
அத்தியாயம்: 6
“நீங்கள் விரும்புவது உங்களுக்கு கிடைக்காமல் போகலாம், ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களை அடைந்தே தீரும்” – கீதையிலிருந்து.
சிவப்பு நிற பெட்டியை தன் எதிரே வைத்துக்கொண்டு அதை திறக்க வழியின்றி விழித்துக்கொண்டிருந்தான் ஆதித் கிருஷ்ணா.
“ஆதித் உடைச்சிடலாமே.!” விக்கி பெட்டியை பார்த்து ஆர்வமாய் கேட்டான்
“இல்லை விக்கி.! இது நம்பர் லாக் என்னால கெஸ் பண்ணி ஓப்பன் பண்ண முடியும் உறுதியாய் சொன்னான்.
“சரி நீ ஓப்பன் பண்ணு நான் சுதாகிட்ட பேசிட்டு வந்திடுறேன்” எனக் சொன்னவன் அறை எண் முண்ணூற்று மூன்றில் இருந்து வெளியே வந்தான்.
அந்த சிவப்பு நிற பெட்டியை வருடிக்கொடுத்தான் ஆதித் கிருஷ்ணா. சிவப்பு ஆராவுக்கு மிகவும் பிடித்த நிறம் அடிக்கடி அவனிடம் சொல்லியிருக்கிறாள். அவள் உடுத்தும் உடைகளில் கூட சிவப்பு நிறம் தான் அதிகம் இருக்கும்.வெள்ளை நிற சுடிதாரில் சிவப்பு பூக்கள் சிதறிகிடக்க, அதே போல் துப்பட்டா அணிந்தது தேவதைப் போல் தன்னை எதிர்கொண்டு வந்த ஆராவின் பிம்பம் இன்றும் அவன் விழிகளில் விரிந்தது.
ஆனால் அன்று இந்த சிவப்பு நிற பெட்டி அபாயத்தை குறிப்பது போல் தோன்றியது ஆதித் கிருஷ்ணாவுக்கு. இதை திறப்பதற்கு முன் ஆராவின் செல்போன் சிக்னல் எங்கு கடைசியாக தடைபட்டிருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வதற்காக காவல் துறையே சார்ந்த தன் நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.
“ஹே ஆதித் ஸ்பீக்கீங் டா ராகவ்”
“ஆதித் எப்படி இருக்க.? இத்தனை வருசம் கழிச்சு இப்போ தான் ஃப்ரெண்ட் ஞாபகம் வந்துச்சா.?”
“இல்லைடா விசயம் கொஞ்சம் சீரியஸ்”
“சரி சரி சொல்லு விசயத்தை” என ராகவ் கேட்டபின் போலி கடிதத்திலிருந்து சிவப்பு பெட்டி வரை சொன்னவன் அவளை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என சொல்லி வருந்தினான்.
“நீ அந்த பொண்ணு நம்பர் சொல்லுடா.? நான் ட்ரேஸ் பண்ணுறேன் அஸ் எ போலீஸ் ஆஃபிசரா சொல்லுறேன் ஒரு கம்ப்ளைன்ட் கொடு” என ராகவ் அறிவுறித்தினான்.
“இல்லைடா விசயம் மீடியாக்கு போகக் கூடாது அதுக்காக தான் யோசிக்கிறேன் முடிந்த அளவு நானே கண்டுபிடிக்கிறேன்டா” என ஆதித் சொன்ன போது ராகவனுக்கு கோபம் தான் வந்தது.
“ஹே ஆதித்.! உங்க வீட்டிலேயே இவ்வளவு பிரச்சனையை வச்சிகிட்டு அந்த பொண்ணை தேடாமல் இருக்கிறது தப்பு தான்னு நினைக்கிறேன். அந்த பொண்ணோட டீடெயில்ஸ் எனக்கு அனுப்பி வை நானும் இன்வெஸ்டிகேட் பண்ணுறேன்” அவன் ஆறுதலாய் பேசியது காயப்பட்டிருந்த ஆதித் கிருஷ்ணாவின் மனதிற்கு சற்று இதமளித்தது
“தேங்க்ஸ் டா ராகவ் கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணாமல் ஹெல்ப் பண்ணதுக்கு”
“தேங்கஸ்லாம் வேண்டாம் ஆரா வந்ததும் இந்த போலீஸ்காரனுக்கு ட்ரீட் வைக்கணும்” என புன்னகைத்த ராகவ் அழைப்பை துண்டிருந்தான்.
இப்போது இந்த சிவப்பு பெட்டியை திறந்தாக வேண்டும் அதிலெதும் அவளது அலைப்பேசி இருக்குமோ என்ற சந்தேகம் ஆதித் கிருஷ்ணாவுக்கு. முதலில் ஆராவின் பிறந்த தேதியை பயன்படுத்தி திறக்க முயற்சித்தான் திறக்க முடியவில்லை, அதை உடைத்தெறிய அவனுக்கு நேரம் ஆகாது ஆனால் இது ஆராவுடையது, அவளுக்கு பிடித்த சிவப்பு நிறம் என்பதாலே அதை அவன் உடைக்கவில்லை. பிறகு அவனுடைய பிறந்த தினம் மற்றும் மாதத்தை அதில் ஸ்க்ரோல் செய்த நொடியில் சிவப்பு நிற ட்ரெவெல் பேக் பட்டென திறந்தது.
எதோ புதையலை திறந்தால் நிறம்பி வழியும் தங்கத்தை போல் மயிலிறகால் நிறைந்த வழிந்த சிவப்பு நிற பெட்டியிலிருந்து ஒவ்வொரு மயிலறகாய் எடுத்து ஓரம் வைத்தவனின் கண்களுக்கு கிடைத்தது அதை ஓப்பன் செய்யும் படி ஓப்பன் மீ என்று எழுதப்பட்டிருந்தது அந்த மீயூசிக் பாக்ஸை திறந்தவுடன் குழலேதும் இசை மென்மையாய் அவன் செவிதனை தீண்டியது, அதை விட மெலிதாய் அவனுடைய ஆராவின் குரலும் ஒலித்தது”
“க்ரிஷ்.! எனக்கு தெரியும் இது இப்போ உன் கையில் இருக்கு.! என்னை தேடி டையர்ட் ஆகியிருப்பன்னு நினைக்கிறேன். பட் எத்தனை நாள்க்கு அப்பறம் இது உன் கையில் கிடைக்கும்ன்னு எனக்கு ஐடியா இல்லை. நீ இதை கேட்டுட்டு இருக்கும் போது உன்னோட ஆரா அவளோட காதலை தேடி போயிட்டிருப்பா. என்னோட டெஸ்டினேஷன், லவ் யூ க்ரிஷ். நீ என்னை மிஸ் பண்ணுற மாதிரி நானும் உன்னை மிஸ் பண்ணிகிட்டு தான் இருக்கிறேன். உன் புகைப்படத்தை பார்த்து காதல் மொழிகள் பேசிக்கொண்டிருக்கிறாள் உன் ஆரா” என முடிந்திருந்த குரல் பதிவை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தான். வரண்டு போன பாலைவனத்தில் தண்ணீரை வார்த்தது போல் அவளின் குரலும் சொல்லபட்டிருந்த விசயமும் அவன் முகத்தில் புன்னகை அரும்ப காரணமாகி போனது.
“என்னோட ஆரா தொலைந்து போகலை அவள் காதலை தேடி போயிருக்க” எனச் சொல்லி புன்னகைத்தவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அதே நேரம் சுதாவிடம் பேசிவிட்டு விக்கி அந்த அறைக்குள் நுழைந்தான்.
“ஹே விக்கி.!” உற்சாகமாய் ஒலித்தது ஆதித் கிருஷ்ணாவின் குரல்.
“ஆதித்.! நீ தான் பேசுறியா.? குரல் என்ன இவ்வளவு சந்தோசம் தெரியுது.? ஆராவை கண்டுபிடிச்சிடியா.?” அவன் முகத்திலும் புன்னகை பூசி கேட்டான் விக்கி.
“அதெல்லாம் அப்பறம் சொல்றேன் முதலில் நான் சொல்றதை தெளிவாக கேட்டுக்கோ, இந்த விசயம் வீட்ல யாருக்கும் தெரியக் கூடாது லாவண்யா உட்பட”
“தங்கச்சிகிட்டையே மறைக்க போறீயா.?”
“ஆமாம் டா முழுசா கேளு, என்னோட மீட்டிங் கான்ஃப்ரன்ஸ் எல்லாம் ஆன்லைன்ல அரெஞ்ச் பண்ணிடு ஒரு ட்வென்ட்டி டேஸ் நான் ஆபிஸ்க்கு வரமாட்டேன் நீ தான் எல்லாத்தையும் சமாளிக்கணும், நான் பிஸ்னஸ் மீட்டிங்காக டெல்லி வரைக்கும் போயிருக்கேன்னு சொல்லு க்ளையண்ட்ஸ் கேட்டால்”
“ஓ டெல்லி வரைக்கும் போறீங்களா பாஸூ”
“இல்லை ஆராவோட காதலை தேடி நானும் போகப்போறேன்”
“வாட் ஆராவோட காதலன் நீங்க தானே” குழம்பினான் விக்கி.
“இல்லை என்னோட சக்காளத்தனை பார்க்க போறேன் பார்த்திடுவோம் நானா.? இல்லை அவனான்னு” என அவன் விழிகள் சிரிக்க,
“அப்போ ஆரா நிஜாமாவே யாரையோ தேடி போயிடுச்சா.?”
“யூ ப்ளடி.!” என்ற ஆதித் கிருஷ்ணார பளார் என கொடுத்த அறையில் விக்கி கன்னம் வீங்கி போனது.
“பேசிகிட்டு இருக்கும் போதே அடிச்சிடிங்களே பாஸ்”
“என் ஆராவை பத்தி என்ன சொன்ன.?” என பற்களை நறநறவென கடித்தான் ஆதித்.
“நான் சொல்லலை பாஸூ நீங்க தான் உங்க சக்காளத்தனை தேடி போயிட்டாதாக சொன்னீங்க”
“அதை பத்தி உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை, அது அவளோட பர்சனல் காட் இட்”
“காட் இட் பாஸூ, இனி கேட்கமாட்டேன் நான் இங்கே எல்லாத்தையும் கவனிச்சிக்கிறேன் பாஸூ நீங்க ஜாலியா உங்க சங்களத்தனை பார்த்து கொஞ்சிட்டு வாங்க” என சொன்னவனின் கை கன்னத்தை தேய்த்துக்கொண்டிருந்தது.
“தெட்ஸ் குட் விக்கி, ஆபிஸ் விசயம் பேசும் போது நான் உன் பாஸூன்னு நினைவிலே வச்சிகோ”
“ஓ.! ஓகே பாஸூ பட் ஒரு டவுட்டு பாஸூ எப்போ ஆரா விசயம் ஆபிஸ் விசயம் ஆச்சு.?”
“ரொம்ப பேசின வாயை தைச்சு விட்டுருவேன்”
“சாரி பாஸூ” என்றவன் வாயை மூடிக்கொண்டான்.
அதில் கேட்கப்பட்ட குரல் என்னவோ ஆராவுடையது தான், ஆனால் ஆரா இப்போது எந்த நிலையில் இருக்கிறாள் என்பதை ஆதித் கிருஷ்ணா அறிந்திருக்க வாய்பில்லை.
“க்ரிஷ்!!! இங்கே ரொம்ப இருட்டா இருக்கு ரொம்ப பயமா இருக்கு” என ஆராவின் முனங்கலை அந்த கொடூரமான விழிகள் ரசித்துக்கொண்டிருந்தது
**********************************************************************************************************
ஏ.கே பேலஸே ரணகளமாய் ஆகி போயிருந்தது. ஆரா அந்த கடிதத்தை அனுப்பவில்லை என்பதும் அது மஹதி மூலம் ஆதித் கிருஷ்ணா கண்டுபிடித்துவிட்டான் என்பதும், தன் மகளின் வாழ்க்கை இனி அவ்வளவு தான் அந்த ஆராவை மட்டும் ஆதித் சேர்ந்துவிட்டால் தன் மகளின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும் என்ற பயத்துடன்.
“கோதண்டம்” அலறினார் ஜெகன் நாதன்.
“ஜெகன் கொஞ்சம் புரிஞ்சுக்கோடா, இதில் என் தப்பு எதுவும் இல்லை” என கெஞ்சலாய் கோதண்டம் பேசினார்.
“என்ன சம்மந்தி கொடுத்த வாக்கை மறந்துட்டீங்கல்ல.? மஹதி உங்க வீட்டு மருமகன்னு அவ தலையில் சத்தியம் பண்ணி சொன்னீங்களே என்ன ஆச்சு” என யசோதாவிடம் கோபமாய் சாடினார் ஜெகன்.
“அப்பா.! அத்தை மேலையும் மாமா மேலையும் எந்த தப்பும் இல்லை ஆதித் தான் எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டான், அந்த ஆராவுக்கு இங்கிலீஷ் டைப் பண்ண தெரியாதாம், அந்த லெட்டர்ல உங்க கையெழுத்தோட அச்சு இருந்ததை பார்த்து கண்டுபிடிச்சிட்டான்”எனக் கதறி அழுதாள் மஹதி.
நடப்பவற்றை மாடியில் மறைந்து நின்றபடி கேட்டுக்கொண்டிருந்தாள் லாவண்யா. தன் அண்ணன் மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்தும் கொண்டாள். இவர்கள் என்ன தான் திட்டம் தீட்ட போகிறார்கள் என்பதை பொறுமையாய் கவனிக்க துவங்கினாள்.
“அந்த ஆராவை பத்தி ஆதித் வீட்டில் பேசும் போதே என்ன சொன்னேன் முளையிலையே கிள்ளி எறிஞ்சுடுங்கன்னு சொன்னேன் ரெண்டு பேரும் கேட்கலை” என ஆதங்கபட்டார் ஜெகன்.
“சம்மந்தி எப்போ இருந்தாலும் மஹதி எங்க வீட்டு மருமகள் தான். அந்த ஆராவையெல்லாம் இங்கே கூட்டிட்டு வர விடமாட்டேன்” என உறுதியாய் சொன்ன யசோதாவை பார்த்து அதிர்ந்து நின்றாள் லாவண்யா.
“இங்கே பாருங்க சம்மந்தி எனக்கு பணம் காசு முக்கியமில்லை, என் பொண்ணோட ஆசை தான் முக்கியம், ஒரு வேளை அந்த ஆரா மறுபடியும் ஆதித் கிருஷ்ணா வாழ்க்கையில் வந்தால். அவளை சாம்பல் ஆக்கிறதை தவிர வேற வழியில்லை, என் பொண்ணுக்காக எதையும் செய்ய துணிவேன்” என அவர் வீரமாய் பேசிய போது அவரின் அலைப்பேசி அலறியது. அழைப்பை ஏற்றவர்,
“ம்ம் சொல்லு என்ன விசயம்.? என்ன ரிசார்ட்க்கு வந்து அந்த பொண்ணை நினைச்சு குடிச்சிட்டு இருக்கானா.?”
“.”
“என்னது இல்லையா.? அப்போ அந்த ஆரா வந்துட்டாளா.?”
“.”
“அந்த ஆராவும் வரலையா.? அப்போ அங்க என்ன தான் நடக்குது.?” என கோபமாய் கேட்ட ஜெகனுக்கு என்ன பதில் கிடைத்ததோ
“புல் ஷிட்” என சொல்லியபடி அலைப்பேசியே தூக்கி எறிந்ததில் அது நொறுங்கி போனது.
“அப்பா என்னாச்சு அந்த ஆரா வந்துட்டாளா.? அப்போ ஆதித் எனக்கில்லையா.?” கண்ணீரில் கரைந்தாள் மஹதி.
“மஹதி நீ ரிலக்ஸா இரும்மா. அப்பா நான் இருக்கேன் எல்லாத்தையும் சரி பண்ணுறேன்” எனச் சொன்னவர்.
“அந்த ஆராவை தேடி எங்கேயோ கிளம்புறானாம் ஆதித்” என கோதண்டத்தையும் யசோதாவையும் முறைத்தார் ஜெகன். இருவரும் புரியாது விழித்து நின்றிருந்தனர்.
“என்ன பார்க்குறீங்க.? அவன் அந்த பொண்ணை தேடி போகட்டும் அவனோட கண்ணுல அந்த ஆரா மாட்டுறதுக்குள்ள அவளை பொணமாக்கிடுவேன். என்ன சரியா.?”
“ம்ம் சரி” என கோதண்டமும் யசோதாவும் தலையாட்டி இருந்தனர். இதை மறைந்து இருந்து பார்த்துக்கொண்டிருந்த லாவண்யா மேலும் அதிர்ந்து போனாள்.
ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் பண்ணாத தாயும் தந்தையும் இப்போது ஒரு உயிரை கொல்வதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்களே அதுவும் இந்த மானம் கெட்ட மஹதிக்காக, தான் கர்ப்பமாய் இருப்பதாய் நாடகமாடி தன் அண்ணனை அடைய நினைத்தவளை பார்த்து அறுவறுத்து போனாள். தான் வாழ்வதற்க்காக இன்னொரு பெண்ணின் உயிரை எடுப்பதா.? இவளையா இத்தனை நாள் நம்பியிருந்தேன் என கோபம் கிளர்தெழுந்தது. ஆனால் இப்போது அதற்கான நேரம் இல்லை.
தன் அண்ணனின் காதலை இவள் காப்பாற்றி ஆக வேண்டிய பெரும் பொறுப்பு லாவண்யாவின் தலையில் இறங்கியது. இந்த மஹதியை நம்பி ஏமாந்து போனதில் தன் புத்தியை திட்டிக்கொண்டாள் லாவண்யா. அவர்கள் பேசி நகர்ந்த பிறகு தரைத்தளம் நோக்கி விரைந்து இறங்கினாள் லாவண்யா.
நந்தி போல் எதிரில் வந்து நின்றாள் மஹதி.
“லாவா எங்கே போற.?” கொஞ்சுவதை போல் பேசினாள் மஹதி.
‘என்னையும் எங்க அண்ணனையுமா ஏமாற்ற பார்த்த இரு உன்னை சுத்தல்ல விடுறேன்’ என மனதுக்குள் நினைத்த லாவண்யா.
“மஹதி அண்ணி ஃப்ரெண்டோட பர்த் டே பார்ட்டிக்கு போறேன்”
“ஒ அப்படியா.? நம்ம சேர்ந்து பார்லர் போகலாம்ன்னு பார்த்தேன், சரி ஓகே போற வழியில் என்னையும் ட்ராப் பண்ணிடு”
“அய்யோ அண்ணி நான் ஸ்கூட்டியில் போகலை காரில் தான் போகப்போறேன்”
“நீயில்லாமல் நான் எப்படி பார்லர் போகுறது லாவா” முகத்தை சோகம் போல் வைத்துகொண்டாள்.
“அய்யோ அண்ணி இதுக்கா கவலை படுறீங்க.? என்ன சர்வீஸ் பண்ணப்போறீங்க.?”
“லாவா ஹெர் ஸ்பா பண்ணணும்”
‘எங்க அண்ணன் வாழ்க்கையை கெடுக்க திட்டம் போட்டுட்டு உனக்கு ஹெர் ஸ்பா கேட்குதா.? நீ வீட்டை விட்டு வெளிய வந்தால் என்னை ஃபலோ பண்ணி வந்திடுவ’ என சிந்தித்துக்கொண்டிருந்தவள்.
“அண்ணி பார்லரையே நம்ம பேலஸ்க்கு வர வச்சிடலாம் கூலா போய் ரெஸ்ட் எடுங்க பார்ப்போம்” என புன்னகைத்த லாவண்யாவின் கன்னம் தொட்டு முத்தம் வைத்த மஹதி.
“தேங்க் யூ லாவா” என சொல்லிவிட்டு தன் அறைக்குள் அடைந்துக்கொண்டாள். அவள் உள்ளே சென்றபின் நம்மதி பெருமூச்சு விட்டவள் போர்டிகோ வில் நின்றிருந்த காரை நோக்கி நடந்தாள். காரின் ஓட்டுநரோ காரின் கண்ணாடிகளை சுத்தம் செய்வதிலையே மும்மரமாய் இருந்தான். அவன் துடைத்துகொண்டிருப்பது தெரியாது
“டிரைவர் டிரைவர் எங்கே போன.?” லாவண்யா அழைத்தாள்.
“மேடம் இங்கே தான் இருக்கேன்” என அவன் குரல் கொடுத்தபின் காரில் விரைந்து ஏறிக்கொண்டாள்.
“சீக்கிரம் வண்டியை ஸ்டார்ட் பண்ணு” என ஹீணமான குரலில் கூறினாள் லாவண்யா.
“ஓகே மேடம் ஓகே மேடம்” என புன்னகைத்தபடி வண்டியை இயக்கினான்.
வாகனம் பேலஸை தாண்டி வெளியே சென்ற பிறகு,
“மேடம் எங்கே போகணும்.?”
“அட இரு மேன் அண்ணாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என அவள் மேன் என சொன்ன விதத்தை கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டான் அவன். அன்று மறைமுகமாய் புகைப்படம் எடுத்து ரசித்தவன் இன்று காரின் முன் கண்ணாடி வழியே அவள் விழிகளை ரசித்துக்கொண்டிருந்தான் அந்த கள்வன். அப்போது அவன் மனதில் தோன்றிய பாடலை இயக்கி விட்டான்.
என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ
குத்தாலத்து சாரல
போல் நல்லா சிரிக்க என்
தேன் மொழி கன்னங்குழி
போதாதுன்னு என்ன
மயக்கும் உன் மை விழி
கருவா பய
கனவெல்லாம் கலர் படம்
ஆனதனால முழிச்சாலும்
மெதந்தானே காதல் எனும்
பல்லாக்கு மேல
தடுமாறும் என்
மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன்
நானே
என்ற பாட்டை இசைக்கவிட்டு அவளை பார்வையால் கொள்ளையடித்துக் கொண்டிருந்தான் அஜய் அதுவே அவனின் பெயர்.
“ஏய் இடியட்.! கால் பேசப் போறேன்னு சொன்னேன் பாட்டை இவ்வளவு சத்தமா வச்சிருக்க.? வால்யூமை ரெடியூஸ் பண்ணு மேன்” அவள் திட்டியது கூட அவன் செவிகளில் தேனை வார்த்தது போல் உணர்ந்தான், தானாய் அவன் கைகள் நீண்டு பாட்டை அணைத்துவிட்டது.
“ஹாண் அண்ணா உன்கிட்ட முக்கியமான விசயம் பேசணும்”
“சொல்லு லாவ் குட்டி.?” உற்சாகமாய் ஒலித்தது அவள் அண்ணனின் குரல் இரண்டு நாட்களுக்கு பிறகு அண்ணன் தெளிவாகியிருக்கிறான் என்பதே அவளுக்குள் சந்தோசத்ததை ஏற்படுத்தியது.
“அண்ணா இது போன்ல சொல்லுற விசயம் இல்லை, நான் உன்னை நேர்ல பார்க்கணும்” என சொன்னவளின் விழிகளில் கண்ணீ்ர் வந்துவிட,
“மேடம் அழாதீங்க” என பதறிப்போய் சொன்னான் அஜய்.
“ஹே லாவ் குட்டி அழுகுறீயா.? எதுக்கு டா.? ஆமா அஜய் குரல் கேட்குது எங்கே இருக்க.?”
“உன்னை பார்க்க தான் கார்ல வந்திட்டு இருக்கேன்.அஜய் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கான்” என அழுகையுடன் சேர்ந்த விசம்பலாய் ஒலித்த தங்கையின் குரல் கேட்டு அவன் மனம் பதைபதைத்தது.
“சரி ஓகே.! பாண்டிக்கு வா பீச் வீயூ ரிசார்ட்” எனச் சொன்னான்.
“ம்ம்ம ஓகே அண்ணா நான் வந்திட்டு போன் பண்ணுறேன்” என அழைப்பை துண்டித்தாள் லாவண்யா.
“ஹே மேன் பாண்டிக்கு போ.! அண்ணா பீச் வீயூ ரிசார்ட்ல இருக்கான்”
“ஓகே மேடம்” என பதில் அளித்தான் அஜய்.
“அதான் பேசி முடிச்சிட்டேன்ல பாட்டை போட்டு விடு மேன் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்க்” என அவள் சொல்ல, பாட்டை இயக்கிவிட்டு பாடல் வரிகளை அவன் முனுமுனுக்க ஆரம்பித்தான்.
“ஆமா அன்னைக்கி மஹதி ஃப்ங்க்ஷன்ல என்னை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தியே ப்ரிண்ட் போட்டுட்டியா.?” என அவள் கோபமாய் கேட்க,
“அய்யோ மேடம் அப்படியெல்லாம் இல்லை, நான் சாப்பாடு குண்டான் குள்ளல தலை விட்டுட்டு இருந்தேன்”
“ஓஹோ.! அப்போ நீ என்னை போட்டோ எடுக்கலை.?” புருவம் உயர்த்தி கேட்டாள்.
“அய்யோ மேடம் செத்து போன ஆயா மேல சத்தியமா நான் எடுக்கலை”
“ஓகே ரைட்டு”
“என்ன மேடம் என்னை நம்பலையா நீங்க.?” சற்று பதற்றத்துடன் கேட்டான்.
“போட்டோ எடுத்தவன் உன்னை மாதிரியே இருந்தான் அதான் கேட்டேன், சரி விடு அண்ணாகிட்ட சொன்ன போதும் போட்டோ எடுத்தவனோட கை காலு எல்லாத்தையும் உடைச்சி போட்டுடும், நல்ல வேலை நான் அவசர பட்டு உன்னை சொல்லலாம்ன்னு பார்த்தேன். சிசிடிவி ஃபுட் ஏஜ் செக் பண்ணிட்டு போட்டோ எடுத்த கல்பிரிட்டை பிடிச்சு கொடுக்கணும்” என லாவண்யா விட்ட மிரட்டலில் மருண்டு விழித்துக்கொண்டிருந்தான் அஜய்.

