
அத்தியாயம் 30
அருண் வேலைக்கு கிளம்பவும் அவனுக்கான சாப்பாடு கேரியரை எடுத்து வந்தாள் அம்ருதா. இருவரும் ஒரே வீட்டில்தான் தங்கியிருந்தனர். அன்று விஷ்வாவிடம் கனிஷ்காவை மறக்கமுடியாது என்று சொன்னதால் அவன் அம்ருதாவுக்கு அழைத்து பேசிவர சொன்னான். கனிஷ்கா மற்றும் அருண் பற்றி அனைத்தும் சொல்லியே வர வைத்தான். இன்னொரு பிரச்சனை கிளம்புவதற்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என்பது அவன் எண்ணம். ஆனால் அம்ருதா வந்த பின்னும் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது அருண் மட்டுமே. அவன் கனிஷ்காவை மறந்துவிட்டான். ஆனால் இன்னொரு பெண்ணை இவள் இல்லை என்றால் இன்னொருத்தி எனும்நிலையில் ஏற்றுகொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். அவளை வீட்டைவிட்டு அனுப்பாததால் அவனுடன் வேறுவேறு அறையில் தங்கி கொண்டனர்.
இன்றும் அவள் சாப்பாடு எடுத்துவந்தும் அதைகண்டு கொள்ளாமல் சென்றவன் மீது அப்போது வந்த விஷ்வாவுக்கே கடுப்பானது. தான் பார்த்து கொள்வதாக சாப்பாட்டை வாங்கி சென்றவன் அலுவலகத்தில் நேரடியாக அருணை தேடி சென்றான்.
“நீ என்ன லூசாடா?” விஷ்வா கேட்க அதை கண்டு கொள்ளாமல் கோப்பைகளை பார்த்து கொண்டிருந்தான்.
அதை வாங்கி அருகில் வைத்த விஷ்வா “அம்ருதா பாவம்டா.. உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் உன் காதலுக்காக தான் காத்திருக்கா.. கிடைக்காம போனதை நினைச்சு கையில் இருக்குற பொக்கிஷத்தை தொலைச்சிடாத அருண்..” என்று கூற “எனக்கும் கனிக்கும் அன்னைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சே.. அதை என்ன பண்ண சொல்ற?” என்று கேட்டான் அருண்.
“அது ஆகலைடா.. கனி கையெழுத்தே போடல..” என்று விஷ்வாவின் பதிலுக்கு “அம்ருதா நல்ல பொண்ணு தான்.. ஆனா என்னால் அவளை ஏத்துக்க முடியாது” என்றான்.
“ஏன்?”
“நான் எந்த விஷயத்தையும் சரியா புரிஞ்சிக்க மாட்டேன்.. கனி விஷயத்தில் கூட கனிமொழி எல்லாம் சொல்லியும் அவபக்கம் நான் யோசிக்கவே இல்ல.. அதனால் இப்போ கீதன் உடம்பு முடியாத நேரம் அவர் பக்கத்தில் இருக்ககூட முடியல.. எனக்கு இந்த காதல் கல்யாணம் எல்லாம் வேண்டாம்” என்றவனை “எது கூட எதை முடிச்சு போடுற நீ?” என்று சீறினான் விஷ்வா.
“வேண்டாம் விஷ்வா.. ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை என்னால் கஷ்டமா போயிடுச்சு.. இனி அம்ருதா நல்லா இருக்கட்டும்..”
“உன்னை காதலிக்குறது அவ பண்ணுற தப்பா? உன்னை தவிர வேற யாரையும் கல்யாணம்பண்ணிக்க மாட்டா” விஷ்வா கேட்க “என்னாலேயும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றவன் எழுந்து வெளியே சென்றான்.
விஷ்வா அவனிடம் பேசி பயனில்லை என நினைத்தவன் அருணின் தந்தை ஈஸ்வரனுக்கு அழைத்தான்.
“என்னப்பா சொல்றான்? சம்மதிச்சானா?”
“இல்லப்பா.. அவன் உறுதியா இருக்கான்.. நீங்கதான் உங்க வேலைய அவன்கிட்ட காட்டணும்” என்று கூற “இன்னைக்கு அவன் வழிக்கு வருவான்” என்றவர் பெங்களூர் கிளம்பினார்.
அவருக்கு தெரிந்தே அம்ருதா வந்திருந்தாள். இப்போது அவரும் கட்சியில் நேர்மையாக இருக்க பழகி கொண்டிருக்கிறார். அவரின் இந்த நிலைமைக்கு காரணமும் அம்ருதா தான். கோபத்தில் இருந்தவரை கொஞ்சம் படுத்தியவள் பின் தந்தை போல் கவனித்து கொள்ள அவரின் நல்லகுணமும் வெளியே வந்தது. இன்று ஈஸ்வரன் கிளம்பி வருகிறார் எனவும் அம்ருதா வீட்டில் சமைத்து கொண்டிருந்தாள்.
அருண் தன் தந்தை வருவதாக சொல்லவும் சீக்கிரம் வீட்டிற்கு வந்தான். அவன் வரும்நேரம் சமையலறையில் சப்பாத்திமாவு பிசைந்து கொண்டிருந்தவள் மேலே சப்பாத்தி உருட்டுவதை எடுக்க முயல கால்தவறி கீழே விழுந்தாள்.
“அம்மா…” என்ற அவளின் அலறலை கேட்டு அவசரமாக உள்ளே வந்தான் அருண். எழும்ப முடியாமல் இருந்தவளை தன்கைகளில் ஏந்திகொண்டவன் தன் அறைக்கு அழைத்து சென்று படுக்கையில் அமர வைத்தான். மருந்தை எடுத்து வந்தவன் சுளுக்கியிருந்த காலில் போட்டு நீவி விட வலியில் அவன் தோளை அழுத்திபிடித்து கொண்டாள் அவள்.
“பார்த்து ஏற மாட்டியா? ஏதாச்சும் ஆனா உன் அம்மாவுக்கு யார் பதில் சொல்றது?” என்று கேட்க அவளோ அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
நீவி விட்டு நிமிர்ந்தவன் அவள் பார்வையில் “எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்க?” என்று கேட்க “எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறீங்க? என்னை பிடிக்கலையா?” என்றுகேட்டாள்.
“பிடிக்கலன்னு யார் சொன்னது? எனக்கு கல்யாணம் வேண்டாம்.. நீ கஷ்டப்படாத.. நான் சப்பாத்தி சுடுறேன்” என்று எழும்ப அவனை அழுத்தி அமர வைத்தவள் “அப்போ ஏன் கல்யாணம் வேண்டாம்?” என்று கேட்க “சரி கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் அவன்.
“இது என்ன பதில்?”
“இதை தானே நீ எதிர்பார்த்த?”
“ஆமா.. ஆனா இவ்ளோநாள் வேண்டாம்னு சொல்லிட்டு திடீர்னு சம்மதம் சொல்றீங்களே ஏன்?” என்று கேட்க “கொஞ்சம் முன்னாடி என் தோளை அழுத்தி பிடிச்சியே.. அதுல உன் கால்வலி மட்டும் தெரியல.. உன் காதலும் தெரிஞ்சது.. எனக்கு உன்னை இப்போ பிடிக்கும்.. ஆனா எனக்குன்னு முன்னாடி இருந்த வாழ்க்கை வேற.. ரெண்டையும் நீ போட்டு குழப்பிக்காம இருந்தா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. இதுவும் உன் ஆசைக்காக தான்..” என்று கூற “என் ஆசைக்காக எல்லாம் வேண்டாம்” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
அவளை தன் புறம் திருப்பியவன் “நான் சாப்பிட மாட்டேன்னு தெரிஞ்சும் காலைலயே எந்திரிச்சு சாப்பாடு செஞ்சு தரியே.. இதுக்கு மேல உன்னைபத்தி என்ன தெரியணும்? உன்மேல எனக்கு கோபமே வரல.. மொத்தமும் என்மேல தான்.. நான் எதுக்கும் ஒத்துவர மாட்டேன்” என்றுசொல்ல “எதுக்கு ஒத்துவர மாட்டீங்க? கல்யாணம் மட்டும் பண்ணுங்க.. எண்ணி பத்தே மாசத்துல குழந்தை உங்க கையில் இருக்கும்” என்றாள்.
“அடியே நான் எதை சொன்னா நீ என்ன சொல்லிட்டு இருக்க? ஆனாலும் உனக்கு ஸ்பீட் அதிகம் தான்” என்றவன் எழுந்து செல்ல “நானு?” என்று இருகரங்களையும் விரித்தாள். அவளை தூக்கி கொண்டவன் சமையலறையில் ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு சப்பாத்தி உருட்ட ஆரம்பித்தான். அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க “சைட் அடிச்சது போதும்.. இப்போ வெங்காயம் எல்லாம் கட் பண்ணு” என்று கட்டரை அவளின் மடியில் வைத்தான். அவள் செய்து கொடுக்க சிறிதுநேரத்தில் சமையல் முடித்து வெளியே வர ஈஸ்வரன் மற்றும் விஷ்வா வந்தனர்.
“வாங்கபா.. சாப்பிடலாம்” என்றவன் விஷ்வாவையும் அழைத்துகொண்டு சமையலறைக்கு சென்று சப்பாத்தி மற்றும் குருமாவை எடுத்துவந்து டைனிங் டேபிளில் வைத்தனர்.
“காலில் என்ன அடிமா? பார்த்து பண்ண கூடாதா?” என்று ஈஸ்வரன் விசாரிக்க “இதுல ஒரு நல்லவிஷயம் நடந்திருக்கு மாமா.. அருண் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க” என்றாள். அதை கேட்டு அவருக்கும் மகிழ்ச்சியே.
“நான் டெரரா வந்து பேசி சம்மதிக்க வைக்கணும் நினச்சா நீ ஸ்மூத்தா முடிச்சிட்டியே… அருண் கல்யாணத்துக்கு நாள் குறிச்சிரலாமாடா?” என்று கேட்க “சரிப்பா..” என்று கூறிவிட்டு சாப்பிட்டான்.
அவனின் மனம்தெரிந்தே அடுத்த ஒருவாரத்தில் சிம்பிளாக கல்யாணத்தை கோவிலில் முடித்து விட்டார் ஈஸ்வரன். வீட்டிற்கு வந்ததும் “கீதனுக்கு எப்படி இருக்கு விஷ்வா?” என்று கேட்க “நல்லா இருக்கார்டா.. இன்னும் கொஞ்சம் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கறதால ஹாஸ்பிட்டல் போய்ட்டு போய்ட்டு வரவேண்டி இருக்கு” என்றான்.
“சீக்கிரம் சரி ஆகிடும்டா.. யார்னே தெரியாத எனக்கு அவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணணும்னு மனசு வந்தவருக்கு எதுவும் ஆகாதுடா.. இப்போ இருக்குற மெடிக்கல் லெவல்ல எல்லா நோயும் சரிஆகும்” என்ற அருண் “நீ எப்போ கல்யாணம் பண்ண போற?” என்று கேட்டான்.
“உனக்கு கல்யாணம் ஆன அப்புறம் பண்ணுறதா வேண்டுதல்.. இப்போ உனக்கு ஆயிடுச்சுல்ல எனக்கும் ஆகிடும்” என்று விஷ்வா சொல்ல “யாருடா அந்த பொண்ணு?” என்று கேட்டான் அருண்.
“கரெக்ட்டா பாயிண்டுக்கு வந்துடியே.. நம்ம ஜுனியர் ஜெனிடா..”
“வாவ் காங்கிராட்ஸ் மச்சான்.. அவளையும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க எவ்ளோ பாடுபட்டிருப்பன்னு எனக்கு புரியுது..”
“ஆனாலும் உன் அளவுக்கு இல்லடா.. இனியாவது தங்கச்சி மனசு கோணாமல் நடந்துக்கோடா”
“அதுல எல்லாம் உன் தங்கச்சி விவரம் தான்..”
“அப்புறம் உன் கூடல்ல குடும்பம் நடத்த போறா..” என்றவன் பின் அவனின் நிலைமை புரிந்து “விட்டுட்டு போனது அவ்ளோ தான்.. இப்போ உனக்கு அம்ருதாவை பிடிக்கும்னு எனக்கு தெரியும்.. எந்த சூழ்நிலையிலும் கஷ்டத்தை கொடுக்குற மாதிரி நடந்துக்காத” என்றவன் கிளம்பி விட்டான்.
அருண் மற்றும் அம்ருதாவிற்கான இரவும் வர அவனின் மனைவி என்னவோ சாதாரணமாக தான் இருந்தாள். ஆனால் அருண் தான் படபடப்புடன் காணப்பட்டான். இதுவரை தனித்து இருந்தவர்கள் ஒன்றாக ஒரே அறையில் எனும்போது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. கனியும் அவனும் கூட ஒரே அறையில் இருந்தது இல்லை.
அவனின் நிலை கண்ட அம்ருதாவோ “நான் வேற பத்து மாசத்துல குழந்தைன்னு கேரண்டி கொடுத்தேன்.. இங்க எதுக்கும் வழி இல்லை.. ஒருவேளை நீங்க சொன்னமாதிரி அதுக்கு சரிபட்டு வரமாட்டீங்களோ?” என்று சீண்ட
“உனக்கு வாய்கொழுப்பு அதிகம் தான்.. நீ கஷ்டப்பட்டு சொன்ன சபதம் எல்லாம் வீணா போக வேண்டாம்.. உன் சபதத்துக்கு நானும் கேரண்டி..” என்றவன் அவளை தன்பக்கம் இழுக்க அவனின் மேலேயே விழுந்தாள்.
“இவ்ளோ பேச்சு பேசுற இந்த வாய் இருக்கே..” என்றவன் அதை கிள்ளிவைக்க “ஹ்க்கும்.. இவர் கிள்ள மட்டும்தான் லாயக்கு..” என்றவள் எழும்ப முயற்சித்தாள்.
முயற்சித்தாள்.. அது மட்டுமே முடிந்தது. அவனின் இடதுகை அவளின் இடுப்பை வளைத்து பிடிக்க அவனின் ஸ்பரிசத்தில் எழ தோணவில்லை அவளுக்கு.
“நான் கிள்ள மட்டும் தான் லாயக்கா? பாரு நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வச்சு செய்ய போறேன்” என்றவன் அவளின் இதழ்களை சிறைபிடித்து கொள்ள அதற்கும் மேல் அங்கு பேச்சு வார்த்தைக்கு இடமில்லாமல் போனது.
————————————-
கீதன் படுக்கைக்கு வர அந்நேரம் ஷாரவியை தூக்கிகொண்டு அடுத்த அறைக்கு சென்றாள் கனிமொழி. இது கீதன் கண்விழித்ததில் இருந்தே நடக்கும் ஒன்றுதான். அருணுக்காக நடிக்க சொன்னதை கூட அவளால் பொறுத்து கொள்ள முடிந்தது. ஆனால் குழந்தை பிறந்த உடனேயே அவர்களை விட்டுபிரிந்து சென்றதை அவளால் மறக்கவே முடியவில்லை. இப்போதும் அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்பவள் இரவில் அவனுடன் கட்டிலில் படுக்கமாட்டாள். அவளின் இந்த முடிவு கீதனுக்கு பெரிய வருத்தமாக இருந்தது. ஏன் பிழைத்தோம் என்று நினைக்க தூண்டியது.
கடந்தவாரம் தான் அவனுக்கு நினைவு வந்தது. அவன் கண்விழிக்கும் நேரம் அவனின் முன் நின்றது கனிமொழி தான். கண்களில் கண்ணீர் வழிய நின்றவளை எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்பது அவன் மூளையில் அப்போதுதான் உறைத்தது. காதலித்து திருமணம் செய்து என்ன பயன்? சில மாதங்களே அவர்களால் ஒன்றாக வாழ முடிந்தது. உள்ளுக்குள் வானளவு காதல் இருந்தும் இருவராலும் மனம் விட்டு பேச முடியாமல் போனது.
இன்றும் அவளின் அறைக்கு செல்ல அந்நேரம் அவள் ஷாரவியை தூங்க வைத்து கொண்டிருந்தாள்.
“ம்மா.. பாட்டு பாடுமா..” எப்போதும் அவள் பாட்டு பாடி தூங்க வைப்பதால் இன்றும் அப்படி கேட்டாள்.
“அம்மாவை வா, போ சொல்லலாமா செல்லகுட்டி?” என்று கேட்க “பாட்டு பாடுங்கமா..” என்று உடனே திருத்தி கொண்டாள் ஷாரவி.
“குட் கேர்ள்..” என்றவள் வழக்கமாக பாடும் பாட்டையே பாடினாள்.
“ஆராரோ ஆரீராரோ
அம்புலிக்கு நேரிவரோ
தாயான தாய் இவரோ
தங்கரத தேரிவரோ
மூச்சுப்பட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே
தூங்காம தூங்கு கண்ணே
ஆச அகல் விளக்கே
அசையாம தூங்கு கண்ணே
ஆராரோ ஆரீராரோ
ஆரீரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ
ஆரீரோ ஆரீராரோ”
அவள் பாடி முடிக்கவும் குழந்தை தூங்கியிருந்தாள். அவள் எழாதவாறு சிறிது நேரம் தட்டி கொடுத்தவள் தனக்கான படுக்கையை விரிக்க “கனி..” என்று வந்து நின்றான் கீதன்.
“தேவையில்லாம எதுவும் பேசாம கிளம்புங்க..” என்று அவன் முகத்தை பார்க்காதவாறு கூற “பேசணும்டா..” என அவன் உறுதியாக நின்றான்.
மகளை திரும்பி பார்த்தவள் பின் ஒரு பெருமூச்சுடன் பால்கனி நோக்கி நடந்தாள். அவளுடன் அவனும் வந்து நின்றான். அவள் கம்பியை பிடித்தவாறு நிலவை வெறிக்க “கனி சாரிமா.. நான் பண்ணுனது தப்பு தான்.. அதுக்காக என்னை ஒதுக்கி வச்சு பெரிய தண்டனை எல்லாம் வேண்டாம்டா..” என்று சொல்ல “பேசி முடிச்சாச்சுனா நான் தூங்க போகவா?” என கேட்டாள் கனி.
“இங்க இருக்குறது நாம ரெண்டு பேரும் தான்.. நீ ஒரு பக்கம் கோச்சிக்கிட்டு இருந்தா தனிமை கொல்லுதுடா.. உன்னையும் பாப்பாவையும் விட்டுட்டு போனது தப்பு தான்.. ஆனா நீங்க பாதுகாப்பா இருப்பீங்கன்னு நம்பிக்கையில் தான் கிளம்பி போனேன் கனி.. வரும்போது நீ புரிஞ்சிக்குவன்னு நினைச்சேன்.. ஆனா இந்த மௌனம் எனக்கு வேண்டாம்மா.. நீ எவ்ளோ வேணாலும் திட்டு.. உனக்கு தோணுனா அடிச்சிக்கோ.. வாங்கிக்குறேன்.. ப்ளீஸ்” என்று கெஞ்ச “உங்க உடல்நிலைக்கு இந்த டென்ஷன் சரியில்லை.. நீங்க எதை பத்தியும் நினைக்காம தூங்குங்க” என்றாள்.
“அப்போ நம்ம ரூம்லயே தூங்கலாமேடா..” அவன் கேட்க “செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லங்க” என்று சொல்லிவிட்டு நகர அவளின் பதிலில் மரித்து போனான் அவன். அந்த நோக்கத்தில் அவன் அவளை அழைக்கவில்லையே. தனியாக இருக்கும்போது பல நினைவுகள் வந்து கொல்வதை தடுக்கவே அவளின் அருகாமையை விரும்பினான். ஆனால் அவள் இப்படி எடுத்து கொள்வாள் என்று அவன் சிறிதும் நினைக்கவில்லையே. அவன் சிலையாய் நிற்க அதன் பிறகே தன் வார்த்தையை உணர்ந்தாள் கனி.
“அய்யோ என்ன வார்த்தை சொல்லிட்டு வந்துட்டேன்.. ஒருமுறை கூட அவர் என்னை அப்படி நினைக்கவில்லையே.. மனசு நிறைய ஆசை இருந்தும் எனக்காக அவர் தங்கை முன் தள்ளி இருந்தாரே.. அவரை என்ன வார்த்தை கேட்டுட்டேன்” என்று பதறி பால்கனிக்கு செல்ல அவனோ “சாரி..” என்ற ஒற்றைவார்த்தையில் அவளை கடந்து சென்றான். கம்பியில் ஈரத்தை உணர்ந்தவளுக்கு அது அவனின் கண்ணீர்துளி என்பது புரிய அவனின் பின்னாலேயே சென்றாள்.
அவள் அவனின் கண்கள் கலங்கி கண்டது அவர்களின் குழந்தை உருவான செய்தியை கேட்டபோது தான். தன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றபோது கூட அவன் கலங்கவில்லை. இன்று அவனின் கண்ணீர்துளிகள் அவளை பாரமாக்க அவனின் அறைக்கு செல்ல அவனோ அவர்களின் திருமண புகைப்படத்தை வைத்து பேசி கொண்டிருந்தான்.
“என்னை பத்தி நீ நல்லா புரிஞ்சு வச்சிருக்கன்னு நினைச்சேன் கனி.. அருணுக்கு மனைவியா நடிக்க சொல்லும்போது உன் மனநிலை தெரிஞ்சுதான் சொன்னேன்.. காதலோட வலி எனக்கும் தெரியும் தானே.. என் உயிருக்கே உத்திரவாதம் இல்லாதபோது ஒருத்தனுக்காவது நல்லது பண்லாம்னு தான் நடிக்க சொன்னேன்.. ஷாரவி பிறக்கும்போது அவனுக்கு புரிய வைக்கலாம்னு நினைச்சா அவனோட செயல்கள் இன்னும் வெறியா இருக்கவும் டாக்டர்கிட்ட கேட்டேன்டா.. அவர்தான் அவனுக்கு ஆழ்மனதில் கனி தான் மனைவின்னு பதிஞ்சா சீக்கிரம் புரிஞ்சிப்பான்னு சொன்னாங்க.. அந்த ஒரே காரணத்துக்காக தான் உன்னை விட்டு விலகினேன்.. வேற எதுவும் இல்லடா.. நான் நம்ம பாப்பாவை எவ்ளோ ஆசையா எதிர்நோக்கினேன்னு உனக்கு தெரியும் தானேடா? அவளுக்கு ஷாரவின்னு பேர் எல்லாம் வச்ச நான் அவ்ளோ சீக்கிரம் உங்களை மறப்பேன்னு எப்படிடா நினைச்ச? அதுவும் இப்போ நீ சொன்ன வார்த்தை ரொம்ப வலிக்குதுடா” என்று கண்கள் கலங்க அதற்கு மேல் அவளால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
அவனின் அருகில் சென்று “சாரிங்க.. தெரியாம பேசிட்டேன்.. ஏதோ கோபத்துல” என்று சொல்ல “விடுடா.. நான் பண்ணியதும் தப்பு தானே.. பாப்பா தனியா இருப்பா.. நீ போய் தூங்கு” என்றான்.
“அப்போ நாங்க இங்க தூங்கலன்னு உங்களுக்கு பிரச்சனை இல்லயா?”
“உனக்கு சரிப்படாதுடா.. நான் பார்த்துக்குறேன்.. உன் மனசு சரியாகுற வரைக்கும் நான் காத்திருக்கேன்”
“என் மனசு கடைசி வரை மறக்கலன்னா?” அவள் கேட்க “எனக்கு உன் பக்கத்துல இருக்குறதே போதும்.. இப்போ போய் தூங்கு..” என்றுகூற பக்கத்து அறைக்கு சென்று ஷாரவியை தூக்கி கொண்டு வந்தாள்.
“இனிமேல் இங்கேயே தூங்குறோம்.. எங்களுக்கு தனியா படுக்க பயமா இருக்கு” என்றவள் மகளை நடுவில் படுக்கவைத்து விட்டு ஒருபக்கம் சென்று படுத்து கொண்டாள். ஒரு பெருமூச்சுடன் மறுபக்கம் வந்து படுத்து கொண்டான் கீதன்.
அடுத்தநாள் காலையில் கீதன் சீக்கிரமே எழும்ப கனி மகளை அணைத்து கொண்டு படுத்திருந்தாள். அவள் அருகில் வந்தவன் இதமாக அவள் நெற்றியில் முத்தமிட்டு நிமிர “நான் கண்ணை மூடிட்டு இருக்கும்போது தர வேண்டாம்.. கண்ணை திறந்து இருக்கும் போதே தரலாம்.. இங்க..” என்று தன் உதட்டை காட்ட “குழந்தையை பக்கத்துல படுக்க வச்சிட்டு பேச்சை பாரு” என்றவன் நகர்ந்து சென்றான்.
அவன் சென்றதும் எழுந்தமர்ந்தவளுக்கு அவனின் செயலில் எதுவோ வித்தியாசமாக பட்டது. அவனுக்கும் மகளுக்குமான காலை உணவை தயாரித்து ஷாரவிக்கு ஊட்டி முடித்தவள் அவளுக்கு ட்ராயிங் புக் கொடுத்து படம் வரைய சொல்லி விட்டு கணவனுக்காக காத்திருந்தாள்.
அவன் வந்ததும் “வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க அமைதியாக அமர்ந்தவனுக்கு “இன்று டாக்டர்கிட்ட போகணும்” என்று சொல்லி இட்லி சட்னியை பரிமாறினாள்.
“மதியம் தானே அப்பாயின்ட்மெண்ட் வாங்கிருக்கு.. போகலாம்” என்றவன் வாயில் ஒரு துண்டு இட்லியை வைக்கவும் அடுத்தநொடி அவனின் வாயில் இருந்தது அவளுக்கு இடம் மாறியிருந்தது. அவன் என்னவென்று யோசிக்கும் முன் செய்திருந்தாள். அவன் திகைத்து அமர்ந்திருக்க அடுத்த துண்டு இட்லியை சட்னியில் தோய்த்து அவளே ஊட்டினாள்.
அவன் வாயை திறந்து வாங்கவும் “கோபமா இருந்த நானே இறங்கி வந்தா இப்போ நீங்க மறுபடியும் முறுக்கிட்டு இருக்கீங்க.. நீங்க பண்ணுனதும் தப்பு தான்.. நான் பேசியதும் தப்பு தான்.. தப்புக்கு தப்பு சரியா போச்சு.. இனி யாரோ மாதிரி பிஹேவ் பண்ணுனா கடிச்சு வச்சிடுவேன்” என்று கூற இட்லியை விழுங்கியவன் “இப்போ கடிச்சு வைக்கலையா?” என்று கேட்டு உதட்டை தடவி கொண்டான்.
எதுவும் பேசாமல் இட்லியை ஊட்டியவள் “சீக்கிரம் வந்துடுங்க.. ஹாஸ்பிட்டல் போகணும்” என்று அனுப்பி வைத்தாள். அவன் அலுவலகம் கிளம்பவும் அவள் முகம் வெட்கத்தை தத்தெடுத்து கொண்டது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


EPISODE SEMMAAA, KEETHAN AND KANI LOVE VERA LEVEL THAAN