Loading

அத்தியாயம்:22

முகத்தில் அவள் மாஸ்க் அணிந்திருந்தாலும். மஹதியின் செயல் ஏனோ ஆராவிற்குச் சந்தேகத்தைக் கிளப்பியது. யாரிவள் இவளை நம்பலாமா போன்ற கேள்விகள் அவள் மனதில் எழ.

“உங்களுக்கு மஹியை தெரியுமா?” என கேள்வியை எழுப்பினாள் ஆரா.

“ஆரா!! எனக்கு எல்லாம் தெரியும் கொஞ்சம் அமைதியா வர்றீயா” என மஹதி சொன்ன போது, ஆராவின் விழிகள் விரிந்தது.

“இப்போ என்ன சொன்னீங்க” என மீண்டும் கேட்டாள் ஆரா.

“ஆரா, உனக்கு உன்னோட மஹி தானே வேணும் வாயை மூடிட்டு வா” எனக் கட்டளையாய் ஒலித்த மஹதியின் குரல். அதைக் கேட்டவுடன் அந்தச் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்தாள் ஆரா. அவள் இப்போது மீராவாக இருக்கிறாள் என்பது மஹதிக்கு தெரியும் தான் ஆனால், அவள் மாறாக ஆரா என்றழைத்து ஆரத்யாவிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டாள்.

“நான் ஆரா இல்லை!! மீரா, நீ அவனோட ஆளா?” என எதிர் கேள்வி எழுப்பினாள் ஆரா. இங்கே இவள் அவன் என குறிப்படுவது ஆதித்தை தான். க்ரிஷ் என்றழைத்து அவனுடன் காதல் புரிந்ததெல்லாம் பாவம் பாவைக்கு மறந்து போனதே.

“யாரு யாரோட ஆள்?” என புரியாது சொன்ன மஹதி, திணறி நின்றாள்.

“சரியா சொன்னீங்க மீரா அண்ணி! இவ அந்த ஆதித்தோட ஆள் தான்” என்ற குரல் கேட்டு திரும்பினாள் ஆரா.

“நீங்க யாரு??” எனக் கேள்வி கேட்டதோடு எதிரில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து புரியாது விழித்தாள் ஆரா.

“லாவா என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கத்தினாள் மஹதி.

“மீரா அண்ணி நீங்க வாங்க, மகேஷ் அண்ணா உங்களைப் பத்திராம பார்த்துக்கோ சொல்லி என்னை அனுப்பியிருக்காங்க. நான் லாவண்யா மகேஷ் அண்ணாவோட தங்கச்சி. உங்களோட ட்ரீட்மெண்ட்காக அண்ணா பணம் ரெடி பண்ண போயிருக்காங்க” என லாவண்யா எதையோ சொல்லி சமாளித்தாள். தான் ஆதித்தின் தங்கை என்பதை மறைத்து, மகேஷின் தங்கை என்று பொய்யுரைக்க காரணமும் ஆதித் தான். அண்ணன் சொல்லிய வேலையை சரியாக செய்து முடிக்க மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தாள் லாவண்யா.

“மஹிக்கு சொந்தம்ன்னு யாருமில்லைன்னுல சொன்னான்” எனத் தெளிவாய் கேட்டாள் மீராவாய் இருந்த ஆரா.

“அய்யோ மீரா அண்ணி. உங்க கல்யாணத்தை வீட்ல ஏத்துக்கலைன்னு கோபத்தில அண்ணா அப்படிச் சொல்லியிருக்கும்” எனச் சரியாய் பேசி எப்படியோ சமாளித்த லாவண்யா. மஹதியை நெருங்கினாள்.

“இதோ பாரு மஹதி உன் திட்டம் ஒன்னும் பலிக்காது. உன்னோட ஆளு மகேஷ் ஆதித் அண்ணாக்கிட்ட மாட்டிக்கிட்டான். ஆரா அண்ணி இப்படி ஆனதுக்கு நீ தான் காரணம்ன்னு கன்ஃபார்ம் ஆகட்டும், நீயும் உன்னோட பார்ட்னர் கூடப் போய் ஜெயில்ல செட்டில் ஆக வேண்டியது தான்” என விரல் நீட்டி எச்சரித்த லாவண்யா. தப்பித் தவறி கூட அவள் பேசுவதை ஆரா கேட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள்.

“ஷிட்” எனத் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து மஹதி நகர்ந்தாள். அப்போது புன்னகைத்தபடி லாவண்யாவை நெருங்கியிருந்தான் அஜய்.

“இவர் யாரு?” எனக் கேட்டாள் ஆரா.

“இவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவர் அண்ணி. அவர் பேர் அஜய்” என முகம் மலர்ந்த படி சொன்னாள் லாவண்யா. அவளோ புரியாது விழித்தாள்.

“வாங்க அண்ணி உங்க லவ் ஸ்டோரியை பத்தி பேசுவோம்” என அவள் அனுமதிக்கப் பட்ட அறைக்கு அழைத்துச் சென்ற லாவண்யா. ஆதித்க்கு அழைப்பு விடுத்தாள்.

“அண்ணா!! அண்ணி சேஃபா இருக்காங்க, நீ அவனைக் கவனி அண்ணா. இங்கே நானும் அஜய்யும் பார்த்துகிறோம்” எனத் தகவலை சொல்லி அழைப்பை துண்டித்த போது.

“மஹிகிட்டயா பேசின?” எனக் கேட்டாள் ஆரா.

“ஆமா அண்ணி, அண்ணன் இரண்டு நாள்ல வந்திடும்” என அவளைப் படுக்கையில் அமரச் செய்தாள். ஆதித் சொன்னதைப் போல் லாவண்யா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்ததால். மஹதியிடம் இருந்து ஆராவை எளிதாகக் காப்பாற்ற முடிந்தது, அவளோடு அஜய் இருந்ததும் அவளுக்கு உறுதுணையாய் இருந்தது.

இருவரும் காரில் வந்துக்கொண்டிருந்த போதே ஆதித். தகவலை சொல்லியிருந்தான். ஆரா ஆபத்தில் இருக்கிறாள் என்பதை அங்குப் பணிபுரியும் ஒரு பெண்ணின் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறான் ஆதித்.

ஆராவை பார்த்துக்கொள்வதில் கவனமாய் இருந்த லாவண்யாவை பார்த்தபடி, எதிரில் இருந்த நீள் இருக்கையில் அமர்ந்த அஜய் லாவண்யாவை பார்த்துக் கொண்டிருந்ததான்.

ஆராவோ மெல்ல உறக்கம் தழுவுவதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவள். எதிரில் அமரந்துக்கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன அஜய் திருதிருன்னு முழக்கீறிங்க” இதழ் தாண்டி வந்த புன்னகையை மறைத்தபடி கேட்டாள் லாவண்யா. அவள் குரல் திடீரெனக் கேட்டதில் திடுக்கிட்டவன். பழக்கதோசத்தில்.

“மேடம்” என எழுந்து நிற்க. அடக்கி வைத்திருந்த புன்னகை இப்போது பீறிட்டுக்கொண்டு வெளிபட்டது லாவண்யாவிற்கு.

“அய்யோ!” எனத் தலையில் அடித்துக்கொண்ட அஜய்.

“ஆனால் மேடம் நீங்க செம்ம போங்கு போங்க, மேரேஜ் பண்ணிக்கிறேன்னு ஹாஸ்ப்பிட்டல கூட்டிட்டு வந்து உட்கார வச்சிட்டு, இப்போ சிரிக்கிறீங்க” என்றான் அவன்.

“என்னோட அண்ணா இல்லாமல் எப்படி நம்ம கல்யாணம் நடக்கும் அஜய். அதோட நான் இன்னும் படிக்கணும். சும்மா உங்க கிட்ட ஒரு சின்னக் கேம் விளையாடினேன்” என்றாள் லாவண்யா.

“அப்போ! இதெல்லாம் கேம்மா மேடம்?” எனக் கேட்டவன் அதிர்ந்து விழித்த போது.

“இந்த மேடம்லாம் வேண்டாமே. இனிமேல் வேண்டாமே” என்றவளை உற்றுநோக்கியவன்.

“சரிங்க லாவண்யா” எனச் சொன்ன போது, ஆராவோ ஆழந்த உறக்கத்திற்க்கு சென்றிருந்தாள்.

“அஜய்! ஒருவேளை நான் ஆதித் அண்ணாவோட தங்கச்சியா இல்லாமல் இருந்திருந்தால். உங்களுக்குள்ள அந்த காதல் வந்திருக்காதுல்ல?” என கேள்வி கேட்டவளை புன்னகைத்தபடி அவன் பாத்திருந்தான்.

“இதென்ன கேள்வி?” என்பது போல் பார்த்திருந்தவனிடம் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமர்ந்திருந்தாள் லாவண்யா.

அதே சமயம்.

ஆராவின் தாய் தந்தை தங்கி இருந்ததாய் சொல்லப்படும் வீட்டில் இருந்த மரநாற்காலியில், கைகள் கயிற்றால் பின்னால் இழுத்துக் கட்டபட்டு. அமர்ந்திருந்தவனின் நெற்றியில் இருந்து சொட்டு சொட்டாய் வழிந்த இரத்த துளிகளைப் பார்த்த பின்னும் எதிரில் வேட்டையாட காத்திருக்கும் சிங்கத்தைப் போல் நின்றிருந்தவனின் சினம் துளியும் அடங்கவில்லை.

“இப்போ நீ சொல்லப் போறீயா இல்லையா?” எனக் கை முஷ்டிகளை மடக்கியவன் கைகளை ஓங்கி குத்த சென்ற போது தடுத்திருந்தான் விக்கி.

“டேய் ஆதித்! அவனைக் கொண்ணுடாதேடா” எனச் சொன்னவன்.

“இவ்வளவு அடிவாங்கியும் அப்படி என்னத்தடா மறைச்சி தொலையுற. சொன்னால் என்ன உன்னோட உயிரா போயிரும்” என விக்கி, அடிவாங்கித் தலைதொங்கி அமர்ந்திருந்த மகேஷை பார்த்து கேட்டான்.

“அவன் சொல்லமாட்டான்டா. என் கையிலையே அடி வாங்கிச் சாகப்போறான் பாரு” என்றான் ஆதித். அவனின் கோபத்தை அவனால் கட்டுபடுத்த முடியவில்லை. அவனுடைய ஆரா இப்போது அவளாக இல்லை என்பதே இதற்குக் காரணம்.

“நான் டெல்லிக்குப் போயிருக்கக் கூடாது, அந்தப் பதினைஞ்சு நாள்ல தான் எதோ நடந்திருக்கு” எனப் புலம்பிக்கொண்டிருந்தான் ஆதித்.

“என்ன ஆதித் பைத்தியமாகிட்டியா? இவனைக் கொண்ணுட்டா எல்லாம் சரியாகிடுமா? நீ ஜெயிலுக்குப் போயிட்டா ஆராவுக்கு யாருடா இருக்கா?” என விக்கியின் கேள்வியில் ஆதித்தின் கோபம் சற்று மட்டுப் பட்டது. தலையில் கைவைத்து அமர்ந்தான் ஆதித்.

“இதோ பாரு மகேஷ்! இப்போ மட்டும் நீ உண்மையைச் சொல்லலை ஊர்ல இருக்க உங்க அப்பா அம்மாவை இங்கே வரவைக்க வேண்டியதாயிருக்கும்” என விக்கி மிரட்டியதில், தொங்கிக்கொண்டிருந்த மகேஷின் தலை நிமிர்ந்தது.

“ப்ளீஸ் சொல்லிடாதீங்க, அவங்களுக்கு இதெல்லாம் ஒன்னும் தெரியாது.நான் உண்மையைச் சொல்லிடுறேன்” என்றான் மகேஷ்.

 என்ன நடந்தது என்பதைச் சொல்ல ஆரம்பித்தான் மகேஷ். ஆராவிற்கு எப்படி மறந்து போனது, அதை மகேஷ் எப்படி தனக்கு சாதகமாக நடத்திக் கொண்டான். அனைத்தும் அவன் கண்முன் காட்சியை விரிந்தது.

அந்த பதினைந்து நாட்கள்:

ஆதித்தை இறுதியாய் பார்த்த அந்த நாள். இரவு வேலையில் கணினியை தட்டிக்கொண்டிருந்தாள். அவளின் மனதில் குழப்பம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவளின் கனவுகள் கண்முன் கரைவதை தாங்கி கொள்ள முடியாமல். காதலா? கனவா? என மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தாள் ஆரத்யா. வேலையை அவளால் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியாததால் அமைதியாய் அமர்ந்திருந்தாள். அவள் போட்டுக்கொண்டிருந்த கோடிங்க் தவறு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு. சிவப்பு நிறத்தில் எரர் என்ற எழுத்து வர தலையில் கைவைத்து அமர்ந்த விட்டாள். அப்போது தான் அந்த அழைப்பு அவளுக்கு வந்தது. மகேஷ் தான் அழைத்திருந்தான்.

“சொல்லு மகேஷ்!!” என்றாள் அவள்,

“பிசியா இருக்கியா ஆரா” எனக் கேட்டான் அவன்.

“இல்லை, ஃப்ரீ தான், என்ன விசயம் அர்த்த ராத்திரியில கால் பண்ணியிருக்க?” எனக் கேட்டாள்.

“நம்ம தொழில் அப்படி என்ன பண்ணுறது. இப்போ தான் கச்சேரி முடிஞ்சுது ஆரா. அப்படியே மண்டபத்திலயே சாப்பிட்டுட்டு ரூம்க்கு போயிட்டு இருக்கேன்” என்றான் அவன்.

“ஓ சார் டைம் பாஸ்க்கு கால் பண்ணீங்களா? இங்கே டைம் பாஸ் பண்ணுற சுழ்நிலையில் இல்லை மகேஷ். கோட் எரர் காட்டிட்டு இருக்கு, நானே தலைவலியில இருக்கிறேன் வையி மார்னிங் பேசுறேன்” என்றாள் ஆரா.

“ஏய் வச்சிடாதே எமர்ஜென்சி அதான் கால் பண்ணினேன்” என்றான் அவன்.

“அப்படி என்னடா எமர்ஜென்சி”

“நீ ஐடியில வேலைக்குச் சேர்ந்ததுக்கு அப்பறம், கச்சேரிக்கு வர்றதே இல்லை. ஃபீமேல் வாய்ஸ்க்கு ஆளே கிடைக்க மாட்டேன்றாங்க ஆரா, கிடைச்சாலும் சரியா வர மாட்டேன்றாங்க”

“ஆமா பேமெண்ட் இவ்வளவு கம்மியா தர்றீங்க யாருடா வருவாங்க” என்றாள் ஆரா.

“நீ சொல்றதும் வாஸ்தவம் தான் ஆரா. ஆனால் நான் முதலாளி இல்லையே” என அவன் சிரித்தான்.

“இப்போ என்ன நான் பாட வரணும் அவ்வளவு தானே? டேட் சொல்லு??” எனக் கேட்டாள் ஆரா.

“நாளைக்கி” என உடனே பதில் கொடுத்தான்.

“நாளைக்கா? முடியவே முடியாது” என்றாள் அவசரமாக

“டேய் ஒரு சின்ன ஆக்ஸிடன்ட்டா, தலையில அடி பட்டிருக்கு பெரிய கட்டெல்லாம் போட்டு ப்ளாஸ்டர் போட்டு வச்சிருகானுக, இதோட எப்படி ஸ்டேஜ் ஏற முடியும்” என்றாள் அவள்.

“அய்யோ என்ன ஆச்சு?” எனப் பதறினான் அவன்.

“சின்ன ஆக்ஸிடன்ட் தான்”

“இப்போ எங்கே இருக்க?”

“ஆஃபிஸ்ல தான் இருக்கேன். அதான் அப்போவே சொன்னேன்ல” என்றாள் ஆரா.

“நான் அங்கே வர்றேன்”

“டேய் பைத்தியம், நீ ஒன்னும் வரவேண்டாம்” என அவள் சொல்வதைக் கேட்காமல் அழைப்பை துண்டித்திருந்தான். அவன் சொன்னது போல் அரைமணி நேரத்தில் அவள் முன்னே வந்து நின்றிருந்தான்.

அதே காஃபி ஷாப், நெற்றியில் சிறிய கட்டுடன். கேப்பர்சீனோவில் போட்ட சர்க்கரையைக் கலக்கியபடி அமர்ந்திருந்தவளின் விழிகளில் எதோ குழப்பம் இருந்ததைக் கண்டுகொண்டான் அவளெதிரில் அமர்ந்திருந்த மகேஷ்.

“எப்படி நடந்திச்சு?” எனக் கேட்டான் அவன். அவள் ஆதித்தை பற்றிச் சொல்ல தயங்கி.

“ரோட் க்ராஸ் பண்ணும் போது” என்றாள் அவள்.

“எந்த ஏரியால?”

“சோழிங்கநல்லூர்ல”

“எத்தனை மணிக்கு??”

“நைட் தான்” என்றாள்.

“நான் கிட்டார் க்ளாஸ்ல தான் இருந்திருப்பேன், நீ என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல” எனக் கேட்டபடி அவனுடைய காஃபியை பருகினான் மகேஷ்.

“இல்லை! நான் மயங்கிட்டேன்” என்றாள்.

“மயங்கிட்டியா? அப்பறம் யாரு உன்னே ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க?”

“அது வந்து” எனத் தயங்கியவளின் விழிகள், பதற்றத்தை சுமக்க,

“என்கிட்ட ஏதோ மறைக்கிறல்ல ஆரா?” பட்டெனக் கேட்டுவிட்டான்.

“சீ சீ! அப்படியெல்லாம் எதுவும் இல்லை” எனச் சமாளிப்பாய் சொன்னாள் ஆரா.

“சரி உன்னோட பர்சனல்லை என்கிட்ட ஷேர் பண்ண தயங்குற புரியுது” என்றவனின் குறிக்கோள் என்னவோ, அவள் எதைத் தன்னிடம் இருந்து மறைக்கிறாள் என்பதைத் தெரிந்துக் கொள்வதில் தான் இருந்தது.

“நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவர் தான். என்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தார் போதுமா?” என அவள் அவசரத்திலும், தயக்கத்திலும் சொல்வதைக் கேட்டு, மகேஷின் மனதில் பேரிடி இறங்கியதை போல் உணர்ந்தான். அமைதியாய் மெல்ல நிமிர்ந்தான்.

“லவ் பண்ணுறீயா ஆரா?” எனக் கேட்டான்.

“ஆமாம்” எனத் தலையசைத்தாள் அவள்.

“உண்மையைச் சொல்லு, உன் லவ்வர் உன்னை அடிச்சு மண்டைய உடைச்சுட்டான் அதான் இவ்வளோ தயங்கி தயங்கி சொல்லுற? இப்போ இருக்கிறவனெல்லாம் ரொம்ப டாக்ஸிக் ஆரா. யாரையும் நம்பி ஏமாந்திடாதே”

“டேய் பைத்தியம், நான் தான் ரோட்டை பார்க்காமல் க்ராஸ் பண்ணிட்டேன். உன் கற்பனை குதிரைக்குக் கொஞ்சம் கடிவாளம் போடு. என்னோட க்ரிஷ் டாக்ஸிக்லாம் கிடையாது.” எனச் சொன்னாள் அவள்.

“க்ரிஷா?”

“ஆதித் கிருஷ்ணா”என்றாள் அவள்.

“யாரை சொல்லுற நீ, ஏகே க்ரூப் ஆஃப் கம்பெனிஸோட ஓனரை பத்தியா சொல்லிட்டு இருக்க”

“ஆமாம்” எனச் சொன்னவள் இறுதியாய் நடந்த சண்டை வரை அவனிடம் ஒப்பித்து முடித்தாள் ஆரா. ஆரா செய்த முதல் தவறு இது தான். நண்பன் என நம்பி அவர்களின் காதல் கதையை மகேஷிடம் முழுவதுமாய்ச் சொன்னது தான் அவளை நிற்க கூடாத இடத்தில் நிற்க வைக்கப் போகிறது என்பதை அந்தப் பேதைப் பெண் அறிவதற்க்குள் தன்னையே மறந்து நிற்பாள் என்பதும் அவளுக்கு அப்போது தெரியவில்லை.

“என்ன சொல்லுற ஆரா உன்னோட கனவுக்குக் குறுக்க நிற்கிறாரா?”

“இல்லை! இல்லை அதெல்லாம் நான் பேசி தீர்த்துக்குவேன்” என்றாள் ஆரா.

“ஆரா! காதலிக்கும் போது சிலரோட உண்மையான கேரக்டர் வெளிபடாது. கல்யாணத்துக்கு அப்பறம் அது உனக்கே ஆபத்தா முடியும். உன்னோட கனவுக்கு நோ சொல்றாருன்னா. உன்னை அடுப்பங்கறையிலையே அடைச்சு வைக்கப் போறாரு” எனச் சொல்லியவன் குளத்தில் கல் எறிவதை போல். குழம்பி கிடந்த அவளின் மனதில் மகேஷ் எறிந்த கல் சிறிதாய் சலனத்தை ஏற்படுத்த அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆரா.

“என்ன பார்க்கிற ஆரா? ஆதித் கிருஷ்ணா பெரிய பிஸ்னஸ் மேன் எதுக்காக உன்னை மாதிரி சாதாரணப் பொண்ணை காதலிக்கணும் சொல்லு. எனக்கு என்னவோ நீ அவர் விரிச்ச வலையில் மாட்டிக்கிட்டன்னு தான் தோணுது. அவரே மேட்ரிமொனில ஃப்ரொபைலை அப்லோட் பண்ணிட்டு இல்லைன்னு சொல்லியிருக்காரு, அதோட விட்டுருக்காரா பாரு. எதோ ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு போகிற மாதிரி உன்னைக் கரெக்ட் பண்ணியிருக்காரு”

“நோ என்னோட க்ரிஷ் அப்படி இல்லை” என அவள் சொன்னாலும் அவளின் விழிகளில் இருந்த பதற்றம் கண்டு அந்த ஒரு நிமிடம் சந்தோசம் கொண்டான் மகேஷ். ஆரத்யா மகேஷை நண்பனாக நினைத்தாலும். அவன் மனதில் வேறொன்றை வைத்துக்கொண்டு அவளிடம் நட்பு பாராட்டுகிறான் என்பதை ஆரா அறிந்திருக்கவில்லை.

தாய், தந்தை இன்றி வளர்ந்த ஆரா எந்த உறவையும் தன்னோடு தக்க வைத்துக்கொள்ளும் மனநிலையைக் கொண்டதால். அவளிடம் நட்பில் இணைவது மிகவும் எளிதான ஒன்று என்பதால் இந்த மகேஷ் உதவி செய்வது போல் அவள் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறான். ஆனால் அவனின் எண்ணங்கள் வேறு. ஆரா காதலிப்பதை அவனால் சற்றும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் இதை எதிர்n பார்திருக்கவில்லை. ஆதித் கிருஷ்ணாவை ஆராவின் வாழ்க்கையில் இருந்து விலக்குவதே அவனின் நோக்கமாக மாறியது. அவன் பதினைந்து நாட்கள் டெல்லி சென்றிருப்பதையும் அறிந்தவனுக்குப் போனஸாக அவளின் நார்வே கனவும் தெரிந்து போக அந்த நொடியில் ஒரு திட்டத்தைத் தீட்டினான். ஆராவின் தாய் தந்தை பற்றி ஆராய்வதிலும் அவன் மும்மரம் காட்ட துவங்கினான்.

*********

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்