7_ மாயோனின் மலரோவியம்

Loading

மாயோன் 7

இங்கு நந்தினியை தேடி சென்ற அடியாட்கள் அனைவரும்  பகுதியாக பிரிந்து, அங்கும் இங்கும் அலைந்து தேடி கொண்டிருந்தனர்… 

நந்தினியோ அவர்களிடம் இருந்து தப்பி ஓடியவாறே கண்களை சுழல விட்டவளுக்கு திக்கும் தெரியவில்லை திசையும் புரியவில்லை… 

உடல் சோர்ந்து, உதடு வறண்டு தண்ணீருக்கு ஏங்கி நின்றவள்… அப்படியே நடு காட்டில் அமர்ந்து விட்டாள்… 

” ஹ்.. ஹ்ம்ம்ம்… ” என்று மூச்சி வாங்கியவள் சோர்ந்து போனாள். அப்போது அவளை தேடி வந்த அடியாட்கள் இருவர் அந்த இடத்தில் அவளை கண்டு கொண்டு ” ஏய் அவள் இங்க இருக்காள் ” என்றவர்கள் நந்தினியின் அருகில் ஓடி வர… அவர்களது சத்தம் கேட்டு திகைத்து திரும்பியவள்… அவர்களை கண்டதும் கஷ்டபட்டு எழுந்து ஓட தொடங்கினாள்… 

அடியாட்களும் அவளை துரத்தி கொண்டு ஓடினார்கள்… அப்போது அவளை நெருங்கிய ஒருவன் ” நில்லு ” என்றவாறு அவளது சேலையை பிடித்து இழுக்க .. கால் தடுமாறி அந்த இடத்திலேயே கீழே விழுந்தாள் நந்தினி… 

கீழே விழுந்த வேகத்தில் ஆடை விலகி கிடைந்தவளை ஒரு மார்க்கமாக பார்த்த அந்த அடியாட்களில் ஒருவன் ” செம்மையா இருக்கா இல்லடா” என்று கூறியவாறே…அவளை நெருங்கி வர… அவன் பார்வை பதியும் இடம் கண்டு அருவருப்பாக உணர்ந்தவள்… நொடியில் விலகிய தன் சேலையை சரி செய்தவாறே பின்னால் நகர்ந்தாள்… நந்தினி… 

அவளை மார்க்கமாக பார்த்தவாறே அருகில் வந்த ஒருவன்… நொடி நேரத்தில் அவள் மீதி படர்ந்தான்… 

தன் மீது படர்ந்தவனை… தன் பலம் கொண்டு தாக்க முயன்றாள் பெண்ணவள்… ஒரு கட்டத்தில் அது முடியாமல் போகவே… அவனிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளும் நோக்கத்தில் தனது சேலையில் குத்தி இருந்து சேப்டி பின்னை கழட்டி,  அவன் அசந்த நேரம் பார்த்து அவனது கண்ணில் ஓங்கி குத்தினாள்… 

அதில் அந்த அடியாள் கத்தியபடி அவளை விட்டு விலக… அப்போது அவளது பக்கத்தில் மீண்டும் ஒருவன் நெருங்கி வந்தான்… 

நெருங்கி வந்தவனது உயிர் நாடியில் தாக்கியவள்… தனது சேலை முந்தானையை எடுத்து மீண்டும் தோள் மீது போட்டு சுற்றி கொண்டாள்… 

அப்போது அங்கு அடியாட்களின் அலறல் சத்தம் கேட்டு… மேலும் சில அடியாட்கள் அங்கு வந்து சேர்ந்தனர்… 

வந்தவர்கள் அனைவரும் நந்தினியை சுற்றி  நின்று கொண்டிருக்க… பலவீன பட்ட மனதையும், உடலையும் வைத்துக் கொண்டு அவளுக்கு அங்கு நிற்க கூட தெம்பில்லாமல்… கண்கள் கலங்கி போனது… 

.

மீண்டும் அங்கிருந்த ஒருவன் அவளது சேலையில் கைவைக்க… எதிர்த்து போராட தெம்பில்லாமல்  செயலற்று நின்றவள்… எதிரில் இந்த நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்த சத்யனை கண்டு… உள்ளம் நொந்து வேதனையடைந்தாள்… 

அவளது கண்களில் வலியும், ஏமாற்றமும் அப்பட்டமாக தெரிந்தது… 

ஆனால் அங்கிருந்தவர்கள் நந்தினியின் ஆடையின் மீது கைவைக்கும் பொழுது கூட…சத்யனின் முகத்தில் எந்த வித உணர்வும் வெளிப்படவில்லை… அதனை பார்த்து விரக்தியாக சிரித்த… நந்தினி… அப்படியே அவர்கள் முன் மண்டியிட்டு அமர்ந்து விட்டாள்… காக்க வேண்டியவனே காவு கொடுக்க நினைக்கும் பொழுது காரிகையவளும் என்ன தான் செய்ய முடியும்… 

மனதால் மறித்து போன என் தேகம் தீண்டுவதால் உனக்கு இன்பம் கிட்டும் எனில்… ஞாபகம் வைத்து கொள்! நீ தீண்டுவது பெண்ணை அல்ல… பிணத்தை என்று… நீ என்னோடு இணைவது… என் சவத்தோடு இணைவதற்கு சமம்…  சவத்தோடு கூடல் கொண்டு இன்பம் பெற நினைக்கும் நீ மனித இனமே அல்ல… 

தேகம் மரத்து போய் அமர்ந்திருந்தவளை அவர்கள் நெருங்கும் வேளையில்.. “ம்ம்ம் போதும் அவளை விடுங்க … ” என்று கூறினான் சத்யன். 

அவனது குரல் கேட்டு அனைவரும் அவளை விட்டு விலகி நின்றனர்… 

” நீங்க எல்லாம் போகலாம் ” என்று கூறி அங்கிருந்த அடியாட்களை அனுப்பி வைத்த சத்யன்… அவர்கள் அங்கிருந்து சென்றபிறகு…   இன்னும் எந்த வித உணர்வுமின்றி சிலையாய் அமர்ந்திருந்த நந்தினியின் அருகில் வந்து முட்டியிட்டு அமர்ந்தான்… 

அவனது முகத்தை கூட பார்க்க தெம்பில்லாமல் தலை குனிந்து அமர்ந்தவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன்… ” இப்போ எப்படி இருக்கு?  ” என்று நக்கல் தோணியில் கேட்டான்… 

அவனது முகத்தை வலியுடன் பார்த்த நந்தினி…  ” எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுற? நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன் ” என்று கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது… 

” பாவமா?… இல்ல.. இல்லை… துரோகம் ” என்று கூறிய சத்யனின் கண்கள் நொடியில்  மாறியது… 

அவனை புரியாமல் பார்த்த நந்தினி ” துரோகமா? ” என்று கண்கள் சுருக்கி கேட்டாள்…

” ஆமாடி… ” என்று கோவமாக கத்தியவன்… தன் கோவத்தை குறைக்க..  சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகைக்க தொடங்கினான்… 

சிறிது நேரத்திற்கு பிறகு நிதானம் அடைந்தவன்… 

 

” தேவா ” என்று மென்மையாக தேவநந்தினியை அழைக்க… அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தவள்…. அடுத்து அவன் கூறிய வார்த்தையால் அப்படியே அதிர்ந்து போனாள்…

” தேவவர்ஷினி… உங்களுக்கு எல்லாம் வர்ஷா… ஆனால் எங்களுக்கு தேவா ” என்று அவன் வலியுடன் கூற… நந்தினிக்கு எண்ணம் எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்னோக்கி பயணமாக ஆரம்பித்தது… 

அதை எல்லாம் யோசித்து பார்த்து தலையில் அடித்து கொண்ட நந்தினி… எதிரில் இருந்த சத்யனை பார்த்து ” இது எல்லாம் உங்களுக்கு எப்படி ? ” என்று தடுமாறி கேட்டாள்… 

” பாவம் பண்ணிட்டு அதுல இருந்து சுலபமா தப்பிக்கலாம்னு பார்த்தியா? கடவுள் விட்டிடுவானா என்ன? அவரே விட்டாலும்  எங்க விக்ரமன் விட்டுடுவான்னு நெனச்சியா?  ” என்றவன் அவளை புருவம் உயர்த்தி பார்த்தான்… 

” ஐயம் சாரி…  அதை நான் வேணும்னு பண்ணல… அப்படி எல்லாம் நடக்கும்ன்னு நான் கனவுல கூட யோசிச்சி பார்க்கல” என்று அவள் மன்னிப்பு கேட்க…

” ஒஹ்… இப்போ நீ சொல்லுறதை எல்லாம் நான் நம்பனும்… அப்படி தானே ” என்று கூறியவன் அவளை அனல் தெறிக்க பார்த்தான்… 

” இல்லை சத்யா அதுல உண்மையாவே என் தப்பு எதுவும் இல்லை ” என்றவளின் தலை முடியை கொத்தாக பற்றியவன்… ” ஷ்… பேசாத… நீ இப்படி பொய் சொல்ல சொல்ல… எனக்கு வெறியாகுதுடி… இங்கேயே உன்னை நாறு நாறா பிச்சி எறியனும் போல ஆத்திரம் வருது… வேண்டாம் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதா? ” என்று கண்கள் சிவக்க கூறினான்… 

” நடந்து முடிஞ்சதை பேசி இப்போ என்ன ஆக போகுது சத்யா… இது நம்ம வாழ்க்கை… என் வயித்துல உன் குழந்தை வளருது… அதுக்காகயாவது என்னை மன்னிக்கலாம் இல்லை ” என்று அவள் கண்ணீருடன் கேட்க… சத்தமாக சிரித்த சத்யன்… 

” என் குழந்தையா? குட் ஜோக், எங்க காட்டு ”  என்றவன்… சிகரெட் தனலை கொண்டு அவளது கையில் சூடு வைத்தான்… நந்தினியோ வலியில் அலறினாள்… 

” எங்கடி காட்டு!  என் குழந்தைன்னு சொன்ன இல்ல அப்போ காட்டு… ” என்று கேட்டவனிடம் அவள் எப்படி உண்மையை கூறுவாள்… அதனால் குற்றஉணர்ச்சியில் மௌனம் காத்தாள்… 

” என்ன அமைதி ஆகிட்ட… உன்னால இதுக்கு பதில்  சொல்ல முடியாது… என் குழந்தையை  உன்னால காட்டவும் முடியாது… இருந்தால் தானடி காட்டுவ… ” என்று கேட்டவன் அவளை எரிச்சலாக பார்த்தான்… 

” அது… ” என்று நந்தினி தடுமாற…

” போதும் நிறுத்து! மறுபடியும் உன் பொய்யை கேட்க நான் தயாரா இல்லை… நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன அடுத்த நாளே நீ கருவை கலைச்சிட்டன்னு எனக்கு தெரியாதுனு நெனச்சியா ? ” என்று அவன் கூற… நந்தினியின் முகம் வியர்த்து வடிந்தது… 

” ஆனால் நீ வாழ்க்கையில் ஒரே ஒரு  முறை உண்மையை மட்டும் பேசி இருக்க.. அதுவும் இன்னிக்கு காலையில… விக்ரமன் சார் கிட்ட… சொன்னியே.. ‘ நான் இன்னும் அதே நந்தினி தான்’  அப்படின்னு அது நூறு சதவீதம் உண்மை… நீ அதே நந்தினி தான்… அதே விஷம்… உதட்டுல மட்டும் தேன் .. உடம்பு முழுக்க விஷம்… நீயெல்லாம் செத்தாலும் மாற மாட்டடி…” என்று அவன் கூற… 

” ஆமாடா… நான் அப்படி தான்… நீ என்னை விட்டுட்டு போன அப்ரோம் உன் குழந்தையை சுமந்து என் வாழ்க்கையை வீணாக்கிக்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை… ” என்று அவள் கோவத்தில் கூற… இதழ் பிதுக்கி சிரித்து கொண்ட சத்யன்… 

”  இதோ இப்போ உன் வாயாலயே உண்மை வந்துடுச்சா இது தான் நீ! ” என்றான் நக்கலாக… 

” ஆனால் நான் உன்மேல கொண்ட காதல் உண்மை… உன்னை ரொம்ப நம்பினேன்டா… என்னை ஏன் ஏமாத்தின… அந்த ஏமாற்றத்தை தாங்கிக்க முடியாமல் தான் அப்படி பண்ணிட்டேன்… இந்த குழந்தை இருக்கும் போது எல்லாம் நான் உன்னை நம்பி ஏமாந்தது எனக்கு ஞாபகம் வரும்னு சொல்லி அதை கலைச்சேன். கண்டிப்பாக அந்த ஏமாற்றம் என் மனசுல இருக்க வரை  அந்த குழந்தை பிறந்தாலும்… என்னால அதுக்கு உண்மையான பாசத்தை கொடுக்க முடியாது…உண்மையான தாய் பாசமும், தந்தை பாசமும் கிடைக்காமல் அந்த குழந்தை வளர்ந்து கஷ்டப்பட கூடாதுன்னு தான் மனசை கல்லாக்கிட்டு கருவுலயே  அந்த குழந்தையை கலைச்சேன்…  ஆனால் நான் எவ்வளவோ தப்பு பண்ணி இருக்கலாம்! ஆனால் வர்ஷா விஷயத்தில என் மேல எந்த தப்பும் இல்லை… என்னை நம்பு” என்று அவள் கண்ணீருடன் கூற… 

” நம்பிக்கையை பத்தி எல்லாம் பேச உனக்கு  தகுதியே கிடையாது… சரிடி எனக்கு நீ ஒன்னே ஒன்னு பண்ணு… நான் விக்ரமன் சார் கிட்ட பேசி உன்னை விட்டுட சொல்லிடுறேன் ” என்று சத்யன் கூற… 

” சொல்லு என்ன பண்ணனும் ” என்று நந்தினி கண்களை துடைத்து கொண்டு ஆர்வமாக கேட்டாள்… 

” ம்ம்ம் ” என்றவன் தன் மொபைலை எடுத்து, இப்போது வர்ஷா இருக்கும் நிலைமையை…படமெடுத்து வைத்திருக்கும் காட்சியை அவளுக்கு காட்டினான்… 

அதனை ரெண்டு நொடி கூட நந்தினியால் பார்க்க .. முடியவில்லை… வர்ஷாவின் தோற்றம் கண்டு பயத்தில் முகம் மூடினாள்… 

” என்ன பயமா இருக்கா?” என்றவன் அவளது தாடையை பற்றி ” பாரு… பாருடி ”  என்று வீடியோவை பார்க்க வைத்தான்… 

அதனை பார்த்தவளின் உடல் பயத்தில் நடுங்கியது… 

” இது யாருன்னு தெரியுதா? ” என்று சத்யன் கலங்கிய விழியுடன் கேட்டான்…நந்தினியோ தெரியலை என்று தலையாட்டினாள்… 

உடனே தன் மொபைலில் இருந்து வேறு ஒரு வர்ஷாவின் அழகிய வீடியோவை காட்டி ” இப்போ யாருன்னு தெரியுதா ? ” என்று கேட்டான்… 

அவளோ ” இது… இது வர்ஷா… அப்போ அது? ” என்று அவள் திகைத்து போய் கேட்க… 

” இது தான்டி எங்க தேவா நிலைமை… இப்போ சொல்லு இவளை எனக்கு பழைய மாதிரி…. இதோ இங்க பாரு இந்த வீடியோல எப்படி  பாட்டு பாடுறாளோ அப்படி எனக்கு திருப்பி கொடு… திருப்பி கொடுக்குறியா சொல்லு உன்னை நான் விட சொல்லிடுறேன்… சொல்லுடி… சொல்லு… உன்னால எங்க தேவாவை பழைய மாதிரி கொடுக்க முடியுமா??? சொல்லுடி கொடுக்க முடியுமா?”  என்றவன் நொடியில் வெறிப்பிடித்தவன் போல்  அவளது கன்னம் கன்னமாக அறைய தொடங்கினான்… 

அவன் அடித்த வேகத்தில் நந்தினி கீழே சுருண்டு விழ, மீண்டும் அவள் தலை முடியை பிடித்து இழுத்தவன் “சொல்லுடி… கொடுக்க முடியுமா உன்னால… எங்க குழந்தைடி அவள்! அழகா எங்க கூட சிரிச்சு விளையாடிட்டு இருந்தவளுக்கு…இப்போ அவள் யாருன்னு அவளுக்கே அடையாளம் தெரியாமல்  ஆக்கிட்டீங்களே… இத்தனை  பெரிய பாவத்தை பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி நிக்கிறியே… நீ எல்லாம் என்ன ஜென்மம்டி… நீ எல்லாம் வாழ தகுதியை இல்லை… ” என்றவன் அவளை மீண்டும் அடிக்க…

அவனது காலை கெட்டியாக பிடித்து கொண்ட நந்தினி ” சத்யா ப்ளீஸ் என்னை விட்டுடு… உண்மையா எனக்கும் அவள் நிலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை… இப்படி எல்லாம் நடக்குன்னு நான் கனவுல கூட நினைக்கல… ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு… ” 

” மன்னிப்பு தானே… மன்னிக்கிறேன்டி, மன்னிக்கிறேன்… ஆனால் எங்க தேவாவை திருப்பி கொடு அது முடியுமா? சொல்லு மன்னிக்கிறேன் ” என்று அவன் கேட்க… அவளோ முடியாது என்று கூறி ஊமையாக அழுதாள்… 

” அப்போ நீ செத்து போ… உன்னால முடியாது இல்லை .. அப்ரோம் நீ ஏன் வாழனும்… செத்து போடி ” என்றவன் அவளை மாறி மாறி அடிக்க… நிலை தடுமாறி நின்ற நந்தினி… அருகில் இருந்த பள்ளத்தில் விழ போனாள்… 

அப்போது நொடியில் அவளது கையை பிடித்து நிறுத்தினான் சத்யன்… அதனை பார்த்து ஒரு நொடி நந்தினியின் முகத்தில் நிம்மதி புன்னகை வெளிப்பட்டது… ஆனால் அவளை பார்த்து இகழ்ச்சியாக சிரித்த சத்யன் ” சாவுறதுக்கு அவ்ளோ பயமா பேபி? உன்னை நான் ஏன் முதலில் எல்லாம் தேவா…தேவா ன்னு சொல்லுவேன் தெரியுமா? ஏன்னா உன்னை அப்படி சொல்லி கூப்பிடும் போது எல்லாம்… என் தேவா இப்படி இருக்க நீ தான் காரணம்னு அப்போ அப்போ என் மூளைக்கு உணர்த்த தான்” என்றான்… 

” சத்யா ப்ளீஸ் கையை விட்டுடாதா… ப்ளீஸ் நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்… அந்த பைலை கூட உங்க கிட்டயே கொடுத்திடுறேன் ப்ளீஸ் என்னை காப்பாத்து ” என்று அவள் உயிருக்கு பயந்து கதறினாள்… 

” ஆமா இது எல்லாம்… எங்க விக்ரமன் அந்த பைலுக்காக பண்ணுறான்னு நினைச்சிட்டு இருக்கியா? முட்டாள்… அவருக்கு உண்மையா அந்த பையில் வேணும்னு நெனச்சு இருந்தால்… அதை ஒரே நிமிஷத்தில் உன்கிட்ட இருந்து வாங்கி இருக்க முடியும்… எங்க தேவையோட ஒரு பகுதி தான் அந்த பைலே தவிர… அது எங்க முழு தேவை இல்லை… ” என்று அவன் கூற… அவனை அதிர்ந்து பார்த்தாள் நந்தினி… 

” அப்போ வேற என்ன தான் வேணும் உங்களுக்கு ? ” என்று அவள் தடுமாறி கேட்க… 

” ஹா ஹா எங்களுக்கு வேணுங்குறதை நாங்களே எடுத்துக்குவோம்… ஆஹான்..

 அழிச்சிப்போம்… அதுக்கு உன் அனுமதியும் தேவை இல்லை… உன் உதவியும் தேவை இல்லை ” என்றவன் அவளது கையை விட பார்க்க… 

 பின்னால்  திரும்பி பள்ளத்தை பார்த்த நந்தினி ” ப்ளீஸ் சத்யா… கையை விட்டுடாத ” என்று கதறினாள்… 

” ம்ம்ம் ஓகே அப்போ எங்க ஐ லவ் யூ சொல்லு” என்று அவன் கிண்டலாக கேட்க… அவளோ வேறு வழி இல்லாமல்… உடனே

” ஐ லவ் யூ ” என்றாள் … 

” என்ன உடனே சொல்லிட்ட… உன்னை லவ் பண்ணும் போது என்னை எப்படி எல்லாம் நாயா பேயா உன் பின்னாடி அலைய வச்ச…அப்போ இப்படி தான் உடனே ஐ லவ் யூ சொன்னியா??? இல்லையே… அப்போ இப்போ மட்டும் என்ன புதுசா? ஒஹ் அம்மணிக்கு உயிர் மேல அவ்ளோ பயம் ” என்றவன்… 

” குட் பாய் பேபி ” என்று கூறியவாறே அவளது கையை விட்டான்… நந்தினி கதறியபடியே அந்த மரம் அடர்ந்த பள்ளத்தில் விழுத்தாள்.

அதனை மன நிறைவுடன் பார்த்த சத்யன்… அந்த இடத்திலேயே மண்டியிட்டி ” ஆஆஆஆ ” என்று கத்தினான்.. ” என்னை இப்படி இரக்கம் இல்லாதவனா மாத்திட்டியேடி… ” என்றவன்… வர்ஷாவை நினைத்து கதறி அழுதான்… அப்போது அவன் தோளில் விக்ரமன் கைவைக்க… திரும்பி அவன் முகம் பார்த்த சத்யன்… உடனே கண்களை துடைத்தபடி எழுந்து நின்றான்… 

ஆனால் அவன் மன வேதனையை விக்ரமன் நன்கு அறிவான் அல்லவா? அவன் மனம் அறிந்து விக்ரமன் அவனை தட்டி கொடுக்க… அடுத்த நொடியே அவனை அணைத்திருந்தான் சத்யன்… 

” என்னால முடியல  ” என்று சத்யன் அவன் தோளில் முகம் புதைத்து அழுது தீர்த்தான்…

சிறிது நேரத்திற்கு பிறகு… நிதானமடைந்த சத்யன் ” ஐயம் ஓகே சார் அடுத்து என்ன பண்ணனும் ” என்று கேட்டான்… 

” ம்ம்ம் என் கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சு… அது பறந்து போறதுக்குள்ள… புடிச்சு ரக்கையை வெட்டி கூண்டுக்குள்ள அடைக்கணும் ” என்று கீர்த்தியை மனதில் நிறுத்தி கூறி கண் சிமிட்டினான் விக்ரமன்… 

விக்ரமனின் சொல்லிற்கேற்ப கீர்த்தியை அங்கிருந்து  தூக்கி வந்தனர், விக்ரமனின் ஆட்கள்… 

” சார்  அந்த பொண்ணை தூக்கிட்டோம் ” என்று அடியாள் விக்ரமனுக்கு போன் போட்டு கூற… 

“ம்ம்ம் அவளை நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வந்திடுங்க ” என்று கூறி அழைப்பை துண்டித்த விக்ரமன், சத்யனை அழைத்து கொண்டு அந்த இடத்திற்கு சென்றான்.

காரின் இருபக்க இருக்கையில் தடியர்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு நடுவே கோழிக்குஞ்சாக ஒடுங்கிபோய் அமர்ந்திருந்தாள் கீர்த்தி.

இருவரின் பிடியில் காரின் பின்பக்கம் அமர்ந்திருந்த கீர்த்தி ” என்னை விடுங்க.. நான் போகணும் ” என்று கூறி அங்கிருந்தவர்களை தன் பலம் கொண்டு தாக்க ஆரம்பித்தாள் அவள். 

அவளது செயலில் கோவமடைந்தவர்கள் ”  ஏய் சும்மா நசநசன்னு கத்தாத… உன் மேல கை வைக்கக்கூடாதுன்னு விக்ரமன் சார் சொன்னதால அமைதியா இருக்கோம் இல்லை  நீ பேசுறதுக்கு இந்நேரம் உன் வாய் இடம் மாறி இருக்கும் ” என்றவன் அவளை அடிக்க கை ஓங்க, மிரண்டு போன கீர்த்தி பிரட்டில் ஜாம் ஒட்டி கொள்வது போல… காரின் இருக்கையில் ஒட்டி கொண்டாள்.. 

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்த கீர்த்திக்கு… அப்போது தான் அவர்கள் சொன்ன விக்ரமன் என்ற பெயர் மூளையில் உரைத்தது… ‘ இவர்கள் கூறியது  அவனை தானா?… என்  மாமா.அக்கா எல்லாரையும் கொலை பண்ண பார்த்தவன்…  இப்போ என்னையும் கொல்ல தான் தூங்கிட்டு வர சொல்லி இருக்கான் போல.. இல்லை… எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சி போய்… அக்கா சொன்ன மாதிரி அந்த அதியன் அப்டிங்குறவர்  கிட்ட  பேசணும்..  அதுக்கு முதலில் இவங்க கிட்ட இருந்து தப்பிக்கணும் ” என்று முடிவெடுத்தவள்… முன் இருக்கையில் அமர்ந்து வண்டியை  ஓட்டிகொண்டிருந்தவனின் தலை முடியை பாய்ந்து வந்து இழுத்தாள்… 

அவள் இழுத்த வேகத்தில் அவன் வண்டியை வளைத்து வளைத்து ஓட்டினான்… அவள் அருகில் இருந்தவர்கள் அவளது செயலை தடுக்க முற்பட்ட போதும்! கீர்த்தி அவன் தலை முடியை விடவில்லை ” வண்டியை நிறுத்துடா… தடிமாடு..  வண்டியை நிறுத்து…   ” என்றுவள் அவன் முடியை நன்றாக வலிக்க பிடித்து இழுத்தாள்… அப்போது சரியாக அவர்கள் வண்டியின் எதிரில் ஒரு வாகனம் வர… நிலையில்லாமல் அந்த வண்டியின் மீது மோத போனவன், நொடியில் சடன் பிரேக் போட்டு வண்டியை வளைத்து நிறுத்தினான்… 

அப்போது எதிரில் வந்த வண்டிக்காரன்… இறங்கிவந்து ” யோவ் இது என்ன உன் அப்பன் வீட்டு ரோடா… உன் இஷ்டத்துக்கு வண்டியை ஓட்டிட்டு வர” என்றவாறு அவர்களை திட்ட.. அவர்களும் அந்த வண்டி காரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்…  

அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் அசந்த நேரம்… அவர்களிடம் இருந்து தப்பி ஓடினாள் கீர்த்தி… அதை பார்த்த அடியாள் ஒருவன் ” ஏய் அவள் தப்பிச்சி போறாள்டா… ” என்றவர்கள்… எதிரில் நின்று வாக்குவாதம் பண்ணியவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு,  அவளை துரத்த தொடங்கினர்… 

தோள்களில் பையை சுமந்தவாறே… தலையை விரித்து போட்டுகொண்டு… பின்னால் திரும்பி பார்த்தபடியே ஓடினாள் கீர்த்தி…

உடல் வியர்க்க விறுவிறுக்க.. ஏன் ஓடுகிறோம்? எதற்காக ஓடுகிறோம் என்பது கூட தெரியாமல்… தனியே அந்த மாலைப்பொழுத்தில் ஓடிக்கொள்ளடிருந்தாள்… ஸ்ருதகீர்த்தி…  எப்படியாவது இங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளது மனதில் இருந்தது… 

வெகுதூரம் ஓடியதால் என்னவோ, களைப்பில் அவள் மனம் கூட சோர்வடைந்தது… அக்கா,அம்மா மாமா என்று அவளுக்கென இருந்த அனைவரையும்  ஒருவனது தேவைக்கு பலிகொடுத்த பின்… தான் மட்டும் ஏன் இந்த பூமியில் இன்னும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தாலும்… மனம் ஏனோ மரணத்தை ஏற்க முன்வரவில்லை…  காலையில் இருந்து தனக்கு நடந்தவற்றை நினைத்தவளுக்கு கண்ணீர் விட்டு அழகூட நேரமில்லாமல்  விதி அவளை துரத்தியது… 

இங்கு அவள் தங்களிடம் இருந்து தப்பித்த விஷயத்தை… விக்ரமனுக்கு அவன் அடியாட்கள் போன் போட்டு கூற… ‘ இந்த அளவுக்கு அவளுக்கு தைரியம் இருக்கா? குட்’ என்று மனதில் எண்ணி கொண்டவன்…  எந்த வித பதட்டமும் இன்றி… மெல்ல தனது லேப்டாப்பை எடுத்து அவள் இருக்கும் இடத்தை பார்க்க தொடங்கினான்… 

இன்னும் கீர்த்தி தன் கழுத்தில் இருந்த v செயினை பார்க்க வில்லை…

பார்க்கவில்லை என்பதை விட அதனை பார்க்க விக்ரமன் நேரம் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்…

அவளுடைய லொக்கேஷனை அறிந்து கொண்ட விக்ரமன் ” இப்போ எங்க இருக்கீங்க? ” என்று அடியாட்களிடம் கேட்டான்.. 

அவர்களும் இடத்தை கூற… அவர்கள் கூறிய இடத்தில் தான் அவளும் ஓட முடியாமல் மூச்சி வாங்கியபடி தடுமாறி நின்றாள்.. 

” அவளோட லொக்கேசனும் நீங்க இருக்குற இடத்தை தான் காட்டுது… பக்கத்துல நல்லா தேடுங்க ” என்று விக்ரமன் கூற… அவர்களும் அங்கு ஒரு இடம் விடாமல் தேடினார்கள்… 

ஆள் இல்லாத அந்த இடத்தில் சாலையின் இருபுறமும்  மரங்கள் மட்டுமே நிறைந்திருந்தது… அவ்வப்போது மட்டும் ஒரு சில கனரக வாகனங்களும், இருசக்கர வாகனமும் வந்தவண்ணம் இருந்தது… 

காலையில் இருந்து உணவு உண்ணாததாலோ! அல்லது வெகுதூரம் ஓடிவந்ததாலோ என்னவோ… உடல் களைத்து போய் நின்ற கீர்த்தி…கண்களில் இருள் சூழ மயக்கத்தை தழுவியவள் அங்கிருந்த ஒரு மரத்தில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்… 

அவள் அங்கு அமர்ந்து இருந்தது அவளை தேடி வந்த அடியாட்களின் கண்ணில் பட… ” சார் கிடைச்சிட்டாள்… ” என்று விக்ரமனிடம் கூற… ” ம்ம்ம்… அவளை நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வாங்க ” என்று கூறி அழைப்பை துண்டித்தான் விக்ரமன்…

மயக்க நிலையில் அந்த மரத்தில் சாய்ந்தது வரை மட்டுமே கீர்த்தியின் நினைவில் இருந்தது… கண்விழித்து பார்க்கையில்…  சுற்றிலும் இருள் சூழ… கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவள் மடங்கி படுத்திருந்தாள்… 

மயக்கம் தெளிந்து மெல்ல கண் விழித்து பார்த்தவளின் மூளை இது எந்த இடம் என்று உணர்வதற்குள்… அந்த கன்டைனருக்குள் நுழைந்தான் விக்ரமன்… அவன் நுழைந்ததும் அடியாட்கள் அனைவரும் தலை குனிந்த படி வெளியே சென்றனர்…

படுத்திருந்தவளின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன்… அவளது காதருகில் குனிந்து ” ஸ்…ஸ்ருதி… ” என்று இசையாய் அவன் குரலில் அழைக்க… 

கருவிழி உயர்த்தி அவனை பார்க்க முயற்சித்தாள்… இருள் சூழ்ந்த இடத்தில் எதிரில் இருப்பவனின் உருவம் கூட அவளுக்கு தெரியவில்லை… 

” பயமா இருக்கா? ” என்று அவன் மீண்டும் அவள் அருகில் வர… அவனது சூடான மூச்சு காற்று அவளது செவியை தீண்டவும்… நகர்ந்தாள் பெண்ணவள்… 

அவள் செயல் கண்டு புன்னகைத்தவன் ” ரொம்ப நகராதுடி… என்னை விட்டு உன்னால எங்கயும் போக முடியாது… போகவும் விடமாட்டேன் ” 

என்றவன் அவளது கழுத்தில் கைகொடுத்து அவளை நிமிர்ந்து அமர செய்தான்… 

கீர்த்திக்கு அவன் குரல் மட்டுமே கேட்க… அவன் யார் என்பது சிறிதும் புரியவில்லை… ‘ யார் இவன் எதற்காக நம்மிடம் இப்படி எல்லாம் பேசுகிறான் ‘ என்பது புரியாமல் விழித்தவளின் உடல் மேலும் பலவீனப்பட்டது போல தோன்ற… அமரமுடியாமல் நிலைதடுமாறி அவள் மீண்டும் கீழே சரிய போனாள்… 

கீழே சரிய போனவளின்.. தலையை தன் ஒற்றை கையால் தாங்கி பிடித்தவனின் உள்ளம் ஒரு நொடி பதறியது என்னவோ உண்மை தான். 

இருளில் இருவரது  உருவமும் நிழலாக தெரிந்ததே தவிர… உள்ளம் எப்போதும் போல உருவமற்று ஊமையாக தான் இருந்தது.

அவள் தடுமாற்றத்தை பார்த்தவன்… உடனே மாஸ்க்கை எடுத்து அணிந்த படி… ஒரு சிறிய கிறீன் கலர் லைட்டை அவள் முகம் மட்டும் தெரியும் அளவுக்கு அவளை நோக்கி வைத்தான்… 

கீர்த்தியோ ஒளியின் தாக்கத்தால் இமை திறக்க முடியாமல், பாதி விழி திறந்த படி இருக்க… அவள் இமைகளில் கண்ணீர் துளிகள் படர்ந்திருந்தது. தனது பெருவிரல் கொண்டு அவள் இமையில் படிந்திருந்த கண்ணீரை துடைத்து விட்டான் விக்ரமன். 

அவளுடைய தலையை தன் ஒற்றை கையில் தாங்கியவாறே… மெல்ல அவள் அருகில் நெருங்கி வந்தான்… 

” நான் யாருன்னு யோசிக்கிறியா?” என்று மெல்லிய குரலில் கேட்க… 

அவளுக்கு ஆமாம் என்று கூற கூட தெம்பில்லாமல்… மெதுவாக தலையை அசைத்தாள், அவளது அசைவை உணர்ந்த அவனது கரமோ… அவளது தலையை மெல்ல தன் முகத்தின் அருகில் கொண்டு வந்தது… 

மாஸ்க் அணிந்ததாலும், விளக்கு அவள் முகம் நோக்கி இருந்ததாலும்   அவன் முகம் அவளுக்கு தெரியவில்லை…

”  நான் யாருன்னு உன்கிட்ட சொல்லவே இல்லைல… இப்போ சொல்லுறேன். உன்னோட இந்த நிம்மதியான நிலைக்கு நான் தான் காரணம்… ” என்று அவன் கூற… 

விரக்தியாக உணர்ந்த கீர்த்திக்கு ‘என் நிம்மதி என்றோ அழிந்து விட்டது’ என்று கூற வேண்டும் போல இருந்தது ஆனாலும் அமைதியாகவே இருந்தாள்…

 

அவளது அமைதியை உணர்ந்த விக்ரமன் மேலும் தொடர்ந்தான்” புரியலையா? உன் அம்மாவுக்கும், உன் அக்காவுக்கும்  மரணம் அப்படிங்குற வரத்தை கொடுத்த… கடவுள் நான்… ” என்று அவன் கூறிய நொடி… தீ சுட்டார் போல அவன் கரத்தில் இருந்து விலகியவள்… ‘அப்போது இவன் தானே அந்த விக்ரமன் ‘ என்று உணர்ந்த கீர்த்தி அப்படியே கீழே தலை மோத விழுந்தாள்… அவள் தலை கீழே மோதிய  சத்தத்தில்… தான் அவள் தன் கரத்தில் இருந்து விலகியதை  உணர்ந்தான் விக்ரமன், 

” அறிவில்லையாடி உனக்கு ? ” என்று கோவமாக கேட்டவன்…  தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு மேலும் தொடர்ந்தான்.. 

 “நானும் எவ்ளோவோ உன் அக்காகிட்ட எடுத்து சொன்னேன் பட் அவள் கேக்கல… அதுல என் தப்பு எதுவுமே இல்லை… அப்ரோம் உன்னை மட்டும் ஏன் உயிரோட வச்சியிருக்கேன்னு யோசிக்கிறியா? அது தான் எனக்கும் புரியல… இப்போ கூட நீ பண்ண வேலைக்கும், எனக்கு  இருக்க கோவதுக்கும் ” என்றவன் சட்டென அருகில் இருந்த கத்தியை எடுத்து அவள் கழுத்தில் குத்த போனவன்… நொடியில் நிறுத்தினான்… அவளோ பயத்தில் மிரண்டு முழித்தாள்… 

இருந்தபோதிலும்  கத்தியின் முனை கீர்த்தியின் கழுத்தில் கால் இன்ச் இறங்கி இருந்தது… அதில் வெளிப்பட்ட சில ரத்த துளிகளை… தன் கைகொண்டு தொட்டு பார்த்தவன். ” ஆனால் ஏதோ ஒண்ணு தடுக்குதுடி… அந்த எழவு தான் என்னனு எனக்கும் தெரியல? எனக்கு உன்கிட்ட இருந்து ஒன்னு வேணும் அது கிடைச்ச அப்ரோம் நானே உன்னை உன் குடும்பம் போன இடத்துக்கே அனுப்பி வச்சிடுறேன்… அதுக்கு முன்னாடி இங்க இருந்து தப்பிக்கணும்னு நெனச்ச.. எப்படியும் உன்னை பிடிச்சிடுவேன்… ஆனால் அதுக்கு அப்புறம்… ஏதோ ஒரு நாட்டுல நீ விலை மாதுவா இருக்கவேண்டி இருக்கும்… மைண்ட் இட்…  ” என்று கூறி அவள் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டவன்..  எங்கு அதற்கு மேலும் அங்கிருந்தால் தன் உணர்வுகள் வெளிபட்டு விடுமோ என்று எண்ணி… உடனே அங்கிருந்து சென்றான்… 

வெளியே வந்தவன், அங்கு நின்ற சத்யனிடம்… ” சத்யா அவளை சென்னைக்கு கூட்டிட்டு வந்திடு… நான் ஒர்க் முடிச்சிட்டு, நாளைக்கு காலையில் கிளம்பி அங்கு வந்திடுறேன்” என்று கூறியவன்… அங்கிருந்து செல்லும் முன்… ஒரு கணம் திரும்பி வந்தவன் ” கவனமா அழைச்சிட்டு போ… எப்படியும் ஏதாவது ஏடாகூடமா பேசுவாள், கோவத்துல கை நீட்டிடாத.. சின்ன பொண்ணு, ” என்றான்.

” அவ்ளோ பாசமா சார்! கவலை படாதீங்க…உங்க பொக்கிஷத்தை பூ மாதிரி சென்னையில் கொண்டு வந்து சேர்த்திடுறேன் ” என்று கூறி சிரித்த சத்யனின்… முதுகில் தட்டியவன் அங்கிருந்து  சென்றான்… 

அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அடியாட்களில் ஒருவன்… விக்ரமன் அங்கிருந்து சென்றபிறகு ” ஏன் சார் இந்த பொண்ணுக்காக தான்  இவ்ளோ சம்பவம் நம்ம பண்ணினோமா? ” என்று கேட்டான்…

” கண்டிப்பா இல்லை… இவ எல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை… அப்ரோம் முதலில் இந்த ஒட்டு கேக்குற பழக்கத்தை மாத்திக்கோ… போ… போய் அவளை  இழுத்துட்டு வந்து காருக்குள்ள போடு… ” என்றவன் காரின் முன் பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டான்… 

கீர்த்தியை அங்கிருந்து அழைத்து வந்தவர்கள்… காரின் பின் பக்க இருக்கையில் அவளை அமர வைத்து… அவளுக்கு இருபுறமும் அணையாக இரு அடியாட்கள் அமர்ந்து கொண்டனர்… அவர்களது கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது… 

*******

இங்கு விக்ரமன் காரில் சென்றுகொண்டிருக்க… அவனுக்கு அழைப்பு வந்தது… 

” சார் எங்க இருக்கீங்க? ” என்று எதிர் முனையில் பேசியவன் கேட்க…

“அவுட்டோர் தானே…  இதோ அங்க தான் வந்துட்டு இருக்கேன்… இன்னும் ஒரு பத்து நிமிஷம் ஆகும்…  ” 

” ஓகே சார் நான் வைட் பண்ணுறேன் ” என்று அவன் கூற… அழைப்பை துண்டித்தான் விக்ரமன்… 

இங்கு சத்யன், கீர்த்தியை அழைத்து கொண்டு , சென்று கொண்டிருக்க…  அமைதியாக இருந்த கீர்த்தி இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று தான் யோசித்து கொண்டிருந்தாள்…

அங்கிருந்து வாகனம் கிளம்பி ஒரு பத்து நிமிடம் தான் இருக்கும்… அதற்குள் .  கீர்த்தி அருகில் அமைதியாக அமர்ந்திருந்த ஒருவனின் கரத்தை சுரண்டினாள்.. 

அவனோ எரிச்சலாக ” என்ன? ” என்று கேட்க… அவர்கள் சத்தம் கேட்டு சத்யா பின்னால் திரும்பி பார்த்தான்… 

” அது… அது ” என்று கீர்த்தி தயங்கியபடியே இருக்க… சத்யனோ அவளது தயக்கத்தை உணர்ந்து ” என்ன ரெஸ்ட் ரூம் போகனுமா? ” என்று சற்றென்று கேட்டான்… 

அவளோ ” ஆமாம்… ஆமாம்… ” என்று வேகமாக தலையாட்ட… சலிப்பாக திரும்பிய சத்யன் வண்டியை ஓட்டி கொண்டிருந்தவனிடம்… ” ஏதாவது இடம் பார்த்து வண்டியை நிறுத்து ” என்று கூறினான்… 

கீர்த்திக்கோ ஒரு நிமிடம் ஆச்சரியம் தான் ‘இவனுங்க  உண்மையாவே நம்மல கடத்திட்டு தான் போறணுங்களா என்ன? ‘ என்று அதே ஆச்சர்யம் மாறாமல் சத்யனின் முகத்தை பார்த்தாள்…

அவளது முக மாற்றத்தை பார்த்தவன் ” என்னடா கடத்திட்டு போறவனுங்க… இப்படி பேசுறாணுங்கன்னு பாக்குறியா? எப்படியும் நீ தப்பிச்சி போனாலும் உன்னை புடிச்சுடுவோம், அதான் ” என்றவன் அமைதியாக இருக்க… ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு.. வண்டி ஒரு ஹோட்டல் அருகே நின்றது… 

சத்யனோ கீர்த்தியை திரும்பி பார்த்து ” கீழே இறங்கு ” என்று கூறி ரெஸ்ட் ரூம் நோக்கி அவளை அழைத்து சென்றான்… 

ரெஸ்ட் ரூம் அருகில் வந்த உடன் ” போ… ” என்று கூறியவன்… ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தபடி அருகில் இருந்த ஒரு மரத்தில் சாய்ந்து நின்றான்.

 சுற்றியும் காடு நடுவில் அந்த ஹோட்டல் சாலையை ஒட்டி அமைந்திருந்தது… வெளியூருக்கு பயணம் செய்யப்பவர்கள், இடையில் இறங்கி உண்டு செல்வதற்க்கு ஏதுவாக அமைந்திருந்தது… 

ரெஸ்ட்ரூமிற்குள் சென்ற கீர்த்தி எப்படி இவர்களிடம் இருந்து தப்பிப்பது என்று யோசித்து கொண்டிருக்க, வெளியே வாசலை பார்த்தவாறே புகைபிடித்து கொண்டிருந்தான் சத்யன், அப்போது ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்த பெண்கள் சிலர் .. ஆடையை சரிசெய்ய உடனே தனது பார்வை திருப்பியவன், பின்னால் திரும்பி நின்றுகொண்டு புகைக்க தொடங்கினான்…

அந்நேரம் பார்த்து வெளியே வந்த கீர்த்தி, சத்யன் திரும்பி நின்றதை பார்த்து  இது தான் சரியான நேரம் என்று எண்ணியவள், அப்படியே பின் பக்கம் இருந்த காடு வழியே தப்பி ஓட தொடங்கினாள்… 

அதனை பார்த்துகொண்டிருந்த ஒரு பெண்மணி ‘இந்த பொண்ணு என்ன இந்த இருட்டு நேரத்துல இப்படி காட்டுக்குள்ள ஓடுது’  என்று நினைத்து கொண்டார்…  

கீர்த்தி ரெஸ்ட் ரூம் சென்று பத்து நிமிடத்திற்கும் மேல் ஆகவே அவள் இன்னும் வெளியே வரவில்லை என்று எண்ணி… ரெஸ்ட் ரூம் நோக்கி வந்த சத்யன் அங்கும் இங்கும் கண்களை சுழல விட… அங்கு இருந்த பெண்கள் அவனை ஒரு மாதிரி பார்த்தனர்… அதனை உணர்ந்து கொண்டவன் அங்கிருந்த ஒரு வயதான பெண்மணியின் அருகில் வந்த ” அம்மா என் சிஸ்டர் உள்ள இருக்காங்களா கொஞ்சம் பார்த்து சொல்லுறீங்களா?  ” என்றவன் அவளுடைய புகைப்படத்தை எடுத்து அவரிடம் காட்டினான்… அவரோ அதனை பார்த்துவிட்டு ” இந்த பொண்ணு! இப்போது தான்பா அந்த பக்கம் ஓடிபோச்சு … சிவப்பு கலர் துணி கூட போட்டு இருந்தது ” என்று அவர் அடையாளம் கூறி… அவள் சென்ற காட்டு பகுதியை குறிப்பிட்டு காட்டினார்…

” ஷிட் ” என்று தரையில் எட்டி உதைத்து கொண்ட சத்யன் தன் அடியாட்களை அழைத்தான்… 

அவர்களை அழைத்து கொண்டு… அந்த பெண்மணி சொன்ன அந்த காட்டு பகுதிக்குள் சென்றவர்கள் அவளை தேட தொடங்கினர்… 

 

அரைமணிநேரமாக தேடியும் கீர்த்தி கிடைக்கவில்லை, என்றதும் விக்ரமனுக்கு அழைத்தான் சத்யன்… 

” சார் அவள் தப்பிச்சிட்டா ” என்று சத்யன் கூற… 

“பர்பெட்… எதிர்பார்த்தது தான் ” 

” சார் இப்போ என்ன பண்ணுறது ? “

” அவள் எங்க போனாலும் அங்க நான் இருப்பேன் ” என்றவன் ” சதீஷ் ” என்று அழைக்க… 

” சொல்லுங்க சார்? ” என்று ஓடி வந்தான் அவன்…

“கார்ல என் லேப்டாப் இருக்கும் அதை எடுத்திட்டு வாங்க ” என்று கூறியவன் தன் கார் கீயை அவனிடம் கொடுத்தான்.. அதனை வாங்கி கொண்டவன் அங்கு சென்று அவனுடைய லேப்டாவை எடுத்து வந்து கொடுத்தான்… 

அதனை உயிர்ப்பித்த விக்ரமன்… கீர்த்தியின் லொகேசனை மீண்டும் ஆராய ஆரம்பித்தான்… அதுவோ அவன் இருக்கும் அதே இடத்தை காட்ட… ஒரு நொடி அதிர்ந்து தான் போனான்… 

” அவளை எங்க மிஸ் பண்ணிங்க? ” என்று விக்ரமன் கேட்க… இடத்தை கூறினான் சத்யன்… அந்த இடத்திற்கும் இப்போது விக்ரம் இருக்கு. இடத்திற்கும் சரியாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும்… 

” ம்ம்ம் நான் சொல்லுற இடத்துக்கு… நான் சொல்லுற வழியில அவளை தேடி பார்த்துட்டு வா ” என்று கூறியவன் வழியையும் இடத்தையும் கூறி அழைப்பை துண்டித்தான்… 

சத்யனிடம் இருந்து தப்பி வந்த கீர்த்தி… கால் போன போக்கில் அந்த காட்டு பகுதியில் ஓட தொடங்கினாள்…காலையில் இருந்து வெறும் வயிற்றில் ஓடி அலைந்து திரிந்தவளுக்கு… பசி வயிற்றை கிள்ளியது… 

ஏற்கனவே அவளது உடல்  பலவீனமாக இருக்க… உணவு இல்லாமல் இனி இதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையில் தான் அவள் இப்போது இருந்தாள்… 

முகத்தில் வியர்வை வடிய ஒரு மரத்தில் சாய்ந்து நின்றவள்… தன் பையை திறந்து அதில் ஏதாவது உண்பதற்கு இருக்கிறதா ? என்று பார்த்தாள் …ஆனால் அவள் துரதிஷ்டம் அதில் பைல்களையும் பேப்பரையும்… தவிர எதுவும் இல்லை… கொஞ்சம் பணம் இருந்தது தான். ஆனால் பசிக்கு அதனை உண்ண முடியுமா என்ன? மனம் நொந்து சாய்ந்தவளின் விழியோரம் நீர் கசிந்தது… ” அம்மா… மாமா எல்லாரும் ஏன் என்னை தனியா விட்டுட்டு போனீங்க? என்னையும் உங்க கூடவே அழைச்சிட்டு போய் இருக்கலாம் இல்லை… ரொம்ப பசிக்குதுமா..  என்னால முடியல” என்றவளுக்கு மகிழன் உணவூட்டிவிட்டு தூங்க வைத்தது ஞாபகம் வந்தது… அதை எண்ணி எண்ணி அழுதவள் வயிற்றை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டாள்… 

மனம் நொந்து அறை கண் மூடியவள் அப்போது தான் தனக்கு எதிரில் பார்த்தாள்… 

அடர்ந்த அந்த வனப்பகுதியில்  கீர்த்தி இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் விளக்குகள் ஒளிர்ந்து வெளிச்சமாக காட்சி அளித்தது…  அதனை பார்த்தவள்… ” ஒருவேளை அங்க ஏதாவது ஹோட்டல் இருக்குமோ ? கண்டிப்பா ஹோட்டல் தான்… ரொம்ப பசிக்குது…” என்றவள்… அந்த வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்து வந்தாள்…

நடந்து வந்தவளுக்கு உடல் சோர்வால் கால்கள் எல்லாம் பின்னிக்கொண்டது… தட்டு தடுமாறிதான்  அந்த இடத்தை அவள் அடைந்தாள்… 

அருகில் வந்த பிறகு தான் தெரிந்தது… அது ஹோட்டல் இல்லை ஷீட்டிங் நடக்கும் இடம் என்று… நடிகர்,நடிகைகள் அனைவரும் கேரவனில் அமர்ந்திருக்க… அங்கு பணிபுரியும் நபர்களுக்கு ப்ரொடக்சனில் இருந்து சாப்பாடு பரிமாறபட்டு கொண்டிருந்தது… 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று  இன்று தான் அவள் உணர்ந்து கொண்டாள் .. 

அங்கு உணவை கண்ட கீர்த்திக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் நிறைந்து இருந்தே தவிர வேறு எந்த எண்ணமும் வர இல்லை… உணவு உண்டால் உடல் பலம் பெறும்… அது மட்டுமே அவள் எண்ணம். 

என்ன தான் பசி என்று வந்த போதும்… இப்படி போய்  ஏமாற்றி உண்ணவேண்டுமா? என்று யோசித்தவளுக்கு ஒருவித தயக்கமும், பயமும்  முகத்தில் வந்து… வந்து போனது…

 பணிபுரியும் அனைவரும் அங்கு அடுக்கி வைத்திருந்த தட்டினை எடுத்து வந்து வரிசையில் நின்று உணவு வாங்கி உண்டனர்… 

அதனை பார்த்த கீர்த்தி, ஒரு நொடி தன் தோற்றத்தை கவனித்தாள்… ‘ இப்படியே எப்படி போய் சாப்பிட முடியும்… அவங்க கண்டு பிடிச்சா என்ன பண்ணுறது ‘ என்று எண்ணியவள்… தன் தலைமுடியை சரிசெய்து கொண்டாள்… பின்னர் தன் முகத்தில் வடிந்த வியர்வை துளிகளை… தனது சுடிதார் டாப்பில் துடைத்து கொண்டவள்… முக மலர்ச்சிக்காக வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைக்க முயன்றவாறு… அங்கு உணவு இருக்கும்  இடம் நோக்கி சென்றாள்… 

எல்லாரையும் போல அங்கே இருந்த ஒரு தட்டை எடுத்து கையில் வைத்து கொண்டவள்… பயத்துடனும் நடுக்கத்துடனுமே அந்த வரிசையில் நின்றாள்… 

வரிசையில் நின்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஏதோ பேசி சிரித்து கொண்டே நிற்க… கீர்த்திக்கு நெருப்பில்  நிற்பதை போன்று இருந்தது…’ யாராவது அடையாளம் கண்டு கொண்டு அவமான படுத்தி விடுவார்களோ’ என்று மனதால் நொந்து போய் வரிசையில் நின்றவள்… எந்த பிரச்சனையும் இன்றி உணவை வாங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்… 

தன் வாழ்க்கையில் இப்படி ஒரு நாளை அவள் கனவில் கூட யோசித்திருக்க மாட்டாள்… உணவுக்காக… ஒருவரிடம் கையேந்தும் நிலை அவளுக்கு வரும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டாள்… பயத்துட்டனே வரிசையில் நின்று உணவை வாங்கி வந்தவள்… நிம்மதி பெரு மூச்சி விட்டவாரே அங்கிருந்து நகர்ந்தாள்.. 

அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டால், எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் என்று எண்ணியவள் அவர்களை எல்லாம் விட்டு தனியே ஒதுங்கி வந்தவள்… அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து உணவை உண்ண தயாரானாள்… 

தட்டில் இருந்த உணவை பார்த்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது…

இப்போது மட்டும் இறைவன் அவள் கண்முன் வந்து நின்றால்’ எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமையை கொடுத்தாய்… இதற்கு நீ என்னை கொன்று இருக்கலாமே ‘ என்று கேட்டு அவன் சட்டையை பிடித்திருப்பாள்.

ஒருவாறு தன் மனதை நிலைநிறுத்தி கொண்டவள்… கண்ணீருடன் முதல் வாய் உணவை எடுத்து வாயில் வைக்க போனாள்… அப்போது சரியாக ஒருவன் வந்து ” ஏய் யாரு நீ” என்று உரக்க கேட்க… அந்த சத்தம் கொடுத்த பயத்தில் உடல் நடுங்கி எழுந்த கீர்த்தியின் மடியில் இருந்த உணவு, தட்டுடன்  கீழே கொட்டியது… அதை கண்டவளுக்கு இதயம் ரணமாய் வலித்தது… 

” நானும் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன்… ஆமா யாரு நீ… இங்க வேலை பாக்குறியா என்ன? ” என்று அவன் ஆக்ரோஷமாக கேட்க.. இல்லை என்று கண்ணீருடன் தலை ஆட்டி மறுத்தவள் தலை குனிந்து கொண்டாள்… 

” அப்போ எப்படி நீ இங்க சாப்பாடு வாங்கி சாப்பிடுவ? சொல்லு திருடி தானே நீ… உன் முகத்தையும் பையையும் பார்க்கும் போதே தெரியுது… எல்லாத்தையும் திருடி இந்த பையில் தான் வச்சி இருக்கியா? ”  என்றவன் அவள் முதுகில் இருந்த பையை பிடுங்க பார்க்க… 

” இல்லை அப்படி எல்லாம் சொல்லாதீங்க… நான் திருடி இல்லை… ரொம்ப பசிக்குதுன்னு சாப்பிட தான் வந்தேன்… வேணும்னா இதுக்கு காசு கொடுத்திடுறேன்… ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க.. எல்லாரும் பாக்குறாங்க… எனக்கு அவமானமா இருக்கு ” என்றவள் அழுதபடியே தலை குனிந்தாள்… அதனை சுற்றி இருந்த அனைவரும் ஏதோ படம் பார்ப்பதை போல ரசித்து பார்த்துகொண்டிருந்தனர்…

அவனோ ” என்னடி நடிக்கிறியா? எனக்கே பணம் கொடுக்குறியா? அந்த பணத்தை எங்க இருந்து திருடிட்டு வந்த திருட்டு நாயே ” என்றவன் அவளது பையை பிடுங்க போக… அவனது கன்னத்தில் இடியாய் இறங்கியது அபிமன்யூவின் கரம்… 

அபிமன்யூ அடித்த வேகத்தில் அவன் சுருண்டு கீழே விழுக … சுத்தி இருந்தவர்கள் அனைவரும் அதனை பார்த்து திகைத்து போய் நின்றனர்… 

எதிர்பாராத அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவனை கண்ட கீர்த்தியின்  இதழ்கள் மெல்ல விரிய… கண்கள் தானாக கலங்கி போனது… அவளது பார்வையில் அவனுக்காக அத்தனை ஏக்கம் தெரிந்தது… திக்கு தெரியாத காட்டில் நாம் அலைந்து திரியும் போது எதிரில் நம் எதிரியை கண்டால் கூட மனம் நிம்மதி அடையும் அதுபோல தான் .. ஆனால் இங்கு அபிமன்யூ அவளுக்கு எதிரியா? நண்பனா?  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்… 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்