விழி வழியே சரணடைந்தேன் -7

Loading

அத்தியாயம் 7

தென்அமெரிக்கா நகரத்தில் தன் கை விரலுக்கு அசையும் அந்த மனிதர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் சித்தார்த். அவன் ஒரு இளம் விஞ்ஞானி. எப்போதும் மனிதர்கள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் பேராசை கொண்டவன். ஆனால் அது ரோபோவாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். எனவே மனிதர்களின் மூளையை செயலிழக்க வைத்து அதில் அவனது விஞ்ஞானத்தை புகுத்தி நிஜ மனிதர்களை ரோபாவாக மாற்றியிருந்தான் அவன். 

மொழி, செயல்பாடு என பலவற்றில் பிரச்சனை வந்தாலும் அனைத்தையும் அசால்ட்டாக எதிர்கொண்டு சிலரை நாட்டிற்கும் அறிமுகபடுத்தி பெருமை கொண்டவன். அதற்கான விருதுகள் பல பெற்ற போதும் பேராசை யாரை விட்டது? இன்னும் அதிக மனித ரோபோக்கள் உருவாக்கி வெளி உலகத்திற்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தான் சித்தார்த். 

“சார்.. கென்யா இஸ் ரெடி டு ஆக்டிவேட்” என்று அவனின் உதவியாளர் சொல்ல தன் விரலசைவை நிறுத்தியவன் “கடைசி வரிசையில் இரண்டாவது நிற்பவன் சரியா எதுவும் பண்ணல.. இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் தேவை” என்று கூறி விட்டு கென்யாவை பார்க்க சென்றான். 

கென்யா அவனின் படைப்புகளில் புதுமையானவள். இதுவரை அவன் எந்த ஒரு பெண்ணையும் உருவாக்கியதில்லை. ஆண்கள் மட்டுமே அவன் தேவைக்கு அதிகமாக இருக்க ஒரு பெண்ணை உருவாக்கும் எண்ணம் தோன்றியது இல்லை. ஆனால் இன்று அவனின் நினைவில் தோன்றியவள் தான் கென்யா. அவள் ஒரு தாய்லாந்து பெண். ஒரு விபத்தில் அவளுக்கு பயங்கரமான அடிபட்டு மூளைச்சாவு ஏற்பட அதை பயன்படுத்தி தன் திறமைகளை அவளுக்குள் புகுத்தி ஒரு பெண் ரோபாவாக உருவாகியிருந்தான். 

சித்தார்த் அவளின் முன் நிற்க கென்யா அவனை புரியாமல் பார்த்தாள். 

“ஹே பென்.. நீ அவளுக்கு எதுவும் சொல்லி குடுக்கலையா?” 

“நான் எல்லாமே சொல்லி கொடுத்தேன் சார்.. ஆனா அவளால் எதையும் சீக்கிரம் புரிந்து கொள்ள முடியல” பென் சித்தார்த்க்கு பயந்து சொல்ல அவனோ புருவம் சுருக்கினான். 

“இவளால் நமக்கு எந்த உபயோகமும் இல்ல அப்படி தானே?” 

“சார்.. நாம தேடுறது ஒரிஜினல் பொண்ணு.. ஆனா கென்யா ஒரு ரோபோ.. அவளுக்கு மூளையில் எதுவும் தன்னிச்சையா செயல்படாது.. உங்க வேலைக்கு இவ சரிப்பட்டு வர மாட்டா” 

அவனை பார்த்து முறைத்தவன் “ஒரிஜினல் பொண்ணுக்கு இப்போ எங்க போக? அந்த வேலைன்னு தெரிஞ்சா யாரும் வர மாட்டா.. அதை விட விவரம் தெரிஞ்ச பொண்ணுங்க நமக்கு தான் ஆபத்து.. அதனால் ஒன்னும் தெரியாத ஒருத்தியை இத்தனை படிப்பறிவு இருக்கும் நாட்டில் எங்க தேடுறது?” என்று சீற பென் யோசித்தான். 

“சார் ஒரு பெண்ணை தேட நமக்கு இன்னும் இரண்டு மாசம் இருக்கே.. நாம இந்தியால இருக்குற நம்ம ஆள் ஜார்ஜ் கிட்ட கேட்டா அவன் ரெடி பண்ணுவான்” 

அவனின் யோசனை சித்தார்த்துக்கு சரி என பட “கால் ஹிம்” என்றான். 

வடஇந்தியாவில் தன் பெரிய பங்களாவில் இரு மனைவிகளும் அவனை கவனித்து கொள்ள பக்கத்தில் இருந்த திராட்சை பழங்களை ஒன்று ஒன்றாக தூக்கி போட்டு சாப்பிட்டு கொண்டிருந்தான் ஜார்ஜ். 

“சார் உங்களுக்கு போன்..” ஒருவன் எடுத்து வர அவசரமாக தன் மனைவிமார்களை தள்ளி விட்டவன் அறைக்கு ஓடினான். 

“குட் மார்னிங் சார்..” 

அந்த பக்கம் சித்தார்த் ஜார்ஜை உற்று பார்த்தான். 

“கொஞ்சம் நல்லாவே வெயிட் போட்டுட்டியே ஜார்ஜ்.. வேலை இல்லாம சுகமா என்ஜாய் பண்றியா?” 

“நோ.. நோ சார்..” ஜார்ஜ் அவசரமாக பதில் அளிக்கவும் சித்தார்த் சிரித்தான். 

“உனக்கு வேலை நான் தரேன்.. எனக்கு அவசரமா ஒரு பெண் வேணும்.. ஒரு ஆராய்ச்சிக்காக தேடிட்டு இருக்கேன்.. உங்க நாட்டில் இருந்தா தேடி பாரு.. பணம் எவ்ளோ வேணாலும் கொடுக்கலாம்.. பட் படிப்பு இல்லாத ஒருத்தி வேணும்” 

அவனின் பேச்சில் ஜார்ஜுக்கு எதுவும் புரியவில்லை. “சார் எவ்ளோ நாளைக்குள் வேணும்?” என்று கேட்டு சமாளித்தான். 

“இன்னும் ஒரு மாசம் தான் டைம்.. அந்த பொண்ணு வேலை முடிஞ்சதும் உங்க நாட்டுக்கே திரும்பி வந்துடும்.. அதுக்கு அப்புறம் அதை ஹேண்டில் பண்ண வேண்டியது நீ தான்” என்று சித்தார்த் கூற பணம் கிடைக்க ஜார்ஜுக்கு கசக்குமா என்ன? உடனே சரி என்றான். 

சித்தார்த் அழைப்பை துண்டித்ததும் தன் ஆள் கேசவனுக்கு அழைப்பு விடுத்தான் ஜார்ஜ். 

“கேசவ்.. கன்னிபுரம் வேலு..” என்று கூறி விட்டு அழைப்பை துண்டிக்க கேசவன் கன்னிபுரம் நோக்கி படையெடுத்தான். 

கனிகீதன் சாப்பாட்டு அறையில் அமர்ந்து தன் மனைவி தோசை வார்க்கும் அழகை ரசித்து கொண்டிருந்தான். 

“உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?” 

“ஹ்ம்ம்.. மிளகாய் பொடி..” 

“நீ படுக்கும் அறையில்…” என்று தொடர 

“பாடாதீங்க.. தோசை கரண்டியாலேயே சூடு வச்சிருவேன்..” என்று கடுப்பானாள் கனிமொழி. 

“ஒரு வருங்கால சிங்கரை என்ன பேச்சு பேசுற நீ?” கீதன் குறைபட சமையலறையை விட்டு வெளியே வந்தவள் அவன் தலையில் நங்கென கொட்டினாள். 

“நீங்க சிங்கரா? உங்க பாட்டு சத்தம் கேட்டு கழுதை கூட வேற நாட்டுக்கு ஓடி போயிடும்” 

“பொறாமை..” அவன் முகம் சுழிக்க அது கூட அவளுக்கு ரசனையாக தான் இருந்தது. 

“ஆமா இவங்க பாடுற பாட்டுக்கு அது ஒன்னு தான் குறைச்சல்” என்றவள் தோசையை எடுத்து வந்து அவன் தட்டில் வைத்தாள். 

“நீ சாப்பிட்டியா?” ஒரு விள்ளல் எடுத்து வாயில் வைத்தவன் “நீங்க சாப்பிடுங்க.. நான் அப்புறம் சாப்பிடுறேன்” என்றவள் கை பிடித்து தன்னருகே அமர வைத்தான். 

“என் செல்ல கனி சாப்பிடாம எனக்கு எதுக்கு சாப்பாடு?” என்றவன் அவள் வாயில் தோசையை ஊட்டி விட அவனின் அன்பில் அவளுக்கு கண்ணீர் வந்தது. 

“சின்ன குழந்தையா நீ?” என்று அவளின் கண்ணீர் துடைத்து இருவரும் சாப்பிட்டு முடியவும் மணி ஒன்பதை தாண்டியிருந்தது. 

“டைம் ஆயிடுச்சுமா.. ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. அதிரனை பாத்துக்க சொல்லிருக்கேன்.. நானும் இருந்தா அவனுக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்.. ஆனா கண்டிப்பா நீ நாளைக்கு என் கூட ஆபீஸ் வர..” என்றவனை முறைத்தாள். 

“என்னால முடியாது.. என் ஆசை டீச்சிங் தான்னு தெரிஞ்சும் என்னை போர்ஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்” 

ஆனால் அவளின் பதிலோ கெஞ்சலோ அவனை சற்றும் இளக்கவில்லை. “யூ ஷுட் கம் டுமாரோ..” என்றவன் கிளம்பி விட அவனின் பிடிவாதத்தில் கனி தான் தோற்று கொண்டிருந்தாள். 

அவன் அவளை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு வருடம் வந்து அவனின் தொழிலை கற்று கொள்ள கேட்டிருந்தான். ஆனால் அவளோ தொழில் கற்று கொள்ள மறுப்பு தெரிவித்து அவனுடன் போராடி கொண்டிருந்தாள். அவனின் உள்ளுணர்வு ஆபத்தை முன்கூட்டியே உணர்த்தியதோ என்னவோ இப்போதே மனைவிக்கு அனைத்தையும் சரி செய்து வைக்க நினைத்தான். 

அவன் அலுவலகம் வந்து சேரும் போதே பாதி தொழில் பேச்சு முடிவடைந்திருந்தது. அவன் தன் அறைக்குள் நுழையும் போது அதிரன் ஒப்பந்த ஆவணங்களை சரி பார்த்து கொண்டிருந்தான். 

கனிகீதனை பார்த்ததும் எழுந்தவன் “வா கனி.. பேப்பர்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டேன்.. நீயும் ஒரு முறை செக் பண்ணினா சைன் பண்ணிடலாம்” என்று நீட்ட அதை வாங்கி படித்தவன் நிமிர்ந்து அதிரனை பார்த்தான். 

“அதி இதுல ரெண்டு வருஷம் கான்ட்ராக்ட் ஜெர்மன்ல போய் தங்கணும்னு போட்டிருக்கே.. நாம அது மாதிரி எதுவும் பண்றது இல்லையே” என்று கேட்டான். 

கனிகீதனின் எக்ஸ்போர்ட் கம்பெனி ஜெர்மனியில் ஒரு அலுவலகம் தொடங்குவது தொடர்பாக ஏற்கனவே அங்கிருந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருந்தனர். வெளி ஊரில் அதன் நிலமையை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாரம் போய் பார்த்து வருவது வழக்கம் தான். ஆனால் இந்த தொழிலதிபர் தனது நிறுவனத்தை மொத்தமாக விற்பதால் அங்கு எடுத்து நடத்த கனிகீதன் அல்லது அதிரன் ஒருவர் செல்ல வேண்டிய கட்டாயம். அதிரனுக்கு அனுவை திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருப்பதால் இப்போதைக்கு கனிகீதன் தான் செல்ல வேண்டும். ஆனால் இப்போது கனிமொழியை விட்டு செல்ல அவனுக்கு சுத்தமாக மனமில்லை. 

அவனின் யோசனையை கண்டவன் “இப்போ உடனே போக வேண்டாம் கனி.. ஆறு மாசம் அப்புறம் தான்” என்று கூற கீதனோ “நான் இப்போ போறதை பத்தி யோசிக்கல அதி.. கனி தனியா இருப்பான்னு தான் யோசிக்குறேன்” என்று கூறி விட்டு பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான். 

அந்த தொழிலதிபர் சென்றதும் அதிரன் “இப்போ மட்டும் ஏன் கையெழுத்து போட்ட?” என்று கேட்க கீதன் சிரித்தான். 

“ஆறுமாசம் இருக்கு அதி.. அதுக்குள்ள என்ன வேணா நடக்கலாம்” 

ஆனால் அவனின் சிரிப்புக்கு ஆயுள் குறைவு என்பது மாதிரி கன்னிபுரத்திற்குள் நுழைந்திருந்தான் கேசவன். 

********************

மிகப்பெரிய மாலிற்கு தன் தாயை அழைத்து வந்திருந்தாள் அம்ருதா. அவள் தாயுடன் வந்திருந்தாலும் கண்கள் எதையோ தேடி அலைப்பாய்ந்து கொண்டிருந்தது. அதே மாலிற்குள் தன் நண்பன் விஷ்வாவுடன் வந்தான் அருண். பெங்களூரில் ஒரு கம்பெனியில் பணி செய்து கொண்டிருந்தான். 

“மச்சி இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க?” விஷ்வா கேட்க தன் பர்ஸில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து காட்டினான். 

அதை பார்த்த விஷ்வா “மச்சி யாருடா இது? பொண்ணு தேவதை மாதிரி இருக்கா..” என்று கேட்க “இது தான்டா என் தேவதை பெண்.. என்னோட கனி” என்று கூற அவன் கண்களில் காதல் வழிந்து கொண்டிருந்தது. 

“டேய்.. என்னடா சொல்ற? இப்போ தானே உனக்கு நிச்சயம் முடிஞ்சுது.. உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருந்தா அப்பவே சொல்லலாம்ல.. இப்போ அப்பாகிட்ட இந்த விஷயத்தை சொன்னா உன்னை உயிரோட எரிச்சிடுவார்” என்று கத்தினான். 

“சொல்ற நிலமைல நான் இல்லடா.. இன்னும் என் காதலை கனிகிட்டேயே சொல்லல.. எனக்கு அவளை தான்டா பிடிச்சிருக்கு.. இப்போ நிச்சயம் பண்ணுன பொண்ணோட முகத்தை கூட நான் பாக்கல” என்று கூற விஷ்வா அதிர்ந்து நின்றான். 

“எக்ஸ்கியூஸ்மி.. நான் இவர்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று விஷ்வாவிடம் கேட்டாள் அம்ருதா. அவள் தான் அருணுக்கு நிச்சயம் செய்திருந்த பெண். 

“சுயர் சிஸ்டர்..” என்றவன் புரியாமல் பார்த்த அருணிடம் “இது தான்டா நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.. இப்போ எதுவும் உளறி வச்சிடாத.. நல்லபடியா பேசு” என்று கூறி விட்டு நகர அம்ருதா அவனின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். 

அருணுக்கு அவளின் அருகாமை அவஸ்தையாக இருந்தது. ஆனால் அம்ருதாவோ அவனை காதலுடன் பார்த்து கொண்டிருந்தாள். 

“சொல்லுங்க.. என்கிட்ட என்ன பேசணும்?” 

அவனின் கேள்வியே அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. 

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறவங்க.. பேச ஆயிரம் இருக்குமே.. உங்க வீட்ல தான் நீங்க பேச மாட்டீங்க.. அது தான் இங்கே அம்மா கூட வந்தேன்.. அவங்க காபி ஷாப்ல இருக்காங்க” என்று கூற அருணுக்கு எரிச்சல் வந்தது. 

“நீங்க சீக்கிரமா பேசி முடிச்சா நான் வேலைய பார்க்க போவேன்.. நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு” என்று கூற விஷ்வா அவசரமாக அருகில் வந்தான். 

“சாரிமா வீட்ல இருந்து போன்.. உடனே போகணுமாம்..” என்றவன் அருணை அழைக்க எழுந்து வந்தான். 

“பைத்தியமாடா உனக்கு.. அந்த பொண்ணு பாவம்” 

“பாவம்னா நீயே கல்யாணம் பண்ணிக்கோ” என்றவன் வெளியேறி விட திரும்பி பார்த்த விஷ்வாவுக்கு அம்ருதாவின் நிலையை கண்டு பாவமாக இருந்தது. 

அவளோ அவனை கண்களில் ஏக்கத்துடன் பாரத்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் தாய் வந்ததும் வீட்டிற்கு சென்றவளின் மனம் முழுவதும் அருண் அவளை அலட்சியம் செய்ததிலேயே இருந்தது. 

வீட்டிற்குள் நுழைந்த அருண் நடுஹாலில் தன்னை எதிர்பார்த்து நிற்கும் தந்தை ஈஸ்வரனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈஸ்வரன் ஒரு அரசியல்வாதி. தன் சுயலாபத்திற்காக எதுவும் செய்ய துணிபவர். அதே நேரம் தன்னை எதிர்ப்பது மகனாக இருந்தாலும் கொன்று போட தயங்காதவர். 

அருண் வரவும் சோபாவில் அமர்ந்தவர் “சாரதா அந்த காலண்டரை எடுத்துட்டு வாமா.. அடுத்த வாரமே நாள் நல்லா இருக்கான்னு பார்த்து இவன் கல்யாணத்தை முடிக்கணும்னு ஜோசியர் சொன்னார்” என்று கூற அருண் உறைந்து போய் நின்றான். 

அவரின் மனைவி காலண்டரை எடுத்து வரவும் பார்த்தவர் “அடுத்த வாரம் புதன்கிழமை நாள் நல்லா சுபமுகூர்த்தமா இருக்கு.. அன்னைக்கே கல்யாணத்தை வச்சிக்கலாம்.. எல்லாத்தையும் ரெடி பண்ணி வை” என்று கூறி விட்டு அருணிடம் திரும்பி தீப்பார்வை பார்த்தார். 

“அவ பேரு கனி தானே.. அவ உயிரோட இருக்கணும்னு நினைச்சா ஒழுங்கா நான் சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணு.. இல்லனா அவ பிணம் உன்னை தேடி வரும்”

“ப்பா.. வேணாம்பா.. அவ ரொம்ப நல்ல பொண்ணு.. நான் உங்க பேச்சையே கேக்குறேன்.. அம்ருதாவை கல்யாணம் பண்ணிக்குறேன்” என்று கலங்க அவனை முறைத்து விட்டு வெளியேறினார் ஈஸ்வரன். 

வாழ்க்கையில் ஒரே ஒருத்தியை தான் மனதில் நிறுத்த வேண்டும் என்று எண்ணியிருந்த அருண் இன்று அதே ஒருத்திக்காக பிடிக்காத பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் சொல்லியிருந்தான். 

மனதெல்லாம் பாரமாக தன் அறைக்கு சென்றவனுக்கு கதறி அழ வேண்டும் போல் தோன்றியது. என்ன தான் பெரிய வேலையில் இருந்தாலும் காதல் என்று வரும் போது அவனின் மனம் பாசத்திற்காக ஏங்கியது. அதை எல்லாம் அறியாமல் ஈஸ்வரன் தன் வாக்கே முடிவு என்றிருக்க அருண் தன் காதலை மனதிற்குள் புதைத்து சாகடித்து கொண்டான். 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்