விழி வழியே சரணடைந்தேன் -14

Loading

அத்தியாயம் 14

 

கீதனும் கனியும் பெங்களூர் கிளம்பி கொண்டிருந்தனர். அனு மற்றும் அதிரன் அவர்களுக்கு உதவி கொண்டிருக்க “மச்சான் கீழ கிச்சன்ல கேஸ் ஆப் பண்ணலையா?” என்ற கீதனின் கேள்வியில் சட்டென நிமிர்ந்த அதிரன் முறைத்தான்.

 

“இதுக்கு நீ நேரடியாக வெளில போன்னு சொல்லிருக்கலாம் கனி.. இங்க புதுசா கல்யாணம் ஆனவங்க யாருன்னு எனக்கே சந்தேகமா இருக்கு” என்று கூறி விட்டு அனுவுடன் வெளியே செல்ல கனி கீதனை முறைத்தாள். 

 

“அறிவிருக்கா உங்களுக்கு?” 

 

“ஏன் இல்லனா நீ கொஞ்சம் தர போறியா என்ன?” என்றவன் அவளை அருகில் அமர்த்தி “எதுக்கு உன் முகம் டல்லா இருக்கு.. ட்ரிப் பிடிக்கலையா?”என்று கேட்டான். 

 

“உங்க கூட வரதுனா எங்க வேணாலும் வருவேன்.. ஆனா இந்த சூழ்நிலையில் தேவையா?” அவளின் முகம் பார்க்கவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது. 

 

“நாம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறதால எல்லாம் சரி ஆகிடுமா? நேரத்துக்கு நேரம் மாத்திரை, ஹாஸ்பிட்டல்னு ஏதோ மாதிரி இருக்கு.. கண்டிப்பா இந்த மாற்றம் தேவை தான்.. முன்னாடி ஜெர்மனி போறதா இருந்துச்சு.. இனி அந்த வேலைய அதி பார்த்துப்பான்.. அவங்களுக்கும் ஒரு ஹனிமூன் ஸ்பாட்டா இருக்கும்.. நீ கவலை படாம என்னை மட்டும் கவனிச்சா இன்னும் நிறைய வருஷம் உன் கூட வாழ கடவுளே மனசிரங்குவார் பாரு” என்று பெட்டியை எடுத்து கொண்டு கீழே வர அவர்களுக்காக கார் வந்தது. 

 

“நீ ட்ரைவ் பண்ண வேணாம் கனி.. ட்ரைவர் வர சொல்லிருக்கேன்” என்ற அதிரனின் அக்கறையில் தங்கையின் வாழ்வு செழிக்கும் என்றே அவனுக்கு தோன்றியது. 

 

“நானும் அனுவும் ரொம்ப லக்கிடா..” என்று அவனை அணைத்து விடுவிக்க இருவருக்குமே கண்கள் கலங்கியது. 

 

கனி வரவும் இருவரும் பெங்களூர் கிளம்ப கடவுள் இன்னொரு பாதையை அவர்களுக்காக உருவாக்கியிருந்தார். 

 

 

*********************

 

“என் பேபி என்ன பண்ணுது?” என்று கேட்டவாறே தன் தோள் வளைவில் முத்தமிட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் கனிஷ்கா. 

 

அந்த மூங்கில் ஊஞ்சலில் முழுக்கை ஷர்ட் மற்றும் நீள் பாவாடை அணிந்து அமர்ந்திருந்தவளை பின்னாடி வந்து அணைத்தவனை சிரிப்புடன் நோக்க அவளின் முன்புறம் வந்தவன் அந்த மூங்கிலில் தான் அமர்ந்து கொண்டு அவளை மடியில் அமர்த்தினான். 

 

அவனின் செயலில் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தவளை பார்க்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. முதல் நாள் ஓங்கி அறைந்த கனிஷ்கா மொத்தமாக மாறியிருந்தாள். இன்று அவனின் எந்த செயலுக்கும் அவளிடம் இருந்து எதிர்ப்பு வராது. அவன் அவளை மொத்தமாக எடுத்து கொண்டாலும் அவளுக்கு தெரியாது. அவளின் நினைவுகள் மொத்தம் அவன் மட்டுமே ஆக்கிரமித்திருந்தான். அதாவது அவன் அதை செய்திருந்தான். 

 

அன்று பார்ட்டியில் தன் நண்பர்கள் அனைவருக்கும் அவளை அறிமுக படுத்தி வைத்தான் சித்தார்த். முன்முட்டி வரை வெல்வெட் துணியில் வேலைப்பாடுகள் செய்து பின்னால் நீளமாக தரையை தேய்த்து கொண்டு வந்த அந்த ஆடையில் அனைவருக்கும் அவள் தேவதையாகவே தெரிந்தாள். 

 

“ஹெலோ பிரண்ட்ஸ்.. திஸ் இஸ் கனிஷ்கா.. இவளுக்கு மனித மூளையுடன் என் சிப் செயல்படுது” என்று கூற அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். 

 

“இது எப்படி சாத்தியம் சித்தார்த்.. இந்த முறைமை இன்னும் வெற்றி பெறலயே” என்று ஒருவன் கேட்க சித்தார்த் சிரித்தான். 

 

“எஸ்.. இதுவரை மனிதன் அல்லாத பிற பொருட்களிடம் மட்டுமே இந்த சோதனை நடந்திருக்கு.. ஆனா ஏன் இது மனிதனிடம் வெற்றி பெறாது? நிறைய நினைவுகளை நீங்க பத்திரபடுத்தலாம்..” என்று கூற 

 

“அதை ப்ரூப் பண்ண முடியுமா?” என்று கேட்டான் மற்றொருவன். 

 

“கண்டிப்பா..” என்றவன் பென்னிடம் தன் மடிக்கணினியை எடுத்து வர சொல்லி விட்டு கனிஷ்காவை ஒரு இருக்கையில் அமர வைத்தான். 

 

“லெட்ஸ் சீ ஹெர் ஆக்டிவிட்டீஸ் (அவளோட செயல்பாடுகளை பார்க்கலாம்)” என்று கூறி விட்டு அவளின் தலையில் பொருத்த பட்டிருந்த சிப்பின் செயல் பாடுகளை நோக்க அவளின் முந்தைய நினைவுகள் கூட அதில் பதிவாகியிருந்தது. ஆனால் அதில் சித்தார்த் மட்டுமே இருந்தது தான் விந்தை. 

 

அவளின் யோசனைகள் அனைத்தும் அவனை குறித்தே இருந்தது. அவனை தவிர அவள் எதையும் நினைக்கவில்லை. அதை பார்த்த சித்தார்த்தின் நண்பர்களுக்கே ஆச்சர்யமாக போய் விட்டது. 

 

“சித்து.. வாட் அபௌட் ஹெர் பாஸ்ட்?” என்று ஒருவர் கேட்க “தேவையில்லாத குப்பை.. நீக்கிட்டேன்” என்று சிரித்தான். 

 

“வாட்? நினைவுகளை அழிக்கலாமா?” 

 

“சேர்க்கும் போது அழிக்குறது பெருசா என்ன? எலெக்ட்ரிக் ஷாக்” என்று கூறி விட்டு சாதாரணமாக செல்ல அவனின் சிந்தனை அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருங்கே கொடுத்தது. 

 

தொழிலில் இவ்வளவு அறிவு என்றால் அவளின் வாழ்கைக்காகவும் வருந்தினர். சித்தார்த் பெண் பித்தன் அல்ல தான். ஆனால் ஒரு விஷயம் நினைத்து விட்டால் அதனை முடிக்காமல் விட மாட்டான். 

 

சிறிது நேரத்தில் பார்ட்டி தொடங்கி விட மதுவும் களிப்பும் அந்த இடத்தில் அதிகமாகவே இருந்தது. சித்தார்த் அதை எப்போதும் கண்டு கொள்ள மாட்டான். ஆனால் கனிஷ்கா இருந்த காரணத்தால் அவன் மது அருந்த தயங்க பென் தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தான். 

 

“சார்.. எனக்கு உங்க லெவல் தெரியும்.. சோ வேறு ஒரு ரீசன்காக உங்களை மாத்திக்க வேண்டாம்” என்று அனுப்பி வைக்க சித்தார்த் மதுவின் பிடியில் ஆழ்ந்து விட்டான். 

 

நான்கு, ஐந்து பெக் என்று உள்ளுக்குள் ஏற்றிய பிறகே அவனுக்கு சுற்று புறம் உறைக்க திரும்பி பார்த்தவன் கனிஷ்காவின் பார்வையில் தடுமாறி அவளிடம் வந்தான். 

 

“கியூட்டி..” என்று அவளின் உதடுகளை கவ்வ வர சட்டென பின்னால் சென்றாள் அவள். அந்த வாசம் அவளுக்கு எதையோ உணர்த்தியது. அவளின் முகசுழிப்பு அவனுக்கு கோபத்தை கூட்ட “கியூட்டி ஐ நீட் யூ” என்று பொது இடம் என்றும் பாராமல் அவளின் இதழ்களை கவ்வி கொள்ள மேலை நாட்டு கலாச்சாரத்தில் இது ஒன்றும் அவர்களுக்கு தவறாக படவில்லை. 

 

ஆனால் ஒழுக்கத்தின் அர்த்தம் சொல்லி வளர்க்க பட்ட அவளுக்கோ தவறு என்று ஒருபக்கம் சொன்னது. மறுபக்கமோ அவனுக்கு ஒத்துழைத்தது. இருதலை கொள்ளியாய் தவித்தவள் அவனை தள்ளி விட கண்கள் சிவக்க நிமிர்ந்து பார்த்தான் சித்தார்த். அவனின் பார்வை உள்ளுக்குள் கிலியை கிளப்ப முன்னால் நகர்ந்தவளை தன் பிடிக்குள் இறுக அணைத்து கொண்டு வந்தான். 

 

“பென்….” சித்தார்த் அழைக்க ஓடி வந்தவனை பார்த்து “பார்ட்டி பார்த்துக்கோ.. வீட்டுக்கு போக வேண்டியவங்களுக்கு ஹெல்ப் பண்ணு.. பட் டோன்ட் டிஸ்டர்ப் மி” என்று கூறி விட்டு கனிஷ்காவை இழுக்க அவளோ திமிறினாள். 

 

இவ்வளவு நேரம் அவன் நினைவில் இருந்தவளுக்கு என்னவானது என்பதை அறிந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன். தன் மடிகணினியை எடுத்தவன் அவளையும் அழைத்து கொண்டு ஆய்வகத்திற்கு செல்ல அவன் கட்டளையிட்ட வேலையை செய்ய சென்றான் பென். 

 

படுக்கையில் அவளை படுக்க வைத்து விட்டு மயக்க மருந்தை செலுத்தியவன் அந்த சிப்பின் செயல்பாடுகளை பார்க்க அவள் மனம் குழம்பியிருந்தது தெரிந்தது. அவள் எதையோ யோசித்திருக்கிறாள். ஆனால் என்னவென்று கண்டு பிடிப்பது? அதை விட அவளின் நினைவுகள் மாறாமல் இருக்க என்ன வழி என்று யோசித்தான் அவன். மூளை சாவுக்கே உயிர் கொடுத்தவனுக்கு அவளின் நினைவுகளை அழிப்பதா கஷ்டம்? மொத்தத்தில் அவளை தன் வசம் கொண்டு வர நினைத்தவனுக்கு முதலில் தோன்றியது அவளின் அன்பு. 

 

மருத்துவ ரீதியாக அவளை ஒன்றும் இல்லாமல் பண்ணியிருக்கலாம். ஆனால் சித்தார்த் அன்பை வைத்து விளையாட நினைத்தான். அவனை அவள் நம்பினால் மட்டுமே வேறு எந்த சிந்தனையும் இருக்காது. அதனாலேயே அதற்கான ஆட்டத்தை ஆரம்பித்தான் அவன்.

 

இதோ இந்த நான்கு நாட்களில் அவன் சொல்வதை தவிர அவளுக்கு வேறெதுவும் தெரியாது. அவனின் முன்னால் எப்படி நிற்கிறோம் என்பதை கூட சில நேரம் மறந்து நிற்பாள். பென்னை தனது அவுட் ஹவுஸ்க்கு அனுப்பி வைத்து விட்டான். இன்றும் அவளை மடியில் அமர்த்தி “கியூட்டி உனக்கு வேலுன்னு யாராவது தெரியுமா?” என்று கேட்க சட்டென அவள் உடல் விறைத்தது. 

 

அது என்ன உணர்வு என்பது அவளுக்கு தெரியாது. ஆனால் புரிந்து கொண்டவனோ “உன் ஆழ்மனசை எப்பவுமே கட்டுப்படுத்த முடியாது கியூட்டி.. பட் அதில் இருந்து நீ தான் வெளில வரணும்” என்று கூற “ஏன்?” என்று கேட்டாள். 

 

“அப்போ வர வேண்டாமா?” 

 

“ஹ்ம்கும்.. எனக்கு நீ.. நீ மட்டும்..” என்று அவனின் தோள் சாய்ந்தவளுக்கு தன் உண்மை நிலைமை அறியும் போது என்ன ஆக போகிறாள்?

 

****************************

 

பெங்களூர் ஹைவேயில் மிதமான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்க பின்னால் அமர்ந்திருந்த கனிகீதனின் மடி சாய்ந்து தூங்கி கொண்டிருந்தாள் கனிமொழி. இந்த பயணமாவது அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்திட வேண்டும் என்று கீதனின் மனம் ஆசைப்பட அவனின் சந்தோசம் மொத்தமாக பிரிந்து போவதே இந்த பயணத்தில் தான் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. 

 

“சார் ஹோட்டல் வந்துடுச்சு” ட்ரைவர் கூற கனியை எழுப்பினான். 

 

“எந்திரிச்சு சாப்பிட்டு தூங்குமா..”

 

“ஹ்ம்கும்..” மறுத்து விட்டு அவன் மடியில் ஆழ்ந்து படுக்க அதை மறுக்கும் எண்ணம் அவனுக்கும் இல்லை. 

 

“நீங்க சாப்பிட்டுட்டு ரெண்டு பேருக்கும் தோசை வாங்கிட்டு வாங்கண்ணா..” என்று அனுப்பி வைத்தான். 

 

அவர் வந்ததும் சாப்பாட்டை வாங்கி வைத்தவன் போகும் வழி முழுவதும் அவளின் யோசனையிலேயே இருக்க யாருக்கும் காத்திராமல் பெங்களூர் வந்து சேர்ந்தது. 

 

அவளை எழுப்பி தனது பண்ணை வீட்டிற்குள் அழைத்து சென்று படுக்க வைத்தவன் தாங்கள் பாதுகாப்பாக வந்ததை அதிரனுக்கு சொல்லி விட்டு வெளியே வர அந்த குளிர் அவனின் உடலையும் ஊடுருவி சென்றது. 

 

அறுவை சிகிட்சை அவனின் நோய்க்கு ஒரு வழி தான் என்றாலும் அதிலும் நூறு சதவீதம் நம்பிக்கை இல்லாத போது அவனின் கனியை தனியே விட்டு செல்ல அவனுக்கு மனம் இல்லை. யோசனையில் இருந்தவன் பின்னால் வந்து அணைத்தாள் கனிமொழி. 

 

“என்னடா தூங்கலயா?” 

 

“வர வழி முழுசா தூங்கிட்டேனே.. தூக்கம் வரல.. என்ன யோசனை?” என்று கேட்க அந்த புல் தரையில் அமர்ந்தான். 

 

“ஒன்னும் இல்லடா.. தூக்கம் வரல.. நீ என்ன பண்ண போற? பேசாம இங்கேயே காலேஜ்ல சேர்த்து விடவா?” என்று கேட்க முறைத்தாள். 

 

“என்னை விட்டு பிரிய அவ்ளோ ஆசையா? அது ஒருக்காலும் நடக்காது.. எனக்கு டீச்சர் வேலை பிடிக்கும் தான்.. ஆனா உங்களை விட எதுவும் பெருசில்ல.. இப்படியே இருந்தா கண்ட கண்ட யோசனை தான் வரும்.. உள்ளே வாங்க” என்று அவனின் கை பிடித்து இழுத்தாள். 

 

“போகலாம்டா.. இந்த குளிர், இரவு, நிலா எவ்வளவு அழகா இருக்கு பாரேன்.. இயற்கையை ரசிக்குறது ஒரு வரம்.. அந்த கொடுப்பினை அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது.. இன்னைக்கு நமக்கு கிடைச்சிருக்கு.. என்ஜாய்” என்று அவளை அணைத்து கொள்ள அவர்களுக்கான நேரத்தை அந்த நிலவு கூட தொந்தரவு செய்யாமல் நகர்ந்து சென்றது. 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்