
அத்தியாயம் 2
” வேண்டாம் சத்யா, ப்ளீஸ் என்னை கேவலபடுத்தாதே ” என்றவள் அவனை கையெடுத்து வணங்க… அப்போது அவர்களது அறை கதவு தட்டப்பட்டது…
” போலீஸ் தான் … ” என்றவன் நந்தினியை பார்த்து நக்கலாக சிரித்தபடி… கதவை திறக்க, அங்கே நின்றுக்கொண்டிருந்தது வேறு யாருமில்லை மகிழன் தான்…
” நீயா? ” என்று சத்யன் பேச வரும் முன், அவன் முகத்தில் ஓங்கி குத்தினான் மகிழன்…
அதனை அதிர்ந்து பார்த்தபடி நின்ற நந்தினியின் விழிகள் வாசலில் நின்ற மகிழனின் மீது படிய… அவனோ அவளை அனல் தெறிக்க பார்த்தவன்… ” வா ” என்று அழைக்க…
அவளோ தடுமாறிய விழிகளுடன் ” அது மாமா… நான் இங்க… ” என்று அவள் பேச ஆரம்பிக்கவும்… தனது கரம் உயர்த்தி அவளை பேச வேண்டாம் என்றவன் ” போலாம் நந்தினி ” என்றான்.
எப்போதும் ‘ கண்ணம்மா ‘ என்று அழைப்பவன் இப்போது ‘நந்தினி’ என்று அழைக்க… அந்த அழைப்பே அவளது. இதயத்தில் இனம் புரியாத ஒரு வலியை கொடுத்து சென்றது…
நந்தினியோ விழி உறைந்த நிலையில் மகிழனை பார்க்க… அப்போது கீழே விழுந்து கிடந்த சத்யா மீண்டும் எழுந்து அவனை தாக்க வர… அவன் நெஞ்சில் மிதித்து கிழே தள்ளிய மகிழன், நந்தினியின் கரம் பற்றி அவளை வெளியே அழைத்து வந்தான்…
பின்னர் சத்யனை அந்த அறைக்குள்ளேயே வைத்து தாழிட்டபடி அங்கிருந்து கிளம்பினர்…
தன் கரம் பற்றியவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் இழுத்த இழுப்பிற்கு தத்தி நடைபோடும் குழந்தையாய் அவன் பின்னால் சென்றாள் நந்தினி…
ரிசப்ஷனில், போலீஸ்காரர்கள் ரெய்டு பற்றி பேசிக்கொண்டிருந்த சமயம், நந்தினியை அழைத்து கொண்டு மகிழன் வெளியே வந்திருந்தான்…
” இங்க விபச்சாரம் நடக்கிறதா தகவல் வந்து இருக்கு ” என்று போலீஸ்காரர்கள் அங்கு சொல்லிகொண்டிருக்க…
” சார் இங்க அப்படி எல்லாம் எதுவும் நடக்கிறது இல்லை… உங்களுக்கு யாரோ தப்பா தகவல் கொடுத்து இருக்காங்க…இருங்க மானேஜர் வர சொல்லுறேன் ” என்று ரிசப்ஷனில் இருந்த பெண் மேனஜருக்கு அழைத்து விவரம் கூறினாள்…
கீழே வந்த அவரும்… ” உங்களுக்கு யாரோ தப்பான தகவல் கொடுத்து இருக்காங்க ” என்று கூறி கொண்டிருக்க…
தன் முகத்தில் வடிந்த ரத்தத்தை எழுந்து அமர்ந்து, துடைத்த்துக்கொண்ட சத்யன்… மெல்ல தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து விக்ரமனுக்கு அழைத்தான்… விக்ரமனோ அழைப்பை ஏற்க… சத்யன் நடந்த விஷயத்தை அவனிடம் கூறினான்..
” உன்னை எல்லாம் வச்சிட்டு புல்லு கூட புடுங்க முடியாதுடா… ” என்று சத்யனை திட்டிய விக்ரமன்…
அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு அழைக்க… அவரும் அழைப்பை ஏற்றார்…
” சொல்லுங்க சார் லாட்ஜில் தான் இருக்கோம் ”
” லாட்ஜில் இருந்து மட்டும்!!!! போனோமோ, ரெய்டு பண்ணோமான்னு இல்லாமல் , ரிசப்ஷனில என்ன பேரமா பேசிட்டு இருக்கீங்க” என்று விக்ரமன் சலித்துக்கொள்ள…
” இல்லை சார் அது வந்து … ”
” உங்க விளக்கம் எல்லாம் போதும் லாட்ஜ் மாறி போச்சு… உங்களை தொந்தரவு பண்ணதுக்கு மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டு முதலில் அங்கயிருந்து கிளம்புங்க”
” ஏன் சார் ? ”
” சொன்னதை செய்யுங்க, ” என்ற விக்ரமன் அழைப்பை துண்டித்தான்..
பின்னர் போலீசார்கள், மேனஜரிடம் ” சாரி இப்போ தான் மேல் இடத்தில் இருந்து தகவல் வந்தது… லாட்ஜ் மாறி வந்துட்டோம் ” என்று கூறியவர்கள் அங்கிருந்து சென்றார்கள்…
அப்போது போலீசார்களில் ஒருவர், மற்றொருவரிடம்… ” நம்ம பொழப்பை பார்த்தீங்களா? ஏட்டய்யா, என்ன தான் வெளிய போலீஸ்ங்குற பவர் இருந்தாலும் பணம், பதவி இருக்க எல்லாருக்கும் அடிபணிந்து போக வேண்டிய நிலமை மட்டும் மாறவே இல்லை… ” என்று தன் மனதில் உள்ள சலிப்பை வெளிப்படுத்த…
” நம்ம நிலைமையை விட நமக்கு முன்னாடி போறாரு பாரு நம்ம இன்ஸ்பெக்டர் சார் அவரு தான் பாவம்… மேல் இடத்தில் இருந்து போன் வந்த உடனே அவர் முகத்தை பார்க்கணுமே ” என்று கூறி சிரிக்க… அவர்களது சிரிப்பு சத்தத்தில் திரும்பிய இன்ஸ்பெக்டர் அவர்களை முறைக்க… அவர்களது வாய் மூடிக்கொண்டது…
நந்தினியை அழைத்து வந்த மகிழன் அவளை வீட்டில் இறக்கி விட்டபடி அவளது முகத்தை கூட பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி போக பார்க்க…
” மா மா ” என்று நந்தினி அவனை நெருங்கி வரவும்… பார்வையாலேயே அவளை தன்னிடமிருந்து இருந்து விலக்கி நிறுத்தியவன்… ” உள்ள போ ” என்று கூறினான்.
” மாமா நான் உன்கிட்ட பேசணும்.. ப்ளீஸ் நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு… அது நான் அங்க.. ஏன் போனேன்னா… அவன்…வந்து ” என்று அவள் சொல்ல முடியாமல் தடுமாற…
” ஆச்சர்யமா இருக்கு டாக்டர் தேவநந்தினி… நடந்த விஷயத்துக்காக வருத்தப்பட்டு எனக்கு விளக்கம் கொடுக்க முயற்சி பண்ணுறாங்களா? வாவ் மை லைப் மை ரூல்ஸ்… என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்… நான் யாரையும் சார்ந்து வாழ மாட்டேன்… எனக்கு யாரு உதவியும் தேவையில்லை.. இந்த மாதிரி பக்கம் பக்கமா பேசுவியே இப்போ பேசுடி… இப்படி எல்லாம் பேசி உன்னை காயப்படுத்த எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாதுடி… ஆனால் என்னால இப்போ கூட உன் மேல கோவபட முடியல… இதுக்கு மேலயும் உன்கிட்ட பேசினால் எங்க உன்னை காயப்படுத்திடுவேன்னோன்னு எனக்கு பயமா இருக்குடி… என்னை கொஞ்சம் தனியாவிடு… நான் இல்லாத தனிமை தான் உனக்கு ரொம்ப பிடிக்குமே” என்றவன் வலியுடன் அங்கிருந்து சென்றிருந்தான்…
உணர்வுகளை சொல்லி அழ கூட துணிவில்லாமல் வீட்டிற்குள் நுழைந்தவள்… எதுவும் பேசாமல் அங்கு டிவி முன்னாள் அமர்ந்திருந்த தன் தாயின் மடியில் தலை வைத்து படுத்துகொண்டாள்…
என்றும் இல்லாமல் இன்று தன் மடி சாய்ந்த தனது மூத்த மகளை ஆச்சர்யமாக பார்த்த அம்பிகா.. ” என்னடி ஆச்சர்யமா இருக்கு நானா பக்கத்துல வந்தாலும் கூட லேப்ல இருந்து வரேன் என் பக்கத்துல வராதீங்க… அப்படின்னு சொல்லுவ… இப்போ என்ன ஆச்சு என் செல்ல பொண்ணுக்கு ” என்று கேட்டவர் அவளது தலையை இதமாக வருடிவிட்டார்…
அவர் மடியில் படுத்தவாறே… ” என்னை ஏன்மா என் விருப்பத்துக்கு வளர விட்டீங்க… எதுக்காக என் ஆசைக்காக எல்லாத்தையும் பண்ணீங்க… நம்ம வாழ்க்கையில் சுயமா முடிவெடுக்கனும்ன்னு எனக்கு சொல்லி கொடுத்த நீங்க… எது சரியானா முடிவுன்னு ஏன்மா சொல்லி கொடுக்கல … ஏழு வருசத்துக்கு முன்னாடி அந்த மனுஷனை ‘ சுயநலம் பிடிச்சவருன்னு ‘ சொன்ன ஒரு வார்த்தைக்கு… இப்போவரை அவர் முகம் பார்க்க முடியாமல் உள்ளுக்குள்ளயே புழுங்கி செத்துட்டு இருக்கேன்மா… உண்மையை சொல்ல போனால் நான் தான்மா சுயநலவாதி என்னை ஏன்மா இப்படி வளர விட்ட… என்னை அப்போவே திட்டியாவது, அடிச்சாவது மாமாக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தால்… இந்த படிப்பு பிரச்சனை… எதுவும் இருந்திருக்காது, நானும் ஏதோ ஒரு கட்டத்தில் அவரை ஏத்துகிட்டு நிம்மதியா வாழ்ந்திருப்பேன்… இப்போ எல்லாமே முடிஞ்சி போச்சுமா ” என்று அவள் ஊமையாக கதற…
” என்னடி பேசுற… என்ன முடிஞ்சுது.. இப்போ கூட நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும் இப்போவே அவனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணிடலாம்… ” என்று அம்பிகா கூற… எழுந்து அமர்ந்த நந்தினி அவரை பார்த்து விரக்தியாக சிரித்தாள்…
” சொல்லு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோமா? .. இதை உன் மாமன் கேட்டால் எவ்ளோ சந்தோஷ படுவான் தெரியுமா? உனக்காக தானேடி முப்பத்திஆறு வயசு ஆகியும் அவன் கல்யாணம் பண்ணாமல் இருக்கான்… ” என்று அவர் கூற… நந்தினியின் இதயத்தில் சுருக்கென்று ஒரு வலி உருவானது…
” ஆனால் உன் பொண்ணு நான் அவர் அன்புக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவள்மா ”
” உனக்கு என்னடி என் புள்ளை நீ தங்கம்டி ”
” இல்லைமா… இல்லை… உன் புள்ளை தங்கம் இல்லாமல்… ஒரு தகரம்… “
” என்ன நந்தினி பேசுற ? “
“அய்யோ… அம்மா உன்கிட்ட நான் எப்படி சொல்லுவேன்… உன் புள்ளை நான்,தப்பான ஒருத்தனோட புள்ளையை வயித்துல சுமந்திட்டு நிக்குறேன்மா… உன் பொண்ணு தப்புபண்ணிட்டேன்மா, உங்க நம்பிக்கை எல்லாம் பொய் ஆக்கிட்டேன்மா… நான் ஏமாந்துட்டேன்மா ” என்றவள் தலை தலையாக அடித்து கொண்டு கதறி அழுதாள்…
இன்று இல்லையெனிலும் என்றாவது ஒருநாள் இவள் மகிழனை புரிந்து கொள்வாள் என்று நினைத்த அம்பிகாவிற்க்கு நந்தினி கர்பமாக இருக்கும் விஷயம் பெரும் இடியாக இருந்தது…
அவள் கூறியதை அறிந்தவர் அப்படியே நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்துவிட… அதை பார்த்த நந்தினி ” அம்மா ” என்று அலறியபடி அவர் அருகில் வர…
” என்னை தொடாத… என் பொண்ணாடி நீ… நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்ன்னு சொல்லி தன்னை தானே அழிச்சிக்கிட்டு உங்களை சந்தோஷமா பார்த்துக்கிட்டவனுக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படிடி மனசு வந்தது… அவன் உன் மேல எவ்ளோ பாசம் வச்சி இருக்கான்னு உனக்கு தெரியுமாடி” என்று கேட்டவர் அப்படியே மயக்கமடைந்தார்…
” அம்மா, அம்மா ” என்று அவரை எழுப்ப முயன்ற நந்தினி… அடுத்து மகிழனுக்கு அழைக்க…
அவனோ அழைப்பை ஏற்றவன் அமைதியாக இருந்தான்… ” மாமா.. மாமா… அம்மாக்கு… ” என்று நந்தினியின் அழுகுரல் கேட்டு பதட்டமடைந்தவன்…
” அத்தைக்கு என்ன ஆச்சு ” என்று கேட்க…
” நீ உடனே வா மாமா ” என்று அவள் கூற…அடுத்த பத்து நிமிடத்தில் மகிழன், வீட்டை அடைந்திருந்தான்…
ஆனால் அதற்குள் நந்தினி, அம்பிகாவிற்கு வைத்தியம் பார்த்து அவரை சரி செய்திருந்தவள்… அவர் அருகில் அமர்ந்திருந்தாள்…
அம்பிகாவின் அறைக்குள் நுழைந்த மகிழன், அவர் அருகில் சென்று பார்த்தபடி ” என்ன ஆச்சு ” என்று பதட்டம் குறையாமல் கேட்க…
” ஒன்னும் இல்லை பிரஷர்ல மயங்கிட்டாங்க ” என்று நந்தினி தயங்கியபடி கூற…
” நீ எதுவும் சொல்லல தானே ” என்று அவன் வேகமாக கேட்க… அப்போது மெல்ல கண்விழித்த அம்பிகா எதிரில் மகிழனை கண்டு “மகி… ” என்றவர் அவனை அணைத்து கொண்டபடி ” அத்தை உன் வாழ்க்கையை வீணாக்கிட்டேன்டா… அவள் உனக்கு வேணாம்டா… நீ வேற கல்யாணம் பண்ணிக்கோடா ” என்று அவர் சொல்ல…
” அத்தை தயவுசெய்து என் கல்யாணத்தை பத்தி இனிமேல் பேசாதீங்க.. நான் கடைசிவரை இப்படியே இருந்துக்கிறேன் … ” என்றவனின் பார்வை நந்தினியின் மீது அழுத்தமாக விழுந்தது…
அவன் பார்வையில் மறைந்திருந்த அவனது வலியை முதல்முதலாக உணர்ந்த நந்தினி, அவ்விடம் நிற்க முடியாமல் அங்கிருந்து சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்…
*******
இங்கு கல்லூரியில் ….
” என்னடி ரொம்ப அமைதியா இருக்க ? ” என்று கேட்டபடி கீர்த்தியின் அருகில் வந்து அமர்ந்தாள் அவள் தோழி வினோதினி… இவளும் மும்பை வாழ் தமிழ் பெண்மணி தான்….
” ஒன்னும் இல்லடி அக்காக்கு இன்னிக்கு பர்த் டே ஆனால் நான் விஷ் பண்ணவே இல்லை காலையில் எழுந்து அவளுக்கு விஷ் பண்ணலாம்னு அவள் ரூம்க்கு போனேன். ஆனால் அவள் அதுக்குள்ள எங்கேயோ கிளம்பி போயிட்டாள்… மாமாவும் என்னை காலேஜில் கொண்டு வந்து விட்டுட்டு கிளம்பிட்டாரு… இங்க வந்தால் இன்னிக்கு நம்ம கேம்பஸ்ல ஷூட்டிங் நடக்குது கிளாஸ் வேற இல்லை… ஒரே கடுப்பா இருக்கு… அக்காக்கு விஷ் பண்ணலான்னு வேற ரொம்ப வருத்தமா இருக்குடி ”
” சரி விடுடி வீட்டுக்கு போய் வாழ்த்து சொல்லிக்கோ… அதுக்கு எதுக்கு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சி இருக்க… வா எல்லாரும் மாதிரியும் நம்மலும் போய் ஷூட்டிங்கை வேடிக்கை பார்ப்போம், ”
” … ஆமா யாரோட படம், யாரு ஹீரோ ஹீரோயின் ” என்று கீர்த்தி ஆர்வமாக கேட்க…
” அது யாரோ தமிழ் நடிகர் போலடி அபிமன்யூ, செம்ம ஸ்மார்டா இருக்காரு… ஹீரோயின் நம்ம மும்பை பொண்ணு சனாயா ” என்று கூற… அடுத்த நொடி பாய்ந்து எழுந்த கீர்த்தி…
” சனாயாவா? சரி அப்போ வா போகலாம் ” என்ற இருவரும் அவர்களது கேம்பசினுள் நடக்கும் திரைப்பட ஷூட்டிங்கை காண சென்றார்கள்…
அங்கு அபிமன்யூவிற்கும், சனாயாவிற்கும் ஆன காட்ச, படமாக எடுக்கப்பட்டு கொண்டிருந்தது…
பின்னால் நின்ற கீர்த்தியும், வினோதினியும் அனைவரையும் தள்ளி விட்டு முன்னே செல்ல… அபிமன்யுவின் முதுகு பக்கம் மட்டுமே அவளுக்கு தெரிந்தது…
” என்னடி இந்த ஆளுக்கு மூஞ்சி இல்லையா ? ” என்று ஒரு ஆர்வத்தில் சத்தமாக கீர்த்தி கேட்டு விட… அவள் பேசிய இனிய தமிழ் அபிமன்யுவின் செவியை அடைய… அவனோ சற்றென்று குரல் வந்த திசையை திரும்பி பார்த்தான்… அவளோ நாக்கை கடித்த படி ஒற்றை கண் மூடி அபிமன்யுவை பார்த்தாள்..
” கட் .. கட் ” என்று இயக்குநர் கூற… அபிமன்யுவின் கண்கள் அங்கு நின்றிருந்த கீர்த்தியின் மீது அழுத்தமாக படிந்து மீண்டது…
கீர்த்தியோ பயத்துடன் வினோதினியின் கரம் பற்றியவள் ” போலம் வினோ ” என்று கூற…
அவள் செயலை புன்னகையுடன் பார்த்த அபி… அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துபடி தன் அலைபேசியை பார்க்க தொடங்கியிருந்தான் …
அப்போது அவன் அருகில் வந்து அமர்ந்த படத்தின் நாயகி சனாயா ” ஏஹ் அபி… கொஞ்சம் பெர்சனலா பேசணும் ” என்று ஹிந்தியில் கேட்க…
அவனோ ” ம்ம்ம் ” என்றவன் தோள்களை உலுக்கியபடி அவளை அழைத்து கொண்டு தன் கேரவனுக்குள் சென்றான்…
கேரவனுக்குள் வந்தவன் அங்கே அமர்ந்தபடி… அவளையும் கண்களால் எதிர் இருக்கையில் அமர சொன்னவன்…
” ம்ம்ம் என்ன பேசணும் ” என்று அவளை அழுத்தமாக பார்த்தபடி கேட்டான்..
அவ்ளோ அவனை நெருங்கி ஒட்டி அமர்ந்தவள், தன் மென்மையான விரல் கொண்டு அவன் நெற்றி முதல் கன்னம் வரை வருட . அவனோ அவளை உணர்வின்றி பார்த்தவன் ” வாட் ” என்று உரக்க கேட்டான்…
” பேபி ” என்று அவள் அவனது கன்னம் பற்றி தன் இதழ் கொண்டு அவன் இதழை நெருங்க… அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்… இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்…
” வை பேபி ” என்று அவள் ஏக்கமாக கேட்க…
” வாட் டூ யூ வான்ட் ” என்றவன் உதடுகள் அழுத்தம் பெற்றது…
சலித்து கொண்டவள் ” ஐ நீட் யூ ” என்று சொல்ல… சத்தமாக சிரித்தவன்…
” அது உங்க செயலில் இருந்தே தெரியுது தென் ” என்று அவன் அவளை புருவம் உயர்த்தி பார்க்க… அவனை நெருங்கியவள் அப்படியே அவனை அங்கிருந்த இருக்கையில் சரித்து அவன் மீது தானும் சரிந்தாள்…
மெல்ல அவள் காது பக்கம் போனவன் ” தாம்பத்தியம் ரொம்ப புனிதமானது… அதை ஆண்கள் ஆரம்பிச்சால் தான் அழகு… ” என்றவன். அவளை தன்னில் இருந்து எழுப்பி நிற்க வைத்த படி… அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தவன்… ” இன்னொரு முறை என்னை நெருங்க முயற்சிக்காத, நடிக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாரு புரியுதா? உன் ஏக்கத்தை தீர்க்க நான் ஆளு இல்லை… ” என்றபடி வெளியே வந்தவன் கலைந்த தன் தலை முடியை கோதிக்கொள்ள. அவனுக்கு பின்னாலே தன் ஆடையை சரி செய்தபடி சனாயா வெளியே வந்தாள்… தலைகுனிந்தபடி…
சனாயாவிற்கு அவன் மீது கோவம் இருந்தாலும் அதை வெளிகாட்டாமல் அங்கிருந்து சென்றாள்… காரணம் ஏதாவது பேசி மீண்டும் அவனிடமிருந்து அடி வாங்க அவளுக்கு தெம்பில்லை என்பதால்… தான்.
அவர்கள் ஜோடியாக உள்ளே சென்றதையும், வெளியே வந்ததையும் வாயை பிளந்து பார்த்தபடி நின்றிருந்த கீர்த்தி அருகில் இருந்த வினோதினியிடம் ” அப்படி உள்ள என்னடி நடந்து இருக்கும் ” என்று கேட்க…
” எனக்கு என்னடி தெரியும் ” என்று அவள் கூற…
” என்ன நடந்து இருக்கும் கசமுசா தான் நடந்திருக்கும், ரெண்டு பேறு மூஞ்சியை பார்த்த தெரியல ” என்று கூறி கீர்த்தி சிரிக்க… இது தெளிவாக அபிமன்யுவின் காதில் விழுந்தது… அதை கேட்டு அங்கு நின்றவளை அனல் தெறிக்க பார்த்தவன், அங்கிருந்து சென்றான்…
பின்னர் சனாயாவிற்கான பாடல் காட்சி படமாக்க பட… அங்கிருந்த அனைவரும் சனாயாவை பார்த்துகொண்டிருந்தனர்…
” வினோ நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் ” என்று அவளிடம் கூறி விட்டு வெளியே வந்த கீர்த்தி ரெஸ்ட் ரூம் சென்று விட்டு திரும்பி வரவும்… அங்கே ஆள் அரவமில்லால் இருந்தது…
அப்போது அவளுக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்க… பயத்துடன் கீர்த்தி திரும்பி பார்க்கவும்… அவள் வாயை தன் கைகொண்டு மூடிய ஒருவன், அவளை அருகில் இருந்த ஒரு அறைக்குள் தள்ளி, தானும் அவளுடன் அந்த அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டு கொண்டான்…

