
“ரெண்டு பேரும் தயாராகி வர இவ்வளவு நேரமா? ஒன்பது மணியிலருந்து வள்ளி போன் பண்ணிக்கிட்டு இருக்கு மகளும் மாப்பிளையும் கிளம்பியாச்சானு, பத்து நிமிஷத்துல ரெடியாகிட்டு வரேன் பாட்டினு சொல்லிட்டி போனவன் ரெண்டு மணி நேரம் கழிச்சு வர, ஏமா நித்யா நீயாவது சொல்ல கூடாதா உன் புருஷனுக்கு, மணியை பாரு பகல் பன்னிரெண்டாச்சு” தயாராகி வந்த பேரனையும் பேத்தியையும் நிற்க வைத்து புலம்பினார் செவ்வந்தி….
நித்யாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, கணவனை ஓரக்கண்ணால் முறைத்தபடி பாட்டிக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி போய் நிற்க, அவனோ அவளது முறைப்பை இதழில் பூத்த புன்னகையுடன் பார்த்தபடி நின்றான்,…
“வள்ளி மறுபடி போன் பண்ணுறதுக்குள்ள புள்ளைங்களை அனுப்பிவை செவ்வந்தி, நீயே இன்னும் தாமதமாகிக்கிட்டு இருக்க பாரு” என்றார் தர்மத்துரை,…
“அதுவும் சரி தான், ரெண்டு பேரும் பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க, ரிஷி கண்ணா என் பேத்தி பத்திரம்” என்ற சொல்லோடு பேரனுடன் பேத்தியை அனுப்பி வைத்தார் மறுவீட்டு சடங்கிற்காக,…
வீட்டின் வாசலிலேயே காத்திருந்த செந்தூரவள்ளி, மருமகனின் கார் வருவதை கண்டதும் உற்சாகமானவர், இன்முகத்துடன் வரவேற்றார் காரிலிருந்து இறங்கியவர்களை, அவர்கள் வந்ததை அறிந்து வேகமாக உள்ளிருந்து வெளியே ஓடிவந்த வருணேஷும் தன் நண்பனையும் தங்கையையும் அணைத்து வரவேற்றான் மனமுழுக்க சந்தோசத்துடன்,…
செந்தூரம் வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று, சம்பிரதாயமாக சில சடங்கையும் செய்ய வைத்தவர், அவர்களை அமர வைத்து பழச்சாறு பரிமாறினார், வந்ததிலிருந்து ரிஷி மட்டுமே பேசிக் கொண்டிருந்தான் இருவரிடமும், நித்யா வாயில் கொழுக்கட்டையை திணித்திருப்பது போல் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் அமர்ந்திருந்தாள்,…
தாயும் தமையனும் ஏதாவது கேள்வி கேட்டாலும் கூட ம்ம்ம் என்ற முணங்களோடு நிறுத்திக் கொண்டாள்,… “என்னடா இவ மாமியார் வீட்டுக்கு வந்த புது மருமக மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கா, உன்கிட்டலாம் பேசினாளா? இல்லையா?” நண்பனின் அருகில் அமர்ந்திருந்த வருணேஷ் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சந்தேகமாக வினவினான்,…
“பேசுனா பேசுனா” என்றவன் “இருந்தாலும் உன் தங்கச்சிக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி, கட்டுன புருஷன் என்கிட்டயே இன்னொருத்தனை லவ் பண்ணுறேன்னு சொல்றா? நான் கூட அவ்ளோ சீக்கிரம் சொல்ல மாட்டா இழுத்தடிப்பானு நினைச்சேன், ஆனா ரெண்டாவது நாளே சொல்லிட்டா” என்றான்…
“என்னடா சொல்ற? செவுல்லயே நாலு விற்றுக்க வேண்டியது தானே, வழிக்கு வந்திருப்பாள்ல” அவ்வளவு ஆத்திரம் வந்தது அவனுக்குள்,…
“அப்படி பண்ணிருந்தா என் பக்கத்திலேயே வர பயந்திருப்பா, இப்போ இவ்ளோ நார்மலா உட்கார்ந்துட்டு இருந்திருக்க மாட்டா” அவன் கூறவும்,… “அப்போ என்ன பண்ண? அவ ரொம்ப பிடிவாதகாரியாச்சே என்ன சொல்லி உன் வழிக்கு கொண்டு வந்த” என்றான்….
“ம்ம்… அவ லவ்வர் கூட சேர்த்து வைக்கிறேன்னு சொல்லிருக்கேன்” ரிஷி சர்வ சாதாரணமாய் கூற, நெஞ்சடைக்க அவனை பார்த்தவன்,… “பைத்தியமாடா நீ” கோபத்தில் கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட, நித்யாவும் செந்தூர வள்ளியின் அவன் சத்தத்தில் அவனை தான் பார்த்தனர் ஒருசேர,..
“என்னடா,… மாப்பிளை கிட்ட ஏன் சத்தம் போட்டுக்கிட்டு இருக்க” செந்தூரம் சத்தமிடவும்,… “அதெல்லாம் ஒன்னுமில்ல அத்த, உங்க பையன் தானே மறுவீட்டு ஃபன்சன் கேன்சல்னு சொன்னான், அதை அத்தை கிட்ட சொல்ல போறேன்னு சொன்னேன், அதுக்கு தான் கோபப்படுறான்” மறந்து போயிருந்த செந்தூரத்திற்கு அவன் மீண்டும் அவன் செய்த தவறை நியாபகப்படுத்தி விட,…. “எனக்கு தெரியும் மாப்பிளை, இந்த அறிவுகெட்டவனுக்கு எந்தெந்த விஷயத்துல விளையாடுறதுன்னே தெரியல, இதுல உங்க மேல வேற கோபப்பட்டு திட்டறானா?” என மகனை முறைக்க,… அதையெல்லாம் கண்டுகொள்ளாத வருணேஷ், நண்பனை தான் விழிகளில் அனலை தேக்கி வைத்து முறைத்துக் கொண்டிருந்தான்,..
செந்தூரமோ சில நிமிடங்கள் மருமகனிடம் பொதுவாக பேசியவர், “சரி மாப்பிளை நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் இப்போ வந்திடுறேன்” என அடுக்கலைக்குள் சென்றுவிட, “நித்து நீயும் போயேன், அத்தைக்கு உதவியா இரு” ரிஷி மனைவியிடம் கூற,… “எதுக்கு? நான் எதுக்கு போகணும், நான் போக மாட்டேன்” என்றாள் வீராப்பாய் கைகட்டி அமர்ந்து கொண்டு,…
“ஏய் புருஷன் சொன்னா சொல் பேச்சு கேட்டு நடந்துக்கோ, என் முன்னாடியே இப்படி பேசுற” ஏற்கனவே கோபத்திலிருந்த வருணேஷ் தங்கையின் சொல்லில் கோபம் கொண்டு எகிற, நித்யாவின் முகம் விழுந்துவிட்டது,..
தான் கருணாவை கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன் என்று கூறிய போது கூட அவன் தன்மையாக கோபம் கொள்ளாமல் தான் எடுத்து சொன்னான், அவன் நமக்கு சரி வர மாட்டான், அவனை மறந்து விடு என பொறுமையாக எடுத்துரைத்தவன், இப்போது சட்டென்று கோபம் கொள்ளவும், கண்களில் குளம் கட்டி நிற்க, எழுந்து அடுக்கலைக்குள் நுழைந்து கொண்டாள்,…
“ஏன்டா என் பொண்டாட்டி கிட்ட கோபப் படுற, அவ என்கிட்ட தானே பேசுனா, இனி அவளை ஏதாச்சும் சொன்னனா பார்த்துகிட்டு நான் சுமம்மா இருக்க மாட்டேன்” என்ற ரிஷியை, எரிக்கும் பார்வை பார்த்தவன்,… “நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க ரிஷி, ஏன்டா அவ கிட்ட அப்படி சொல்லி வச்சிருக்க” என்று கேட்ட நண்பனிடம், நித்யாவிடம் அன்று கூறிய அனைத்து விஷங்களை பற்றியும் கூறி முடித்தான், அதை கேட்க கேட்க மேலும் மேலும் எரிந்தது வருணேஷிற்கு,…
“தப்பு பண்ணிட்டேன்டா, உனக்கு நான் அவளை கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கவே கூடாது, ஏன்டா இப்படி சீரியஸ்னஸ் இல்லாம இருக்க, நாளைக்கே அந்த கருணா அவளை தேடி வந்து, வானு கூப்பிட்டா, இவ அவன் பின்னாடியே போனா என்னடா பண்ணுவ, அவ வாழ்க்கையோட சேர்த்து உன் வாழ்க்கையும்லடா நடுத்தெருவுல நிற்கும்” என்றான் ஆதங்கமாய்…
ரிஷி வாய் திறந்து எதுவும் பேசவில்லை, உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவனது புலம்பல்களை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ,… “சிரிக்காதடா எனக்கு பத்திக்கிட்டு வருது, நீ பிளான் இல்லாம எதுவும் பண்ண மாட்ட, சரி சொல்லு என்ன பிளான் வச்சிருக்க” என்றான்,…
“பிளான் போட்டு எதுவும் பண்ணல மச்சான், பட் ஐ லவ் நித்து” என்று உணர்வு பூர்வமாக கூறிவனை, விழிகள் சுருங்க பார்த்தவன்,.. “இப்போ என்ன தான்டா சொல்ல வர, உன் பொண்டாட்டியை லவ் பண்ணுற சரி, அப்புறம் ஏன்டா அப்படி ஒரு வாக்கு கொடுத்திருக்க” என்றான்..
“எனக்கு அந்த நேரத்துல வேற என்ன பண்ணுறதுன்னு தெரியல ஸோ” என்று ஒரு பெருமூச்சுடன் முடித்து விட்டான்,…
“வாய்ல நல்லா வருது, உன்னால சிட்சுவேஷனை சமாளிக்க முடியலயா? யார் கிட்டடா காது குத்தற, எல்லாம் தெரிஞ்சு தானே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட, அவ இப்படி ஒரு சிட்சுவேஷனை க்ரியேட் பண்ணுவான்னு உனக்கும் தெரியும், தெரிஞ்சும் இவ்ளோ பெரிய வாக்கு கொடுத்திருக்க, சுயநினைவுல தான் இருக்கியாடா?” என்றான்…
ரிஷி விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்தான், இதழில் புன்னகை மாறாமல் அப்படியே இருந்தாலும், முகத்தில் ஒருவித கலக்கம் தெரிந்தது, அதனை கண்டுகொண்ட வருணேஷ்,… “என்னடா ஏதாவது பிரட்சனையா?” என்றான்…
கொஞ்ச நேரம் அமைதி காத்தவன்,.. “அவனை பார்க்க போயிருந்தேன்டா” என்றான்,…
“யாரை?” வருணேஷ் படப்படப்பான மனதுடன் கேட்க,… “கருணாவை” என்றதும்,.. “நீ ஏன்டா அவனை பார்க்க போன, ஹாஸ்பிடல்ல தானே இருக்கான், கண் முழிச்சிட்டானா என்ன? விஷயம் தெரிஞ்சு ஏதாவது மிரட்டுனானா? அப்படியே மிரட்டினாலும் அவ்ளோ சீக்கிரம் அசருற ஆள் இல்லையே நீ, என்ன தான்டா நடந்தது” என்றான் தலைமுடியை பிய்த்து கொள்ளாத குறையாக, அதற்கு பிறகு அங்கு நண்பர்கள் இருவரும் ஏதோ ரகசியமாய் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர், ரிஷி ஏதோ சொல்ல சொல்ல, வருனேஷின் முகம் எரிச்சலாய் மாறியது, மறுகணமே நண்பனின் இக்கட்டையும் புரிந்து கொண்டு அவன் தோளில் அழுத்தம் கொடுத்தவன், நண்பன் மற்றும் தங்கையின் வாழ்க்கையில் எந்த வித தவறான காரியமும் நிகழ்ந்துவிட கூடாது அந்த கருணாவால் என்றும் மனதார பிராதித்து கொண்டான்,…
அதற்கு பிறகு செந்தூரம் வரவும், அவர்கள் இருவரும் முகத்தை இலகுவாக வைத்துக் கொண்டு வேறு விஷயங்களை உரையாட ஆரம்பித்தனர், தாயை பின்தொடர்ந்து வந்த நித்யா ரிஷி மற்றும் வருணேஷை சந்தேகமாகவே பார்த்து கொண்டிருந்தாள் அவர்களின் இயல்பாக கலகலப்பான உரையாடலை கண்டு,…
ஏதோ பல வருடம் பழகிய நண்பர்கள் போல் இவ்வளவு ஒற்றுமையாய் பேசிக் கொள்கிறார்களே, இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்திருக்குமோ என்று யோசிக்க தொடங்கினாள், ஏனென்றால் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று நித்யாவிற்கு தெரியாது,….
கணவனை மகள் பிறந்த ஐந்தாம் வருடத்திலேயே இழந்த செந்தூர வள்ளி தான் படித்த பெண் என்பதால், அவ்வூரிலேயே ஒரு பள்ளியில் ஆசிரியராய் பணிபுரிந்து அதில் வரும் வருமானத்தில் தான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார், சொந்தபந்தங்கள் அதிக பேர் இருந்தாலும் பணம் கொடுத்து உதவும் அளவுக்கெல்லாம் உறவை நீடித்து வைத்திருக்கவில்லை, செந்தூரமும் மற்றவர்களிடம் எதிர்பார்த்து நிற்கமாட்டார் என்பதால் தன் உழைப்பால் ஓய்வு நேரத்திலும் மிஷின் தைத்து தான் பிள்ளைகளை படிக்க வைத்தார், அவர்கள் வசிக்கும் ஊரில் தமிழ் மீடியம் தான் அருகில் இருக்கும் பள்ளி, நித்யஸ்ரீ அங்கு தான் படித்தாள், வருணேஷ் பக்கத்து ஊரிலுள்ள இங்கிலீஸ் மீடியத்தில் படிக்கும் போது தான் ரிஷியின் நட்பு கிடைத்தது, இருவரும் எல்கேஜியிலிருந்தே நண்பர்கள், ரிஷி வருணேஷின் வீட்டிற்கு சிறு வயதில் வந்திருக்கிறான் அதுவும் சில முறையே, அப்போதெல்லாம் நித்யா சிறு பெண்ணாக இருந்ததினால் தற்போது அவனை நியாபகம் இருக்கவில்லை, ரிஷி வசிக்கும் ஊருக்கும் வருணேஷ் வசிக்கும் ஊருக்கும் பல கிலோ மீட்டர் தொலைவு என்பதால் இருவரும் பள்ளியில் நட்பு பாராட்டி கொள்வதோடு சரி, இந்த காரணத்தினாலேயே ரிஷியை பற்றி நித்யாவிற்க்கு எதுவும் தெரியாமல் போனது, பள்ளி படிப்பு முடிந்ததும் ரிஷியும் வருணேஷும் வெவ்வேறு படிப்பை தேர்ந்தெடுத்ததால் கல்லூரி காலத்தை ஒன்றாக செலவிடமுடியாமல் போயிற்று, இருந்தும் நாள் தவறாமல் சாட்டிங் மற்றும் போன் காலில் கடலை வறுக்காத நாளும் இல்லை, ரிஷி படிப்பு முடித்ததும் போலீஸ் ட்ரைனிங்கில் இறங்கி விட, வருணேஷ் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான், அந்த சில மாதங்கள் தங்களது வேலையில் மூழ்கிருந்ததால் அவ்வளவாக பேசிக் கொள்ள முடியாமல் போனது, பிறகு ஒரு நாள் ரிஷியே அவனுக்கு அழைத்து தான் போலீஸாகிவிட்டதாக கூற, சந்தோச கொண்ட வருணேஷும் தனக்கு வேலை கிடைத்து விட்ட விஷயத்தையும் பகிர்ந்து கொண்டான்,…
அடுத்த சில மாதங்கள் வேலை பழுவின் காரணமாக இருவரும் பிஸியாகி போக, அன்று ஒருநாள் ரிஷிக்கு போன் பண்ணிய வருணேஷ், படபடப்பாக எதையோ பற்றி கூறினான், அனைத்தையும் பொறுமையாக கேட்ட ரிஷி, தான் அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக கூறினான், அடுத்தடுத்து வந்த சில நாட்களில் என்னென்னவோ சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்க, அதில் ஒன்று தான் ரிஷி நித்யாவின் திருமணமும், கணவனும் தமையனுன் நண்பன் என்பதை அறிந்திடாத நித்யா சந்தேகம் கொண்டு அவர்களிடமே கேட்டுவிட்டாள்… “உங்க ரெண்டு பேருக்குமே முன்னாடியிலிருந்தே பழக்கமோ” என்று…
இருவரும் அலட்டிக் கொள்ளாமல் “ஆமா நாங்க பிரண்ட்ஸ்” என்றார்கள் ஒரு சேர தோள்களை குலுக்கி,…
நித்யாவிற்கு ஆச்சரியமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருந்தது,.. ‘இது எப்படி நமக்கு தெரியாம போச்சு’ என்று சிந்திக்க தொடங்கிடவளை… “வாடா ஸ்ரீ மாப்பிள்ளைக்கு பசிக்கும், சாப்பாடு எடுத்து வைக்க எனக்கு உதவி பண்ணு” என மகளை அழைத்து சென்றார்,…
‘மாப்பிள்ளைக்கு மட்டும் தான் வயிறுயிருக்கா பசிக்கிறதுக்கு, ஏன் எங்களுக்கெல்லாம் பசிக்காதா?’ என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தையை விழுங்கி விட்டு, தாய்க்கு உதவ சென்றாள்,…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
2
+1
+1

