Loading

தீராத மனநோவும்,

தீயில்லாமல் எரியும் இதயமும்,

தீனமாய் ஒலிக்கிறதே என்னுள்!

 

தீர்க்கமாக ஒரு தேடல் வேண்டி…

 

நற்பவியின் கையில் மொழியின் உடற்கூராய்வு அறிக்கை இருந்தது. அதில் இருந்தத் தகவல்களுக்கும் நிஜத்தில் நிகழ்ந்தவைகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள்.

 

அறிக்கையில் மொழி ஆறாவது மாடியில் இருந்து குப்புற விழுந்ததாகவும் அதனால் முகம் முழுக்க சிதைந்து விட்டதாகவும் இருந்தது. அப்படி முகம் முழுக்க சிதைந்து இருந்தால் முகம் முழுக்க கட்டுப்போட்டு உடலை அவர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் அரசாங்கம். அப்படித்தான் நிகழ்ந்தும் இருக்கிறது. மொழியின் முகத்தை இறுதி வேளையில் யாருமே பார்க்கவில்லை. கண்கள் மட்டுமே தெரியும் படி கட்டியிருக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் கொடுக்கப்பட்ட அறிக்கையில் முகத்தில் உள்ள 70 சதவிகிதம் சிதைந்து விட்டதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை மட்டும் பார்த்தால் எந்த ஒரு ஐயமும் எழாது தான். ஆனால் மொழியின் அன்னை கூறிய ஒரு வாக்கியம் அவளை சிந்தனைக்கு உள்ளாக்கியது. 

 

மாடியில் இருந்து குதித்த மொழி ரத்த வெள்ளத்தில் மிதந்த இறக்கிறாள். இவர் மாடியிலிருந்து கீழே விரைந்து வந்திருக்கவேண்டும். பின் ஆம்புலன்ஸ் வந்து மொழியின் உடலை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படி மொழியின் உடலை கிடைமட்டமாக ஸ்ட்ரெச்சரில் கிடத்தும்போது மொழியின் முகத்தை அவர் நிச்சயம் பார்த்திருக்க வேண்டும். அவர் கூறினாரே மொழியின் உதட்டில் புன்னகை நிறைந்திருந்தது. அவள் விருப்பத்துடன் இந்த முடிவை ஏற்றால் என்று. 

 

 

அப்படியெனில் ஏன் இந்த அறிக்கை இவ்வாறு கூற வேண்டும். புன்னகை உறைந்திருப்பதை மொழியின் அன்னை கண்டிருக்கிறார் என்றால் முகத்தில் பெரும்பாலான பாகங்கள் சிதயவில்லை என்றுதானே அர்த்தம். 

இதில் ஏதோ நடந்திருக்கிறது என்று உறுதியாக நம்பினாள். அவள் மொழியின் தற்கொலை பற்றிய கோப்புகளை எடுத்து ஆராய்ந்தால் அதில் சில புகைப்படங்களும் அடக்கம். 

 

அறிக்கையில் கூறியிருந்தது போல் அவள் குப்புற தான் விழுந்திருந்தாள். ஒரு படத்தில் மட்டும் அவளின் முகம் தெரிந்தது. அதுவும் சற்று தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாக இருந்தது. மொழியின் முகத்தில் ஒரு பக்கத்தில் உதிரம் கசிந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கத்தில் ரத்தம் இருப்பது போல் அந்த புகைப்படத்தில் தெரியவில்லை. அதைவைத்து அவளால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. மொழியின் அன்னை கூறுவதும் இதைத்தான்.  பின் அறிக்கையில் ஏன் இவ்வாறு மாற்றவேண்டும். முகம் சிதைந்து இருந்தது என்று அறிக்கையில் கூற, அதன் பிண்ணனியில் மீப்பெரு காரணம் இருக்கிறதோ என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள் நற்பவி.

 

கிடைத்த பிணங்களின் உடற்கூராய்வு அறிக்கையில் இருந்த எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை அவளால். இந்த வழக்கில் ஏதோ ஒன்று கிடைத்தது என்று அதை வைத்து அடுத்து நகர முடியவில்லை. ஒவ்வொரு அடியிலும் தேக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

 

மீண்டும் நிரண்யாவின் குடியிருப்பு சிசிடிவி புடேஜ் எடுத்து ஆராய ஆரம்பித்தாள். இப்பொழுது பார்த்து பகுதியை பார்க்காமல் அதற்கு முன் சில தினங்களை ஆராய்ந்தாள். குறிப்பாக அந்த தெருவில் நடந்து சென்ற நபர்களையும் வண்டிகளையும் நோட்டமிட்டாள். உள்ளே ஒரு வண்டி வந்து இருந்தால் அது வெளியே சென்று இருக்க வேண்டும் அல்லவா. அப்படிப் பார்க்கையில் ஒரே ஒரு நபர் மட்டும் அந்த வீதியில் சம்பந்தம் இல்லாமல் நடந்து சென்றது போல் அவளுக்கு புலப்பட்டது. அதுவும் ஒரே ஒரு முறை அந்த வீதிக்கு வந்து இருக்கிறான். திரும்பவும் சற்றுநேரத்தில் அந்த வீதியில் இருந்து சென்றிருக்கிறான். ஆனால் நிரண்யாவின் குடியிருப்புக்குள் அவன் சென்ற காட்சி இல்லை. அவர்களின் குடியிருப்பை அவன் தாண்டியும் செல்லவில்லை. அந்த வீதியில் இருந்த மற்ற சிசிடிவி புடேஜ் மூலம் அனைத்தையும் அலசி ஆராய்ந்து முடிந்தாயிற்று. இதற்கு அவளுக்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்பட்டது.

 

அதிக தொலைவில் இருந்து படம்பிடிக்கப்பட்ட அவனின் முகம் தெளிவாக தெரியவில்லை. 

 

அவன் நிரண்யாவின் குடியிருப்புக்குள் தான் சென்று வந்திருக்க வேண்டும் என்ற ஒரு ஊர்ஜிதமாக நம்பினாள் நற்பவி. அதற்கு சில காரணங்களும் இருந்தது. அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கீதனிற்கு அழைத்தாள்.

 

“சொல்லுங்க மேடம்.. என்ன வேணும்? ஏதாவது கேஸ்ல ஆதாரம் கிடைச்சுதா?” என்றான் அவசரமாக.

 

இல்லை கீதன்.. பெருசா ஒன்னும் கிடைக்கல. முணு டெட்பாடி கிடைச்சது. அதுவும் நான் தேடிட்டு இருந்தவுங்களோடது. அடுத்து நாம நிச்சயமாக அந்த ஹவுஸ் ஓனர் மீட் பண்ண போகணும். அவரைப் பற்றின தகவல்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் என் கையில் இருக்கும். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில டவுட்ஸ் இருக்கு.”

 

“உங்க அபார்ட்மென்ட் கேட்டிலிருந்து உங்க பிளாக் நடந்து போக எவ்வளவு நேரம் ஆகும்?”

 

“ஒரு அஞ்சு நிமிஷம்.”

 

“லிட்டில ஆறாவது மாடி போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?”

 

“ரெண்டுல இல்ல மூணு நிமிஷம். சிலசமயம் லிப்ட் மேலே போய் இருந்துச்சுன்னா வரதுக்கு லேட்டாகும். ஆனா ரெண்டு லிப்ட் இருக்கு. இதுவரைக்கும் பெருசா ட்ராஃபிக் இருந்ததில்லை.”

 

அவன் கூறியதை ஒரு வெள்ளைத் தாளில் எழுதினால் நற்பவி.

 

“ஏன் மேடம் இதெல்லாம் கேக்கறீங்க. ஏதாவது பிரச்சனையா?”

 

“இருக்கலாம். இருக்கணும்கிறது என்னுடைய அனுமானம்.”

 

“என்னாச்சு. தெரிஞ்சுக்கலாமா?”

 

“ரூல்ஸ் படி நான் அதை யார்கிட்டயும் சொல்லக் கூடாது. ஆனா இந்த வழக்கில் நீங்க சம்பந்தப்பட்ட ஒரு காரணத்துக்காக ஒரு விஷயம் சொல்றேன். ஒருத்தரு மேல சந்தேகம் இருக்கு. அவர் ஒருமுறை உங்க எதிர் வீட்டுக்கு வந்திருக்கணும். அவர் தான் இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணம்னு எனக்கு தோணுது.”

 

“எதை வச்சு மேம் இப்படி சொல்றீங்க.”

 

“நிரண்யா எதிர் வீட்டுக்கு போனப்ப மட்டும் சிசிடிவி புடேஜ் ஹேக் பண்ண படலை. அதுக்கு முன்னாடியும் ஹேக் பண்ணி இருக்காங்க.”

 

“எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல.  இந்த கேஸ்க்கும் நிரண்யாவுக்கும் எந்த வகையில் சம்பந்தம்னுதான் தெரியல. அவ ஏன் பாதிக்கப்பட்டான்னு தெரியல. நீங்க ஏதாவது கண்டுபிடிச்சா அதுல எனக்கு ஒரு வழி கிடைக்குமான்னு தெரியல. ஏதாவது ஒரு நல்லது நடக்கும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றான் சோகமாக. 

 

“நடக்கும்னு நம்புவோம். நிரண்யா எப்படி இருக்காங்க? மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுகிறார்களா?” என்று அக்கறையுடன் வினவினாள் நற்பவி.

 

“அத்தை ஊரிலிருந்து பேய் ஓட்டுவதற்கு சாமிய வர வச்சுட்டாங்க. அவர் எதோ பூஜைனு சொல்லு தினமும் செய்யறாரு. என்னால எதையும் நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல.”

 

“ஏன் இந்த பைத்தியகாரத்தனம் செய்றீங்க கீதன். நிரண்யாவுக்கு இருப்பது நிச்சயம் ஒரு மன நோய்தான். படிச்ச நீங்க புரிஞ்சுக்காம நடந்துக்கிறது ரொம்பவே மன வலியை கொடுக்குது” என் உண்மையான வருத்தத்துடன்.

 

“மேம் இதுல படிச்சவன் படிக்காதவன் எல்லாம் எதுவுமே கிடையாது. நீங்க ஒரு சில சமயங்களில் பார்த்திருக்கீங்க. அவளோட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.  அப்படியிருக்க ஒருத்தரோட நான் நாள் முழுக்க, வாரத்தில் ஏழு நாளும் இருக்கேன். என்ன காரணம்னே தெரியாம இருக்கது எவ்வளோ பெரிய மன அழுத்தத்தை உருவாக்கும் என்று தெரியுமா உங்களுக்கு. இப்போ நிரண்யாவிற்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கோ, அதே அளவு மன அழுத்தம் எனக்கும் இருக்கு. என்னை கையாள நான் கத்து வச்சிருக்கேன். ஆனால் எவ்வளவு நாள் அது முடியும்.  மனுஷனுக்கு மேலே ஒரு சக்தி இருக்குங்கிறதை நான் நம்புறேன். ஏதோ ஒரு வகையில் அவ சரியானா போதும்னு தோணுது” என்று கூறியவன், அவள் அமைதி காக்கவே மீண்டும் தொடர்ந்தான்.

 

“நீங்க சொல்ற மாதிரி உண்மையா மனநோய் மட்டும் இருந்தா, நான் கவலைப்பட மாட்டேன். ஆனா இதுல வேற ஏதோ ஒண்ணு இருக்கு. எப்படி மொழி சொன்ன தீபன்ங்கிற பெயரை இவளும் சொல்லமுடியும். மொழியுடைய சாயல் தான் இவ கிட்ட இருக்குன்னு நினைச்சேன்.‌ யாரோ அவளுக்கு கதை சொல்லி, அந்த கதை மூலமா இப்படி நடந்துக்கிட்டான்னு நினைச்சேன். ஆனா யாரும் கதை சொன்ன மாதிரி தெரியல. அதுதான் உண்மையும் கூட. மொழி அவளுக்குள்ள இருக்க மாதிரி இருக்கு. அவ மொழியாய் இருக்க சமயத்துல அவ என்னை அந்நிய படுத்துறா. ஆனா இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க மொழியா இருக்குறப்ப என்னோட மனசு அவகிட்ட இருந்து அந்நியப்பட்டு நிக்கிது. அவதானே மனசு பாதிக்கப்பட்டிருக்கா. ஆனா எனக்கு ஏன் அப்படி தோணனும்” என்று தன் கவலைகள் அனைத்தையும் அவளிடம் கொட்டினான் கீதன். 

 

அவளால் ஒரு தோழியாக அவனின் கவலைகளை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் திடமான மனது தானே வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க உதவும். இவனே இப்படி துவண்டுபோனால் நிரண்யாவை எங்கனம் காப்பது.

 

“கவலைப்படாதீங்க கீதன். உங்களுக்கு நிச்சயம் நான் துணையிருப்பேன்” என்ற வாக்குறுதி மட்டுமே அவளால் அளிக்க முடிந்தது.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்