
மாயோன் 8
அந்த இடத்தில் அபிமன்யுவை பார்த்த கீர்த்திக்கு… விளக்க முடியாத அளவுக்கு மனம் நிம்மதி அடைந்தது…
சரியாக சொல்ல வேண்டும் என்றால் இருள்சூழ்ந்த காட்டில் தவித்துக்கொண்டிருக்கும் போது மினிமினி பூச்சி ஒளியாய் வழி கூறியது போல…
இப்போது கீர்த்தியின் கண்களுக்கு இருள் வானத்தில் ஒளிரும் ஒற்றை நட்சத்திரமாக தெரிந்தான் அபிமன்யூ…
கண்ணீருடன் அபிமன்யூவை பார்த்த கீர்த்தியின் உதடுகள் துடித்தது… அந்த சூழ்நிலையை சமன் செய்ய கதறி அழவேண்டும் போன்று இருந்தது…
அவளுக்கு அவன் யாரோ ஒருவன் தான்!
யாருமில்லை இடத்தில் தன்னிடம் முறையில்லாமல் நடந்து கொண்டவன் தான் !
ஆனால் இந்நிலையில் அவனை கண்டு அவள் மனம் மகிழ்ந்தது என்னவோ உண்மை தான்.
சில உணர்வுகளுக்கு, உருவம் கூறி, உறவு முறை சொல்லி விளக்க முடியாது அது போல தான் இதுவும்…
தன்னை மறந்து கீர்த்தி அவனது முகத்தை பார்த்து கொண்டிருக்க… அபிமன்யூவின் விழிகளோ தன்னிடம் அடிவாங்கி கீழே விழுந்து கிடந்தவனின் மீது பதிந்திருந்தது…
அந்நேரம் அடிவாங்கி கீழே விழுந்து கிடந்தவன்… ” சார் அது வந்து… ” என்று எதையோ பேச வர…
” ஷ்” என்று தான் வாயில் விரல் வைத்து பேச வேண்டாம் என்பது போல சைகை செய்த அபிமன்யூ… ” போ.. ” என்றான்… கண்களில் கோவம் மின்ன…
அவனது கோவத்தை கண்டவனும் தடுமாறி எழுந்துபடி, கன்னத்தை தேய்த்து கொண்டு அங்கிருந்து சென்றான்.
நடந்த இந்த நிகழ்வால் கொஞ்ச நேரத்தில் அந்த இடமே நிசப்தமாகி போனது…
அழுது கொண்டிருந்த கீர்த்தியை ஆழ்ந்து பார்த்த அபிமன்யூ… ” சதீஷ் ” என்று அழைக்க… ஓடி வந்தான் அவன் மேனஜர்.
” சொல்லுங்க சார் ” என்று அவன் பணிவுடன் கேட்க..
” சாப்பாடு வச்சு எடுத்துட்டு வா ” என்றவன்… அங்கிருந்த ஒரு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்…
சதீஷ் உணவை தட்டில் எடுத்து வைத்தபடி அபிமன்யூவிடம் வந்தான்…
” இன்னொரு சேர் எடுத்து போட சொல்லு ” என்று அபிமன்யூ சதீஷிடம் கூற…அவனோ அங்கிருந்த பணியாட்களிடம் கூறி… அவனுக்கு எதிரில் ஒரு நாற்காலியை எடுத்து போட செய்தான்..
தனக்கு எதிரில் நின்று அழுது கொண்டு நிற்பளின் முன்னே சொடுக்கிட்டவன்… ” சிட்” என்று தனக்கு எதிரில் போடப்பட்டிருக்கும் இருக்கையை காட்டி கூற… அவளோ திருதிருவென முழித்தாள்…
” உன்னை தான் உட்காரு ” என்று அவனது குரல் சற்று உயர்ந்து ஒலிக்க… கீர்த்தியின் உடல் சற்று நடுக்கம் கண்டது…
” இல்லை சார், பப்.. ப… பரவாயில்லை ” என்று தடுமாற்றத்துடன் உரைத்தவள்… தலை குனிந்த படியே ” நான் போறேன்… ” என்று கூறிய நொடி அபிமன்யுவின் கண்கள் அனலாக மாறியது…
” ம்ம்ம் போகனுமா? போகலாம்… ” என்றவன் ” சாப்பிட்டு போ ” என்று மென்மையாக கூறினான்… அவனை பொறுத்தவரை அது மென்மை…
இன்னும் கீர்த்தி குனிந்த தலை நிமிராமல் இருக்க. ” ஒருத்தங்க பேசும் போது அவங்க கண்ணை பார்க்கணும், மண்ணை இல்லை… புரியுதா. நிமிர்த்து நில்லு ” என்று வார்த்தைகளை அனலாக வீசினான் அபிமன்யு…
அபிமன்யூவின் இந்த அணுகுமுறை! அவன் மேனஜர் சதீஷ் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் புதிது…எப்போதும் சிரித்த முகமாக, கூலாக இருப்பவன் இன்று முற்றிலும் மாறி வேறு ஒருவனாக அவர்கள் முன் அமர்ந்திருந்தான்…
” உட்காரு ” என்று அவன் மீண்டும் அழுத்தி கூற… பயத்துடனே அவனை நிமிர்ந்து பார்த்தவள்… மெல்ல நடந்து வந்து இருக்கையின் நுனியில் அமர்ந்து கொண்டாள்..
” சதீஷ்… சாப்பாட்டை அவள் கிட்ட கொடு ” என்று அபி கூற… அவனும் அதனை கீர்த்தியிடம் கொடுத்தான்…
அதனை வாங்கும் முன் கீர்த்தி ஒரு கணம் அபியை நிமிர்ந்து பார்க்க… அவன் ‘ வாங்கு ‘ என்பது போல தலையசைக்க… அதனை வாங்கி கொண்டாள்.
” ம்ம்ம் சாப்பிடு ” என்ற அபி அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளையே விழி அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் தன்னை தான் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பது எல்லாம் உணவை மும்மரமாக உண்ணும் கீர்த்திக்கு தெரியவே இல்லை… அவ்வளவு பசி பெண்ணவளுக்கு.
அறியாத பிள்ளை அழகாக உணவை உண்டு பின்… நிமிர்ந்து பார்க்க… புன்னகைத்தபடியே தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டுனான் அபி…
அதனை பெற்று கொண்டு, பாதி பாட்டில் நீரை அருந்தி முடித்தவள்… குட்டியாக ஒரு ஏப்பம் விட, அதனை பார்த்த அபிமன்யுவின் இதழ்கள் மெல்ல விரிந்து கொண்டது…
அவன் மென்புன்னகையை பார்த்தவள் வலுக்கட்டாயமாக அவனை பார்த்து சிரிக்க.. இம்முறை அபிமன்யுவின் இதழ்கள் தாரளமாக விரிந்து கொண்டது…
” நல்லா சாப்பிட்டியா? ” என்று அவன் கேட்க…
” ம்ம்ம் ” என்ற கீர்த்தி நொடியில் தன் பையை திறந்து அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அபிமன்யுவிடம் நீட்டினாள்.
அவனோ அவளை கேள்வியாக பார்த்தான்.
” ரொம்ப நன்றி, இது என்னோட சாப்பாட்டுக்காக ” என்று கூறி மென்மையாக புன்னகைத்தாள் கீர்த்தி. அதனை அங்கிருந்த அனைவரும் வினோதமாக பார்த்தனர்…
அவளுக்கோ நடந்த இந்த அவமானத்திற்கு பிறகு அவர்களது உணவை உண்டுவிட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்வது மனதிற்கு நெருடலாக இருந்தது… ஏதோ ஒருவேளை உணவிற்காக அவர்கள் முன் கையேந்தி நின்றதை போல இருந்தது… அதனால் தான் உண்ட உணவிற்கு இணையாக பணத்தை கொடுக்க நினைத்தாள்.
அதனை பார்த்து இதழ் பிதுக்கி கொண்ட அபிமன்யு ” ஒஹ் உனக்கு சாப்பாடு கொடுத்ததுக்காக, தான் இந்த நன்றியும்… பணமுமா? ” என்று கேட்டவனின் குரல் நொடியில் மாறியது…
அதை அறியாத கீர்த்தி ” பணத்தை வாங்கிகோங்க நான் போறேன்… எனக்கு சாப்பாடு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ” என்று கூறி அவளே அவனுக்குள் தூங்கி கொண்டிருக்கும் ஒரு சாத்தானை தட்டி எழுப்பினாள்.
” சில விஷயங்களை பணத்தால ஈடு செய்ய முடியாது… அதுல ஒன்னு தான் பசின்னு வருபவர்ங்களுக்கு நம்ம கொடுக்குற உணவு… அதுக்கு எந்த விலையை கொடுத்தும் சமன் செய்ய முடியாது ” என்றான் அபிமன்யு அழுத்தமாக…
” அய்யோ தப்பா எடுத்துக்காதீங்க.
நான் இங்க இருக்கவங்க ஏதாவது சொல்லுவாங்கன்னு தான் பணம் கொடுத்தேன், வேற ஒன்னும் இல்லை” என்றவள் “மன்னிச்சிடுங்க நான் போறேன் ” என்று கூறி அங்கிருந்து செல்ல முற்பட்டாள் கீர்த்தி.
தன்னை மீறி சென்றவளை கோவத்துடன் பார்த்தவன் “நில்லு” என்று கூற… கீர்த்தியின் கால்கள் அப்படியே நின்றது, நின்றவள் உடனே அவனை திரும்பி பார்த்தாள்.
” வா ” என்று அபி கட்டளையாக அழைக்க… கீர்த்தியும் தயங்கியபடியே அவன் அருகில் வந்தாள்… பசிக்கு உணவளித்தவன் அல்லவா?
அவளை ஆழ்ந்து பார்த்தவாறே இருக்கையில் கால்,மேல் கால் போட்டு அமர்ந்தவன்… ” பசிக்கு சாப்பாடு கொடுத்தாச்சு, அது மாதிரியே நீ பண்ணின தப்புக்கும் தண்டனை கொடுக்கணும் இல்லை ” என்று கூறியவன் அவளை வன்மத்துடன் பார்க்க… கீர்த்தியோ பயந்து போய் நின்றாள்.
” என்ன தண்டனை? எதுக்கு? ” என்று சிறுபிள்ளையாய் அவள் கேட்க…
” பொய் சொல்லி நீ இங்க சாப்பிட நெனச்சத்துக்கும், சாப்பாட்டை கீழே கொட்டி வேஸ்ட் பண்ணத்துக்கும் ” என்றவுடன் கீர்த்தி அவனை அதிர்ந்து பார்க்க… அவனோ இதழ் வளைத்து சிரித்துக் கொண்டான்…
சுத்தி இருந்தவர்கள் அனைவரும், கீர்த்தியை பார்த்து கேலியாக சிரிக்க… அவர்கள் சிரிப்பு சத்தம் கேட்டு அபிமன்யு திரும்பி பார்க்க… அவனது பார்வையில் அவர்களது வாய் மூடி கொண்டது.
” என்ன த… தண்டனை போலீஸ்ல புடிச்சி கொடுப்பீங்களா? ” என்று தடுமாறி கேட்ட கீர்த்தியின் கண்கள் கலங்கி போனது…
” ம்ஹும்… ஒரு பத்து … இல்லை வேணாம் நல்லா சாப்பிட்டு இருக்க இல்லை… ஒரு இருபது தோப்பு கரணம் போடு போதும் ” என்று அவன் கூற… அங்கு சுற்றி இருந்தவர்களை பார்த்த கீர்த்தி குனி குறுகி போனாள்… சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஏதோ படம் பார்ப்பது போல ஆர்வமாக அதனை பார்த்து கொண்டிருந்தனர்..
” இங்கயேவா? ” என்று அவள் தயக்கத்துடன் கேட்க…
” ம்ம்ம் இங்க தான், அதுக்குன்னு தனியா ரூம் போடவா முடியும்? ” என்றவன் அவளை பார்த்து விஷமமாக சிரிக்க…
அவளுக்கு அவன் கூறிய வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை அதனால் அமைதியாகவே நின்றாள்… ஆனால் சுற்றி இருந்தவர்களுக்கு நன்றாக புரிந்து போக… அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிசுகிசுக்க தொடங்கினர்…
” நேரம் ஆக ஆக இருபது! ஐம்பதா கூட மாறலாம்! சீக்கிரம்… ” என்று கூறி அவள் அமைதியை கலைத்தான் அபிமன்யூ…
‘ எல்லாம் என் நேரம் இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்கணுமோ தெரியல ‘ என்று தன் நிலைமையை எண்ணி நொந்து கொண்டவள், வேறு வழி இல்லாமல் கைகளால் தன் காதை பிடித்து கொண்டு தோப்பு கரணம் போட தொடங்கினாள்…
சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவளை ஒரு காட்சி பொருளாக வேடிக்கை பார்க்க… உள்ளுக்குள் நொந்து போய் உயிர் இருந்தும் ஜடமாய் அவர்கள் முன் நின்றாள்…
முதல் தோப்புகரணம் போட அவள் ஆரம்பிக்கும் முன்னே, கண்களை மூடி திறந்த அபிமன்யூ ” ஸ்டாப்” என்று கூறியபடி.. இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள… அவனை வலியுடன் பார்த்த கீர்த்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய… அப்படியே மயங்கி கீழே சரிந்தாள் பெண்ணவள்…
அதனை பார்த்து வெற்றி புன்னகை ஒன்றை தன் இதழ்களில் படர விட்டவன்,… மெல்ல அவள் அருகில் சென்று அவளை தன் கைகளில் தூக்கிகொண்டான்… அதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து பார்க்க…அவனோ எந்தவித சலசலப்பும் இன்றி அவளை தன் கார் அருகில் தூக்கி வந்தவன், காரின் கதவை திறக்கும் பொருட்டு, அவளை தனது ஒற்றை பக்க தோளுக்கு இடம் மாற்றியவன், கார் கதவை திறந்து உள்ளே அவளை படுக்கவைத்தபடி வெளியே வந்தான்…
திரும்பி வந்தவனை, சுற்றி இருந்த அனைவரும் புரியாமல் பார்க்க… ” என்ன வேடிக்கை… வேலையை பாருங்க ” என்றவன் இருக்கையில் அமர்ந்தவாறே அடுத்த காட்சிக்கான டையலாக் பேப்பரை பார்க்க தொடங்கினான்.
ஷூட்டிங் முடிய… நள்ளிரவு 2 மணி ஆகி இருந்தது… அனைத்தும் முடிய… அபிமன்யுவின் அருகில் வந்த சதீஷ்…
” நாளை மறுநாள் சென்னையில ஷூட்டிங் சார், நீங்க இங்க இருந்து காலையில் கிளம்பினா தான் கொஞ்சம் சுலபமா இருக்கும் ” என்றான்.
” அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்… ” என்றான் அபிமன்யு அழுத்தமாக..
” சார் அப்ரோம் அந்த பொண்ணு ? ” என்று சதீஷ் தயங்கியபடியே கீர்த்தியை பற்றி விசாரிக்க…
” அது உனக்கு தேவை இல்லாத விஷயம்…இங்க இப்போ நடந்த எந்த விஷயமும் வெளிய யாருக்கும் தெறியவர கூடாது… புரியுதா? அப்படி ஏதாவது தெரிஞ்சால், ” என்றவன் பார்வையாலேயே அவனை மிரட்டினான்.
” இல்லை சார் அப்படி எல்லாம் எதுவும் ஆகாது… இன்னிக்கு ஷூட்ல இருந்தவங்க எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்க தான், சோ பிரச்சனை வர வாய்ப்பு இல்லை ” என்று உறுதி கூறினான் சதீஷ்…
” ம்ம்ம் குட் அப்ரோம் நான் கிளம்புறேன்… நாளை மறுநாள் காலையிலயே நான் சென்னையில் இருப்பேன் ” என்ற அபிமன்யூ நேராக தனது கார் நோக்கி வந்தான்…
அப்போது அவனை பார்த்து தயங்கியபடியே ஒருவன் நின்று கொண்டிருக்க… அவனை பார்த்து மெல்ல கை அசைத்து “வா” என்று அழைத்தான் அபிமன்யு…
அவனும் வாய்கொள்ளா புன்னகையுடன் அபியின் அருகில் வந்தான்…
அபியோ வாலட்டில் இருந்து பணத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தவன் ” குட் ஜாப் ” என்றான்…
அவனும் சிரித்தபடியே அபியிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டவன் ” தேங்க் யூ சார் ” என்றான்…
” அப்ரோம் அடிச்சது ரொம்ப வலிக்குதா? ” என்று அபி கேட்க…
அதெல்லாம் இல்லை சார் என்றவனது கரம் தன்னிச்சையாக தனது கன்னத்தை வருடி கொண்டது…பின்னர் அபி கொடுத்த பணத்தை தன் பாக்கெட்டில் வைத்து கொண்டவன் அங்கிருந்து சென்றான்…
அவன் வேறு யாரும் இல்லை கீர்த்தி உணவு உண்ணும் போது அதனை தட்டி விட்டு அவளுக்கு திருடி பட்டம் கொடுத்து அவமான படுத்தியவன் தான்.
பணத்தை வாங்கி கொண்டு அவன் அங்கிருந்து சென்றபிறகு… தனது கார் கதவை திறக்க முற்பட்ட அபியின் முன்னால் நிழலாக வந்து நின்றான் இன்னொருவன்…
அவனை கண்ட அபிமன்யூவின் இதழ்கள் விரிந்து கொள்ள… எதிரில் இருந்தவனும் அவனை பார்த்து அழகாக சிரித்து கொண்டான்…
” எதுக்கு எவ்ளோ டிராமா? ” என்று அவன் கேட்க…
” இனிமேல் அவளுக்கு என்னை விட்டு போகணும்ங்குற எண்ணமே வர கூடாது… அப்படி போனால் இந்த கஷ்டம் எல்லாம் அனுபவிக்க வேண்டி வரும்… அனுபவிக்க வைப்பேன்… ” என்று கூறிய அபிமன்யுவின் கண்கள் கோவத்தில் சிவந்து இருந்தது..
அவன் கூறிய அனைத்தையும் காரில் சாய்ந்து நின்றபடி அமைதியாக கேட்டு கொண்டிருந்தவன்… அபிமன்யுவின் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி குடிக்க போக, அதனை அவன் கையில் கொடுக்க மறுத்த அபி பாட்டிலில் இருந்த கீர்த்தி குடித்து மீதி வைத்த தண்ணீரை கீழே ஊற்றினான்… எதிரில் இருந்தவனோ அவனை புரியாமல் பார்க்க… ” ஸ்லீப்பிங் பில்ஸ் மிக்ஸ் பண்ணி இருக்கேன் ” என்று கூறி புன்னகைத்தான் அபிமன்யு…
அவன் திட்டம் கண்டு அவனை மெச்சி கொண்ட சத்யன் ” மாஸ்டர் பிளான் விக்ரமன் சார் ” என்று கூற…
அவனை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி புன்னகைத்தான் விக்ரமன் அபிமன்யூ…
தன்னை அறியாதவர்களுக்கு அபிமன்யு…
தன்னை அறிந்தவர்களுக்கு விக்ரமன்…
விக்ரமனாய் வெளி உலகத்திற்கு தன்னை அடையாள படுத்தி கொள்ள விரும்பாதவன்… அபிமன்யுவாக தன்னை வெளி உலகிற்கு அடையாள படுத்தி கொண்டான்… அதற்கு பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இருந்தன…
கீர்த்தியின் வாழ்க்கைக்குள் விக்ரமனாய் அவளை நெருங்க தயங்கியவன், அபிமன்யுவாய் அவளை நெருங்க நினைத்தான்…
கீர்த்தி ஷூட்டிங் ஸ்பாட்டில் உணவுக்காக வரிசையில் நிற்கும் போதே அதனை விக்ரமன் பார்த்து விட்டான்… அதன் பிறகு தான் ஒருவனை ஏற்பாடு செய்து கீர்த்தியிடம் அப்படி மரியாதை குறைவாக நடக்க செய்தான்… அதன் பிறகு நடந்த அனைத்துமே விக்ரமனின் ஏற்பாடு தான்…
தன்னிடம் இருந்து தப்பித்து செல்ல நினைத்த கீர்த்தியை விக்ரமனால் மன்னிக்க முடியவில்லை ‘ அவள் எப்படி என்னை விட்டு செல்லலாம்? ‘ என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருந்தது… தன்னை மீறி சென்றால் அவள் என்னவெல்லம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும் என்று அவளுக்கு உணர்த்தவே விக்ரமன் இதனை செய்தான்..
” தென் சத்யா, அவன் எப்படி இருக்கான் கண் முழிச்சிட்டானாமா? ” என்று விக்ரமன் கேட்க…
” இல்லை சார் இன்னும் மோசமான நிலையில் தான் இருக்கானாம் ”
” ம்ம்ம் ஓகே, நீ இங்கேயிருந்து அவனை பார்த்துக்கோ… நான் நாளைக்கே சென்னை கிளம்பனும், எப்படியும் அங்க ஷூட்டிங் முடிய ரெண்டு வாரம் ஆகும், அதுக்கு அப்புறம் வரேன் ” என்று சத்யனிடம் கூறிய விக்ரமன் காரில் ஏறி அமர்ந்து கொண்டான்..
” ஓகே சார்… இனி அடுத்து என்ன பிளான்? ” என்ற சத்யா கார் சன்னலின் அருகே சாய்ந்தபடி கேட்டான்.
” நந்தினி இல்லன்னு தெரிஞ்சா கண்டிப்பா அவனுங்க வெளியே வந்து தான் ஆகணும் பார்க்கலாம்… எப்படியும் மாட்டுவானுங்க, அப்ரோம் பார்த்துக்கலாம் ??? ” என்றவன் கோவத்தில் கண்கள் சிவக்க கார் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்…
” அப்போ இந்த பொண்ணு சார்? ” என்று சத்யன் கீர்த்தியை குறிப்பிட்டு கேட்க… பதிலெதுவும் பேசாமல் அவனை பார்த்து புன்னகைத்தபடியே அங்கிருந்து காரினை எடுத்துகொண்டு சென்றான் விக்ரமன்…
விக்ரமன் எப்போதும் அவன் செயல்களுக்கு யாருக்கும் முழுவிளக்கம் கொடுக்க மாட்டான். சரியோ! தவறோ! அவன் செய்யும் செயலை முழுவதும் அறிந்தவர்கள் இங்கு யாரும் இல்லை…
விக்ரமன், கீர்த்தியை அழைத்து கொண்டு நேராக தங்களுடைய இல்லம் நோக்கி வந்தான்..
அவன் காரின் வருகையை கண்டு கொண்டு வாட்ச்மேன் நுழைவாயில் கதவை திறந்து விட.. விக்ரமனின் வாகனம் அந்த இல்லத்திற்குள் நுழைந்தது…
உள்ளே வந்ததும், காரில் இருந்து கீழே இறங்கியவன், காரின் பின்பக்க கதவை திறக்க… அங்கே இன்னும் மயக்கத்தில் குழந்தை போல சுருண்டு கிடந்தாள் கீர்த்தி… அதனை பார்த்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது… குனிந்து அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டவன், புன்னகை முகம் மாறாமல் தன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்.
அரண்மனை போன்ற வீடு, ஆனால் ஆட்கள் யாரும் இல்லாமல் வெறுமையாக காணப்பட்டது… ஒருகாலத்தில் எத்தனை நபர்களின் சிரிப்பு சத்தத்தை எதிரொலித்த அந்த வீடு, இன்று மயான அமைதியை பிரதிபலித்தது… இதற்கெல்லாம் காரணம் தான் என்னவோ?
கீர்த்தியை கைகளில் ஏந்தியவாறே வீட்டை சுற்றி பார்த்தவனின் முகத்தில் இருந்த புன்னகை, மறைந்து, இறுக்கம் குடி கொண்டது…
“விக்ரமா… என்னடா இது இவ்ளோ நாளுக்கு அப்ரோம் உனக்கு காதல் வந்து இருக்குன்னு நாங்க எல்லாம் சந்தோஷபடுறதா? இல்லை அந்த காதல் ஒரு சின்ன பொண்ணு மேல வந்து இருக்குன்னு சொல்லி வருத்துபடுறதா? என்னடா நீ இப்படி பண்ணிட்ட ” என்றவர் சிரித்த படியே சலித்து கொள்ள…
அங்கிருந்த அனைவரும் அதேபோல தான் அவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தனர்..
” ஹெலோ டாக்டரே… எனக்கு ஒன்னும் அந்த பொண்ணு மேல லவ் எல்லாம் இல்லை… ஏதோ புடிச்சி இருக்கு அவ்ளோ தான் ” என்று விக்ரமன் வீரமாக பேசியபடி மீசையை முறுக்கி விட்டு கொள்ள…
“ஓஹோ! ஏதோ புடிச்சிருக்குன்னு சொல்லுறவன் தான் அந்த பொண்ணை விதவிதமா போட்டோ எடுத்து ரூம் முழுக்க மாட்டி வச்சியிருக்கானா? ” என்று கேட்டபடியே விக்ரமனின் தாய் இருக்கையில் வந்து அமர்ந்தார்…
” அது எல்லாம் சும்மா ஒரு ஷூட்க்காக எடுத்தது… அவ்ளோ தான்… லதாமா நீ உன் பையனை நம்ப மாட்டியா? ”
” நம்பிட்டோம்டா நல்லவனே, நீ இப்படியே அந்த பொண்ணு வீட்டு வாசலில் போய் நில்லு ஒரு நாள் இல்லைனா ஒருநாள் அந்த பொண்ணு வீட்டுல உள்ளவங்க மைனர் பொண்ணை சைட் அடிக்கிறன்னு சொல்லி உன்னை போலீஸ்ல புடிச்சி கொடுக்க போறாங்க” என்று அவன் தந்தை கிண்டல் செய்ய…
” அது எப்படி? நான் இருக்கும் போது விக்ரமன் மேல யாரும் கை வைக்க முடியுமா ? ” என்று கேட்டபடி அறையில் இருந்து வெளியே வந்தான் அவன்…
” அப்படி சொல்லுங்க அசிடன்ட் கமிஷனரே ” என்ற விக்ரமன் அவன் தோளில் கை போட்டு அணைத்து கொண்டான்…
அந்த நேரத்தில் டீ எடுத்து கொண்டு உள்ளே வந்தவளோ ” இப்போ எதுக்கு எல்லாரும் என் விக்ரமனை இப்படி பேசுறீங்க ? இப்போ என்ன இவனை விட அந்த பொண்ணு, ஒரு 12 வயசு சின்ன பொண்ணு அவ்ளோ தானே… சின்ன பொண்ணு என்ன எப்போவும் சின்ன பொண்ணாவா இருக்க போறாள்… அவள் பெரிய பொண்ணா ஆகுறவரை விக்ரமன் காத்து இருப்பான்… அப்படி தானேடா ” என்றவள் விக்ரமனின் மறுபக்க தோள்களில் சாய்ந்து கொண்டாள்…
இந்த நிகழ்வுகள் எல்லாம் விக்ரமனின் கண் முன்னே காட்சி படமாக தெரிய… கண்களை மூடி திறந்து ஆழ்ந்து மூச்செடுத்தவன்,
கீர்த்தியை தன் அறைக்குள் தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைத்தான்.
கீர்த்தியின் தோள்களில் மாட்டியிருந்த பையை எடுத்து அருகில் இருந்த டேபிளின் மீது வைத்தவன், அவளது தலையை மெல்ல கை கொடுத்து தூக்கி தலையணையில் படுக்க வைத்தான்…
கீர்த்திக்கோ இன்னும் மயக்கம் தெளியவில்லை, அமைதியான அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் சிறு புன்னகையுடன் அவள் அருகில் சரிந்து படுத்து கொண்டான்.
அவளது முகத்திற்கு நேராக தனது முகத்தினை கொண்டு வந்தவன், அவளது நெற்றியில் படர்ந்திருந்த முடியினை தன் விரல் கொண்டு மெல்ல விலக்கினான்…
கள்ளமில்லா அவளது வதனத்தை தன்னை நோக்கி இழுத்தவன்… ” உண்மையாவே உனக்கு என்னை ஞாபகம் இல்லையா?… ஆனால் உன்னை தவிர வேற எதுவும் எனக்கு ஞாபகத்தில இல்லை ” என்றவன் இதமாக அவளது நெற்றியில் முட்டினான்…
” பொம்மை மாதிரி இருக்கடி ” என்றவன் அவளது கன்னத்தை வலிக்க கிள்ளினான்… அவனது கரம் பட்டு அவளது கன்னம் சிவந்து போனது… வலியால் சிவந்த அவளது கன்னத்தின் மீது மெல்ல இதழ்களை ஒற்றி எடுத்தான்…
அவள் மீது அவனுக்கு இருப்பது காதலா? ஆசையா? ஆர்வமா? கோவமா? பழிஉணர்ச்சியா? என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்…
இதமாக அவளது கன்னத்தில் இதழ் பதித்தவன், அவள் அருகில் இருந்து எழுந்து கொண்டான்.
மறுபக்க கட்டிலின் ஓரத்தில் வந்து படுத்து கொண்டவன், இடது கையினை கண்களுக்கு குறுக்காக வைத்தபடி கண்களை மூடி தூங்க தொடங்கினான்… வெகுநாட்களுக்கு பிறகு அவன் தழுவும் நிம்மதியான உறக்கம் இதுவே…
*******
இங்கு பாரில் அதியனோ மது கோப்பையை கைகளில் வைத்து கொண்டு, அதனை அருந்தியபடியே இருக்கையில் அமர்ந்திருந்தவன் அங்கு வித விதமாக அரைகுறை ஆடையுடன் ஆடும் பெண்களையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
அவனது கண்கள் மட்டுமே அங்கு நிலைத்திருந்தது ஆனால் கவனமோ வேறு எங்கேயோ நிலைத்திருந்தது…
கவனமில்லாமல் இருப்பினும் அவனது கண்கள் அந்த பெண்களையே பார்த்து கொண்டிருக்க… அவனது பார்வையில் போதை கொண்ட பேதை பெண்ணோ அவனது கவனத்தை தன்னை நோக்கி இழுக்குமாறு கவர்ச்சியாக நடனம் ஆட தொடங்கினாள்…
அப்போதும் அவனது கண்கள் அந்த பெண்ணின் உடல் மீது தான் பதிந்திருந்தது ஆனால் அவனுக்கு எந்த வித சலனமும் ஏற்படவில்லை…
அப்போது முழுபோதையில் ஒரு பெண்ணின் இடுப்பில் கைபோட்டு கொண்டு அழைத்து வந்த சரத், அதியனின் அருகில் அமர்ந்து கொண்டான்…
சரத் உடன் இருந்த பெண்ணோ அவனை தன்னை நோக்கி இழுத்து இதழ் மேல் இதழ் பதித்து வன்மையாக அவனுடன் உறவாடி கொண்டிருக்க… அதனை சலிப்பாக பார்த்த அதியன்… தன் கையில் இருந்த மதுவினை அமைதியா குடித்து கொண்டிருந்தான்…
அவன் அமைதியை உணர்ந்து கொண்ட சரத்… ” ஒன் மினிட் பேப்ஸ் ” என்று அந்த பெண்ணை தன்னில் இருந்து பிரிந்து வைத்தவன்… ” வாட்ஸ் ரான்ங் வித் யூ அதி, இங்க இத்தனை பொண்ணுங்க இருங்காங்க நீ என்னன்னா அமைதியா வேடிக்கை பார்த்துட்டு இருக்க… லெட்ஸ் எஞ்சாய் .. உனக்காக தான் இங்க அழைச்சிட்டு வந்தேன், நீ என்னன்னா இப்படி பண்ணிட்டு இருக்க? வாழ்க்கையை அனுபவிக்காம இப்படி வேஸ்ட் பண்ணிட்டு இருக்க… உன்னை என் தம்பின்னு சொல்லிக்கவே வேதனையா இருக்குடா ” என்று சரத் ஆதங்கபட…
” அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்லுற? அவளோ கஷ்டபட்டு நீ என்னை உன் தம்பின்னு சொல்ல தேவை இல்லை ” என்ற அதியன் மீண்டும் மது அருந்த தொடங்க… அவன் கையை தடுத்து பிடித்துக் கொண்ட சரத் ” டேய் பொண்ணுங்கடா! உன்னோட சொர்க்கம்டா, நீ முன்ன மாதிரி இல்ல அதி, நானும் நீ இப்போ மாறிடுவ அப்ரோம் மாறிடுவன்னு பாக்குறேன் ஆனால் நோ யூஸ் ” என்று சரத் கோவபட…
” ம்ம்ம் பொண்ணுங்க தான், இது சொர்க்கம் தான்… இவங்களால இப்போ எனக்கு சுகத்தை கொடுக்க முடியும்… ஆனால் நிம்மதியை கொடுக்க முடியாது… எனக்கு தேவை சுகம் இல்லை…. ” என்றவன் மீண்டும் மது அருந்த தொடங்கி விட்டான்…
‘ இனி இவன் கிட்ட பேசி எந்த பயனும் இல்லை ‘ என்று எண்ணிய சரத் அங்கிருந்து எழுந்து சென்று மீண்டும் அந்த மாடல் அழகிகளுடன் ஆட தொடங்கியிருந்தான்…
அதியனோ எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்க… சரத் தான் அங்கிருந்த ஒரு அல்ட்ரா மாடல் பெண்ணிடம் பணம் கொடுத்து அதியனிடம் அனுப்பினான்… ( ஒரு அண்ணன் பண்ணுற வேலையாடா இது? )
அந்த பெண்ணும் சரத் கூறிய படியே… அங்கிருந்து மது அருந்தி கொண்டிருந்த அதியனின் தொடை மீது வந்து அமர்ந்தவள்… ” ஹேய் டார்லிங் ” என்றவாறே தன் கரம் கொண்டு அவனது உடலில் சிறு சிறு சில்மிஷங்கள் செய்ய… எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தான் அதியன்…
நேரம் போக போக அந்த பெண்ணின் கரம் அவனது உடலில் அந்தரங்கமாய் பதிய… பொறுமை இழந்து, அவளை தன்னில் இருந்து வேகமாய் பிரித்து தள்ளியவன், எழுந்து கொள்ள போக அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்திய அந்த பெண்ணோ, அவனது முகத்தை தன்னை நோக்கி இழுத்து நொடியில் அவனது இதழ்களை அதிரடியாக சிறை செய்தாள்…
அதில் கோபமடைந்தவன் வேகமாக அவளை தன்னில் இருந்து பிரித்துவிட்டு, அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்…
அதை கண்ட சரத்… ” ஒஹ் ஷிட் ” என்று கூறி அதியனிடம் விரைந்து வர… அவனை முறைத்து பார்த்தவன், அங்கிருந்து வெளியே வந்தான்…
” அதி ஸ்டாப்… லிஸன் ” என்றவாறு சரத் அதியனை பின் தொடர… அதியனோ தன் காரின் அருகில் வந்தவன், சிகரெட்டை எடுத்து புகைக்க தொடங்கி விட்டான்…
” எதுக்காகடா இப்படி பண்ணுற? ஏதோ பொண்ணுங்க உனக்கு புதுசு போல நடந்துக்கிற… இந்த நடிப்பை மத்தவங்க கிட்ட காட்டு, என்கிட்ட வேண்டாம், இப்போ எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணுற? ” என்று சரத் ஆக்ரோசமாக கேட்க..
” உனக்கு என் பீலிங்ஸ் புரியாது… விட்டுடு இனிமேல் இந்த மாதிரி இடத்துக்கு என்னை கூப்பிடாத? அது தான் எல்லாருக்கும் நல்லது” என்று அதியன் அழுத்தமாக கூறினான்…
” டேய் இந்த மூணு வருசமா நானும், உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன்… ஏன்டா இப்படி இருக்க? நீ எங்க அதியனே இல்லை என்ன தான்டா உனக்கு பிரச்சனை? ”
” தெரியலடா… எதுவும் பிடிக்கல! சொல்ல போனால் வாழவே பிடிக்கல! அவளை தொட்ட பின்னாடி வேற யாரையும்… முடியலைடா, அருவருப்பா இருக்கு ” என்று அதியன் வலியுடன் கூற, அப்போது தான் சரத்திற்கு அவன் கூற வருவது புரிந்தது…
” டேய் இன்னுமா அதை எல்லாம் நினைச்சிட்டு இருக்க? ஒஹ் காட் ” என்று சரத் அதிர்ந்து கேட்க…
” மூணு வருஷம் ஆச்சு… ஏன்? இப்பவும் மறக்க முயற்சி பண்ணுறேன், ஆனால் முடியல, என்ன பண்ண சொல்லுற? சில நேரம் எனக்கே என்னை நெனச்சா வெறுப்பா இருக்கு ” என்றவன் தன் தலையை பிடித்து கொண்டான்…
” டேய் … இன்னுமா அவளை நினைச்சிட்டு இருக்க.. இந்நேரம் அவள் எவன் கூட வாழ்ந்துட்டு இருக்காளோ அதி… லீவ் இட் ”
” ம்ம்ம் ஆமாடா நீ சொல்லுறதும் உண்மை தான்,அவள் யாரு எனக்கு? அவளுக்காக நான் ஏன் என் சந்தோஷத்தை இழக்கணும், அவள் இந்நேரம் எவன் கூடவோ சந்தோஷமா வாழ்ந்துட்டு தானே இருப்பாள்… ” என்று அவன் உதடு கோவமாக வார்த்தையை உதிர்த்தாலும் கண்கள் கண்ணீரை வார்த்தது… மனவலியின் வெளிப்பாடு.
“அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்கும் இல்லடா … குழந்தை கூடா பிறந்து இருக்கும், குழந்தைக்கு என்ன பேரு வச்சி இருப்பாள், கண்டிப்பா என் பேரு வச்சி இருக்க மாட்டா இல்லை? ” என்று கேட்டவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய…
” டேய் அதி வேணாம்டா அவளை பத்தி யோசிக்காத சரி வா போகலாம்” என்று சரத் கூற…
” இல்லைடா, ஒரு நிமிஷம் அவளே சந்தோஷமா இருக்கும் போது நான் ஏன் இப்படி இருக்கணும்” என்றவன் மீண்டும் அந்த பாருக்குள் போக… அங்கே வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் இடையை பிடித்து நொடியில் தன் பக்கம் இழுத்தவன், அவளது இதழ்களை முரட்டு தனமாக சிறை செய்தான்… தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு அவளை முத்தமிட்டவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.. ” அதியா ப்ளீஸ் என்னை விடு என்னால முடியல.. ” என்று அவன் மனதில் நிறைந்திருந்த பெண்ணவளின் குரல் அவனது சிந்தையில் ஒலிக்க… தீ சுட்டார் போல அந்த பெண்ணிடம் இருந்து விலகியவன், ஒரு கணம் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து அதிர்ந்து போனான் ” நோ… நோ ” என்று கத்தியபடியே வெளியே வந்தவன், முத்தமிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் வாந்தி எடுத்தான்…
உள்ளம் ஒன்றாமல் உடல் கொண்ட இதழ் பரிமாற்றம் அவனுக்கு ஒவ்வாமையாகியது…

