அனைவருக்கும் வணக்கம்!!!
சுவையோடு சுவடு கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு தூரிகைத் தளத்தின் திறப்பு விழாவை சிறப்பித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றி!!!
வந்திருந்த கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு சுவை. அறுசுவையை எனக்களித்த தூரிகை தளத்தின் உரிமையாளர்களுக்கு என் நன்றி!!!
எதை விட.. எதை தேர்ந்தெடுக்க என்று என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்துவிட்டன கவிதைகள். போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டி என்று வந்துவிட்டால் பரிசையும் அறிவிக்க வேண்டுமே.
முதல் பரிசு – மகா சமுத்ரா
சமையல் அப்படினாலே நம்ம எல்லாருக்கும் சொந்த ஊர் ஞாபகம் வரும். என்னதான் நட்சத்திர விடுதில வகைவகையா சாப்பிட்டாலும், நம்ம பாரம்பரிய சுவையை நினைக்கும் போதே ஒரு பரவசம் வரும் நமக்குள்ள. இந்த கவிதையும் அப்படிதான் இருந்துச்சு. முதல் சில வரிகள் படிக்கும்போது, அக்கா தம்பிக்குள் நடக்கும் செல்ல சண்டை என்று தோன்றியது. ஆனா கவிதை முழுசா படிச்ச அப்புறம் மனசுல ஒரு வலி. ஆண்பிள்ளைக்கு கிடைச்ச உரிமை பெண் பிள்ளையான தனக்கு கிடைக்கலையேங்கிற ஏக்கத்தை சுமந்திருந்தது கவிதை. அந்த உணர்வை எந்தவித வெளிப்பூச்சும் இல்லாம சொல்லிருக்காங்க. சமையல் மனமும், மொழி நடையும் அருமை.
இரண்டாம் பரிசு – சினேகா
வார்த்தைப் பிரயோகம் அருமை. கவிதையைப் படிக்கப் படிக்க மலைப்பு. அவ்வளவு அருமையா விடியலில் ஆரம்பித்து ஒரு இல்லத்தரசியின் கடமையை அழகா சொல்லிருக்காங்க. எத்தனை வகையான பட்சணம் படிக்கும் போதே சாப்பிடணும்னு ஆசை வந்துச்சு. தலைப்பிற்கு ஏற்றார் போல் ஒரு விருந்து வைத்துவிட்டார் ஆசிரியர். அதன் சுவடு என் நெஞ்சில் இன்னும் இருக்கிறது. கொஞ்சம் கவிதையின் நீளம் குறைந்திருந்தால் இன்னும்
நன்றாக இருந்திருக்கும்.
மூன்றாம் பரிசு – செல்வி சிவானந்தம்
மிக எளியநடையில் ஒரு தலைமுறையின் உணர்வுகளை சமையல் மூலம் கூறிவிட்டார். இதில் இருக்கும் ஒவ்வொரு காலத்தையும் கடந்தே ஆக வேண்டும் பெண்ணாய் பிறந்தவள். கவிதையில் எதுகை மோனையை கையாண்டிருந்த விதம் அருமை.
புதிய எழுத்தாளருக்கான பரிசு – கனிமொழி
பிற குறிப்பிடத்தக்க படைப்புகள் :
நந்தினி சுகுமாரன், S. பிரியதர்ஷினி அவர்களின் கவிதைகளும் மிகவும் நன்றாக இருந்தது.
பங்குபெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அனைத்து எழுத்தாளர்களுக்கும் ஒரு சின்ன பரிந்துரை…
போட்டிக்கு எழுதும் பொழுது இரண்டு மூன்று முறைப் பிழைகளை சரி பார்க்கவும்.
நாங்கள் கேட்டவுடன் உடனே சம்மதித்து வெற்றியாளர்களை தேர்வு செய்ய உதவிய நடுவர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளும் அன்புகளும்.
வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்களது Google Pay Number அல்லது வங்கிக் கணக்கு விபரங்களை எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மின்னஞ்சல் முகவரி : thoorigaitamilnovels@gmail.com
இவண்
தூரிகை தமிழ் நாவல் தளம்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் . 💐💐💐💐. போட்டியில் கலந்துகொண்ட அனைவரது படைப்புகளும் அருமை 👏👏💕💕🤗🤗