
மாயோன் 24
மனதில் நிறைந்த வலியுடன் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தாள் வர்ஷா…
நனைந்தபடி வீட்டிற்குள் வந்த வர்ஷாவை கண்ட ஜோதி ” என்னடா வர்ஷா ஏன் இப்படி நனஞ்சுபோய் வந்திருக்க ? ” என்று கேட்டவர் அவளது தலையை துவட்டி விட்டார்..
அழுது சிவந்த கண்களோடு ஜோதியை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் தன்னையும் மீறி வெளிவந்தது.அதனை மறைக்கும் பொருட்டு தன் வலி தீர அவரை அணைத்து கொண்டாள் வர்ஷா.
” என்னடா வர்ஷா என்ன ஆச்சு ” என்று அவர் வாஞ்சையுடன் கேட்டார்.
” ஒன்னும் இல்லமா ” என்று உயிர்ப்பில்லாமல் கூறியவள் நேராக தன் அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டாள்.
அதியன் அவளிடம் இப்படி நடந்துகொண்டதை அவளால் ஜீரனிக்கவே முடியவில்லை. அவனை மன்னித்து ஏற்கவும் முடியாமல்… நடந்தவையை மறந்து கடந்து செல்லவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.
*******
இரவு தங்கள் வீட்டிற்கு வந்தான் சரத். வந்தவன் மது போதையில் அப்படியே ஹாலிலேயே படுத்து உறங்கிவிட்டான்.
அடுத்தநாள் காலையில் எழுந்தவன் தலையை பிடித்து கொண்டு ” அதி ” என்று அழைத்தான்.
ஆனால் அதியனிடன் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதனால் ” எங்க போனான் இவன் ” என்றபடி அதியனை தேடி அவனது அறைக்குள் வந்தான்.
” அதி எங்கடா இருக்க? ” என்று அறை முழுவதும் சரத் தேடிக்கொண்டிருக்க.. குளியலறையில் இருந்து நீர் கொட்டும் சத்தம் வந்தது.
” அதி குளிச்சிட்டு இருக்கியா ? ” என்றவன், அதியனது பதிலை எதிர்பார்க்க .. அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றவுடன் சரத்துக்கு மிதமான பயம் உருவாக தொடங்கியது..
” டேய் அதி… ” என்றவன் பதட்டத்துடன் கதவை தட்டினான்… அவன் திறக்கவில்லை என்றவுடன் வேகமாக மோதி கதவை திறந்தவன், அங்கு குளியலறையில் விழுந்து கிடந்த அதியனை கண்டு அதிர்ந்து போனான்.
” அதி… டேய் எழுதுருடா என்னை பாருடா ” என்று அதியனை மடி ஏந்தி கொண்ட சரத்தின் கண்களில் கலக்கம் உருவானது.
பேச்சு மூச்சின்று கிடந்த அதியனை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் சரத்.
சிகிச்சை முடிந்து வெளியே வந்த டாக்டர்” ரொம்ப ஸ்ட்ரெஸா இருந்திருப்பார் போல… அதுமட்டும் இல்லாமல் ரொம்ப நேரமா தண்ணில் இருந்து இருக்காரு.. சோ ”
” டாக்டர் எதுவானாலும் நேரடியா சொல்லுங்க ? ”
“அவர் உடல் ஒருபக்கம் முழுக்க செயல் இழந்துடுச்சு சரத் ”
” யோவ் … என்ன சொல்லுற அவனுக்கு அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது… ” என்ற சரத் டாக்டரின் சட்டையை பாய்ந்து பிடித்தான்.
” கையை எடுங்க சரத்.. நீங்களும் டாக்டர் தானே.. எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணுறீங்க.. ஸ்ட்ரெஸ்னால வந்தது தான். சோ ஒரு மாசத்தில் இல்லை அதிகப்படியா மூணு மாசத்தில் சரி ஆகிடும்… பார்த்துக்கோங்க ” என்றவர் அங்கிருந்து சென்றார்.
மருத்துவ அறைக்கதவின் கண்ணாடி துவாரத்தின் வழியே அதியனை அந்த நிலையில் கண்ட சரத்தின் கண்கள் கலங்கி போனது. அதன் பின்னர் சரத், நந்தினிக்கு அழைத்து இதனை பற்றி கூற.. நந்தினிக்கு இதயம் படபடக்க தொடங்கியது..
‘ அய்யோ ஒருவேளை நம்ம கொடுத்த மருந்தினால தான் அப்படி ஆகி இருக்குமோ ? ‘ என்று பயந்தவள் அதனை பற்றி சரத்திடம் கூறவில்லை.
அடுத்த அரைமணி நேரத்தில் அதியனை காண வந்தாள் நந்தினி.
ஒருபக்க உடல் முழுக்க செயல் இழந்து படுக்கையில் கிடக்கும் அதியனை பார்த்த நந்தினிக்கு மெலிதாக குற்றஉணர்ச்சி எட்டிப்பார்த்தது.
அதியனுக்கு இப்படி ஆனதுக்கு நந்தினி கொடுத்த மருந்தும் ஒருவகை காரணம் தான். ஆனால் அதுமட்டுமே காரணம் அல்ல.. அவனது மனஅழுத்தம் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
” இப்படி ஆகுற அளவுக்கு அப்படி அவனுக்கு என்னடி ஸ்ட்ரெஸ் ? அவன் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவான் தானே.. உனக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லு நந்தினி. எனக்கு பயமா இருக்கு.. இப்படியே விட்டு அவனுக்கு ஏதாவது ஆகிட்டா எனக்கு யாருடி இருக்கா? இந்த உலகத்தில் இவனை விட எனக்கு யாருமே முக்கியமில்லைன்னு உனக்கே தெரியும்.. அவனுக்கு மட்டும் ஏதாவது ஆனால் அதுக்கு காரணமான யாரையும் நான் சும்மா விடமாட்டேன் . ” என்று ஆக்ரோஷமாக கூறிய சரத்தை மிரண்டு பார்த்தாள் நந்தினி.
சரத்துக்கு அதியனை மிகவும் பிடிக்கும் என்பது அவளுக்கு தெரியும்.. ஆனால் இப்படி கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு அவன் மீது பாசம் வைத்திருப்பான் என்பது அவளுக்கு இப்போது தான் தெரியும்.
“அப்புறம் நந்தினி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நெனச்சேன். தேவன் அண்ணா கொடுத்த மருந்தை யாருக்கும் நீ இன்ஜெக்ட் பண்ணல தானே.. அது கொஞ்சம் டேஞ்சர் ஆன மருந்து, சோ யாருக்கும் யூஸ் பண்ணிடாத ” என்றவனை விழிவிரித்து பார்த்தவள்.
” இல்லை… இல்லை நான் அதை யாருக்கும் யூஸ் பண்ணல ” என்று தடுமாறி கூறினாள்.. உண்மையை மறைத்து விட்டாள்.
” அதிக்கு என்ன பிரச்சனைன்னு உனக்கு எதுவும் தெரியுமா? ” என்று சரத் மீண்டும் கேட்க..
” அவன் வர்ஷாவை விரும்பியிருப்பான் போலடா.. ஆனால் அவள் அவனுக்கு நோ சொல்லிட்டாள். யாரு கூடவோ அவளுக்கு நிச்சயம் ஆக போகுது போல.. அது தெரிஞ்சதில் இருந்து அதியன் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா தான் இருந்தான், ஒருவேளை அது தான் காரணமோ என்னமோ?” என்று தன்னை காப்பாற்றி கொள்ள.. வர்ஷாவை பற்றி சரத்திடம் ஒன்றுக்கு இரண்டாக கூறினாள்.
” என் தம்பி கூட ஊர் ஊரா சுத்திட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க போறாளா ? பார்த்துகிறேன் ” என்ற சரத்தின் கோவம் முழுக்க வர்ஷாவின் மீது பாய்ந்தது.
******
வர்ஷா அந்த சம்பவத்திற்கு பிறகு ஆய்வகத்துக்கு செல்ல இல்லை.
ஒருநாள் விக்ரமன், வர்ஷாவுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான்.
” தேவா ”
” நீ எப்போ வருவ விக்ரமா ”
” ஏன்டா என்ன ஆச்சு ”
” ஒன்னும் இல்லை உன்னை பார்க்கணும்… உன்கிட்ட கொஞ்சம் பேசணும் எப்போ வருவ ? ” அவள் தன்னை தேடுகிறாள் என்றாலே அவள் ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறாள் என்பது விக்ரமன் அறிந்து கொண்ட ஒன்று தான்.
” என்ன பிரச்சனை தேவா.. ”
” அதெல்லாம் ஒன்னும் இல்லை நீ எப்போ வருவ ”
” என்னால இப்போ வர முடியாதுடா.. இங்க என் ப்ரெண்டுக்கு ஆக்சிடெண்ட்.. அவன் ரொம்ப சீரியஸா இருக்கான். அதனால் அவனோட பேரெண்ட்ஸ் அவங்க ஹாஸ்பிட்டலை, அவனுக்கு சரியாகும் வரை என்னை மேனேஜ் பண்ண சொல்லி ரிகுவஸ்ட் பண்ணி கேட்டாங்க… நானும் சரின்னு வாக்கு கொடுத்துட்டேன்டா இன்னும் ஒரே மாசம் தான் வந்திடுவேன் ” என்று அவன் கூற… ” ம்ம்ம் ” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.
வர்ஷாவின் உயிர்ப்பில்லாத பேச்சை கவனித்த விக்ரமன்… உடனே பரதனுக்கு அழைத்தான்.
” சொல்லுங்க அண்ணா, எப்படி இருக்கீங்க? ”
“ம்ம்ம் நல்லா இருக்கேன்.. அப்புறம் பரதா தேவா நல்லா தானே இருக்காள், அவளுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே ? ”
” அவளுக்கு என்ன? நல்லா தான் இருக்காள் ” இன்னும் பரதனுக்கு வர்ஷாவின் மீதுள்ள கோவம் குறையவில்லை.
” ம்ம்ம் அவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ.. அவள் தேவனோடு லேப்க்கு வேலைக்கு போக வேண்டாம் ” என்றவன் அழைப்பை துண்டித்தான். அந்த வேலை சம்மந்தமாக தான் அவளுக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்கக்கூடும் என்று யூகித்த விக்ரமன் இதனை பரதனிடம் கூறினான்.
அதற்கு பிறகு வர்ஷாவும் தேவனது ஆய்வகத்துக்கு வேலைக்கு செல்வது இல்லை. இங்கு அவளது தேவை ஒன்று அவசியம் இல்லை என்பதனால் தேவனும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. சரத் முழுநேரமும் அதியனுடனே இருந்து அவனை கவனித்துக்கொண்டான்.
அடுத்தநாள் சத்யாவிற்கு அழைத்தான் விக்ரமன்.
” சொல்லுங்க விக்ரமன் சார் ? தேவா கல்யாண ஏற்பாடு எல்லாம் எப்படி போகுது ”
” அது கேன்சல் ஆகிடுச்சு சத்யா.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? ” என்று கேட்டான் விக்ரமன்.
” சொல்லுங்க சார் என்னால முடிஞ்சா எதுவேனாலும் பண்ணுறேன் ”
” அது வந்து சத்யா.. நான் இப்போ இந்தியாவில் இல்லை.. தேவா ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்காள்.. என்னால இப்போ அவள் கூட இருக்க முடியாத நிலைமை.. நான் என்ன சொல்ல வரேன்னா ” என்று விக்ரமன் சொல்ல தயங்கவும்..
” நான் இன்னிக்கே இந்தியா கிளம்பி போறேன் சார்.. நான் தேவாவை பார்த்துகிறேன்.. பயப்படாதீங்க நான் இருக்கேன் ” என்ற சத்யன் அன்றே இந்தியா நோக்கி பயணமானன்.
சத்யன் அவ்வாறு கூறியதும் விக்ரமனது இதழ்கள் மெலிதாக விரிந்து கொண்டது.. ‘அவளுக்கு ஒண்ணுன்னா நான் வருவேன். அதுக்கு எந்த உறவுமுறையும் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்’ என்று அன்று அவன் தன்னிடம் சொன்னது வெறும் வார்த்தை அல்ல என்று இன்று நிரூபித்து விட்டான் அல்லவா?
^^^^
அன்று சத்யன், வர்ஷாவின் மீதான தன் விருப்பத்தை கூறியதுமே விக்ரமன் அதனை வர்ஷாவிடம் கூறினான்.
வர்ஷாவோ ” இந்த எண்ணத்தில தான் அவன் என்கிட்ட பழகினானா? ச்சே அவன் கிட்ட எல்லாம் ப்ரெண்டா கூட பழக கூடாது.. எவ்ளோ அழுக்கான மனசு அவனுக்கு.. இப்போவே அவன் பிரெண்ட்ஷிப்பை கட் பண்ணுறேன் ” என்று ஆக்ரோஷமாக பேசிய வர்ஷாவை தடுக்கும் பொருட்டு ” நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் தேவா. எதுக்கு அவனை இப்படி எல்லாம் பேசுற.. அப்படியே அவனுக்கு அந்த எண்ணம் இருந்தாலும் இப்போ என்ன ? அவனும் மனுசன் தானே, அவனுக்கு காதலிக்க தகுதி இல்லையா என்ன ? இல்லை அவனுக்கு உணர்வுகள் இருக்க கூடாதா? ” என்று விக்ரமன் கேட்டான்.
” கண்டிப்பா இல்லை.. பல பெண்களோட வாழ்ந்தவனுக்கு ஒரு பொண்ணு மேல மட்டும் உண்மையா காதல் வரும்னு எப்படி விக்ரமா சொல்லுற? அதுவும் வெறும் உடல் இச்சைக்காகவா தான் இருக்கும். இவ்ளோ நாள் நான் அவன்கூட பிரெண்டா பழகும் போதெல்லாம். அப்போ அவன் என்னை தப்பா தானே நெனச்சு பழகியிருப்பான்.. ”
” நான் சும்மா சொன்னேன்டா அவன் உன்னை அப்படி நினைப்பானா? ” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்த்தான் விக்ரமன்.. எங்கு இவள் ஏதாவது பேசி சத்யாவின் மனம் வருத்தமடைந்து விடுமோ என்று எண்ணி இதனை செய்தான்.
” அது தானே பார்த்தேன்.. அவன் எனக்கு நல்ல பிரெண்டு அவ்ளோ தான். அப்படி மட்டும் அவன் லவ்வு கிவ்வுன்னு ஏதாவது பேசி இருக்கணும் நல்லா நாக்க பிடுங்குற மாதிரி கேள்வி கேட்டு.. அவனோட ப்ரென்ஷிப்பையே கட் பண்ணி இருப்பேன். ” என்றவளை விரக்தியாக பார்த்தான் விக்ரமன்.
இருவருக்கும் இடையான அந்த நட்புறவாவது நீடிக்கட்டும் என்ற எண்ணத்தில் தான் விக்ரமன் அந்த உண்மையை கூறியும், பின்னர் வர்ஷாவின் மனம் அறிந்து சத்யனுக்காக அதனை மறைத்துவிட்டான்.
நிச்சயம் சத்யன் தன்னை விரும்புகிறான் என்ற விஷயம் தெரிந்தால் வர்ஷா அவனை கண்டிப்பாக காயப்படுத்துவாள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டான் விக்ரமன். அதனால் தான் இருவரது நலனுக்காக அந்த உண்மையை மறைத்தான்.
^^^
சத்யன் இந்தியாவிற்கு வந்தான். பரதன் அவனை விக்ரமனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வர்ஷா கலையிழந்த முகத்துடன் வாசலில் நின்று சத்யனை வரவேற்றாள். எப்போதும் அவள் முகத்தில் தவழும் புன்னகை இன்று இல்லை.
அதனை அறிந்து கொண்ட சத்யன்.. அவள் அருகில் வந்து ” ஏன் டல்லா இருக்க ? ” என்று கேட்டான்.
” ஒன்னும் இல்லை ” என்று வர்ஷா கூற..
” அப்போ கொஞ்சம் சிரி நான் நம்புறேன் ” என்றவனை முறைத்து பார்க்க முயன்று தோற்றவள் இறுதியாக சிரித்து கொண்டாள்..
அவளது புன்னகை சத்தியனது முகத்தையும் மலர செய்தது..
” தட்ஸ் மை கேர்ள் ” என்றவன் அவளது தலையில் ஒரு அழுத்தத்தை கொடுத்த விட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
சத்யன் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வர்ஷா இயல்பு நிலைக்கு திரும்பினாள்.
பேசி பேசியே அவளை நேரத்துக்கு சாப்பிட வைத்தான். அதிகமாக சிரிக்க வைத்தான். அவளது வலியை அறிய முற்படாமலே அதனை போக்கினான் சத்யன்.
அப்படியே நாட்கள் கடந்தது… அன்று வர்ஷாவை வற்புறுத்தி பீச்சிற்கு அழைத்து வந்தான் சத்யன். அவளது மன அமைதிக்காக .
அங்கு வைத்து தற்செயலாக இருவரையும் பார்த்த சரத்தின் மனம் வெதும்ப தொடங்கியது. ” என் தம்பியை படுத்த படுக்கையாக்கிட்டு நீ இங்க எவன் கூடவோ கொஞ்சிட்டு அலையுரியா? சரியான நேரம் வரட்டும்டி உனக்கும் குடும்பத்துக்கு அப்போ இருக்கு … உன்னை வச்சு என் தப்பியை என்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தான் இல்லை அந்த விக்ரமன்.. அவன் வீட்டுல இருந்தே அதை மறைச்சு எங்க கிட்ட டபுள் கேம் ஆடி இருக்கல்ல.. உனக்கு இருக்குடி ” என்று வன்மமாக கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்.
அதியனுக்கு அப்படி ஆன பிறகு தான் வர்ஷாவை பற்றி அறிய முற்பட்டான் சரத்.. அவள் விக்ரமன் வீட்டில் தான் இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட சரத்துக்கு தன் மீதே கோவம் வந்தது ‘ இப்படி முட்டாள் தனமாக இருந்து விட்டேனே ஆரம்பத்திலே அவளை பற்றி முழுவதும் அறிந்திருந்தால் இன்று அதிக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காது ‘ என்று எண்ணியவன் அவளை பழிவாங்க தக்க தருணம் எதிர்பார்த்து காத்திருந்தான்.
சத்யனுடன் கடற்கரையில் நடந்து வந்துகொண்டிருந்த வர்ஷா… மயங்கி விழுந்தாள். பதறிப்போய் அவளை மருந்துவமனைக்கு அழைத்து வந்தான் சத்யன்.
அங்கு வர்ஷாவை பரிசோதித்த மருத்துவர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூற.. சத்யனுக்கு ஒருகணம் ஒன்றுமே புரியவில்லை..
” டாக்டர் என்ன சொல்லுறீங்க? ” என்று அவன் மீண்டும் கேட்க.. அவர் அதையே தான் கூறினார். யோசனையுடன் வர்ஷாவை காண வந்தான் சத்யன்.
வர்ஷாவிற்கு ட்ரிப்ஸ் ஏறிகொண்டிருந்தது. தளர்ந்த நடையுடன் அவள் அருகில் வந்தான் சத்யன்.
அவனது வருகை உணர்ந்து மெல்ல கண்விழித்தாள் வர்ஷா..
” என்னாச்சு சத்யன் ” என்று அவள் கேட்க..
குரலை செருமியவன் ” உனக்கு இப்போ எப்படி இருக்கு? ” என்று கேட்டான்.
” நல்லா இருக்கேன் டாக்டர் என்ன சொன்னாங்க ? ” என்று வர்ஷா கேட்க
” அது.. அது நீ ப்ரெக்னென்டா ? ” என்று அவன் தடுமாற…
” ஒஹ்… இது எனக்கு முன்னாடியே தெரியும். இது வீட்டுல யாருக்கும். தெரிய வேண்டாம் ” என்றவளை ஆழ்ந்து பார்த்த சத்யன் அவளிடம் மேற்கொண்டு ஒருவார்த்தை கூட கேட்கவில்லை.
” என்கிட்ட எதுவும் கேட்கணும் தோணலயா சத்யா? ” என்றவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன்.. ‘இல்லை’ என்று தலை ஆட்டினான்.
” ஏன் ? ” என்று அவள் கேட்க..
ஆழ்ந்து பெருமூச்செடுத்தவன் ” என் தேவா தப்பு பண்ணி இருக்கமாட்டாள். கண்டிப்பா இதை நீ அவங்க கிட்ட இருந்து மறைக்க காரணம் இருக்கும்.. நான் பில் செட்டில் பண்ணிட்டு வரேன் கிளம்பலாம் ” என்று கூறியவன் அங்கிருந்து சென்றான்.
வீட்டிற்கு வந்த சத்யனோ, வர்ஷாவோ யாரிடமும் இதனை பற்றி கூறவில்லை.
கண்ணாடியின் முன்நின்று தன்னுடைய மணிவயிற்றை வருடிக்கொண்ட வர்ஷா வாயை மூடி கதறி அழுதாள்…
அந்த சம்பவத்திற்க்கு பிறகு ஒவ்வொரு நாளும் அதியன் தன்னை தேடிவருவான் என்ற நம்பிக்கையில் அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள் வர்ஷா.. ஆனால் அவன் வரவில்லை அல்லவா?
உன்னை எதிர்பார்த்து கண்கள் ஒளி இழந்தன… உன்னை பிரிந்த நாட்களை எண்ணி இரு கைவிரல்கள் தேய்ந்தன..
அதியன் சுயநிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக வர்ஷாவை தேடி வந்திருப்பான். ஆனால் அவனோ அங்கு கை, கால் அசைக்க முடியாமல் இருக்கிறான் எனும் போது எப்படி அவனால் வர முடியும்.
அழுது அழுது ஓய்ந்தவள்… டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க போகும் போது.. நிலை தடுமாறி டேபிளின் மீது சாய்ந்தாள்.. அப்போது டேபிளின் மீதிருந்த கோப்புகள் கீழே விழுந்தது… அதில் தேவன் சக்ரவர்த்தியின் ஒப்பந்தபத்திரமும் அடக்கம்.
அப்போது தான் அதனை கவனித்த வர்ஷா அந்த கோப்புகளை எல்லாம் எடுத்து பார்த்தாள்.. அந்த ஒப்பந்த பத்திரத்தை பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
********
அடுத்த நாள் மாலை நேரத்தில்…
” தேவி மருத்துவமனையின் உரிமையாளரும்.. மருத்துவருமான அர்ஜுன் என்பவர் வெளிநாடுகளில் தடைசெய்யபட்ட மருந்துக்களை இங்கு தயாரித்ததாகவும்.. அதனை தன் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு செலுத்தி ஆராய்ச்சி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது… இந்நிலையில் காப்பகத்தில் காணாமல் போனதாக கூறப்படும் பத்து குழந்தைகள் அவரது காப்பகத்தின் பின் பக்கம் புதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்க பட்டிருக்கின்றனர். அந்த சடலத்தின் பக்கத்தில் சில மருந்து பாட்டில்களும் கண்டெடுக்க பட்டிருக்கிறது.. அதே போன்ற பாட்டில்கள் அர்ஜுன் அவரது தனியறையிலும் கண்டெடுக்கபட்டிருக்கிறது.. அதன் மூலம் அவர் தான் அந்த குழந்தைகளை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி கொன்றிருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் காவலர்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர் … ” என்ற செய்தி ஒன்று மாற்றி ஒன்று என எல்லா சேனலிலும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
அர்ஜுனை கைது செய்த தகவல் அறிந்து ஜோதிக்கு மாரடைப்பு ஏற்பட்டது… அவரை மருத்துவனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது…
இந்த தகவல் எதுவும் அறியாத விக்ரமன். அப்போது தான் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தான்.
தனது வீட்டிற்கு திரும்பி வந்த விக்ரமன் கண்டது தன் தாயின் உயிரற்ற உடலை தான்.
அவனை கண்டதும் பரதன் ஓடி வந்து ” அண்ணா அம்மா ” என்று அவனை அணைத்து கொள்ள… உணர்விழந்து நின்றான் விக்ரமன்.
ஒருகையால் பரதனை அணைத்து கொண்ட விக்ரமன். நேராக ஜோதியின் சடலத்தின் அருகே வந்தான்.
கதறி அழ கூட தெம்பில்லாமல் நின்றவனது கண்ணீல் இருந்து வழிந்த ஒரு துளி கண்ணீர் அவன் தாயின் பாதத்தை நனைத்தது.
விஜய், அர்ஜுன் விஷயத்தில் நடந்த அனைத்தையும் விக்ரமனுக்கு கூறிக்கொண்டிருக்க.. உணர்வில்லாமல் அதனை கேட்டுக்கொண்டிருந்த விக்ரமன் தூணில் சாய்ந்து நின்றான்.
அப்போது மலர் மாலையுடன் ஜோதியின் உடலை காண வந்தார் தேவன் சக்ரவர்த்தி.
ஒருவித நக்கல் சிரிப்புடன் ஜோதியின் சடலத்திற்கு மாலை போட்டவர்… நேராக விக்ரமன் அருகில் வந்தார்.
” இப்படி ஆகி போச்சே விக்ரமன். ஒரு மனுசன் எவ்ளோ வலியை தான் தாங்க முடியும் சொல்லுங்க” என்ற தேவனை உணர்வில்லாத பார்வை பார்த்தான் விக்ரமன்.
” உங்க கிட்ட தனியா பேசணுமே விக்ரமன். கொஞ்சம் அப்படி வர்ரீங்களா ? வாங்க உங்க நல்லத்துக்காக தான் சொல்லுறேன் ” என்றவனை புரியாமல் பார்த்த விக்ரமன் அவர் உடன் சென்றான்.
” என்ன பேசணும் ” என்று விக்ரமன் விரக்தியாக கேட்க..
” செய்யுற தொழிலுக்கு உண்மையா இல்லாதவன் வாழ தகுதி இல்லாதவன் ” என்று இதழோர புன்னகையுடன் விகர்மனை பார்த்தான் தேவன்.
விக்ரமனோ புருவம் சுருக்கி அவரை பார்க்க..
” என்ன விக்ரமன் அதுக்குள்ள மறந்துட்டீங்களா ? இது நீங்க சொன்னது தான் . இதை நீங்க என்கிட்ட சொல்லுறதுக்கு பதில் உங்க அப்பா கிட்ட சொல்லியிருக்கலாம்.. நாடறிந்த டாக்டர் என்ன வேலை பார்த்து இருக்காரு பாருங்க? பாவம் சின்ன சின்ன குழந்தைங்க.. எல்லாம் குழந்தைக்கும் வெறும் பதிணைந்து வயதுக்குள்ள தான் இருக்கும். இருந்தாலும் உங்க அப்பா இப்படி கல்நெஞ்சகாரரா இருக்க கூடாது.. விக்ரமன். கேவலம் பணத்துக்காக. சேச்சே.. இதெல்லாம் தப்பில்லையா விக்ரமன் நீங்க அவர்கிட்ட இதெல்லாம் தப்புன்னு சொல்ல மாட்டிங்களா ? ” என்றவனை எரிச்சலுடன் பார்த்தான் விக்ரமன்.
” என்ன ஆச்சு விக்ரமன் கோவம் வருதா? நான் எதுவுமே பண்ணல விக்ரமன்.. நம்புங்க? ” என்ற தேவன் விக்ரமனை பார்த்து இதழ் வளைத்து சிரித்தான்.
” இதுக்கு எல்லாம் பின்னால நீங்க தான் இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் மிஸ்டர் தேவன் சக்ரவர்த்தி. உங்க நடிப்பை எல்லாம் வேற யாருக்கிட்டயும் வச்சுக்கோங்க என்கிட்ட வேண்டாம். ”
” இது தான் விக்ரமன் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது பயங்கர ஷார்ப்பா இருக்க? ஆனால் அப்படி இருந்து என்ன பிரயோஜனம்.. உன் அப்பாவை கம்பி எண்ண விட்டுடியே… உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் வச்சு இருக்கேன்.. என்னனு தெரியுமா? ” என்ற தேவனை புரியாமல் பார்த்தான் விக்ரமன்.
” உங்க வீட்டுல உள்ள எல்லாரும் சரியா இருக்காங்களா பாரு? ” என்று தேவன் ஏளனமாக சிரித்தபடி நிற்க.. பதட்டமான விக்ரமன் வீட்டின் எல்லாம் பக்கமும் தன் பார்வையை சுழல விட்டான்.
அங்கு வர்ஷா இல்லை என்பதை கண்டுகொண்ட விக்ரமனின் உதடுகள் ‘ தேவா ‘ என்று மெல்ல முணுமுணுக்க..
” தேவா எங்க? ” என்று கேட்ட விக்ரமன் தேவனை கொலைவெறியுடன் பார்த்தான்.
” தேவா யாரு? எனக்கு தெரியலயே விக்ரமன். ஆனால் உங்களுக்கு வேண்டிய ரெண்டு விஷயம் என்கிட்ட இருக்கு… உங்களுக்கு இன்னும் ஐந்து மணிநேரம் டைம் தரேன் அதுக்குள்ள நீங்க அதை கண்டுபிடிச்சா.. உங்களுக்கு நல்லது… இல்லை இழப்பு உங்களுக்குத்தான்… இப்போ நீங்க கண்டுபிடிக்காமல் விட்டால்… சாகுற வரை நீங்க அதை தேடிக்கிட்டே தான் இருக்கணும்.. மரணத்தை விட கொடூரமான வலியை, தேடல் கொடுக்கும்.. அதை தான் நான் உனக்கு கொடுக்க போறேன்.. கோவம் வருதா விக்ரமன்? இப்படி ஒரு பொது இடத்தில் வச்சு என்ன எதுவும் உங்களால பண்ண முடியாது… அதனால் கொஞ்சம் கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கோங்க… இந்த ஐஞ்சு மணி நேரத்துக்குள்ள ஆயிரம் முறை உன் உயிர் போகும்டா… ” என்று தேவன் கூற கைகளை மடக்கி தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்த விக்ரமன்.
” சின்ன பொண்ணுடா அவள். அவளை எதுவும் பண்ணிடாத ”
” யாரு அவள் சின்ன பொண்ணா? ஆனால் சும்மா சொல்ல கூடாது விக்ரமன்.. அவளும் அழகா தான் இருக்காள். ”
” ஏய் ”
” கூல் விக்ரமன். நான் அப்படி எல்லாம் பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்க மாட்டேன்.. அன்னைக்கு நான் ஒரு நர்ஸ் மேல கை வச்சிட்டேன்னு சொல்லி உன் அப்பா என்னை அத்தனை பேர் முன்னாடி கை நீட்டி அடிச்சிட்டான்.. அந்த வலி இன்னும் எனக்குள்ள அப்படியே தான் இருக்கு.. ஆனால் அதுக்கு அப்ரோம் நான் எந்த பொண்ணு மேலயும் கை வைக்கிறது இல்லை… ஆனால் அதுக்கு அப்ரோம் ஒவ்வொரு நாளும் உன்னையும் உன் குடும்பத்தையும் எப்படி அவமான படுத்தணும்னு காத்துட்டு இருந்தேன்.. இப்போ தான் அதுக்கான சரியான நேரம் அமைந்திருக்கு… ஐந்து மணி நேரம் மறந்துடாதீங்க” என்று கூறிவிட்டு செல்ல முற்பட்ட தேவனை சொடுக்கிட்டு அழைத்தான் விக்ரமன்.
” தேவா என் கைக்கு வந்த அடுத்த நொடி, உங்க மரணம் என் கையால எழுதப்படும்.. மிஸ்டர் தேவன் சக்ரவர்த்தி” என்று விக்ரமன் நிதானமாக கூறினான்..
” உங்களால முடியுமா விக்ரமன்? அவ்ளோ நம்பிக்கை இருக்கா ”
” நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் தேவன்.. என் உடம்புல உயிர் இருக்கவரை எதிரியை எதிர்த்து நிக்கிற தெம்பு என் மனசுல இருக்கும். உன்னோட நாளை எண்ணிக்கோ… ச்சே சே உன்னோட நேரத்தை எண்ணிக்கோ. உனக்கும் நான் கொடுக்குறது அதே ஐந்து மணி நேர கெடு தான் . ” என்றான் விக்ரமன்.

