
அத்தியாயம் 8
அன்னையின் அருகில் அமர்ந்திருந்தவன் அவர் ஏதேனும் சொல்வாரெனப் பார்த்திருக்க அவரும் இவனுக்கு மேல் எத்தனாக அமர்ந்திருந்தார்.
“அப்புறம் மா.” என்றவனின் கேள்விக்கு
“வேற என்ன பா.?வேற ஒன்னும் இல்லையே.” என்றார் அவரும்.
“ம்ம்ம்ம்.” என்றான் சலித்தவனாக, பின் இது வேலைக்காகாது என்பதை உணர்ந்து,
“நீங்கக் கொண்டு போன கிப்ட் எல்லாம் பிடிச்சிருந்தா.?”
“யாருக்கு பிடித்திருந்ததான்னு கேக்குற.?”
“எல்லாருக்கும் தான்.” என்றான் கெத்தை விடாதவனாக.
“ஹ்ம்ம். எல்லோருக்கும் பிடித்திருந்ததான்னு எனக்குத் தெரியல. ஆனா ஒருத்தருக்கு மட்டும் ரொம்ப புடிச்சி இருந்தது. அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.”
“ஏன்.? மற்றவர்களுக்கு எல்லாம் என்ன.?”என்று யோசனையுடன் கேட்டவனிடம்,
“அதைப் பற்றி எல்லாம் நாம இப்ப எதுவும் நினைக்க வேண்டாம். உனக்கு வேற என்ன கேட்கணுமோ கேளு.?” என்றார் கேலி குரலில்.
“ப்ச், மா, தெரிஞ்சுகிட்டே என்னைக் கலாய்க்கிறீங்க தானே.?” என்று கேட்டவனிடம் தன் அலைபேசியை எடுத்து நீட்ட, ஆர்வம் இல்லாமல் கை நீட்டி அதை வாங்கி பார்த்ததில் கண்கள் வியப்பில் மின்னியது.
கண்களின் வியப்பு இதழ்களுக்கும் கடத்தப்பட,
“வாவ்.” என்றது அது தனிச்சையாக.
பெரிதான அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் அடக்கமான அழகுடன் மிளிர்ந்தாள் பெண். அடுத்த புகைப்படத்தை அவன் நகர்த்த இவன் வாங்கிக் கொடுத்த பிரேஸ்லெட் அணிந்த கைகள் மட்டும் அவனுக்குக் காட்சி ஆனது. அழகுக்கு அழகு சேர்ப்பது போல அழகான கைகளில் அழகான கைச்செயின். புன்னகையுடன் தன் விரல் கொண்டு மெதுவாக அந்தக் கைகளைத் தடவியவன், மென் புன்னகையுடன் அடுத்தடுத்த புகைப்படங்களைப் பார்த்தான். அன்னை அவளுக்குப் பூச்சூடுவதும், இனிப்பு ஊட்டுவதும் அடுத்தடுத்த புகைப்படங்களாக வந்தன. அனைத்தையும் பார்த்தவன் சிலதை மட்டும் தன் அலைபேசிக்கு அனுப்பிக் கொண்டான்.
அன்னையின் அலைபேசியை அவரிடம் கொடுத்தவன். மாடி ஏறிச் சென்றான் நாளைத் தன்னவளைப் பார்க்கும்போது அவளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன்.
அதே பயம் தான் அங்குப் பெண் அவளுக்கும்.
‘ஐயோ நாளைக்கு வேலைக்குப் போகணுமே அங்க அவங்க நிப்பாங்களா.? எப்படி அவங்கள பார்க்கிறது.? படபடப்பாகவும் பயமாகவும் வேற இருக்கே.’ என மனதிற்குள் நாளையை நினைத்து இன்றே பயந்தவள்
‘இதுக்கு முன்னாடி எப்படி உள்ளேயே இருந்து குழந்தைக்குச் சோறு ஊட்டினோமோ அதே மாதிரி உள்ளேயே இருந்துக்க வேண்டியதுதான். தப்பி தவறி கூட மொட்டை மாடிக்குப் போயிடக் கூடாதுடா எப்பா.’ என நினைத்து முடிவு செய்து கொண்டவளுக்கு பின்பே சிறிது ஆசுவாசமும் நிம்மதியும் ஏற்பட்டது.
தற்போது கால் நன்றாகவே குணமாகி இருந்தது சஞ்சய்க்கு. அவனை முதல் முறை எதிர் மாடியில் எதிர்கொண்டவள், இவன் கண்களால் கேட்ட கேள்வியில் அடித்துப் பிடித்து ஓடியவள்தான், பின்பு மொட்டை மாடிக்கு வராததை தெரிந்து கொண்டவன்,
‘பயந்தாங்கோலி மோகினி.’ என லேசான புன்னகையுடன் நினைத்துக் கொண்டவன், அதற்குப் பின் வந்த நாட்களில் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்து இருந்தான்.
ஆனால் நாளை அவளைப் பார்ப்பதற்காகவே வீட்டிலிருந்து வேலை செய்வது போல ஏற்பாடு செய்து கொண்டவனுக்கு இப்போதே நாளையை நினைத்து மனம் பூரிப்பில் நிறைந்திருந்தது. தான் கொடுத்த முதல் பரிசை அவள் கைகளில் பார்க்க மிகவும் ஆசை கொண்டது மனது.
யாருக்கும் காத்திருக்காமல் அழகாகவே விடிந்தது அன்றைய காலை. வேகமாக எப்போதும் போல வேலைகளை முடித்த வசுந்தரா. இப்போதேனும் தங்கை தன் கைச்செயினை தருவாளா.? என அவள் முகத்தினை பார்க்க அவளோ அதைப் பற்றிய நினைவே இல்லாதவள் போல வேகமாகக் காலை உணவை உண்டு கொண்டு இருந்தாள். கல்லூரிக்குக் கிளம்பும் அவசரத்துடன். அன்னையிடம் கட்டாயமாக இதைப் பற்றிக் கேட்க முடியாது. ஆனால் தந்தையிடம் சிறு குறிப்பேனும் காட்ட முடியுமா.? எனப் பார்த்தவளுக்கு அதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை. அவரும் தன் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக வேகமாக உண்டு கொண்டிருக்க அவரின் அருகிலேயே நின்றிருந்தார் கோகிலா.
இதற்கு மேல் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லையென நினைத்தவளாக மனம் சோர்வுடன் தன் பள்ளியை நோக்கி நடந்து சென்றாள். நடந்து கொண்டிருந்தவளுக்கு எண்ணம் முழுவதும், இதற்கு முன் தனக்காக அவர்கள் வாங்கி கொடுத்ததை தமக்கையோ அல்லது தங்கையோ எடுத்துக் கொள்ளும் போதும் வலி இருக்கும். தான்.ஆனால் இப்படியான மனதை கொள்ளும் வேதனை இருந்ததில்லை. இது தனக்கே தனக்கெனத் தன்னவன் வாங்கி கொடுத்த முதல் பரிசு. அதையும் லட்ஜையே இல்லாமல் தங்கை அணிந்து கொண்டிருப்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை அவளால். ஆனால் அதைக் கேட்கும் தைரியமும் இல்லை. இப்படி கோழையாக இருக்கும் தன்னையே நினைத்துக் கோபமும், கழிவிரக்கமும் கொண்டு வளமை போல் பள்ளியின் உள் சென்று அமர்ந்து கொண்டாள் சோகமே உருவாக.
சரியாக உணவு நேரத்தில் பால்கனியில் வந்து நின்ற சஞ்சய்க்கு சந்தேகம் தான் தன்னவளின் வருகையில், அவனின் நினைப்பை ஏமாற்றாமல் அவன் காத்திருந்த அரை மணி நேரமும் அவள் வெளியில் வரவே இல்லை.
சிறு சலிப்பும், லேசான கோபமும் எட்டிப் பார்த்த அதே நேரத்தில், சிரிப்பும் சேர்ந்தே வந்தது அவனுக்கு.
‘நம்மையும் பார்த்துப் பயப்பட ஒருத்தி நல்லா தான் இருக்கு.’ எனத் தனக்குள்ளாகவே பேசி லேசாகச் சிரித்தவன் எதிர் மொட்டை மடியிலிருந்து பார்வையை அகற்றாமல் அங்கேயே நின்றிருந்தான் சிறிது நேரம்.
குழந்தைக்கு உணவு ஊட்டியப்படியே அமர்ந்திருந்தாள் வசந்தரா. வெளியே சென்று எதிர் வீட்டைப் பார்க்க மனம் உந்தினாலும் பயம் அவளைத் தடுத்து அங்கேயே அமர வைத்திருந்தது. அமைதியாக உணவு உண்டு கொண்டிருந்த குழந்தையும் சிறிது நேரம் கழித்து வெளியே செல்ல முரண்டு பிடித்தபடி அங்கு ஓட, அதைச் சமாளித்து மடியில் பிடித்து வைப்பதற்கே அவளுக்குப் போதும் போதும் என்றானது.
எப்படியோ சமாளித்து குழந்தையோடு போராடி உணவு ஊட்டி முடித்தவளுக்கு அப்பாடா என்ற பெரும் நிம்மதி தான். அந்த நிம்மதி குழந்தையைச் சமாளித்ததற்கா அல்லது வெளியில் செல்லாமல் அவன் பார்வையில் படாமல் தப்பித்ததற்கா என்பது அவளுக்கே வெளிச்சம்.
சிறிது நேரம் அவளுக்காகக் காத்திருந்தவன் பின்,
‘எப்படியும் இன்னைக்கு உன்னைப் பார்க்காமல் விட்றது இல்லடி. பார்த்திடலாம் நீயா.? நானான்னு.? போய் ஒளிஞ்சிகிட்டா உன்ன பாக்க முடியாதா.?’
என்றபடி தனக்குள்ளாகவே சபதம் எடுத்துக் கொண்டவன் அன்னையின் அழைப்பின் பேரில் உணவு உண்ணச் சென்றான். கீழே இறங்கி.
இரண்டு மூன்று முறை கூப்பிட்டதற்கு பின்னே இறங்கி வரும் மகனைப் பார்த்த அனுபமாவிற்கு பின்பு மூளையில் பல்பு எரிந்தது. மகனின் காலதாமதத்திற்கான காரணம்.
“என்னப்பா எல்லாம் திவ்ய தரிசனமா.?” என்று கேட்ட அன்னையை புரியாமல் பார்த்தவன். பின்பே அவரின் கேலியான கேள்வி புரிந்து,
“ம்ம்க்கும் அதுக்கு எல்லாம் உங்க மருமக சரிப்பட்டு வர மாட்டா. எங்க என்னைப் பார்க்க வேண்டி வருமோன்னுக் குழந்தைக்குக் கூடச் சோறு ஊட்ட வெளியே வராமல் உள்ளையே அமுக்குனி மாதிரி உட்கார்ந்துகிட்டா.” என்றான் லேசான கோபத்துடன்.
“டேய்…! அந்தப் பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவமாகத் தான் தெரியுது. நீ வம்பு பண்ணி மேலும் பயமுறுத்திடாதே.”
“வம்பு பண்ணி. அதுவும் நானு.?”என்று புருவம் உயர்த்தி கேட்டவனுக்கு.
“ஆமாமா அதுவும் சரிதான்.” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தவர்,
“வம்பு பண்ணி, உன் மனசுல இருக்குற காதலை சொல்லி, அந்தப் பொண்ணையும் உன்னைக் காதலிக்க வைக்கிற திறமை இல்லாம தானே நேரா என்கிட்ட வந்து சொல்லி, நான் உங்க அப்பா கிட்ட சொல்லி இப்ப திருமணத்தில் வந்து நிக்குது.” என்றார் அவரும் புன்னகையை அடக்கியபடி.
“அம்மா.”என்றவனின் சினுங்களான அழைப்பும் அழகாகவே இருந்தது.
மகன் முகத்தில் இருந்த வெட்கச் சிரிப்பைப் பார்த்த அனுபமாவிற்கு மனம் நிறைந்திருந்தது. அவன் தன் அறையை நோக்கித் திரும்பும் போதே அவனிடம் சொல்ல வேண்டும் என நினைத்திருந்த விஷயங்கள் ஞாபகத்தில் வர.
“சஞ்சய் உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும்னு நெனச்சேன் பா.”
“என்னமா விஷயம்.? என்றபடி அவனும் ஏறி இருந்த இரண்டு படிகளிலிருந்து இறங்கி அன்னையின் அருகில் வந்தான்.
“வசுந்தரா வீட்ல அந்தப் பொண்ணுக்கு அவங்க அம்மா, அக்கா, தங்கச்சி யாருமே சப்போர்ட்டா இல்லன்னு நினைக்கிறேன். அவங்க அப்பா மட்டும்தான் அந்தப் பொண்ணு மேல கொஞ்சம் பாசமா இருக்காருன்னு நினைக்கிறேன்.”
” ஏம்மா அப்படி சொல்றீங்க.?”
” எனக்கு அப்படித்தான் தோணுச்சு. அன்றைக்கு நடந்த விஷயங்கள் அந்த மாதிரி. அந்த அம்மா என்னமோ அவளுக்கு எதுவுமே சமைக்க தெரியாதுங்குற மாதிரி சொல்றாங்க. தான், தான் எல்லாமே செஞ்சது மாதிரியும். அவ எதுக்குமே பிரயோஜனம் இல்லாத பொண்ணு மாதிரியும் பேசினாங்க. ஆனா உடனே அவங்க அப்பா இது எல்லாம் அவ தானே செஞ்சா அப்படின்னு கேட்கவும் அவங்க முகமே மாறிப் போயிருச்சு. புதுசா ஒருத்தர் வீட்டுக்கு வந்துருக்கோங்கறது கூட இல்லாம, அவங்க பொண்ண பத்தி அவங்களே குறை சொல்ற மாதிரி பேசுறது எனக்கு என்னமோ சரியா படல. அதுவும் நாம தெரிஞ்சவங்களா போகல. அந்தப் பொண்ண தான் பெண் கேட்டுப் போயிருக்கோம் அப்பவும் இப்படி பேசுறாங்கன்னா, பாவம் அந்தப் பொண்ணு முகமே மாறிச் சோகமாயிடுச்சு. அப்புறம் அவங்க அப்பா வந்து சத்தம் போடவும் அத, இத சொல்லிச் சமாளிச்சாங்க. அவங்களுடைய மத்த பொண்ணுங்க ரெண்டு பேரும். எனக்கு என்னமோ வசுந்தராவை பத்தி நாம தப்பா நினைக்கணும்னு தான் அவங்க இந்த மாதிரி பேசி இருப்பாங்களோன்னு இப்ப தோணுது.”
என்றார் கண்களைச் சுருக்கி யோசனையுடன்,
“மூணு பொண்ணுங்க தானே அவங்க வீட்ல. அதுல இவளுக்கு மட்டும் எதுக்கு பாகுபாடு பாக்கறாங்க.அவங்க அம்மா.”
“அதுதான் ஏன்னு தெரியல.?
நான் கொண்டு போன சீர் எல்லாம் கூட அவங்க சந்தோஷமா பார்த்த மாதிரியே எனக்குத் தெரியல அந்தப் பொண்ணுடைய அக்கா கண்ணுலையும் தங்கச்சி கண்ணுலையும் பொறாமை தான் தெரிஞ்சது. நமக்கு இப்படி அமையலையே. இவளுக்கு மட்டும் இப்படி எல்லாம் அமர்ந்திருக்கேன்னு அவ மேல வன்மமான பார்வையை தான் அவங்க ரெண்டு பேருமே பார்த்து இருந்தாங்க.”
“போன கொஞ்ச நேரத்திலேயே இவ்வளவு தெரிஞ்சுக்கிட்டிங்களா நீங்க.?” எனச் சிரிப்புடன் கேட்ட மகனைப் பார்த்தவர்.
“நான் டாக்டர் பா. ஒருத்தரை பார்க்கும்போதே அவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு ஓரளவுக்கு என்னால புரிஞ்சுக்க முடியும்.”என்றார் அவரும் சற்று கெத்தாக
“சரிதான், சரிதான்.” என்று சிரித்த மகனைப் பார்த்தவர்.
“நீ தான் எல்லாத்தையும் சமாளிக்க வேண்டி வரும். அங்க போய்த் தங்கும்போது, எல்லாரையும் அனுசரிச்சு போகிற நிலைமை வரும். எல்லாத்துக்கும் தயாரா இருந்துக்கோ.” என்று கூறிய தாயிடம்,
“நான் ஏன் அங்க போய்த் தங்க போறேன்.?”
“டேய். நீ தான்டா அந்த வீட்டு மாப்பிள்ளை. அப்ப அங்க தங்கி தானே ஆகணும்.”
“அதெல்லாம் நான் தாங்கமாட்டேன். என் மனைவியோடு போவேன். கொஞ்ச நேரம் இருப்பேன். அவளோடவே திரும்ப வந்துருவேன். அவ்வளவுதான். இப்பவே சொல்லிட்டேன் மா. என்னை அங்க தங்கிக்கோ என்று எல்லாம் சொல்லக் கூடாது. ஏற்கனவே அவங்க குணம் சரியில்லைன்னு சொல்றீங்க. குணம் சரியில்லாத வீட்ல எல்லாம் என்னால கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது. பொறுப்பை உங்ககிட்ட கொடுத்துட்டேன். நீங்கப் பார்த்துக்கோங்க எல்லாத்தையும்.” என்றபடி வேகமாக மாடி ஏறிச் சென்றவனை பார்த்து.
“டேய், டேய் எதுக்குடா எப்ப பார்த்தாலும் என்னையே கோர்த்துவிடுற. திரும்பத் திரும்ப எல்லாம் உங்க அப்பா கிட்ட என்னால திட்டு வாங்க முடியாது.” தான் ஒரு கைராசியான டாக்டர் என்பதை மறந்து மகனிடம் வடிவேலு பாணியில் புலம்பியவரிடம்,
“நீங்கதான் பெரிய டாக்டராச்சே. எல்லாத்தையும் சமாளிச்சுருவீங்க இல்ல. என் செல்ல அம்மா. அப்பாவைப் பார்த்து நீங்கப் பயப்படுறீங்க. அத நாங்க நம்பனும். அவரெல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரே கிடையாது. நீங்க அவருக்குப் பயப்படுறீங்களா.? அவரு உங்களைப் பார்த்துப் பயப்படுறாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.”என மேலே இரு கைகளையும் உயர்த்திக் காட்டி, அவரைப் பார்த்துக் கண் சிமிட்டி சிரித்தபடியே மிச்சபடிகளை கடந்தான்.
“அய்யய்யோ.! நானா தான் வந்து வான்டடா மாட்டிக்கிறனா.? எப்பவுமே இவன்கிட்ட.” எனப் புலம்பிய படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவாரே சரிந்திருந்தார் அனுபமா.
அன்னையுடன் வம்பு வளர்த்து விட்டு அவர் புலம்பலைக் கேட்டுச் சிரித்தபடியே தன் அறையை நோக்கிச் சென்றான் சஞ்சய். தன் அறைக்குள் நுழைய முற்பட்டவன் ஞாபகம் வந்தவனாகப் பக்கவாட்டாக இருந்த, பால்கனியின் இறுதிக்குச் சென்று எதிர்த்த வீட்டைப் பார்க்க, அவ்வீட்டின் வாசல் பகுதியும் லேசாகத் திறந்திருந்த கேட்டும் நன்றாகவே பார்வைக்கு தெரிந்தது. தன் அலைபேசியில் நேரத்தைப் பார்க்க, இரண்டாகச் சில நிமிடங்களே இருந்தன. சில குழந்தைகளை அவர்களின் அன்னை வந்து அழைத்துச் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவன் இன்னும் சற்று நேரத்தில் தன்ன்வளும் கிளம்பி விடுவாள் என்பதை புரிந்தவன், சிறிது நேரம், குழந்தைகள் தங்கள் அன்னையைப் பார்த்ததும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தபடி அவர்களிடம் குதுகுலத்துடன் ஓடி வருவதை பார்த்தபடி புன்னகையுடன் நின்று ரசித்து இருந்தான்.
எப்படியும் அனைத்து குழந்தைகளும் சென்ற பின்பே குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதை புரிந்தவனாகச் சிறிது நேரம் அங்கேயே நின்றவன், குழந்தைகள் தங்கள் அன்னையருடன் செல்வது குறைந்த பின்பு நின்றே விட. நேரமானதை புரிந்தவனாக வேகமாகக் கீழ் இறங்கி வந்தவன் அன்னையை சுற்றி பார்க்க அவர், அவரின் அறையில் இருப்பதை உறுதி செய்து கொண்டு வேகமாக வாசல் கதவைத் திறந்து சிறு போர்டிகோ வையும் தாண்டி ஒரு பக்க இரும்பு கேட்டை மட்டும் லேசாகத் திறந்து வைத்து மற்றொன்றில் சாய்ந்தவாறு நின்று எதிர்த்த வீட்டில் ஒரு கண்ணும் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் ஒரு கண்ணும் வைத்துச் சாதாரணமாக நிற்பதை போலக் காட்டிக் கொண்டு நின்றிருந்தான் தன்னவளின் வருகைக்காக.
இப்படி எப்போதும் கேட்டையொட்டி நின்றதில்லை என்பதை நினைவுகூர்ந்தவனாக, உதட்டின் ஓரம் லேசான புன்னகை பூக்க, நெற்றி ஓரத்தைத் தன் ஆட்காட்டி விரல் கொண்டு லேசாக வருடியபடி கொஞ்சம் அசவுகரியமாகவே நின்றிருந்தான்.
‘என்னவெல்லாம் செய்ய வைக்கிறா என்னை.’இதுக்கு மேல என்னைச் சங்கடப்படுத்தாம சீக்கிரமா வந்துடு டி…” என நினைத்துக் கொண்டே எதிரில் பார்க்க அவனை ஏமாற்றாமல் பூனை நடை நடந்து மெதுவாக வந்துகொண்டிருந்தாள் வசுந்தரா. அவளின் செயலே ஒருவித வித்தியாசமாக இருக்க அவளையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் சஞ்சய்.
இவர்களின் வீட்டிலிருந்து நேராகப் பார்த்தால் எதிர்த்த வீட்டு உள்வரை நன்றாகவே தெரியும். அப்படி படியிலிருந்து இறங்கியவள் பாதி தூரம் வேகமாக வந்தவள் பின்பு பதுங்கிப் பதுங்கி வர ஏதோ சரி இல்லை என்று கூர் பார்வையை அவள்மீது செலுத்தியபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சஞ்சய்.
வாசல் கேட்டிற்கு சில அடிகள் தூரம் மட்டுமே இருக்க, பதுங்கி வந்தவள் சுவற்றை ஒட்டியபடி தலையை மட்டும் நீட்டி அன்னாந்து எதிர்த்த வீட்டு பால்கனியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாகத் தலையை உள் இழுத்துக் கொண்டாள். எங்கே தான் பார்ப்பது தெரிந்து விடுமோ என்ற பயத்தில்.
இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாளென அவளையே பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவ்விற்கு பின்பே அவள் செய்வதின் அர்த்தம் புரிந்து சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது. எங்கே சத்தமிட்டு சிரித்தால் அவள் தன்னை கண்டு கொள்வாளோ என்று அஞ்சியவனாக உதட்டின் உள்ளேயே சிரிப்பை அடக்கி, அவளையே சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். இன்னும் என்னவெல்லாம் அவள் செய்யப் போகிறாள் என்று ஆர்வத்துடன்.
முதலில் லேசாகத் தலையை நீட்டி அண்ணாந்து மேலே பார்த்தவள், டக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். அவள் பார்க்க எண்ணியதை சரியாகப் பார்த்தாளா.? இல்லையா.? என்பது அவளுக்கே தெரியாத ஒன்று தான். மின்னல் வேகத்தில் பார்த்து விட்டுத் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
‘அய்யய்யோ.! பயத்துல டக்குனு தலைய உள்ள இழுத்துட்டேனே, அங்கே யாரும் இருந்தாங்களா.? இல்லையான்னு.? கூட இப்ப தெரியலையே. திரும்பவும் பார்க்கலாமா.? பயமா வேற இருக்கே.’ என்று தனக்குள்ளாக யோசித்துக் கொண்டிருந்தவள் பின்பு மறுபடியும் மெதுவாகத் தலையை லேசாக வெளியே நீட்டி நிமிர்ந்து பார்த்தவள், அங்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு,
‘அப்பாடா.!’ என நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டே எதிரில் பார்க்க, அவள் நிம்மதியின் ஆயுட்காலம் ஒரு நொடி கூட இல்லை. அங்கு இவள் செய்யும் அலப்பறைகளை பார்த்துக்கொண்டே,
ஒரு பக்க கேட்டின் மீது சாய்ந்த படி கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு அவளையே சிரிப்பை உதடு கடித்து அடக்கியபடி பார்த்திருந்தவன், அவள் இவனைப் பார்த்ததும் இரட்டை புருவத்தை ஒன்றாக உயர்த்தி கேள்வி கேட்டபடி அவளைப் பார்க்க.
இவன் மேலே இல்லை என்பதில் நிம்மதி அடைந்தவள் கீழே அவளின் செயல்கள் அனைத்தையும் பார்த்தபடி நின்று இருந்தவனை பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் பிளந்த வாய் மூடாமல். வேகமாகத் துடிக்கும் நெஞ்சை அழுத்தியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எங்குச் சென்று ஓடி ஒளிவது எனப் புரியாமல் ஆணி அடித்தது போல் அங்கேயே நின்று விட்டாள். அதிர்வு விலகாமல்.
‘என்ன செய்வது.? எப்படி அவனிடமிருந்து தப்பிப்பது.? அவனை எதிர்கொண்டு தாண்டி வீட்டிற்கு எப்படி செல்வது.?’ என யோசித்துக் கொண்டே நின்றிருந்தவளுக்கு ஆபத்பாந்தவளாக உதவ வந்தாள். இவளுடன் வேலை செய்யும் மற்றொரு ஆசிரியை.
அவள் நின்றிருக்கும் தோரணையை சரியாகக் கவனிக்காமல் அவளின் பின்புறத்தை மட்டும் பார்த்தவள், “என்ன வசுந்தரா.? இங்கேயே நின்னுட்டு இருக்க.? ஏதாவது மறந்துட்டியா என்ன.?” என்று கேட்டபடி அவள் அருகில் வர.
அவளின் கேள்வியில் சுயத்திற்கு வந்தவள். அதிர்வில் திறந்திருந்த வாயை டக்கென்று மூடியபடி. நெஞ்சில் வைத்து அழுத்திருந்த கையையும் லேசாக விளக்கிய படி. “ஒன்னுமில்ல. செருப்பு சரியா போடல அதான். ” என்றபடி வேகமாக அவளுடனே நடக்க ஆரம்பித்தாள் தலையைக் குனிந்து கொண்டு. வேகமாக அவளுடனே ஒட்டி நடந்து அவனைத் தாண்டிச் சென்று விட வேண்டும் என்ற வேண்டுதலுடன்.
ஓரப்பார்வையில் அவனையே பார்த்துக் கொண்டு நடந்தவனின் எண்ணம் புரிந்தவனாக அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் லேசாகச் சிரித்தவன். அவள் கைகளைப் பார்க்க முற்பட அதைப் புரிந்தவளாக வேகமாகத் தன் சுடிதார் துப்பட்டாவில் கைகளை மறைத்துக் கொண்டு தன்னோடு வந்த தோழியின் அருகில் இன்னும் நெருங்கிக்கொண்டு தன்னை முழுவதுமாக அவன் பார்வையிலிருந்து மறைத்தபடி வேகமாக அவனைத் தாண்டிச் சென்றவளுக்கு பயத்தையும் மீறி மனம் வெகுவாக வலித்தது.
தனக்காக அவன் வாங்கி கொடுத்த பரிசைப் பார்க்க முற்படுபவனுக்கு அதைக் கையில் அணிந்து அவனுக்குக் காட்ட முடியாத தன் நிலையை வெறுத்தவளாக வேகமாக நடந்து சென்றாள். கண்களை மறைக்கும் கண்ணீரை சிமிட்டியபடி.
வீட்டிற்கு வந்த வசுந்தராவிற்கு மனம் ஆறவே இல்லை. சரியாக இவள் வீட்டிற்குள் வரும் நேரம் தங்கை அன்னையோடு சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் வந்த வேகத்திலும் இருந்த ஆதங்கத்திலும் அவள் முன் சென்று நின்றவள்
“வசந்தி, அந்தப் பிரேஸ்லெட்டை தரியா.?” எனக் கை நீட்டிக் கேட்க அவளை நெற்றிச்சுருக்கி யோசனையாகப் பார்த்தவள்
“ஏன்.? இப்ப நான் என் கையில போட்டு இருந்தா என்ன.?”
எனக் கேட்டாள் சற்று கோபமாக. “இல்ல, அது அவங்க எனக்குன்னு கொடுத்தது.” என்றாள் இவளும் விடாமல். இன்று நிகழ்ந்த நிகழ்வுகளின் தாக்கம் தாங்காமல்.
“ஏன் உனக்குன்னு குடுத்தா நீ தான் போட்டுக்கணுமா…? இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நான் அம்மாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். இது எனக்கு வேணும்னு. இது மாதிரி உனக்கு வேற ஒன்னு வாங்கி தருவாங்க. இதை நான் எனக்குன்னு வச்சுக்க போறேன். உன்னுடைய கருப்பு கைய விட என்னுடைய வெள்ள கைக்குத் தான் ரொம்ப அழகா இருக்கு.” என்றாள் ஆணவத்துடன். இங்கும் அங்கும் அந்தப் பிரேஸ்லெட்டை நகற்றியபடி.
இவை அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் கோகிலா.
தங்கை கூறியதில் ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை பெண் அவளுக்கு,
‘என்னது.? தன்னவன் தனக்காக முதன்முதலில் வாங்கி கொடுத்த பரிசைத் தங்கை எடுத்துக் கொள்ளப் போகிறாளா.? அதற்குப் பதில் வேறொன்றா.? இதற்குத்தான் சம்மதிக்க வேண்டுமா.? இது அவர்கள் வீட்டிற்கு தெரிந்தால் என்ன நினைப்பார்கள்.’
இவை அனைத்தையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த கோகிலாவை பார்த்தவள் அவர் எதுவும் மறுத்துச் சொல்லாமல் இருப்பதை கண்டு அன்னைக்கும் இதில் உடன்பாடு தான் என்பதை புரிந்தவளாக இதற்கு மேல் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லையென நினைத்து எப்பொழுதும் போல இதையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நினைவு அவள் மனதை கொள்ளாமல் கொன்றது. ஆனால் இதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என்ற நினைவு மட்டும் மனதை அழுத்த இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவளாகத் தந்தையின் வரவிற்காகக் காத்திருந்தாள் வசுந்தரா.
தந்தையின் வரவிற்காக ஆவலுடன் காத்திருந்தவருக்கு அவர் வீட்டிற்கு வந்தபிறகு அவருக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்துச் செய்தவளால் அவரிடம் சென்று தன் மனக்குமுறல்களை கூற முடியாமல் தடையாக அன்னை அங்கேயே அமர்ந்துகொண்டிருந்தார். இவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவர் பார்வையும் இவளைப் பின்தொடர, தந்தையிடம் தைரியமாக எதையும் சொல்ல முடியவில்லை பெண் அவளால்.
ஆனாலும் சரியான சந்தர்ப்பம் பார்த்துக் இருந்தவளுக்கு தந்தை சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் கிடைக்க. அவர் அருகில் வேகமாகச் சென்றவள் பேசுவதற்குள்ளாகவே அவளை எதிர்கொண்ட ரகுபதி.
“என்னடா மா.? ஏன் ரொம்ப கலக்கமா இருக்கே.? ரொம்ப வேலையா.? எப்பவும் போல உனக்கு யாரும் எந்த உதவியும் செஞ்சிருக்க மாட்டாங்க.” என்று அவள் தலையைத் தடவிய படி கேட்க.
“அவளுக்கு என்ன.? எல்லாம் கல்யாணம் ஆகப் போற மெதப்புல சுத்திக்கிட்டு இருக்கா.”
“ஏன்டி நல்லதாகவே உனக்குப் பேச வராதா.? எப்பவுமே குதற்கமா தான் பேசுவியா…?” என்று மனைவியைக் கடிந்தவர்.
“நீ எதுக்கும் கவலைப்படாத டா. அப்பா இருக்கேன் உனக்கு. உன்ன ஒரு நல்லவன் கையில் ஒப்படைச்சு, உனக்கு ஒரு நல்லத செஞ்சு பாக்காம நான் ஓயமாட்டேன்.” என்றவர், தன்னை மீறி வந்த கொட்டாவியை கைக்கொண்டு அடக்கியவாறு,
“அப்பா போய்ப் படுக்கிறேன் டா. காலைல இருந்து நிறைய வேலை. ரொம்ப அசதியா இருக்கு.” என்றவர், அவள் முகம் தெளியமல் இருப்பதை பார்த்து,
“அப்பா போய்ப் படுக்கவா.?” எனக் கேள்வியாக அவளைக் கேட்டவர். பின் என்ன நினைத்தாரோ
“சரி சொல்லு என்ன சொல்லணும் உனக்கு என்கிட்ட.?” என்று கேட்டபடி அவளை அழைத்துக்கொண்டு சோபாவில் அமர வைத்துத் தானும் அவள் அருகில் அமர்ந்தார்.
இப்படி எல்லாம் இதற்கு முன் நடந்திராததால்
“என்னது இது.? நடக்காத புதுமையெல்லாம் நடந்துட்டு இருக்கு.” என்ற படியே அவர்களின் அருகில் வந்த கோகிலா மகளை முறைத்துப் பார்க்க, அதற்குள் வசந்தியும்.
‘தமக்கை எங்கே தன்னை போட்டுக் கொடுத்து விடுவாளோ தந்தையிடம்.’ எனப் பயந்தபடி அவர்களையே பார்த்தவள். அன்னைக்கும் கண் காட்ட மறக்கவில்லை ஏதாவது செய்யுங்கள் என்றவாறு.
“ஏன் டி வேலையிலிருந்து வந்த மனுஷனை கொஞ்சம் கூட ஓய்வெடுக்க விடாமல் இப்படி படுத்தி எடுக்கிற.? அப்படி என்ன சொல்லணும் உனக்கு அவர்கிட்ட.? அதுதான் ஊர்ல இல்லாத மாப்பிள்ளையை உனக்குப் பார்த்து வச்சிருக்காரே. ஏன் உனக்கு அந்த மாப்பிள்ளைய பிடிக்கலையா.? இந்தக் கல்யாணம் வேண்டாமா? அதை நிறுத்துவதற்கு தான் உங்க அப்பா கிட்ட பேசணும்னு துடியா துடிச்சிட்டு நிக்கிறியா.? உன் மனசுல வேற யாரையாவது நினைத்து இருக்கிறியா என்ன.? பால்வாடி ஸ்கூலுக்கு போறேன்னு சொல்லிட்டு வேற எவனையாவது பார்க்கத் தான் போறியா.? எவன் கூடயாவது பழக்கம் வச்சுக்கிட்டியா.? ஐயையோ இதெல்லாம் நம்ம குடும்பத்துக்காகுமா.?”என்று மகள் தப்பே செய்து விட்டதாக உறுதியானது போல அவள்மீது சரமாரியாகக் குற்றச்சாட்டைச் சுமத்த, பதறித் துடித்து எழுந்தவள்.
“அப்படியெல்லாம் எதுவுமே இல்ல. எனக்கு யாரையும் தெரியாது. நான் யாரையும் பார்த்ததும் இல்லை. அப்பா என்னை நம்புங்க.” என்றவளுக்கு கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.
“ஏய் ச்சி. என்ன பேசுற நீ.?” என்று மனைவியை அதட்டியவர்.
“இவங்க பேசுறதுக்கெல்லாம் அழுதா நீ அழுதுகிட்டே தான் இருக்கணும். இதுங்க பேசறது எல்லாம் காதிலேயே வாங்கிக்காத. சாப்பிட்டு போய்ப் படு.” என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டு சென்றார்.
தந்தையிடம் என்ன பேச வந்தோம் என்பதே சுத்தமாக மறந்து விட்டிருந்தது அவளுக்கு. அதற்குப் ப
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
+1

