29 மாயோனின் மலரோவியம்

Loading

 

மாயோன் 29

நந்தினியை கண்டவுடன்… எதுவும் யோசிக்காமல் அவளை பின்தொடர்ந்து ஆட்டோவில் ஏறி சென்றாள் கீர்த்தி.

கீர்த்தி ஆட்டோவில் ஏறி செல்வதை பார்த்துவிட்டான் மகிழன். அவனது பேச்சு லேகாவிடமாக இருந்தாலும் எண்ணம் முழுவதும் கீர்த்தியை பற்றியே இருந்ததால், ஒருக்கண்ணால் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான்.

‘ ஆட்டோவில் ஏறி எங்க போறாள்? ‘ என்று யோசித்தபடி ” லேகா ஒரு நிமிஷம் ” என்று அவளிடம் கூறிய மகிழன், கீர்த்தியின் ஆட்டோவை நோக்கி வருவதற்குள் அவள் அங்கிருந்து சென்றிருந்தாள்.

செல்லும் அவனது பதட்டத்தை உணர்ந்து லேகாவும் தனது காரை எடுத்துக்கொண்டு அவன் அருகில் வந்து நின்றாள்.

” என்ன ஆச்சு மகிழன் ?” என்று லேகா கேட்க..

” சொல்லுறேன் கொஞ்சம் அந்த ஆட்டோவை பாலோ பண்ண முடியுமா? ”

” என்ன கேள்வி இது ? வாங்க.. ஆமா கீர்த்தி எங்க? ”

” அவள் தான் அந்த ஆட்டோவில் போறாள் “என்றவன் காரில் ஏறி அமர்ந்து கொள்ளவும் வண்டியை உயிர்ப்பித்து, அந்த ஆட்டோவை பின்தொடந்தாள் லேகா..

நந்தினியை, கீர்த்தி பின்தொடர.. கீர்த்தியை மகிழன் பின்தொடர்ந்து வந்தான்.

” எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்கீங்க மகி? ” என்று லேகா கேட்க..

” ஒன்னும் இல்லை லேகா.. அவள் எதுக்காக இப்போ அந்த ஆட்டோவில் போகணும் எங்க போறாள்? எதுக்குன்னு ஒண்ணுமே புரியல.. அது தான் கொஞ்சம் பதட்டமாக இருக்கு ”

“அது உண்மையா கீர்த்தி தானா? இல்லை… நீங்க என்கிட்ட தான் பேசிட்டு இருந்தீங்க… அது தான் சரியா கவனிச்சிங்களான்னு கேட்டேன் ”

” என் கூட யார் இருந்தாலும், என் பார்வை எனக்கானவங்க பாதுகாப்பு மேல மட்டும் தான் இருக்கும்… அதெல்லாம் உனக்கு புரியாது லேகா.. கவனமா அந்த ஆட்டோவை பாலோ பண்ணு.. அந்த கிறீன் கலர் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு பாரு அந்த ஆட்டோ தான் ” என்று கூறினான்.. அவனை மெச்சிய பார்வை பார்த்தபடி அவளும் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றாள்.

இங்கு கீர்த்தியிடம் இருந்து எடுத்து வந்த இடுப்பு சங்கிலியை யோசனையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தான் விக்ரமன்.

நந்தினியின் வீட்டை எரிப்பதற்கு முன்பாக அவனது ஆட்களை அந்த இடத்தில் சுத்தமாக தேட சொல்லி இருந்தான் விக்ரமன்.  அப்போது அவர்கள் கைக்கு கிடைத்தது தான் அந்த மெட்டல் பாக்ஸ்.. வர்ஷாவின் மெட்டல் பாக்ஸ்.. தேவன் சக்ரவர்த்தி, நந்தினியிடம் கொடுத்து பாதுகாக்க சொன்ன அந்த மெட்டல் பாக்ஸ்.

அடியாட்கள் இப்படி ஒரு பாக்ஸ் அங்கு இருந்ததை கூற.. விக்ரமன் அதனை எடுத்து வர கூறி இருந்தான்.

அந்த மெட்டல் பாக்ஸ், மெட்டல் க்யூப் மற்றும் அந்த பட்டர் ப்ளை செயின் என மூன்றையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான் விக்ரமன்.

யோசனையுடன் அந்த க்யூபை சுற்றி கொண்டிருந்தவன்.. அதில் உள்ள எண்களை எல்லாம் நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்குமே அதில் என்ன இருக்கிறது, அதனை எப்படி திறப்பது என்று எதுவும் புரியவில்லை.

மெட்டல் க்யூபை கையில் வைத்து சுழற்றியவாறே அந்த பட்டர் ப்ளை செயினை எடுத்து திருப்பி, திருப்பி பார்த்தான்.. அதில் என்ன இருக்கிறது என்ன செய்வது என்று யோசனையுடன் இருந்தவன்.. அருகில் இருந்த பூதக்கண்ணாடி கொண்டு அந்த செயினை ஆராய்ந்தான்.

அதில் ஒரு இடத்தில் நான்கு என்ற எண் மிக சிறியதாக பொறிக்க பட்டிருந்தது. அதை பார்த்து ஆர்வமானான்… பின்னர் அதே போல அந்த செயினில் சிறிது தள்ளி இரண்டு என்ற எண் பொறிக்கப்பட்டு இருந்தது. அதனை பார்த்த விக்ரமன் உடனே இருக்கையில் சரியாக அமர்ந்து உன்னிப்பாக அதனை கவனிக்க தொடங்கினான். அதன் பிறகு ஒவ்வொரு எண்ணாக மொத்தம் ஏழு எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டான்.

அப்போது தான் அந்த க்யூபிலும் ஒன்றில் இருந்து ஏழு வரையான எண்கள் மட்டுமே அதிலுள்ள கட்டங்களில் இருந்ததை விக்ரமன் கவனித்தான்.

ஏதோ ஒரு குழப்பத்துடனும், தயக்கத்துடனும்.. தெளிவில்லாமல் அந்த எண்களை அந்த க்யூபில் வரிசை படுத்த முயற்சி செய்தான் ஆனால் அது ஓபன் ஆகவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தும் அது திறக்கவில்லை என்றவுடன் விக்ரமனுக்கு சலிப்பானது!! அப்படியே அதனை டேபிளின் மீது எறிந்தவன், தலையில் கைவைத்து கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அப்போது அவர்களது வக்கீல் இடம் இருந்து அவனுக்கு போன் வந்தது அந்த சத்தத்தில்.. கண்விழித்தவன் அழைப்பை ஏற்றான்.

” ம்ம்ம் சொல்லுங்க சார் ”

” நாளைக்கு லாஸ்ட் ஹீயரிங் விக்ரமன்,அது ஞாபகம் இருக்கா? ஏதோ ஆதாரம் இருக்குன்னு சொன்னிங்க? ஆனால் அதை பத்தி நீங்க இது வரை எதுவும் சொல்லலையே? அப்படி ஏதாவது ஆதாரம் இருந்தால் என்னன்னு சொல்லுங்க.. நம்ம அதை கோர்ட்டில் ஒப்படைக்கணும். இல்லைன்னா?” என்றவர் வார்த்தையை இழுக்க..

” அப்பாவை வெளியே எடுக்க முடியாது அவருக்கு தண்டனை கிடைச்சிடும் அது தானே ” என்று அவர் கூற தயங்கியதை கூறி முடித்தான் விக்ரமன்.

” ம்ம்ம்.. நீங்க என்ன பண்ண போறீங்க? ”

” கொஞ்சம் நேரம் கழிச்சு உங்களுக்கு கால் பண்ணுறேன் சார் ” என்று கூறி அழைப்பை துண்டித்த விக்ரமனின் கண் முன் அவனது தந்தையின் முகம் வந்து போனது.

‘ நான் ஜெயிலில் இருக்குறது எனக்கு பிரச்சனை இல்லை விக்ரமா.. ஆனால் செய்யாத தப்புக்கு கெட்ட பேர் வாங்கி வாழுறது வேதனையா இருக்குடா… என் ஜோதியோட முகத்தை கூட பார்க்க முடியாமல் போய்டுச்சே… கடைசியில் நான் ஒரு நல்ல கணவனாவும் தோற்த்துட்டேன் அவளுக்கு செய்யவேண்டிய கடமையை கூட நான் செய்ய முடியுமா போய்டுச்சே..  ‘என்று அர்ஜுன் கண்ணீருடன் கூறியது இன்றும் அவன் கண்ணுக்குள்ளே நின்றது.

உடனே முகத்தை துடைத்து கொண்ட விக்ரமன், ஆழ்ந்த பெரு மூச்சு விட்டு மீண்டும் அந்த க்யூபில் எண்களை வரிசைப்படுத்தி பார்த்தான். இம்முறை அந்த  செயினில் குறிப்பிடபட்ட எண்களை தலைகீழாக அவன் வரிசை படுத்தி பார்க்க! அதிர்ஷ்டவசமாக அந்த க்யூப் திறந்து கொண்டது.

அதனை பார்த்து ” ஊப் ” என்று இதழ் குவித்து ஊதியவன் அந்த க்யூப்பை திறந்தான். அதனுள் ஒரு சாவியும், மேலும் ஒரு மெமரி கார்டும் இருந்தது.

இரண்டையும் புருவம் சுருக்கி பார்த்தவன், அந்த சாவியை எடுத்து டேபிளில் வைத்து விட்டு, மெமரி கார்டை எடுத்து தனது லேப்டாப்பில் இணைத்து பார்த்தான்.

அவசரத்திலும்! நிதானமாக அதில் உள்ள ஒவ்வொரு போல்டரையும் ஓபன் செய்து பார்த்தான். அதில் எல்லாம் வர்ஷாவின் புகைப்படம் மட்டுமே பெரும்பாலும் இருந்தது. பின்னர் விடியோ போல்டரை ஓபன் செய்து பார்த்தவனது கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது..

ஆமாம் அதில் தேவனும்,விஜய்யும் அர்ஜுனுக்கு எதிராக போடப்பட்ட திட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்த அனைத்தும் தெளிவாக பதிவாகி இருந்தது.

அந்த வீடியோவை பார்த்து, வர்ஷாவை நினைத்து ஒரு கணம் பெருமைபட்டவனுக்கு அடுத்த   கணமே அவளது  தற்போதைய நிலை கண்முன் வந்து போக.. வேதனையுடன் அந்த விடியோவை தனது பெண்ட்ரைவில் நகல் செய்து கொண்டான்.

பின்னர் டேபிளில் இருந்த அந்த சாவியை கொண்டு அந்த மெட்டல் பாக்ஸை திறந்தவன், அதிலிருந்து அந்த தடைசெய்யபட்ட மருந்துக்கான ஒப்பந்த பத்திரத்தை எடுத்தான்.

அதில் தேவன் சக்ரவர்த்தி, நந்தினி, மற்றும் சரத்தின் கையொப்பத்தை பார்த்தவனது இதழ்கள் மெலிதாக வளைந்து கொண்டது.

உடனே லாயருக்கு போன் செய்து அந்த ஆதாரத்தை பற்றி விக்ரமன் கூறினான்.

” அந்த வீடியோவை எனக்கு அனுப்பி விடுங்க.. அப்ரோம் அந்த பயிலையும் எனக்கு ஸ்கேன் பண்ணி அனுப்பிவிடுங்க ” என்று அவர் கூற.. அதே போல செய்தான் விக்ரமன்.

அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு மீண்டும் விக்ரமனுக்கு அழைத்தார் அந்த வழக்கறிஞர்.

” சொல்லுங்க சார் இந்த ஆதாரம் போதும் தானே..  ”

” இது போதுமே விக்ரமன், கண்டிப்பா உங்க அப்பாவை வெளியே எடுத்திடலாம்… அப்ரோம் அந்த தேவநந்தினி, சரத் அவங்களும் இந்த காண்ட்ராக்ட்ல பாட்னர்ஸ்.. நம்ம இதை கோர்ட்டில் ஒப்படைத்தோம்  அப்படின்னா? அவங்களுக்கும் தண்டனை கிடைக்கும் ”

” ஐ கனோவ் சார்.. தண்டனைனா எவ்ளோ வருஷம் கிடைக்கும் சார்?”

” காப்பகத்தில் கடத்தப்பட்டு இறந்து போன அந்த பத்து பேர் வழக்கில் அவங்களுக்கு சம்மந்தம் இல்லை அப்படின்னா அவங்க முதல் நிலை குற்றவாளி இல்லை. சோ அதை சொல்லி எதிர் தரப்பு வக்கீல் சரியா வாதாடினால் த்ரி டு போர் இயர்ஸ் வரை தண்டனை கிடைக்கலாம் ”

” ம்ம்ம் ” என்ற விக்ரமனின் குரலில் வெளிப்பட்ட உணர்வு என்னவென்று அவனுக்குமே புரியவில்லை.

” சரத் உங்க தம்பி தானே? ” என்று அவர் கேட்க

” ஆமா ஆனால் தப்பு பண்ணவங்க கண்டிப்பா தண்டனை அனுபவிக்கணும். அது யாரா இருந்தால் என்ன ? ” என்ற விக்ரமன் அழைப்பை துண்டித்தான்.

*******

நந்தினியின் கார் தேவனது கெஸ்ட் ஹவுஸ்க்குள் நுழைந்தது.. அதியனும் சரத்தும் இப்போது அங்கு தான் தங்கி இருந்தனர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தில் தேவன் இறந்துவிட்டார் என்பது சில மாதங்களுக்கு முன்பு தான் சரத்துக்கு தெரியவந்தது.

அதியனுக்கு இந்த விஷயம் தெரியாது, தெரிந்தால் உடனே இங்கு வர வேண்டும், என்று அவன் கூறுவான். அப்படி அவனை இங்கு அழைத்து வந்தால் வர்ஷாவின் விஷயம் யார் மூலமாவது அவனுக்கு தெரிந்து விடும் என்று எண்ணிய சரத் அவனிடம் இருந்து இந்த உண்மையை மறைத்தான். நந்தினியிடமும் இதனை அதியனிடம் சொல்ல வேண்டாம் என்று கூறி இருந்தான்.

அவர்களது கார் அந்த வீட்டிற்குள் நுழைவதை பார்த்த கீர்த்தி அங்கேயே ஆட்டோவை நிறுத்த சொல்லி விட்டு ஆட்டோ காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு கீழே இறங்கினாள்.

கீர்த்தியை இறக்கிவிட்டு விட்டு அந்த ஆட்டோ திரும்பி வருவதை பார்த்த மகிழனது கண்களில் தூரத்தில் கீர்த்தி ஒரு வீட்டிற்குள் நுழைவது தெரிந்தது.

“இவள் எதுக்கு அங்க போறாள்” என்றவர்களும் அந்த இல்லத்தை நோக்கி வந்தனர்.

கீர்த்தி அந்த வீட்டிற்குள் நுழையபோகும் முன் அவளை தடுத்து நிறுத்தினான் அந்த வீட்டின் வாட்ச்மேன்.

அவளிடம் அவன் ஹிந்தியில் ” யார் நீங்க? ” என்று கேள்வி கேட்க, அவளும் பதில் சொல்லிக்கொண்திருந்தாள்.

அந்த சத்தத்தில் அப்போது தான் காரில் இருந்து இறங்கிய நந்தினி திரும்பி பார்த்தாள்.

அங்கு கீர்த்தியை கண்ட நந்தினியின் கண்களில் அதிர்ச்சியா!

மகிழ்ச்சியா! என்று பிரித்து அறியமுடியாத ஒரு உணர்வு வெளிப்பட்டது.

நந்தினி தன்னை பார்ப்பதை கண்டு கொண்ட கீர்த்தி தாயை கண்ட சேயை போல.. ” அக்கா ” என்று கத்தி கொண்டு அவளை நோக்கி வந்து அணைத்து கொண்டாள்.

அந்த திடீர் அணைப்பில் முதலில் தடுமாறிய நந்தினி ” கீர்த்தி ” என்று யோசனையுடன் அழைத்தாள். கீர்த்தியை அங்கு பார்த்தது சரத்துக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

வாட்ச்மேன் கீர்த்தியை நோக்கி வர.. சரத் அவனை போகும் படி கண் கட்ட, அந்த வாட்ச்மேனும் அங்கிருந்து சென்றான்.

நந்தினி கீர்த்தியை அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அப்போது அங்கு வந்த மகிழன் அவர்களது வீட்ற்குள் செல்ல பார்த்தான். அவனை தடுத்து நிறுத்திய அந்த வாட்ச்மேன் அவனை  உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

” அக்கா நீ எப்படி இருக்க? உனக்கு ஒன்னும் இல்லல? நல்லா இருக்கியா? எல்லாரும் என்னென்னமோ சொல்லுறாங்க அக்கா.. ஆனால் நான் எதையும் நம்பல ” என்று கண்ணீர் மல்க பேசியவளிடம் நந்தினி கேட்ட ஒரே கேள்வி!

” நீ எப்படி இங்க வந்த? உன்னை எடுத்துட்டு போக சொன்ன அந்த பேக் எங்கே? அப்ரோம் அந்த விக்ரமன் ? ” என்று அவள் கேட்க.

” அது எல்லாம் அப்புறம் சொல்லுறேன் அக்கா.. நீ ஏதோ தப்பு பண்ணிட்டியாமா? அவங்க வீட்டு பொண்ணு இப்போ உடம்பு முடியாமல் இருக்க நீ தான் காரணம் அப்படி இப்படின்னு சொல்லுறாங்க அக்கா.. அப்ரோம் நீ என்னோட கிட்னி எல்லாம் எடுக்க பார்த்தியாமாம் அப்படி எல்லாம் சொன்னாங்க அக்கா..  இது எல்லாம் நம்ப நான் என்ன முட்டாளா? நீ எப்படி அக்கா என்னை அப்படி கஷ்டப்படுத்த நினைப்ப? எனக்கு தெரியும் அக்கா உன்னை பாத்தி, நீ எதுக்கும் கவலைப்படாத.. வா மாமா கிட்டயும் அவங்க கிட்டயும் சாரி கேளு எல்லாம் சரி ஆகிடும் ” என்று நீளமாக பேசிய கீர்த்தி நந்தினியின் கரத்தை பற்றி இழுக்க… அசையாமல் இருந்தாள் நந்தினி.

” என்ன ஆச்சு அக்கா? வா நம்ம வீட்டுக்கு போவோம். அவரும் ரொம்ப நல்லவர் அக்கா.. நீ சாரி கேட்டால் உன்னை மன்னிச்சிடுவாறு.. ” என்ற கீர்த்தியை சலிப்பாக பார்த்தாள் நந்தினி.

” ஏன்டி உன் தங்கச்சி என்ன பைத்தியமா? பார்க்க அழகா இருக்கான்னு நெனச்சால், பைத்தியமா இருப்பாள் போல ” என்று நந்தினியின் காதில் மெல்ல கூறினான் சரத். அவனை முறைத்து பார்த்தாள் நந்தினி.

” இது எல்லாம் உனக்கு புரியாது கீர்த்தி கொஞ்சம் நேரம் அமைதியா இரு ” என்று அவளிடம் கூறிவிட்டு சரத்தை அழைத்து கொண்டு தனியே வந்தாள் நந்தினி.

” இப்போ என்ன பண்ணுறது சரத்?” என்று நந்தினி கேட்க..

” முதலில் இவளை இங்க இருந்து அனுப்பிவிடு.. நல்ல வேலை அதியன் தூங்கிட்டு இருக்கான்.. இல்லை இவள் வர்ஷாவை பத்தி பேசினது மட்டும் அவனுக்கு தெரிஞ்சது மொத்தமா முடிஞ்சுது.. ஏற்கனவே வர்ஷான்னு பேரை கேட்டாலே பைத்தியம் போல பிகேவ் பண்ணுறான். இவளும் இவள் பங்குக்கு லூசு போல எதையும் பேசினால் அவ்ளோ தான்.  எந்த உண்மை என் தம்பிக்கு தெரிய கூடாதுன்னு இவ்ளோ வருஷம் ஓடி ஒளிஞ்சனோ அந்த உண்மையை உன் தங்கச்சி அழகா போட்டு உடைச்சிட்டு போய் இருப்பாள். அதி கண்ணு முழிச்சு நடந்ததை சொல்லும் போது தான் எனக்கே தெரிய வந்தது.. வர்ஷா வயிற்றில் வளர்ந்த குழந்தை இவனோடதுன்னு.. நானும் அவன் குழந்தையோட அழிவுக்கு ஒரு காரணம் அப்படின்னு அவனுக்கு தெரியவந்தால் அவன் என்னை பத்தி என்ன நினைப்பான். வர்ஷாவோட விஷயத்தில் நான் கணக்கே இல்லாமல் அவன் கிட்ட பொய் சொல்லி இருக்கேன்.. எனக்கு என் தம்பி வேணும், அவன் என்னை தப்பா நெனச்சிடகூடாது.  ” என்று சரத் கலக்கத்துடன் கூறினான்.

” என்னடா சொல்லுற அவளை அனுப்பிட்டா, அப்ரோம் அந்த பையில் ” என்று நந்தினி கேட்க..

” இப்போ என்ன பண்ண சொல்லுற? ”

” அந்த க்யூப் எல்லாம் அவன் கையில் கிடைச்சாலும் அந்த பாக்ஸை அவனால ஓபன் பண்ண முடியாதுன்னு நான் நம்புறேன். இவ்ளோ வருஷம் அது என் கையில் இருந்தும் கூட அதை எப்படி ஓபன் பண்ணுறதுன்னு எனக்கு தெரியல.. அவனுக்கு மட்டும் எப்படி தெரிய போகுது.. ஒருவேளை அவன் ஏதாவது பிரச்சனை பண்ணா கீர்த்தியை வச்சு நம்ம தப்பிச்சிக்கலாம்.. அவளுக்கும்  அவனுக்கும் இடையே ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு.. பரதன் அன்னைக்கு போன்ல பேசியதை வச்சி என்னால அதை புரிஞ்சுக்க முடிஞ்சுது.. ”

 

” இப்போ என்ன பண்ணனுங்குற? ” என்று எரிச்சலாக கேட்டான் சரத்.. அவனுக்கு அதியனிடம் கீர்த்தி ஏதாவது உளறி வைத்து விடுவாளோ என்ற பயம் அதிகமாக இருந்தது.

” கீர்த்தி நம்ம கூட இருக்குறது நமக்கு நல்லது தான்.. அதியன் கிட்ட அவள் எதுவும் சொல்லாமல் நான் பார்த்துகிறேன். ” என்று கூறினாள் நந்தினி.

அவர்கள் பேசிவிட்டு வெளியே வர.. கீர்த்தியோ அங்கிருந்த ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். அதனை பார்த்து முகம் சுளித்தான் சரத்.

” உண்மையா இவள் உன் தங்கச்சி தானாடி? ” என்று கேட்ட சரத் நந்தினியை கேள்வியாக பார்க்க.. அவள் பதில் பார்வை பார்ப்பதற்க்குள் அவர்களை நோக்கி வந்தாள் கீர்த்தி.

” அக்கா இந்த ஆப்பிள் நல்லா இருக்கு நம்ம வீட்டுக்கு போகும் போது.. இன்னும் ரெண்டு எடுத்துட்டு போய் அம்மாக்கும்,மாமாவுக்கும் கொடுப்போம் ” என்ற கீர்த்தி இன்னும் ரெண்டு ஆப்பிளை எடுத்து கையில் வைத்துகொண்டாள்.

” என்ன சொல்லுற? மாமா உயிரோட இருக்காரா? ” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் நந்தினி.

” என்ன அக்கா இப்படி கேக்கிற? என் மாமாவுக்கு ஒன்னும் இல்லை. அவர் நான் அம்மா எல்லாரும் நல்லா தான் இருக்கோம்.. இதோ இப்போ நீயும் நல்லா தான் இருக்க.. இனி எல்லாம் சரி ஆகிடும் ” என்ற கீர்த்தியின் தோளை பற்றி உலுக்கிய நந்தினி.

” தெளிவா சொல்லுடி இது எல்லாம் எப்படி? நீ எப்படி இங்க வந்த? யார் உன்கிட்ட என்ன சொன்னா?” என்று கேட்டாள்.

” வலிக்குது அக்கா.. மாமா தான் நீ தப்பு பண்ணதா சொல்லிச்சு.. அந்த பொண்ணு உடம்பு முடியாமல் இப்படி படுத்த படுக்கையா இருக்க உங்க பேராசை தான் காரணம்னு சொல்லிச்சு.. அந்த பொண்ணு பேரு கூட ஏதோ வர்ஷான்னு நினைக்கிறேன். ” என்று கீர்த்தி கூறுகொண்டு இருக்க..  அப்போது எழுந்து வெளியே வந்த அதியனது காதில் அவை அனைத்தும் தெளிவாக கேட்டுவிட்டது.

” இப்போ யாரை பத்தி சொன்ன? ” என்று  குழப்பத்துடனும், பதட்டத்துடனும் அதியன் கேட்க.. சரத்தும், நந்தினியும் அதிர்ச்சியுடன் அவன் குரல் வந்த திசை பக்கம் திரும்பினர்.

” அதி, அது.. அது ஒன்னும் இல்லைடா.. அவள் ஏதோ உளருராள்” என்ற சரத் அதியன் பக்கம் வர.. அவனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் கீர்த்தியின் அருகில் வந்தான் அதியன்.

” இப்போ யாரை பத்தி சொன்ன? வர்ஷான்னு தானே சொன்ன? அவளுக்கு என்ன? உனக்கு எப்படி அவளை தெரியும் ” என்று அதியன் ஒரு வித குரலில் கேட்க.. கீர்த்திக்கு பயத்தில் குரல் உள்வாங்கியது .

” டேய் அதி அது நம்ம வர்ஷா இல்லை வேற யாரோ ? ” என்று கூறிய நந்தினியை பார்த்து ” ஏய் ” என்று கத்திய அதியன் ஒரு விரல் நீட்டி அவளை எச்சரித்தவன்..

” யாரும் பேச கூடாது.. நீ சொல்லு இப்போ என்ன சொன்ன? வர்ஷா பத்தி என்ன சொன்ன? நந்தினி என்ன பண்ணா? ” என்ற அதியன் கீர்த்தியின் தோள்களை வலிக்க பற்றி கேள்வி கேட்கவும்.. அவளது முகம் வலியில் சுருங்கி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..

அவளது பயத்தை உணர்ந்து மெல்ல அவளை விடுவித்த அதியன் கண்களை மூடி திறந்து தன் கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டவன், அவள் மீதிருந்து தன் கையை எடுத்தான். ” சொல்லு… என் வர்ஷாவை பத்தி தானே சொன்ன? ” என்று பொறுமையை இழுத்து பிடித்து கேட்க.. அவனை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தி.

கீர்த்தி வர்ஷாவை பற்றி எதையோ சொல்ல வையெடுக்கவும்.. எங்கு அவள் உண்மையை எல்லாம் சொல்லி விடுவாளோ என்ற அச்சத்தில் விரைந்து வந்த நந்தினி கீர்த்தியின் கன்னத்தில் ஓங்கி அரைந்தாள்.

அவள் அடித்த வேகத்தில் தரையில் சுருண்டு விழுந்த கீர்த்தி கன்னத்தை பொத்தியபடி தன் அக்காவை மிரண்டு போய் பார்த்தாள். கீர்த்தியின் மனதில் இருந்த அன்னை என்ற அக்காவின் பிம்பம் மெல்ல மெல்ல உடைய ஆரம்பித்தது.. நந்தினி, கீர்த்தியின் மனதில் இருந்த அந்த அன்னை பிம்பத்தை உடைத்தாள் என்பதே உண்மை.

கீழே விழுந்து கிடைந்தவளின் அருகில் சென்று அவளது தாடையாய் வலிக்க பற்றிய நந்தினி ” வாயை திறந்து எதையாவது சொன்ன கொன்னுடுவேன் ” என்று மிரட்டியவளை வலியுடன் பார்த்த கீர்த்தி ” அக்கா” என்று விக்கித்து அழைக்க..

” ஷ்.. அக்கா நொக்கான்னு சொன்ன அவ்ளோ தான்.. வாயை மூடிட்டு இருக்கணும் புரியுதா ?” என்றவளை கண்ணீருடன் பார்த்தவள்..

” அப்போ மாமா சொன்னது எல்லாம் உண்மையா அக்கா.. நீ தான் அந்த பொண்ணோட இந்த நிலைமைக்கு காரணமா? ” என்று வேதனையுடன் கேட்டவளின் கன்னத்தில் மீண்டும் அரைந்திருந்தாள் நந்தினி..

“இப்போ தானே பேசாதான்னு சொன்னேன்.. ஆமாடி அது எல்லாம் உண்மை தான். இப்போ அதுக்கு என்ன? ” என்று கீர்த்திக்கு மட்டும் கேட்க்கும் குரலில் அவள் கூற..  கைகளை கட்டி கொண்டு அவள்  முன்னால் ஒரு உருவம் நின்றது..

அந்த உருவத்தின் நிழல் அறிந்து நிமிர்ந்து பார்த்தவளின் உதடுகள் “மாமா” என்று முணுமுணுக்க.. கண்களில் வலியுடன் திரும்பி பார்த்தாள் கீர்த்தி. அங்கு நின்றிருந்தது வேறு யாரும் அல்ல மகிழன் தான்.

வாட்ச்மேன் அவனை உள்ளே விடாமல் பிடிவாதம் பிடிக்க..கீர்த்தி உள்ளே வந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகவும் பொறுமை இழந்த மகிழன் அந்த வாட்ச்மேனின் மூக்கில் ஓங்கி குத்த சுருண்டு கீழே விழுந்தான் அவன்..

அவனை தாண்டி மகிழன்  வீட்டிற்குள் வர லேகாவும் அவனை தொடர்ந்து உள்ளே வந்தாள்.

 

மகிழனை கண்ட கீர்த்தி ” மாமா ” என்று இதழ் பிதுக்கி அழ தொடங்கவும்… அவளை தூக்கி விட்டவன், அவளது இதழிலின் ஓரத்தில் வழிந்த ரத்த துளிகளை துடைத்து விட்டான்.

” அவள் அடிச்சாளா? ” என்று கேட்ட மகிழனின் பார்வை நந்தினியின் மீது அழுத்தமாக விழ..

மகிழனது கோவம் உணர்ந்து..

” இல்லை ” என்று இருபக்கமும் தலையாட்டினாள் கீர்த்தி.

” பார்த்தியாடி.. இப்போ கூட உன்னை அவள் தப்பா சொல்லல, உன்னை அம்மாவா நெனச்ச பொண்ணை மிருகம் மாதிரி அடிக்க உனக்கு எப்படிடி மனசு வந்தது ” என்ற மகிழன்.. கீர்த்தியை லேகாவின் கையில் ஒப்படைத்து விட்டு, நந்தினியின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். அவன் அடித்த வேகத்தில் அங்கிருந்த சோபாவில் போய் விழுந்தாள் நந்தினி.

இங்கு சரத்தும்,அதியனும் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.. அதியனுக்கு அங்கு நடக்கும் ஒன்றுமே புரியவில்லை.

” நீ எவ்வளவோ தப்பு பண்ணியும் நான் உன்னை மன்னிச்சு விட்டேன். ஆனால் எப்போ நீ என் பொண்ணு மேல கைவச்சயோ அப்பவே நமக்குள்ள எல்லாம் முடிச்சுது.. ” என்று அவளை அனல் தெறிக்க பார்த்த மகிழன் கீர்த்தியை அழைத்து கொண்டு அங்கிருந்து செல்ல பார்க்கவும்.

” ஒரு நிமிஷம் ” என்ற அதியனது குரல் அந்த அறை முழுவதும் சத்தமாக ஒலிக்க..அவர்களது கால்கள் அப்படியே  நின்றது.

” என்ன ? ” என்று மகிழன், அதியனை திரும்பி பார்க்க..

” நான் கீர்த்தி கிட்ட ஒன்னு கேட்கணும்… அவள் என் வர்ஷாவை பத்தி என்னமோ சொன்னா? அது என்னன்னு எனக்கு தெரியணும் ” என்று அதி கேட்க.

” ஆமா நீங்க யாரு ? ” என்று கேட்டான் மகிழன். வர்ஷாவின் வாழ்க்கையில் அதியன் யார்? என்று சத்யன் கூறி அது இவனுக்கு தெரியும்.. ஆனால் நேரில் இப்போது தானே பார்க்கிறான். நந்தினி கூட இவர்களை பற்றி வீட்டில் எதையும் கூறியது கிடையாது அல்லவா?

” நான் அதியன் ”

” அதியன்!  விக்ரமன் அபிமன்யு அவரோட தம்பியா நீங்க? ” என்று மகி கேட்க.

” உங்களுக்கு விக்ரமனை எப்படி தெரியும்? ” என்று அதியன் யோசனையுடன் கேட்க.. இங்கு நந்தினிக்கும், சரத்துக்கும் உள்ளூர பயம் உருவாக தொடங்கியது.

” தெரியும் ” என்ற மகிழன்.. தனக்கு தெரிந்தவரை அவனிடம் அனைத்தையும் கூறினான்.

” அந்த வர்ஷாங்குற பொண்ணோட நிலைமைக்கு இவளும் ஒரு காரணம் இப்போ அந்த பொண்ணு தன்னிலை இழந்து படுத்த படுக்கையா கிடக்குது. ” என்று அவன் சொல்ல, மொத்தமாக நொறுங்கி போனான் அதியன்.

” அப்போ அவளுக்கு கல்யாணம் ஆகலயா? ”

” இல்லை… மூணு வருசமா அந்த பொண்ணு அப்படியே தான் இருக்குன்னு சொல்லுறாங்க.. அந்த பொண்ணுக்கு அப்படி ஆகும் போது அவள் கர்ப்பமா வேற இருந்து இருக்கா.. குழந்தையும்.. ” என்று மகிழன் கூற வேதனைப்படவும், அதியனது பார்வை சரத்தின் பக்கம் திரும்பியது.

எச்சில் விழுங்கியபடி விக்கித்து நின்ற சரத்தின் சட்டையை கொத்தாக பற்றிய அதியன் ” அவங்க சொல்லுறது உண்மையா? நீங்களும், தேவனும் சேர்ந்து தான் உங்க சுயநலத்துக்காக என் வர்ஷாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கினீங்களா? சொல்லுடா? ” என்ற அதியன் சரத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

” அது இல்லை அதி ” என்று நந்தினி பேச வரவும்..

” ஏய் … வேண்டாம்.. நீ பேசாத.. என்னை பேசு வைக்காதா.. தள்ளி போ.. போடி ” என்று கத்திய அதியன்.. மீண்டும் சரத்தின் சட்டையை பிடித்தான்.

” இவ்ளோ நாள் எதுக்கு என்கிட்ட பொய் சொன்ன? சொல்லு எதுக்குடா பொய் சொன்ன?  எவ்ளோ பொய்.. எவ்ளோ பித்தலாட்டம்.. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. அவள் புருஷனோட சந்தோஷமா இருக்காள்.  எத்தனை பொய்.. இதுல போட்டோ மார்பிங் வேற.. அதை பார்த்து எத்தனை நாள் அழுதிருப்பேன் தெரியுமாடா? என்னை முட்டாளா நெனச்சு தானே என் கிட்ட பொய் சொல்லி இருக்க? இவன் நம்ம என்ன சொன்னாலும் நம்புவான். இவனை ஈஸியா ஏமாத்திடலாம்னு நினைச்சிட்ட தானே.. பதில் சொல்லுடா? என் வர்ஷாவை ஏன் இப்படி பண்ணீங்க ? சொல்லுடா ? ” என்ற அதியன் சரத்தின் தலையை பிடித்து சுவரில் ஓங்கி மோதினான்.

அதனை பார்த்து நந்தினி அதியனை தடுக்க வந்தாள்.  தடுக்க வந்தவளின் கழுத்தை பிடித்து நெறித்த அதியன் ” பொண்ணுன்னு பார்க்குறேன்.. இல்லை நடக்கிறதே வேற, நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்னு நினைச்சியா? அன்னிக்கு நீ எனக்கு போட்ட ஊசியினால வந்ததுடி எல்லாம். அதுல ஏதோ தப்பு இருக்குன்னு என் நடவடிக்கையே எனக்கு உணர்த்திடுச்சு.. இருந்தும் இவ்ளோ நாள் உன்கிட்ட அதை பத்தி நான் ஒருவார்த்தை கூட கேட்டது இல்லை.. பிரச்சனை வேண்டாம்ன்னு நெனச்சேன்.  அந்த ஊசியால தான் நான் அவள் கிட்ட தப்பா நடந்துகிட்டேன்.. இல்லன்னா.. சத்தியமா எங்க வாழ்க்கை நல்லா இருந்து இருக்கும் எல்லாதுக்கும் மூல காரணமே நீ தாண்டி.. உன்னை ப்ரெண்டா நெனச்ச பாவத்துக்கு என் வாழ்க்கையில் விளையாடிட்டியே.. நான் அவள் மேல எவ்ளோ உயிரா இருந்தேன்னு இங்க இருக்க யாருக்கும் தெரியாது, ஆனால் உனக்கு தெரியும் தானே..எத்தனை நாள் நான் உன்கிட்ட அவளை பத்தி பேசி இருப்பேன். என் வலியை உன்கிட்ட சொல்லி புலம்பியிருப்பேன். அது எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி ஒரு விஷயத்தை பண்ணி இருக்கண்ணா நீ எல்லாம் என்ன ஜென்மம் டி ” என்ற அதியன் அவளது கழுத்தை இன்னும் நெருக்கி பிடிக்க..  மூச்சி விட முடியாமல் திணறினாள் நந்தினி.

” மாமா அக்கா ” என்று அவர்களது சண்டைக்குள் போக நினைத்த கீர்த்தியை தன் கைக்குள் வைத்து கொண்டாள் லேகா.

மகிழனும் எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பி நின்றுகொண்டான்.. உண்மை என்னவென்றால் நந்தினி படும் துன்பத்தை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.. ஆனாலும் அவளுக்கு இந்த தண்டனை தேவை தான் என்று எண்ணியவன் அமைதி காத்தான்.

ஒருகட்டத்தில் நந்தினி மூச்சிற்க்காக கஷ்டபட.. அதியனே அவளை தன் பிடியில் இருந்து விடுவித்தான்.. ” ச்சே  உன் அளவுக்கு இரக்கம் இல்லாமல் என்னால நடந்துக்க முடியலடி” என்றவன் சரத்தை அடிக்க ஆரம்பித்தான்.

” அதியா சத்தியமா அவள் வயித்துல இருந்த குழந்தை உன்னோடதுன்னு எனக்கு தெரியாதுடா, என்னை மன்னிச்சிடு.. ” என்று அடி தாங்க முடியாமல் கூறினான் சரத்.

” அப்போ அவள் இடத்தில் வேற பொண்ணு இருந்தால் நீங்க பண்ணது சரின்னு ஆகிடுமா? யாரா இருந்தால் என்னடா? ஒரு பொண்ணை உங்க சுயநலத்துக்காக அடிச்சு காயப்படுத்துறது எந்த விதத்தில் நியாயம் ஆகும்.. நீங்க பண்ண எல்லா பிராடு வேலையையும் விக்ரமன் தான் பண்ணான்.. அவன் உங்களை கொல்ல நினைக்குறான் அப்படி இப்படின்னு எத்தனை பொய்..என்ன எல்லாம் சொல்லி என்னை நம்ப வச்சி இருக்கீங்க..  உங்க மேல தப்பில்லை அதை எல்லாம் முட்டாள் தனமா நம்பி இருந்தேன் பாரு என்னை சொல்லணும், என் மேல தான்டா தப்பு.. என் வர்ஷாவை.. என் குழந்தையை.. எங்க வாழ்க்கையை எல்லாத்தையும் அழிச்சிட்டிங்களேடா பாவிங்களா? ” என்ற அதியன் அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து சரத்தின் தலையில் ஓங்கி அடித்தான்.

சரத் வலியில் துடிக்க.. அவனது கதறலை கண்டு அதியனுக்கு கண்ணீர் வந்து விட்டது..  ” நீ ஏன்டா இப்படி பண்ண? உன்னை நம்பினனேடா. எனக்கு போய் இப்படி ஒரு துரோகத்தை ஏன் பண்ண? என்னையே உன்னை அடிக்க வச்சிட்டியேடா.. ஏன் இப்படி பண்ண? ஏன் ? ” என்ற அதியன் மீண்டும் மீண்டும் வெறி தீர அவனது முகத்தில் குத்தினான்.

அரைகுறை உயிருடன் வலியில் துவண்டு கிடந்தவனை வேதனையுடன் பார்த்த அதியன்.. “அம்மாவோட கர்ப்பப்பையில் இருந்து இப்போ வரை உன் கூடவே தானடா இருந்தேன்.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்லை.. அவளை போய் ஏன்டா இப்படி பண்ணீங்க? நீங்களும் மிருகமா மாறி என்னையும் இப்படி மிருகமா மாத்திடீங்களேடா ?” என்ற அதியன், சரத்தின் ரத்தம் திளைத்திருக்கும் தனது கரத்தை பார்த்தவன் தலையில் அடித்து கொண்டு கதறினான்.

திக்கி திக்கி ” அதி…அதி ” என்று அழைத்த சரத்…

” என்னை கொன்னுடுடா..எவன் கையாலயோ நான் சாகுறதுக்கு பதில் என் தம்பி உங்கையால என்னை இப்போவே கொன்னுடுடா.. நம்ம அம்மா மடியில் தூங்கினது எனக்கு நியாபகம் இல்லை.. உன் மடியில் சாகுறது மறுஜென்மம் எடுக்கிற வரை மறக்ககூடாதுடா..என்னை கொன்னுடு.. என்னை கொன்னுடுடா.. என் தம்பிடா நீ என் உயிரில பாதிடா நீ.. உனக்காக தானேடா எல்லாமே பண்ணேன்.. நான் வாழுறதே உனக்காக தானேடா ”  என்ற சரத்தை பார்த்த அதியனின் விழிகளில் வழிந்த கண்ணீர்  துளிகள் சரத்தின் நெற்றியை நனைத்தது.

எதுவும் பேசாமல் அவனை விடுத்து எழுந்து கொண்ட அதியன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு ” எனக்காக தான இதை எல்லாம் பண்ண? எனக்காக  தானே என் வர்ஷாவை காயப்படுத்தின? ம்ம்ம்  நீ உயிரோட இரு.. ஆனால் இனி உனக்காக உறவுன்னு சொல்லிக்க நான்  இருக்க மாட்டேன்.. கண்டிப்பா இருக்க மாட்டேன் ” என்ற அதியன் சரத்தை திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

நேராக மகிழனிடம் வந்த அதியன் ” என் வர்ஷா எங்க இருக்காள்ன்னு உங்களுக்கு தெரியுமா? ” என்று கேட்டான்.

மகிழன் “தெரியும் “என்று கூற …

” என்னை அங்க அழைச்சிட்டு போங்க.. நான் அவளை பார்க்கணும் ” என்றவனை, லேகாவின் காரில் மகிழன் அழைத்து சென்றான்.

தன்னை கடந்து செல்பவனை வலியுடன் பார்த்த சரத் ” அதி…டேய் அதியா என்னை விட்டு போகாதடா.. நீ இல்லைன்னா எனக்கு யாருமே இல்லைடா… நான் செத்திடுவேன்டா என்னை உன் கையாலயே கொன்னுடுடா   ” என்று கதறி அழுதவனது குரல் காற்றில் கரைந்தது.

அதியனை அழைத்து கொண்டு வர்ஷா இருக்கும் இடத்திற்கு வந்தனர் மகிழன், கீர்த்தி மற்றும் லேகா.

சத்யன் வர்ஷாவின் அருகில் அமர்ந்து அவளிடம் பேசிக்கொண்டிருக்க.. எப்போது போல அவனது பார்வையில் அவளது கண்கள் சிரித்தது.

அப்போது அதியன் மகிழனுடன் அந்த அறைக்குள் வர.. சட்டென திரும்பி பார்த்த சத்யன், அங்கு அதியனை கண்டு சற்று அதிர்ந்து தான் போனான்.

ஏனோ ஏதோ ஒன்று தன்னை விட்டு செல்லப்போவதை உணர்ந்தான்.. உடலில் இருந்து யாரோ உயிரை மட்டும் உருவி எடுப்பது போல சொல்ல முடியாத வலியை அவன் இதயம் உணர்ந்த தருணம்.. அவனது கால்கள் தடுமாறியது.. நிற்க தெம்பில்லாததை போன்று ஒரு பிரம்மை..

நா தடுமாறியது.. பேச்சு வரவில்லை.. அறைக்குள் வந்த அதியன் அங்கு கட்டிலில் பாதி உயிராக கிடக்கும் தன்னவளை கண்டு நொறுங்கி போனான்..

உதடுகள் துடித்தது.. கண்களில் இருள் சூழ்ந்தது.. எதிரில் இருக்கும் அனைத்தும் மங்கலாக தெரிந்தது.. கண்களை பறிக்கும் அழகுடன் வலம் வந்தவளா இவள்? என் வர்ஷா! என்னவள் இந்நிலை அடைய எத்தனை துன்பப்பட்டாளோ? புள்ளி மானாக தன்னை சுற்றி திரிந்தவளை படுத்த படுக்கையாக உடல் வற்றி கிடந்ததை பார்த்தவனது கண்களில் இருந்து தன்னிச்சியாக கண்ணீர் வழிந்தது.

” எல்லாரும் கொஞ்சம் வெளியே போங்க ” என்று அதியன் அமைதியா கூற.. சத்யனுக்கு என்ன என்று எதுவும் புரியவில்லை..

மகிழன் தான் சத்யனின் கையை பிடித்து வெளியே அழைத்து வந்தான்.. அறையில் இருந்து வெளியே வந்த சத்யனின் பார்வை வர்ஷாவின் மீதே பதிந்திருந்தது.

விக்ரமன் கூறிய அந்த வலியை இப்போது உணர்ந்தான் சத்யன்.

அவர்கள் வெளியே செல்லவும் சென்று கதவை தாழிட்டு விட்டு வந்த அதியன்.. அப்படியே சோர்ந்து போய் வர்ஷாவின் கால் மாட்டில் தலை வைத்துபடுத்து விட்டான்.

ரொம்ப நேரமாக அவளது கால்மாட்டில் தலை வைத்தபடி அவளது முகத்தை பார்த்திருந்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

கத்தி அழ அவன் உடலிலும்,மனதிலும் தெம்பில்லை.. மனம் முழுவதும் ரணமாக வலித்தது.. ஏதோ ஒன்று இதயத்தை அழுத்துவதை போன்று உணர்ந்தவனால் ஒரு கட்டத்தில் மூச்சு கூட விட முடியவில்லை… ஏங்கி ஏங்கி மூச்சு விட்டவனது கண்ணீர் துளிகள் அவளது காலை நனைத்தது.

வண்ண வண்ண நக சாயங்களால் ஜொலித்த அந்த தாமரை கால்கள் இன்று தளர்ந்து தோல்மீது ஒட்டிய நகம் போல காட்சி அளித்தது.. அதை கண்டு ஊமையாக கண்ணீர் வடித்தவன், அவளது கால்களை எடுத்து தன் நெஞ்சில் வைத்து கொண்டு ” என்னை மன்னிச்சிடு வர்ஷா ” என்று சத்தம் போட்டு கதறி அழுதான்.  இவ்வளவு நேரம் சேர்த்து வைத்திருந்த அவனது கண்ணீரும் கதறலும் மொத்தமாக வெடித்து வெளிவந்தது..

அந்த சத்தத்தை கேட்டு வெளியில் இருந்த அனைவரும் பதறி போனார்கள்.

நிலமை விபரீதமாவதை உணர்ந்த சத்யன் உடனே போனை எடுத்து விக்ரமனுக்கு அழைத்தான்.

” விக்ரமன் சார் அதியன் இங்க வந்திருக்கான் ” என்று கூற..

” என்ன சொல்லுற? அவன் எப்படி இங்க? ” என்று கேட்ட விக்ரமன் ” சரி இரு, உடனே நான் அங்க வரேன் ” என்றபடி வண்டியை அங்கு திருப்பினான்.

வர்ஷா விக்ரமனது வீட்டில் இல்லை அவர்களது கெஸ்ட் ஹவுஸில் இருந்தனர்.. பக்கத்திலேயே மருத்துவமனை என்பதால் அந்த இடம் தான் வர்ஷாவின் உடல்நிலைக்கு சரி என்று எண்ணிய விக்ரமன்.. பரதனையும் சத்யனையும் அங்கு அவளுக்கு பாதுகாப்பாக இருக்க வைத்தான்.

தளர்ந்த அவளது கால்களில் மெல்ல இதழ் பதித்த அதியன் ” என்னை மன்னிச்சிடுடி.. என்னால தான் எல்லாம்.. என்னால உன்னையும் காப்பாத்த முடியல, நம்ம குழந்தையையும் காப்பாத்த முடியல.. ” என்றவன்.. எழுந்து வந்து அவளது நெற்றியில் வலிமுகுந்து போய் முத்தம் பதித்தான். அவனது கண்ணீர் அவளது திறந்திருந்த விழிகளில் விழுந்தது.

” நான் ஒரு முடிவோட தான் இங்கே வந்தேன் வர்ஷா. நான் போறேன் உன்னை விட்டு ரொம்ப தூரம் போறேன்.. அது தான் உனக்கு நல்லது. நீ நல்லா இருடி சீக்கிரமே உனக்கு குணமாகும் நான் போறேன்டி ” என்றவன் அருகில் இருந்த ஒரு கண்ணாடி ஜாடியை எடுத்து கீழே போட்டான்.

அது உடைந்து சிதற.. அதில் ஒரு பெரிய கண்ணாடி துண்டை எடுத்து தன் கைகளில் வைத்து கொண்டவன் ” ஐ லவ் யூ டி ” என்று கண்ணீருடன் வர்ஷாவின் முகம் பார்த்து  உரைக்க.. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது ஆனால் பாவம் அதை கவனிக்க தவறினான் அதியன். கண்களை மூடி திறந்து அந்த கண்ணாடி துண்டை  தன் கழுதருகில் வைத்தவன் தன் முடிவை தீர்மானித்து இருந்தான்.

என்னில் நீ

எண்ணிலடங்கா

வண்ணமாவாய்… பெண்ணே

அனைவரும் நினைத்தனர்

உன் அழகு எனை ஈர்த்தது என்று…

சத்யம் செய்வேன், அன்று உன் அன்பை வேண்டி தான் அப்பிழை செய்தேன்…

எத்தனையோ அழகிகளை துகில் உரிந்த என் கண்கள்…

காதலாய் கண்டது உனை மட்டுமே…

என் தீண்டல்கள் உனை ரணப்படுத்திய போது, உனை விட நான்  அடைந்த வேதனை அதிகமடி…

உன்னுடன் வாழ நினைத்தேனே தவிர….ஒரு நாளும் உனை காயபடுத்த  நினைக்க வில்லை…

நீ என்னை விட்டு சென்ற நொடியே நான் மறித்து விட்டடேனடி… அதன் பிறகு நடமாடியது என் சதை பிண்டம் மட்டுமே…

வார்த்தைகளால் விளக்க முடியாத வலிகள் இன்னும் ரணமாய்.. என் இதயத்தை குத்தி கிழிக்க…

இருந்தபோதும்.. நான் ஆறுதலுக்கு, கூட இன்னொரு மடி தேடவில்லையடி.

தாரமாக நினைத்து உன் மடி சாய்ந்திருந்தால்… வேறு துணை தேடி இருப்பேனோ! என்னவோ…

ஆனால் தாயாய் எண்ணி உன் மடி சாய்ந்ததால் மாற்று யோசிக்க… மனமில்லையடி…

உயிர் கொண்டு, எனை

மன்னித்து மீண்டும் ஏற்பாயோ

அல்லது வேரோடு புதைப்பாயோ?

அதை எண்ணி கவலை இல்லை…

என் முடிவை நானே தீர்மானித்து விட்டேன்,

மீண்டும் பிறவி கொண்டால், நிச்சயம் உன் மடி சேர்வேன்…

என் பிறப்பும் , இறப்பும்

உன் மடியில் என்றால் மரணம் வரையிலும் என் வதனம் புன்னகைக்கும்…

நினைவுகளுடன் அதியன்…

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்