Loading

            சந்துரு அன்று பதினொரு மணியளவில் வர மகி, “மே ஐ கமின் சார்.” என அனுமதி கேட்டு உள்ளே சென்றாள். மகியை கண்டதும், “சொல்லுங்க. என்ன வேணும்?” எனக் கேட்டான் சந்துரு.

மகி, “சார். நான் மகிழ்.” என்க, “ஓகே. அதை சொல்லதான் வந்தீங்களா?” என்றான் சந்துரு நக்கலாக. “இல்ல சார். நேத்து லீவ் போட்டுருந்தேன். அதான் நீங்க பார்க்க சொன்னதா ராகினி சொன்னாங்க. அதான்.” என ஒருவழியாக கூறினாள் மகி.

“ஓ. அவங்களா. ஒன் மன்த் லீவ் எடுக்க கூடாதுனு உங்களுக்கு யாரும் சொல்லலயா?” என சந்துரு கேட்க, “சொன்னாங்க சார். ஆனா பர்மிஷன் தேவைப்பட்டது. அதான் நான் மேம்கிட்ட கேட்டேன். அவங்க ரீசன் கேட்டுட்டு லீவ் போட சொல்லிட்டாங்க. அதான். சாரி சார்.” என்றாள் மகி.

“ஓ. அப்படி என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?” என சந்துரு கேட்கவும், “அதை ஏன் சார் கேட்கறீங்க. ஒரு லூசு என்னை பொண்ணு பார்க்க வந்தான் அதான். கடைசில லீவ் போட்டுருக்கவே வேண்டியதில்லை. மேடம்கிட்டயும் திட்டு வாங்கியிருக்க வேண்டியதில்லை.” என்றாள் மகி அலுப்பாக.

சந்துரு, ‘என்ன. உன்னை திட்டுனாங்களா? என் ஸ்டாஃபை அவங்க எப்படி திட்டலாம்.’ என மனதுக்குள் நினைத்தவன், “சரி. உங்காருங்க.” என்றவன், “இவ்ளோ சலிச்சுக்கற அளவுக்கு அப்படி என்ன நடந்தது.” என்றான்.

“நீங்களே சொல்லுங்க சார். ஒரு பொண்ணு பார்க்க எத்தனை மணிக்கு போவாங்க?” என அவனை கேட்டாள். “எனக்கு அது மாதிரி எதுவும் எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே. பொதுவா ஒரு நாலு மணிக்கு வருவாங்க கரெக்டா.” என்றான் சந்துரு.

“கரெக்ட் சார். நாலு மணி கூட வேண்டாம் ஒரு அஞ்சு மணிக்காவது வர வேணாம். ஆடி அசைஞ்சு ஏழு மணிக்கு வராங்க.  முன்னாடியே சொல்லியிருந்தா பர்மிஷனே போடாம வேலை முடிஞ்சு போயிருக்கலாம். சரி அது கூட பரவால்ல. அவன் என்ன பண்றானு கூட எங்க அப்பாம்மாக்கு சொல்லல.வந்து நல்லா பஜ்ஜி, சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு, நான் அமெரிக்காவுல இருக்கேன்.

பத்து நாள் தான் லீவ். இப்ப கூட ஒரு கான்பரன்ஸ் அட்டண்ட் பண்ணதால தான் லேட் ஆகிடுச்சு. உங்களுக்கு ஓகேன்னா, நெக்ஸ்ட் வீக் மேரேஜ் பண்ணிட்டு மகியையும் கூட்டிட்டு கிளம்பிடுவேன். விசா உடனே ரெடி பண்ணிக்கலாம்.  பாஸ்போர்ட் இருக்குதானேனு கேட்டான் சார்.” என்றவள் மூச்சு வாங்க அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான் சந்துரு.

குடித்தவள் மீண்டும், “எனக்கு அப்படியே டென்ஷன் ஆயிடுச்சு. இவன் என்ன கல்யாணம் பண்ண வந்தானா? இல்ல கத்தரிக்காய் வாங்க வந்தானா? இன்னும் நாம பிடிச்சிருக்குனு கூட சொல்லல. லூசா இவன்னு நினைச்சிட்டு அமைதியா இருந்துட்டேன்.” என்றதில் சந்துரு சிரித்தே விட்டான்.

“ஏன் பிடிக்கல. அமெரிக்கா மாப்பிள்ளை நல்ல சாய்ஸ் தானே. சரி. நினைச்சதை சொல்லியிருக்க வேண்டியது தானே. இப்ப மேரேஜ் பிக்ஸ் பண்ணீட்டாங்களா? அதான் இவ்ளோ கோபமா?” என சிரிப்பினூடே கேட்டான் சந்துரு.

“அட நீங்க வேற சார். உங்களுக்கு எங்க அப்பாவை பத்தி தெரியல. அவரு ஆண்டிப்பட்டில இருந்து யாராவது வந்து கேட்டாலே வேணாம்னு சொல்லிடுவாரு. இதுல அமெரிக்கா மாப்பிள்ளைனா எப்படி ஒத்துப்பாரு. அதுனால தான் நான் சைலண்டா இருந்தேன். அப்பாவே இஷ்டம் இல்லனு அனுப்பிட்டாரு.” என்றாள் மகி.

“ஆமாமா. உங்க அப்பாக்கும் கஷ்டம்ல. பக்கத்துல கல்யாணம் பண்ணி குடுத்தா அப்பப்ப பஞ்சாயத்துக்கு போக ஈசியா இருக்கும். அமெரிக்காவுல கட்டிக் குடுத்துட்டு ஒவ்வொரு முறையும் ஃப்ளைட் டிக்கெட் போட்டு வரனும்னா பாவம்ல.” என்றான் சீரியசாக.

“யூ. யூ. யூ. உங்களை. அப்படில்லாம் இல்ல எங்கப்பாக்கு என் மேல அவ்ளோ பாசம். உங்களுக்கு என்ன தெரியும். சரி எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்.” என தலையை சிலுப்பிக் கொண்டு வெளியே வந்தாள் மகி.

உள்ளே சந்துரு அவளை நினைத்து சிரித்துக் கொள்ள அவனுக்கே தெரியவில்லை முதல்முறை எப்படி இவ்வளவு இலகுவாக பேச முடிகிறது என. ஆனாலும் அவளது செய்கையில் சிறு சுவாரஸ்யம் வந்தது மட்டும் உண்மை.

வெளியே வந்த மகியை பிடித்துக் கொண்ட ராகினி, “என்னடி. ரொம்ப திட்டிட்டாறா. அவர் எப்பவுமே இப்படிதான். சரியான சிடுமூஞ்சி.” என்க, அவளிடம் தலையாட்டி விட்டு தனது இடத்திற்கு வந்தவளுக்கு அப்போதுதான் உறைத்தது அவன் அவளை திட்டவே இல்லை என்பது.

ஏதோ யோசித்தவள், எண்ணத்தை திசைமாற்றி வேலையில் பதித்தாள். ஒரே டீமாக இருந்தாலும் ஆகாஷூம், மகியும் வேறு வேறு வேலை செய்வதால் அவர்கள் மதிய உணவு இடைவேளையின் போதுதான் சந்தித்து கொள்வது.

அன்றும் அதுபோல இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்க, இன்று மகியின் வீட்டில் பிரியாணி என்பதால் ஆகாஷூக்கும் கொண்டு வந்திருந்தாள். “என்ன இருந்தாலும் உன் வாய்க்கு ஆன்ட்டி இவ்ளோ ருசியா சமைக்க கூடாது.”  என ரசித்து உண்டு கொண்டிருந்தான் ஆகாஷ்.

மகி, “மெதுவா சாப்பிடு. புரை ஏற போகுது.” என்க, தலையாட்டிய ஆகாஷ், “ஆமா. ஏதோ காலைல சந்துரு சாரை பார்க்க போகனும்னு சொன்ன. என்னாச்சு?” எனக் கேட்டான்.

“ம்ம். நானே சொல்லனும்னு நினைச்சேன். ராகினி ஏதோ திட்ட போறாங்கன்னு சொன்னா. ஆனா அவர் அப்படில்லாம் எதுவும் திட்டல. நார்மலா தான் பேசுனாரு. அதான் ஏன்னு புரியல.” என்றாள் மகி.

“சரி விடு மகி. அவர் நேத்து ஏதோ டென்ஷன்ல இருந்துருப்பாரு.” என ஆகாஷ் கூற அவளும் அமைதியானாள். சற்று நேரத்தில் அங்கு சந்துரு வந்து அவர்களுடன் அமர்ந்தான்.

பொதுவாக கேண்டினின் உணவுத்தரத்தை சோதிப்பதற்காக அவ்வபோது அங்கு திடீரென வந்து ஊழியர்களுடன் இணைந்து உண்பது வழக்கம். இது சித்தார்த்தின் யோசனை தான். அவன் இல்லாமல் இருந்தாலும் சந்துருவும் இதை பின்பற்றி கொண்டிருந்தான்.

இது தெரியாத மகி, சந்துரு வந்து அமர்ந்ததும் சுற்றிலும் பார்க்க, ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் யாரும் இவர்களை கண்டு கொண்டதாக தெரியவில்லை. சந்துரு அவர்களின் உணவை கண்டு, “ஓ நீங்க ரெண்டு பேரும் கேண்டீன்ல சாப்பிடறது இல்லையா?” எனக் கேட்டான்.

“இல்ல சார். நான் எப்பவும் கேண்டீன்ல தான் சாப்பிடுவேன். மகிக்கு அவங்க அம்மா குடுத்து அனுப்பிடுவாங்க. இன்னைக்கு பிரியாணி செஞ்சதால எனக்கும் குடுத்து விட்டாங்க.” என்றான் ஆகாஷ்.

“ஓ. ஓகே. ஓகே. நீங்க ரெண்டு பேரும் பேமிலி ஃப்ரண்ட்ஸா?” என சந்துரு கேட்க, “இல்ல சார் இங்க வந்து தான் ஃப்ரண்ட்ஸ் ஆனோம். நீங்க ஏன் இங்க வந்து சாப்பிடுறீங்க?” என ஆகாஷ் கேட்க, “அது எல்லாரும் நல்லா சாப்பிட்டாதானே நல்லா வேலை செய்ய முடியும். அதான் சாப்பாடு நல்லா இருக்கானு செக் பண்ண வந்துருப்பாரு.” என்றாள் மகி நக்கலாக.

அவளது புத்திக்கூர்மையை வியந்தவன், “ஆமாமா. அதே போல நான் நல்லா சாப்பிட்டாதான் உங்க எல்லாருக்கும் சம்பளம் குடுக்க முடியும். அந்த பிரியாணியை கொஞ்சம் இந்த பக்கம் தள்ளறது.” என்றான் சந்துரு.

“சார் இந்தாங்க. இதை எடுத்துக்கோங்க. அங்க கேட்டிங்கன்னா சண்டைதான் வரும்” என ஆகாஷ் தன்னுடையதை கொடுக்க அவனை முறைத்த மகி அப்போதும் சாப்பிட்டுதான் கொண்டிருந்தாள்.

“வாவ். சூப்பரா இருக்கு பிரியாணி. உங்க அம்மா டேஸ்ட்டா சமைப்பாங்க போலவே. பேசாம எனக்கும் டெய்லி நீங்களே கொண்டு வரீங்களா?” எனக் கேட்டான் சந்துரு மகியிடம். “ஓ அப்ப உங்க கேண்டீன் சாப்பாடு நல்லா இல்லன்னு நீங்களே ஒத்துக்கறீங்க. அப்படிதானே?” என்றாள் மகி பதிலுக்கு.

“அப்படி இல்ல மகி. நான் டெய்லியும் கேண்டீன் வந்து சாப்பிட முடியாது. பல நேரம் வெளில தான் சாப்பிடுவேன். என்ன இருந்தாலும் வீட்டு சாப்பாடு வேற தான். வெளி சாப்பாடு வேறதானே. எங்க அம்மாவும் நல்லா சமைப்பாங்க. ஆனா.” என சந்துரு ஏதோ கூற வர, “அப்பன்னா. உங்க அம்மாகிட்ட பாக்ஸ் கட்டி தர சொல்லி வாங்கிட்டு வந்து சாப்பிடுங்க.” என்ற மகி கிளம்பி விட்டாள்.

சந்துருவும் கூடவே எழுந்தவன், “ஆனா. என் அம்மா. இப்ப என் கூட இல்லனு சொல்ல வந்தேன்.” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறி சென்றுவிட, அவள்தான் உறைந்து நின்றுவிட்டாள்.

பெங்களூருவில், சித்தார்த்தை தேடி அவனது கேபினுக்கு வந்த கவின், அவன் ஏதோ யோனையில் இருக்க, “மச்சி கேள்விப்பட்டீயா? பெரிய பிராப்ளம் ஆகிடுச்சு. அதை பத்திதான் யோசிச்சுட்டு இருக்கியா?” என்றான். “இல்லடா நான் இப்பதான் வந்தேன். மகிழை பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன். ஏன். என்னாச்சு?” எனக் கேட்டான் சித்து.

“அடப்பாவி. இங்க எவ்ளோ பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு. நீ ஜாலியா உட்கார்ந்து.” என கவின் ஆரம்பிக்க, “என்னனு சொல்லிட்டு அப்பறமா பேசு.” என்றான் சித்து.

“மச்சி. நம்ம கோட்லாம் எப்படியோ லீக் ஆகியிருக்கு. அதை வைச்சு ஒரு பிராஜக்ட் பண்ணி மார்க்கெட்ல லான்ச் பண்ணியிருக்காங்க. இப்ப என்ன பண்றதுனு புரியாம இருக்காங்க. நாளைக்கு பாஸ் வராராம்.” என தகவல் குடுத்தோடு அந்த பிராஜக்ட் பற்றிய தகவல்களையும் கொடுத்தான்.

அது இவர்கள் டீம் செய்ததில்லை. மற்றொரு டீமில் இருந்து சுகிதா என்ற பெண் டீம் லீடராக இருக்கும் பிராஜக்ட். அவளுக்கும் ஆனால் அது எப்படி லீக் ஆனது என தெரியவில்லை. ‘மொத்த கோடிங்கும் எப்போதும் அலுவலக சர்வரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அது குறித்து சில முக்கிய தகவல்கள் மட்டுமே டீம் லீடரின் மடிக்கணினியில் இருக்கும். இதை பற்றி தகவல்கள் தெரியாத யாரும் இதை செய்திருக்க வாய்ப்பில்லை.. நாளை பாஸ் வந்தால்தான் என்ன நடக்கும் என தெரியும்’ என்று யோசித்துக் கொண்டிருந்தான் சித்து.

மொத்த அலுவலகமும் இதைப்பற்றிய பேச்சு தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் சித்தார்த் மட்டும் அமர்ந்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது ஸ்ரேயா அவனிடம் வந்தாள்.

“சித்து உனக்கு ஒன்னு தெரியுமா? சுகிதாவோட பாய்ப்ரண்ட் அந்த கம்பெனில தான் வேலை பார்க்கிறானாமா. ஒரு வேளை அவன் எதுவும் பண்ணியிருப்பானான்னு சுகிதாவோட ஃப்ரண்ட் கேட்டுட்டு இருந்தா ரெஸ்ட் ரூம்ல.” என புதிதாக ஒரு தகவல் குடுக்க சித்துவின் மூளை வேகமாக வேலை செய்தது.

எல்லாரும் அடுத்தநாள் என்ன நடக்க போகிறது என்ற கவலையிலே வீடு திரும்ப மறுநாளோ யாரும் எதிர்பாரா வண்ணம் மற்றுமொரு பேரதிர்ச்சி அனைவருக்கும் காத்திருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்