
அத்தியாயம் – 7
பிறந்த வீட்டில் மறுவீட்டு அழைப்பிற்காக தயாராகி கொண்டிருந்திருந்தாள் நித்யஸ்ரீ, என்ன தான் தாய் மற்றும் தமையனின் மீது கோபமிருந்தாலும் அவர்களை பார்க்க போகிறோம் என்கிற ஆவல் அவள் கோபத்தை கொஞ்சம் மறைய செய்திருக்க, பட்டுப்புடவை சரசரக்க புதுபெண்ணுக்குரிய அலங்காரத்துடன் அழகாய் தயாராகிருந்தாள்,…
“ரெடியா நித்து” பாட்டியின் கண்டிப்பில் வெள்ளைவேஷ்டி சட்டை அணிந்து, கையில் வாட்சை மாட்டிக் கொண்டபடி மனைவியிடம் வினவியபடி வந்த ரிஷி, மனைவியின் அழகை கண்டு மெய்மறந்து நின்றுவிட்டான்….
“ஹாங் ரெடி” புடவை மடிப்பை சரி செய்தபடி தன்னை ஒரு முறை நிலைகண்ணாடியில் பார்த்துவிட்டு திரும்பியவள், ரிஷியின் பார்வையில் தடுமாறி நின்றாள், அவனது பார்வை இன்றும் அவளை உள்ளுக்குள் என்னென்னவோ செய்ய பார்வையை தாழ்த்தி கொண்டவளின் முகம் அந்திவானமாய் சிவந்து போனது,,..
“நித்து…. யூ லுக் ஸோ பியூட்டிபுல் கார்ஜியஸ்” தன்னுடைய வார்த்தைகளால் அவளை மேலும் சிவக்க வைத்தவன்… “ஏன் நித்து, உன் லவ்வர் அதான் அந்த ரவுடி உன்னை கொஞ்சும் போது கூட நீ இப்படி தான் சிவந்து போவியா” அவன் ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டான் என்று தெரியவில்லை, நித்யாவிற்கோ அவனது இக்கேள்வி சுருக்கென்று வலிக்க செய்ய, விழிகளில் விலுக்கென்று கண்ணீர் திரையிட்டது,….
“ஏய் நான் சும்மா சாதரணமா தான் கேட்டேன், இதுக்கு ஏன் கண் கலங்குற” பேசுரதை எல்லாம் பேசிவிட்டு, சமாதானம் படுத்தும் நோக்கில் தன்னை தொடவந்தவனின் கரத்தை தள்ளிவிட்டவள்,…. “ஐ ஹேட் யூ” என்றாள் விழிகள் சிவக்க,…
“ஐ நோவ், பட் ஐ லவ் யூ டார்லிங்” என்று கண்கள் மின்ன கூறியவனை ஏகத்துக்கும் முறைத்தவள்,…. “கருணா என்கிட்ட கொஞ்சி குழைஞ்சுலாம் பேசுனதில்ல, அவனுக்கு தேவைப்பட்டதெல்லாம் என்னோட பாசமும் அன்பும் தான், அவன் என்னை பார்க்கும் பார்வையிலயும் வார்தையிலயும், செயல்லயும் கண்ணியத்தை கடைபிடிப்பான், போதுமா உங்க கேள்விக்கு பதில்” என்றாள்…
“ஜஸ்ட் கிட்டிங் நித்து, பட் நீயும் அவனும் லவ்வர்ஸ்னு சொல்ற, லவ்வர்ஸ்க்குள்ள கண்ணியம் கட்டுப்பாடுலாம் எங்கிருந்து வந்தது” என்றான் ஏளன புன்னகையில்,…
“நாங்க லவ்வர்ஸ் இல்ல அதையும் தாண்டி” என நிறுத்தி யோசித்தவள்,… “எங்களுக்குள்ள இருக்க உறவை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல, எங்க உறவை பத்தி சொல்ல தெரியாம தான் லவ்வர்ஸ்னு உங்க கிட்ட சொல்ல வேண்டியதா போச்சு, எங்களுக்குள்ள காதல் இல்ல, அதையும் தாண்டி புனிதமான உறவிருக்கு” என்றாள் அவனது ஏளன புன்னகையை கண்டு முறைத்துக் கொண்டே,….
“ஏன்டி இப்படி என்னை குழப்புற, கொஞ்சம் தெளிவா சொல்லேன், சரி அந்த புனிதமான உறவுக்கு பெயர் என்ன? அதையாச்சும் சொல்லு” என்றான் அழுத்துக் கொண்டு,…
“அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது, சொல்ல வேண்டியது வரைக்கும் சொல்லிட்டேன், அவ்வளவு தான், இனி எங்க உறவை கொச்ச படுத்தற மாதிரி ஏதாவது கேட்டீங்க அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு,…
“இப்போ மட்டும் என்ன மனுஷின்னு நினைப்பா” அவன் வாய்க்குள் முணுமுணுத்தது அவளது செவியை தீண்டி விட, அவன் மேல் கனல் பார்வை வீசினாள்,…”விளங்கிடுச்சா, ஆக்சுவல்லா நீ மனுஷி இல்ல தேவதைன்னு சொல்ல வந்தேன்டி என் செல்லாக்குட்டி” என்று அவள் தடுக்கும் முன், தன் மொத்த உடம்பையும் அவள் மீது படர அணைத்தவன்,… “காலைலயே போதையேத்துறடி” அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை பூவோடு சேர்ந்து அவளுக்கே உரித்தான நறுமணத்தையும் ஆழ்ந்து சுவாசித்தபடி கூறியவன், அப்படியே கழுத்தில் முகம் புதைத்து இன்னும் ஆழமாக அவளது வாசத்தை நுகர, கணவனின் மீது கோபத்தில் இருந்தவளும் அதனை மறந்து சறுகி போனாள் அவனது செயலில்,…
கழுத்திலிருந்து தாடைக்கு வந்தவன், அங்கு அழுத்தமாக ஒரு முத்தம் வைக்க, விழிகள் மூடி அதை அனுபவித்தவளின் கன்னத்தில் தன் உதடுகளால் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தவனுக்கு கத்திக் கொண்டிருந்த போனின் சத்தம் கூட செவியை தீண்டவில்லை,…
“என்னங்க ஃபோன்” கிறக்கத்திலிருந்தவள் போனின் ஒலி கேட்டு வெளிவந்து, அவனை விலக்கி தள்ள,… “இப்போ ஃபோன் தான்டி ரொம்ப முக்கியம்” அவள் தள்ளி விட்ட கோபத்தில் எரிந்து விழுந்தவன்,… “எந்த பியர் அது” என்ற கடுப்புடன் மெத்தையில் கிடந்த போனை எட்டி எடுத்தவன், திரையில் நண்பன் பெயர் காட்டவும், அதனை ஏற்று “சொல்லுடா” என்றான் குரலில் எரிச்சலை காட்டி,…
“என்னடா,… டென்ஷன்ல இருக்கியா என்ன?” நண்பனின் குரலை வைத்தே வருணேஷ் சரியாக கணித்து கேட்க,…. “இல்ல கொலைவெறில இருக்கேன், நீ என் பக்கத்துல இருந்த செத்திருப்ப” என்றான்..
“டேய் என்னடா நான் என்ன பண்ணேன்” பாவம் அவன் விஷயம் தெரியாமல் அலறிக்கொண்டு கேட்க,… “என்ன பண்ணேன்னு கேட்கிறியா நீ” என்று சீறியவன் “யாரை கேட்டுடா போன் பண்ண, அதுவும் கண்டிநியூஸா விடாம அடிச்சிக்கிட்டு இருக்க, ஒரு முறை ஃபோனை எடுக்கலனா அவங்க பிஷினு புரிஞ்சிக்க முடியாதாடா கூமுட்டை உனக்கு, இருடா நேர்ல வரேன், வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்” என்று இவன் இங்கு சீற சீற அங்கு அவனுக்கு வயிற்றை கலக்கியது….
“வேண்டாம்ட்டா வந்துடாதீங்க, மறுவீட்டு ஃபங்க்சன் கேன்சல்” என சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தவன் அருகில் நின்ற தாயை மறந்து போனான், அவரோ,.. “என்னது மறுவீட்டு ஃபங்சன் கேன்சலா, ஏன்டா எடுபட்ட பயலே, பொண்ணுக்காகவும் மாப்பிள்ளைக்காவும் எல்லா ஏற்பாடும் பண்ணிவச்சுட்டு எப்போடா அவங்க வருவாங்கனு வாசலை பார்த்துட்டு உட்கார்ந்திட்டிருக்கேன், கேன்சல்னு சொல்லுற, வளர்ந்து கெட்டவனே, போனை கொடுடா” என்று மகனை அர்ச்சித்தவர் போனை பிடிங்கி கொண்டு மகளின் புகுந்த வீட்டினரிடம் பேச சென்றார், ஒன்றும் தவறிலைக்காத அந்த அப்பாவி ஜீவனோ மச்சான் கிட்டயும் தாய் கிட்டயும் வாங்கிய வசைபாட்டில் சோகமான பேக்ரவுட்மியூசிக் ஓட தலையில் துண்டை போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டான்,…
“ஏய் மறுவீட்டு ஃபங்சன் கேன்சலாம்டி, வா நாம விட்டதுலருந்து ஆரம்பிப்போம்” அவன் கசக்கி விட்ட சேலையை நீவிவிட்டுக் கொண்டிருந்தவளை நெருங்கி அள்ளி தூக்கியவன், கட்டிலை நோக்கி நடக்க,…. “என்னது கேன்சலா, யார் சொன்னா?” என்றாள்
“ம்ம்ம்… உன் நொண்ணன் தான்” என்றவன் பூப்போல அவளை மெத்தையில் கிடத்த,… “அண்ணன் போன் பண்ணுச்சா? எப்போ?” என கேட்டவளின் கேள்வியில் சலித்தவன்,… “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பியர் விடாம போன் வலியா கத்திக்கிட்டு இருந்ததே அது வேற யாருமில்லை உன் நொண்ணன் தான், சும்மா கேள்வி கேட்டு குடையாத, நான் செம ரொமான்டிக் மூட்ல இருக்கேன்” என்றவாறு அவள் இதழ்களை நோக்கி குனிய, அவனது பிடரியை பிடித்திழுத்து தள்ளிவிட்டவள்,… “ஏன் கேன்சல்? என்ன காரணம்? பாட்டி நேத்து நைட்டே சொன்னாங்களே, அம்மா கூட பாட்டிக்கு காலையில போன் பண்ணிருக்கு, திடீர்னு கேன்சல்னு சொன்னா என்ன அர்த்தம், நான் பார்த்து பார்த்து ரெடியாகிருக்கேன்” என்றாள்,…
“காரணம்லாம் அவன் சொல்லலடி, ஏன்னு நீ அவன்கிட்டயே கேட்டுக்கோ, ஆமா பார்த்து பார்த்து தேவதை மாதிரி ரெடியாகிருக்க, அதை நான் யூஸ் பண்ணிக்கிறேன்” என்று அவள் பின்னிடையில் கரம் வைத்து அழுத்தி தன்னோடு இறுக்கியவன், அவளது காது மடலை கவ்விக் கொள்ள…. “இப்போ நகறல ராட்சசியாகிடுவேன், தள்ளு தள்ளுடா” என்ற அவளது திமிறலையும் மரியாதை இல்லா பேச்சையும் அவன் கண்டு கொள்வதாகவே இல்லை,
“அமைதியா வளைஞ்சு கொடுதன்னா, நானும் மெதுவா ஹேண்டில் பண்ணுவேன், இல்லனா கதற விற்றுவேன் பார்த்துக்கோ” அவன் மிரட்டலில் அரண்டு போனவள்,… “ஏன் இப்படி பண்ணுறீங்க, அதான் என்னை மயக்கி ஏதேதோ பேசி நைட் மொத்தமா யூஸ் பண்ணிக்கிட்டீங்க, இப்போ காலைலயுமா?” என்றாள் பரிதாபமான முகத்துடன்,….
“நான் மட்டுமா உன்னை யூஸ் பண்ணேன், நீயும் தானேடி என்னை யூஸ் பண்ணிகிட்ட” அவனது சொல்லில் விழிகள் இரண்டையும் விரித்தவள்,… “என்னது நானா?” என்றாள்,…
“நீ தான், வேற யாரு பக்கத்து வீட்டு பொண்ணா” என்றவனை மூச்சு வாங்க முறைத்தவள்,… தன் உதட்டிற்கு மிக அருகிலிருந்த அவன் உதட்டை வலிக்கும் அளவிற்கு கடித்து வைத்தாள்…
“ஆஹ்,… ராட்சசி, ரத்த காட்டேரி” வலியில் திட்டிக்கொண்டே கத்தியவன்,… “உனக்கு அவ்வளவு தைரியமாடி” என்றவாறு சட்டென அவளது இதழை சிறையெடுத்து கசக்கிபிழிந்து அவள் இதழ்த்தேனை உறிஞ்சினான், அவள் கடி தந்த வலியில் அவளையும் வலிக்க வைக்கலாமென்ற எண்ணத்தில் இதழை கவ்விக்கொள்ளடன், அவள் எச்சில் பட்ட ஈர உதடுகள் அவனை போதையேற்றவும் மெல்ல அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்துவிட்டான், வேண்டாம் வேண்டாம் என்று முதலில் திமிறியவளும் அவன் தொட்டதும் பாகாய் உருகி தன் இதழை முழுதாய் அவனிடம் ஒப்படைத்து அவனுள் கரைய ஆரம்பித்தாள்,…
அவன் கரம் ஒரு பக்கம் அவள் உடலில் ஊர்வலம் நடத்த, இதழ் முத்தம் அவளது உயிர் வரை சென்று அலைக்கழிக்க, விழிகள் சொறுக கிடந்தவள், அவனது அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கும் வாகாக இசைந்து கொடுத்து கொண்டிருந்த நேரம் சரியாக கதவு தட்டப்பட்டது, அவன் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, தாபத்தின் பிடியில் சிக்குண்டிருந்தவன் அவள் நேர்த்தியாக உடுத்திருந்த பட்டு புடவையோடு சேர்த்து அவளையும் பிசைந்து எடுக்க, மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டதில், மயகத்திலிருந்து விடுபட்டு கொண்ட நித்யாவோ,… “போதும்,… யார்னு பாருங்க” தன் மணிவயிற்றில் மேய்ந்து கொண்டிருந்தவனின் தலையை பிடித்து கூற,… “நித்து ப்லீஸ், ஐ காண்ட் கண்ட்ரோல்” என்றவன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருந்தான்,….
நேற்றைய இரவை போல முழுதாக அவனுக்கு கட்டுப்பட்டு போனவள், ஈருடல் ஓருடலாக உயிரோடு உயிர் கலந்து ஜனித்து சொர்க்க சுகமாகி மலர் படுகையாய் மாறிய கணவனின் நெஞ்சில் மூச்சு வாங்க படுத்திருந்தாள்,….
“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா டியர்” கணவனின் அக்கறையான வினாவில் சொக்கி போனவள்,… “ம்ஹும்” என்றவாறு அவனது நெஞ்சில் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டாள்…
கூடல் முடிந்த பிறகு தான் மீண்டும் கதவு தட்டும் சத்தத்தில், யாரோ வெகுநேரமாக தட்டிக் கொண்டிருப்பதை அறிந்தவன்,.. “நான் பார்க்கிறேன்” என்றவாறு மனைவியை விட்டு பிரிந்து உடை அணிந்து சென்று கதவை லேசாக மட்டுமே திறந்தான்,…
வெளியே வீட்டில் வேலை செய்யும் மல்லிகா நின்றுகொண்டிருக்க, ‘என்ன’ என்ற பார்வையை வீசியவனிடம்,… “அம்மா உங்களையும் நித்யா பாப்பாவையும் வர சொன்னாங்க தம்பி மறுவீட்டுக்கு போக, நித்யா பாப்பா வீட்ல ரொம்ப நேரமா உங்களுக்காக தான் காத்திருக்காங்களாம்” என்றதும்,… “சரிக்கா… அரை மணி நேரத்துல வந்துடுறோம்” என்று அவரை அனுப்பி வைத்தவன், கதவை தாழிட்டு விட்டு நித்யாவிற்கு அருகில் வந்தான்,…
“மறுவீட்டுக்கு போக அண்ணா வரவேணாம்னு சொன்னதா சொன்னீங்க, பொய் சொன்னீங்களா?” இத்தனை நேரம் உருகி போய் கிடந்த கணவனிடம் மல்லிகா கூறிவிட்டு சென்றதை செவியில் வாங்கி கொண்ட நித்யா எகிற ஆரம்பித்தாள்,…
“நான் பொய் சொல்லலடி, உன் அண்ணங்காரன் தான் அப்படி சொன்னான், லூசு பய ஏன் அப்படி சொன்னான்னு தெரியலயே, போய் அவனை கவனிச்சுக்கிறேன்” என்றவனை மேலும் முறைத்தவள்,… “என் அண்ணன் ஒன்னும் லூசு இல்ல, பார்த்து பேசுங்க” என்றாள் மிரட்டலான தோரணையில்…
“யாரோ அண்ணன் மேலயும் அம்மா மேலயும் கோபமா இருக்காங்கன்னு கேள்வி பட்டேன், உனக்கு அவங்கள யார்னு தெரியுமா நித்து” அவனது கிண்டல் பேச்சில் தடுமாறியவள்,… “ஆமா கோபம் தான், அவங்கள நான் மன்னிக்கவே மாட்டேன், அதுக்காக, நீங்க லூசுன்னு சொன்னா பார்த்துட்டு சும்மாவும் இருக்க மாட்டேன்” என்றவள்,… “ஒரு மணி நேரமா பார்த்து பார்த்து தயாரானேன், என்னை எப்படியாக்கி வச்சிருக்கீங்க பாருங்க” என்றாள்
அவனும் பார்த்தான், கூந்தல் கலைந்திருக்க, அதில் சூடியிருந்த மல்லிகை பூவும் அறுந்து போய் கட்டிலில் படர்ந்திருக்க, கண்மை கொஞ்சமாய் இளகி, நெற்றி வகிட்டிலிருந்த குங்குமம் நெற்றி வரை இழுவி, உதட்டுசாயம் மொத்தமாய் காணாமல் போய் உடம்பில் சரசரக்க அவள் கட்டியிருந்த பட்டுப்புடவை அறையின் ஒரு ஓரத்தில் கிடக்க, போர்வையை சுற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள், பார்க்க பார்க்க அவன் ஆண்மை மீண்டும் விழித்து கொள்ள, கண்களில் தாபம் பிரதிபலித்தது, தன்னை கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவனை விழிகள் சுருங்க பார்த்தவள், அவனது எண்ணத்தை அறிந்தவளாய் போர்வையை தன் உடலோடு ஒட்டிக் கொண்டு, எழுந்து அருகிலிருந்த குளியலறைக்குள் ஓடிவிட்டாள்,… அவளை தாவி பிடிக்க வந்தவன், அவள் கையில் சிக்காமல் போகவும் “வெளியே வந்து தானேடி ஆகணும் நீ, அப்போ பார்த்துகிறேன் உன்னை” என்று சத்தம் போட்டுவிட்டு மெத்தையில் வந்து விழுந்தவளின் உதட்டில் நாணப்புன்னகை,….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
1
+1
1

