உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம்-13

Loading

அத்தியாயம் -13

முதலில் மசாலா தோசை அடுத்து தந்தூரி சிக்கன், ரொட்டி என்று அவனே வேண்டிய உணவைச் சொன்னான்.எல்லாம் வந்ததும் இவ்வளவு நேரம் சென்றதால் நன்றாக பசியாக இருக்கவே  பலகதைகள் பேசி இருவரும் ஒருவொருக்கொருவர் உணவை பரிமாறிய படி சாப்பிட்டனர்.

நேரம் போனதே தெரியவில்லை.இரவு பதினொரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

சாப்பிட்டு  வெளியே வந்ததும் ஆட்டோ ஒன்றை பிடித்தவன் “ஆதி உங்களை நான் டிராப் பண்ணிட்டே போறேன்” என்று அவள் இருக்கும் விடுதியின் விலாசத்தைக் கேட்டான்.

இவனும் அவளுமாக ஒன்றாக பயணம்.இதற்கு முன்னால் காரில் பயணம் செய்த போது இருவருக்குமான இடைவெளி அதிகமாக இருந்தது.ஆனால் இப்போது ஒருவரையொருவர் உரசிக் கொண்டு வருவதற்கான நெருக்கமாக இருந்தது.

ஆதிரை தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள்.அது பதினொன்றை தாண்டி இருந்தது.அதைப் பார்த்த அதிர்ச்சியில் “ஐய்யய்யோ” என்று பதறினாள்.தர்ஷன் “என்னாச்சு?” என்று கேட்டான்.

“தர்ஷன் இவ்வளவு லேட்டாகலாம் நான் வெளியே போனதே இல்லை இது தான் முதல் தடவை அதான்” என்று அதிர்ச்சியோடு சொன்னாள்.

அவனோ “பரவாயில்லை பழகிக்கலாம் விடுங்க ஆதி எப்பவும் இப்படின்னா தப்பு எப்போதாவது தானே ஒன்னுமில்லை” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

விடுதியின் வாசலில் இறக்கி விட்டவன் “ஆதி நாளைக்கு நான் டெல்லிக்கு போறேன் இனி எப்போ நம்ம சந்திப்புன்னு தெரியலை பார்க்கலாம்” என்றான்.

அவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி அப்படியே வடிந்தது போல் இருந்தது.அவள் விழிகளில் அது தெரிந்தது.அவனும் அதை கண்டுக் கொண்டான் தான்.

ஆதிரை “என்ன திடீர்னு?”

அவனோ சிரித்துக் கொண்டே “அடுத்து அங்கே போறதாகத் தான் ப்ளான்”

“ஓ அப்படியா!” என்றவளுக்கு ‘திரும்ப எப்போது சந்திக்கலாம்’ என்று கேட்க ஏதோ ஒன்று அவளை தடுத்தது.அதனால் “திரும்ப எப்.எம்க்கு எப்போ வருவீங்க?அப்பவே கேட்கனும்னு இருந்தேன்” என்று சமாளித்தாள்.

அவனோ சிரித்துக் கொண்டே “தெரியலை கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கு போகனும்” என்றான்.

அந்த பதில் அவளுக்கு திருப்திகரமானதாக இல்லை.எப்போது? என்று அவனுக்கே தெரியாத போது இவள் எப்படி? அவனிடம் இன்னும் சில கேள்விகளை கேட்பது என்ற  பல யோசனையில் நின்றாள்.இரண்டு பக்கமும் ஒரே அமைதி நிலவியது.

அவன் கையில் வைத்திருந்த பொம்மையை அவளிடம் கொடுத்து விட்டு “வியன்காகிட்டே நான் வாங்கித் தந்தேன்னு சொல்லனும் சரியா?அவளை எனக்கு அறிமுகம் படுத்துவீங்க தானே?” என்று கேட்கவும் சட்டென்று அவளையும் மீறி “திரும்ப சந்திக்கலாம்னா உங்க நம்பர் என்கிட்ட இல்லையே!” என்றவள் கேட்டதும் உதடுகளை கடித்துக் கொண்டாள்.

அவனோ இப்போது மனம் முழுவதும் மகிழ்ச்சியில் புன்னகைத்துக் கொண்டே “என்கிட்ட உங்க நம்பர் இருக்கு ஆதி நானே கால் பண்றேன்” என்றவன் கையை தூக்கி பாய் என்று சைகை செய்தவன் “நீங்க உள்ளே போங்க ஸ்லிப்பிங் பியூட்டி  ஸ்வீட் டீரீம்ஸ்” என்று ஆட்டோவில் ஏறி அமரவும் அவளும் கையைத் தூக்கி பதிலுக்கு பாய் என்று சொல்லி திரும்பினாள்.

ஆதிரைக்கு பின்னால் அவளுடன் வந்திருந்த பெண் ஆதிரையின் பேச்சு  சத்தம் கேட்கவும் அப்படியே நின்றவள் இவளைப் பார்த்தாள்.

அந்தப் பெண் “இப்போத் தான் வர்றீங்களா?”

ஆதிரை “ஆமாம் எதாவது வாங்கலாம்னு கடைக்கு போனேன் அங்கே ஏதேச்சையாக என் ப்ரெண்டை சந்திச்சேன் என்னை டிராப் பண்ணிட்டு போறாங்க.நீங்களும் இப்போத் தான் வர்றீங்களா?”

“ஆமாம் மேம்” என்று பேசியபடியே வரவும் இருவருடைய அறையும் வந்தது.அவரவர் இடத்திற்கு சென்றனர்.

அந்தப் பெண் இப்படி கேட்கவும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.

“ஸ்லிப்பிங் பியூட்டி” அவன் கிண்டலாகச் சொன்னதை வேறு நினைத்துக் கொண்டாள்.அதோடு அவள் எண்ணை வைத்திருந்தும் மரியாதைக்காக அவளிடம் அனுமதி வாங்கியப் பின் அவன் பேசுகிறேன் என்றதும் தானே முதலில் பேசுகிறேன் என்று அவன் சொன்னது எல்லாம் ருத்ரனைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் அவள் மனதில் நிறைந்திருந்தது.

அதனால் மற்ற தேவையற்ற எண்ணங்கள் எல்லாம் எங்கோ போய் ஒளிந்துக் கொண்டன.அவன் வாங்கி கொடுத்த ஒரு பொம்மையை எடுத்துப் பார்த்தவள் அப்படியே அன்று நடந்த எல்லாவற்றையும் யோசித்து நினைத்தபடியே தூங்கியும் போனாள்.

மறுநாள் காலை எழுந்து தயாராகி சாப்பிட்டு விட்டு நிறுவனத்திற்கு சென்றாள்.பழைய கணக்குகளை ஒருமுறை சரிபார்க்கும் போது தான் அதில் சில விவரங்களின் பெயர்கள் முதலில் அனுப்பியதுக்கும் இப்போது அனுப்பிய பெயர்களின் மாறி இருப்பதோடு அதில் பணவரவு கூட்டியும் குறைத்தும் அனுப்பி இருப்பது தெரிய வந்தது.

இதைப் பற்றி முதலில் எல்லாவற்றின் தவறுகளை எடுத்து தனியாக எடுத்து அதைப் பற்றி தன் மேலாளருக்கு அனுப்பினாள்.

பின்பு கைப்பேசியில் அழைத்தவள் “சார் அவங்க கம்பெனில தான் யாரோ வேணும்னே இந்த மாதிரி செய்த மாதிரி இருக்கு அவங்க லாபம் அடைவதற்குத் தான் இது நடந்து இருக்கு முதல்ல அவங்க ஹெட் கம்பெனில இருந்து சரியாகவும் பின்பு இவங்க அதை சரி செய்றேன்னு மாற்றி இருக்காங்க” என்று விவரமாகச் சொன்னாள்.

அதைப் பார்த்தவர் “ஆதிரை உங்க வேலையை நீங்க முடிச்சிட்டீங்க ஆனால் வெயிட் பண்ணுங்க நானே அவர்களிடம் நேராக பேசுகிறேன்” என்றார்.

ஆதிரை கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது அரவிந்த் அவளை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.இவளால் என்ன செய்து விட முடியும் என்ற ஒரு அசட்டு தைரியத்தில் இருந்தான்.

ஆனால் ஆதிரையின் மேலாளர் அரவிந்த் உடைய தலைமை அலுவலரிடம் பேசினார்.அவரோ அவர்கள் யாரென்று கண்டுபிடிப்பதாகவும் அவரே நேரில் பேசுவதாகவும் சொன்னார்.

இதனால் அரவிந்த்திற்கு பெரிய தலைவலியாகிப் போனது.நிறுவனத்தில் உள்ள அனைவரையும் அழைத்து பேசி கண்காணிப்பு கேமரா மூலமாகவும் யாரெல்லாம் இந்த கோப்புகளை சரி பார்த்ததார்களோ அவர்களை எல்லாம் அழைத்துப் பேசி கடைசியில் அந்த நிறுவனத்தில் கணக்குவழக்குகளை பார்ப்பவரும் இன்னொருவரும் சேர்ந்து பணத்தை எடுப்பதற்காக போட்ட திட்டம் என்று தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவின் உதவியால் கொஞ்சம்

விரைவாக கண்டுபிடிக்க முடிந்தது.இதை எல்லாம் அவன் செய்து முடிக்கும் போது பிற்பகலை தாண்டியது.

ஆதிரை தனக்கான அறையில் சரியான கோப்புகளை இணையத்தில் சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.யாராக இருக்கும்  என்ற யோசனையில் அழைப்பை எடுத்தாள்.

மறுமுனையில் “ஹலோ ஆதி” என்று அந்தக் குரலை கேட்டதும் அவள் முகத்தில் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் ஒரு சேர குரலிலும் அது அப்பட்டமாக தெரிந்தது.

“சொல்லுங்க ருத்ரா” என்றதும் சிரிப்பு சத்தம் கேட்டது.தொடர்ந்து “பரவாயில்லையே யாருன்னு பெயர் சொல்லாமலேயே கண்டுபிடிச்சிட்டீங்க”

அவளோ “புதுசா கேட்கிற குரலாக இருந்தால் தானே யார்னு தெரியாது இது நான் தினமும் கேட்டு இரசிக்கிற குரல் ஆச்சே எப்படி மறக்க முடியும்?” என்றாள்.

அவனோ இம்முறை ஆழமான யோசனையோடு அவன் பேசும் பாங்கு மாறி  “ ஆதி

உண்மையாகவா சொல்லுறீங்க?” என்றான்.

அவளோ அவன் அப்படிக் கேட்டதும் தான் சொன்னதை நினைத்து தன்னைத் தானே நொந்துக் கொண்டவள் “ம்ம்… டெல்லிக்கு கிளம்பியாச்சா?” என்று பேச்சை மாற்றி பேசினாள்.

அவனோ “ம்ம்… கிளம்பிட்டேன் பாய் சொல்லலாம்னு தான் போன் போட்டேன் உங்க வேலை முடிச்சிருச்சா?”

 

ஆதிரை ஆர்வமாக “ஆமாம் என்ன தப்புன்னு கண்டுபிடிச்சிட்டேன் முடிந்த வரை இன்னைக்கே கிளம்பிடுவேன் நீங்க சென்னைக்கு வரும் போது கண்டிப்பா என்னோட வீட்டுக்கு வரனும் ருத்ரா” என்றாள்.

 

அவனோ “நிச்சயமா வரேன் தர்ஷனை மறந்துட்டீங்களா ருத்ரன் தான் நினைவா இருக்கா?”

 

அவளோ சிரித்துக் கொண்டே “உங்களைப் பார்க்கும் போது தர்ஷனும் குரலைக் கேட்கும் போது ருத்ராகிட்டே பேசுற மாதிரி இருக்கும்” என்றாள்.

 

இவள் இங்கே சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை அங்கிருந்து அரவிந்த் பார்த்துக் கொண்டிருந்தான்.’என்னை இப்படி டென்ஷன் சுத்த விட்டுட்டு எவனை மடக்குறதுக்கு இப்படி பேசுறாளோ?’ என்று நினைத்தபடியே முறைத்துக் கொண்டான்.

அதற்கு சிரிப்பை பதிலாக தந்தவனின் மனதிலோ ‘’நான் நினைச்சு வாழுற மாதிரியே இன்னொருத்தவங்களால நினைக்க முடியுமா? அப்போ என்னையும் முழுசா புரிந்துக் கொள்வாதே ஆதி’ என்று நினைத்தவன் “சரி டைம் ஆகுது நான் கிளம்புறேன் அங்கே போனதும் கால் பண்ணுறேன்” என்று கைப்பேசியை துண்டித்தான்.

 

அவனிடம் பேசியதும் ஆதிரையின் முகமே ஏனோ புன்னகையில் நிரம்பி இருந்தது.அடுத்து ஒரு குறுஞ்செய்தி ஒன்று அவனிடம் இருந்து வந்தது.அதை திறந்துப் பார்க்க விமான நிலையத்தில் நிற்பது போல் புகைப்படம் ஒன்றை அனுப்பி இருந்தான்.

 

பக்கத்தில் “நான் பார்க்க எப்படி இருக்கேன்?” என்று கேட்டதற்கு “சுமார் ரகம் தான்” என்று கிண்டலாக பதிலளித்தாள்.அதைப் பார்த்தவன் சோக இமோஜியை அனுப்பினான்.

 

ஆதிரை தன்னை புகைப்படம் எடுத்து அனுப்பமால் அவள் உட்கார்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் இருந்த மேசையின் மேல் கைவைத்து இருப்பது போல் புகைப்படத்தை எடுத்து அனுப்பினாள்.அதைப் பார்த்தவன் “ம்ஹும்” என்று பதில் அனுப்பியவன் அடுத்து ஒரு புகைப்படத்தை அனுப்பினான்.

 

அதை அவள் பார்ப்பதற்குள் அவளுடன் வந்தப் பெண் “மேம் மீட்டிங்கு வரச் சொன்னாங்க” என்றதும் கைப்பேசியை அணைத்து  விட்டு எழுந்துச் சென்றாள்.

 

அங்கே அரவிந்த் இவளைப் பார்த்ததும் கோபமான முகத்தோடு “வாங்க மிஸ் ஆதிரை உட்காருங்க” என்று முன்னால் கையை காட்டினான்.

 

அவள் அமர்ந்ததும் “சாரி மிஸ் ஆதிரை இது எங்க கம்பெனில நடந்த மிஸ்டேக் தான் உங்களை இத்தனை நாளா வெயிட் பண்ண வைச்சிட்டோம் மற்ற விஷயங்களை உங்க ஹெட் ஆபிஸர்கிட்ட எங்க ஹெட் டிபார்ட்மென்ட் பேசிப் பார்ப்பாங்க ப்ராளம் முடிஞ்சிடுச்சு நீங்க கிளம்பலாம்” என்றான் பவ்யமாக…

 

அவன் இப்படி பேசிப் பார்ப்பது இதுவே முதல்முறை.கொஞ்சம்  நிமிர்ந்து உட்கார்ந்தவள் முகத்தில் மெல்லிய புன்னகையை தவழ விட்டப்படி “இட்ஸ் ஓகே சார் அடுத்த தடவை இந்த மாதிரி தப்பு நடக்காத மாதிரி பார்த்துக்கோங்க எங்க ஹெட் ஆபிஸில் இருந்து மெஸேஜ் வந்ததும் நாங்க எங்க ப்ராஸஸ் முடிச்சிட்டு கிளம்புகிறோம்” என்றாள்.

 

அவனோ “ஓகே மேம்” என்றான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆதிரையின் மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது அதில் சில முக்கியமான விவரங்களைப் கோப்பில் சேர்த்து அதை அரவிந்த்திடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றாள்.

 

ஆதிரையின்  பக்கம் தான் தவறு இருக்கும் அதனால் அவள் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பாள் என்று நினைத்தவனுக்கு எல்லாம் தலைகீழாக மாறிப் போனதில் கோபத்தில் இருந்தான்.

இத்தனை வருடங்களாக முடங்கிப் போய் ஏதோ ஒரு ஓரத்தில் இருப்பாள் என்று நினைத்தவனுக்கு இன்று அவள் முன்னால் தான் இறங்கிப் போனதால் அவளை எப்படியாவது தன்னிடம் கெஞ்ச வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான் அரவிந்த்.

 

இவை எல்லாம் தெரியாமல் இனிமேல் இவனை சந்திக்க வேண்டியது இல்லை என்ற எண்ணத்திலும் வந்த வேலை நல்லபடியாக முடிந்த மகிழ்ச்சியில் அறையை காலி செய்து விட்டு சென்னைக்கு கிளம்ப தயாரானாள் ஆதிரை.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்