்டனை கிடைக்கும்னு தெரியும் தானே.. வில்சன் மரணம் எல்லாம் ஒரு விஷயமே இல்ல.. அதைவிட கொடூரமான மரணம் தான் உனக்கு” என்று சொல்ல அந்தபக்கம் ரிச்சர்ட் கால்கள் நடுங்கியது. அதை குரலில் காட்டாமல் மறைத்தவன் “இந்த மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்.. எனக்கு தேவை அந்த பொண்ணு.. கொண்டு விட்டுட்டு இவங்களை கூட்டிட்டு போ” என்று கூறியவனை கண்களில் கொல்லும் வெறியுடன் அலைபேசியை வெறிக்க அவனின் கன்னத்தில் நச்சென முத்தம் ஒன்றை வைத்தாள் கனிஷ்கா.
மற்றவர்கள் ஒரு ஆச்சர்யத்துடன் பார்க்க அவளை தன்னில் இருந்து பிரித்தவன் “ராபர்ட் இப்போ காரணம் தெரிஞ்சு போச்சு தானே.. ரிச்சர்ட் இருக்கும் இடம் எனக்கு தெரியும்.. அவனை பிடிக்குற வேலையை பார்க்கலாம்” என்று கூற வில்லியம் தனது காவல்துறைக்கு தகவல் அனுப்பினான்.
சித்தார்த் சொல்லிய விவரங்களுடன் ரிச்சர்டை தேடி சென்றவர்களுக்கு அவன் வீட்டில் இல்லை என்ற செய்தியே வர வில்லியம் “அவன் தப்பிச்சிட்டான் சித்.. நமக்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ண இன்னும் ரெண்டுநாள் தான் டைம்” என்று கூற “அவன் இங்கதான் இருக்கான்.. அவனே க்ளூ தருவான்” என்ற சித்தார்த் கனிஷ்காவிடம் திரும்பி “நீ எப்படி போவ? இங்கேயே இருக்க முடியாதா?” என்று கேட்க “நீ அவனை கொன்னுட்டியா?” என்று கேட்டாள்.
“உன்னை கொல்ல நினைச்சவனை எப்படி உயிரோட விடுவேன் நான்? உன்னை எப்படி தள்ளி விட்டானோ அதே மாதிரி தான் செத்து போனான்” என்றவன் “நீ தனியா போவியா?” என மறுபடியும் கேட்டான்.
“போவேன்..” என்று தலையசைத்தவள் அவர்களை பார்த்து “இங்க இருக்குற எல்லாரும் நல்லவங்க தான்.. அவர்கள் கூட பழகிய இத்தனை வருடத்தில் அவங்களை பத்தி நான் புரிஞ்சிகிட்டேன்.. அவங்களுக்கும் நிம்மதியா வாழ இடம் கொடுங்க” என்று சைகையில் சொல்ல அதை மற்றவர்களுக்கு மொழிபெயர்த்தான் சித்தார்த்.
அவர்களுக்கும் அவள் சொல்வது புரிந்தது. சமீபத்தில் ஒரு பழங்குடியின இனத்தை பார்க்க சென்றவர்களை எதிரிகள் என்று நினைத்து தாக்கி கொன்றனர். ஆனால் அவர்கள் அவளை பாதுகாப்பதும் ஆச்சர்யம் தான். கண்டிப்பாக அவர்களை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாக கூறி உறுதி கொடுக்க சித்தார்த்திடம் விடைபெற்று காட்டுக்குள் மறைந்தாள் அவள். அவளை பாதுகாக்க இன்னும் அந்த இடத்தில் அந்தமக்கள் இருந்தனர். அவர்களின் பாசத்தை புரிந்து கொண்டவனுக்கு அவள் நன்றாக இருப்பாள் என்றே தோன்றியது.
ரிக்கோ, வில்லியம் மற்றும் ராபர்டிடம் ரிச்சர்ட் பற்றிகேட்க அவர்களுக்கு அவனை பற்றிய விவரம் முழுவதும் தெரியவில்லை. சித்தார்த்தை அவர் கேள்வியாக பார்க்க “நாம இங்க வரும்போது தொடக்கத்தில் ஒரு வீடு பார்த்தோம்ல.. அங்க ஒருத்தன் வெளில வந்தான்.. அவனை நான் வில்சன் கூட பார்த்திருக்கேன்.. கண்டிப்பா ரிச்சர்ட் அங்க தான் இருக்கணும்” என்று சித்தார்த் கூற “வெய்ட் பண்ண வேண்டாமே சித்.. மூன்று பேரோட உயிர் விஷயம்..” என்று ரிக்கோ கூற மூவரும் அங்கு கிளம்பினர்.
அவர்கள் சென்ற நேரம் ரிச்சர்ட் வெளியில் சென்றிருக்க உள்ளே சென்றவர்கள் அதிர்ந்து நின்றனர். அங்கு இந்த பழங்குடியுனருடன் இன்னும் ஐந்துபேர் இருந்தனர். மற்ற அறையில் மூன்றுபேர் கேரம் விளையாடி கொண்டிருக்க ராபர்ட் அந்த அறையின் கதவை வெளியில் பூட்டி வைத்தான். விளையாட்டு மும்முரத்தில் அவர்கள் கவனிக்காமல் இருக்க அந்நேரம் உள்ளே நுழைந்த ரிச்சர்ட் “ஏய்…” என்று கத்திகொண்டே சித்தார்த்தின் அருகில் வர திடீரென தன் கையில் இருந்த துப்பாக்கியால் ரிச்சர்டை நோக்கி சுட்டான் வில்லியம்.
“நோ வில்லியம்..” என்று சித்தார்த் தடுக்க வர அதற்குள் அவனின் உயிர் பிரிந்திருந்தது. மற்றவர்களும் துப்பாக்கிகுண்டு சத்தத்தில் கதவைதட்ட திரும்பி பார்த்தவன் “உயிர் வாழ தகுதி இல்லாதவன்..” என்று கூறி அவனை பூட்ஸ் காலால் தள்ளிவிட்டு மற்றவர்களை வெளியில் கொண்டு வந்தான்.
அவர்களுக்கும் அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து செலுத்தபட்டிருந்ததால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்க இரண்டுபேரின் சிறுநீரகங்கள் ஏற்கனவே அகற்றபட்டிருந்தன. இரண்டுபேருக்கு கண்பார்வை போயிருந்தது. பழங்குடியினர் மூன்றுபேரும் மூன்றேவாரங்களில் அதிக போதைமருந்து உட்கொண்டிருந்தனர்.
“இடியட்.. அவனை என் கையால் கொன்னுருக்கணும்..” என்று சீறியவன் ரிக்கோ மற்றும் ராபர்ட்டை அவர்களுக்கு துணையாக இருத்தி விட்டு மறுபடியும் கனிஷ்காவை தேடி வந்தான்.
“வில்லியம் ப்ரோசீஜர் எல்லாம் சீக்கிரம் முடி.. நாம இன்னைக்கே கிளம்பணும்” சித்தார்த் கூற “யார் அந்த பெண்?” என்று கேட்டான் வில்லியம்.
“நான் சொல்றதை ஒழுங்கா பண்ணுறியா நீ?” என்று அவனின் தோளில் தட்டியவன் “அவ என் மனைவி.. இதுவரைக்கும் வெளி உலகத்திற்கு தெரியாது.. இனிமே எல்லாருக்கும் சொல்லணும்” என்று கூற “ஷி இஸ் லக்கி..” என்றான் வில்லியம்.
“நான் தான் லக்கி.. அவ என்னை நிறைய மாத்திருக்கா..” என்றவன் அந்த கூட்டத்தை நோக்கி செல்ல திடீரென எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று அவனின் கையில் தைத்து நின்றது.
“ஷ்.. ஆஆ..” என்று அதை சித்தார்த் எடுக்க முயல “போ.. போ..” என்று அவனை நோக்கி கையசைத்து கொண்டே ஓடி வந்தாள் கனிஷ்கா.
அவளின் பதற்றத்தில் மற்றது மறந்து போக “என்னடா ஆச்சு?” என்று அவளின் அருகில் செல்ல அடுத்த அம்பு அவனின் காலை தைத்தது.
“வில்லியம் நீ கிளம்பு.. சீக்கிரம் ரிக்கோகிட்ட சொல்லி அவர்களை இங்க கூட்டிட்டு வர சொல்லு..” என்று சொல்ல “சித் அவங்க ரொம்ப டேஞ்சர்ஸ்..” என்று தயங்கினான் அவன்.
“எனக்கு எதுவும் ஆகாது.. நீ சீக்கிரம் கிளம்பு” என்றவன் அவன் கிளம்பியதும் தன்னை நோக்கி வந்த கனிஷ்காவை பிடித்து கொண்டவன் அவளோடு அந்த குன்றில் இருந்து இறங்க தொடங்கினான். சிறிதுதூரம் சென்றதும் காலும் கையும் வலி எடுக்க துவங்க அவனை பார்த்துகொண்டே வந்தவளுக்கு அவன் வலி புரிந்தது. கூடவே அவன் பல்லை கடித்து கொண்டு வருவது புரிய சுற்றும்முற்றும் பார்த்தவள் அவனோடு அங்கிருந்த சின்னகுகைக்குள் நுழைந்தாள்.
அவன் அமர்ந்ததும் இரத்தம் வழிந்த இடத்தை பார்த்தவள் எப்போதும்தான் வைத்திருக்கும் பச்சிலை மருந்தை அவனின் காயத்தில் போட்டு துணியால் கட்டினாள். அவள் செய்வதையே ஆச்சர்யத்துடன் பாரத்து கொண்டிருந்தான் அவன்.
“இந்திய பொண்ணுன்னு நிரூபிக்குறடி..” என்றவனை “போன்னு சொன்னேன்ல” என்று உதட்டசைவில் திட்ட “உன்னை விட்டுட்டு எங்க போவேன் கியூட்டி? ஒருமுறை பிரிஞ்சதே மரண வலி தந்துச்சு.. இன்னொருமுறை அந்த தப்பை பண்ண மாட்டேன்” என்று கூற கலங்கிய கண்களுடன் அவனை அணைத்து கொண்டாள்.
“ஷ்.. வலிக்குது கியூட்டி..” என்றுகூற சட்டென நிமிர்ந்தவள் அந்தபக்கம் போய் அமர சிரித்தவன் “எதுக்காக ஓடி வந்த?” என்று கேட்டான்.
“நீ வந்ததை தூரத்திலே அவங்க பார்த்துட்டாங்க.. அதுதான் உன்னை போகசொல்லி ஓடிவந்தேன்” என்று சைகையில் சொல்ல “முதல் வேலை உன்னை பேசவைக்குறது தான்.. உன்கிட்ட இருந்து சித்துன்னு கூப்பிடும் வார்த்தை எவ்ளோ கிக் தெரியுமா?” என்றவனை முறைத்தாள்.
“இப்போ என்னை பிடிக்கலையா?”
“உன்னை பிடிக்காமலா கடத்தி வச்சிருக்கேன்..” என்றவனை கண்கள் விரிய பார்த்தாள்.
“கடத்தியா?”
“எஸ் கியூட்டி.. இப்போ சொல்லுறதுக்கு சரியான இடமான்னு தெரியல.. பட் நான் சொல்லியே ஆகணும்.. இது உனக்கு இரண்டாவது கல்யாணம்” என்றுகூற அதிர்ச்சியுடன் எழுந்தாள் அவள்.
“கியூட்டி…” அவளின் தோள் தொட அவனின் சட்டையை பிடித்தவள் “இரண்டாவதா?” என்று கேட்க முயன்று பேச்சுவராத தன் வாயை கைகளால் அடித்தாள்.
“சொல்லுறதை பொறுமையா கேளுடி.. நீ என் உயிருடி.. உன்னை அளவுக்கு அதிகமா காதலிச்சேன்.. காதலிக்குறேன்.. அதுதான் அப்படி ஒரு முட்டாள்தனம் பண்ணுனேன்” என்று அவளின் கைகளை பிடித்துகொண்டு கூற அவனை தள்ளி விட்டாள்.
“கனி பொறுமையா கேளுன்னு சொல்லுறேன்ல” என்றவனை “என்ன பொறுமை?” என சீறினாள்.
“உக்காருடி சொல்றேன்..” என்றவன் அவளிடம் பொறுமை இல்லாததை கண்டு “உங்க ஊருக்கு வரும்போது உன்னை பார்த்து பிடிச்சது.. ஆனா உன்னை நான் பார்த்தது உங்க ஊர் மைனர் வேலுவுக்கு தெரிஞ்சு பஞ்சாயத்தில் நிற்க வச்சாங்க.. அங்க உனக்காக உன்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு அமெரிக்கா வந்துட்டேன்.. ஆனா ஒவ்வொரு முறையும் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன்.. அதுக்குள் அந்த வேலு கூட உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. அவன் உன்னை கொஞ்சம் இல்ல நிறைய கொடுமைபடுத்திருக்கான்னு உன்கூட வாழும் போது தான் நான் தெரிஞ்சிகிட்டேன்..” என்று கூற அவளோ திரும்பி “அவனை என்ன பண்ணுன?” என்று பார்வையால் கேட்க அதை புரிந்து கொண்டவன் “செத்துட்டான்..” என்றான்.
“செத்துட்டானா? நீ கொன்னுட்டியா?”
“இல்லடி நான் எதுவும் பண்ணல..” என்று அவசரமாக மறுக்க மேலே சொல்லு என்பது போல் கைகளை காட்டினாள்.
“நான் மனிதமூளையில் சிப் பொருத்தி ஆராய்ச்சி செய்வேன்.. அதேநேரம் வில்சன் மருந்து கண்டுபிடிச்சிட்டு இருந்தான்.. அவனை வீழ்த்த ஒருபெண் தேவைபட்டாள்.. அதனால் உன்னை கடத்திட்டு வந்தேன்” என்றவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
அதைவாங்கியவன் “உனக்கு பழைய விஷயங்களை மறக்க செய்ய சிப் பொருத்தினேன்.. என் இஷ்டத்துக்கு உன்னை ஆட பண்ணினேன்.. உன்கூட வாழ்ந்தேன்” என்று கூற “ச்சி..” என்று முகத்தை சுழித்தாள்.
“என்னடி ச்சி? நீயும் என்னை காதலிச்சு என்கூட வாழ்ந்த.. அதுக்கு சாட்சி உன்வயிற்றில் என் குழந்தை வளர்ந்தது” என்றுகூற அவசரமாக தன் வயிற்றை தடவி பார்த்தாள்.
அவளின் செயலில் அவனுக்கும் கண்கள் கலங்கியது. “அந்த விபத்தில் நம்ம குழந்தை..” என்று திணற அதை புரிந்து கொண்டவள் ஓவென்று கதறி அழுதாள்.
அவள் அழுவதை தாங்க முடியாதவன் “கனி அழாதடி.. நீ பிரிஞ்சு போனப்ப தான் நீ கேட்ட காதலின் ஆழம் எனக்கு புரிஞ்சுது” என்று கூற “என் முதல் கல்யாண வாழ்க்கையில் என்ன சந்தோசம் இருந்துச்சு?” என்று சைகையில் கேட்க “அது நரகம்டி.. உன்கூட வாழ்ந்த நாட்கள் உன் உடலில் இருந்த தழும்புகள் அவன்கூட உன் வாழ்கையை எனக்கு காட்டுச்சு.. நம்ம கல்யாணம், காதல் எல்லாதுலேயும் நீ சந்தோசமா மட்டும் தான்டா இருந்த.. உன்னை என் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியது தப்பு தான்.. அதை நான் உணர்ந்துட்டேன்” என்றவனை ஒற்றை பார்வை பார்த்தவள் “நாளைக்கு வீட்டுக்கு கிளம்பலாம்” என்று படுத்து கொண்டாள்.
அவளின் மௌனம் அவனை வாள்கொண்டு அறுத்தது. “நாளைக்கு அவங்க மூணுபேரும் வீட்டுக்கு போயிடுவாங்க கனி” என்றுகூற அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.
“உன் பழைய விஷயங்களை மறைச்சு மனசு முழுக்க காதலோடு உன்கூட வாழவிருப்பம் இல்லை கியூட்டி.. அதனால் தான் உண்மைய சொன்னேன்.. என்னை விட்டு பிரியனும்னு மட்டும் முடிவெடுக்காதடா.. செத்து போயிடுவேன்” என்றவனை வாயில் அடித்தாள் கனிஷ்கா.
“கனி..” என்று அவன் அதிர “உன்கூட சந்தோசமா வாழ்ந்திருக்கேன்னா என் பழைய நினைவுகளை ஆழ்மனசில் இருந்து தூக்கி போடுற அளவுக்கு சந்தோசம் கொடுத்திருக்கன்னு தானே அர்த்தம்.. அப்போ உன்மேல் கோபபட்டு என்னபயன்? இப்போகூட நீ மறைச்சிட்டியோன்னு தான் கோபப்பட்டேன்.. உன்கூட வாழ்ந்த வாழ்க்கைதான் என் நினைவில் இருக்கு.. எனக்கு கல்யாணம் ஆகிருக்கலாம்.. அது கஷ்டம் தான்.. இந்த உலகம் என்ன பேசுமோன்னு பயம்.. ஆனா நீ என்கூட இருக்குற வரைக்கும் அப்படி ஒரு வார்த்தை வர விடமாட்ட.. இப்பவும் என் நினைவில் உன்கூட வாழ்ந்த வாழ்க்கை மட்டும்தான் நினைவில் இருக்கு.. நீ மறைச்சது தப்புதான்.. ஆனா இப்போ உன் காதல் உண்மை.. அதே மாதிரி நான் எப்பவுமே உன்னை காதலிப்பேன்.. கடைசிவரைக்கும் உன்கூட தான் இருப்பேன்” என்றவளை தன் கைவலியை மீறியும் அணைத்து கொண்டான்.
“சாரிடா அண்ட் தேங்க்ஸ் அலாட்.. நீ சொல்லும் போது கண்டிப்பா இந்தியா போகலாம்” என்று கூற “இந்தியா போக வேண்டாம்.. அது இன்னும் வலியை கொடுக்கும்.. எனக்கு உன்கூட இங்க இருக்குறதே போதும்” என்று அவனோடு ஒண்டி படுத்து கொள்ள அவனின் காதலை புரிந்துகொண்ட அவளை இனி கண்ணின் மணிபோல் பாதுகாக்கும் வெறிவந்தது.
அவன் தவறு செய்தவன்தான். அவளை உபயோகபடுத்தி கொண்டான் தான். ஆனால் ஒருபோதும் யாருக்கும் அவளைவிட்டு கொடுக்க மாட்டான். காதல் இல்லை எனும்போதே அவளை பாதுகாத்தவன் மனம்நிறைந்த காதல் இருக்கும் போது விட்டு விடுவானா என்ன? கண்டிப்பாக அவளின் காதலை பலமடங்காக அவளுக்கே திருப்பி கொடுப்பான்.

