
அத்தியாயம் – 5
“நித்து என்னை பிடிச்சிருக்கா” ரிஷியின் வார்த்தையில் உருகி போய் நின்றிருந்தவள், அவனது இறங்கி ஒலிக்கும் குரலில் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் அவனை, இத்தனை நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்த குரல் அல்ல இவை, குழைவாக பேசிக் கொண்டிருந்தாலும் அக்குரலில் ஒரு வித கம்பீரம் தெரிந்தது, தற்போது குரல் கம்மிருந்தது, விழிகள் ஏக்கமாக பார்த்தது அவளை,…
“சொல்லு நித்து, என்னை பிடிச்சிருக்கா?” மீண்டும் அதே இறங்கி ஒலிக்கும் குரல், அவனுக்கு இந்த குரல் செட் ஆகாதது போல் தோன்றியது, அதே சமயம் சட்டென்று பிடிச்சிருக்கு என்று கூறிவிட அவளுக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை, பிடிக்கவில்லை என்று கூற ஆயிரம் காரணம் இருந்தாலும் அவள் அதையும் கூறவில்லை, மனதில் பல வகையான குழப்பங்கள் அவளை வந்து அழுத்தியது, மனக்கண்ணில் அவன் வந்து போனான், அவனுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை அவள், அதனால் ‘பிடிக்கவில்லை’ என்று சொல்லிவிடலாமென்று அவள் இதழ் திறக்க வந்த நேரம், அவள் இதழை தன் இதழ்களால் மூடியிருந்தான் ரிஷி, அவனது இச்செயலால் அதிர்ச்சியில் விழிகள் இரண்டும் விரிந்தது அவளுக்கு, அவனிடமிருந்து விடுபட முயன்றாள், திமிறினாள், அவன் விடவில்லை, அவள் இதழ் தேனை பருக ஆரம்பித்திருந்தான், அவனிடமிருந்து விலக திமிறி கொண்டிருந்தவள், அவன் முத்தத்தில் மயங்கி கிறங்கி கண்கள் சொருகி அவனுள் தஞ்சமடைந்தாள், அவள் அவனுக்கு இசைந்து கொடுக்கவில்லையென்றாலும் அவன் முத்தத்தை ஏற்று மதிமயங்கி கிடந்தாள், அழுத்தமான முத்தம் அப்படியே முன்னேறி ஆழமாய் சென்றது, உயிர் வரை சென்று தித்தித்தது முதல் முத்தம்,…
நிமிடங்கள் கடந்த பிறகு தான் விலகினான் ரிஷி, விழிகள் முடி தன் நெஞ்சு சட்டையை இறுக்கி பிடித்து தன் முத்தத்தினால் மயங்கி போய் கிடந்தவளை கர்வப்புன்னகையுடன் பார்த்தவன், அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு அவளை கரங்களில் அள்ளி தூக்கி கொண்டு போய் தங்களதறையில் விட்டவன், அச்சமயமே வெளியேறிவிட்டான்,….
நித்யாவிற்கு அம்மோனநிலையிலிருந்து வெளிவரவே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டது, ஏதோ மாயவலையில் சிக்கி மீண்டது போல் உணர்ந்தாள், மனம் வலித்தது, விழிகள் கண்ணீரை உகுத்தது, உதடுகள் “ஸாரி கருணா” என்று முணுமுணுத்தது,…
அவள் நினைத்திருந்தால் ரிஷியை தடுத்திருக்கலாம், பிடித்து தள்ளி விட்டிருக்கலாம், முதலில் முயன்றால் தான் ஆனால் அவன் முத்தத்தில் மயங்கி போனவள் தன் முயற்சியை கைவிட்டிருந்தாள் அல்லவா.. ‘ஏன்? ஏன் அவனது முத்தத்தில் தான் மயங்கி போகணும்?அவ்வளவு வீக்கானவளா நான்? ஒருவன் தொட்டால் உருகி விடுகிறேனே இது எவ்வளவு பெரிய அசிங்கம், அப்படியென்றால் எந்த ஒரு ஆண் தொட்டாலும் நான் இப்படி தான் உருகுவேனா? ச்சே என்ன மாதிரியான அருவருப்பான கேள்வி இது, என்னை பார்த்து நானே கேட்டு கொள்கிறேனே? நிச்சயமாக இன்னொருவனின் தீண்டலை நான் அனுமதித்திருக்க மாட்டேன், அந்த கிஷோர் என் கையை பிடித்து இழுத்தத்திற்கே அவ்வளவு கோபம் வந்தது, யோசிக்காம அறைஞ்சுட்டேனே! அப்படினா இவரை ஏன் அடிக்கல, தடுக்கல, தாலி கட்டிய புருஷன் என்பதால அவரோட தொடுதலை ஏத்துக்கிட்டேனா? தாலி கட்டிய புருஷனா இருந்தா என்ன? இந்த கல்யாணத்தையே விருப்பம் இல்லாம தான் பண்ணிக்கிட்டேன், இதுல புருஷன் மேல பாசம் உரிமை எங்கிருந்து வந்தது அதுவும் ஒரே நாளில், அவரோட பிஹேவியர்ல கொஞ்சம் மனசு டிஸ்டர்ப்ட் ஆகிடுச்சுனு நினைக்கிறேன், எது எப்படி இருந்தாலும் இனி இப்படி ஒரு தப்பு நடக்காம பார்த்துக்கணும், கருணாவை பத்தி அவர் கிட்ட இன்னைக்கே சொல்லியாகனும், வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டா ரொம்ப நிம்மதியா வெளியே போயிடுவேன், கடவுளே என்ன நடந்தாலும் நீ தான் எனக்கு துணையா இருக்கணும்’ என்று ஒருவராக ஒரு முடிவெடுத்து மனதை சமாதானபடுத்திக் கொண்டவள், ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் அறையை விட்டே வெளியே போனாள், அவள் கணவன் அங்கு இருப்பது போல் தெரியவில்லை, எனவே பாட்டியுடன் வந்து அமர்ந்து கொண்டாள், ஏதாவது வேலை செய்யட்டுமா என கேட்டாள், ‘இன்று ஒரு நாள் மட்டும் விட்டுவிட்டு நாளையிலிருந்து உனக்கு என்ன வேலை பண்ண பிடிச்சிருக்கோ அதை பண்ணு கண்ணு’ என்று கனிவாக கூறியவர் அவளது மாமனார் மாமியாரை பற்றி நித்யாவிடம் கூறிக் கொண்டிருந்தார்,…
தர்மதுரை-செவ்வந்தி தம்பதியருக்கு பல வருடங்கள் தவத்திற்கு பிறகு பிறந்த குழந்தை தான் ரிஷியின் தந்தையான ரவிசந்திரன், தர்மதுரையின் தகப்பன் அந்த காலத்திலேயே பணம் பலம் படைத்தவர் என்பதால் தனக்கு பிறந்த இரண்டு மகன்களுக்கும் சரிசமமாக சொத்தை எழுதி வைத்து விட்டு இப்புவியை விட்டு சென்றிருந்தார், தர்மதுரை பொறுப்பானவர் என்பதால் அவர் தந்தை தனக்காக கொடுத்த சொத்தில் ஒரு பங்கெடுத்து சுயமாய் தொழில் தொடங்கினார், அவர் ஆரம்பித்த துணிக்கடை வியாபாரத்தில் அதிக வரவேற்ப்பு கிடைத்தது, நீ உன் தொழிலை பார் நான் என் தொழிலை பார்த்து கொள்கிறேன் என்று பிரிந்து போன அவர் அண்ணன் சோழைமலை என்ன தொழில் ஆரம்பித்தாலும் தோல்வியிலேயே முடிந்தது, தம்பி மட்டும் முன்னேறுவதை கண்டு வயிறு எரிந்தது, இதற்கிடையில் தர்மாவிற்கு செவ்வந்தியுடன் திருமணம் நடந்தது, தர்மாவின் தொழில் முன்னேற்றத்தையும் அவரின் விடாமுயற்சியால் பெரிய இடத்தில் வந்து நின்ற அவரின் திறமையையும் கண்டு, பல பிரான்ச்களில் துணிக்கடை வைத்து நடத்தும் செவ்வந்தியின் தந்தை, அவரை தன் மருமகனாக்கி கொண்டார், ஏற்கனவே கொதித்து போயிருந்த அண்ணன் சோழமலைக்கு தம்பி பெரிய இடத்தில் மருமாகனாகி போனது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது, அவரின் மனைவி வேறு ஒரு பக்கம் ஏற்றி விட, தாயை தம்பியிடம் விரட்டி விட்டார், வயதான அந்த பெண்மணி தான் கலங்கி போனார், ஆனால் தர்மா தன் தாயை மிகவும் அன்பாகவே பார்த்துக் கொண்டார், சோழமலையோ தம்பியிடம் பணம் கேட்டு மிரட்டினார், பல லட்சம் கொடுத்து கொடுத்து சோர்ந்து போன தர்மா ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க மறுத்தார்,
நேரடியாகவே அவரை சாடினார் சோழமலை, “நீ நல்லா இருக்க மாட்ட” என்று சாபமிட்டார், அன்றிலிருந்து அண்ணன் தம்பிக்குள் இருந்த உறவு அறுந்து போனது,..
மகன் ரவிசந்திரன் பிறந்ததும் அவர்களின் வாழ்க்கை அழகானது, ரவிசந்திரனுக்கு எட்டு வயது முடிவில் தான் தர்மாவின் தாய் இயற்க்கை எய்தினார்,…
ரவிசந்திரனுக்கு போலீஸ் ஆகணுமென்ற ஆசை சிறுவயதிலிருந்தே முளைத்தது, தன் ஆசை கனவுபடி காவல்துறை அதிகாரியானார், அவர் போலீஸ் அதிகாரியானவுடன் தான் அவர்கள் ஊரில் மக்களை ஆட்டி படைத்து கொண்ருந்த ரவுடி கும்பல் அடங்கினார்கள், இல்லை இல்லை அடக்கினார் ரவிச்சந்திரன், நேர்மையாம போலீஸ் அதிகாரியான அவருக்கு பல மெடல்கள் பாராட்டுகள் எல்லாம் வந்து குவிந்தது, இந்நிலையில் தான் அவருக்கு பிரபாவதியுடன் திருமணம் நடந்தது, காதலித்து பெரியவர்களின் சம்மதத்துடன் நடந்தது தான் இவர்களின் திருமணம், சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த பிரபா வளர்ந்தது எல்லாம் ஆசிரமத்தில் தான், ஒருமுறை ரவிசந்திரன் அதே ஆசிரமத்திற்கு சீஃப்கெஸ்ட்டாக போயிருந்த போது தான் பிரபாவை சந்தித்தார், பிரபா படிப்பு முடிந்து தான் வளர்ந்த ஆசிரமத்திலேயே பணிபுரிந்து கொண்டிருந்தார், முதலில் சாதாரணமாக பேச ஆரம்பித்தவர்களை, விதியும் பலமுறை சந்திக்க வைத்தது, பேசினர், பழகினர், ரவிசந்திரன் அவரை திருமணம் செய்து கொள்வதாக தன் விருப்பத்தை முன்வைக்க, முதலில் தயங்கிய பிரபாவும் அதன்பிறகு தன் மனதிலுள்ளதை கொட்டிவிட்டார், தர்மாவும் செவ்வந்தியும் மகனின் சந்தோசத்திற்கு தடை போடவில்லை, அடக்கமான அமைதியான பெண்ணான பிரபாவதி அக்குடும்பத்தின் குத்துவிளக்காய் வந்து சேர்ந்தார், இரண்டு மாதத்திலேயே கருவுற்றார், அவர் கருவுற்ற விஷயம் அறிந்ததும் அவரை கையில் வைத்து தாங்கினார்கள் குடும்ப மொத்தமும், செவ்வந்தி மாமியார் என்பதை விட ஒரு தாயாய் தான் அவரை கவனித்து கொண்டார், தர்மாவிற்கு பெண் பிள்ளை என்றால் அவ்வளவு இஷ்டம், அதனால் மருமகளை தனக்கு கடவுளாய் பார்த்து கொடுத்த மகளாய் நினைத்து தான் பாசம் காட்டினார், சும்மாவே மனைவியை தாங்கும் கணவர், மனைவி கருவுற்றிருகிறார் என்று தெரிந்ததும் தரையில் கால் பதிக்க விடவில்லை,…
மாமனார் மாமியாரின் அரவணைப்பிலும், கணவனின் அன்பையும் திகட்ட திகட்ட அனுபவித்தவர், கருவுற்ற ஒன்பது மாதமுடிவில் மகனை ஈன்றெடுத்து விட்டு இப்புவியை விட்டு சென்றுவிட்டார், குடும்பம் மொத்தமும் கதிகலங்கி போனது, பிரபாவின் இழப்பு அவர்கள் மூவரையும் உருக்குலைத்தது, தாயில்லாமல் கத்திக் கொண்டிருந்த தன் பேரனின் முகத்தை பார்த்து தான் கொஞ்சம் துக்கத்தை விட்டு வெளிவந்தனர் மூத்தவர்கள் இருவரும்,…
தன் காதல் மனைவியின் இழப்பு ரவிசந்திரனை பெரிதாய் பாதித்தது, ஒரு வருடம் தன் கடமையிலிருந்து விலகியிருந்தார், மகனின் மழலை சிரிப்பு சத்தத்தில் கவரப்பட்டு மனதை தேற்றிக் கொண்டார், மீண்டும் பணியில் இணைந்தார், அடுத்த ஒன்றரை வருடம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது, பெரிய அளவிலான ஆபரேஷன் கேஸ் ஒன்றில் இணைந்தவர், எதிர்பாரா விதமாய் ஒரு குற்றவாளியால் கொல்லப்பட்டார்,..
செவ்வந்தியும் தர்மாவும் துடித்து போயினர், இந்த குழந்தையின் தாய் பிறந்ததும் போய் சேர்ந்துவிட்டாள், இன்னும் விவரம் கூட தெரியவில்லை அதற்குள் இப்படி தந்தையையும் இழந்து நிற்கிறதே என்று சிறுப்பிள்ளையாய் தன் கையிலிருந்த ரிஷியை கண்டு கதறினர், மருமகளின் இழப்பிலிருந்து மீண்டுவரவே அத்தனை கஷ்டட்டவர்கள், மகனின் இழப்பிலிருந்து மீண்டு வர மிகவும் துயப்பட்டு போயினர், தங்கள் பேரனுக்கு தாங்கள் மட்டும் தான் இருக்கிறோம், அவனுக்காகவாவது இனி தங்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று மனதை தேற்றிக் கொண்டனர்,…
சிறு வயதில் அம்மா அப்பா என்று கேட்டு அழுபவன், வயது ஏற ஏற, விவரம் தெரிய தெரிய தாய் தந்தையை பற்றி கேட்கவில்லை, தாத்தா பாட்டி தான் தனதுலகம் என்று வளர ஆரம்பித்தான், தன் தந்தை போட்டோவில் காக்கி உடையில் இருந்ததை பார்த்து அவனுக்கும் தன் தந்தை போலவே போலீஸாகவேண்டும் என்ற கனவு முளைத்தது, தாத்தா பாட்டியிடம் தன் ஆசையை பற்றி கூறினான், முதலில் தன் மகனுக்கு நேர்ந்தது போல் தன் பேரனுக்கும் நேரத்து விடுமோ என்று பயந்து மறுத்தனர், ரிஷி பிடிவாதமாய் நிற்கவும், கடவுள் மேல் பாரதத்தை போட்டுவிட்டு சம்மதம் கூறினர், ரிஷியும் காவல்துறை அதிகாரியனான், தன் தந்தையை போல் நேர்மையாகவும் மிடுக்காவும் தன் பணியை செய்தான், பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து என்கவுன்டர் செய்திருக்கிறான், மேலதிகாரர்களிடமிருந்து பல பாராட்டுகளை பெற்றான், தந்தையை போல் பாராட்டு மெடல் வாங்கி, தன் தந்தையின் மெடல் பக்கத்திலேயே பத்திர படுத்தி வைத்திருக்கிறான்….
செவ்வந்தி ரிஷியின் பெற்றோர்களை பற்றி கூறி முடிக்கவும் கண்கலங்கி விட்டது நித்யாவிற்கு, பாட்டியும் பழைய நினைவுகளில் கண்கலங்கி விட, நித்யா தான் அவருக்கு ஆறுதல் கூறினாள், ஏற்கனவே இவ்வளவு துயரத்தை அனுபவித்தவனுக்கு தன்னாலும் கஷ்டம் வரனுமா? நினைத்து பார்க்கவே மனம் கணத்தது, ஆனால் தன் மனதில் தன்னை போட்டு அரித்து கொண்டிருக்கும் விஷயத்தை அவனிடம் கூறியே ஆகவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள், கருணாவிற்கு அவள் துரோகம் செய்ய நினைக்கவில்லை, அவனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறாள் அல்லவா! அவளால் எப்படி அதை மீற முடியும், பொழுது சாய்ந்தது கூட நினைவில் பதியவில்லை, இரவு உணவு உண்டு விட்டு, தயக்கத்துடன் கணவனின் அறைக்குள் நுழைந்தாள், நித்யாவை எதிர்பார்த்து காத்திருந்த ரிஷி அவளை தன் பார்வையால் ஒரு முறை அளவிட்டவன், அவள் கரத்தை பிடித்து இழுக்க, அவன் மார்பில் மீது மோதி நின்றவள்,… “என்ன பண்ணுறீங்க” என்று அவனிடமிருந்து திமிறி விலகினாள்,…
“ஏன் என்னாச்சு? அதான் நீ கேட்ட டைம் முடிஞ்சு போச்சுல” என்றான்…
“ஆனா… ஆனா நான் சொல்ல வேண்டியதை இன்னும் சொல்லல” என்றாள் திணறிப்போய்,…
“அப்படி என்னத்தடி சொல்ல போற, சீக்கிரம் சொல்லு” என்று அழுத்து கொண்டவன்,… “ஜவ்வு மாதிரி இழுத்துகிட்டு இருந்த நான் கொலைகாரனாகிடுவேன்” என்று மிரட்ட வேறு செய்தான்,…
விழிகளை மூடி மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டு, தன்னை கொஞ்சம் சமன்செய்து கொண்டு அவனை ஏறிட்டவள்,… “நான்… என்னை” அவளுக்கு அதை எப்படி சொல்வதென்ற குழப்பம் இப்போது, அவனுக்கு புரியும்படியாக முதலில் சொல்லலாம் என்று நினைத்தவள்… “நான் ஒருத்தரை விரும்புறேன்” என்று பளிச்சென்று சொல்லிவிட்டாள்,,…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
5
+1
1
+1

