2022-01-08
Meenakshi Adaikkappan
நான் மீனாட்சி. மென்பொருள் துறையில் பணியாற்றுகிறேன். படித்தது உயிரித் தொழில்நுட்பம். தமிழும் கதைகளும் மிகவும் பிடிக்கும்.
கதைகள் படிக்க ஆரம்பித்த எனக்கு எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. அதனால் எழுத ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களாக கதைகள் எழுதுவது எனது தலையாய பொழுதுபோக்கு.
எனது இரண்டு நாவல்கள் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. சரித்திர நாவல்கள் எழுத மிகவும் பிடிக்கும். அதற்கு தகவல் சேகரிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்பொழுது கம்போடியா அங்கோர் வாட் கோவிலைக் கட்டிய இரண்டாம் சூர்யவர்மனைப் பற்றி எழுதுகிறேன். எனக்கு தேவையான தகவல்கள் இந்த வகுப்புகள் மூலம் பெறலாம் என்று எண்ணியே இதில் கலந்து கொள்கிறேன்.
வகுப்புகளைப் பற்றி இரு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் நனி நன்று.
உண்மையில் நான் எதிர்பார்த்ததை விட அதிகமான தகவல்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். வகுப்பின் இறுதியில் உள்ள கேள்வி பதில் நேரமும் எந்த வித குழப்பமும் இன்றி நடைபெறுகிறது. மூன்று மாதத்துடன் முடிந்துவிடாமல், வாழ்க்கை முழுக்க இந்த குழுவுடன் பிணைப்பு வேண்டும் என்று தோன்றும் அளவு வகுப்புகளும் தகவல்களும் இருக்கிறது. உண்மையில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இணைந்து விடுவேன்.
நனி நன்றி!!!