Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

அத்தியாயம் – 2

மரகதவல்லி பாட்டியிடமிருந்து கோமியம் பிடிப்பதற்கான பாட்டில்களை வாங்கிய அமுதன் விரைந்து இரண்டு தெரு தள்ளியிருந்த மைதானத்தை அடைகிறான். அங்கே பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் இருப்பதை கண்டு தன் வேலை வெகு விரைவாக முடிந்துவிடும் என்றெண்ணி மகிழ்ந்தவன் தன்னை தவிர சுற்றி வேறுயாரும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டவன் கண்களில் பட்டது  மாடுகள் நிறைந்த அந்த மினிலாரி.

அம்மைதானத்தின் மூலையில் நின்றிருந்த மூன்று மாடுகளை  அம்மினிலாரியில் முகம் முழுவதும் கருமை படர்ந்து, ஆறடி உயரத்தில் இருந்த ஒருவன்  ஏற்றிக்கொண்டிருந்தான். அந்த மினிலாரி அமுதனுக்கு எதிர்திசையில் நின்றிருந்ததால் அவனது கண்களுக்கு மாடுகளை பிடித்துக்கொண்டிருந்தவனின் முகம் தெளிவாக தெரியவில்லை. 

இருந்தும் அவன் மனதில் ஏதோ ஒன்று தவறாக பட , சத்தம் எழுப்பாமல் மெல்ல அல்லாரியை நெருங்கியவன் , அந்த ஆறடி ஆசாமியை எக்கி பிடித்தவன் ” ஏன்  டா , உங்களுக்கெல்லாம் எவ்ளோ தைரியமிருந்தா இப்படி யாருக்கும் தெரியாம மாடு கடத்துவீங்க ? உங்களையெல்லாம் ப்ளூ கிராஸ் ஓனர் மேனகா காந்தி கிட்ட  தான்டா பிடிச்சுக்குடுக்கணும். ” என்று கத்திக்கொண்டிருந்தவனையே ஏதோ பைத்தியக்காரனை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆசாமி. ” எடேய் நா பாட்டுக்கு காட்டு கத்துக்கத்துறேன் நீ என்ன டான்னா என்னையே வாய பொளந்து பார்த்துகிட்டு இருக்க ? ” என்று அமுதன் அவன் சட்டையை பிடித்து அருகில் இழுக்க , அப்போது தான் அவன் சட்டையிலிருந்து துர்நாற்றம்  வீசுவதை உணர்ந்து அவனிடமிருந்து விலகி நின்றான். 

”  ஸ்யபா டேய் ஏன் டா  இப்படி நாறுது ? , நீ என்னைக்கி டா கடைசியா குளிச்ச ? ஆமா முதல்ல குளிக்கறதுன்னா என்னனு தெரியுமா ? எப்பா டேய் முதல்ல போய் குளிடா ” என்ற அமுதனை நோக்கி தன்  தலையில் அடித்துக்கொண்ட அந்த ஆறடி ஆசாமி , தன் கையிலிருந்த டார்ச்சை எடுத்து அந்த லூரிக்குள் வெளிச்சம் காட்ட , அதை கண்ட அமுதன் ஒரு நொடி கண்களை கசக்கி மீண்டும் லாரிக்குள் உற்றுநோக்கியவன் ” அடி யாத்தி இருட்டுல கண்ணு தெரியாம போச்சே. ஐயயோ இவன் வேற நம்மள இப்படி நக்கலா பாக்குறானே. சரி ஏதாச்சும் சொல்லி சமாளிப்போம் ” என்று மனதில் நினைத்தவன் , வெளியில் ஏதும் நடக்காதவன் போல் முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்துக்கொண்டிருந்தான். 

அதை கண்ட அந்நெடியவன் விழுந்து விழுந்து சிரிக்க , நம் அமுதனோ விட்டால் அழுது விடுவேன் என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு ” டேய் சிரிக்காத டா , நா சொல்றேன்ல சிரிக்காத டா ” என்று அதட்டலில் ஆரம்பித்து கெஞ்சலில் முடிக்க , ஆனால் அந்நெடியவனோ தன் வயித்தை பிடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்க , அதில் எரிச்சல் கொண்ட அமுதன் 

” டேய் போதும் நிறுத்துடா. இருட்டுல கண்ணு தெரியல , அதான் பன்னிய மாடுன்னு நெனச்சிட்டேன். அதுக்கு என்ன இப்போ ? சும்மா எதுக்கு சிரிக்குற ? சரி உனக்கு தான் லாரில இருக்குறது பன்னினு தெரியும்ல , நா மாடுனு நெனச்சி பேசும்போதே சொல்லி தொலைய வேண்டியது தான ” என்று கத்த , ஆனால் அந்த நெடியவனோ அப்போதும் ஏதும் பேசாமல் தலையை தொங்க போட்டுக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

அதில் மேலும் எரிச்சல் அடைந்த நம் அமுதனோ ” டேய் நானும் பார்த்துகிட்டே இருக்கேன் , துரை வாயே திறக்கமாட்டீங்களோ , ஏன் உன் வாய துறந்து ஏதாச்சும் பேசுனா முத்து உதிர்ந்திருமா ? ” என்று கேட்டு முடிப்பதற்கு முன் , லாரியின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி வந்த அந்நெடியவனின் தந்தை, அமுதனை கண்டு தன் தொடைவரை தூக்கி கட்டியிருந்த  லுங்கியை இறக்கிவிட்டவன் , தலையில் கட்டியிருந்த துண்டை உருவி இடுப்பில் கட்டிக்கொண்டு குனிந்து வணக்கம் வைத்தான்.

”  கும்புடுறேங்க ஐயா , பையன் நம்ம பையன் தானுங்க. உங்க கிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணானா சாமி ? அப்படி ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க சாமி , இப்பவே உங்க கிட்ட மன்னிப்பு கேக்க சொல்லுறேன் சாமி. ஆனா அவன் மேல இருக்க கோவத்துல எங்க பொழப்புல மண் அள்ளி போட்டுறாதீங்க சாமி ” என்று கெஞ்சியவன் , அந்த நெடியவன் தலையில் ரெண்டு தட்டு தட்டி அவனோடு சேர்ந்து அமுதனின் காலில் விழுந்தான். 

அல்லாரி ஓட்டுநரின் செய்கையை கண்டு அதிர்ந்த அமுதன் , அவன் தோலை தொட்டு அவனை எழுப்ப முயல , அவனோ இரண்டடி தள்ளி சென்றவன் ” ஐயா உங்கள பாத்தாலே மேல் ஜாதி பையன் மாதிரி இருக்கீங்க. நாங்கல்லாம் கீழ் ஜாதி ஆளுங்க , அதுவும் சாக்கடை அள்ளுறவங்க , எங்கள போய் நீங்க தொடாதீங்க சாமி. “

” ஐயோ ஏன்யா நீங்கல்லாம் திருந்தவே மாட்டிங்களா ? இந்த மாதிரி  கூனு கும்பிடு போடுறத நிறுத்தமாடீங்களா ? இப்போலாம் காலம் மாறிடுச்சுயா , இப்பவும் பழைய மாதிரியே  பேசிகிட்டு இருக்கீங்க ? சரி அத விடுயா நீ தான இவனுக்கு அப்பா ? இப்படி படிக்க வேண்டிய வயசுல உன் பிள்ளைய பன்னி மேய்க்க விட்டுருக்க ? உனக்கு அறிவில்ல ? அதுவும் பாரு அவன் வயசுக்கு ஏத்த மாதிரியா இருக்கான் ? ஒழுங்கா குளிக்காம , ட்ரெஸ் கூட ஒழுங்கா போடாம , இதுல துரை எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாரு , ஒன்னும் தெரியாத பச்சை பிள்ளை மாதிரி எல்லாத்துக்கும் தலைய தொங்க போட்டுக்கிட்டு பாவமா முகத்த வச்சிக்கவேண்டியது . ஏன் டா , நா யாரோ ரோட்டுல போறவன் , திடீர்னு வந்து உன் சட்டைய பிடிக்குறேன் , பதிலுக்கு தைரியமா என்யா சட்டைய பிடிக்குற ? உனக்கென்ன அவ்ளோ திமிரா னு , எதிர்த்து கேள்விகேட்காம இப்படி ஊமை மாதிரி நிக்குறான். சரியான தொடைநடுங்கியா வளர்த்து வச்சிருக்கயா உன் பிள்ளைய ” என்று அந்த நெடியவனை குறித்து அவன் தந்தையான அல்லாரி ஓட்டுநரிடம் குறைபட்டுக்கொண்டிருந்தான் அமுதன்.

அமுதன் திட்டுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அந்நெடியவனின் தந்தை பதிலுக்கு அமுதனிடம் ஏதோ கூற வரும் முன் , அந்த நெடியவன் ” பே ..பே… பேப்….பா … ” என்று அவன் மணி கட்டில் கைவைத்து நேரமாவதை தன் தந்தைக்கு உணர்த்த , அவ்வளவு நேரம் அமுதன் வசை பாடியதில் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்ட  அந்நெடியவனின் தந்தை , அமுதனிடம் ” ஐயா எங்களுக்கு நேரமாகுதுயா , நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுற நிலைமையில நா இல்ல. நாங்க தாமதமா போனா இன்னைக்கு கூலில அம்பது ரூபா குறைச்சுடுவான் அந்த காண்டு கஜேபி  . கடைசியா ஒன்னு சொல்லிகிறேனுங்கயா, என் பிள்ளை ஊமை தான் , ஆனா  அவன நா நீங்க சொன்ன மாதிரி தொடைநடுங்கியா வலர்கள. அவன விட வயசுல பெரியவங்ககிட்ட  எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு சொல்லி தான் வளர்த்தேன் , உங்க கண்ணுக்கு அது தொடைநடுங்கி தனமா தெரிஞ்சா அது உங்க பார்வையில இருக்க தப்புங்கயா. ஏதாச்சும் தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருங்கயா. அப்போ நாங்க வரோங்க சாமி ” என்று அப்பாவும் , மகனும் அவ்விடத்தை விட்டு நகர , அமுதனுக்கு அப்போது தான் தன் மேல் இருந்த தவறே புரிந்தது. 

” ச்ச பாவம் அந்த பையன் , வாய்பேச முடியாத பையன், அவன போய் கொஞ்ச நேரத்துல என்ன என்னமோ பேசிட்டேன். இந்த ஜாதி பத்தி யாராச்சும் பேசுனாலே என்னையும் மீறி ரொம்ப எமோஷனல் ஆகிடுறேன். மறுபடி அந்த பையன பார்த்தா மறக்காம சாரி கேக்கணும் ” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தவனின் அலைபேசி சிணுங்கி அவன் கவனத்தை திசைதிருப்பியது. 

” ஐயயோ மாடா பன்னியாங்குற குழப்பத்துல இந்த கோமியம் மேட்டர மறந்துட்டேனே , ச்ச இப்போ கிழவி தான் கால் பண்ணுது , எடுத்து பேசுனா கிழி கிழினு கிழிக்குமே. சரி சமாளிப்போம் , நாம வாங்காத திட்டா ” என்று தனக்கு தானே பேசிக்கொண்ட அமுதன் மரகதவல்லி பாட்டியின் அழைப்பை ஏற்று மொபைலை காதில் வைக்க , அந்த பக்கம் மரகதவல்லி பாட்டி ” டேய் அமுதா சீக்கிரம் வா டா , நீ இல்லாததால எவ எவளோ வந்து என் கிட்ட சண்டை பிடிக்குறா டா ” என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேச , பதிலுக்கு அமுதனோ ” கிழவி கொஞ்சமாச்சும் ஏதாச்சு புரியுற மாதிரி பேசு. முதல்ல என்ன பிரச்சனை ? உன்ன யாரு என்ன சொன்னா ? ” என்று வினவ ,

 ” அடேய் அமுதா அதெல்லாம் போன்ல சொல்ல முடியாது டா , நீ முதல்ல கிளம்பி நம்ம வீட்டுக்கு வா டா , என்னால இந்த பஜாரியோட தனியா போராட முடியல , பத்தாததுக்கு அவ குடும்பத்த வேற கூட்டிட்டு வந்து உட்கார்ந்துருக்கா. எப்பா ராசா சீக்கிரம் வந்து இந்த பிசாசுகிட்டேயிருந்து என்ன காப்பாத்துடா ” என்று வல்லி பாட்டி விட்டால் அழுது விடும் நிலையில் அமுதனிடம் பேசிக்கொண்டிருக்க , அமுதனோ ” சரி கிழவி , நீ ஒன்னும் பயப்படாத. நா இந்த ரெண்டு பாட்டில்லையும் கோமியம் புடிச்சிட்டு சீக்கிரம் வந்துறேன் ” 

” அடேய் இந்த பிரச்சனையே அந்த கோமியத்தால தான் டா வந்தது. நீ அங்க மாடுகூட கோமியத்துக்கு ஒன்னும் கிழிக்க வேண்டாம். சீக்கிரம் வந்து இந்த பஜாரியோட கொமட்டுலயே ஒன்னு குடு டா  ” என்று வல்லி பாட்டி கோவத்தில் கத்த,

 ” ஐயோ சென்சார் கிழவி , இப்போ கூட எப்படி பேசுற நீ ” என்று அமுதன் தலையில் அடித்துக்கொள்ள,

” அட ச்ச அடேய் அமுதா , நா சண்டை போட்டு அவள பதில் பேசவிடாம கொமட்டுலயே ஒரு குத்து குத்தி வாய கிழினு சொன்னேன் டா. நீ ஏன் டா எல்லாத்துக்கும் டபுள் மீனிங்லயே யோசிக்கிற. ச்ச இதுக்கு தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கணும் , அப்படி இல்லனா இந்த மாதிரி டபுள் மீனிங்ல தான் எல்லாத்தையும் புரிஞ்சிப்ப. ஸ்யபா டேய் சீக்கிரம் வா டா இந்த பைத்தியக்கார கும்பல் கிட்டயிருந்து என்னை காப்பாத்துறா ” என்று பட படவென பேசிவிட்டு காலை கட் செய்தார் வல்லி பாட்டி. 

” அட கடவுளே இந்த கிழவிக்கு வேற வேலையே கிடையாது. சும்மா எப்ப பார்த்தாலும் யார் கிட்டயாச்சும் சண்டை பிடிச்சுகிட்டேயிருக்கும். ஹம் இன்னைக்கி யாரு கிட்ட சண்டை பிடிச்சு என்ன பஞ்சாயத்த கூட்டி வச்சிருக்கோ. சரி போய் என்ன தான் பிரச்சனைனு பாப்போம் ” என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டே வீட்டை அடைந்தான் அமுதன்.

அமுதன் வீட்டின் வாசலை அடையும்போதே ஓர் ஆளுமையான பெண் குரல் அவன் காதுகளை தீண்டி செல்ல , அக்கம்பீர குரலுக்கு சொந்தக்காரியான அப்பெண்ணை பார்க்கும் ஆவலில் படாரென்று கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் அமுதன்.

அவன் கதவை திறந்த வேகத்தில் அங்கே இருந்த அனைவரும் அவன் புறம் திரும்ப , ஆனால் அந்த கனீர் குரலுக்கு சொந்தக்காரியானவளோ  கடமையே கண்ணாக தன் கையிலிருந்த கோமியம் நிரப்பிய  அந்த கண்ணாடி குடுவைக்குள் ஏதோ ஒரு மஞ்சள் நிற திரவத்தை கலந்து கொண்டிருந்தாள்.

யார் இவள் ? 

( எல்லாரும் கெஸ் பண்ணிருப்பீங்கனு தெரியும் ….. ) 

தொடரும் ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. Sangusakkara vedi

      Second epi super sis…. Enakume amuthan mathiri jhaadi nu yaravathu sonnale kovan thn varum. … Innum evlo naal thn jhaadi yakattitu ala porangalo…. Ellarum manusa jhaadi epo thn purunjukka porangalo … Pathingala nanum pulamba arambuchuten…. Same pinch amutha….. But amutha takiunu antha paiyana thitiruka kudathu … Pavam antha paiyan…. Eeee…. Guess panniyachu heroine Thane….. Nic sis…. .next ud podum pothu enna tag pannikonga….

    2. Sangusakkara vedi

      1. கவிஞனோட மொத்த கஞ்சத்தனத்தையும் ஒரே எபில காட்டுன விதம் சூப்பர்.

      2. சில பேக்ட்ட ரொம்ப அழகா சொன்னீங்க அதுவும் சூப்பர்.

      “மேல்ஜாதி காரனுங்க எல்லாரும் கோடீஸ்வரனும் கிடையாது, அதே மாதிரி கீழ்ஜாதி காரனுங்க எல்லாரும் ஏழையும் கிடையாது. இங்க பேர், புகழ், மரியாதைனு இது எல்லாத்துக்கும் பணத்த பாப்பானுங்க, ஆனா படிப்பு, ஆகிட்டானுங்க, கேட்டா ஜாதி கோட்டானு சொல்லுவானுங்க” சூப்பர் லைன்ஸ்….

      3. அமுதன், வள்ளி பாட்டி காம்பினேஷன் சூப்பரோ சூப்பர்…

      குறைகள்ன்னு பார்த்தா…

      1. கொஞ்சம் ஸ்பெல்லிங் எரர்ஸ்

      2. யூடியே போடுறது இல்லப்பா நீங்க

      3. இன்னும் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது …

      1. colour pencils
        Author

        Konjam heavy work sis, adhunaala regular ud kuduka mudila. Inime max regular uds kudukuren.
        Thanks for your support 😍😍😍
        One more thing, idhu varaikum amudhanoda kanjan version mattum dhaan paathinga, next epi la avanoda kavinjan version konjam kudukka poren. Keep supporting sis ❤️❤️❤️

    3. Oosi Pattaasu

      ‘கஞ்சனடா கவிஞ்சா நீ’ எடுத்துக்கிட்ட சமூகக் கருத்த, ஜாலியா, அதே நேரம் அழுத்தமா சொல்ற ஸ்டோரி.
      இதோட பாசிட்டிவ்ஸ்,
      1.ஹீரோவுக்கும், பாட்டிக்கும் இடைல இருக்குற ஹியூமர், செம சிரிப்பா இருக்கு.
      2.டையலாக்ஸ் எல்லாம் வேற லெவலா இருக்கு. கேரெக்டான பாயிண்ட்ஸா இருக்கு.
      3. ஹீரோவோட கேரக்டர் எந்த அலட்டலும் இல்லாம,செம கேஷுவலா இருக்கது, செம பாசிட்டிவ்.
      அப்புறம் நெகட்டிவ்ஸ்,
      1.ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இடத்துல இருக்கு.
      2. எல்லா வாக்கியமும் ஒரே லென்த்தா போகுது. அங்கங்க கமா போட்டு பிரிச்சீங்கன்னா, படிக்க இன்னும் கொஞ்சம் ஈசியா இருக்கும்.
      3. அப்புறமும் பேரக்ராஃபும், அந்த கான்வர்சேஷனுக்கு ஏத்த மாதிரி, கொஞ்சம் பிரிச்சுப் போட்டீங்கன்னா நல்லாருக்கும்பா.
      மொத்தத்துல ஸ்டோரி ஒரு கனமான சப்ஜெக்ட்ட எடுத்துக்கிட்டாலும், ரொம்ப எளிமையா, அழகா நகருது.

      1. colour pencils
        Author

        Thankyou so much sis 😍😍😍
        Story oda main imp social content konjam hidden ah dhaan konduporen. Koodiya seekiram adha reveal pandren. Spelling errors crct panna max try pandren.
        Keep supporting sis ❤️❤️❤️