Loading

அத்தியாயம்: 9

பிற்பகல் மூன்று மணி இருக்கும் சென்னையின் ட்ராபிக் நெரிசலில் சுதாவின் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்தாள் ஆரத்யா. சுதா வாகனத்தை இயக்கி கொண்டிருந்தாள்.

“ஏய் சுதா.!”

“சொல்லு ஆரா”

“இந்த ஆதித் கிருஷ்ணா ப்ராஜெக்ட்டை நீ முடிச்சு கொடுக்குறியா.?”

“என்ன விளையாடுறியா ஆரா.? அந்த மண்ட கசாய மனோகர் நம்ம இரண்டு பேரையும் ஒரு வழி பண்ணிட மாட்டான்”

“முதலில் இந்த மேட்ரிமோனி வேலையை விட்டுட்டு வேற ஜாப் பார்க்கணும் சுதா”

“நானும் தேடிட்டு தான் இருக்கேன் ஆரா. பாண்டிச்சேரில ஒரு ரிசார்ட்ல ஜாப் இருக்கிறதாம் வர்றியா நம்ம ரெண்டு பேரும் ட்ரை பண்ணலாம்.?” உற்சாகமாய்க் கேட்டாள் சுதா.

“அப்படியா.? என்ன ஜாப் டி.?”

“கஸ்டமர் கேர் தான், பட் நைட் ஷிஃப்ட் இருக்குமாம்”

“ட்ரை பண்ணலாம்டி ஆனால் கிட்டார் க்ளாஸ் இருக்கு அப்பறம், இங்கே கச்சேரிலாம் இருக்குல, அதை விட்டுட்டு பாண்டிச்சேரிக்கு போய் என்னடி பண்ணுறது.” என வருத்தமாய்ச் சொன்னாள் ஆரா,

“நான் முதலில் போய் ஜாயின் பண்ணிடுறேன்டி, செலரிலாம் பார்த்திட்டு நான் சொல்றேன், உனக்கு செட் ஆனா, அப்பறம் நீ வந்து ஜாயின் பண்ணிக்கோ” எனச் சுதா சொல்ல, சரி எனத் தலையாட்டினாள் ஆரா.

ஏகே குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயர் மார்பில் சுவற்றில் தங்க நிறத்தில் பொறிக்கபட்டிருந்தது அதைக் கடந்து சுதாவும் ஆரத்யாவும் அந்தப் பிரம்மாண்டமான நிறுவனத்திற்குள் நுழைந்த போது, ஆராத்யாவின் அடிமனதில் எதோ பதற்றம் தொற்றிக்கொண்டது, அவள் வேலை பார்க்கும் இடமோ சிறிய ஆஃபிஸ் போன்ற செட்டப் தான் ஆனால் அவள் இப்போது வந்திருக்கும் இடத்தின் பிரம்மாண்டம் அவளுக்குள் பதற்றத்தை விதைத்தது.

வரவேற்பறையில் மெழுகு சிலைப்போல் நின்றிருந்த பெண்ணோ, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியதை பிரமிப்பாய் பார்த்தாள் ஆரத்யா.

“மேம் ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ” எனப் பேசிய வட இந்திய பெண்ணைப் பார்த்து.

“ஆக்ட்சுவலி வீ .” எனத் தொடங்கும் போதே அவளின் ஆங்கிலம் தடுமாறியது. ஆங்கிலம் நன்கு பேச தெரிந்தவள் தான் ஆரத்யா, ஆனால் புதுச் சூழல் ஏற்படுத்திய பதற்றத்தில் தடுமாறினாள், அவளின் உள்ளங்கை வியர்த்து போக, உடல் முழுக்க ஜில் உணர்வு பரவியது.

‘ஆரா.! ஷிவர் ஆகாதே டி’ அவளின் மன நடுக்கத்திடம் தூது அனுப்பினால். அப்போது அவளின் கரத்தை பற்றிய சுதா விழியிசைவிலே தைரியம் கொடுத்தாள்.

“மேம்.! ஐ யெம் ஆரத்யா கம்மிங் ஃப்ரம் மேட்ரிமோனி, வீ போத் ஹவிங் அப்பாயின்மென்ட் வித் மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா” எனச் சொல்லி முடித்தாள்.

“மேம் ப்ளிஸ் வெயிட்” என அந்த வட இந்திய பெண் இருக்கையைக் காண்பிக்க அமைதியாய் இருவரும் அமர்ந்தனர்

சில நொடிகளில் யாருக்கோ அழைப்பு விடுத்து அந்தப் பெண் பேசிய பின் ஆரத்யாவிற்க்கு மட்டும் அனுமதி இருப்பதாகக் கூறி ஆதித் கிருஷ்ணாவின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் அதே நேரம் சுதாவை நோக்கி வந்திருந்தான் விக்னேஷ்.

“ஹாய் ஐ யெம் விக்னேஷ்.!” சுதாவை பார்த்து பல் இளித்தான் விக்னேஷ்.

“ஹாய் ஐ யெம் சுதா” மென்னகைத்தாள் அவள்,

“சுதா நீங்களும் மேட்ரிமோனி தானே வொர்க் பண்ணுறீங்க.?” கேள்வியாய் அவளைப் பார்த்தான்.

“ம்ம்” என்ற பதிலளித்தாள்.

“என்னங்க ம்ம்மன்னு ஒத்தை வாரத்தையில் முடிச்சுட்டீங்க இது தான் உங்க கஸ்டமருக்கு நீங்க கொடுக்கிற மரியாதையா.? நான் மனோகர்கிட்டையே பேசிக்கிறேன்” சொல்லியவன் படக்கென்று நகர,

“அய்யோ மண்ட கசாயத்துகிட்ட போட்டு கொடுத்துறாதீங்க” துரிதமாய் அவன் கைபிடித்துத் தடுத்திருந்தாள் சுதா.

அதே நேரம் ஆதித் கிருஷ்ணாவின் அலுவலக அறையில் அவளின் கால்கள் ப்ரேக் டான்ஸ் ஆடுவதைப் போல் நடுங்கிகொண்டிருக்க. இல்லாத தைரியத்தை எங்கிருந்தோ வரவழைத்து முகத்தை இயல்பாய் வைத்திருப்பதைப் போல் அவனெதிரே அமர்ந்திருந்தாள் ஆரத்யா.

அவனின் கழுகு பார்வை அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது.

இந்த வசதியும் ஆடம்பரமும் பெண்ணவளை மிரட்டியது, அவ்வப்போது பயத்தில் அவளின் காலணியைக் கழட்டி விட்டு மீண்டும் போட்டுக்கொண்டிருந்தாள். நகப்பூச்சு பூசிய நகத்தைச் சுரண்டிய படி அமர்ந்திருந்தவளின் மனதில் இருந்ததெல்லாம் பயம் மட்டுமே.

“சார்.!” சாயம் பூசிய உதடுகள் தந்தியடித்தது,

“ஆரத்யா.!” அவளை விழித்ததில் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனின் கருவிழிகள் இவளையே நிலைக்குத்தி நிற்பதை உணர்ந்துக் கொண்டாள்.

“சார் உங்களோட எக்ஸ்பெக்டேசன் நீங்க மென்சன் பண்ணலை சோ.!” என அவள் இடைநிறுத்த.

“ஆரத்யா.! சாரி ஃபார் மை மிஸ்டேக் என்னோட தப்புதான், அப்படிப் பேசியிருக்கக் கூடாது சாரி அதுக்காகத் தான் உங்களை வரச் சொன்னேன். இந்தப் பொண்ணு பார்க்கிறதை இதோட ஸ்டாப் பண்ணிடுங்க பிகாஸ் எனக்கு கல்யாணத்து மேல இஷ்டம் இல்லை, என்னோட ஃபரொஃபைல்ல நான் ரெஜிஸ்டர் பண்ணலை வீ்ட்டில பண்ணியிருக்காங்க, இவ்வளோ கன்ஃபூயசனுக்கும் காரணம் அது தான்.” என தன் பக்க நியாயத்தை அவன் சொன்னதில் அவள் புரிந்துக்கொண்டாள்.

“அய்யோ சார்.! மனோகர் சார் உங்களுக்கு வரன் அமைச்சு தரலைன்னா எனக்குப் பேமெண்ட் தரமாலே வேலையை விட்டு தூக்கிடுவாரு ப்ளிஸ் நான் கொண்டு வந்திருக்க வரன்களை மட்டும் ஒரு தடவை மட்டும் பார்த்திடுங்களேன்” என அவள் கெஞ்சலாய் கேட்க, அதை மறுக்க மனமில்லாமல் சரியெனத் தலையாட்டியிருந்தான் ஆதித் கிருஷ்ணா. அவளின் செல்லப் பேச்சு, அவனை கட்டி போட வைத்தது. அவளை தாண்டி அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை.

“சார் இந்தப் பொண்ணைப் பாருங்க சார் லண்டன் ரிட்டர்ன், எம்பிஏ படிச்சிருக்காங்க” அவள் நீட்டிய டேப்லேட்டை வாங்கி அதில் தெரிந்த அழகு பெண்ணைப் பார்த்தான் லண்டன் ப்ரைட்டன் பீச் முன் நின்றிருந்தவள் நீல நிற கையில்லாத ஃப்ராக் அணிந்திருந்தாள். அவள் தலையில் அணிந்திருந்த போட்டர் ஹெட்டில் விரல் கொண்டு பிடித்து முகத்தில் மெலிதாய் புன்னகை உதிர்த்திருந்த பெண்ணைப் பார்த்து.

“ஷி இஸ் டூ மார்டன்” என ஒற்றை வார்த்தையில் உதிர்த்தவன் இப்போது பயத்துடன் அலைமோதிக்கொண்டிருந்த அவளின் கருவிழிகளை ரசித்துக் கொண்டிருந்தான்.

‘அய்யோ பிடிக்கலைன்னு சொல்லிட்டானே?’ எனத் தனக்குள் புலம்பியபடி,

“அப்போ உங்களுக்கு ட்ரெடிஷ்னலான பொண்ணு வேணுமா சார்.? இதோ இன்னொரு ப்ரொஃபைல் இருக்கே” என எழுந்தவள் அவள் கையில் இருந்த டேப்லெட்டை நோக்கி, அவன் முன் சாய்ந்து மற்றொரு பெண்ணின் புகைபடத்தைக் கருப்பு நிற நகப்பூச்சு பூசிய விரல் கொண்டு அடுத்தப் புகைப்படத்துக்கு நகர்த்தி விட்டு மீண்டும் தன் இருக்கைக்கு வந்து அவள் அமர்ந்த போது அவனது பார்வை இப்போது அவள் கழுத்தில் போடப்பட்டிருந்த அடையாள அட்டையைத் தாண்டி மயில் இறகுடன் சேர்ந்து இருந்த புல்லாங்குழல் டாலரை பார்த்து.

“வாவ் கூல்” என அவன் இதழ்கள் உதிர்க்க,

“சார் பிடிச்சிருக்கா.? பிக்ஸ் பண்ணிடலாமா.?” ஆர்வமாய்க் கேட்டாள் ஆரத்யா.

“நோ நோ” பதட்டத்துடன் அவசரமாய் மொழிந்தான் ஆதித்.

‘அய்யோ யாரை தான் இவனுக்குப் பிடிக்குமோ’ என நினைத்தபடி,

“சார்.! இந்தப் பொண்ணு ட்ரெடிஷ்னல் சார் புடவை கட்டியிருக்காங்க, பூ வச்சிருக்காங்க பாருங்க சார், அவங்க பொட்டை பாருங்க சார் பெரிசா வச்சிருக்காங்க, ஹோம்லியா இருக்காங்க பாருங்க சார்” என அவள் சொன்ன பிறகு தான் அந்தப் புகைபடத்தைப் பார்த்தான் ஆதித் கிருஷ்ணா, அழகாய் பூ வைத்து புடவை கட்டியிருந்த அந்தப் பெண்ணோ பார்ப்பதற்கு நகை கடை விளம்பரத்திற்கு மாடல் போல் இருந்தாள் ஆனால் அவனது பார்வையோ ஆராவை விட்டு நகரவேயில்லை.

“இந்தப் பொண்ணு ரொம்ப ட்ரெடிஷ்னலா இருக்கு ஐ டோண்ட் லைக் இட்” அவள் கொடுத்திருந்த டேப்லட்டை அவள் புறம் நீட்ட,

“சார் இன்னும் ஏழு பொண்ணுங்க போட்டோ இருக்கு” எனச் சொல்லி எழுந்தவள் அவனருகே நின்று ஒவ்வொரு பெண்ணாய் காண்பித்தாள் திருமணத்திற்க்கு அவர்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளையும் அந்தப் பெண்களின் எதிர்பார்ப்புகளையும் அவள் சொல்லி முடித்து மீண்டும் அவனெதிரே இருந்த சுழல் நாற்காலியில் வந்தமர்ந்தாள்.

அனைத்தையும் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தவன் அவனுடைய எதிர்பார்ப்பு என்னவென்று இதுவரை சொல்லவில்லை. திருமணத்தில் விருப்பம் இல்லாத போதிலும் அவளுடன் இன்னும் நேரம் செலவிட மனம் ஏங்கியது.

எதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி “பிக்ஸ் இட்” என்றான். ஆனால் அதில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை. அவன் விருப்பம் எல்லாம் தன் எதிரே ஒயிலாய் அமர்ந்திருக்கும் பெண் தான். அவளின் கருவிழிகள் பேசும் மொழியும். வேலை என்று வந்துவிட்டால் அவள் காட்டும் பொறுமையும். அன்று நள்ளிரவில் துணிவாய் அவனை திட்டி சென்ற பெண்ணின் துணிவும் வேறு பெண்ணிடம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஏதோ ஒரு விதத்தில் தன்னை ஈர்க்கும் பெண்மையை அருகில் வைத்து ரசிக்க தோன்றியது. இது காதலா ஈர்ப்பா என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவனுடைய ஆரா மட்டும் தான்.

“சார் நிஜமாவா சொல்றீங்க ரொம்பத் தேங்க்ஸ் சார். நான் இப்போதே மனோ சார்கிட்ட இன்ஃபார்ம் பண்ணுறேன்” எனச் சொல்லி மனோகருக்கு அழைப்பு விடுத்திருந்தாள் ஆரத்யா அழைப்பு உடனே ஏற்கபட,

“சார் ஆரா பேசுறேன்”

“என்னமா சொல்லு.?” கடுப்புடன் ஒலித்தது மனோகரின் குரல்.

“சார் மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா ஓகே சொல்லிட்டார்.”

“அப்படியா.?” அவர் ஆச்சரியபடுவதற்கு முன்னே,

“ஜஸ்ட் ஏ மினிட்” என்ற ஆதித் கிருஷ்ணாவின் குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள் ஆரா.

“ஐ ஹவ் சம் கண்டிசன்ஸ்” என அவன் கைநீட்டி அலைப்பேசியைக் கேட்க, அலைப்பேசியை ஆதித்திடம் கொடுத்தாள் ஆரா, சில நொடிகள் மனோகரிடம் பேசிய ஆதித் கிருஷ்ணா மீண்டும் அலைப்பேசியை அவளிடம் கொடுத்தான்.

“ஆரா சார் சொல்றதை கேட்டு நடந்துக்கோ, உனக்குப் பிஃப்டி பெர்சன்டேஜ் கமிசன் தர்றதாகச் சொல்லியிருக்கார்.” எனச் சொன்னவர் அவள் வேறெதும் கேட்டு விடக் கூடாதென்று அழைப்பை துண்டித்திருந்தார் மனோகர்.

‘மண்ட கசாயம் என்னைக் கோர்த்து விட்டுட்டியா.?’ என மனதுக்குள் புலம்பினாள் ஆரா.

வரவேற்பறையில் தன் கைகளைப் பிடித்துத் தடுத்திருந்த சுதாவை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி.

“இப்படியே காலம் முழுக்கக் கைபிடிச்சிட்டு போகலாமா.?” தன்னை மீறி வார்த்தைகளை விட்டிருந்தான் விக்கி.

“வாட் இடியட்” என்றவள் பளாரென அறை விட்டிருந்தாள் சுதா. அவனுக்கு விழுந்த அடி எதிரொலிக்க, வரவேற்பறையில் இருந்த அனைவரும் இவர்கள் இருவரையும் வித்தியசமாய்ப் பார்த்தவுடன்.

“நத்திங் ஜெஸ்ட் எ ப்ராங்க், அங்க பாருங்க கேமரா இருக்கு” என அங்கிருந்த சிசிடிவி கேமராவை காட்டிய விக்கியை பார்த்துப் பட்டெனப் புன்னகை பூசி நகர்ந்த சுதாவை பின்தொடர்ந்தான் விக்னேஷ்.

மற்றவர்கள் அவர்களின் வேலையில் முழ்க ஆரம்பித்தனர்.

“நீங்க சிரிச்சீங்க நான் பார்த்தேன். அப்போ இது லவ் தானே சுதா” ஏக்கத்துடன் அவன் கேட்க,

“ஹலோ ஏங்க இப்படிக் கிரிஞ்ச் பண்ணிட்டு இருக்கீங்க.? அந்த மாதிரி பொண்ணு இல்லை நான்” முகத்தில் அறைந்தாற் போல் அவள் சொல்லியிருந்தாள்.

“கிரிஞ்சா.? ஏன்ம்மா லவ் பண்ணிட்டு இருக்கேன்மா”

“அதெப்படி பார்த்து பத்து நிமிசத்துல லவ்வா.?”

“பத்து நிமிச லவ்வோ பத்து வருச லவ்வோ ஃபீலிங் ஒண்ணு தானேங்க” அவனும் சலிக்காமல் பதில் கொடுத்தான்.

“நீங்க நயன்ட்டிஸ் கிட்டா.?”

“ஆமா எப்படிக் கண்டுபிடிச்சீங்க.?”

“அதான் மூஞ்சிலையே எழுதி ஒட்டியிருக்கே, முதல்ல ஒரு பொண்ணைப் பிடிச்சா பழகணும் அப்பறம், அவ மனசுல இடம் பிடிக்கணும் அப்பறம் தான் லவ்வே சொல்லணும்”

“இவ்வளவு விவரமா பேசுறிங்களே நீங்க நயன்ட்டிஸ் கிட்டா.?”

“இல்லை இல்லை டூ கே கிட்”

“ஓ.! அப்போ லவ் பண்ணலாம்ல சுதா.?”

“அய்யோ கடவுளே யோவ் போயா மறுபடியும் அடி வாங்காமல் ஓடிரு” அவள் துரத்தி விட அவளைப் பார்த்து புன்னகைத்தபடி அங்கிருந்து நகர்ந்தான் விக்கி. அதே நேரம் ஆரத்யா அங்கு வந்து சேர்ந்தாள்.

“ஏய் ஆரா.! என்னாச்சு.?” உற்சாகமாய்க் கேட்டாள் சுதா.

“பிக்ஸ் பண்ணிட்டாரு டி சுதா”

“ஹே!! சூப்பர் டீ.அதை ஏன்டி இவ்வளவு சோகமாகச் சொல்றே.?”

“பொண்ணு ஓகேவாம் ஆனால் அந்தப் பொண்ணைப் பத்தி டிடெக்ட்டிவ் வேலை பார்த்துச் சொல்லணுமாம்”

“வாவ் ஆரா துப்பறியும் உளவாளி ஆகிட்டியா கங்க்ராட்ஸ்” எனப் புன்னகைத்தாள்.

“விளையாடதே சுதா.! ஆதித் கிருஷ்ணா கூடச் சேர்ந்து அந்த பொண்ணை பத்தி விசாரிக்கணுமாம்”

“என்ன ஆரா சொல்ற.?”

“நான் என்ன கதையா சொல்றேன் எல்லாம் இந்த மனோகர் செய்த வேலை” எனத் தலையில் அடித்துக்கொண்டாள் ஆரா.

“சரி விடு ஆரா சமாளிச்சிடலாம்” தன் தோழியை ஆறுதல் படுத்தினாள் சுதா.

“சுதா இன்னக்கி  என் கூட வர்றீயா.?” கவலையை மறந்துவிட்டு அடுத்த வேலைக்கு தயாராகினாள் ஆரா.

“ஏங்கேடி”

“ஒரு ரிசப்சன்ல சாங்க் பாடணும் டி போனால் இரண்டாயிரம் கிடைக்கும் வர்றீயா.?”

“எனக்குப் பாட்டெல்லாம் பாட தெரியாதேடி”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்டி நீ கூட மட்டும் வந்தால் போதும்” எனத் தன் தோழியை அழைத்துச் சென்றாள் ஆரா.

*******************************

பிருந்தாவனம் பேலஸ்

“அம்மா.! அம்மா.!” என்ற அழைப்புடன் வீட்டினுள் நுழைந்தாள் லாவண்யா.

“ஏன்டி வந்த்தும் வராததுமா கத்திகிட்டு இருக்க”

“இங்கே வாங்க யார் வந்திருக்கான்னு பாருங்க.?” என அவள் குரல் சந்தோசத்தில் ஒலித்ததைப் பார்த்து விரைந்து வந்தார் யசோதா. அங்கு மஞ்சள் நிற சுடிதாரில் நின்ற பெண்ணைப் பார்த்து யாரென்று தெரியாமல் விழித்தவர்.

“வாம்மா நல்லா இருக்கீயா.?” யாரென்று தெரியாமலே நலம் விசாரித்தார்.

“ஆண்ட்டி நல்லா இருக்கேன் அங்கிள் எங்கே.?” என்று ஆர்வமாய்க் கேட்டாள் அந்தப் புதியவள்.

“அம்மா யாருன்னு தெரியலையா.? நம்ம ஜெகன் அங்கிள் பொண்ணு மஹதி” என லாவண்யா சொன்னவுடன்,

“நம்ம மஹதியா.? ஆளே மாறிட்டா சின்ன பிள்ளையா இருக்கும் போது பார்த்தது” என அவளைக் கட்டிக்கொண்டார்.

“ஆமாம்மா நான் டான்ஸ் க்ளாஸ்ல தான் ஃப்ரெண்ட் ஆனேன், ஷி இஸ் சோ ஸ்விட்மா” என்றாள் லாவண்யா.

“அய்யோ நான் வேற நிக்க வச்சி பேசிகிட்டு இருக்கேன் பாரு, வாம்மா உட்காரு”

“லாவா உங்க அண்ணன் ஆதித் ஏங்கே?”

“இப்போ அண்ணா வந்திருவாங்க மஹதி” எனப் புன்னகைத்தாள் லாவண்யா.

அவள் சொன்ன கணமே அவனுடைய கருஞ்சிறுத்தை பிருந்தாவனம் பேலஸ்க்குள் நுழைந்தது.

“அண்ணா வந்துட்டான்” எனக் குதுகலித்தாள் லாவண்யா.

“ஏய் லாவண்யா நீ உன் அண்ணாகிட்ட சொல்லாதே ஆதித்க்கு என்னை நினைவு இருக்கிறதா பார்ப்போம்” என்றாள் மஹதி. மஹதிக்கு காபி கலக்க சமையலறைக்குள் நுழைந்தார் யசோதா.

ஆராவுடன் செலவழித்த நிமிடங்களை மீண்டும் மனதிற்குள் ஓட்டி பார்த்த படி அரும்பிய குறுநகையோடு வீட்டிற்குள் நுழைந்தான் ஆதித்.

“ஆதித்.!” என ஓடி வந்த மஹதி அவனைக் கட்டிக்கொண்டாள்.யாரென்று தெரியாத பெண் தன்னைத் திடீரென்று அணைத்த அதிர்வில் அதிர்ந்து நின்றான் ஆதித் கிருஷ்ணா.

தன் மார்போடு வேறொருத்தி மோதி நின்றாலும் அவன் எண்ணம் முழுக்க நிறைந்திருந்தாள் அவனின் ஆரா.

ஆர்பரிக்கும் குற்றால

அருவியை போல,

அவளின் குரல் கேட்டு

மனமும் ஆர்பரிக்கிறது!!

**********

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்