Loading

 

 

ஈர்ப்பு 28

 

சமையலறையில் நடந்தவற்றை யோசித்துக் கொண்டே கனவில் மிதந்தவாறு வந்ததில் எதிரில் இருந்த மேசையில் இடித்துக் கொண்டேன்.

 

“ஆஹ்…” என்று லேசாக கத்தியவாறு அடிப்பட்ட இடத்தை தேய்த்துவிட்டேன். அங்கு சுவற்றிலோ முன்பு பார்த்த அவனின் சிறு வயது புகைப்படங்கள் இருந்தன. 

 

அவற்றை கண்டதும் அன்று போல் இன்றும் கொஞ்ச வேண்டும் என்று ஆசை எழ சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு அவனை கொஞ்ச துவங்கினேன்.

 

“நான் பப்ளியா? ஹ்ம்ம், பேரு நல்லா தான் இருக்கு. ஆனா, அதுக்கு முன்னாடி பண்ணது தான் டூ பேட்! மிஸ்டர். பெர்ஃபெக்ட் பண்ற வேலையா இதெல்லாம்? அதென்ன சும்மா சும்மா கிட்ட வந்து பயம் காட்ட வேண்டியது? கடைசில ‘ஒன்னுமே’ பண்ணாம எனக்கு பல்பு கொடுக்க வேண்டியது! எப்போ பார்த்தாலும் என்னை ‘ஷாக்’காகி நிக்க வைக்குறதே வேலையா போச்சு!” என்று நான் அங்கிருந்த ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்துக் கொஞ்சிக் கொண்டிருக்க, அப்போது என் கவனத்தை கவர்ந்தது அவன் ‘பீச்’சில் இருக்கும் புகைப்படம்.

 

அதைப் பார்த்ததும் எனக்கு ஏதோ ஒன்று  நினைவிற்கு வருவதும் போவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

 

‘ஹே ஞாபகம் வந்துடுச்சு. இதே மாதிரி போட்டோ தான க்ரிஷ் எனக்கு சென்ட் பண்ணான். ஹ்ம்ம், ஆனந்த் கிட்ட இது மாதிரி போட்டோ ஏதாவது இருக்கான்னு கேட்கணும்.’ என்று மனதில் குறித்துக் கொண்டேன்.

 

அப்போது எனக்கு பின்னால் அரவம் உணர திரும்பிப் பார்த்தால் அங்கு வழக்கம் போல ராகுல் நின்றுக் கொண்டிருந்தான்.

 

‘அச்சோ திரும்பவும் இவன் கிட்ட மாட்டணுமா? நான் வேற ஏதோ உளறிட்டு இருந்தேனே. எதையெல்லாம் கேட்டானோ!’ என்று நினைத்தவாறே, அவனை பார்த்து இளித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன்.

 

அங்கு ஆரம்பித்த ஓட்டம், அவன் வீட்டு வாசலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த சுதா ஆன்ட்டியிடம் ‘அப்பறம் வரேன்’ என்று கூறியதோடு என் வீட்டில் என் அறையில் வந்து தான் நின்றது.

 

‘ஷப்பா, ஒரு வழியா அங்கயிருந்து தப்பிச்சு வந்தாச்சு!’ என்று மூச்சுவிட, ‘ஓய் பப்ளி, உனக்கென்னமோ அங்க அவன் கூட இருந்தது பிடிக்காதது போல சலிச்சுக்குற!’ என்றது என் மனசாட்சி.

 

‘ஸ்ஸ்ஸ் நீ எதுக்கு பப்ளின்னு கூப்பிடுற?’ என்று அது தான் முக்கியம் போல அதை திட்டிக் கொண்டிருந்தேன்.

 

ஒருவாறு நானும் என் மனசாட்சியும் மாறி மாறி சண்டைப் போட்டு சமாதானமாகி என்று அன்று முழுக்க ‘அந்த’ நினைவுகளுடனே பொழுதைப் போக்கினோம்!

 

*****

 

அடுத்த இரண்டு நாட்கள் வேகமாக சென்றது. ஆனால் க்ரிஷ் பற்றி எதுவும் அறிய முடியவில்லை. பொடிக்கிற்கு அபி, கிருஷ்ணா, ராகுல் தவிர சந்தேகப் படும்படியாக யாரும் வரவில்லை. 

 

ஆனந்த் கூட இந்த மூன்று நாட்களாக என் கண்ணில் படாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். நடுவில் ஒரு முறை, நான் இல்லாத நேரமாக பொடிக் வந்து நேஹாவிற்காக எதுவோ வாங்கிச் சென்றதாக சாண்டி கூறினாள்.

 

‘ச்சே என்ன இது, அவனை பத்தி ஒன்னும் தெரியல. இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு. அதுக்குள்ள அவனை எப்படி கண்டுபிடிக்கிறது? போற போக்க பார்த்தா நான் தான் அவன் சொல்றபடி கேட்கப் போறேன் போலயே!’ என்று மனதிற்குள் நான் புலம்ப, ‘ச்சு, வொய் டென்ஷன்…. இருக்கவே இருக்கு சிசிடிவி! கடைசி நாள் வரை பார்ப்போம், ஒரு க்ளுவும் கிடைக்கலைனா அதை எடுத்து பார்த்துட வேண்டியது தான்.’  என்று எனக்கு நானே சமாதானம் கூறிக் கொண்டேன்.

 

‘ஹ்ம்ம், ஆனந்த் கிட்ட அந்த பீச் போட்டோ பத்தி கேட்கலாம்னா, என் கண்ணுலேயே மாட்ட மாட்டிங்குறான். கால் பண்ணா அட்டெண்ட் பண்றதும் இல்ல. என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட மாட்டுறப்போ இருக்கு அவனுக்கு!’ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க அன்றே அவன் என்னிடம் வசமாக சிக்கிவிட்டான்.

 

அன்று மாலை என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில், என் பள்ளி தோழியோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். நீண்ட நேரம் பேசிவிட்டு அவள் விடைபெறவும், நானும் கிளம்ப ஆயத்தமானேன்.

 

அப்போது அங்கு யாரோ அலைபேசியில் உரையாடுவதைக் கேட்க நேர்ந்தது. அந்த குரல் எனக்கு மிகவும் பரிட்சயமாக இருந்தது. அந்த குரலில் ஈர்க்கப்பட்டு அது வந்த திசை நோக்கி நடந்தேன்.

 

“டேய் மச்சான் கடுப்பை கிளப்பாத டா. இப்போ நான் எங்க இருக்கேன்னு தெரியுமா. உன் ஆளுக்கு பயந்து பார்க்ல ஒளிஞ்சு இருக்கேன் டா.”

 

“…”

 

“சிரி டா மச்சான், நல்லா சிரி! உனக்கு என்ன நீ என்ன சொன்னாலும் அவ கேட்குறா.  ஆனா என்னை தான் போட்டு பாடா படுத்துறா! அது எப்படி டா மச்சான் நீயும் உன் ஆளும், மத்ததுலயெல்லாம் ஒற்றுமையா இருக்கீங்களோ இல்லையோ, என்னையும் என் ஆளையும் பார்க்க விடாம பண்றதுல அவ்ளோ ஒற்றுமையா இருக்கீங்க டா!”

 

“…”

 

“ஏன் டா சொல்ல மாட்ட, அன்னைக்கு இப்படி தான் திடீர்னு கால் பண்ணி சம்மந்தமே இல்லாம ‘என்ன ஒர்க் பண்ற’ன்னு கேக்குறா. நானும் ‘என்ஜினீயரிங்’ன்னு சொல்லி சமாளிச்சுட்டேன். அவளுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சுது, நம்ம அவ்ளோ தான்!”

 

“…”

 

“ஹ்ம்ம் உனக்கென்ன பா, உன் ஆளு,  நீ சமாளிச்சுடுவ! ஆனா என் நிலைமை அப்படியா. டேய் மச்சான் அவளா கண்டுபிடிக்கிறதுக்குள்ள நீயே சொல்லிடு டா.”

 

“…”

 

“அடேய் ஏன் டா, ஏன்? எப்போ பார்த்தாலும் டைம் வரட்டும் டைம் வரட்டும்ன்னா. அந்த டைம் எப்போ தான் டா வரும்?”

 

“இதோ இப்போ வந்துடும்.” என்று நான் அவன் அருகில் சென்று அமர்ந்தேன்.

 

“என்ன டா மச்சான் திடீர்ன்னு மிமிக்ரிலாம் பண்ற? ஹலோ மச்சான், ச்சே கட் பண்ணிட்டானா?”

 

அவன் நான் இருக்கும் பக்கம் திரும்ப, “ஆஹ், அம்மா பேய்!” என்று அலறி கீழே விழுந்தான்.

 

நானோ அவனை முறைத்தவாறே, “என்னை பார்த்தா பேய் மாதிரி இருக்கா?” என்றேன்.

 

“நதி, இங்க என்ன மா பண்ற?” என்றான் என்றும் இல்லாத பாசமாக.

 

“ம்ம்ம் கதை கேட்க வந்தேன்.”

 

“ஓஹ், இங்க கதையெல்லாம் சொல்றாங்களா என்ன?”

 

“கதை சொல்றாங்க இல்ல, சொல்ற! ஒழுங்கா என்கிட்டே உண்மைய சொல்லு.”

 

“சொல்லு சொல்லுனா எந்த உண்மைய சொல்றது?” என்று அவன் மெல்லிய குரலில் கூற, “அப்போ என்கிட்ட அவ்ளோ பொய் சொல்லிருக்க. சரி என்கிட்ட சொன்னதுல எது உண்மை?” என்று கண்களை உருட்டி நான் கக்கேட்டேன்.

 

“என் பேரு ஆனந்த் – இது உண்மை தான்!” என்று கூறிவிட்டு பல்லைக் காட்ட, “ஆனந்த் இல்ல… ஆனந்த கிருஷ்ணன்!” என்றேன் அழுத்தமாக.

 

“ஹிஹி, என் பேரு எல்லாரும் ஆனந்த்னு கூப்பிடுறதுனால அந்த கிருஷ்ணாவ மறந்துட்டேன்.” என்று சமாளிக்க முயன்றான்.

 

“ம்ம்ம் அடுத்து?” என்று அதை கண்டுகொள்ளாமல் வினவ, அவனோ என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, “ஜாப்?” என்று ஒற்றை வார்த்தையில் வினவினேன்.

 

“அ…அது வந்து… சி.பி.ஐ… ஆபீஸர்!” என்று திக்கி திணறி  அவன் கூறினான்.

 

இதையும் நான் ஓரளவு யூகித்தேன்.

 

“உங்க பிரெண்ட்?” என்று நான் அவனை முறைத்துக் கொண்டே வினவ, “எந்த பிரெண்ட்?” என்றான் பாவமாக.

 

அவனை மீண்டும் முறைக்க, “அவனும் தான்…” என்றான் மென்குரலில்.

 

ராகுல் நிச்சயமாக வெறும் மென்பொருள் பொறியாளன் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவனின் தோரணையும், ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்கும் தன்மையும், எப்போதும் ஃபிட்டாக வைத்திருக்கும் அவன் உடலையும் வைத்து போலீசாக இருக்கலாம் என்று யூகித்தேன். 

 

அதனால் ஆனந்த் கூறியதும் எனக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. மேலும் அவனிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருந்தன என்பதால் அமைதி காத்தேன்.

 

அவனோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான். அதை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தாலும் முகத்தை இன்னும் கடினமாகவே வைத்துக் கொண்டேன்.

 

“சோ டெல்லில நடந்த அந்த என்கவுண்டர்?” என்று கேள்வியாக நிறுத்த, “ஹ்ம்ம் நாங்க தான் பண்ணோம்.” என்று ஒப்புக்கொண்டான்.

 

“ம்ம்ம் அந்த மினிஸ்டர் அர்ரெஸ்ட்டானது?”

 

“எங்களால தான்…”

 

“ஓஹ், இப்போ இங்க எதுக்கு வந்துருக்கீங்க?”

 

“அ…அது… வந்து…” என்று அவன் திணறும்போதே என் பின்னால் காலடி சத்தம் கேட்டது. எனக்கு தெரியும் அது ராகுல் தான் என்று.

 

‘க்கும், உடனே பிரெண்டை காப்பாத்த வந்துடுவான். இன்னைக்கு யாரையும் விடுறதா இல்ல. எனக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும்!’ என்று நினைத்துக் கொண்டேன்.

 

“நல்ல வேளை டா நீ வந்த. இனி நீயாச்சு, உன் ஆளாச்சு. என்னை ஆளை விடுங்க டா சாமி. இனிமே உங்க பக்கமே தலை வச்சு கூட படுக்க மாட்டேன்.” என்று புலம்பியவாறே கிளம்பினான் ஆனந்த்.

 

“டேய் மச்சான் நேஹா.” என்று ராகுல் கத்த, “ஹ்ம்ம் அவளை எங்க வீட்டுக்கு கூப்பிட்டுப்பேன் டா.” என்று கூறியபடி அவனின் பைக்கில் சென்றான்.

 

ஒரு நீண்ட பெருமூச்சுடன் என் பக்கம் திரும்பினான் ராகுல். “எப்படியும் ரொம்ப நேரம் என்ன வச்சு செய்யப் போற…” என்று அவன் கூற, நான் முறைக்கவும், “இல்ல கேள்வி கேட்கப் போற, சோ அந்த பெஞ்ச்ல உட்காரலாம்.” என்று என்னை அழைத்துச் சென்றான்.

 

அவனிடம் என்னென்ன கேள்விகளை, எப்படி கேட்க வேண்டும் என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டே அவன் பின்னால் சென்றேன்.

 

அங்கு அமர்ந்ததும், அவன் என்னை கூர்மையாக நோக்கியவாறே, “ம்ம்ம் என்ன கேட்கணுமோ கேளு.” என்றான்.

 

அவனை பார்த்ததும் மண்டைக் குழம்பிப் போய் அவனை ஜொள்ளிட்டு இருந்தேன். இதில் எங்கிருந்து கேள்வி கேட்க! 

 

‘ஸ்ஸ்ஸ் நதி ஸ்டெடி, நீ இப்படியே பார்த்துட்டு இருந்தேனா அவன் இன்னைக்கும் தப்பிச்சுடுவான். சோ, ரொமான்டிக் மூடுக்கு போகாம இன்வெஸ்ட்டிகேஷன் மூடுக்கு வா.’ என்று என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.

 

நான் எனக்குள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அவனே சொல்ல ஆரம்பித்தான்.

 

“பப்ளி உனக்கு இந்நேரம் நான் என்ன வேலை பார்க்குறேன்னு தெரிஞ்சுருக்கும். ஆமா நான் சிபிஐ ஆபீஸர் தான். இதை யாருக்கிட்டயும் மறைக்கணும்னு நினைக்கல. பட் இப்போ நான் அண்டர்-கவர்ல இருக்கேன். அதனால தான் நான் யாருன்னு இதுவரைக்கும் சொல்லல.” என்றான்.

 

“ஓஹ், இப்போ அந்த ஐ.டி கம்பெனில ஒர்க் பண்றது….” என்று நான் இழுக்க, “ம்ம்ம் அங்க ஒரு கேஸ் இன்வெஸ்டிகேட் பண்றதுக்காக அண்டர்-கவர்ல வேலை பார்த்துட்டு இருக்கேன்.” என்றான்.

 

நான் ஏதோ கேட்கப் போக, அதற்குள் அவன், “மத்ததெல்லாம் கான்ஃபிடென்ஷியல் பப்ளி.” என்றான்.

 

“ம்ம்ம் ஓகே ஓகே, சோ இந்த கேஸுக்காக தான் இங்க வந்தீங்களா?” என்று நான் எதையோ எதிர்பார்த்து வினவ, “ம்ம்ம் அதுக்கும் தான், பட் முக்கியமா வந்தது வேற கேஸுக்காக.” என்று அவன் கூற சப்பென்று ஆனது எனக்கு!

 

“அதை பத்தியாவது சொல்வீங்களா, இல்ல அதுவும் கான்ஃபிடென்ஷியலா!” என்று நான் ஒரு மாதிரியான குரலில் வினவ, “சொல்றேன், ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட சில கொஸ்டின்ஸ் கேட்கணும். உனக்கு உங்க மாமா ரங்கராஜன் பத்தி ஏதாவது தெரியுமா?” என்றான்.

 

‘மாமா பத்தி எதுக்கு இப்போ தேவை இல்லாம கேட்குறான்.’ என்ற சிந்தனை எழுந்தாலும், எனக்கு தெரிந்ததை கூற ஆரம்பித்தேன்.

 

“என்னோட சின்ன வயசுலேயே அவரு இறந்துட்டாரு.  சோ அவ்ளோவா தெரியாது. எப்பயாச்சும் எங்க வீட்டுக்கு வருவாரு. அப்போ பார்த்தது தான்…” என்று நிறுத்தி பின், “இப்போ எதுக்கு மாமா பத்தி கேட்குறீங்க?” என்றேன் சந்தேகத்தோடு.

 

“ம்ம்ம் சொல்றேன், இப்போ நான் சொல்றதை நீ எப்படி எடுத்துக்கப் போறன்னு தெரியல. பட் சொல்ல வேண்டியது என் கடமை.” என்று கூற, எனக்கோ மண்டை வெடித்துவிடும் உணர்வு!

 

அவன் தீவிரமான பேச்சிலேயே ஏதோ மிகப்பெரிய விஷயம் வெளிவரப் போகிறது என்பது புரிந்து அவன் பேச்சில் என் கவனத்தை திருப்பினேன்.

 

“ஆனந்த் சொன்னதுலயிருந்து எங்களோட ப்ரிவியஸ் கேஸ், அந்த மினிஸ்டர் சம்மந்தப்பட்டதுன்னு உனக்கு தெரிஞ்சுருக்கும். அவரு பவர்ல இருக்குறப்போ அர்ரெஸ்ட் பண்றது கஷ்டம்னு தெரிஞ்சதால அவரை பத்தி – அவரோட பிசினஸ்,  குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல்ன்னு எல்லாத்தையும் ஃபுல் ஸ்டடி பண்ணோம். அப்போ தான் அவரு பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாடி பண்ண பயங்கரமான விஷயம் எங்க பார்வைக்கு வந்துச்சு.” என்று கூறி நிறுத்தினான்.

 

உடனே நான், “அ… அது… க்கும்.. அதுல எங்க மாமா ஏதாவது சம்மந்தப்பட்டிருக்காரா?” என்று கேட்டேன்.

 

அவனோ லேசாக சிரித்து, “பரவாலையே என் கூட சேர்ந்து நீயும் கொஞ்சம்ம்ம்… யோசிக்க ஆரம்பிச்சுட்டீயே!” என்றான் கிண்டலாக.

 

‘அடப்பாவி, எந்த நேரத்துல கலாய்ச்சுட்டு இருக்க?’ என்று மனதிற்குள் நினைத்தவாறு அவனை முறைத்தேன்.

 

“கூல் பப்ளி, நீ இவ்ளோ சீரியஸா இருந்தா நல்லா இல்ல!” என்றான் கண்ணை சிமிட்டியபடி.

 

இம்முறை வெளிப்படையாகவே அவனை திட்ட வாயைத் திறந்தபோது, “ஸ்ஸ்ஸ் எதுவும் திட்டிடாத, கதைக்கு போய்டலாம்.” என்றான்.

 

“என்ன கேட்ட, உங்க மாமா சம்மந்தப்பட்டிருக்காரான்னு தான. என்னை பொறுத்த வரைக்கும் அந்த குற்றத்துல அவரு தான் மெயின் ரோல் பிளே பண்ணது. அந்த காலத்துல போதை மருந்துங்கிறது ரொம்ப ரேரா தான் கிடைச்சுட்டு இருந்துச்சு. பட் அப்போ கூட அதுக்கு டிமாண்ட் அதிகம் தான். இல்லீகல் பிசினஸ் பண்றவங்களோட கவனம் அதன் மேல திரும்புச்சு. அப்படி அதுல பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சவரு தான் இப்போ அர்ரெஸ்டான அந்த மினிஸ்டர். அப்போ அவரு அரசியல்ல இல்ல. ஆனா கடத்தல், கட்டப்பஞ்சாயத்துன்னு எல்லா ஆக்டிவிட்டீஸ்லயும் ஈடுபட்டாரு.”

 

“கொஞ்ச நாள்லேயே அந்த போதை மருந்து அவருக்கு காசை அள்ளிக் கொடுத்தது.  அது பத்தாதுன்னு இன்னும் பணம் சம்பாத்திக்கணும்னு நினைச்சாரு. போதை மருந்துகளை புது புது ஃபார்முலா யூஸ் பண்ணி புதுசா மார்க்கெட்ல கொண்டு வரலாம்னு பிளான் பண்ணாரு. அதுக்காக நல்ல கெமிஸ்ட்ட தேடினப்போ அவருகிட்ட சிக்குனது தான் உங்க மாமா. முதல மறுத்த அவரு, அப்பறம் காசுக்காக ஒத்துகிட்டாரு.”

 

“ரெண்டே மாசத்துல புதுசா ஒரு போதை மருந்தை கண்டுபிடிச்சாரு உங்க மாமா. அதுவும் மார்கெட்ல நல்லா மூவ் ஆச்சு. அதுக்கான பணத்தோட ஊருக்கு வந்துட்டாரு. பட் அந்த மருந்து கொஞ்ச நாள்லயே அதை யூஸ் பண்ணவங்களோட உயிரை பறிச்சிடுச்சு. அதுக்கப்பறம் அந்த மினிஸ்டர் எவ்ளோ கட்டாயப்படுத்தியும் அந்த போதை மருந்தை தயாரிக்க உங்க மாமா ஒத்துக்கல. அந்த ஃபார்முலாவோட டாக்குமெண்டையும் அவங்ககிட்ட தர மறுத்துட்டாரு.” என்று கூறி நிறுத்தினான் ராகுல்.

 

“எங்க மாமாவோட இறப்பு இயற்கையானது இல்ல, அவங்க தான் எங்க மாமாவை கொன்னதா?” என்று நான் வினவ, “ஹ்ம்ம் ஆமா, அந்த மினிஸ்டர் தான் உங்க மாமாவை கொன்னது.” என்றான் அவன்.

 

“அப்போ அந்த டாக்குமெண்ட் அவங்களுக்கு கிடைச்சுருச்சா?” என்று நான் கேட்க, “இல்ல, சாகுறதுக்கு முன்னாடி உங்க மாமா பண்ண உருப்படியான காரியம் அந்த டாக்குமெண்டை எங்கேயோ மறைச்சு வச்சது தான். இல்லைனா இந்நேரம் அங்கங்க நடக்குற ட்ரக் ட்ராபிக்கிங் எல்லாம் நம்ம கலாச்சாரமாவே மாறி இருக்கும்.” என்று ஒரு பெருமூச்சுடன் கூறினான்.

 

“தேங்க் காட், இப்போ அந்த டாக்குமெண்ட் எங்க இருக்குன்னு அவங்களுக்கு தெரியாதுல.” என்று சிறிது நிம்மதி எழ, “ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் தெரியாது.” என்று நிறுத்தினான் ராகுல்.

 

“அச்சோ அப்படினா அவங்களுக்கு அது எங்க இருக்குன்னு தெரிஞ்சுருச்சா?” என்று நான் படபடக்க, “ம்ம்ம், எப்படியோ உங்க மாமாவோட பெஸ்ட் பிரெண்ட் ஒருத்தரை கண்டுபிடிச்சு அவரை மிரட்டி, அந்த டாக்குமெண்ட் எங்க இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாங்க.” என்றான் அவன்.

 

“ஓஹ், இப்போ அது எங்க இருக்கு?” என்று ஆர்வமாக நான் வினவ, “**** பேங்க் லாக்கர்ல இருக்கு. அது கூட அவங்ககிட்ட வாங்குன பணமும் அங்க தான் இருக்கு.” என்று கூறினான்.

 

“அவங்களுக்கு தெரிஞ்சதுனா இந்நேரம் அதை எடுத்துருக்கணும்ல. ஏன் இன்னும் அதை விட்டு வச்சுருக்காங்க?” என்று நான் குழம்ப, “குட் கொஸ்ட்டின்! அந்த லாக்கர் அக்சஸ் பண்ண தம்ப் பிரிண்டும் (கட்டைவிரல் அச்சு)  ரெட்டினல் (விழித்திரை) ஸ்கேன்னும் வேணும்.” என்றான் அவன்.

 

“மாமா தான் இறந்துட்டாரே, அதோட அவரோட உடம்பை எரிக்கவும் செஞ்சாச்சு. அப்போ அவரோட தம்ப் பிரிண்டும் ரெட்டினல் ஸ்கேன்னும் இருக்காதே. இனிமே அதை திறக்கவே முடியாதா?”

 

“அந்த தம்ப் பிரிண்டும் ரெட்டினல் ஸ்கேன்னும் அவரோடதுன்னு நான் சொல்லவே இல்லையே!” என்று அவன் கூற, அதை கேட்ட நான் திகைத்தேன்.

 

“அப்போ வேற யாரோடது?” என்று நான் வினவ, “நீயே யோசி, அவரு இங்க தான் இறந்துருக்காரு பிளஸ் அவருக்கு இந்த ஊருல க்ளோஸ் பிரெண்ட்ஸ்ன்னு ஒன்னு ரெண்டு பேரு தான் இருந்துருக்காங்க. அவங்ககிட்ட ஹெல்ப் கேட்கவும் அவருக்கு டைம் இல்ல. சோ அவரு என்ன பண்ணிருப்பாரு?” என்று அவன் என்னிடமே கேள்வியை திருப்பினான்.

 

சிறிது நேரம் யோசித்த நான், “மே பி எங்க ஃபேமிலில யாரோட தம்ப் பிரிண்ட் அண்ட்  ரெட்டினல் ஸ்கேனை யூஸ் பண்ணியிருக்கணும். அது ஷீலாவோடதா இருக்க நிறைய சான்ஸ் இருக்கு.” என்றேன்.

 

“ஏன் ஷீலாவோடதா இருக்கும்னு நினைக்குற?” என்று அவன் கேட்க, “ஏன்னா ஷீலா அவரோட பொண்ணு. எங்க மாமாக்கு அவரோட பொண்ணுன்னா ரொம்ப பிடிக்கும்னு வீட்டுல சொல்வாங்க. சோ அவளா இருக்கும்னு என்னோட கெஸ்.” என்றேன்.

 

“ம்ம்ம் குட் கெஸ், நாங்களும் அந்த கெஸ்ல தான் இந்த கேஸ் ஆரம்பிச்சோம். எனக்கு அப்போ வேற அசைன்மெண்ட் கொடுத்ததால ஆனந்த் தான் இந்த கேஸை லீட் பண்ணான். அப்பப்போ நானும் ஹெல்ப் பண்ணிட்டு இருந்தேன். மெயினா இங்க வந்தது ஷீலாக்கு அவங்கிட்டயிருந்து பாதுகாப்பு தரணும்னு தான்.”

 

“அவளுக்கே தெரியாம அவளை ஃபாலோ பண்ணோம். அப்போ தான் எங்களுக்கு ஒரு தகவல் வந்துச்சு. மினிஸ்டர் அர்ரெஸ்ட் ஆனது சொத்துக் குவிப்பு வழக்குல, சோ அவரோட பைனான்ஸ் மொத்தமா ஃப்ரீஸ் பண்ணிட்டாங்க. உங்க மாமா ஒளிச்சு வச்சிருக்க பணத்தை வச்சு தான் அவரால மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க  முடியும். அதனால அதை அடையுறதுக்கு அவரு ஆட்களை ஏவிவிட்டுருக்காருன்னு தகவல் வந்தது.”

 

“அவங்க ஷீலாவ ரெண்டு முறை கடத்த ட்ரை பண்ணாங்க. எப்படியோ அதை தடுத்துட்டோம். அப்போ தான் அவ ஓடிப் போய்ட்டான்னு கேள்வி பட்டு நாங்க அதிர்ச்சியானோம். ஒரு வேளை அது இவங்க பிளானா இருக்குமோன்னு சந்தேகமா இருந்துச்சு. சோ ஷீலாவை எல்லா இடத்துலயும் தேட ஆரம்பிச்சோம். அப்படி பாதி வழில தேடிட்டு இருக்குறப்போ தான் இன்னொரு முக்கியமான ஆளுக்கிட்ட இருந்து இன்னொரு அதிர்ச்சியான தகவல் கிடைச்சது!” என்றான் ராகுல்.

 

அதுவரை அவன் பேச்சை குறுக்கிடாமல் இருந்த நான், “யாரு அந்த முக்கியமான ஆளு?” என்று கேட்டேன்.

 

“உன் தாமோ அங்கிள் தான்!” என்றான்.

 

“வாட்?” என்று கத்தினேன் அதிர்ச்சியில்!

 

“ஷ்… கூல். எதுக்கு இப்போ கத்துற?” என்று அவன் என் தோளை தொட, “சாரி அதிர்ச்சில கத்திட்டேன். அது… தாமோ அங்கிள் எப்படி? அவருக்கு என்ன தெரியும்? அவருக்கு முன்னாடியே மாமாவை தெரியுமோ?” என்றேன் குழப்பமாக.

 

“அவரு பெஸ்ட் பிரெண்டை தெரியாம இருக்குமா!” என்று மேலும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினான்.

 

“என்னது பெஸ்ட் பிரெண்டா!” என்று நான் திகைக்க, “ம்ம்ம் ஷாக்கை குறை. ஆமா அவங்க ரெண்டு பேரும் காலேஜ்ல இருந்தே நல்ல பிரெண்ட்ஸாம். அப்பறம் மேரேஜ் பிசினஸ்ன்னு ரெண்டு பேருக்கும் டச் விட்டு போச்சாம். ஒரு நாள் எதேச்சையா மீட் பண்ணி திரும்பவும் அவங்க பிரெண்ட்ஷிபை தொடர்ந்தாங்களாம். அவருகிட்ட உங்க மாமா தன்னோட பணக்கஷ்டத்தையும் அதுக்காக மினிஸ்டர்கிட்ட வேலை செய்ய போறதா சொல்லி டெல்லி கிளம்பி போய்ட்டாராம்.” என்றான்.

 

“ஓஹ், என்ன வேலைன்னு தாமோ அங்கிள்கிட்ட சொல்லலையா?”

 

“இல்ல, சொன்னா அவரு விடமாட்டாருன்னு நினைச்சு சொல்லாம இருந்துருக்கலாம். ரெண்டு மாசத்துக்கு அப்பறம் டெல்லில நடந்த இன்சிடெண்ட்ஸ் நினைச்சு ரொம்ப வேதனைல உங்க மாமா தாமோ அங்கிள்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாராம்.”

 

“தாமோ அங்கிள் அவரை சும்மாவா விட்டாரு?” என்று கோபத்தில் நான் வினவ, “பிரெண்டாச்சே! ப்ச், நல்லா திட்டுனாராம். அப்பறம் உங்க மாமா அவரை கெஞ்சி சமாதானப்படுத்தினாராம். அவங்க ரெண்டு பேரும் தான் அந்த டாக்குமெண்டை மறைச்சு வைக்க பிளான் பண்ணாங்களாம். அந்த ***** பேங்க் கூட தாமோ அங்கிள் தான் சஜ்ஜஸ்ட் பண்ணாராம்.” என்றான் ராகுல்.

 

“அப்போ அவரு தான் லாக்கரை திறக்க ஷீலாவோட தம்ப் பிரிண்ட் அண்ட் ரெட்டினல் ஸ்கேன் வேணும்னு உங்களுக்கு சொன்னாரா?” –  அவராக இருக்கக்கூடாது என்று ஒருவித எதிர்பார்ப்பில் நான் வினவினேன்.

 

“பப்ளி, இங்க நீ சீக்வன்ஸை மிஸ் பண்ணிட்ட. நாங்க தான் ஷீலா அந்த டிரம்ப் கார்டுன்னு நினைச்சு அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க வந்தோம். அவ காணாம போய் தேடிட்டு இருந்தப்போ தான் அங்கிள் எங்களுக்கு அந்த நியூஸ் சொன்னாரு.”

 

“ஓஹ், அப்போ அவங்களுக்கு வேண்டியது ஷீலா இல்லையா? அதை தான் அங்கிள் உங்ககிட்ட சொன்னாரா?”

 

“ம்ம்ம் குட், பாயிண்ட்டை பிடிச்சிட்ட பப்ளி. யெஸ், அவங்களுக்கு வேண்டியது ஷீலா இல்ல. ஏன்னா அந்த டிரம்ப் கார்டு நீ தான்!” என்று ராகுல் கூற, அடுத்தக்கட்ட அதிர்ச்சி எனக்கு!

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
27
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்