Loading

“ஆமாம் ஆரா! அவ இனிமேல் உனக்கு உதவிப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாள்! அவ உன்னைத் தொந்தரவு செய்யாமல் இதிலிருந்து ஒதுங்கிக்கிறாளாம்!”என்று வேதனை பொங்க தோழியிடம் தெரிவித்தாள் கனிஷ்கா. 

 

அதைக் கேட்டதுமே தனது நெஞ்சில் கையை வைத்து அதிர்ச்சி அடைந்தாள் ஆராத்ரிகா. 

 

அவளது நிலையைப் புரிந்து கொண்டு,”இங்கே பாரு! அவ போனால் என்ன? நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்! எப்பவும் உன் கூடவே இருப்பேன்! நீ அமைதியாகு! இந்த மாதிரி அடிக்கடி அதிர்ச்சி ஆகுறது உனக்கு நல்லது இல்லை!”என்று அவளது தோளை ஆதரவாகத் தடவிக் கொடுத்துக் கூறியவளிடம், 

 

“அவ இப்படி பண்ணுவாள்ன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை கனி! ஏன் இந்த முடிவுக்கு வந்தாள்? எல்லாம் சரியாகத் தானே போயிட்டு இருக்கு! இப்போ போய் ஏன் இப்படி பண்ணினாள்?”என்று ஆதங்கத்துடனும், கலக்கத்துடனும் வினவ, 

 

“அவ திடீர்னு இங்கே வந்ததுக்கு நாம அவளைத் திட்டினோம்ல? அது அவளுக்கு ரொம்பக் கஷ்டமாகப் போச்சு. அதனால் தான், நான் உங்களுக்கு நல்லது தானே செய்றேன்! ஏதோ ஆராவைப் பார்க்க ஆசையாக இருந்துச்சுன்னுத் தான் அவளைப் பார்க்கப் போனேன். அதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு என்னை எப்போ பார்த்தாலும் இப்படி திட்டுறது எனக்குப் பிடிக்கலை! அதே மாதிரி இந்த விஷயத்தால் அவளுக்கும் மன அழுத்தம் வந்துடுச்சும். அதனால் இதிலிருந்து விலகிக்கிறேன், இனிமேல் உங்க ரெண்டு பேரையும் காண்டாக்ட் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாள்!”என அவளுக்கு விளக்கம் அளித்தாள் கனிஷ்கா. 

 

அதைக் கேட்டவளது முகம் மிகவும் கசங்கி, வெளுத்துப் போய் விட்டிருந்தது. 

 

“எல்லாம் கை கூடி வர்ற நேரத்தில் இவ இப்படி பண்ணிட்டாளேடி!”என்றவளோ, 

 

தனது தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டு இந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முயற்சித்தாள் ஆராத்ரிகா. 

 

“ப்ச்! இதுக்குத் தான் நான் உங்கிட்ட எதுவுமே சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனால் இதைச் சொல்லாமல் இருக்க முடியாதே? அதான் சொன்னேன்”என்று கூறி, 

 

அங்கேயிருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் குடிக்கக் கொடுத்து அவளை அமைதிப்படுத்தும் வேலையில் இறங்கி விட்டாள் கனிஷ்கா. 

 

அதைப் பருகித் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு,”எங்க அத்தை எப்போ வேணும்னாலும் இங்கே வரலாம் கனி. அதனால் நாம வேற விஷயத்தைப் பத்திப் பேசலாம்”எனத் தோழிக்கு அறிவுறுத்தினாள் ஆராத்ரிகா. 

 

“சரி”என்றதுமே, 

 

தங்களது கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பேச ஆரம்பித்து விட்டார்கள் தோழிகள் இருவரும். 

 

இதே சமயம் சமையலறையில் தனது கணவர் மற்றும் மகனுடன் பேசிச் சிரித்தபடியே சிற்றுண்டியைச் செய்து முடித்திருந்தார் நீலவேணி. 

 

“ம்மா! பருப்புப் பாயாசம் செம்மயா வந்திருக்கு”என்று தாயைப் பாராட்டினான் அபூர்வன். 

 

“ம்ஹ்ம்! பஜ்ஜி, போண்டான்னு ஏதாவது தான் செய்யலாம்னு தான் நினைச்சேன். ஆனால் அந்தப் பொண்ணு முதல் முறையாக நம்ம வீட்டுக்கு வந்திருக்கு! அதனால் இனிப்புச் செஞ்சிக் கொடுக்கலாம்னுப் பாயாசம் செஞ்சிட்டேன்”என்றிருந்தார்.

 

“நம்ம மூனு பேருக்கும் சேர்த்து நாங்க கப்பில் ஊத்தி டைனிங் டேபிளில் வைக்கிறோம்! நீ அவங்க ரெண்டு பேருக்கும் கொண்டுப் போய்க் கொடுத்துட்டு வா”எனக் கூறி மனைவியை அனுப்பி வைத்தார் நாச்சிமுத்து. 

 

உடனே தனது கைகளில் பாயாசம் நிறைந்த கிண்ணங்கள் இரண்டை ஏந்திக் கொண்டு ஆராத்ரிகாவின் அறைக்குச் சென்று அவளை அழைத்தார் நீலவேணி. 

 

“இதோ வர்றேன்த்தை”என்றவளோ வெளியே வரவும், 

 

அவரது கைகளில் இருந்ததை வாங்கிக் கொண்டு, 

 

“நீங்க ஏன் அத்தை இவ்வளவு படியேறி வந்து இதைக் கொடுக்கிறீங்க? என்னைக் கூப்பிட்டு இருக்கலாம்ல?”என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டாள் ஆராத்ரிகா. 

 

“அதனால் என்னம்மா?”என்றவரோ அவர்களுக்குத் தனிமைக் கொடுத்து விட்டுக் கீழே வரவும், 

 

அவருக்காகத் தாங்களும் பாயாசத்தைப் பருகாமல் காத்திருந்தார்கள் நாச்சிமுத்து மற்றும் அபூர்வன். 

 

“உனக்கும், ஆராவுக்கும் இடையில் இருந்த மனக் கசப்புகள் எல்லாம் சரி ஆகிடுச்சா?”எனத் தன் மகனிடம் வினவினார் நீலவேணி. 

 

அதில் அவரைப் புன்னகையுடன் பார்த்து,”ஆமாம்மா. சரி ஆகிடுச்சு. இன்னும் கொஞ்ச நாளில் எல்லாமே சரி ஆகிடும்!”என்று அவரிடம் மறைமுகமாகப் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கூறியிருந்தான். 

 

“நீ ஏதோ மறைமுகமாகப் பொருள் வச்சுப் பேசுற மாதிரி இருக்கே?”என்று அவனிடம் விசாரித்தார் நாச்சிமுத்து. 

 

“நீங்க சரியாக கண்டுபிடிச்சிட்டீங்கப்பா! கூடிய சீக்கிரத்திலேயே உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றேன்!”என்றவனை மற்ற இருவரும் கலக்கத்துடன் பார்க்கவும், 

 

“நீங்க ரெண்டு பேரும் பயப்பட்ற அளவுக்கு ஒன்னுமில்லை. அதனால் இப்படி ஃபீல் பண்ணாமல் பாயாசத்தைக் குடிங்க”என்று அவர்களை அமைதிப்படுத்தி விட்டுப் பாயாசத்தை ருசித்துப் பருகிறான் அபூர்வன். 

 

இதே சமயத்தில், தாங்கள் இருவரும் பாயாசத்தைக் குடித்து முடித்ததும், 

 

“இப்போ மொபைலுக்கு என்னப் பண்ணப் போற ஆரா? புதுசு எப்போ வாங்கப் போற?”என்றவளோ, 

 

செல்பேசியில் தானே தாங்கள் இருவரும் அதிகம் உரையாடுவோம்?

 

அப்படியிருக்க, அதுவே இல்லையென்றால் தங்களுக்கு இடையிலான உரையாடல்கள் எப்படி அரங்கேறும் என்ற ஐயத்துடன் தோழியிடம் கேட்டாள் கனிஷ்கா. 

 

“இப்போதைக்குப் புதுசு வாங்குற மாதிரி ஐடியா இல்லை கனி. பழசு உடைஞ்சதே எனக்குக் கஷ்டமாக இருக்கு. அதை ரிப்பேருக்குக் கொடுக்கவும் மனசு வரல. அதனால் உடைஞ்சது அப்படியே இருக்கட்டும். புது மொபைல் வாங்கினால் நான் உங்கிட்ட கண்டிப்பாகச் சொல்றேன். இப்போதைக்கு உனக்கு என்னைக் காண்டாக்ட் பண்ணனும்னுத் தோனுனா இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோ. இது என்னோட அத்தை நம்பர் தான். ஆனால் நான் அதை முன்னாடி எல்லாம் அவ்வளவாக யூஸ் பண்ணது இல்லை. உனக்கு ஏதாவது எமர்ஜென்சின்னா எனக்கு இந்த நம்பரில் கூப்பிடு”என்று தனது மாமியார் நீலவேணியின் செல்பேசி எண்ணை அவளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, 

 

“ஆனால் நிஹாரிகாவுக்கு இதைக் கொடுக்காதே!”என்று அவளிடம் தீர்க்கமாக உரைத்து இருந்தாள் ஆராத்ரிகா. 

 

ஒரு காலத்தில் காரிகாவின் மேல் அவ்வளவு பாசம் வைத்து, அவளுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தவளே இன்று இப்படி மனம் விட்டுப் போனதைப் போல் பேசுவதைக் கண்டுக் கனிஷ்காவிற்குமே கஷ்டமாகத் தான் இருந்தது! 

 

ஆனாலும்,”நீ நிஜமாகத் தான் சொல்றியா ஆரா? நீயும் அவளை இன்னையோட விட்டுடப் போறியா?”என நம்ப இயலாமல் அவளிடம் கேட்டாள்.

 

ஏனெனில் ஆராவின் குணம் அப்படி இல்லை அல்லவா?

 

தனது உற்றத் தோழிகளை அவள் அவ்வளவு எளிதாக கை விட்டு விட மாட்டாளே? 

 

“எஸ் கனி. அவ எப்படி நம்ம விஷயத்தில் அதாவது என் விஷயத்தில் தலையிட மாட்டாளோ, அதே மாதிரி நானும் அவ விஷயத்திலும், அவ வாழ்க்கையிலும் தலலயிடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்! இனிமேல் அவ கிட்ட ஹெல்ப் கேட்கக் கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன். அவளோட உதவி இல்லாமலேயே நான் என்னோட கல்யாண வாழ்க்கையைச் சரி செய்துக்குவேன்! அதனால் அந்த நிஹாரிகாவை என் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன்! உனக்கும் எனக்கு உதவி செய்ய விருப்பமில்லைன்னா நீயும் இதிலிருந்து விலகிக்கலாம்!”என்று அவளைப் பார்த்து அழுத்தமாக கூறியிருந்தாள் ஆராத்ரிகா. 

 

அவள் பேசுவதைக் கேட்டதும் கோபம் மோலோங்க, 

 

“ஹேய்! நீ இப்படியெல்லாம் பேசாதேடி! நான் எப்பவும் உன் கூட, உனக்குத் துணையாக இருப்பேன்! உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்!”என்று அவளுக்கு வாக்குறுதி அளித்த நேரத்தில் அவளது மாமியாரிடம் இருந்து அழைப்பு வரவும், அதை ஏற்றுக் காதில் வைத்து அவரிடம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தவளோ, 

 

“எங்கத்தை தான் கால் பண்ணாங்க ஆரா. நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு”என அவளிடம் கூறவும், 

 

“சரி வா. கீழே போகலாம்” என்றவளோ, தாங்கள் குடித்து முடித்த பாயாசக் கிண்ணங்களை எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தார்கள் இருவரும். 

 

அப்போது தன்னுடைய தோழியிடமும், அவளது குடும்பத்தாரிடமும் சொல்லிக் கொண்டு விடைபெற்றுச் சென்று விட்டாள் கனிஷ்கா. 

 

அன்றைய இரவு நேரத்தில் கட்டிவில் அமர்ந்து கொண்டிருந்தவனது செல்பேசியை வருடிக் கொண்டிருந்தது அபூர்வனின் கைகள்.

 

 தன் மனைவியின் வருகையை அறிந்ததும் அவளைப் பார்த்து, 

 

“என்னம்மா டயர்டா இருக்கா? தூங்கு”என்றவனோ, கனிஷ்காவின் வருகையைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல் இருந்தக் கணவனை விழி விரித்துப் பார்த்தாள் ஆராத்ரிகா.

 

“என்னம்மா பார்க்கிற?”

 

“நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கலாமா அபூ?” 

 

“கேளும்மா. உனக்கு இதுக்குப் பர்மிஷன் தேவைப்படுதா?”

 

“இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தது என்னோட இன்னொரு ஃப்ரண்ட் கனிஷ்கா! அவளைப் பத்தி எதுவும் எங்கிட்ட கேட்கலையே நீங்க?”என்று அவனிடம் தனது சந்தேகத்தைக் கேட்டிருந்தாள் ஆராத்ரிகா. 

 

“ம்ஹூம்! நான் உங்கிட்ட எதைப் பத்தியும் கேட்க மாட்டேன். உன்னைப் பத்தி துப்பறிவு செஞ்சி உனக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கறதுக்குப் பதிலாக உன்னை நல்லபடியாகப் பார்த்துக்கிட்டால் நம்மக் குழந்தையாவது நல்லா, ஆரோக்கியமாக பிறக்குமே? அதான்”எனச் சாதாரணமாகப் பேச முயற்சித்தான் போலும்! 

 

ஆனால் அவனது மனதிலிருந்த வலியின் வீரியம் வார்த்தையில் வெளிப்பட்டது.

 

“ஆனால் ஒரு விஷயம்! நான் இனிமேல் உன் ஃப்ரண்ட்ஸ் யாரையும் நம்ம வீட்டுக்கு வர அனுமதிக்க மாட்டேன். அதனால் அவங்ககிட்ட இனிமேல் இங்கே வரக் கூடாதுன்னுச் சொல்லிடு. அவங்களால் நம்ம வீட்டோட நிம்மதியே போயிடுறது போல் ஃபீல் ஆகுது”என்று அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டான் அபூர்வன். 

 

அவனுடைய மற்றும் அவனது மனைவி, அவர்களது குழந்தையின் நிம்மதியைக் குறிப்பிடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டவளோ, 

 

“காரிகா இனிமேல் என்னைப் பார்க்க வர மாட்டா அபூ. ஆனால் கனியையும் ஏன் வரக் கூடாதுன்னுச் சொல்றீங்க?”என்று கனிஷ்காவிற்காகப் பரிந்து பேசினாள் ஆராத்ரிகா. 

 

அவள் தான் தனக்கு இப்பொழுதும் உற்றத் தோழியாக இருக்கிறாள்.

 

கனியுடைய நட்பு எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் இப்படி கேட்டிருந்தாள்.

 

“யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. உனக்கு நான் இதை விடத் தெளிவாகச் சொல்லத் தேவை இல்லைன்னு நினைக்கிறேன். இப்போ கூட நான் உன்னைக் கட்டுப்படுத்தலை. நான் உன்னோட தன்னம்பிக்கைக் கொஞ்சம், கொஞ்சமாக குறையுறதை உணர்றேன். அதனால் தான் சொல்றேன்! புரிஞ்சுக்கோ! ப்ளீஸ்!”என அவளுக்குப் பொறுமையாக விளக்கிக் கூறினான் அபூர்வன். 

 

“எனக்கு நீங்க சொல்றதுப் புரியுது அபூ. ஆனால் என்னால் கனிகிட்டே உடனே இதைச் சொல்ல முடியாதே!”என்று அவளிடம் உடனே முகத்தில் அடித்தாற் போல் பேச முடியாதே எனக் கவலையுடன் கூறினாள் ஆராத்ரிகா. 

 

“உன்னால் சொல்ல முடியலைன்னா அவங்க கிட்ட நான் இதைச் சொல்றேன். உன்னோட ஃப்ரண்ட்ஸ் ஆக இருந்தால் கூட, உன்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்குறவங்க சம்பந்தப்பட்ட விஷயங்களை என்னால் அனுமதிக்க முடியாது”என்று அவளுக்கு உத்தரவிட்டவனோ, 

 

ஆராத்ரிகா என்பவள் தனி மனுஷி அல்லவே!

 

அவளுக்கென்று கணவன் மற்றும் குடும்பம் இருக்கும் பொழுது, தன்னுடைய வாழ்க்கையைச் சரி செய்யத் தனது தோழிகளைப் பகடைக் காயாக வைத்துக் கொண்டு இருப்பதை அபூர்வனால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாதே? 

 

அதனால் தான், மனைவிக்கு இப்படியானதொரு கட்டளையை விதித்து விட்டிருந்தான். 

 

“ஓகே அபூ. நான் கனிகிட்ட சொல்லிட்றேன். அதே மாதிரி என் மொபைல் உடைஞ்சதும் நல்லதுக்குத் தான். எமர்ஜென்சிக்குப் பேச அத்தையோட மொபைல் யூஸ் பண்ணிக்கிறேன். இப்போ தூங்கலாம்”என்ற மனைவியின் மாறிய மனதை மேலும் தனது வார்த்தைகளைக் கொண்டுக் கலைக்க விரும்பாமல் அதற்கு மாறாகச் சந்தோஷம் அடைந்தவனோ, 

 

அவளது கடந்த கால வாழ்வில் நடந்த கருப்புப் பக்கங்களை அவளது தோழியிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள முடிவெடுத்து விட்டு அடுத்த நாள் தனது அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஆராத்ரிகா படித்தக் கல்லூரிக்குச் சென்று அவள் படித்த துறையின் தலைவரைச் சந்தித்தான் அபூர்வன். 

 

– தொடரும் 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்