Loading

அத்தியாயம்−3

“காலேஜ் வாசலில் நின்றுக்கொண்டு, ட்ரக்ஸ் சப்ளை செய்வதைப்பார்த்துக்கொண்டிருந்த துகிலன் அவர்கள் அருகில் சென்று”, இங்கு என்னங்கடா கொண்டு வந்து விற்கிறிங்கனு மிரட்டும் தொனியில் கேட்க.

சார், இந்தப்பசங்க, சாப்பிடுவதற்கு “பீட்சா ஆர்டர் பண்ணாங்க. அதுதான் கொண்டு வந்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்”. வேற எதுவும் இல்லைங்க சார். நீங்க வேணும்னா என் பையை செக் பண்ணிக்கோங்க.தன் பையை திறந்துக்காட்டினார்கள்.

“அதில் பீட்சா டப்பாதான் இருந்தது.,ட்ரக்ஸ் இல்லை.” 

துகிலன், அவர்களை ஒருபார்வைப்பார்த்துவிட்டு, சரி! சரி! பீட்சா கொடுக்கிறதென்றால் “காலேஜ் வாசலில் கொடுக்காதிங்க. காலேஜ்க்கு உள்ளே வந்துக்கொடுங்க. இல்லை அவர்கள் வீட்டுக்கு சென்றுக்கொடுங்கனு அறிவுரைக்கூறினான்”.

அண்ணாத்த, எங்க காலேஜ்க்கே வந்துட்டு, நாங்க வாசலில் வாங்கக்கூடாது. உள்ளதான் வாங்கனும், வீட்டிற்குதான் போய் வாங்கனும்னு கட்டளைப்போடறிங்கோ. நீங்க என்ன? “சிபிஐய்யா”.இல்லை, இந்த காலேஜ் பிரின்ஸ்பலா. நாங்க இங்கதான் வாங்குவோம். இது எங்க காலேஜ். நீங்கபோய் உன் அண்ணா கேண்டினுக்கு சென்று டீ டம்ளரை கழுவி வைங்க. டீ டம்ளர் கழுவுறன் வந்துக்கட்டளையிடறான்பாருனு நொடித்துக்கொண்டிருந்தார்கள் காலேஜ் பசங்க.

துகிலன், “அவர்களை முறைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தான்”.

அமுதன், கேண்டினை பூட்டிவிட்டு, வாசலுக்கு வந்து நின்று, துகிலா நீ இங்கு இவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிற. உனக்கு இந்தப்பசங்களை முன்னாடியே தெரியுமா?.

அண்ணாத்த, “உன் தம்பிக்கிட்ட சொல்லி வை.” எங்களுக்கு அறிவுறுத்துற வேலையெல்லாம் வச்சுக்காத என்று. இல்லைனா உன் தொம்பிக்கு “சுவாசிக்க மூக்கு இல்லாமல் போய்விடும்”. எங்க காலேஜ்க்கே வந்து எங்களுக்கே அட்வைஸ் பண்றதுக்கு உன் தொம்பி சிபிஐய்யா, இல்ல போலிஸா.என திமிராகப்பேச.

துகிலன், “கீழே குணிந்தவன் தன் கைவிரல்கள் அத்தனையும் மடக்கி தன்னிடம் திமிராக பேசியவர்களை முகத்துமேலிருக்கும் மூக்கை குத்திவிட்டு” , நான் சொல்லமாட்டேன் செய்துவிட்டுதான் செல்வேன் என்று, “பஞ்ச் டயலாக்” பேசிவிட்டு, தன் அண்ணன்கூட அவர்களை திரும்பி முறைத்துவிட்டு சென்றான்.

ட்ரக்ஸ் விற்க வந்தவர்கள் அங்கிருந்து ஓடிப்போய்விட்டனர்.

மூக்குடைந்தவர்கள் நேராக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சைப்பார்த்து வீட்டுக்கு சென்றனர்.

ஏன்டா, துகிலா அந்த பசங்க மூக்கை உடைத்த. அந்தப்பசங்க பெரிய புள்ளிங்க பசங்கடா. நாளைக்கு காலேஜ்ஜில் என்னை”கேண்டின்” நடத்த விடமாட்டாங்க. உன்னையும் ஆள் வச்சு எதாவது பண்ணிட்டாங்கனா? என்னடாப்பண்றது. அமுதன்.

அமுதா, நாளை அவர்கள் செய்யும்போது செய்யட்டும் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ! வாடா நாம் வீட்டிற்குப்போகலாம்.துகிலன்.

“கொஞ்சநாள் உன் அதிரடி ஆட்டம் இல்லாமல் சந்தோஷமாக இருந்தோம்.” இனி வம்பிழுத்துட்டு வற ஆரம்பிச்சிட்டியா?. இனி என்னல்லாம் நடக்கப்போகுதோ! கடவுளே, இவனுக்குப்போய் என்னை அண்ணனாக படைத்துவிட்டியே! அய்யோ! “போன ஜென்மத்தில் நான் என்ன? பாவம் செஞ்சேனு தெரியலியேனு” புலம்பிக்கொண்டே வந்தான். அமுதன்.

டேய், போன ஜென்மத்தில் நீ எனக்கு பாவம் செஞ்சிருப்ப அதுதான் இந்த ஜென்மத்தில் அதை தீர்க்க வந்திருக்கிற. பேசாமல் வாயை மூடிட்டு வாடா. “பைக்கை முறுக்கியதில் அடுத்த பத்து நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள்.”

துமி காலேஜ் முடிச்சிட்டு வீட்டிற்கு வந்தவள். பேக்கை தூக்கிப்போட்டுட்டு பிரஷப் ஆகி வந்து சோபாவில் உட்கார்ந்துக்கொண்டு, ம்மா! “சூடா சாப்பிடுவதற்கு இருந்தா கொண்டு வாம்மா பசிக்குதும்மானு கத்திக்கொண்டிருந்தாள்”.

எடியே! வந்ததும் கத்த ஆரம்பிச்சிட்டியா? இருடி இப்போதான் “பஜ்ஜிக்கு மாவு” கரைச்சி வச்சிருக்கிறேன் எண்ணெய் காய்ந்து, சுட்டு எடுத்துட்டு வருவதற்கு கொஞ்சம் நேரமாகும். அதுவரைக்கும் நீ துடைப்பத்தை எடுத்து வீடெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்து.

துமி, இந்தம்மாவுக்கு வேலை வச்சா, பதிலுக்கு எனக்கு வேலை வைக்குது. புலம்பிக்கொண்டே துடைப்பத்தை கையில் எடுத்து பெருக்கிக்கொண்டிருந்தாள்.

முதல் வருடம் “மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிப்பதற்காக “கிறிஸ்டிலால் இன்ஜீனியரிங் காலேஜ்ஜிற்கு சென்று வீடு திரும்பிய எழிலன்”. தன் அக்கா வீடு பெருக்குவதைப்பார்த்து ஆச்சர்யப்பட்டு, அக்கா இன்னைக்கு வானம் பார்த்தா  மேகம் மூட்டமா இருக்கு. “வீட்டுக்குள்”வந்துப்பார்த்தால்தான் தெரியுது. நீ கையில் துடைப்பம் வச்சு சுத்தப்படுத்துவதற்காகதான் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டதுனு “தன் அக்காவை கிண்டல் செய்தான்”.எழிலன்.

டேய், நானே “பசி வெறியில் இருக்கிறேன்”. என்னை ஏன்டா வெறுப்பேத்துற.துமி.

உனக்கு ரம்போ பசிக்குதா?.எழிலன்.

ஆமாண்டா. துமி.

அப்புறம் இந்த “சூவை துடைத்து ரேக்கில் வைத்துவிடு”. தன் அக்காவிடம் வேலைக்கூறியவன்.அப்போதான் அம்மா சுடும் பஜ்ஜிக்கிடைக்கும் இல்லைனா நானே எல்லாத்தையும் சாப்பிட்டுவிடுவேன். எழிலன்.

தன் தம்பியை முறைத்தவாறே! அவனை துடைப்பக்கட்டையோடு துரத்திக்கொண்டிருந்தாள். துமி.

“ம்மா, நீ பெத்த ராட்சஸி கையில் துடைப்பைக்கட்டையோடு என்னை”துரத்திக்கொண்டிருக்குமா?. என்னைக்காப்பாத்துமானு சத்தமிட. எழிலன்.

சமையல் கட்டிலிருந்து தட்டில் பஜ்ஜியோடு வந்து, அவர்களை மிரட்டிக்கொண்டிருந்தாள். பூரனி.

தன் அம்மா கையிலிருந்த தட்டிலிருக்கும் பஜ்ஜியை எல்லாம் எடுத்துக்கொண்டு, வாயில் கடித்தப்படியே தன் தம்பியை பார்த்து கொக்கரித்தாள்.துமி.

ம்மா, பாரும்மா எல்லாம் பஜ்ஜியையும் எடுத்து, எப்படி? அமுக்கிறானு. “பாவம் தம்பிக்கு பசிக்குமேனு ஒரு பஜ்ஜியாவது வச்சாளா என்று. அழாதக்குறையாகக்கூறினான்”. எழிலன்.

உங்க அக்கப்போரே தாங்கமுடியல. எப்படியோ! போய் தொலைங்கனு சமையல் கட்டிற்குள் நுழைந்துக்கொண்டாள். பூரனி.

எழிலா, உனக்குப்பசிக்குதானு அன்பாகக் கேட்க. துமி.

“ஆமாம், சின்னப்பிள்ளைமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்”. எழிலன்.

நீ கண்ணை மூடினால். உன் கையில் பஜ்ஜி இருக்கும் என்று சொல்ல. துமி.

எழிலனும், தன் கண்ணைமூடினான். எழிலன் கையில் இரண்டு பஜ்ஜி இருந்தது.

கண்ணைத்திறந்துப்பார் எழில்னு சொல்ல .துமி.

தன் கண்ணைத்திறந்தவன், கையில் இரண்டு பஜ்ஜி இருந்தது “நினைத்து சந்தோஷத்துடன் சாப்பிட்டு முடித்தவன்”. தேங்க்ஸ்க்கா. எழிலன்.

நீ, என் தம்பிடா, உனக்கு பகிராமல் நான் மட்டும் எப்படிடா சாப்பிட முடியும்.”அன்போடு” துமிக்கூறினாள்.

சரிக்கா, நான் போய் பிரஷப் ஆகிட்டு வர்றேன். என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்தான். எழிலன்.

இப்படியே! இவர்கள் சின்ன சின்ன குறும்புகள், சென்றுக்கொண்டிருந்தது இரவு வரைக்கும். 

துமி, தன் போனையேப்பார்த்துக்கொண்டிருந்தாள். “அகிலனிடமிருந்து, மெசேஜ், போன் வருமென்று. இப்படியே! நள்ளிரவு இரண்டு மணி வரைக்கும் போனை வெறிக்க வெறிக்கப்பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றமே மிச்சமானது”. அகிலனிடமிருந்து எதுவும் வராததால் ஏமாற்றமும், கோபமும் துமிக்கு அழுகையைக்கொடுத்தது. “சத்தமில்லாமல், கண்ணிரை கரைத்துவிட்டப்படியே”! தூங்கிப்போனாள்.

துகிலன் குடும்போத்தோடு பேசிக்கொண்டிருந்தான்.

என்ன? துகிலா.  காலேஜ் பசங்களை மூக்குடைத்துவிட்டியாம். நியூஸ் வந்தது.இசை.

அண்ணி, அதுக்குள்ள “உங்க ரிப்போர்ட்டர் உங்களிடம் சொல்லியாச்சே”. துகிலன்.

ஆம்னு தலையசைத்தாள். இசை.

ஏண்டா, உன் அண்ணன் கேண்டினுக்கு ஹெல்ப் பண்ண போக சொன்னால். நீ தேவையில்லாத வம்பை இழுத்துக்கொண்டு வருகிற.தாமரைசெல்வி.

ம்மா!, அந்தப்பசங்கதான் என்னிடம் வீணா வம்புக்கு வந்தாங்க. அதுதான் “மூக்கில் லைட்டா குத்தினேன்”. இதப்போய் ஆளாலுக்கு தப்புனு என்னைப்போய் திட்டறிங்க. போங்க எல்லாரும் ஒரு கட்சி நான் மட்டும் தனியாளாக இருக்கிறேன் செல்லமாக கோபித்தான்.

நான், இருக்கேன் துகிலா உனக்கு. “புன்சிரிப்புடன்” கூறினார் மகேந்திரன்.

சிடுமூஞ்சி இன்னைக்கு, புன்சிரிப்பை உதிர்க்கிறதே! இதுக்கு என்ன? அர்த்தம்னு தெரிந்துக்கொள்ளலாமா. துகிலன்.

எல்லாம் காரணமாகதான் மைசன். மகேந்திரன்.

அதுதான் என்னக்காரணம்னு சொல்லுங்கப்பா. துகிலன்.

இந்தப்போட்டாவைப்பாரு. இதில் எந்தப்போட்டோப்புடித்திருக்கிறதுனு சொல்லு. உடனே! அந்தபோட்டோவிலிருக்கும் பெண் வீட்டிற்குப்போகலாம். மகேந்திரன்.

ஆரம்பிச்சிட்டிங்களா?உங்க “கல்யாண பிஸ்னஸை”. இப்படி! நூறு போட்டாக்காட்டி அதில் ஒரு போட்டாவை செலக்ட் செய்கிற வேலை வேண்டாம். என் காதல் தேவதையை இப்பதான் என் கண்ணிலே அந்தக்கடவுள் காட்டியிருக்கிறார். அந்த தேவதையிடம் நான் பேசி பழகியதுக்கப்புறம்தான் கல்யாணம் எல்லாம். இனி இந்தப்போட்டோவிற்கு இங்கு இடமில்லைனு தூக்கி எறிந்துவிட்டுப்போனான் தன் ரூமிற்கு சென்றவன் தன் படுக்கையில் விழுந்து தூங்கிக்கொண்டிருந்தான். துகிலன்.

“தூக்கத்தில் வரும் கனவில்கூட துமிதான் வந்து நின்றாள்”. 

என் நித்திரையில் 

வரும் கனவில்கூட

நின் முகம்தானடி

வந்துப்போகிறது

பெண்ணே

நின் பெயரைதான் கூறிவிடடி.

நித்தமும் சொல்லிக்கொண்டே

இருப்பேன் நின் பெயரை

நித்திரையில் வரும் கனவைப்போல

கலைந்து செல்லாதே

காலம் முழுவதும்

உன்னுள் தொலைந்திட வேண்டும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அருமையான சமூகம் சார்ந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.