Loading

அத்தியாயம் – 30

 

இரண்டாவது க்ளைமேக்ஸ்..

ரிஷி மனைவியை சமாதானம் படுத்திவிட்டு, கமிஷனர் சொன்ன கேஸை முடிப்பதற்காக, தன் டீமுடன் சேர்ந்து அக்குடோனிற்கு சென்றான், தன் சாமர்த்தியத்தால் தீயவர்களை என்கவுண்டரில் முடித்தவன், திடீரென்று தன் மொத்த அதிகாரிகளும்  எங்கிருந்தோ வந்த புல்லட்டால் கொல்லப்பட்டதில் திகைத்தவன், கயவர்கள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா என தன் கூர்விழிகளால் நோட்டம்விட்டுக்கொண்டிருந்த போது, அமைச்சர் சந்தனப்பெருமாள் ஒய்யாரமாக அவனது முன்னிலையில் வந்து நின்றார், உன்னை கொல்ல போகிறேன் என்று கூறி கொடூரமாக  சிரிக்க, ரிஷி அசரவில்லை, ‘உன்னால் முடிந்ததை செய்’ என்று கூறி, அவரை சொத்தையாக்கியவன், சரியாக கணித்து விட்டான் அவன் பின்னால் நின்ற கார்த்திக் அவனை தாக்க வந்ததை,… கரத்தை பின்கொண்டு சென்று, அவன் கரத்தை பிடித்து முறுக்க, கார்த்திக் தான் பயத்தில் விழி பிதுங்கி போனான்,……

கார்த்திக்கின் மீது ரிஷிக்கு ஏற்பட்ட சந்தேகம் அதிகமாக இல்லையென்றாலும் கொஞ்சம் இருந்து கொண்டே தான் இருந்தது, ஒரு முறை ரிஷியின் நெஞ்சிலேயே குறி வைத்து கார்த்திக் கொல்ல பார்த்த போதே அவன் அவன் எண்ணத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டான், சில நாட்கள் முன்பு ரிஷியின் உடலில் பட வேண்டிய புல்லட்டை கார்த்திக் வாங்கினான் உண்மை தான், ஆனால் அதற்காகவெல்லாம் மொத்தமாக அவனை சந்தேக லிஸ்டிலிருந்து தூக்கி எறிய முடியவில்லை ரிஷியால், கார்த்திக்கிற்கே தெரியாமல் அவனை வாட்ச் பண்ணி கொண்டு தான் இருந்தான், போலீஸ் மூளை இல்லையா, சின்னதாக டவுட் வந்தாலும் அதை அலசி ஆராய்பவன் தன்னுடனே இருக்கும் கார்த்திக்கை மட்டும் எப்படி கவனிக்காமல் இருப்பான்,… கார்திக்கிற்கு தன் மீது வன்மம் இருக்கிறது, அது கண்டிப்பாக அவன் அன்ணனை தான் என்கவுன்டர் செய்ததினால் வந்த கோவம் என்பதையும் சட்டென்று புரிந்து கொண்டான், அவன் கிளம்பும் போது கூட ராமையா அழைத்து விஷயத்தை மொத்தமாக கக்கிவிட்டார், ராமையாவின் குடும்பத்திற்க்கு பல உதவி செய்திருக்கும் ரிஷிக்கு ஒரு ஆபத்து என்றால் அவர் எப்படி பார்த்து கொண்டு அமைதியாக இருப்பார், தன் குடும்பத்தை ரிஷி காப்பார் என்று தெரியும், அதனால் பயத்தையெல்லாம் தூரஎரிந்து விட்டு கார்த்திக் யாருடனோ போனில் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்து இருந்தார்,…

கார்த்திக்கால் தனக்கு ஆபத்து இருக்கு என தெரிந்தும் கார்த்திக் தன்னுடன் வருவதை தடுத்து நிறுத்தவில்லை ரிஷி, மரணம் என்றாலும் நேருக்கு நேராக நின்று துணிச்சலுடன் எதிர்க்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு கார்த்திக் எம்மாத்திரம், பார்த்துக் கொள்ளலாம் என்று தான் வந்தான், அவன் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தன்னை தாக்கலாம் என்று எச்சரிகையாகவும் இருந்தவன், இப்போது கையும் களவுமாக பிடித்தும் விட்டான் அவனை,…

கார்த்திக்கின் முகம் பயத்தில் வெளிறி போனது…. “சார்.. நான் அது” என பயத்தில் அவன் நடுங்கி போய் நின்றான், ரிஷியை கொலை செய்யும் அளவிற்கு எந்தவிற்கு வெறி இருந்ததோ அதே அளவிற்கு பயமும் இருந்தது ரிஷியின் மீது,…

ரிஷி அவனை விழிகள் சிவக்க முறைக்க, அந்த நேரம் சந்தனபெருமாள் ரிஷியை தாக்க வர, தன் நீண்ட கால்களால் அவரது வயிற்றில் ஓங்கி மிதித்து அவரை பறக்க விட்டவன், கார்த்திக்கை வெறி ஏற பார்த்து,…. “எதிரியை கூற விட்டுடலாம், ஆனா துரோகியை, உன்னை மாதிரி நம்பிக்கை துரோகியை சும்மாவே விட கூடாதுடா” என்றவாறு தன் கைமுஷ்டிகளை முறுக்கி அவனது முகத்திலேயே குத்த, கீழே விழுந்தவனின் மூக்கிலிருந்து ரத்தம் பொழபொழவென்று வெளியேறியது,…

அதே நேரம் சந்தனப்பெருமால் ரிஷி தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் தன் துப்பாக்கி கொண்டு ரிஷியை நோக்கி சுட, அவன் அவரை கவனிக்காததால் அவன் நெஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது புல்லட், அந்த நேரம் கருணா எங்கிருந்து வந்தானோ ரிஷியை பிடித்து தன் பக்கம் இழுக்க, அவன் உடலில் பட வேண்டிய குண்டு, வேறொரு பக்கம் சென்று இறங்கியது,…

“டேய்…. இந்த போலீஸ்க்காரனை கொல்ல நான் உனக்கு பணம் தரேனு சொல்லிருக்கேன்டா, அவனை சாக விடாம ஏன்டா காப்பத்தின” என அமைச்சர் கத்த,… அவரை எள்ளலாக பார்த்த கருணா,… “இவரு சாக வேண்டியவரு இல்லடா, நீ தான் சாக வேண்டியவன்” என்றவன் கொஞ்சமும் தாமதிக்காமல் அவரது நெற்றி பொட்டிலேயே துப்பாக்கி குண்டை இறக்க, அவ்விடத்திலேயே சரிந்து உயிரிழந்தார் அமைச்சர் சந்தனப்பெருமாள்,…

“சார் ஏதோ உணர்ச்சி வேகத்துல சுட்டுட்டேன், இதனால உங்களுக்கு எதுவும் பிரட்சனை வராதே” கருணா ரிஷியிடம் வினவ… “அதெல்லாம் ஒரு பிரட்சனையும் இல்ல கருணா, இந்த போதைப்பொருள் கடத்துபவர்களின் தலைவன் அமைச்சர்னு சொல்லி கேஸை ஈஸியா க்ளோஸ் பண்ணிடலாம், அதை நான் பார்த்துகிறேன்” என்றான் அவனது தோளை தட்டி மெல்லிய சிரிப்புடன்….

அவனும் சிரித்தவன்…. “எல்லாம் சரி சார், இவனை என்ன பண்ண போறீங்க, அந்த அமைச்சராவது வெளிப்படையா உங்களை கொல்ல நினைச்சான், ஆனா இவன் கூடவே இருந்து குழி தோண்ட நினைச்சுருக்கான்” கீழே பயத்தில் பம்மிக் கொண்டு கிடந்த கார்த்திக்கை பார்த்து முகத்தில் ரௌத்திரம் தெரிய கூறினான் கருணா…..

“ஆமா கருணா, அவனை போட்ட மாதிரி சட்டுன்னு லாம் இவனை போட்டுட கூடாது, ம்ம்… என்ன பண்ணலாம்” என தாடையை தடவி யோசிக்க…. “யோசிக்க கஷ்டமா இருந்தா என்கிட்ட விட்டுடுங்க சார் இவனை, நான் பார்த்துகிறேன்” கருணா கார்த்திக்கை வன்மத்துடன் பார்த்து கூற,… “அப்டிங்கிற, சரி நீயே பார்த்துக்கோ, நான் கமிஷனர் சார் கிட்ட பேசிட்டு வரேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்,… “சார் சார் தெரியாம பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க சார்” என்று கத்திய கார்த்திக்கின் சொற்கள் ரிஷியின் செவியில் விழவில்லை,…. அதற்கு பிறகு கார்த்திக் கொடூரமான முறையில் ஓரிடத்தில் செத்து கிடக்கிறான் என்ற செய்தி தான் பரவியது அனைவருக்கும்…

மூன்று நாட்களின் பின்,….

நித்யாவின் சீமந்ததத்திற்காக அந்த பிரமாண்ட மண்டபம் முழுக்க அழகாக அலங்கரிக்க பட்டிருக்க, பந்தல் அமைத்து பூக்களால் அலகரிக்கபட்ட வெல்வட் நாற்காலியில் கல்யாண பெண்ணுக்குரிய அலங்காரத்துடன், தாய்மையில் பூரிப்பில் மெருக்கேறி, அழகு கூடி இதழில் புன்னகை உறைந்த நிலையில் மனையில் அமர்ந்திருந்தவளின் இருபுறமும் பஞ்சமுக விளக்கு அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்க, சீர்வரிசைகளும் வைத்து சொந்தபந்தங்களுடன் சேர்ந்து விருந்தாளிகளும் கூடி அந்த சபையே நிறைந்து காணப்பட்டது…..

பாட்டி தான் முதலில் நித்யாவிற்கு மஞ்சள் சந்தனம் பூசி விழாவை ஆரம்பித்து வைத்தார், அவரை தொடர்ந்து செந்தூரம், திவ்யாவை தொடர்ந்து வந்திருந்த அக்கம் பக்கத்து வீட்டினர்களும் நிறைந்த மனதுடன் நித்யாவிற்கு சந்தனம் பூசி, கைகளில் வளையல்கள் பூட்டி ஆசீர்வதித்து சென்றனர், தன் மனைவியின் அழகையும், அவளுக்கு நடக்கும் விழாவையும் விழிகளில் பூரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் ரிஷி, வருணேஷ் தான் பக்கத்தில் நின்று, “என் தங்கச்சியை என் முன்னாடியே இப்படியெல்லாம் பார்க்காதடா” அவனை கேலி செய்கிறேன் பேர்வழி என்று தொல்லை செய்துகொண்டிருக்க, இடம் பொருள் உணர்ந்து நண்பனை முறைப்பதோடு நிறுத்திக் கொண்டான் ரிஷி,…

“எல்லாரும் நலங்கு வச்சாச்சிண்ணா, நீங்க ஏன் இன்னும் நிற்கிறீங்க, உங்க பொண்டாட்டிக்கு நீங்க நலங்கு வைக்கமாட்டீங்களா?” திவ்யா ரிஷியின் அருகில் வந்து கேட்க,… “நானும் நலங்கு வைக்கலாமா மா, இந்த நிக்கிறானே உன் புருஷன் அவன் தான் சொன்னான் ஆம்பிளைங்கள்லாம் நலங்கு வைக்க கூடாது அப்படி இப்படின்னு” அவன் வருணேஷை முறைத்தபடி சொல்ல…. “அதெல்லாம் வைக்கலாம் அண்ணா, அவர் சும்மா சொல்லிருக்காரு” திவ்யா கூறவும், விழிகளில் அனலை தேக்கி வைத்து நண்பனை முறைத்தான் ரிஷி,..

“டேய் டேய் பார்வையால எரிச்சிடாத சத்தியமா எனக்கு தெரியாது” அவன் பாவமாய் விழிக்க,…”உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன் டா” என பல்லிடுகியில் கூறியவன் மனைவியின் அருகில் சென்றான்,…

“புருஷனை திட்டிட்டு போறான், நீ பல்லை காட்டிடிட்டு நிற்கிறியேடி, நீயெல்லாம் தர்மபத்தினியா” வருணேஷ் மனைவியிடம் பாவமாய் கேட்க….”போங்க அத்தான் எப்போவும் உங்களுக்கு கேலி தான்” என சிரித்தபடி சென்றுவிட்டாள் திவ்யா,…

“என்னது கேலியா, இவ இருக்காளே, இவளை நான் அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என தானே புலம்பி கொண்டவன், சபையை கவனிக்க ஆரம்பித்தாள்,…

மேடை ஏறி வந்த ரிஷி விழிகளாலேயே மனைவியை பருகியவன், அவளுக்கு சந்தனம் பூசி, தான் வாங்கி வந்த வளையல்களை போட்டு விட்டு, அவளது நெற்றியில் காதலுடன் ஒரு முத்தத்தையும் வைத்தான், சபையில் அத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை, அச்சமயம் அவனுக்கு என்ன செய்ய தோன்றியதோ அதை செய்தான், நித்யாவிற்கு அவனுடைய தங்க பரிசை விட, அவனுடைய இந்த நெற்றி முத்தம் தான் மிகப்பெரிய பரிசாக இருந்தது…..

சுற்றியிருந்த பெண்கள் சில பேர் வெட்க பட, இன்னும் சில பேர் ரிஷி நித்யாவை கேலி செய்தனர்,…. “மச்சான்,… செம போ, நான் என் போன்ல போட்டோ எடுத்துட்டேனே” என சற்று தொலைவிலிருந்து வருணேஷும் கிண்டல் பண்ண, ரிஷியோ,… “இப்போ தான்டா உருப்படியான ஒரு வேலை பண்ணிருக்க, அந்த போட்டோவ எனக்கு சென்ட் பண்ணி விட்டுடு” என கூறி வருணேஷை வாய் பிளக்க வைத்து விட்டான்,…..

“ஸ்ரீ கண்ணு, ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தத்துல உனக்கும் முதுகு வலி வந்திருக்கும், நீ போடா ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என செவ்வந்தி கூற,… “இல்ல பாட்டி, நித்து இருக்கட்டும், முக்கியமான ஒரு ஆள் வர வேண்டியத்திருக்கு, அப்புறம் அவளை நானே தூக்கிட்டு போய் ரூம்ல விடுறேன்” ரிஷி நித்யாவை பார்த்து கண்ணடித்து கூற, அதில் முகம் சிவந்தவள், பிறகு,… “யார் மித்து, அந்த முக்கியமானவங்க” என புரியாமல் கேட்டாள்…

“அதோ வராரு பாரு அந்த முக்கியமானவனங்க” என ரிஷி பார்வையால் காட்ட, தங்களை நோக்கி வரும் கருணாவை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்த நித்யாவிற்கு, விழிகளும் கலங்கி விட்டது,….

“ஏய் ஸ்ரீ என்னதிது, நல்ல நாள் அதுவுமா இப்படி கண்ணை கசக்கிக்கிட்டு இருக்க” என உரிமையுடன் கண்டித்த கருணா, அவளது கண்ணீரையும் தனது கரங்களால் துடைத்து விட்டான்,…

“கருணா,… நீ… உனக்கு என் மேல உள்ள கோபம் குறைஞ்சிடுச்சா?” அவள் விழிகள் கலங்க கேட்க,… “உன் மேல எனக்கு கோபம்லாம் இல்ல ஸ்ரீ, சின்னதா வருத்தம் தான், உன்னோட அன்பு வாழ்க்கை முழுக்க எனக்கு  கிடைக்கும்னு ஆசைப்பட்டேன், திடீர்னு நீ இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டது தெரிஞ்சதும் கோபம் வந்தது உண்மை தான், அன்னைக்கு உன் புருஷன் தான் உனக்கு முக்கியம்னு சொன்ன, என் மனசு அதிகமா வலிச்சது தான், நீ வேணும்னே என்னை ஏமாத்திட்டனு நினைச்சேன், உன்னை மறுபடியும் சந்திக்க கூடாதுங்கிற முடிவுல உறுதியா இருந்தேன், கொஞ்ச மாசத்துக்கு முன்ன ஹாஸ்ப்பிடல் வாசல்ல நின்ன என்கிட்ட ஓடிவந்து உன் நிலமையை சொல்லி புரிய வைக்க நினைச்ச, நான் புரிஞ்சிக்கல, நீ சொல்றதை கேட்கவும் தயாரா இல்ல, அதுக்கு அப்புறம் எனக்கும் உறுத்தலா தான் இருந்தது, உன்னை பற்றின நினைவுகளை மறக்க நினைச்சேன், அப்போ தான் ஒருவிஷயமா ரிஷி சார் என்னை பார்க்க வந்தாரு, அப்போ உங்களுக்கு நடந்த கல்யாணத்தை பத்தியும் சொன்னாரு, நீ ஆரம்பத்துல விருப்பப்பட்டு அவரை கட்டிக்கல அப்டின்ற விஷயத்தை சொன்னாரு, உன்னோட அண்ணன் வருணேஷ் அவரும் என்னை சந்திச்சு உன் மேல எந்த தப்பு இல்லைனு சொன்னாரு, நான் புரிஞ்சிக்கிட்டேன் ஸ்ரீ, நீ என்னை ஏமாத்தல, அப்படி இருக்கும் போது உன்மேல எப்படி என்னால கோபப்பட முடியும், முன்னாடியே உன்கிட்ட பேச தான் நினைச்சேன், ஆனா நல்ல ஒரு நாள்ல இதை பத்தி உன்கிட்ட சொல்லலாம்னு தான் இப்போ வந்தேன்” என நிறுத்தியவன்,… “ஸ்ரீ,… எனக்கு உன்னோட அன்பு பாசம் நிச்சயம் வேணும், என்னோட தாயா, சகோதரியா, தோழியா எனக்கு நீ எப்போதும் சப்போர்ட்டா இருக்கணும், நான் உன்னை பார்க்க தினமும் வருவேன், கண்டிப்பா என்னை யாரும் தடுக்க முடியாது உன்னை நான் பார்க்க வரதை” என கடைசி வாக்கியத்தை கூறும் போது மட்டும் கருணா ரிஷியை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூற, ரிஷியும் அதனை கண்டு கொண்டான், உதட்டுக்குள் சிரித்து கொண்டானே தவிர மறுத்து எதுவும் பேசவில்லை,….

“உன்னை யாரும் தடுக்க மாட்டாங்க கருணா, அது ஏன் என் நண்பன் ரிஷியால கூட தடுக்க முடியாது, அவன் ஏதாவது தடங்கல் பண்ணான்னு வையேன், நான் பார்த்துகிறேன் அவனை” என வருணேஷ் வாலண்டியராக வந்து தலையை விட… “ஓஹ்… அப்படியா” என்றபடி அவன் பக்கம் திரும்பினான் ரிஷி, அவன் விழிகளில் கொலைவெறியை கண்டவன், நாசுக்காக தள்ளி நின்று கொண்டு,… “இல்ல, இல்லடா மச்சான், அது நான் சும்மா, கருணாக்காக சொன்னேன்” என சமாளித்துவிட்டு,… ‘ஐயயோ முதலை வாயில நானே போய் தலை கொடுத்து மாட்டிக்கிட்டேனா’ என தன்னையே கூர்விழிகள் மாறாமல் நோக்கும் நண்பனை பார்த்து முப்பத்தியிரண்டு பற்கள் தெரிய, ஈஈ என இழித்து வைத்தான் வருணேஷ்,…

“அத்தான்,… போச்சு அண்ணா உங்களை இன்னைக்கு பிரிச்சு மேய போறாரு” அவனின் மனைவி திவ்யா வேறு அவனது காதருகில் வந்து கூற,… “ஏன்டி நீ வேற பயமுறுத்தற, நீ சும்மா சும்மா என்னை சீண்டிக்கிட்டே இருக்க, உன்னை கவனிக்கிற நேரத்துல நல்லா கவனிக்கிறேன் பாரு” என அவன் கூற,… “ச்சீ,.. போங்க அத்தான்” என வெட்கம் கொண்டு அவனது மூடையே மாற்றிவிட்டாள் அவனின் மனையாள்…

நித்யாவின் மனதும் கருணாவின் இவ்வார்தைகளால் நிறைந்து போனது, கருணா அவளை புரிந்து கொண்டதால் அவள் மனதில் இருந்த  ஒரே ஒரு கவலையும் நீங்கி மனம் சந்தோசமாய் குழந்தையின் வருகையை மட்டும் எதிர்பார்த்து காத்திருந்தது, சீமந்தம் முடிந்த இரண்டாம் நாளே, நித்யாவிற்கு சின்னதாக வலி எடுக்க, ரிஷி உடனடியாக அழைத்து வந்துவிட்டான்  மருத்துவமனைக்கு…

மருத்துவமனை வந்த இரண்டு மணி நேரத்திலேயே வலி ஊசியின் உபயத்தால் அதிகமான வலியும் வந்து விட, சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெண்குழந்தையை ஈன்றெடுத்தாள் நித்யா, குழந்தை இப்புவிக்கு வரும் வரையில் நித்யா பட்ட கஷ்டமும் வலியில் அவள் அலறிய அலறலிலும் ரிஷி தான் ஒருகட்டத்திக்கு முடியாமல், கண்ணீரே விட்டுவிட்டான், அவனுக்கு ஆறுதலாக அருகிலேயே இருந்தது வருணேஷ் தான், குடும்ப மொத்தமும் மருத்துவமனையில் தான் இருந்தது நித்து மித்துவின் வாரிசை காண்பதகாக,…..

செவிலிபெண்ணும் துணியில் சுற்றி கொண்டு வந்தார் அந்த ரோஜா மொட்டை, ரிஷி தான் முதலில் வாங்கினான் தன் மகவை, அவனது ஜாடையையும், அவனது மனைவியின் ஜாடையையும் உரித்து வைத்து பேரழகோடு அழகாய் உறங்கி கொண்டிருந்தாள் அவனின் செல்வமகள்,… ஆனந்த கண்ணீருடன் மென்மையாக தன் முதல் முத்தத்தை மகளின் நெற்றியில் பதித்தான், வீட்டில் அனைவரும் குழந்தையை வாங்கி ஆசை தீர பார்த்தனர், இதற்கிடையில் ஒருமுறை மனைவி நலமாக இருக்கிறாளா என, சென்று பார்த்துவிட்டு வந்தான் ரிஷி,.. ஒரு வேலையாக பக்கத்து ஊர் வரைக்கும் சென்றிருந்த கருணா, குழந்தை பிறந்த விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்து விட்டான் வேலையை கூட பாதியில் விட்டுவிட்டு, ரவுடிசம் பண்ணும் வேலையையெல்லாம் அவன் எப்போதோ விட்டுவிட்டான், ரிஷியின் உதவியுடன் அவனுக்கு ஏற்ற வேலையை தற்போது செய்ய ஆரம்பித்திருந்தான்….

“கருணா வாங்கிக்கோ” சற்று தொலைவிலேயே குழந்தையை கண்டு கொண்ட கருணா, விழிகளில் நீருடன் நின்றுவிட்டான் அவ்விடத்திலேயே, ரிஷி தான் அவனருகில் வந்து குழந்தையை அவனிடம் நீட்டினான், ஜாக்கிரதையாக வாங்கி கொண்டான் கருணா, அவனுக்கு அவனின் தங்கையின் நியாபகம் வந்துவிட்டது, இது போல் பிஞ்சு குழந்தையாய் இருக்கும் போது அவன் தங்கையை எத்தனை முறை தூக்கியிருப்பான் கொஞ்சிருப்பான், இக்குழந்தையை பார்த்ததும் கடந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணீரை சுரக்க செய்தது, குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டான், அவனுக்கு அதிகமாக அழுகை வந்தது, அழுதான் குலுக்கி அழுதான் தன் தங்கையை நினைத்து,…

பாட்டி, தாத்தா, செந்தூரம் என பெரியவர்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அவனுக்கு ஆறுதல் கூறினர், அவனை தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே தற்போது நினைக்க ஆரம்பித்திருந்தனர்…..

சில வருடங்களுக்கு பிறகு,….

“நித்து,… ப்ளீஸ் ப்ளீஸ்டி, நான் சொல்றதை கொஞ்சம் கேளேன், இப்ப விட்டா அப்புறம் ரொம்ப கஷ்டம்டி” என நித்யாவிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான் ரிஷி,….

“போங்க மித்து, என்னாலலாம் முடியாது, எப்போ வேணும்னாலும் உங்க பொண்ணு வரலாம், வந்தான்னா கதவை உடைக்காத குறையா தட்டுவா, போதா குறைக்கு கதவ லாக் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் என்ன பண்ணீங்கன்னு கேள்விக்கு மேல கேள்வி கேட்ப்பா அதுவும் எல்லார் முன்னாடியும், மானம் போகும்” என புலம்பினாள் நித்யா,…

“மானமாடி முக்கியம், மனுஷனோட ஃபீலிங்ஸ் தான்டி முக்கியம், என்னை பாருடி என் முகத்தை பாருடி, என்னை பார்த்தா உன் பொண்ணுக்கு தான் பாவமா இல்ல, உனக்கும்மாடி” என அவன் அழுது விடாத குறையாக கெஞ்ச,.. அவனது முகத்தை பார்த்தவள்,… “பாவமா தான் இருக்கு, ஆனா” என ஏதோ சொல்லி சமாளிக்கும் முன்னே, அவளது பின்னங்கழுத்தை பற்றி இழுத்து அவளது இதழை சிறை பிடித்தவன், அவளுடன் சேர்ந்து மெத்தையில் விழ, தடுக்கவந்தவளும் அவனது முத்தத்தில் கட்டுண்டு, அவனுக்கு ஒத்துழைத்து மொத்தமாய் அவனுள் மூழ்கவிருந்த சமயம்,…. சரியாக “தட் தட்” என்று கதவு தட்டப்பட்டது,…

சிரமபட்டு அவனது இதழில் மாட்டிக்கொண்டிருந்த தன் இதழ்களை வழுக்கட்டாயமாக பிரித்தெடுத்தவள்,… “மித்து,… ப்ளீஸ் போதும், கதவை தட்டுறாங்க, நிச்சயம் உங்க பொண்ணா தான் இருக்கும் நகருங்க” என தன் மீதிருந்தவனை அவள் விலக்க முயற்சிக்க,… “அவளை தான் கருணா கூட அனுப்பி வச்சேனே, இவ்ளோ சீக்கிரம் வந்துட்டாளா என்ன” என அவன் தலையில் கை வைக்க,… “முதல்ல கதவை திறந்துட்டு அப்புறம் பேசிக்கலாம்” என அவனிடமிருந்து விலகி, தன் புடவையை சரி செய்து கொண்டவள், போய் கதவை திறக்க,…. “சர்பிரைஸ்” என்றவாறு வருணேஷ் தான் நின்று கொண்டிருந்தான் பளிச்சென்று பற்கள் தெரிய இழித்தபடி,….

“அண்ணா நீ தானா?” நித்யாவே கொஞ்சம் அப்சட் ஆகிவிட,… “ஆமா நான் தான், ஏன் ஸ்ரீ, என்னை நீ எதிர்பார்க்கலயா?” என்றான் வருணேஷ்…

“அப்படியெல்லாம் இல்லண்ணா,.. உன்னையும் அண்ணியையும் அம்மாவையும் பாரக்க வரணும்னு தான் இருந்தேன், நீயே வந்துட்டியா அதான் அப்படி கேட்டேன்” என்று கூறி இவள் சமாளிக்க, நண்பனின் குரல் கேட்கவும் வேகமாக வந்த ரிஷி வருணேஷை கண்டதும் கொதித்து போய் விட்டான்,…

“டேய் மச்சான் எப்படிடா இருக்க” என கேட்டபடி வருணேஷ் ரிஷியை வந்து அணைத்துக் கொள்ள, அவனை பிடித்து தள்ளாத குறையாக தள்ளியவன்,… “நேத்து தானேடா பார்த்து பேசினோம், இன்னைக்கு எப்படி இருக்கன்னு கேட்கிற” என்றான் தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் அனலை அணைக்க முயன்றவாறு,…

“ஆமால்ல, அது என்னமோ தெரியலடா, உன்னை பார்க்கணும் போல இருந்ததா அதான் ஓடோடி வந்துட்டேன், ஓடோடி வந்துட்டேன்” என்று ஆக்டிங்குடன் உல்லாசமாய் கூறியவன், அவனது அனல் பார்வை கண்டு தடுமாறியவனாய்,… ‘என்ன முறைக்கிறான், தப்பான நேரத்துல எதுவும் வந்துட்டோமோ’ என தாடையில் விரல்கள் தட்டி யோசித்தான்,…

“சரிங்கண்ணா நீங்க பேசிட்டு இருங்க, நான் சாப்பிட எதாச்சும் எடுத்துட்டு வரேன்” என நித்யா நகர்ந்து விட, நண்பனை பார்வையாலேயே பொசுக்கியவன்,… “இப்போ ஹேப்பியாடா?” என்றான் பல்லிடுக்கில்..

“யாடா ஐம் வெரி ஹேப்பி, என் மச்சானை பார்த்தது ஐம் வெரி வெரி ஹேப்பி” என நிலமை புரியாமல் அவன் பேச,… அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை ரிஷியால், அவனது பின்னங்கழுத்தை பற்றி உள்ளே இழுத்தவன், அவனை பிச்சி பிசைந்து எடுக்க, வடிவேலுவின் நிலை தான் வருணேஷிற்க்கு,…

“ஐடியா பண்ணி என் பொண்ணை கருணாவை செட் பண்ணி வெளியே அனுப்பி வச்சு என் பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்கலாம்னு பார்த்தா, எப்படிடா கரெக்ட்டா மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்த” வருணேஷை பிரிச்சு மேய்ந்த பின் அவனது கையையும் காலையும் கட்டி அவனை மெத்தையில் புரட்டி போட்டிருந்த ரிஷி, வருணேஷின் உள்ளங்காலில் குச்சியால் சுரண்டி விட, கூச்சம் தாங்க முடியாமல் அல்லல் பட்டு போனான் வருணேஷ்….

“என் பொண்டாட்டியை சின்னதா ஹக் பண்ணி எத்தனை நாளாச்சு தெரியுமாடா? எவ்வளவு கனவோட இருந்தேன், எல்லாத்தையும் கெடுத்திட்டியேடா, ராஸ்கல் உன்னை இன்னைக்கு சும்மா விட மாட்டேன்டா” என அவனது காதிலும் குச்சியை விட,… “டேய் வேணாம்டா பாவம் இந்த பச்சை பிள்ளையை விட்டுடுடா, விஷயம் இந்த மாதிரினு தெரிஞ்சிருந்தா நான் உன் வீட்டு பக்கமே வந்திருக்க மாட்டேன்டா, வேணும்னா என் மருமகளை என்கூட கூட்டிட்டு போய் வச்சுகிறேன்டா, நீ உன் பொண்டாட்டி கூட என்ஜாய் பண்ணுடா, உன்னோட இந்த பனிஷ்மெண்ட் ரொம்ப கொடூரமா இருக்குடா” என கூச்சத்தை தாங்க இயலாமல் சிரித்து விழுந்தபடி கூறினான் வருணேஷ்,…

அவனது சொல்லில் தன் செயலை நிறுத்திய ரிஷி,… “ஐடியா நல்லா தான் இருக்கு, ஆனா என் பொண்ணை பிரிஞ்சு என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது” என கூறி சோர்வுடன் அவன் மெத்தையில் அமர்ந்து விட,… “ஓஹோ…. அப்போ பொண்டாட்டிகிட்டயும் ரொமான்ஸ் பண்ணனும், பொண்ணையும் பிரிய கூடாது ஹ்ம்ம்… அப்போ கஷ்டம் தான்” என புலம்பிய வருணேஷ், “டேய் முதல்ல கட்டை அவிழ்த்து விடுடா, வலிக்குது” என பாவமாக கூற, “முடியாது போடா, நீ இப்படியே கிட, நான் உன்னை அப்புறம் வந்து பார்க்கிறேன்” என்றவன் அவன் கத்த கத்த கேட்காமல் வெளியேறிவிட்டான்…..

“அத்த, திவ்யா நீங்க எப்போ வந்தீங்க” என கேட்டபடி அவர்களினருகில் வந்தமர்ந்த ரிஷி,… “தனு குட்டி வாடா செல்லம்” என கீழே உருண்டு விளையாடி கொண்டிருந்த வருணேஷ் மற்றும் திவ்யாவின் தவபுதல்வனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்,…

“இப்போ தான்ண்ணா வந்தோம், அவர் வந்தாரே உங்களை பார்க்க, எங்கே ஆளையே காணோம்” திவ்யா கணவனை பற்றி விசாரிக்க,… “அவனா,.. அவன் மேல ரூம்ல ஜாலியா படுத்திருக்கான்மா, நீ போய் பாரு” என்று அனுப்பி வைத்தவன், மாமியாருடன் கதைக்க ஆரம்பித்து விட்டான்,….

“தனு குட்டி,… தாத்தா கிட்ட வாடா செல்லம்” என தனுஷை வாங்கி கொண்ட தர்மா,… “எப்பா ரிஷி, எப்போ தனு குட்டி மாதிரி
ஒரு பேர பிள்ளையை எங்க கண்ணுல காட்ட போற” என்றார்,…

“எனக்கும் கூட ஆசையா தான் இருக்கு, நம்ம பேத்திக்கும் ஐந்து வயசு முடிய போகுது இல்லயா, காலாகாலத்துக்கும் இன்னொரு பிள்ளைய பெத்தா தானே நல்லது” என்றார் செவ்வந்தி,….

“நானும் கேட்கணும்னே இருந்தேன், ஸ்ரீமா ஏன் சத்தம் காட்டாம இருக்க, தள்ளி போடலாம், அதுக்காக ரொம்ப தள்ளி போட்டா அப்புறம் கஷ்டமா போயிடும், அதனால சீக்கிரம் நல்ல செய்தியை சொல்ற வழிய பாரு” என செந்தூரம் சொல்ல, ரிஷி நித்யாவையும் நித்யா ரிஷியையும் ரகசியமாய் பார்த்து, விழிகளாலேயே பேசி சிரித்து கொண்டனர்….

இங்கு கணவனை தேடி வந்த திவ்யா, அவன் இருக்கும் நிலை கண்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள், வருணேஷிற்கோ அவளது கிண்டல் சிரிப்பு சினத்தை மூட்ட,.. “ஏய் கிளி மூக்கி வந்தேன்னு வையேன்” என எகிற,… “அட வாங்களே, முடிஞ்சா பக்கத்துல
வாங்களேன் பாப்போம்” என சவால் விட, அவனால் தான் பக்கத்தில் போக முடியாதே, அதனால்… “சும்மா தமாஸூடி செல்லம், சரி வா வா வந்து அத்தானோட கட்டுகளை அழித்து விடு பாக்கலாம்” என செல்லம் கொஞ்ச,… “இல்ல இல்ல அத்தான், அப்படியெல்லாம் டக்குனு நான் அவிழ்த்து விட்டுட மாட்டேன், கொஞ்ச நேரம் உங்க கூட விளையாடிட்டு அப்புறம் அவிழ்த்து விடுறேன் சரியா” என கூற,.. “என்னது என்னை வச்சு விளையாட போறியா, ஏய் வேணாம் டி அத்தான் பாவம்டி விட்டுடுடி” என அவன் கெஞ்ச, அவள் காதில் எங்கே அதெல்லாம் விழுந்தது, அவனருகில் அமர்ந்து அவனுக்கு கிச்சு கிச்சுமூட்டிவிட்டபடி விளையாட ஆரம்பித்தாள், வருணேஷ் தான் மனைவியின் கையில் பொம்மையாய் மாறி போய், படாதபாடுபட்டு போனான்,…

“அப்பாஆஆஆ” என வீட்டினுள் வந்ததுமே கத்திக்கொண்டு ரிஷியிடம் ஓடி வந்த மகளை, வாரியணைத்து தூக்கிக்கொண்டவன்,… “என்னடா செல்லம் உனக்கு பிடிச்ச பிஸ்ஸா ஃபிரெஞ்சு ஃபிரை, ஐஸ்கிரீம் எல்லாத்தையும் ஆசை தீர சாப்ட்டியா?” என்றான்…

“ஹாங் அப்பா, நல்லா வயிறு நிரம்ப சாப்பிட்டேன், கருணா எனக்கு போதும் போதுங்கிற அளவுக்கு வாங்கி தந்துச்சு” என அழகாக நயனமோடு கூறினாள் அவனின் ஆசை மகள் மித்ரஸ்ரீ…. கருணா அவளுக்கு வைத்த பெயர், அவளது தாய் தந்தையின் பெயரை இணைத்து, இந்த பெயர் தான் வைக்க வேண்டும் என ஒத்தக்காலில் நின்று வைத்துவிட்டான்,…

இப்போது வருணேஷோ அல்லது கருணாவோ ஸ்ரீ என அழைத்தால் நித்யஸ்ரீயும் மித்ரஸ்ரீயும் ஒன்றாக வந்து நிற்பார்கள், நித்யா மித்து என தன் கணவனை அழைத்தால் ரிஷியுடன் சேர்ந்து மித்ரஸ்ரீயின் வந்து நிற்கவே, அவ்வீட்டில் தினமும் சிரிப்பும் கலட்டாவுமாகவே தொடரும் இதனால்…..

அதனாலேயே இப்போதெல்லாம் மித்ரஸ்ரீயை மிரு என அழைக்க தொடங்கியிருந்தனர் அனைவரும்,…

கருணா தற்போது நல்ல ஒரு வேலையில் இருக்கிறான், கை நிறைய சம்பாதிக்கிறான், ஒரு வீடு வாடகை எடுத்து தங்கியிருக்கிறான், இரவு தூங்க மட்டும் அங்கு செல்வான் அவ்வளளே, மற்ற நேரங்களிலெல்லாம் ரிஷியின் வீடு தான், சாப்பாடும் இங்கு தான் சாப்பிட வேண்டும் என அவனுக்கு அன்பு கட்டளையும் இட்டிருந்தனர், அவன் எதற்கும் மறுக்கவில்லை, புது உறவுகள் அவனுக்கு கிடைத்திருக்கு, அவர்களிடமிருந்து வெளிப்படும் அன்பு அவனுக்கு பொக்கிஷம் போன்றது, அதனால் கொஞ்சமும் மறுப்பு தெரிவிக்காமல் அனைத்தையும் சரி என்று ஏற்றுக் கொள்வான்,…

“மிரு தங்கம், கருணா அங்கிளை கருணான்னு பேர் சொல்லி கூப்பிட கூடாதுனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், அப்பா சொல்லை கேட்க மாட்டாளா இந்த பார்பி டால்” ரிஷி கொஞ்சலுடன் கேட்க,… “என்னோட மிரு குட்டி என்னை பேர் சொல்லி கூப்பிடுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு, நான் தான் அவளை அப்படி கூப்பிட சொன்னேன்” என்றவாறு கருணா ரிஷியிடமிருந்து வாங்கி கொண்டாள் குழந்தையை….

“கருணா,… இப்போவே அவளை மாத்தினா தான், பழகிருச்சின்னா மாத்துறது ரொம்ப கஷ்டம்” ரிஷி கூற,… “ஏன் மாத்தனும்னு கேட்கிறேன், என் மிரு என்னை பேர் சொல்லி தான் கூப்பிடுவா, என்ன மிரு” அவன் குழந்தையிடம் திரும்பி கேட்க,… “நீ சொன்னா சரிதான் கருணா” என்றாள் மித்ரஸ்ரீ

“கருணா,… இப்போ அவ உன்னை பேர் சொல்லி கூப்பிடுறதுல பிரட்சனை இல்லாம இருக்கலாம், ஆனா நாளைக்கு பின்ன உனக்கு கல்யாணமாகி  பொண்டாட்டின்னு ஒருத்தங்க வந்துட்டாங்கனு வையேன், அவங்களுக்கு இது மரியாதை குறைவு தானே, அவங்க புருஷனை சின்ன வாண்டு பேர் சொல்லி கூப்பிட்டா ஒருமாதிரியா தானே ஃபீல் பண்ணுவாங்க” என்றாள் நித்யா,…

“என் வாழ்க்கையில கல்யாணமும் நடக்காது, பொண்டாட்டிங்கிற யாரும் வரவும் கூடாது, அப்படியே வந்தாலும் என்னோட மிரு என்னை பேர் சொல்லி கூப்பிடறத தடுக்கவும் முடியாது” என்றான் திட்டவட்டமாக….

“என்ன கருணா இப்படி சொல்லிட்ட, அடுத்த வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு நாங்கள்லாம் முடிவு எடுத்து வைத்திருக்கோம்” என்ற தர்மாவை தொடர்ந்து,… “ஆமா கருணா,… பொண்ணு பார்க்கிற வேலையை கூட எப்போவோ ஆரம்பிச்சாச்சு, நல்ல குணமுள்ள உனக்கேத்த பொண்ணு கிடைச்சதும் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் தான்” என்றார் செவ்வந்தி,…

“பாட்டி தாத்தா உங்க பேச்சை எதிர்க்கிறேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க, தயவு செஞ்சு என் கல்யாண விஷயத்தை இதோடு விட்டுடுங்க, சத்தியமா எனக்கு இதுல துளியும் விருப்பம் இல்லை” என்ற கருணா,… “மிரு குட்டி, நான் உன்னை நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என கூறிவிட்டு வீட்டினர்களிடமும் விடைபெற்று தனது வீட்டிற்கு புறப்பட்டுவிட்டான்…..

கருணா தன் மனதிற்கு பிடித்த பெண்ணை  கண்டுகொண்டு, இவள் தான் தனக்கு மனைவி என உணர்ந்து அவளுடன் திருமண பந்தத்தில் இணைவானா? அல்லது அவன் வாழ்க்கை திருமணம் ஆகாமலேயே முடிந்து விடுமா?

முற்றும்…..

_____________

பிரண்ட்ஸ் கதை முடிந்து விட்டது, நிறையபேருக்கு முதல் முடிவு ஏத்துக்க முடியாததா இருக்கும், அவங்கள்லாம் இந்த இரண்டாவது முடிவு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லிட்டு போங்க, இந்த கதைக்கு இந்த ரெண்டு முடிவுல எது கரெக்ட்டா இருக்கும் அப்டிங்கிறதையும் சொன்னா ரொம்ப நல்லா இருக்கும், அப்புறம் கடைசியில் ஏன் கருணாவின் வாழ்க்கையை பற்றின கேள்வி குறி அப்படின்னு கேட்டா, இந்த கதையிலேயே கருணாவோட கதையையும் கன்டிநியூ பண்ணா கதை ரொம்ப பெருசா போயிடும், அதோட நாயகன் நாயகி யாரு அப்டின்ற சந்தேகமும் வந்துடும், அதனால நீங்க விருப்பட்டா கருணாவிற்காக தனியா ஒரு கதையை ஆரம்பிக்கலாம், ஆனா இப்போ இல்ல, கொஞ்ச நாள் அப்புறம், இந்த கதை எப்படி இருந்தது என்ன நிறை என்ன குறை அப்டிங்கிறதையும் எப்போவும் போல சொல்லிட்டு போங்க, எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் அனைத்து தோழர் மற்றும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்,…

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்