விழி வழியே சரணடைந்தேன் -11

Loading

அத்தியாயம் 11

 

கனிஷ்காவை இன்று நேற்று அல்ல.. கடந்த ஒரு மாதமாக பார்த்து கொண்டு தான் இருக்கிறான் சித்தார்த். அவனின் வேலை பளுவுக்கு மத்தியிலும் இவளின் எளிமையான அழகு அவனின் கண்ணை கவர்ந்தது தான். ஆனாலும் சிறிது கட்டுப்பாட்டுடன் இருக்கிறான். இன்று பேபி பிங்க் கலரில் அந்த ஷார்ட் ட்ரெஸ் அவனுக்கு ஆர்வமூட்ட அவளின் அருகில் சென்றான் அவன். 

 

கதவை திறந்து உள்ளே சென்றதும் காலணிகளை அகற்றி விட்டு அவளை நெருங்கினான் சித்தார்த். இந்த ஒருமாதம் தொடர் தூக்கத்தில் இருந்து எழுந்ததாலோ என்னவோ அவன் அவளின் கால்களை தொட்டதும் பதறி அடித்து எழும்பினாள் அவள். 

 

“என்ன பண்ண போற?” அவளின் கண்களில் தெரிந்த பயம் இன்னும் அவனுக்கு நெருங்க அழைத்தது. 

 

“உன் பேர் கனி தானே..” அவன் குழைவாக கேட்க கனிஷ்காவோ அமைதியாக இருந்தாள். அதெல்லாம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. அவளை தொட போகவும் அனிச்சையாக அவனை அறைந்து விட்டாள். 

 

கண்கள் தீப்பிழம்பை கக்க அவளின் உதட்டை பிடித்தான் சித்தார்த். “எவ்ளோ தைரியம் இருந்தா என்னை அடிப்ப?” 

 

“இல்ல.. விடு.. விடு” அவனின் செயலில் தன்னை விடுவிக்க போராட சிறிதும் அசையவில்லை அவன். அவனின் கைகள் கூட இரும்புக்கு ஒத்ததாக இருக்க அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

 

“விடு.. என்னை விடுடா..” என்றவளின் பின்னந்தலையை பிடித்து முன்னால் தன் முகத்தின் அருகே கொண்டு வந்தவன் அவள் திமிற திமிற உதடுகளை சிறைபிடித்தான். அவளின் அடிகள் அனைத்தும் அவனுக்கு பஞ்சு மெத்தையாகவே இருக்க தன் கோபம் முழுவதையும் அவளிடம் காட்டியவன் அவளை தள்ளி விட்டு எழுந்து சென்றான். 

 

அந்த அறையின் நடுநாயகத்தில் ஒரு பொத்தான் இருக்க அதை அழுத்தியதும் ஒரு டேபிள் மேலே வந்தது. அதில் இருந்து ஊசி மருந்தை எடுத்தவன் அவள் அருகில் வர அவளோ அவனின் செயலில் பின் வாங்கினாள். 

 

“நோ கியூட்டி.. இது உன்னோட பாதுகாப்புக்காக தான்” என்றவன் ஊசி மருந்தை அவள் உடலில் செலுத்த அவன் மீதே மயங்கி சரிந்தாள் கனிஷ்கா. அவளை தூக்கியவன் ஓரத்தில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான். 

 

“பென்..” அவனின் அழைப்பில் பென் ஓடி வர “ஜார்ஜ்க்கு அழைத்து வேறு பெண்ணை அனுப்ப சொல்லு” என்றான். 

 

“சார்.. திஸ் கேர்ள்..” என்று பென் இழுக்க “நான் சொல்றத மட்டும் செய்..” என்று சீறினான். 

 

“எஸ் சார்..” என்றவன் ஜார்ஜுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவனும் உடனே அனுப்புவதாக சொன்னான். 

 

பென் சொன்னதும் “அந்த கேசவன் நம்பர் வாங்கி வச்சிக்கோ பென்.. தேவை படும்.. நான் லீகல் டாகுமெண்ட் கேட்டது என்னாச்சு?” என்று கேட்க தன் அறைக்கு சென்று அவன் கேட்டதை எடுத்து வந்தான். 

 

படித்து பார்த்தவன் “இது ஓகே.. அடுத்து கனிஷ்கா அமெரிக்கா சிட்டிசன்னு எல்லா டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணு.. அதாவது ஓட்டர் கார்ட்ல இருந்து பாஸ்போர்ட் வரைக்கும்” என்று சொல்ல புரியாமல் பார்த்தான். 

 

“சார் ஓகே.. பட் நீங்க தப்பா நினைக்கலைன்னா எதுக்காக இப்போ அந்த பெண்ணை இந்த சிட்டிசனா மாத்த சொல்றீங்க?” என்று கேட்க “எனக்கு அவ வேணும்” என்றவன் தன் அறைக்கு சென்றான். பென் ஒன்றும் புரியாமல் அவன் சொன்ன வேலைகளை முடிக்க சென்றான். 

 

அடுத்த நாள் காலையில் கனிஷ்கா எழுந்ததும் அவளது தேவைக்கான அனைத்து பொருட்களும் அந்த அறைக்கே வந்தது. ஆனால் என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள் அவள். 

 

தீடீரென “உனக்கு முன்னாடி இருக்குற பட்டனை அழுத்து” என்ற சத்தம் கேட்கவும் முதலில் அதிர்ந்தவள் பின் அந்த பொத்தானை அழுத்தினாள். கண்ணாடி கதவு திறக்கவும் அவசரமாக வெளியே வந்தாள் கனிஷ்கா. 

 

வெளியே வந்த பின் தான் அவளுக்கு புரிந்தது அது தப்பித்து போக முடியாத இருட்டறை என்று.. அவள் கண்களால் ஒவ்வொரு இடமாக துளாவவும் சித்தார்த்தோ அவளை ரசித்து கொண்டிருந்தான். 

 

“என்ன இருக்கிறது இந்த பெண்ணிடம்? ஏன் என் மனம் இவள் பின்னே செல்கிறது? அவளால் என்னை ஏற்று கொள்ள முடியாது.. அப்படி இருக்கும் போது எதற்காக அவளுடன் வாழ நினைக்கிறேன்?” என்று மனம் கேட்க அவனுக்கோ அவள் வேண்டும் அவ்வளவு தான் என்ற பதிலே கிடைத்தது. 

 

பதில் கிடைத்த நொடி அந்த அறைக்குள் அவள் முன்னால் நின்றிருந்தான் அவன். கைகளால் தேடியவளுக்கு அவனின் திண்ணிய மார்பில் கை பட்டு விட ஷாக் அடித்தது போல் கையை திரும்ப எடுத்தாள். 

 

“யாரது? சொல்லு யார் நீ?” என்று கேட்க அவளின் தோளை தொட்டவன் அப்படியே நகர்த்தி குளியலறைக்கு கொண்டு போய் விட்டான்.

 

“குளிச்சிட்டு வா.. மத்த எல்லாம் அப்புறம் பேசலாம்” என்றவன் பென்னிடம் “லேப்ல எல்லாம் ரெடி பண்ணிடு பென்.. சிப் வச்சிருக்க தானே” என்று கேட்க அவனோ ஆமென்று சொன்னான். 

 

கனிஷ்கா குழப்பத்துடனே குளிக்க சென்று வெளியே வரவும் அவளை அலேக்காக தூக்கி கொண்டான் சித்தார்த். அதே குட்டை பாவாடை உடையில் அவனின் கரங்கள் அவள் கால்களை தீண்டி செல்ல அருவருப்பாக இருந்தது. ஆனாலும் மீறி பேசினால் நேற்று மாதிரி பண்ணி விடுவானோ என்று அமைதியாக இருக்க அவளை ஆராய்ச்சி கூடத்திற்கு தூக்கி சென்றான். 

 

அவனின் ஆராய்ச்சி கூடம் எப்போதும் நேர்த்தியாக தான் இருக்கும். சில மருந்துகள் வரிசையாக அடுக்க பட்டிருக்க அருகில் ஒரு படுக்கை இருந்தது. அதில் அங்கும் இங்கும் வயர்கள் இணைக்க பட்டிருக்க அதை பார்த்ததும் நெஞ்சுக்குள் சில்லிட்டது. 

 

“இங்க எதுக்கு? என்ன பண்ண போற?” என்று திமிற அவளை அடக்கியவன் அந்த படுக்கையில் படுக்க வைத்து பென் உதவியோடு அவளை கை கால்களை லாக் செய்தான்.

 

“எதுவும் பெருசா செய்யல.. ஆனா நாளைக்கு உனக்கு இந்த குழப்பம் வலி எல்லாம் இருக்காது” என்றவன் அவளுக்கு மயக்க மருந்தை செலுத்தி விட்டு மருத்துவரை வர சொன்னான். 

 

“டாக்டர் இது தான் சிப்.. இதை அவளின் தலையில் பொருத்தினால் இன்னும் பெட்டர்” என்று கூறி விட்டு செல்ல மருத்துவர் தன் வேலையை தொடங்கினார். அறுவை சிகிட்சை முடிந்ததும் வெளியே வந்த மருத்துவரை கேள்வியாக நோக்கினான் சித்தார்த். 

 

“டாக்டர் ஹெர் கண்டிஷன்?” 

 

“டோன்ட் வொரி சித்தார்த்.. ஷி இஸ் ஆல்ரைட்.. சிப் மூளை பக்கத்தில் பொருத்தியிருக்கேன்.. இப்படியே இருந்தால் நல்லது.. ரிமூவ் பண்ண ட்ரை பண்ணினா ரிஸ்க்” என்று கூற சித்தார்த் “கண்டிப்பா அதை எடுக்க முயற்சி பண்ண மாட்டேன்” என்று சொல்ல தேவையான விஷயங்களை சொல்லி விட்டு மருத்துவர் சென்றார். 

 

சித்தார்த் அவளின் அருகில் செல்ல அவ்ளோ ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள். “என்ன பண்ணுன என்னை? உன்னை வச்சு ஆராய்ச்சி பண்ணவும் வில்சன் கிட்ட அனுப்பவும் தான் கூட்டிட்டு வர சொன்னேன்.. ஆனா உன் மேல எதுவோ உணர்வு வருது.. என்னை நியாபகம் இருக்கா கியூட்டி? நாம பார்த்து பல மாதங்கள் ஆகிருக்கும்ல. நான் இல்லீகலா பிசினஸ் பண்ணுவேன் தான்.. ஆனா எந்த பெண்ணையும் தொடணும்னு நினைச்சது இல்ல.. ஆனா உன்னை இப்பவே முழுசா ஆளணும்னு தோணுதே.. இதுக்கு நீ சம்மதிப்பியா?” என்றவன் அவளின் உதட்டில் ஆழ்ந்து முத்தமிட கனிஷ்காவோ அவன் மனதை அறியலாம் தூங்கி கொண்டிருந்தாள். 

 

“வி வான்ட் பார்ட்டி.. வி வான்ட் பார்ட்டி..” என்று அங்கிருந்த பெண்கள் அனைவரும் சத்தமிட அவர்களின் அருகில் ராஜ தோரணையுடன் வந்தான் வில்சன். சித்தார்த்தின் எதிரி. பெண்களின் அருகில் வந்தவனுக்கு அவர்களின் சத்தத்தை விட உதட்டசைவே பிடித்திருந்தது. 

 

“யூ நீட் பார்ட்டி? தென் ஹு வில் கம் வித் மி டுடே? (உங்களுக்கு பார்ட்டி வேணும்னா யார் இன்னைக்கு என் கூட வருவா?)” என்று கேட்க “ஐ வில் கம் டார்லிங்” என்று அவனின் அருகில் வந்தாள் சார்லி. 

 

அவளின் தாராள உடையே அவளின் நிலையை அவனுக்கு எடுத்து காட்ட தன் கார்டை எடுத்து பணியாளரிடம் கொடுத்தவன் “கிவ் வாட் எவர் தே வான்ட்.. (அவங்களுக்கு என்ன வேணும்னாலும் கொடு)” என்று கூறி விட்டு சார்லியின் இடுப்பை பிடித்து ஆட தொடங்கி விட்டான். 

 

அவளோ ஐஸ்கிரீம் போல் உருகி கொண்டிருக்க வில்சன் தன் காதில் இருக்கும் ப்ளூடூத்தில் கவனம் வைத்திருந்தான். “டெலிவரி ஆகிடுச்சா கெவின்?” 

 

“எஸ் சார்.. பட் பிளட் க்ரூப் நாம எதிர்பார்த்த மாதிரி இல்ல” 

 

“அந்த குழந்தையால் நமக்கு எந்த பயனும் இல்லன்னா தூக்கி போட்டுட்டு வேற வேலைய பாரு ” என்று வில்சன் கூற கெவின் தயங்கினான். 

 

“சார் ஆர்கன்ஸ் தேவைப்படுமே” 

 

“ஒன்னு ஒன்னா உனக்கு நான் சொல்லணும்னா எதுக்காக உன்னை என் மேனேஜரா வச்சிருக்கேன்.. இடியட்.. என்ன தேவையோ அதை எடுத்துட்டு தூக்கி போடு” என்று ஒரு உயிரை கொல்லும் வேதனை சிறிதும் இல்லாமல் கூற கெவின் அதை செய்ய சென்றான். 

 

“வாட் ஹேப்பன்ட் டார்லிங்?” சார்லி கேட்க “நத்திங்..” என்றவன் மூளையில் அடுத்து என்ன செய்வது என்றே தோன்றியது. 

 

லண்டனில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தனது நண்பனின் இரத்த வகை கோடியில் ஒருத்தருக்கு இருக்கும் பாம்பே ப்ளட் க்ரூப். இவனும் தேடி தேடி பார்த்து கடைசியில் மாட்டிய பெண் தான் யாஷிரா. நிறைமாத கர்ப்பிணி ஆன அவளுக்கு இவன் தேடி செல்லும் முன் போதை மருந்து ஏற்றி விட்டனர். எனவே அவளின் இரத்தம் எதற்கும் உபயோகப்படாமல் போனது. குழந்தை பிறந்ததும் அவள் இறந்து விட குழந்தை மூலமும் அவனுக்கு ஆதாயம் இல்லாமல் போனது. இனி அடுத்து யாரை தேடுவது என்று யோசித்து கொண்டிருக்க அவனின் தலையில் சூடு ஏறி கொண்டே போனது. 

 

கெவினுக்கு அழைத்தவன் “கெவின் இந்த தென் அமெரிக்காவில் யார்னு எல்லாம் பார்க்காத.. உடனே எனக்கு அந்த ப்ளட் க்ரூப் இருக்குறவங்க வேணும்” என்று கூற “சார் இட்ஸ் டூ ரிஸ்கி..” என்று மறுத்தான் கெவின். 

 

வில்சனின் நண்பன் உயிரோடு இருக்க போவது இன்னும் சில மணி நேரங்கள் தான். இதில் எப்படி தென் அமெரிக்காவை புரட்டி போட்டு தேடுவது? கெவின் மறுத்த பின்பே வில்சனுக்கு புரிய அழைப்பை துண்டித்தவன் தன் ஆதங்கம், வலி, கோபம் அனைத்திற்கும் சார்லியை வடிகாலாக்கினான். 

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்