Loading

வீட்டின் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கியிருந்தான் நந்தா. அவன் முகமே வாட்டமாக காணப்பட்டது. எத்தனை மகிழ்ச்சியுடன் இன்று காலை மதுவர்ணிகாவை அழைத்து சென்றிருந்தானோ, அதைவிட சோகமே உருவாய் வந்து இறங்கியிருந்தான் நந்தா. வாசலை அடைந்ததுமே அவனது கைப்பேசி சிணுங்கியது. கேணி தான் அழைத்திருந்தான். சலிப்புடன் கைப்பேசியை காதில் வைத்தவன்,

 

“சொல்லுடா?” என்றான் சுரத்தே இன்றி.

 

“சிஷ்யா வீட்டுக்கு போயிட்டியாடா?”

 

“ம்ம்ம்”

 

“டேய், கவலைப் படாதடா… உன் சம்சாரம் வீட்டுல தான் இருக்கும்.”

 

“சரி. அந்த பொண்ணுக்கு எதாவது சாப்பிட வாங்கி கொடுடா.”

 

“அதுக்குனு இல்லாட்டியும் வயித்துல வளர்ற பிள்ளைக்காகவாவது பார்த்து வாங்கி தருவேன்டா. நீ எது பத்தியும் கவலைப்படாத. மொத நீ போயி சாப்பிடு.” என்றவன் போனை அணைத்திருந்தான்.

 

ஆம் மானசாவை கேணியுடன் தான் அனுப்பியிருந்தான் நந்தா. லாரி வந்த வேளையில் மயங்கி சாலையில் விழச் சென்றவளின் கைகளை பற்றி நிறுத்தி காத்திருந்தவனைக் கண்டதுமே முகத்தை திருப்பிக் கொண்ட இவனோ அதே நொடி அருகிலிருந்த புதரின் உள்ளே ஒளிந்துக் கொள்ளவும், அந்நொடி ஜீப்பைக் கடந்து அதிவேகத்தில் சென்ற லாரி புழுதியை கிளப்பி விட்டு செல்லவும் சரியாக இருந்தது. ஜீப்பின் அருகே நின்றிருந்த கேணிக்கோ, புழுதி இருமலை உண்டாக்க, கண்களை கசக்கியபடி நின்றவனின் வாயில் கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழ, நல்லவேளை லாரி ஓட்டுநர் தப்பித்து தான் போனார்.

 

லாரி ஓட்டுனரை தாறுமாறாக திட்டயபடி திரும்பிய கேணியின் கண்களோ நந்தாவைத் தேட, அவனது உதடுகளோ, “ஒரே புழுதியில காணாமல் போயிட்டானே. இது என்னடா வம்பா போச்சு. ஜீ பூம் பா மேஜிக் மாதிரி இருக்கே.” என்று புலம்பின.

 

“டேய் சிஷ்யா, எங்கடா போய் தொலைஞ்ச?” நாலாபுறமும் கண்களை சுழலவிட்டான்.

 

அந்நொடி அவன் கண்களில் அகப்பட்டது என்னவோ சற்று தொலைவில் நின்றிருந்த மானசாவும், அவளிடம் யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருந்த காட்சியும் தான்.

 

‘ஆமா யாரு இவன்?’ என்று யோசித்தவனுக்கு குழப்பமாக தான் இருந்தது. பணத்தை எண்ணும் நேரத்தில் அவ்விடம் லாரி வந்ததையோ, அவளைக் காக்க நந்தா முன்னேறி சென்றதையோ, அவன் காக்கும் முன்னே வேறு ஒருவர் அவளை காப்பாற்றியதை இவன் உணரவில்லை‌. வேறு வழியின்றி மானசாவை நோக்கி நகர்ந்துச் சென்றான் கேணி.

 

“பரதேவதை.” என்றவனது அழைப்பில் மானசாவும், அவளுடன் நின்றிருந்தவனும் திரும்பி பார்க்க, அவ்விடம் நிர்மலமான முகத்தில் நின்றிருந்தான் கேணி.

 

‘இரண்டு பேரும் பார்க்குற பார்வையே சரியில்லையே. யார்ரா இவன்? இந்த கோடை வெயில்ல கோட் சூட் போட்டுட்டு இருக்கான்.’ என்று மனதில் நினைத்தவன் மானசாவை பார்த்து, “உனக்கு தெரிஞ்சவரா?” என்று கேட்ட நொடி, பட்டென்று இல்லை என்று தலையசைத்தாள் பெண். 

 

அடுத்து இவன் நந்தாவை கேட்க நினைத்த வேளையில் இடையில் ப்ளூடூத் வழியாக யாருடனோ கருப்பு நிற கோட் அணிந்தவன் பேச,

 

‘யார்ரா நீ..? ஒருவேளை ஜேம்ஸ் பாண்டோட ஒன்னுவிட்ட தம்பி பையனா இருப்பானோ..? இங்கிலிஷ்ல வேறு பேசுறான்.வசனமே புரியலையே?’ என்று தலையை சொறிந்த வண்ணம் அவனை பார்த்தான் கேணி.

 

ப்ளுடூத்தை அணைத்தவன், கேணியை பார்த்து முறைக்க, கேணியோ, ‘நீ முறைச்சா நான் உன்னை விட முறைப்பேன்டா.’ என்ற ரீதியில் அவனை பார்த்தான்.

 

“ஹே மேன் வாட் தி ஹெல் ஆர் யூ டூயிங்? வொய் டிட் யூ லீவ் ஹேர் அலோன்.” என்றவன் ஆங்கிலத்தில் அவனை வெளுத்து வாங்கிய தருணம் ஒன்றுமே அவனுக்கு விளங்கவில்லை.

 

“யாயா ஐ அம் பைன்னு. ஹவ் ஆர் யூ?” என்றவன் மனமோ, ‘எனக்கு இங்கிலிஷ் தெரியும்ல’ என்ற ரீதியில் அவனைத் தெனாவெட்டாக பார்க்க, அந்நொடியே அவனுக்கு புரிந்து விட்டது. இவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை என்பது‌.

 

“அறிவு இருக்கா உனக்கு? மாடு மாதிரி வளர்ந்திருக்க? பிரெக்னென்ட் லேடியை தனியா நிற்க வெச்சுட்டு எங்க போன. இடியட். ஒரு நிமிஷம் விட்ருந்தா கூட அந்த லாரில விழுந்திருப்பாங்க. மடப்பயலே.” என்று புதியவன் சரமாரியாக திட்ட, குழம்பி போனான் கேணி.

 

“டேய், பார்த்து பேசு. சும்மா இஷ்டத்துக்கு பேசுற? என்னடா சொல்ல வர?” என்றவன் தலையும் புரியாது வாலும் புரியாது விழிக்க, மானசாவிற்கு அவன் முகபாவனைக் கண்டு சிரிப்பு வந்தது தான் மிச்சம். இருந்தும் அந்த புதியவனுக்கு நன்றி உரைத்தவள், 

 

“தாங்ஸ்ங்க. இவங்க மேல தப்பு இல்லை. என்னோட தப்பு தான். ப்ளீஸ் எதுவும் சொல்லாதீங்க.” என்றிவள் கூறவும் தான் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு சென்றான் அந்த புதியவன்.

 

கேணியோ இவளை முறைத்தான். “என்ன எதுக்கு அந்த பஞ்சு மிட்டாய் தலையன் திட்டிட்டு போறான். ஆமா நீ முழுகாம இருக்கியா?” என்றவன் அதிர்ச்சியோடு கேட்க,

 

அவன் கேட்பதை சரியாக புரிந்துக் கொள்ளாதவளோ, “வாட் டிட் யூ மீன்? நான் எதுக்கு முழுகணும்?” என்றாள் குழப்பமாக. அதற்குள் அவ்விடம் வந்த நந்தாவோ, பெருமூச்சொன்றை விடுத்தபடி இருவரையும் பார்த்தான்.

 

“டேய் சிஷ்யா, எங்கடா போன?” என்ற கேணியோ அவனைக் கண்டதும் பதறி அடித்தபடி அணைத்துக் கொண்டான். 

 

“இயற்கை அழைப்புடா அதுதான். அத,விடு… ஏங்க நீங்க பிரெக்னென்டா?” என்று மானசாவை பார்த்து கேட்டான். அந்த நிமிடம் அவன் மறைந்தது பற்றி அவன் யாரிடமும் உரைக்கவில்லை. கேணியும் அதை இயல்பாகவே எடுத்துக் கொண்டதால் சந்தேகிக்கும் அவசியமும் அவனுக்கு வரவில்லை.

 

“ஆமா.” என்று தலையசைத்தவளை முறைத்து பார்த்த கேணியோ, “அதுதானே நானும் கேட்டேன்.” என்றான் ஓரக்கண்ணால் முறைத்தபடி, மேலும், “ஏம்மா உன் புருசன் எங்க? நீ பாட்டுக்கு தனியா ரோட்டுல சுத்திட்டு இருக்க?” சற்று அதட்டலாகவே கேட்டான் கேணி.

 

அவனது கேள்வியில் அவள் முகம் வாடிவிட்டது. என்ன சொல்வது என்று தெரியாது தவித்தாள். எப்படி சொல்வாள்? தான் ஒருவனிடம் ஏமாந்து நிற்பதை. அவளது முகமாற்றத்தை எல்லாம் கவனித்த நந்தாவிற்கு ஓரளவு புரிந்துக் கொள்ள முடிந்தது.

 

“டேய் கேணி, அவங்க பிரச்சனையில இருக்காங்கனு பார்த்தாலே தெரியுது.” என்றவன் அவளை பார்த்து, “உங்களுக்கு எதாவது உதவி வேணுமா? தயங்காமல் கேளுங்க.” என்றான்.

 

“எனக்கு கொஞ்ச நாள் தங்கணும் இங்க. பாதுகாப்பான பிளேஸ் வாடகைக்கு வேணும்.” என்றவள் முழுநம்பிக்கையுடன் இவர்களிடம் கேட்க, மென் புன்னகையுடன் சம்மதித்தான் நந்தா. அதன்படி அவளை கேணியின் பொறுப்பில் ஒப்படைத்தவன், தன்னவளை தேடுவதற்காக சென்று விட்டு, அங்கும் இங்கும் அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றவன், வேறு வழியின்றி இறுதியாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் நந்தா.

 

வீட்டிற்குள் நுழைந்தவன், யாரேனும் பார்ப்பதற்கு முன்பாகவே தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான். தலைவேறு ஒருபுறம் வலிக்க, அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் அமர்ந்தவனுக்கு வேறு எந்த நினைப்பும் தோன்றவில்லை. 

 

“வேற எங்க போயிருப்பா… கண்டிப்பா வேணும்னே நம்மளை பயம் காட்ட இப்படி பண்றா. கேணி சொன்னது சரியா தான் இருக்கும்.” தன்னைத் தானே சமாதானம் செய்தவன் தலையைப் பற்றிக் கொண்டு அமர, அவன் அறைக்கதவு தட்டப்பட்டது. 

 

திடுக்கிட்டு நிமிர்ந்தவனுக்கு ஒருவேளை மாமனார் மற்றும் மாமியாராக இருந்தால் என்ன செய்வது என்றெல்லாம் தோன்றியது. எப்படி சமாளிப்பது என்று யோசிக்கும் போதே மனமோ அது மதுவாக இருக்குமோ என்றும் யோசித்தது. தட்டும் சத்தம் முற்றிலும் நின்றிருக்க, கதவையே வெறித்துப் பார்த்தான் நந்தா. அந்நொடி கதவை வேகமாக திறந்து உள்ளே நுழைந்திருந்தாள் மதுவர்ணிகா. அவளை பார்த்ததுமே நிம்மதி பெருமூச்சொன்றை விடுத்தவன் அடுத்த நொடி பெண்ணவளை முறைத்து பார்த்தான்.

 

ஆனால் அவளோ அவனை அசட்டையாக பார்த்தவள் நக்கல் தொனியில், “அடடே எனக்கு முன்னாடியே வந்துட்ட? எப்படி பா பறந்து வந்தியா?” என்றாள் கிண்டலாக.

 

“ஸ்டாப்பிட் மது. எங்கடி போன?” வெடுக்கென்று எழுந்துக் கொண்டு தன் முன் கேள்வி கேட்பவனை பார்த்து உறுத்து விழித்தாள் பெண்.

 

“என்ன டி போட்டு உரிமையா பேசுற? இந்த திமிருக்கான பனிஷ்மெண்ட் தான் இன்னைக்கு நான் உனக்கு கொடுத்தது. எப்படி நல்லாருக்கா?” என்றதுமே சுள்லென்ற கோபம் அவனுக்குள் உருவானது.

 

“ஏய் பைத்தியமா நீ? உனக்கு எதாவது ஆயிடுமோனு துடிச்சு போயிட்டேன் டி. போன அப்புறம் ஒரு வார்த்தை கால் பண்ணி சொல்லிருந்தா கூட நிம்மதியா இருந்திருப்பேன். ஆனால் நீ… ச்சே.”

 

“ஓய்! என்ன ச்சே ச்சீன்னுட்டு… இங்க பாரு என்ன பிளாக்மெயில் பண்ணி அழைச்சிட்டு போக நினைச்சது நீ. தப்பு உன் மேல இருக்கப்போ, என் மேல பழி போடாத. ஜஸ்ட் பாதியில விட்டுட்டு மட்டும் போனேனு சந்தோசப்படு. மூவ் மேன்.” என்றவள் அவனை தாண்டி செல்லப் பார்க்க, அவளது கைகளை பற்றியிருந்தான் நந்தா.

 

“டோண்ட் டச் மீ. அதுக்கு உரிமை கூட உனக்கு இல்லை.” என்றவள் அவனை ஒரு மாதிரியாக பார்க்க, அவளிடமிருந்து மதுவின் வாடை அவன் மீது அடித்தது.

“குடிச்சிருக்கியா?” என்றான் அதட்டலாக.

 

“என்ன பார்த்தால் எப்படி தெரியுது. குடிகாரி மாதிரி தெரியுதா? ஹான்? சொல்லு” என்றவள் அவனை எகிறிக் கொண்டு பேச, அடுத்த நொடியே அவளை ஓங்கி அறைந்திருந்தான் நந்தா. அதை சற்றும் எதிர்பாராதவள் பொறி கலங்கி போய் அவனை ஏறிட்டாள்.

 

“எதுக்கு என்ன அடிச்ச? சொல்லுடா?” என்றவள் கண்கள் சிவக்க அவனை பார்த்தாள்.

 

“குடிச்சிட்டு வந்தா அடிக்காமல் கொஞ்சுவாங்களா?” என்றவன் கேட்ட நொடி, “நான் குடிச்சதை நீ பார்த்தியா?” என்றவள் அவனை அடிப்பதற்காக கைகளை ஓங்க, அவளது கைகளை பற்றி தடுத்து நிறுத்தியிருந்தான் நந்தா.

 

“குடிச்சிட்டு வந்தது மட்டுமில்லாமல் கை வேற ஓங்குறியா? அப்படி என்னடி போதை வேண்டி கிடக்கு. நீயெல்லாம் என்ன பொண்ணு. எத்தனை தடவை பட்டாலும் திருந்தாத ஜென்மம் போல. ச்சீ குடிகாரி.” என்றவன் அவள் மீதிருந்த வேறு கோபத்தையும் வார்த்தை வழி இதை காரணம் காட்டி பேசிய நொடி அவள் முகமே வேதனையில் மாறியிருந்தது.

 

கண்கள் கலங்க, தான் அப்படிப்பட்டவள் அல்ல என்று கத்த துடித்தது அவளது உதடுகள். தன்னை நிரூபித்துக் காட்ட வழி தெரியாது தவித்தவள், தன்னருகே தன் கைகளை பற்றிக் கொண்டு நின்றிருந்தவனது உதடுகளை ஒரே மூச்சாக பற்றிக் கொண்டாள். ஏன் எதனால் என்று அவனுக்கும் புரியவில்லை. அவளுக்கும் புரியவில்லை. முரட்டு தனமாக அவனது உதடுகளை பற்றி இழுத்தவள், அவனை விட்டு ஆக்ரோசமாக நகர்ந்தபடி அவனை ஏறிட்டாள்.

 

“இப்போ சொல்லு நான் குடிகாரியா?சொல்லுடா” என்றவள் உதடு துடிக்க அவனை ஏறிட்ட நொடி, அவனது முகமே கருத்து போனது. தான் குடிக்கவில்லை என்பதை அவனுக்கு நிரூபிக்கவே வேறு வழியின்றி இதழ் முத்தம் கொடுத்திருந்தாள் மது.

 

“ஐ அம் சாரி.” என்றவன் அவளை ஏறிட, ‘உன் சாரி ஒண்ணும் எனக்கு தேவையில்லை’ என்ற ரீதியில் அவனை பார்த்தது பெண்ணவளின் கண்கள். 

 

அவனை அவ்விடம் விட்டுவிட்டு நேராக பெண்ணவள் சென்றது என்னவோ தோழியின் வீட்டிற்கு தான். அவள் தான் அவளை பப்பிற்கு அழைத்தும் சென்றிருந்தாள். இருந்தும் இவள் துளியளவு கூட மதுவினை அருந்தியிருக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவன் உதிர்த்த அவ்வார்த்தைகள் பெண்ணவளை வலிக்கவே செய்தது.

 

“என் பிரெண்ட் தான் குடிச்சா. அவ தான் என் டிரஸ்ல அதை சிந்துனா… ஆனால் நீ எதுவும் தெரியாமல் வாடை வரதுக்கே என்னை குடிகாரினு சொல்லிட்டல்ல. ஒன் செகெண்ட், அது என்ன எத்தனை தடவை பட்டாலும் திருந்தாத ஜென்மம்? நான் இதுக்கு முன்னாடி குடிச்சது உனக்கு எப்படி தெரியும்?” என்றவள் யோசனையுடன் கேட்ட நொடி திடுக்கிட்டு பார்த்தான் நந்தா.

 

“உன் மேல இருக்க கோபத்துல அப்படி சொன்னேன். ஓ அப்போ இதுக்கு முன்னாடி குடிச்சிருக்கியா மது?” என்றவன் சந்தேகமாக கேட்க, அவள் முகமே வாடி போனது. மறக்க நினைக்கும் கசப்பான நினைவுகள் அல்லவா அவை..!

 

“அப்படியே குடிச்சாலும் உனக்கு என்னடா வந்துச்சு?” என்றவள் உச்சபட்ச கோபத்தில் கூற அவளை சமாதானம் செய்திட முனைந்தான் நந்தா வேறு விதமாக திசைதிருப்பியபடி.

 

“அத விடு மது. மாமன் மேல இம்புட்டு லவ்வை இத்தனை நாள் எங்க ஒளிச்சு வெச்ச? உன் மேல எத்தனை கோபம் இருந்ததோ அத்தனையும் ஒரு முத்தத்துல சரி பண்ணிட்டடி ஜூஜிலி.” 

 

“வெட்கமே இல்லாமல் வழியிற? உனக்கு எத்தனை அவமானம் தந்தாலும் பத்த மாட்டீங்குதுல. இங்க பாரு என்னை நான் நிரூபிச்சு காட்டதான் அப்படி பண்ணேன். அப்புறம் உனக்கு முத்தம் கொடுத்தத நினைக்கும் போதே எனக்கு அறுவருப்பா இருக்கு.” என்றவள் கோபத்துடன் வார்த்தைகளை அள்ளி தெளிக்க, ஆணவனின் மனமோ கோபத்தில் தகித்தது. 

 

“போதும் நிறுத்து. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச கூட உனக்கு அருகதையில்லை.” என்றவன் அவளை முறைக்க,

 

“அதை கண்ணாடியை பார்த்து உனக்கு நீயே சொல்லிக்கோ. எப்போ பாரு வழிஞ்சிட்டு பேசுறது நீ?”

 

“வார்ரே வா. சீரியஸ்லி நீ ரொம்ப வித்தியாசமான பொண்ணு தான் உணர்ச்சிகளும் இல்லை. உணர்வுகளை மதிக்கவும் தெரியலை. தெரிஞ்சிருந்தால் நடுவழியில என்னை விட்டுட்டு போயிருக்க மாட்ட. இப்படி தினமும் மட்டம் தட்டி பேசியிருக்கவும் மாட்ட. அதான் உன் மனசு தான் கல்லாச்சே. அந்த கல்லுக்குள்ள ஈரமெல்லாம் இல்லை விசம் மட்டும் தான் இருக்கு.” என்றவனின் பார்வை அவளை ஊடுருவ, சிலை போல ஸ்தம்பித்து நின்றாள் மது. தன் கைகளை மடக்கி தன்னை கட்டுப்படுத்த நினைத்தவள் பல்லைக் கடித்தபடி நிற்க, மேலும் அவன் தொடர்ந்தான்.

 

“உண்மையாவே நீ பொண்ணு தானா? இல்லை பொண்ணு ரூபத்தில இருக்க தேளா? தேள் தான் நீ. உணர்ச்சிகள் இல்லாமல் கொட்டிட்டே இருப்ப? அடுத்தவங்க மேல வெறுப்பை மட்டும் தான் காட்டுவ?” என்றான் அழுத்தமாக. அதுவரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள பெரும்பாடு பட்டவள், அடுத்த நொடியே அவனது சட்டையைப் பற்றிக் கொண்டாள்.

 

“என்னடா தெரியும் உனக்கு என்ன பத்தி. உணர்ச்சிகளுக்கு, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராத ஜடமா நானு. சொல்லு? ஒரு காலத்துல அதே உணர்ச்சிகள், உணர்வுகள் அன்பு, பாசம், ஏக்கம்,காதல்னு எல்லாத்தையும் பெருசா தலையில தூக்கி சுமந்து இப்போ ஏமாந்து போய் நிற்கிற சாதாரண பொண்ணு தான்டா நான். சாதாரண பொண்ணு தான் நான். நம்பக் கூடாதவனை நம்பி இப்போ கல்லு மாதிரி நிற்கிறேன். இன்னசென்டா இருந்தாலும் தப்பு. திமிரா இருந்தாலும் தப்பு. என்ன தான் பண்ணட்டும்? சொல்லு… சொல்லுடா சொல்லு.” என்று உணர்ச்சிவசத்தில் அவனது சட்டையைப் பற்றி அவள் உரைத்த நொடி மிரண்டு போய் பார்த்தான் நந்தா.

 

“மது…” என்றவன் கூற வரும் முன்னரே மயங்கி அவன் மீதே சரிந்து போனாள் மதுவர்ணிகா.

 

எந்த விசயம் அவளது வாழ்வை

புரட்டிப்போட்டதோ… எந்த ஒரு நம்பிக்கை சிதைந்து போனதோ… அந்த கடந்த கால நினைவுகளின் தாக்கத்தை நினைத்த கணமே உள்ளுக்குள் தகிக்கும் கோபம் மன அழுத்தமாய் மாற அதீத இரத்த அழுத்தத்தின் விளைவாக மயங்கி சரிந்தவளைக் கண்டதும் நடுக்கத்துடன் ஏறிட்டன ஆணவனின் கண்கள்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்