Loading

10. அத்தியாயம் 

மெத்தையின் மீது மலர்ந்த முல்லைக்கொடி போல் படர்ந்துக் கிடந்த வெண்ணிலாவின் முகத்தில் இனம்புரியாத பூரிப்பு அதிகரித்துக் காணப்பட்டது. அவன் மீது உண்டான காதல் எப்பொழுது உண்டானது என்று கேட்டால் சொல்லத் தெரியாது அவளுக்கு. குழந்தை பருவத்தில் அவனை மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதையே குறிக்கோளாக வைக்கவில்லை அவள். அவ்வாறு அவள் செய்யும் செயலில் கூட அவன் நலனுக்காகவே இருக்கும். அது தவறாக அவனுக்கு தெரிந்தாலும், அவனது நலனுக்கு முன்பு, தான் தவறாக சித்தரிக்கப்படுவது கூட பெரிதாக தெரியவில்லை அவளுக்கு.

 

தன் அத்தை மகனான அத்தானைக் காண பல வருடம் கழித்து வந்திருந்தாலும், அவன் மீது இவளுக்கு உண்டான அன்பு மட்டும் குறைந்திடவே இல்லை. அன்று அவனது ஸ்பரிசத்தில் நெளிந்தவள், இன்று முத்தத்தில் முழுவதுமாக கிறங்கி கிடக்கிறாள். பாவையின் வதனம் முழுவதும் ஆம்பலை போல் சிவந்து காணப்பட்டது. 

 

“ச்சீ போங்க அத்தான். ரொம்ப அடாவடி பண்றீங்க. இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி முத்தம் குடுக்குறதெல்லம் ரொம்ப தப்பு அத்தான்… தப்பு.”  வெள்ளி கொலுசு சிணுங்க கால்களை ஆட்டியபடி அவன் தன் முன் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசினாள் நிலா.

 

அந்நேரம் பார்த்து பிரபாவதியின் அழைப்பு அவளது செவிகளை அடைய, எழுந்துக் கொண்டவள் விரைந்து வெளியே சென்றாள்.

 

“சொல்லுங்க அத்தை.”

 

“நான் வெளியே போறேன்டா. வரதுக்கு லேட் ஆகும். மாமாவும் ஆபிஸ் கிளம்பிட்டாரு. மதியம் சாப்பாடு கீதா செஞ்சுட்டு போயிட்டா. மறக்காமல் சாப்பிடு.”

 

“ம்ம்ம்… சரிங்க அத்தை.”

 

“அப்புறம் டோர் லாக் பண்ணிக்கோ. எதாவதுனா கால் பண்ணு நிலா.”

 

“ஓகே அத்தை. நான் பார்த்துக்கிறேன். நீங்க பார்த்து போயிட்டு வாங்க.” என்றவள் இன்முகத்துடன் வழியனுப்பி வைக்க, பிரபாவதியும் சென்று விட்டார். 

 

வெகு நேரம் அமைதியாக தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சலிப்பு தட்டிட, எழுந்து இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருந்தவளுக்கு, உமாபதியின் அறைக்கு சென்று பார்க்கலாமா? என்ற யோசனை தோன்றியது. 

 

காலையிலேயே அவன் வெளியே சென்றுவிட்டான் என்பதால், எந்தவித தயக்கமும் இன்றி அவன் அறைக்குள் சென்றாள். அறை முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருக்க, 

 

“அத்தான் படிப்ஸ் தான் போல. நம்ம வருங்கால பெட்ரூம் ரொம்ப நல்லா இருக்கே.” என்றவள் அவன் உறங்கும் மெத்தையின் மீது படுத்துக் கொண்டாள். தனக்கு எதிரே இருந்த அவனின் புகைப்படத்தை பார்வையாலே படம் பிடித்தவள் அவனுடன் பேசத் தொடங்கினான்.

 

“உமா அத்தான். பார்க்க நல்ல பையன் மாதிரி இருந்துகிட்டு நீ பண்ற வேலை எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே. என்ன அத்தான் என்மேல பயம்விட்டு போச்சா?” என்றவள் படுத்த வாக்கிலேயே அவன் புகைப்படத்தைக் கண்டு மிரட்டிக் கொண்டிருக்க, அழுத்தமான காலடி தடம் வரும் சத்தம் கேட்டதில் திடுக்கிட்டு எழுந்தாள் பெண். 

 

“அச்சச்சோ கதவை வேற தாழ் போடலை. யாரு வந்திருப்பா?” விழி பிதுங்கி போய் யோசித்தவள், உடனே அங்கிருந்த மேசையின் அருகே  சுவற்றில் மறைந்தபடி, ஓரக்கண்ணால் எட்டிப் பார்க்க, அறைக்குள் அதிரடியாக நுழைந்திருந்தான் உமாபதி. 

 

அவனை கண்டதும் வாயடைத்துப் போய் நின்றவள், சுவற்றில் மேலும் ஒன்றி நின்றுக் கொண்டாள். உள்ளே வந்தவன் தனது டீசர்ட்டை கழற்றிவிட்டு, ஹோம்தியேட்டரை உயிர்ப்பிக்க, இசை மழை அறை முழுவதும் பரவத் தொடங்கியது. பாடலின் ஒவ்வொரு பீட்டிற்கு ஏற்றவாறு பெண்ணவளின் இதயமும் தாறுமாறாக துடித்துக் கொண்டிருக்க, அறைக்கதவை படாரென்று அடித்து சாத்தியவன் மெத்தையின் மீது சரிந்திருந்தான். 

 

வெண்ணிலாவிற்கோ பயமாக தான் இருந்தது. அவன் இல்லாத நேரத்தில் அறைக்கு வந்ததை அவன் தவறாக நினைத்துவிடுவானோ? என்றெல்லாம் மூளை வேறு யோசிக்க தன்னைத் தானே மனதில் கடிந்த வண்ணம் செய்வதறியாது நின்றிருந்தாள் பெண்.

 

‘உனக்கு அறிவே இல்லை நிலா. அய்யோ அத்தான் பார்த்தால் நீ செத்தடி மவளே. அய்யய்யோ எப்படி இங்க இருந்து போவேன்.’ என்று யோசித்தவளுக்கு தப்பிக்கும் மார்க்கம் மட்டும் தெரியவே இல்லை. 

 

பாடல் இசை கேட்டுக்கொண்டே கண்களை மூடினான் உமாபதி. அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தவள், கீழே அமர்ந்து தவழ்ந்து செல்லத் தொடங்கினாள். மெதுவாக சத்தமின்றி தவழ்ந்து சென்றவள் கதவருகே வந்ததும் எழுந்து நின்றபடி தாழ்ப்பாளைத் திறக்க பார்க்க, ஆணவனின் அழுத்தமான குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

 

“மேடம் எங்க போறீங்க?” அலட்டலின்றி வந்த அவனது குரலில் செய்வதறியாது தவித்துப் போய் திரும்பினாள் பெண். 

 

                           ****

 

இங்கு இருள் சூழ்ந்த அறையினுள் அமர்ந்திருந்த ரகுவின் கோபம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்த வண்ணம் அதிகரித்து இருந்தது. கையில் பிடித்திருந்த லைட்டரை ஒவ்வொரு முறையும் அழுத்திக்கொண்டே அவன் இருக்க, அதில் எரியும் நெருப்பில் சில மணி துளி வெளிச்சம் உருவாகி பின் அணைந்துக் கொண்டே இருந்தது. நெருப்பின் வெளிச்சம் பிரகாசிக்கும் போது, தனக்கு எதிரே இருந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்தான் ரகுவரன்.

 

“என்கிட்ட இருந்த எல்லாத்தையுமே பறிச்சிட்டியே. அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டுடிடுவேனா? கண்டிப்பா மாட்டேன். உனக்கானதை நான் பறிச்சு காட்டுவேன்.”  என்றவன் கோபத்துடன் எழுந்தது மட்டுமின்றி அங்கிருந்த புகைப்படத்தை தன் கைகளால் வருடியபடி புன்னகைத்தான்.

 

அவனது இதழ்களோ, “நீ என்னைக்குமே எனக்கு மட்டும் தான் வர்ணிகா. மை டியர் ஸ்வீட் ஹார்ட்.” என்று உரைத்தவன் அவளது பூ முகத்தை வருடிக் கொடுக்கும் வேளையில் அவன் இருக்கும் வீட்டின் காலிங் பெல் அடிக்கப்பட்டது.

 

அதில் சற்று எரிச்சல் மேலோங்க, அங்கிருந்து முகப்பு அறைக்கு வந்தவன் கதவினைத் திறக்க, அவன் முன் நின்றிருந்தாள் மானசா.

 

அவனைக் கண்டதுமே அவளது கண்கள் கலங்கி விட, “ரகு…” என்று உதடுகள் துடிக்க உதிர்த்தவளின் வார்த்தைகளிலும் சரி கண்களிலும் சரி காதல் அளவின்றி தெரிந்தது. 

 

என்ன தான் அவன் தன்னை ஏமாற்றினாலும், அவள் அவனை உண்மையாக அல்லவா நேசித்தாள். காதல் பெருக்கெடுக்க, அவனை அணைக்க சென்றவளை தன் கரம் கொண்டு தடுத்து நிறுத்தினான் ரகுவரன்.

 

“நீ… எப்படி இங்க வந்த?” என்றவனின் கேள்வியில் தவித்துப் போய் பார்த்தாள் மானசா.

 

“பேபி, நீ எங்க இருக்கியோ, அது தான் எனக்கான இடமும் கூட. ஏன் பேபி நான் வரக் கூடாதா?” 

 

“லுக் மானசா. நான் அவ்ளோ பேசியும் இன்னுமா நீ என்ன நம்புற? உன்னோட பழகுனது ஜஸ்ட் டைம் பாஸ்க்கு தான். அப்போ நீ எனக்கு தேவைப்பட்ட. இப்போ அப்படி இல்லை. தேவை இல்லாமல் உன் செல்ஃப் ரெஸ்பெக்டை எங்கிட்ட கொறைச்சுக்காத.” ஏனோ இம்முறை தன்மையாகவே எடுத்துரைத்தான். 

 

“ப்ளீஸ் பேபி, வேணாம்னு சொன்னா போறதுக்கு இது விளையாட்டு இல்லை. நீ இல்லைனா நான் இல்லை. ஐ மேட்லி லவ் வித் யூ டா.” அவனது இரு கரங்களையும் பற்றிக் கொண்டு உரைத்தவளது செயலில் சற்று கடுப்படைந்தான் ரகுவரன்.

 

“பேப்ஸ் நான் இவ்ளோ பொறுமையா சொல்ல காரணமே நீ தான். பிடிச்சுது பழகுனோம். ஜஸ்ட் அதோட நிறுத்திக்கிறது பெட்டர். நீ மும்பையில இருந்து இவ்வளவு தூரம் என்ன தேடி வந்திருக்க. ரியலி ஐ அம் ஹேப்பி பிக்காஸ் ஆஃப் யூ. அதுக்காக உன்னை கல்யாணம் பண்ணனும்னு எனக்கு எண்ணம் இல்லை. உங்க வீட்ல சொல்ற பையனை மேரெஜ் பண்ணி ஹேப்பியா இரு மானசா. காட் இட்.” என்றவன் நாசுக்காக அவளது கரத்தை நகர்த்தி விட்டு அவளை வெளியே அனுப்பப் பார்க்க, அவளது கண்களில் அவளையும் மீறி கண்ணீர் தரம் புரண்டது.

 

கடைசி முறையாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “பேபி ஐ அம் பிரக்னென்ட்.” என்று உணர்ச்சிகள் மேலோங்க அவள் உரைத்த நொடி, அதிர்ந்தவன் அவளை மிரட்சியுடன் பார்த்தான்.

 

“வாட்?” என்றவனின் குரலில் சற்று எரிச்சல் மேலோங்கியிருந்தது.

 

“எஸ் பேபி. நம்ம குழந்தை.” என்று பூரிப்புடன் அவள் உரைத்த நொடி, அவனோ தன் தலையைக் கோதி தன்னை சமன் செய்தபடி நின்றான். 

 

“ப்ரூஃப்” என்றவனின் அலட்டலின்றி வந்த வார்த்தையில் முதலில் புரியாது  பார்த்தவள், “என்ன?” என்றாள் சிறு அதிர்ச்சியுடன்.

 

“என் குழந்தைனு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்றவனின் அடுத்த வரியில் அவள் நெஞ்சில் சுருக்கென்று வலி தோன்ற, தன் நிதானத்தை இழந்தவள், அவனது சட்டையை கொத்தாக பற்றினாள். விழி நீரோ வழிந்த வண்ணமே இருக்க? அவள் உதடுகள் துடித்தது. 

 

“இதே கேள்வி தான், உங்க அம்மாகிட்டயும் நீ கேட்பியாடா?” என்று வலி நிறைந்து அவள் கூறிய நொடி, தன்னை நெருங்கி நின்றவளை பிடித்து தள்ளியிருந்தான் ரகுவரன்.

 

அவனது தள்ளுதலில் நிலைத் தடுமாறியவள், சுவற்றை பற்றி தன்னை காத்துக்கொள்ள, அன்னிச்சையாக பெண்ணவளின் கரம் அவளது அடிவயிற்றைப் பற்றிக் கொண்டது. எந்த கேள்வி அவன் இதுவரை சந்தித்திருந்தானோ அதே கேள்வி அவளும் கேட்க கோபத்தில் கைகளை மடக்கியவன் சுவற்றில் ஓங்கி குத்தினான். அவன் குத்திய சத்தம் கேட்டு மிரட்சியுடன் பார்த்தவளின் பார்வை அவனது மோதிரத்தின் வழியாக ரத்தம் கசியும் விரல்களை பார்த்தது.

 

ஒரு நிமிடம் பதறியவள், அவனை நெருங்கினாள். “பே…” சொல்ல வந்த வார்த்தைகள் தடைபட்டு போக, “கோபத்துல வார்த்தையை விடாதடா. நான் சொன்னதும் தப்பு தான். மறந்துடுவோம். புது வாழ்க்கையை வாழ்வோம். நம்ம குழந்தைக்காக.” என்றவள் விழி நீருடன் கடைசியாக தனது கோரிக்கையை முன் வைத்தாள்.

 

“சின்ன திருத்தம். உன்னோட குழந்தை.” என்றவன் கூறிய நொடி கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போனது.

 

“ரகு.” என்றாள் உடைந்த குரலில்.

 

“இன்னும் ஒரு நிமிசம் நீ இங்க இருந்தாலும் நடக்குறது வேற டி.” என்றவன் பெரும் குரலில் கத்த, 

 

“உன் முன்னாடி நிற்குறது கூட பாவம்னு நினைக்கிறேன். ச்சே போடா… உன்னை நம்பினதுக்கு இப்போ நல்லாவே அனுபவிக்கிறேன். தாங்க்ஸ் ரொம்ப தாங்க்ஸ்” என்று கண்ணீர் மல்க கூறியவள் அடுத்த நிமிடமே அங்கிருந்து வெளியேறியிருக்க, ஆணவனோ தன் கோபத்தை கட்டுப்படுத்த இயலாது பொருட்களை உடைக்கத் தொடங்கியிருந்தான்.

 

இங்கு பரிதவித்து போய் நின்றிருந்த நந்தாவிற்கு அந்நிமிடம் உதவியது என்னவோ கேணி தான். அவசரத்திற்கு அவனை தான் அழைத்திருந்தான் நந்தா. கையில் பணம் வேறு இல்லை. நல்லவேளையாக கைப்பேசி அவனை காத்திருந்தது. கேணியுடன் ஜீப்பில் வந்துக் கொண்டிருந்தவனது முகமே வாட்டத்துடன் காணப்பட்டது.

 

“என்ன பணக்கார வீட்டு மாப்பிள்ளை எவ்ளோ நேரம் தான் உம்முனு வருவ? இப்படி அமைதியா இருக்கிறது எல்லாம் உனக்கு செட்டே ஆகலைடா சிஷ்யா.”

 

“மது, இப்போ வீட்டுக்கு போயிருப்பா தானே?” அவன் மனநிலை ஒரு நிலையிலேயே இல்லை என்பது கேணிக்கும் இந்த பதிலில் புரிந்தது.

 

“ஆஹான்! உனக்கே தண்ணீ காட்டிட்டு வேற எங்க போயிருக்கும். நீ வருத்தப்படாதடா. அதான் சொல்றது இந்த பணக்கார வூட்டு டாடிஸ் பிக் பிரின்சஸ் எல்லாம் நம்பக்கூடாதுனு”

 

“இல்லை கேணி. அவளுக்கு ஆபத்து இருக்கு.” என்றவனை புரியாது பார்த்தான் கேணி.

 

“என்னடா சொல்ற?”

 

“இல்லை இவ்ளோ தூரம் தனியா போறா? வழியில எதாவது ஆபத்து வந்திருக்குமோனு பதட்டமா இருக்குடா?” 

 

“டேய், வீணா கவலைப்படாத. அந்த பொண்ணு இந்நேரம் நாலு போண்டா ஒரே வாயில போட்டு அமுக்கிட்டு இருக்கும்.”

 

“அப்படி எல்லாம் இல்லைடா.”

 

“சரி பர்கரை அமுக்கின்னு இருக்கும்.” என்றவனை ஒற்றைக் கண்ணால் முறைத்து பார்த்தான் நந்தா‌.

 

“ஹை கிளாஸ் பிகரு அதான் பர்கர் துன்னும்னு சொன்னேன்.” என்றவன் முப்பத்திரண்டு பற்களையும் காட்ட, 

 

“எது… என் ஆளை இன்னொரு தடவ பிகரு சுகருன்னு சொன்ன? மவனே வாயை பஞ்சராக்கி ஜிஞ்சர் போட்ருவேன் பார்த்துக்கோ.” என்றவன் சிலுப்பிக் கொண்டு வர, இவர்களது ஜீப்பிற்கு குறுக்கே சாலையை கடக்க முயற்சித்தாள்  பெண் ஒருத்தி

 

“ஹே கேணி பார்த்துடா…” என்று நந்தா ஒருபுறம் கத்த, அவள் மீது இடிக்கக் கூடாது என்று ஜீப்பை வேறு புறமாக திருப்ப கேணி முயற்சிக்க, படார் என்ற சத்தத்தில் மரத்தின் மீது மோதி நின்றது அந்த வாகனம். 

 

வாகனத்தில் இருந்த இருவரும் தலை முட்டிக் கொண்டு சுருண்டு அமர்ந்திருக்க, அவர்கள் இருவரையும் நோக்கி ஓடி வந்தது சாட்சாத் மானசாவே..!

 

                            ***

 

இங்கு, உமாபதியின் குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்த வெண்ணிலாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தொண்டைக்குழி அடைப்பது போல மாய நிலை தோன்ற, “அது… அது… அத்தான்.” என்றவளது நாக்கு தந்தியடிக்க, அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தது ஆணவனின் கண்கள்.

 

“என்ன அது? இது? எது? ஒழுங்கா பேசுடி.” என்றவன் மெத்தையிலிருந்து எழுந்தது மட்டுமின்றி அவளை நோக்கி வர, செய்வதறியாது தவித்தவள் கதவை திறந்து ஓட முயற்சி செய்ய, அந்த நொடி அவளது கைகளை பற்றி இருந்தான் உமாபதி. 

 

“எங்க ஓடுற? அது எப்படி வேணும்னே என்கிட்ட வம்பு இழுக்குற? ஏன் அப்படி?” 

அவனது கேள்விக்கு கூட மௌனம் மட்டுமே அவளிடமிருந்து பதிலாக கிடைக்க, தன் புறமாக பெண்ணவளை திருப்பி உலுக்கினான் உமாபதி.

 

“பதில் சொல்லுடி.”

 

“தெரியாமல் தான் வந்தேன் உமா அத்தான்.” என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கியபடி.

 

“தெரியாமல் இல்லை தெரிஞ்சு தான் வந்திருக்க. வேணும்னே எதோ பண்றனு மட்டும் தெளிவா தெரியுது.” என்றவனின் பார்வை அவளை ஆராய்ந்தது.

 

“இல்லை அத்தான் நிஜமாவே அப்படி எதுவும் இல்லை.” 

கெஞ்சும் குரலில் அவள் கேட்டும் அவன் மனம் பாறை போல் இறுக்கத்துடன் காட்சியளிக்க, மெல்ல அவளது தாடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான் உமா.

 

“பச்சையா தெரியுது பொய் சொல்றனு.” அவளது இதழை உரசிவிடும் தூரத்தில் நின்றபடி பதில் உரைத்தவனின் உஷ்ண காற்று அவளது முகத்தை தீண்டி விட்டு செல்ல, அன்னிச்சையாக அவளது பார்வை மறுபுறமாக சென்றது. 

 

அதையும் தவறாக நினைத்தவன், “என்னடி, என்ன அலட்சியப்படுத்துறியா? இல்லை எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவான்னு நினைக்குறியா?” 

 

“அய்யோ அத்தான் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. உங்களை எனக்கு ரொம்ப…” என்றவளுக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.

 

சொல்லி புரிய வைப்பதற்கு காதல் ஒன்றும் பாடம் இல்லையே..! அமைதியாகிவிட்டாள்.

 

“சொல்லுடி, என்னை ரொம்ப டார்ச்சர் பண்ண பிடிக்குமோ?” 

 

“அத்தான், ஏன் இப்படி பேசுறீங்க?”

 

“வாயை மூடு. அத்தான்னு சொல்லாதனு எத்தனை தடவை சொல்றது? எப்ப பாரு அத்தான் சொத்தான்னு இடியட்.” என்று அவன் கத்தவும் அவளது கண்கள் கலங்கிவிட்டது.

 

“நான் போறேன்.” என்றவள் மீண்டும் கதவைத் திறக்க முயற்சிக்க அவளது கைகளை தடுக்க முயற்சித்தான் ஆணவன். 

 

“பேசிட்டு இருக்கும்போது எங்கடி போற?” என்றவன் அடுத்த நிமிடமே பெண்ணவளின் கரத்தினை மடக்கி பிடிக்க, ஏற்கனவே அவனால் உண்டான காயத்தால் கைகள் நன்கு வலிக்கத் தொடங்கியிருந்தது.

 

“வலிக்குது அத்தான். என்னை விடுங்க.” 

 

“அப்படி எல்லாம் விட முடியாது. பதில் சொல்லாமல் நீ இங்க இருந்து போகவும் முடியாது.” என்றவனின் தீர்க்கமான பார்வை பெண்ணவளின் மீது படர, கண்கள் கலங்கிப் போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிலா.

 

பரிதாபம் தோன்றும் பாவையவளின் பார்வை வீச்சு அவனையும் ஒரு நிமிடம் உலுக்கி சென்றது. 

 

“இந்த கண்ணை வெச்சே அப்பாவி வேசம் போடுறது.” என்றவன் தன்னை நிலை நிறுத்தியபடி வார்த்தைகளை உதிர்க்க, அவளோ உதடுகளை பிதுக்கியபடி அழத் தொடங்கியிருந்தாள். 

 

“அடச்சீ நடிக்காத. முதல்ல உன் அழுகையை நிறுத்து.” என்று பல்லைக் கடித்தபடி மிரட்டுபவனின் செயலில் மேலும் அவள் அழுகையைத் தொடர, 

 

“சோதிக்கிறாளே என்னைய…” என்றவன் புலம்பவும், வெளியே கார் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. எங்கு இவள் அழுது தன்னை மாட்டிவிடுவாளோ என்ற பதட்டம் ஆணவனை அந்நொடி சூழ்ந்துக் கொண்டது. 

 

“ச்சு ச்சு… வாயை மூடு.” என்று அவசரமாக உரைத்தான் உமாபதி. 

 

அதுக்கெல்லாம் அசருபவளா அவள். மைக்கை தொண்டைக்குள் முழுங்கியது போல ஒரு சத்தத்தை வெண்ணிலா கொடுக்க, ஆணவனின் காதே ஒரு நிமிடம் ஆட்டம் கண்டு விட்டது.

 

‘அடிகிராதகி ஹோம்தியேட்டரை விட சத்தமா கத்துறியேடி. உன்னை இப்படியே விட்டா சரிபட்டு வராது.’ என உள்மனது அடித்து சொல்ல அடுத்த நொடியே அவளது இதழ்களை தன் இதழ்களோடு பொறுத்தி மூடியிருந்தான் உமாபதி. 

 

சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை என்பது பெண்ணவளின் கண்களில் தெரிய, அவளது கண்களிலிருந்து வழியும் கண்ணீர் அவன் கன்னத்தை நனைத்தது. முதல் முறையே பெண்ணவளின் இதழ் தேனை குறுகிய நேரத்தில் ருசித்தவனுக்கு, தன்னையும் மீறி ஒரு உந்துதல் தோன்ற இம்முறை அவளது இதழ்களில் முற்றிலுமாக தன் இதழ்களை பதித்திருந்தவன் அந்த நொடி தன்னையும் மறந்திருந்தான். 

அவனையும் மீறி மென்மையை கையாள, அவனது மென்மையில் தன் மனதை முற்றிலும் தொலைத்தவள் தன்னை மறந்து அவன் ஒற்றை முத்தத்தில் மூழ்கத் தொடங்கியிருக்க, மெல்ல ஆணவனின் கைகள் அவளது இடையில் படரத் தொடங்கியது.

 

ஆணவனின் கரம் அவளது மென்மையான கரங்களை வருடிக் கொடுக்க, கூச்சத்தில் நெளிந்தவள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.  அவளது இதழ்களை விட்டு தன் இதழ்களை அவன் பிரித்தெடுக்க, தன் கண்களை திறந்தவள் அவனை பார்க்க இயலாது வெட்கத்தில் சிவந்துப் போனாள். 

 

“அத்தான்.” என்று காற்றுக்கு கூட கேட்காத வண்ணம் மெதுவாக உரைத்தவள் நாணத்துடன் அவன் வெற்று மார்பில் சாய்ந்துக் கொள்ள, அவளை அணைக்காமல் சிலை போல நின்றான் உமாபதி. 

 

அவனுக்குமே அந்த நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. தான் ஏன் இவளிடம் இப்படி மயங்குகிறோம்? என்ற கேள்வி அவனுக்குள் எழுந்துக் கொண்டே இருக்க, அவனது பார்வையோ தன் மார்பில் சாய்ந்தவளின் மீது படிந்து மீண்டது. தன் செயலுக்கு அவள் நியாயப்படி பார்த்தால் கோபம் தானே கொண்டிருக்க வேண்டும். ஏன் தன்னிடம் இவள் குழைகிறாள்? என்ற கேள்வி சடாரென்று தோன்றியதில் தன்னிடமிருந்து அவளை பிரித்து தள்ளி நிறுத்தியவன், அவளை ஓங்கி அறைந்திருந்தான்.

 

அவனது செயலை சத்தியமாக எதிர்பாராதவள் சுருண்டு போய் கீழே விழுந்திருக்க, சுள்லென்று வலி வேறு அவளைப் படுத்தி எடுத்தது. அதிர்ச்சியில் தன் கன்னத்தை பொத்தியபடி தன்னவனை வலியுடன் நிமிர்ந்து பார்த்தாள் நிலா.

 

சினம் கொண்டவனின் பார்வை அவளை தீயாய் சுட்டெரிக்க, அவன் கூறவிருக்கும் பதிலில் அனலில் உருகும் மெழுகாய் இவள் மாறவிருப்பது தான் விதி செய்த சதியா?

                               ****

 

ரகுவரன் சொன்ன சொற்கள் தந்த வடு மனதை வேரோடு பிய்த்து எறிய, கண்கள் கலங்க, உலகையே வெறுத்த வண்ணம் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் மானசா. அவனுடன் இருந்த ஒவ்வொரு நிமிடங்களும் காட்சிகளாக விரிய, அந்த காட்சிகளே அவள் மனதை மேலும் வலிக்க செய்தது. கையில் துணிப்பையோடு நடந்து வந்தவள், அந்த யோசனையிலேயே சாலையினைக் கடக்க, எதிரே வந்த ஜீப்பினை கவனிக்கத் தவறியிருந்தாள் பெண்.

கேணியின் இடைவிடாத ஹாரன் சத்தத்தில் சுயநினைவுக் கொண்டவள் அதிர்ச்சியில் ஏறிட, நல்லவேளையாக அவளை இடிக்காது ஜீப்பினை திருப்பியிருந்தான் கேணி. 

 

அந்நொடி தன்னை நிலைநிறுத்தி ஆசுவாசப்படுத்தியவளின் வலதுக்கரம் அன்னிச்சையாக அவளது வயிற்றினை தொட்டுப் பார்த்துக் கொண்டது.

அந்நொடி தன்னை இடிக்காது காத்த ஜீப்பினை திரும்பி பார்த்தவள், பதறிப் போனாள். 

 

“அய்யோ” என்றவள் தலையில் அடிக்காத குறையாக அவர்களை நோக்கி ஓடி வர, அவளது கண்களில் பட்டது என்னவோ ஒருவன் தலைகுப்புற கவிழ்ந்திருந்த காட்சியும், மற்றொருவன் ஜீப்பின் ஒரு பக்க கதவு திறந்தபடி இருக்க, பாதி உடல் ஜீப்பிலும், தலைப் பகுதி கீழே சரிந்தவாக்கிலும் இருந்தது தான்.

 

“அய்யய்யோ பிரதர் ஆர் யூ ஓகே.” என்று விரைந்து வந்தவள் அவர்களை கண்ட அதிர்ச்சியுடன் கேட்க, கேணியோ கண்களை திறக்க இயலாது திறந்தான்.

 

“அடிப்பாவி..! நேரா போன எங்களை மடிச்சு உருட்டி எடுத்த சவர்மா மாதிரி ஆக்கிட்டு என்ன கேள்வி கேட்டுகிட்டு இருக்க?” என்ற கேணிக்கு வெறும் காற்று மட்டும் தான் வந்தது. அப்படி ஒரு நிலையில் சுருண்டு கிடந்தான் கேணி.

 

“அய்யோ அண்ணா நீங்க பேசுனீங்களா? ஆர் யூ ஓகே.” என்று அவன் சத்தம் கேட்டு மறுபுறம் நகர்ந்து சென்றவளை குனிந்த வாக்கிலேயே பார்த்தவன், 

 

“அம்மா, பரலோக பரதேவதை எவ்ளோ நேரம் தான் பேசின்னே இருப்ப? கொஞ்சம் உதவிக்கரம் நீட்டு புண்ணியமா போகும்.” 

 

“என்ன பிரதர் சொல்றீங்க?” புரியாது பார்த்தவளை தலையில் அடிக்காத குறையாக பார்த்தவன்,

 

“ஓ கர்த்தரே…” என்று புலம்பியவன் அவளை சலிப்புடன் பார்த்து, “ஹெல்ப் மீ மா ஹெல்ப் மீ.” என்றான் கடைசி முறையாக.

 

அதில் புரிந்துக் கொண்டவள், அவனைத் தூக்கி விட முயற்சிக்க, மிக சிரமப்பட்டே அவனை தூக்கி நிமிர செய்தாள் மானசா. 

 

“நல்லவேளை உங்களுக்கு ஒண்ணும் ஆகலை. தாங்க் காட்.” என்றவளை கொலைவெறியுடன் பார்த்தவன், தனது தலையிலிருந்து வடியும் ரத்தத்தை விரலில் எடுத்துக் காட்டினான்.

 

அவர்களது முன் சீட்டில் தக்காளி சாஸ் பாட்டில் ஒன்று இருப்பதை பார்த்தவள் அதை பார்த்து, “அச்சச்சோ சாஸ் வீணா போச்சு போல. சாரி அண்ணா.” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.

 

‘ஆ… தக்காளி சாஸ்க்கு இருக்க மரியாதை கூட உன் ரத்தத்துக்கு இல்லையேடா.’ என்று மனதில் கடிந்தவன், 

 

“அய்யோ சிஷ்யா?” என்று தன் நண்பனின் நினைவு வர, இறங்கியவன் அவனது புறம் சென்று காண, அவளும் உடன் சென்றாள். அதிர்ச்சியில் பேச்சு மூச்சின்றி கிடப்பவனை பார்த்து அதிர்ந்தவன், “அய்யய்யோ..!” என்று நெஞ்சில் அடிக்காத குறையாக கத்த, மானசா திடுக்கிட்டு போய் பார்த்தாள்.

 

“நேச்சுரல் ஸ்டார் நானி மாறி இருந்தவன், இப்போ மல்லாக்க கவூத்து போட்ட பவர் ஸ்டார் மாதிரி கிடக்கிறானே..? இந்த வேதனையை யார்கிட்ட போய் சொல்லுவேன்.” என்று நெஞ்சில் அடிக்காத குறையாக கண்ணீர் வராமலே கதறி அழ, அவனது நீலிக்கண்ணீரை நம்பியவளுக்கு நடுக்கம் எடுக்கத் தொடங்கியது.

 

“அய்யோ அண்ணா, ப்ளீஸ் அழாதீங்க. அவருக்கு சாதாரண மயக்கமா தான் இருக்கும். வாட்டர் பாட்டில் இருக்கா?”

 

“பரலோக பரதேவதை இப்போ வந்து வியாக்கியானமா கேளு. இவன் இப்படி கிடக்க காரணமே நீதான்.”

 

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா. எனக்கு சத்தியமா இப்படி நடக்கும்னு தெரியாது. உங்க சேதாரத்துக்கான மொத்த செலவும் நான் பார்த்துக்கிறேன்.”

 

“ஏம்மா, இங்க மனிசன் உயிருக்கே ஆதாரம் இல்லாமல் கிடக்குறான். நீ சேதாரம் செய்கூலினு பேசிட்டு இருக்க?” என்று வெளிப்படையாக பேசினாலும் அவன் மனமோ, ‘விடக்கூடாது சேர்த்து காசை வாங்கிட வேண்டியது தான். டேய் தீவெட்டி சிஷ்யா அப்படியே கொஞ்ச நேரத்துக்கு இருடா’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“ஹாஸ்பிடல் போவோம்ணா. அவருக்கு ஒண்ணும் ஆகாது.” என்றவள் கலங்கிய விழிகளோடு கூறிய நொடி, கண் விழித்திருந்தான் நந்தா. 

 

தலையைப் பிடித்துக் கொண்டு அவன் எழுந்த நொடி அப்போது தான் நிம்மதி கொண்டாள் மானசா. கேணியோ, ‘ஏன்டா, இப்போ போய் எந்திரிச்ச?’ என்ற தோரணையில் பார்க்க, 

 

“என்னாச்சு?” என்றான் நந்தா குழப்பமாக.

 

“ஆ… மனோரமா ஆச்சி.” என்று கேணி கடுப்புடன் கூற, மீண்டும் மயங்கி சரிந்தான் நந்தா. 

 

“அய்யோ..!” என்று மானசா பதற, “அய்யய்யோ ஆனந்தமே.” என்ற ரீதியில் பாடலாக பாடிய கேணியை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள் மானசா. 

 

“அய்யய்யோ ஆனந்தா மயங்கிட்டியேடா.” என்று ஆன் தி ஸ்பாட்டில் குரலை மாற்றி அமைத்தவன் கூற, அவளோ எதையும் கண்டுக்காமல் தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலைத் தேடி எடுத்து அவன் முகத்தில் தெளித்து, தண்ணீரை நந்தாவிற்கு கொடுத்தாள். 

 

அதில் சற்று தெளிந்தவன் மீண்டும் கண்களைத் நன்றாக திறந்திருந்தான் இம்முறை.

 

“என்னாச்சு” என்றவன் கேட்க, 

“திரும்பவுமா?” என்று வாய்விட்டே புலம்பி விட்டாள் மானசா.

 

“நீ எழுந்த, அப்புறம் மயங்குன, அப்புறம் எழுந்த ரிப்பீட்டு டா சிஷ்யா.” என்று பாவமாக கூறியவனைக் கண்டு வாய்விட்டு சிரித்தான் நந்தா. 

 

‘விழுந்த அதிர்ச்சியில லூசு ஆகிட்டானா?’ என்று புரியாது கேணி பார்க்க, மானசாவோ அவனிடம் மன்னிப்பை யாசித்தாள். 

 

“சாரிங்க பிரதர்… இப்படி நடக்கும்னு நான் எதிர்ப்பார்க்கலை.” என்று இரு கை கூப்பி கூறுபவளைக் கண்டு மெலிதாக புன்னகைத்தான் நந்தா.

 

“பண்றது பண்ணிட்டு சாரி, பூரினு. ஜீப் கிடக்குற நிலைமையை பார்த்தியா? பணம் எடுமா.” என்று கத்திய கேணியை முறைத்து பார்த்தான் நந்தா.

 

“என்னடா முறைப்பு.”

 

“பாவம்டா கேணி. பொறுமையா பேசு.”

 

“பாவம் இல்லை பாவி. நம்மளை போட்டு தள்ள பார்த்த பரலோக பிசாசுடா இது.” என்றவன் கூறியதும் மானசாவின் முகமே வாடியது. 

 

தன்னிடமிருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை கேணியின் கைகளில் ஒப்படைத்தவள், கலங்கிய முகத்துடன் அங்கிருந்து தன் கைப்பையோடு நகர, அவளை பார்க்கும் போதே பாவமாக இருந்தது நந்தாவிற்கு. 

 

“ஏன்டா..?” என்று கேணியை சலிப்புடன் அவன் பார்க்க, அதற்குள் அவள் முன்னேறி சென்றிருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் நடந்து செல்ல இயலாது போனது.

தலையைப் பற்றிக்கொண்டு மயங்கி சாலையில் அவள் விழச் சென்ற நேரம், எதிரே லாரி ஒன்று வர, அதைக் கண்ட நந்தா அவளை காக்க ஓடி வந்த சமயம், பெண்ணவளின் கரத்தை பற்றி இழுத்திருந்தது ஒரு வலிய கரம். 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்