Loading

ஃபர்ட்டிலிட்டி சென்டரிலிருந்து கிளம்பிய பின் காரினுள் அமைதியே நிலவியது. 

 

மூவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது. 

 

வீரையும் ஜீவிகாவையும் அவர்களது வீட்டில் விட்ட சஜீவ் நேராக தன் வீட்டை அடைந்தான். 

 

வீட்டினுள் நுழைந்ததும் ஈஷ்வரி கேட்ட கேள்விகள் எதுவும் அவன் செவிகளை எட்டவில்லை. 

 

தனது அறைக்குள் நுழைந்து வேகமாக கதவை சாற்றியவன் கட்டிலில் தலையை கைகளால் தாங்கியவாறு அமர்ந்தான். 

 

இன்று நித்ய யுவனி வீருக்கு கூறிய அனைத்தும் ஏனோ தனக்கே கூறப்பட்டது போல் இருந்தது. 

 

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவன் நெஞ்சில் வேல் பாய்ச்சியது போல் வேதனையைத் தந்தது. 

 

கண்கள் கலங்க அமர்ந்த படி அவள் நினைவுகளுள் மூழ்கினான். 

 

சஜீவ்வின் பிறப்பிடம் ஊட்டி. அவனது மொத்த குடும்பமும் அங்கே தான் இருந்தது. 

 

கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்த சஜீவ்விற்கு ஸ்டடி லீவ் கிடைத்ததும் தன் நண்பனைக் காண அவன் வீட்டுக்கு சென்றான். 

 

ராஜேஷும் சஜீவ்வும் சிறிது வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். 

 

பாடசாலைக் காலத்தில் சஜீவ் அதிகமாக ராஜேஷின் வீட்டிலே இருப்பான். 

 

இதனால் அவனும் ராஜேஷின் குடும்பத்தில் ஒருவனாகவே மாறி இருந்தான். 

 

கல்லூரிக் காலம் தொடங்கியதும் இருவரும் வேறு வேறு துறைகளை தெரிவு செய்ததால் இருவரின் சந்திப்பும் வெகுவாக குறைந்தது. 

 

பல நாட்களுக்குப் பின் காணும் நண்பனுடன் கல்லூரிக் கதைகள் பேசிக் கொண்டிருக்க திடீரென அவன் மீது யாரோ மோதி விட்டு வேகமாக ஓட மன்னிப்பு கூட கேட்காது சென்றதால் கோபமாக யாரென்று பார்க்க திரும்பியவனின் முகம் அவளைக் கண்டதும் தன்னால் மலர்ந்தது. 

 

குழந்தையுடன் குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருந்த அவள் பூ முகம் அவனுள் ஆழப் பதிந்தது. 

 

சந்தியா வந்து அவள் பெயர் கூறி அறிமுகப்படுத்தியதிலிருந்து அவனுக்கு மட்டும் அவள் யுவி என்றானது. 

 

அவர்கள் சென்ற பின் சஜீவ் வீட்டுக்குச் சென்ற பின்னும் அவளின் நினைவுகள் அவனை ஆட்டிப் படைத்தது. 

 

ஆனால் அது என்ன வகையான உணர்வு என்று தான் அவன் அறியவில்லை.

 

அடுத்த நாள் விடிய ராஜேஷ் நீர்வீழ்ச்சிக்கு செல்ல அழைத்த போதும் ஏனோ ஒரு வித யோசனையுடனே சென்றான். எல்லாம் அவளைக் காணும் வரை தான். 

 

தூரத்திலிருந்து நித்யாவை ரசித்துக் கொண்டிருக்க சட்டென அவள் பாறையில் தடுமாறி கீழே விழப் பாக்க வேகமாகச் சென்று பூக்குவியலொன்றைத் தன் கரங்களில் தாங்குவது போல் அவளைத் தாங்கினான். 

 

விழும் போது பயந்து கண்களை மூடிய பின் அவள் முகத்தில் காட்டிய பல வித பாவனைகளையும் இரசித்தான். 

 

பின் அவள் விழியோடு அவன் விழி கலக்க அவளை விட்டதும் அவள் அங்கிருந்து சென்றாள்.

 

அவள் சென்ற பின்னும் முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவள் சென்ற பக்கமே பார்வையைப் பதித்தான்.

 

ஆனால் அவ் உணர்வுக்கு எந்தப் பெயரும் வைக்க அவன் விரும்பவில்லை.

 

சஜீவ் இங்கு நித்யாவின் நினைவுகளில் மூழ்கி இருக்க அங்கு நித்யாவும் அவன் பற்றிய சிந்தனையிலேயே இருந்தாள். 

 

(2 perum thani thaniya past pathi think panranga.. so na awanga past a ore view la solren..) 

 

சந்தியா மாலதி மற்றும் நித்யா இருந்த இடம் வந்து நித்யாவின் பின்பக்கமாக காட்டி, 

 

“அதோ எங்க அண்ணனும் சர்வேஷ் அண்ணனும் வராங்க..” என்றதும் யாரென்று பார்க்க திரும்பிய நித்யா அதிர்ந்தாள். 

 

ஏனென்றால் ராஜேஷுடன் தன்னை விழாமல் தாங்கியவன் புன்னகை முகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். 

 

அவனைக் கண்டதும் ஏனோ நித்யாவுக்கு அவன் கண்களை நோக்க தயக்கமாயிருந்தது. 

 

சட்டென தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள். 

 

ஆனால் சஜீவ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 

பின் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள நித்யா மட்டும் வாயையே திறக்கவில்லை. 

 

மாலதியும் புதியவர்களைக் கண்டதால் வந்த தயக்கம் என எண்ணிக் கொண்டாள். 

 

பின் அனைவரும் விடை பெற்றுச் செல்ல சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு ராஜகோபால் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீடு சென்றார். 

 

அதன் பின் வந்த ஒரு மாத விடுமுறையும் நித்யாவுக்கு உற்சாகமாகவும் சந்தோஷமாகவுமே சென்றது. 

 

அன்று பார்த்ததோடு சரி சஜீவ்வை அதன் பின் வந்த நாட்களில் அவள் பார்க்கவில்லை. 

 

சொல்லப் போனால் சஜீவ்வை அவள் மறந்தே விட்டாள். 

 

ஆனால் அவளுக்கே தெரியாமல் அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் வந்து சஜீவ் அவளையும் அவள் குறும்புகளையும் இரசித்தான். 

 

அதுவரை சஜீவ்விற்கு நித்யா மேல் ஒரு ஈர்ப்பே இருந்தது. 

 

அவளைக் காணும் போதெல்லாம் அவன் உள்ளம் மகிழ்ச்சியாக உணர்ந்தது. 

 

இவர்கள் இவ்வாறிருக்க ராஜேஷோ மாலதி மீது காதல் கொண்டு சந்தியாவிடம் இருந்து அவள் அலைபேசி எண் வாங்கி அவளுடன் நட்புக்கரம் கோர்த்திருந்தான். 

 

விடுமுறை முடிந்து தந்தையுடன் சென்னைக்குச் சென்ற நித்ய யுவனி டென்த் ரிசல்ட்டை ஆர்வமாக எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். 

 

நித்யா ஊட்டியிலிருந்து சென்று ஒரு வாரமாக அவளைக் காணாது தவித்த சஜீவ் பின்னே ராஜேஷ் மூலமாக அவள் ஊருக்கு சென்றதை அறிந்தான். 

 

பெரிதாக ஏதோ இழந்ததைப் போல் உணர்ந்தான் சஜீவ்.

 

இவ்வாறே நாட்கள் வேகமாக செல்ல நித்யாவும் டென்த்தில் சிறப்புச் சித்தி அடைந்து தன் படிப்பைத் தொடர்ந்தாள். 

 

ஒரு நாள் மாலை வசந்தி செய்த சிற்றுண்டியை கொரித்துக் கொண்டிருந்தவள் எண்ணுக்கு தெரியாத எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருந்தது. 

 

யாரென்று தெரியாததால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது தன் வேலையைத் தொடர்ந்தாள். 

 

மீண்டும் மீண்டும் அதே எண்ணிலிருந்து மெசேஜ் வர யாரென்று பார்க்க ரிப்லை செய்தாள்.

 

Nithya: Who z thz?

 

Unknown num: u knw me vry well.. guess who am I?

 

Nithya: Sry I don’t knw.. I didn’t sv ur num.. tell me ur name…

 

Unknown num: Ok.. I’ll give u a clue.. Once a tm I’ve saved u frm a danger… can u remember that incident?

 

தெரியாத எண்ணிலிருந்து இவ்வாறு பதில் வர நித்யா சலித்துக் கொண்டு, 

 

“இது என்ன ஒரே தொல்லையா போச்சு.. யாருன்னு பேர சொன்னா என்ன குறைஞ்சா போய்ட போற.. நமக்கெதுக்கு வீண் வம்பு பேசாம ப்லொக் லிஸ்ட்ல போட்டுடலாம்…” என நினைத்துக் கொண்டு அவ் எண்ணை ப்லொக் செய்தாள். 

 

சிறிது நேரத்தில் வேறொரு தெரியாத எண்ணிலிருந்து மெசேஜ் வந்தது.

 

Unknown num 2: Hlw sry dr.. Plz unblk me.. I’ll tell u who am I..

 

என்றிருக்க அதை வாசித்து விட்டு நித்யா அவ் எண்ணை ப்லொக் லிஸ்ட்டிலிருந்து எடுத்தாள். 

 

பின் அவளே அவ்வெண்ணுக்கு மெசேஜ் செய்தாள்.

 

Nithya: Ok..Now tell me who r u..

 

Unknown num: I’m Sajeev Sarvesh

 

Nithya: Which Sajeev? I don’t knw anyone on thz nm…

 

Sajeev: Sandhiya’s brother Rajesh’s frnd frm ooty.. can u remember now?

 

சஜீவ் தன்னை அறிமுகப்படுத்தியதும் பல நாள் கழித்து அவனுடனான முதல் சந்திப்பு அவளுக்கு ஞாபகம் வந்தது. 

 

ஒரு முறை மட்டுமே அவனை சந்தித்துள்ளதால் அவள் சாதாரணமாகவே இருந்தாள். 

 

அங்கு சஜீவோ அவளுக்கு தன்னை ஞாபகம் இல்லையோ என சிந்தித்தவனாய் மொபைலையே பார்த்த வண்ணம் இருந்தான். பின் நித்யா அவனுக்கு பதில் அளித்தாள். 

 

Nithya:  ஓஹ்.. நீங்களா? சாரி பேர சொன்னதும் யாருன்னு தெரியல.. கொஞ்சம் கன்ஃபியுஸ் ஆகிடுச்சு..

 

Sajeev: It’s ok dr… சோ என்ன பண்ணுறாய்.. எங்க ஊருல உன்னோட லீவ் எல்லாம் எப்படி போச்சு..

 

சஜீவ் ஒரே முறையில் டியர் சொல்லி ஒருமையில் பேசியதை அவள் விரும்பவில்லை. 

 

இதுவரை அவனுடன் பழகி கூட இல்லை. பழக்கமில்லாதவர்கள் தன் மீது உரிமை எடுப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.

 

Nithya: நல்லா தான் போச்சி… & one more thing don’t call me dr.. 

 

நித்யா இவ்வாறு கூறியதும், “ஹோ நாங்க டியர் சொன்னா மேடம்க்கு கோவம் வருதா… ஹ்ம்ம் பாக்கலாம் எத்தனை நாளைக்கின்னு..” என நினைத்துக் கொண்டு அவளுக்கு சாரி என்று மட்டும் பதிலளித்தான். 

 

பின் சஜீவ்வின் சாதாரண விசாரிப்புகளுக்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் நித்யா பதிலனுப்பினாள். 

 

இடையில் வசந்தி அவளை அழைக்க மொபைலை வைத்து விட்டு கீழே செல்ல சஜீவ் பல முறை மெசேஜ் செய்தும் பதில் வராததால் நாளை பண்ணலாம் என மொபைலை வைத்து விட்டு தன் வேலையை கவனிக்கச் சென்றான். 

 

இவ்வாறே இருவருக்கும் இடையில் முதல் தொடர்பு உருவானது.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்