விழியால் தொட்ட அழகே – 29

Loading

அத்தியாயம் – 29

 

குறிப்பு: இந்த அப்டேட்ல ரிஷி நித்யா இறந்துடுவாங்க😭😭 அதனால விருப்பம் உள்ளவங்க மட்டும் படிங்க, இது நான் ஏற்கனவே எழுதி முடித்த கதை, பல வாசகர்களின் வேண்டுகோளுக்காக இரண்டு கிளைமேக்ஸ் போட்டிருந்தேன், இது ஃபர்ஸ்ட் கிளைமேக்ஸ், நாளைக்கு செக்கேன்ட் கிளைமேக்ஸ் போடுறேன்,….

_________

“ப்ளீஸ் ஸ்ரீ,… தயவு செஞ்சு வா ஹாஸ்ப்பிட்டல் போலாம், குழந்தை உள்ளே இருக்கு” அவன் பதற,… “என்னால எழ முடியல கருணா,… என் குழந்தையை காப்பாத்து, என் மித்து வேணும் எனக்கு” அவள் வலியில் பிதற்ற, என்ன செய்வதென்று தெரியாமல், தாங்கள் வந்த வண்டியிலும் இவள் இருக்கும் நிலைக்கு அழைத்து செல்லமுடியாது என்றும் புரிந்தவன், ஆம்புலன்ஸை வர வழைப்பதற்காக போன் செய்ய, அந்தோ பரிதாபம், அவ்விடத்தில் சிக்னல் கிடைக்காமல் போனது,…

நேரம் கடக்க கடக்க, அவளது கதறலோடு சேர்த்து குருதியும் அதிகமாக வெளியேறியது,…. “நான் வர வேணாம்னு சொன்னேன், கேட்டியா நீ, இப்போ பாரு” என்றவனுக்கு கண்களும் கலங்கி விட…. “என் குழந்தையை காப்பாத்து கருணா, என் மித்து, என் மித்து கிட்ட என் குழந்தையை நான் பத்திரமா ஒப்படைக்கனும்” அவள் வலியில் அலறிக் கொண்டே பேச, ‘கடவுளே இப்போ நான் என்ன பண்ணுறது’ என்று புலம்பியவனுக்கு உதவியாக சினிமா படத்தில் பிரசவம் பார்த்த நிகழ்வெல்லாம் கண்முன் தோன்ற, “ஸ்ரீ…. எனக்கு நீ ஒரு தாய் மாதிரி, என்னை பெத்த தாய் கிட்டருந்து பெறாத அன்பை உன்கிட்டருந்து பெறனும்னு ரொம்ப ஆசை பட்டேன், அதான் உன்னை என்கூடவே வச்சுக்க நினைச்சேன், மத்தபடி உன்கூட ஒன்னு சேர்ந்து வாழனும் அப்டின்ற ஆசையெல்லாம் இல்லை, அதையும் விட முக்கியமா எனக்கு உன்மேலே எந்தவித கோபமும் இல்ல” என்ற அவனது வார்த்தையை கேட்டு, அவளது மனம் லேசானது, இத்தனை நாட்கள் அவனை கஷ்டப்படுத்திவிட்டோம், ஏமாற்றிவிட்டோம், அவன் தன்னை மன்னிக்க மாட்டானா என்று ஏங்கி போயிருந்தவளுக்கு அக்கணம் மனம் நிம்மதி கொண்டது, பிறகு அவனே… “ஸ்ரீ… இப்போ நான் தான் ஏதாவது பண்ணியாகனும், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்ன செய்ய முடியுமோ செய்றேன், இப்போ பாப்பாவோட உயிரோட சேர்த்து உன்னோட உயிரும்  ரொம்ப முக்கியம், தயவு செஞ்சு கோஆபரேட் பண்ணு,” என்றவன், அவளது புடவையை இலகுவாக்கி அவளை புஷ் பண்ண சொல்லி, குழந்தை வெளிவருகிறதா என்று பரிசோதித்தான், கடவுள் புண்ணியத்தில் குழந்தையின் பாதி தலை வெளியே வந்திருக்க, நித்யாவின் முயற்சியினாலும், கருணாவின் செயலினாலும் நித்யாவின் மிக பெரிய அலறலை பின்தொடர்ந்து, முழுதாக குழந்தை வெளிவந்தது பீறிட்ட அழுகையுடன்,….

தாயின் ரத்தத்தில் குளித்த அந்த சின்னஞ்சிறு உயிர் இப்போது கருணாவின் கையில் இருந்தது, அவளது உடையை மட்டும் சரிசெய்தவனுக்கு அதற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை, நித்யாவும் பாதிமயக்கத்தில் கிடந்தாள், குழந்தை நிறுத்தாமல் அழுதது, குழந்தையின் தாய்க்கு சிகிச்சை செய்யாமல் ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது,….

இது ஒரு பக்கம் நிகழ, இன்னொரு பக்கம் ரிஷியை தூக்கிகொண்டு வந்தனர் கருணாவின் ஆட்கள், மிடுக்கான காக்கி உடையில் வலம் வருபவன் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் நித்யாவின் அருகிலேயே கிடத்தபட்டான்,… கருணா ரிஷியை பயந்த விழிகளுடன் பார்த்து விட்டு, தன் ஆட்களின் முகத்தையும் பார்க்க… “உயிர் ஊசலாடிகிட்டு இருக்குண்ணா” என்ற ஒருவன் ஓடிசென்று வண்டியிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து வந்து ரிஷியின் முகத்தில் தெளித்தான்,…

கண்விழித்தான் கொஞ்சம் கொஞ்சமாக, அவனது குழந்தையின் அழுகை சத்தமும், மனைவியின் வாசமும் குத்துயிரும் கொலையுயிருமாக கிடப்பவனை கண்விழிக்க வைத்தது, அதே நேரம் நித்யாவும் கண்விழித்தாள், தன் அருகிலிருந்த கணவனை அழுக கூட ஜீவனற்று பார்த்தாள், ரத்தம் அதிகமாக வெளியேறிய காரணத்தினால் அவளும் மரணத்தின் பிடியில் இருந்தாள், மனைவியை அணைக்க கரங்களை தூக்கினான் முடியவில்லை, அப்படியே மனைவியின் நெஞ்சில் தலை வைத்து சாய்ந்து கொண்டான், தன் கரங்களால் அவனை நெஞ்சோடு இறுக்கி கொண்டாள் நித்யா, இருவரும் ஒருவாருஏகாந்த நிலையில் இருக்க, அந்த கணம் குழந்தை அழுது அவர்களின் எண்ணத்தை கலைத்தது, இருவரும் ஒன்றாக தங்கள் மகவின் முகத்தை பார்த்தனர், பெண்குழந்தை இருவரின் ஜாடையும் கலந்து இருந்தாள், இருவரின் இதழ்களும் தங்கள் மகளை பார்த்து புன்னகைத்த அடுத்த வினாடி இருவரின் உயிரும் ஒன்றாகவே ஒரே நேரத்தில் அவர்களின் உடலை விட்டு சென்றது,…..

கண்கள் திறந்து இதழில் புன்னகை உறைந்த  நிலையில் தன் தாயும் தந்தையும் இறந்து போய் கிடப்பதை அந்த குழந்தையும் உணர்ந்தது போல சத்தமாக வீறிட்டு அழுதது, அவர்களின் இறப்பு அந்த வானத்திற்கே பொறுக்காமல் மேகம் கருத்து மழையாய் கண்ணீரை பொழிய, சுற்றியிருந்த கருணாவின் ஆட்கள் கூட கலங்கி விட்டனர், கருணா பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தான், குழந்தையின் மேனியிலுள்ள ரத்தத்தை மழைநீர் சுத்தப்படுத்தியது, குழந்தையின் அழுகையில் சுயநினைவுக்கு வந்தவன், அதனை தன் மார்போடு அணைத்துக் கொண்டு,… “உனக்கு நான் இருக்கேன்டா” என்று அழும் குழந்தையை சமாதானம் படுத்த அவனது குரலை கேட்டு குழந்தையும் அழுகையை நிறுத்தியது…..

சற்று நிமிடத்தில் எல்லாம் காவல்துறை வண்டியின் ஹாரன் சத்தத்தை தொடர்ந்து, இரு காவல்துறை வண்டிகளோடு சேர்த்து ஆம்புலன்ஸும் அக்குடோனினுள் நுழைந்தது… என்கவுண்டருக்காக கமிஷனர் ஆறு அதிகாரிகளை அனுப்பிருந்த நிலையில், அவர்களிடமிருந்து எந்தவித தகவலும் வராமல் போனதில், சந்தேகமுற்றவர், அவர்கள் என்ன ஆனார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என பரிசோதித்து அழைத்து வருவதற்காக அனுப்பி வைத்து விட்டார் காவல்அதிகாரிகளை, நிச்சயம் அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்க கூடும் என்பதாலேயே ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது,…

வந்தவர்கள்,… தங்களின் ஆறு அதிகாரிகளும் உயிரிழந்திருக்க கூடும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, கமிஷனரும் தகவல் கொடுக்கப்பட்டு ஸ்பாட்டிற்கு வந்து விட, ரிஷியும் கூடவே அவனது மனைவியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து விட்டார், ரிஷி அவரின் ஃபேவரட் பர்ஷன், எந்த ஒரு ஆபத்தான முடிக்க முடியாத கேஸ் என்றாலும் தன் திறமையால் சட்டென்று முடித்து கொடுப்பவன், பர்சனலாகவே அவனை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவனது இறப்பு அவரை ரொம்பவே பாதித்தது, 

அவர்கள் வந்த சமயம் ஸ்பாட்டில் கருணாவும் அவனது ஆட்களும் இருந்தமையால் முதலில் அவர்களை சந்தேகப்பட்டு விசாரித்தனர், ஆனால் அவர்கள் இதை செய்யவில்லை என்பதை சற்று நேர விசாரிப்பிலேயே அறிந்து கொண்டனர், முதல் வேலையாக குழந்தைக்கு ஆம்புலன்ஸிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது, கருணா குழந்தையை நர்ஸிடம் கொடுக்க கூட மறுத்தான், அவன் அருகிலேயே வைத்து தான் சிகிச்சை செய்யப்பட்டது, ரிஷி மற்றும் நித்யாவின் வீட்டினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது,….

மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது, உயிரில்லா சடலங்களை பரிசோதித்த காவலர்கள்,… கமிஷனரிடம் விரைந்து… “சார்,… ரிஷி சார் கூட வந்த ஐந்து பேருமே இறந்துட்டாங்க, டாக்டர வச்சு செக் பண்ணத்துல ஒருத்தரும் உயிரோடு இல்லை” என்றார், யாராவது ஒருவரின் உடலிலாவது உயிர் இருக்காதா என்ற நப்பாசையில் மருத்துவரை பரிசோதிக்க அனுப்பியிருந்தார் கமிஷனர்,…

கருணாவின் காதிற்கு காவலர் கூறியது நன்றாகவே விழுந்தது,…. நித்யா கார்த்திக்கை பற்றி கூறியதும் நினைவிற்கு வந்தது,… “மித்து கூடவே இருக்கும் கார்த்திக் தான் அவரை யார்கூடவோ சேர்ந்து கொலை செய்ய பார்க்கிறாரு, இன்னைக்கு காலைல கிளம்பும் போது கூட அந்த கார்த்திக்கும் கூட வருவதா சொன்னாரு, என்கிட்ட கூட அந்த கார்த்திக் பேசிருக்கான், எவ்வளவு பாசமா தங்கச்சி தங்கச்சினு பேசுவான், ஆனா அவனே என் மித்துவை கொலை பண்ண பார்க்கிறானா?” என அவள் கண்ணீர் விட்டு புலம்பியது இப்போது தான் புலம்பியது போல் காதில் எதிரொலித்தது,….

‘அந்த கார்த்திக்கும் உயிரோட இல்லயா? அப்படினா என்ன நடந்திருக்கும்’ என யோசித்தவனுக்கு சந்தன பெருமாளை தூக்கினால் அனைத்து விஷயமும் வெளிவரும் என்று தோன்றியது,… தன் கையால் அவனை கொல்ல வேண்டும் என்று வெறி ஏறியது, இதற்கிடையில் விஷயம் தெரிந்து வருணேஷ் வந்து சேர்ந்தான், தன் நண்பன் மற்றும் தங்கையின் நிலை பார்த்து கதறி துடித்தான்,… கமிஷனர் தன் பங்கிற்க்கு ஆறுதல் கூறி, குழந்தையை பற்றின விவரத்தை கூற, பாய்ந்து ஓடினான் குழந்தையை பார்க்க…..

கருணாவை அவன் எதிர்பார்க்கவில்லை, குழந்தையும் அவனது கையில் அழகாக துயில் கொண்டிருந்தது, கருணா கெட்டவன் இல்லை என்பதை தன் நண்பன் மூலம் சில நாட்கள் முன்பு தான் தெரிந்து கொண்டான், சிறு வயதில் கருணா பட்ட கஷ்டம் அவனது மனதையும் உருக்கியது, அதனால் அவனும் கருணாவின்மீது வளர்த்து வைத்திருந்த வன்மத்தை கைவிட்டிருந்தான்,…

வருணேஷ் குழந்தையை வாங்காமல் தயங்கி நிற்க,… கருணாவே குழந்தையை நீட்டினான் அவனிடம்,… தன் நண்பன் மற்றும் தங்கையை உரித்து வைத்திருக்கும் தன் மருமகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு குலுங்கி அழுதான், அநியாயமாக இந்த பிஞ்சின் தாய் தந்தையை அவளிடமிருந்து பறித்து விட்டாயே கடவுளே என கடவுளை சாடினான், கருணா அவனையே பார்த்தபடி நின்றான், எதுவும் பேசவில்லை, அவன் அழுது முடிக்கும் வரை காத்திருந்தவன்,… “பாப்பாவை என்கிட்டயே கொடுத்துடுங்க” என்றான்,…

அவன் பார்வையில் கெஞ்சல் இருக்கவில்லை, அதிகாரமும் தெரியவில்லை, ஆனால் ஏதோ ஒரு உணர்வு தெரிந்தது, குழந்தையையும் அவனையும் மாறி மாறி பார்த்தான், பிறகு கருணாவே… “என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் கொடுங்க” எனும் வாக்கியத்தில் வருணேஷ் தான் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போனான்…

அவன் கேட்டதற்காக குழந்தையை இந்தா வைத்துக் கொள் என்று தூக்கி கொடுக்க இயலவில்லை, அவன் நல்லவனாக இருக்கலாம், அதற்காக தன் தங்கை மகளை தூக்கி அவனிடம் கொடுப்பதா? ஏற்கனவே ரவுடி எனும் பெயர் பெற்றவன், இவனை சுற்றி பல எதிரிகள் இருக்க அதிக வாய்ப்பிருக்கு, அவர்களால் குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால்? ஏற்கனவே நண்பனையும் தங்கையையும் இழந்தாயிற்று, குழந்தையையும் ஆபத்தில் சிக்கவைக்க அவனுக்கு விருப்பம் இல்லை, அதனால் ‘தரமாட்டேன்’ என வாய் திறக்கும் முன்னே,… “குழந்தை உயிருக்கு எந்த ஆபத்தும் வராது, இவ தான் இனி என் வாழ்க்கை, என்னோட ஸ்ரீ, என்னோட மித்ரஸ்ரீ, இவ தாய் தந்தையை இழந்தவனு மத்தவங்க சொல்லலாம், ஏன் நீங்க கூட அதை நினைச்சு கவலை பட்டிருக்க வாய்ப்பிருக்கு, ஆனா இவ தாய் தந்தையை இழந்தவ இல்ல, நான் இருப்பேன் அவளுக்கு தாயா? தந்தையா? எனக்கு நம்பிக்கை இருக்கு, அவளுக்கு சின்னதா கூட ஏக்கம் வராம பார்த்துப்பேனு முழு நம்பிக்கை இருக்கு” என அந்த சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையின் முகத்தை மென்மையாக வருடி விட்டபடி கூற, வருணேஷுமே அவனது வார்த்தைகளில் நெகிழ்ந்து போனான், குழந்தையை அவனிடம் நீட்டினான் முழுமனதாக, தன்னை விட கருணாவிடம் அவள் நல்ல மனுஷியாக வளருவாள் என்ற நம்பிக்கை பிறந்தது, கருணா குழந்தையை கையில் வாங்கவில்லை,… “இப்போ குழந்தை உங்க கிட்ட இருக்கட்டும், நான் முடிக்க வேண்டிய ஒரு வேலை மட்டும் பாக்கி  இருக்கு, அதை முடிச்சிட்டு வந்து என் ஸ்ரீயை வாங்கிக்கிறேன்” என்றவன், வேகநடையுடன் அங்கிருந்து புறப்பட்டான்,….

ஓரிரு மணி நேரத்திற்கு பிறகு,….

முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே காயம் பட்டு, உதடு கிழிந்து ரத்தம் வழிந்த நிலையில் ஓரறையின் மூலையில் ஒடுங்கி போய் கிடந்தார் அமைச்சர் சந்தன பெருமாள்….. அதே அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த கருணாவிற்கு அவரை பார்க்க பார்க்க ரத்தமெல்லாம் கொதித்தது, தன் ஆள் ஒருவனிடம் மிளகாய் தூள் கலந்த தண்ணீர் கொண்டு வருமாரு கட்டளை இட்டவன், அதனை அவரின் மீது ஊற்ற, உடல் எரிய கதறியபடி எழுந்தார் சந்தனபெருமாள்,…

“வேணாம் வேணாம் என்னை விட்டுடு” என்று அலறியவரை ஈவு இரக்கமன்றி பார்த்தவன்,… “விடனுமா உன்னை விடனுமா? எனக்கிருக்க ஆத்திரத்துக்கு” என பல்லை கடித்து தன் வார்த்தைகளை அடக்கியவன்,… “இப்போ சொல்லு, கார்த்திக்கிற்கும் ரிஷி சார்க்கும் இடையில என்ன பிரட்சனை” என்றான் தன் முதல் சந்தேகத்தை….

சற்று நேரத்திற்கு முன்பு வீராப்பாய் பேசியவர் இப்போது அவன் மீதிருந்த பயத்தில் அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தார்… “கார்த்திக் கார்த்திகோட அண்ணனை ரிஷி கொன்னுட்டாரு என்கவுன்டர்ல, அதனால அதனால தான் கார்த்திக் ரிஷியை கொல்ல நினைச்சான்” அவர் கூற, முழுதாக புரியாமல்,… “தெளிவா சொல்லுடா” என கடுகடுத்தான் கருணா,….

“சொல்றேன் சொல்றேன்” என மூச்சு வாங்கியவர்,… “கார்த்திக்கிற்கு இருந்த ஒரே சொந்தம் அவனோட அண்ணன் சந்துரு தான், அண்ணனோட வளர்ப்புல வளர்ந்தவன், தன் தம்பியோட ஆசைப்படி அவன் இஷ்டப்பட்ட படிப்பு படிக்க வச்சு, அவனோட போலீஸ் கனவையும் நிறைவேத்தினான் சந்திரு,

பள்ளி பிள்ளைங்க போற பஸ்ல வெடிகுண்டு வச்சு பல குழந்தைங்க உயிரை விட்டாங்க இல்லயா சரியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ரிஷி தான் அந்த கேஸை கையில எடுத்தாரு, குண்டு வச்சவங்க யார் என்னங்கிற தகவலை சேகரிச்சு, என்கவுன்டர் வாரண்டோட அவனுங்களை வதம் செய்ய கிளம்பினாரு, அங்க போன பிறகு தான் கார்த்திக் அண்ணன் சந்துருவும் அங்க பெரிய தலையா இருக்கிறது கார்த்திக்கிற்கு தெரிய வந்தது, அவனோட அண்ணன் இந்த மாதிரி ஒரு வேலை பார்க்கிறான்னு காரத்திக்கிற்கும் தெரியாது, அப்போ அவனுக்கும் தன் அண்ணனை பார்த்து அதிர்ச்சியா இருந்திருக்கு, ரிஷி சந்துருக்கு குறி வைக்க, கார்த்திக் தன் அண்ணனை காப்பாற்றனும் அப்டின்ற நோக்கத்துல ‘இவர் என் அண்ணன் சார், எதுவும் பண்ணாதீங்க, அவர் கிட்ட நான் பேசுறேன், இனிமே இப்படி ஒரு தப்பு பண்ணாம பார்த்துகிறேன்’னு கெஞ்சிருக்கான், ஆனா ரிஷி கேட்கல,… ‘பதினைந்து குழந்தைங்களோட உயிர் உன் அண்ணனால போயிருக்கு, இனி அவன் திருந்தி ஒரு பிரயோஜனமும் இல்லை’ னு சொல்லி அந்த இடத்திலேயே அவன் கண்ணு முன்னாடியே அவன் அண்ணனை சுட்டு கொன்னுருக்கான், கார்த்திக்கால இதை தாங்க முடியல, தான் அவ்வளவு தூரம் சொல்லியும் தன் கண்ணு முன்னாடியே தன் அண்ணனை கொன்னுட்டானேன்னு ரிஷி மேல பழிஉணர்வு வந்தது, வெளிப்படையா கோபத்தை காட்ட முடியாட்டாலும் நேரம் வரும் போது அவனை தன் கையால கொல்லணும்னு எதிர்பார்த்துட்டு இருந்திருக்கான், ரிஷி கூடவே இருந்து நல்லவன் போல நாடகமாடி அவரை போட நேரம் பார்த்து காத்திருந்தான், ஒருமுறை கொலை பண்ண ட்ரை பண்ணதா சொன்னான், ஆனா மிஸ் ஆகிருச்சின்னு சொல்லி ஃபீல் பண்ணான், அன்னைக்கு ரிஷிக்கு கூட அவன்மேல சந்தேகம் வந்த மாதிரி இருக்குன்னு புலம்பினான், ஒரு முறை ரிஷிக்கு தன் மீதுள்ள சந்தேகம் அறவே குறையனும்னு ரிஷி மேல விழ இருந்த புல்லட்டை அவன் வாங்கிக்கிட்டானாம், அதிலிருந்து ரிஷி அவனை உயர்வா பார்க்க ஆரம்பிச்சிருக்காரு சந்தேகத்தை கைவிட்டிருக்காரு என்னோட பையனை ரிஷி என்கவுன்டர் பண்ணாருன்னு நான் அவரை பழிவாங்க காத்திருக்கிறேன்னு தெரிஞ்சு அவனா தான் என்கூட வந்து சேர்ந்தான், எனக்கும் அவனோட உதவி தேவை பட்டதுன்னு வச்சுகிட்டேன், அன்னைக்கு ரிஷியை அவ்வளவு சுலபமா கொல்ல முடிஞ்சதுன்னா அதுக்கு முக்கிய காரணம் கார்த்திக் தான், என் ஆசைப்படி கார்த்திக்கோட சேர்ந்து ரிஷியை கொன்னேன், அன்னைக்கே கார்திக்கையும் என் கையாலேயே சுட்டு கொன்னேன், காரணம் என்னைக்கு வேணும்னாலும் அவன் எனக்கு எதிரியா மாற வாய்பிருக்குன்னு பயமா இருந்தது, அதனால தான் அவனையும் கொன்னேன்” என அவர் நடந்ததை கூறி முடிக்க, கருணாவிற்கு ரத்தமெல்லாம் சூடேற, அவரது நெற்றி பொட்டிலேயே குறி வைத்து சுட்டுவிட்டான் வெறித்தனமாக, அவரை அணுஅணுவாய் சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும் என்று தான் சாமர்த்தியமாய் அவர் வீட்டில் நுழைந்து கடத்தி கொண்டு வந்தான், ஆனால் அவனால் தன் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை சுட்டு சாகடித்து விட்டான்,….

ரிஷி நித்யாவின் இறப்பு அவர்கள் இருவரின் குடும்பத்தை கதிகலங்க வைத்தது, பாட்டி அதிர்ச்சியில் மயங்கி விட, தாத்தா பித்து பிடித்தவர் போல் அமர்ந்து விட்டார், செந்தூரம் ஊரே கூடும் அளவிற்கு கத்தி கதறினார், திவ்யாவால் அவர்கள் இருவரின் சடலத்தை கண்கொண்டு பார்க்க இயலவில்லை, பச்சை பிள்ளையை கவனிக்கும் பொருட்டாய் மாறினாள், வருணேஷ் தான் இறுதி காரியத்தை செய்து முடித்தான், ஒருவாரம் கடந்த நிலையில் பாட்டி மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தாலும், படுக்கையை விட்டு எழவில்லை, தெந்தூரம் திவ்யா வருணேஷ் மூவரும் பாட்டி தாத்தாவிற்கு துணையாக இந்த ஒருவாரமும் அவர்களின் வீட்டில் தான் இருந்தனர், யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று புரியவில்லை, ஆனால் மூத்தவர்களின் உடல்நிலை கருதி உணவை மட்டும் தவறாமல் கொடுத்து உடலளவில் சோர்வடைய விடாமல் பார்த்துக் கொண்டனர்,…

அதே ஒருவாரம் முடிந்த நிலையில் கருணாவும் வந்தான், குழந்தையை கேட்டான், பாட்டி தாத்தா இருவரும் குழந்தையின் முகத்தை கூட பார்க்கவில்லை, அந்தளவுக்கு அவர்கள் மனநிலை மாறி காணப்பட்டனர், செந்தூரம் தன் பேத்தியை கொடுக்க மாட்டேன் என்று மறுத்தார், வருணேஷ் தான் ஏதேதோ கூறி சமாளித்து குழந்தையை கருணாவிடன் ஒப்படைத்தான்….

சில வருடங்களுக்கு பிறகு பெங்களூர் நகரம்….

மாளிகை போல் வீற்றிருந்தது அந்த மூன்று அடுக்குமாடி கட்டிடம், மாளிகையின் வெளிப்புறம் செல்வசெழிப்பாக தோட்டம் அமைந்திருக்க, அத்தோட்டத்தை பராமரிக்கவே ஐந்து தோட்டக்கார்கள் ஆங்காங்கே நின்று தங்கள் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தனர்,.. வெளியே இப்படி இருக்க வீட்டினுள்ளேயோ சமையல் வேலை செய்பவரிலிருந்து ஆரம்பித்து வீட்டை சுத்தம் செய்பவர் வரை மொத்தம் பன்னிரெண்டு பேர் தங்கள் வேலையில் ஈடுபட்டிருக்க, அவ்வீட்டின் முதல்மாடியிலிருந்த விசாலமான அவ்வறையிலிருந்த பஞ்சு மெத்தை போட்ட கட்டிலிலோ விரல்களை வாய்க்குள் விட்டபடி அழகாக துயில் கொண்டிருந்தாள் ஏழு வயது சிறுமியான மித்ரஸ்ரீ…

“ஸ்ரீ… ஸ்ரீமா,… ஹேய் மித்துமா, எழுந்துடுடா டைமாச்சு” என வழக்கம் போல் மகளை எழ வைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான் கருணா,…

“ஃபைவ் மினிட்ஸ் டேடி” தூக்க கலக்க குரலில் கூறிவிட்டு முகத்தை தலையலைனால் மூடிக் கொண்டு அவள் உறக்கத்தை தொடர,… ‘இவள் கேட்கமாட்டாள்’ என தலையை இடவலமாக அசைத்தவன், அவளை பூக்குவியல் போல் கரங்களில் அள்ளிக் கொண்டு, பாத்ரூமிலில் நுழைந்து, ஏற்கனவே தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்ட, பாத்டப்பில் கிடத்த.. “ஆஹ்” என கத்தியபடியே விழித்தவள்,… தண்ணீரை கண்டதும் துள்ளி விளையாட ஆரம்பித்து விட்டாள், இப்படி தான் அவளுக்கு விவரம் தெரிய வந்த நாட்களிலிருந்து தினமும் அவளை எழுப்பி அமர வைப்பான் கருணா,….

கிளுக்கென்ற சிரிப்புடன்,… தண்ணியை அள்ளி அள்ளி விளையாடும் தன் வளர்ப்பு மகளின் முகத்தை ஆசையாக பார்த்தான், இன்றும் அவளது முகத்தில் ரிஷியும் நித்யாவும் தான் தெரிந்தனர், பழைய நினைவில் கண்கள் கரிக்க, அதனை கண்டு கொண்ட அவனது மகளோ,… “டேடி,… என்ன இன்னைக்கும் கண்ணு வேர்குது போல” அவன் கண்களில் பல சமயம் கண்ணீர் கசியும், அப்போதெல்லாம் அவன் சொல்லி சமாளிக்கும் வாக்கியத்தை, இன்று அவள் கூறியதில் வாய்விட்டு சிரித்தவன்,… “ஆமாடா,….” என்று அவளது தலை கோதிவிட்டு, அவள் மேலும் கேள்விகள் கேட்டு குடையும் முன்னே, ஷவரை அவளது பக்கம் திருப்பி விட்டு, அவளுடன் விளையாட ஆரம்பித்தான்,….

“டேடி இன்னைக்கு ஸ்கூல் லீவ் தானே, ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுப்பி விட்டீங்க” என்றாள் மித்ரஸ்ரீ, குளித்து உடை மாற்றி தகப்பனுடன் டைனிங்கில் அமர்ந்து காலை உணவு உண்டு கொண்டிருந்தாள்….

“மறந்துட்டியா ஸ்ரீ,… இன்னைக்கு உன் தாத்தா பாட்டி, மாமா அத்தை, உன்னோட பேவரைட் தனு குட்டி இவங்களையெல்லாம் பார்க்க போறோம்” அவன் கூறவே,… “அட ஆமால்ல,… மறந்தே போயிட்டேன் பாருங்களேன், டேடி போகும் போது தனு குட்டிக்கு பிடிச்ச ஸ்பைடர்மேன் டாய் வாங்கிட்டு தான் போகணும், போன தடவை அவனுக்கு வாங்கிட்டு போன பார்பி டால் அவனுக்கு பிடிக்கவே இல்லையாம்” அவள் கூற, சிரித்தவன்,… “அதுகென்னடா செல்லம், வாங்கிட்டா போச்சு” என பேச்சு வார்தைகளுடனே சாப்பிட்டு முடித்தனர் இருவரும்,….

பெங்களூரிலிருந்து மித்ரஸ்ரீயின் பாட்டி வீடு செல்ல ஆறு மணி நேர பயணம் என்பதால், வழியில் தேவைப்படும் பொருட்களையும், அங்கு இரண்டு நாட்கள் தந்குவதற்கான உடைமைகளையும் தயார் படுத்தி கொண்டவர்கள் புறப்பட்டு விட்டனர் தங்கள் சொந்த காரில்,….

கருணாகரன் ஏழு வருடத்திற்கு முன்னாள் ரவுடி என பெயர் வாங்கியவன், தற்போது விரல் விட்டு என்னும் பணக்காரர்களில் ஒருவன், கருணா என்றால் தெரியாதவர்கள் எவரும் இல்லை, உலகமே அறிந்து வைத்திருக்கிறது இன்று அவனை, கையில் குழந்தையுடன் பெங்களூர் வந்து சேர்ந்தவன், வேலை தேடி அலைந்து திரிந்து, ஒரு ஹோட்டலில் எச்சி பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தான், முதலில் கஷ்டமாக தான் இருந்தது அப்புறம் பழகிவிட்டது, உழைத்து சம்பாத்தித்த பணம் அடுத்த மாத ஆரம்பத்தில் அவன் கைக்கு வந்து சேர்ந்தது, உள்ளம் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை அத்தருணம் அவனுக்கு, அதற்கடுத்த நாட்களிலிருந்து இன்னும் உழைத்தான், எவ்வளவு வேலை செய்தாலும் குழந்தை அவனது தோளில் தொட்டிலில் தான் கிடப்பாள், குழந்தையுடன் வேலை செய்யும் அவனை பார்த்து சில பேர் திட்டினார்கள், சில பேர் பாவப்பட்டார்கள், சில பேர் பெருமையாக பேசினர், அவனது ஹோட்டல் முதலாளி நல்லமனம் கொண்டவர் போல, அவனது உழைப்பை கண்டு, அவனை அழைத்து பேசினார், அவனை நல்ல ஒரு இடத்தில் நிறுத்தினார், உழைத்தான், உழைத்தான் ஓய்வெடுக்காமல் உழைத்தான், ஒரு வருடத்தில் அவனது நிலை கொஞ்சம் மாறி போனது, எச்சி பாத்திரம் கழுவி கொண்டிருந்தவன், தற்போது கல்லாவில் அமர்ந்திருந்தான், அவனது நேர்மையால் அவனுக்கு கிடைத்த பரிசு அது, அடுத்தடுத்த அவனது முயற்சியால், ஹோட்டலிலிருந்து வெளிவந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் தள்ளு வண்டி கடை நடத்தினான், உண்மையாகவே அவனது கைப்பக்குவத்தை அனைவரும் பாராட்டி ரசித்து வாங்கி சாப்பிட்டனர், தள்ளு வண்டி கடை, சின்ன ஹோட்டலாக ஆரம்பித்தது, பிறகு இன்னும் பெரிதாகி பெரிதாகி தற்போது அவனது பெயரில் அல்ல மித்ரஸ்ரீ என்ற பெயரில் எட்டு பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது, மூன்று பங்களா, இரண்டு பீச் ஹவுஸ் என்று அவனது வாழ்க்கை இல்லை இல்லை அவர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக பணத்திற்கும் சின்ன குறைவின்றி அழகாக சென்று கொண்டிருக்கிறது,…

மித்ரஸ்ரீ ஆறுமாத குழந்தையாய் இருக்கும் போதே கருணாவே அவளை அவளது சொந்த குடும்பத்திடம் அழைத்து வந்தான், ஒரேடியாக அவளை அவர்களிடமிருந்து பிரிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை, அதனால் அழைத்து வந்தான், பாட்டி தாத்தா இருவரும் பேத்தி பேரனின் இறப்பிலிருந்து அச்சயம் வெளிவந்திருக்க, தன் கொள்ளு பேத்தியை கண்டதும் ஆசை தீர கொஞ்சினர், வருணேஷின் குடும்பம் தான் அப்பெரியவர்களை கவனித்து கொண்டிருந்தது, செந்தூரம் தனது தாய் தந்தையை போல அவர்கள் இருவரையும் கவனித்து கொள்வார், வருணேஷும் திவ்யாவும் ரிஷி நித்யாவின் பாசத்தை தோற்கடிக்கும் அளவிற்க்கு  பாசத்தை வழங்கினர், செவ்வந்தி தர்மதுரைக்கு தங்கள் கொள்ளு பேத்தியை தங்களுடன் வைத்து கொள்ளவும் ஆசை தான், ஆனால் கருணாவை வருத்தபட வைக்க விருப்பம் இல்லை, அவனும் அவர்களின் மனதில் சில மணி நேரத்திலேயே இடம் பிடித்திருந்தான்,  அவனின் சந்தோசத்திற்க்காகவும் நிம்மதிக்காகவும் மித்ரஸ்ரீயை அவனுடன் அனுப்பி வைத்தனர், முன்னெல்லாம் ஆறுமாத்தில் ஒருமுறை அழைத்து வருவான், தற்போது வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் அழைத்து வந்து விடுவான் கருணா, வழக்கமாக ஃபிளைட்டில் அழைத்து வருபவன் இன்று மகளின் விருப்பத்திற்கேற்ப காரில் பயணப்பட்டனர்….

“பாட்டிடிடி… தாத்தாஆஆ” வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிப்போய் செவ்வந்தி மற்றும் தர்மதுரையை அணைத்துக் கொண்டாள் மித்ரஸ்ரீ,…

“என் தங்கம், உனக்காக தான்டி இம்புட்டு நேரம் வாசல பார்த்து உட்கார்ந்துட்டு இருந்தோம்” என்ற பெரியவர்கள், அவளை முத்தத்தால் குளிப்பாட்டினர்,… சத்தம் கேட்டு வந்த செந்தூரம் பேத்தியை உச்சி முகர்ந்து கட்டி அணைத்து கொண்டார் ஆனந்த கண்ணீரோடு, அவளை எப்போது பார்த்தாலும் அவரின் மகளும் மருமகனும் நினைவிற்க்கு வந்து விடுவார்கள், பெரியவர்கள் கூட வேதனையை மறைத்து கொள்வார்கள், ஆனால் செந்தூரத்தினால் முடியாமல் பல நேரம் கண்ணீர் சிந்தி விடுவர், ‘என்ன பாட்டி உங்களுக்கும் டாடிக்கு மாதிரி கண்ணு வேர்த்துடுமா’ என்று கூறி அவரை சிரிக்க வைத்து விடுவாள் ஸ்ரீ, வருணேஷ் திவ்யா மித்ரஸ்ரீயை முத்தத்தால் திணறடிக்க வைத்து விட்டனர், அவர்களின் நான்கு வயது மகன் தனுஷ் ஸ்ரீயின் குரலை கேட்டு ஓடிவந்தவன்,… “எங்கே என்னோட ஸ்பைடர்மேன் பொம்மை” என அவனது சாமானில் குறியாய் நிற்க, அவனை ஏமாற்றாமல் பொம்மையை எடுத்து கொடுத்தவள், மேலும் அவனை மகிழ்விக்கும் பொருட்டாய் அவனுக்கு பிடித்தமான சாக்லேட்களையும் நீட்ட, பெரிய முத்தமொன்றை அவளுக்கு பரிசளித்த தனுஷ் பொம்மையை வைத்து விளையாட ஆரம்பித்து விட்டான்….

தாத்தா பாட்டிகளுடன் சேர்ந்து திவ்யாவும் மித்ரஸ்ரீக்கு வாங்கி வைத்திருந்த உடைகளையும், அவளுக்கு பிடித்த உணவு வகைகளையும் ஊட்டி விட்டு அவளை அன்பால் திணற வைக்க, இன்னொரு பக்கம் கருணாவை தள்ளிக் கொண்டு நகர்ந்து விட்டான் வருணேஷ்….

கடந்த இத்தனை வருடங்களில்,… கருணாவுடன் ஒருவித சகோதரத்தனத்துடன் தான் பழகி வருகிறான் வருணேஷ், அந்த வகையில் இருவருக்குள்ளும் நிறையவே பிணைப்பு உணடாகிருந்தது, கருணாவிற்கு மித்ரஸ்ரீயின் மூலம் ஒரு குடும்பமே கிடைத்திருக்கு, அதை நினைத்து அவன் மகிழ்ச்சி கொள்ளாத நாளே இல்லை….

“என்ன கருணா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்க மாதிரி தெரியுது, எனி ப்ராப்ளம்” அக்கறையுடன் வினவினான் வருணேஷ்….

“பிரட்சனை எதுவும் இல்லை, பட் ப்ச், ஸ்ரீ கிட்ட அவ அம்மா அப்பாவை பத்தி சொல்லாம்னு நினைக்கிறேன்” என்றான் கருணா….

“உண்மை தெரிஞ்சா அவ ஃபீல் பண்ண மாட்டாளா? எனக்கு என்னமோ சொல்லாம மறைச்சிடுறதே நல்லதுன்னு தோணுது” என்றான் வருணேஷ்….

“மறைக்கிறது எனக்கு தப்புன்னு தோணுது வருணேஷ், ஸ்ரீ வளர்ந்துட்டா, இப்போவே ஒரளவு மெச்சூர்ட்டா பேச கத்துக்கிட்டா, அதோட அவ அம்மாவை பத்தியும் கேட்க ஆரம்பிச்சுட்டா” என்று நிறுத்தியவன்,… “எவ்வளவு தான் ஒரு தகப்பன் பிள்ளையை பாசம் காட்டி வளர்த்தாலும் ஓரு வயசு வந்த பிறகு அம்மாவை தான் தேடுது, அவளுக்கு  அம்மாவோட ஏக்கம் வர விட மாட்டேன்னு உனக்கு வாக்கு கொடுத்துட்டு போனேன், ஆனா என்னால அதை நிறைவேத்த முடியல” என்றான் வருத்தமாய்….

“இதுக்காக நீ ஃபீல் பண்ண வேணாம் கருணா, இதான் நிதர்சனம், பிள்ளைங்களுக்கு தாய் மிக முக்கியம், அதுவும் பெண்பிள்ளைங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்” என்றவன்,.. அவனை நேராக நோக்கி “இப்படி ஃபீல் பண்ணுறதுக்கு பதில் நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது கருணா, ஸ்ரீக்காக” அவன் இத்தனை நாள் கேட்க நினைத்த கேள்வியை இன்று சமயம் பார்த்து கேட்டுவிட, கருணா தான் பேச்சற்று போனான்,…

“நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா கருணா” வருணேஷ் அவனின் மௌனம் கண்டு வினவ,… “இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல வருணேஷ், என் ஸ்ரீக்காக நான் என்ன வேணும்னாலும் செய்ய தயாராயிருக்கேன், பட் மேரேஜ், இல்ல முடியாது, என் வாழ்கையில இன்னொரு பொண்ணு வரத நான் விரும்பல, என்னோட அன்பு பாசம் எல்லாம் என் ஸ்ரீக்கு மட்டும் தான்” என்று நிறுத்தினான் அத்தோடு,…

“பயப்படுறியா கருணா, ஸ்ரீயை வர போற பொண்ணு ஹர்ட் பண்ணிடுவான்னு, இந்த உலகத்துல நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க” வருணேஷ் அவனுக்கு புரிய வைக்க முயல,….”இருந்துட்டு போகட்டும், ஆனா எனக்கு அவங்க தேவை இல்லை, இப்போ என்னோட கவலையெல்லாம் ஸ்ரீ கிட்ட அவ அம்மா அப்பாவை பத்தி சொல்லலாமா வேணாமா அப்டிங்கிறது மட்டும் தான்” என்றான் யோசனையாய்,…

“ஸ்ரீ இன்னும் சின்ன குழந்தை தான், இப்போவே அவ அம்மா அப்பா இறப்பை சொல்லி அவளை கஷ்டப்படுத்திடாதே, ஃபியூச்சர்ல அவ தெரிஞ்சிக்கட்டும்” என வருணேஷ் கூற, கருணாவும் தன் மகளை கஷ்டப்பட வைக்க விரும்பவில்லை, அவளுக்கு இன்னும் மெச்சூரிட்டி வரட்டும் என்று காத்திருந்தான்….

மித்ரஸ்ரீக்கு தன் தாய் தந்தை உயிரோடு இல்லை என்பது தெரிய வந்தால் அவளது எதிர்வினை எப்படி இருக்கும்? கருணாவை தந்தையாக ஏற்றுக் கொள்வாளா? கருணா மித்ரஸ்ரீக்காக திருமணம் செய்து கொள்வானா?

இந்த கேள்விக்கெல்லாம் விடை பார்ட் 2 ஆரம்பிச்சு அதில சொல்லாம்னு இருக்கேன் பிரண்ட்ஸ், நீங்க என்ன சொல்றீங்க, பார்ட் 2 ல கருணாவோட காதல் கல்யாணம் னு அவனோட வாழ்க்கை எப்படி ஆரம்பிக்க போகுது, யாரோட ஆரம்பிக்க போகுது அப்டின்னு சொல்லாம்னு ஒரு ஐடியா இருக்கு, பார்க்கலாம், இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்டினும் சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ் ப்ளீஸ்,

தொடரும்….

முற்றும்…..

எப்படி போடுறதுன்னு தெரியல அதான் தொடரும் முற்றும் ரெண்டையும் சேர்த்து போட்டுட்டேன், 😀😀

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்