Loading

அடுத்த ஆறு மாதங்கள் தங்கையை வீட்டினுள்ளேயே வைத்துப் பாதுகாப்பது பெரிய சவாலாக இருந்தது நிவேதனுக்கு.

கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென்று அடம்பிடித்து விட்டாள்.

‘இவ காலேஜ் முடிச்சே பல மாசம் ஆச்சுன்னு இவளுக்கு எப்படி புரிய வைக்கிறது’ என நொந்தவனுக்கோ, அவள் நடிப்பதாகத் தோன்றவில்லை.

இட்லி மாவாவது தயாரிக்கிறேனென முழு மூச்சாக அந்த வேலையில் இறங்கி விட்டவளின் மீது அவனுக்கும் கதிரவனுக்கும் கூட சிறு சந்தேகமும் இல்லை.

“பாருடா! இந்நேரம் யாஷ்கிட்ட நடிச்சுட்டு வந்துருந்தா அவள் இவ்ளோ கேஷுவலா இருக்க முடியுமா?” நிவேதன் ஆதங்கம் கொள்ள,

“அதான் எனக்கும் புரியல நிவே. எப்படினாலும் அவளைத் திரும்ப லவ் பண்ண வச்சுடுவான்… கேடி அவன்…” என்றான் கிண்டலாக.

தினமும் ரித்திகாவிற்கு அழைத்துப் பேசுவதையும் வழக்கமாக்கி இருந்தான் நிவேதன்.

“உன்னையும் அவளையும் ரொம்ப மிஸ் பண்றேன் நிவே!” ரித்திகாவின் வருத்தக்குரல் அவனையும் தாக்கியது.

“எனக்கும் உன்னைப் பார்க்காம கஷ்டமா இருக்கு ரித்தி. ஏதோ மாத்து மருந்து கண்டுபிடிக்கணும்னு சொன்னானே. எந்த அளவு இருக்கு அது?”

“உண்மைய சொல்லனும்னா, கிட்டத்தட்ட முடிஞ்சுது நிவே. லீகல் பார்மாலிட்டீஸ் இருக்கு. அதெல்லாம் முடிச்சுட்டா, யாஷ் சொன்ன மாதிரி ரோபோடிக் சர்ஜரி கண்டிப்பா பாசிபிள் தான். அதுக்கான டெஸ்டிங் ஃபேஸ்ல இருக்கோம். அது மட்டும் சக்ஸஸ் ஆகிட்டா, டைரக்டா நிதாவுக்கு யூஸ் பண்ணிடலாம். கண்டிப்பா சக்ஸஸ் ஆகிடும் நிவே” என்றவளின் குரலில் பல மாதங்கள் கழித்து ஒரு உற்சாகம் இருந்தது.

“ஆனா ரித்தி… எனக்கு ரொம்ப பயமா இருக்கு! ரோபோ சர்ஜரி பண்ணுனா எப்படி சரியா வரும்? டாக்டர்ஸ் பண்ணலாம்ல…” நிவேதனின் குரலில் பயம் தொற்றியது.

“நீ பர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகு நிவே. நிதாவோட கண்டிஷன முழுசா தெரிஞ்சுக்கோ. அவளோட மூளைப்பகுதில இருக்குறது ஒரு நானோ வைரஸ். மூளையை முழுசா கட்டுப்படுத்தி, மனுஷங்களை தன்னோட கட்டுக்குள்ள கொண்டு வர்றதுக்காக அலெஸ் செஞ்ச ரொம்ப ரொம்ப கேவலமான ஆபத்தான ஆராய்ச்சி இது.

இதுவரை 250 பேர் மேல இந்த வைரஸை செலுத்தி இருக்கான். அதுல எல்லாருமே இறந்துட்டாங்க. காட்ஸ் கிரேஸ்… நிதாவுக்கு மட்டும் உயிருக்கு ஆபத்து வரல. ஆனா, அது அவன் நினைச்ச மாதிரி அவள் மூளையை கண்ட்ரோல் பண்ணவும் இல்ல.

பட் அந்த நானோ வைரஸ், நியூரோபாத்னு சொல்ற, மூளைல நரம்பு இணைப்புகள் போற பாதையில மூவ் ஆகிட்டே இருக்கும். அந்த வைரஸ் சர்ஜெரி பண்ணும்போது எக்ஸ்சாட்டா எந்த நரம்புல இருக்குன்னு தெரிஞ்சு அந்த வைரஸை விட பாஸ்ட்டா யோசிச்சு அதை எடுக்கணும். 1 mm விட கம்மியான, துல்லியமான அளவுல மத்த நரம்புகளை டிஸ்டர்ப் பண்ணாம அந்த வைரசை எடுக்கணும்னா, கண்டிப்பா ஒரு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தேவை.

டாக்டர்ஸ்சால இதை பண்ண முடியும்னு தோணிருந்தா அவள் பர்ஸ்ட் டைம் அட்டாக் ஆனப்பவே யாஷ் அதை பண்ணிருப்பானே.

சர்ஜரி அப்போ, டெக்னாலஜி ப்ளஸ் ப்ரெய்ன் நியூரோல பெஸ்ட் டாக்டரோட கைடன்ஸ்ல தான் இது நடக்கும். லைவ்வா அந்த வைரஸ் எந்த நரம்புல இருக்கு, அதை கண்ணிமைக்கிற நேரத்துல எப்படி டைம் வேஸ்ட் பண்ணாம எடுக்கணும்னு தான் இந்த அட்வான்ஸ்ட் டூல் யூஸ் பண்றோம். நீ வேணா பாரு… கண்டிப்பா இதுல அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது… என்றாள் வெகு நம்பிக்கையாக.

“இதெல்லாம் பாசிபிளா ரித்தி?”

“ஆக்சுவலி, ஏ. ஐ ரோபோடிக் சிஸ்டம் மெடிக்கல் பீல்டுக்குல வந்தே ரொம்ப நாள் ஆகுது நிவே. da – vinci, ROSA பிரைன் ரோபோட்னு நிறைய இருக்கு.

இந்த ROSA அப்படிங்கிறது, ப்ரெய்ன் சர்ஜெரிக்கே யூஸ் பண்ற ரோபோ. இது மூளையை அப்படியே ஸ்கேன் எடுத்து, எங்க எந்த பாயிண்ட்ல எந்த அளவுல நீடில் வைக்கணும்னு எக்ஸ்சாக்டா சொல்லும்.

சிம்பிளா சொல்லனும்னா, இந்த ஏஐ, கூகுள் மேப் மாதிரி.. டாக்டர் ட்ரைவர் மாதிரி. அந்த மேப்பை பாலோ பண்ணி கரெக்ட்டா சர்ஜெரி பண்ணுவாங்க. ஆனா நிதாவுக்கு நம்ம பண்ண போறது, அந்த கேப் டிரைவரும் ஏஐ தான். ஆனாலும் டாக்டர்ஸ் கண்ட்ரோல்ல தான் நடக்கும். நீ தைரியமா இரு…”

“ம்ம்… ஒரு… ஒருவேளை அந்த மில்லிமீட்டர் அளவு தவறிட்டா?” நிவேதன் எச்சிலை விழுங்கினான்.

அவளிடம் பதில் இல்லை. இதே கேள்வியை யாஷிடம் கேட்டதற்கு நெருப்புப் பார்வை ஒன்றை வீசினானே தவிர அவனிடமும் பதில் இல்லை.

“அதான் இந்த சர்ஜரில பெரிய ரிஸ்க் நிவே… அதனால தான் மனுஷன் கையால மட்டும் இதை செய்ய முடியாது…இந்த AI சிஸ்டம் ஒரு பாயிண்ட் மட்டும் பார்க்காது…

மூளை முழுக்க லைவ்வா ஸ்கேன் பண்ணி, அந்த வைரஸ் அடுத்த நொடி எங்க நகரும்னு கணக்குப் போடும்…

ஒரு மில்லிமீட்டர் தவறினா ஆபத்து…

ஆனா அந்த தவறு நடக்காம இருக்கதுக்காக தான் இந்த டெக்னாலஜி…

மனுஷன் கணக்குப் போடுற வேகத்தை விட ஆயிரம் மடங்கு வேகமா இது யோசிக்கும்…

நெகட்டிவா யோசிக்க வேணாமே நிவே” என்று தனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லிக்கொண்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அந்நேரம் ஆஹில்யன் விழுந்தடித்துக்கொண்டு அவளிடம் வந்தான். இருவரும் யாஷுடைய வீட்டில் தான் இருந்தனர்.

அவனை ஆய்வுக்கூடத்தில் பார்ப்பதோடு சரி, வீட்டினுள் நுழைந்தால் அறைக்குள் அடைபவன் தான் துளியும் முகத்தில் இளக்கம் இருக்காது.

“என்னடா?”

“அடியேய் இவன் மறுபடியும் என்னை முதல்ல இருந்து கடத்த சொல்றான். அதே ஆம்னி வேணுமாம்! மம்மிய்ய்ய்” என்று கண்ணைக் கசக்கினான் ஆஹில்யன்.

“டேய் இந்த தடவையும் நான் ஹாஸ்பிடல்ல படுக்கணுமா?” அவளுக்கு அவள் கவலை.

“உன்னைக் கொன்னுடுவேன். உனக்கு என்னமா நீ சாவகாசமா போய் படுத்துப்ப. இங்க திரும்ப திரும்ப இவங்க பர்ஸ்ட் டைம் மாதிரி மீட் பண்ணிட்டு பேசிக்கிறதை எத்தனை வாட்டி கேக்குறது” என நொந்தவனைக் கண்டு வாயைப் பொத்தி நகைத்தாள்.

——-

தப்பித்துச் செல்லும் திட்டம் பாழாகியதில் அறைக்குள்ளேயே அடைந்திருந்த நிதர்ஷனாவிற்கு செய்வதறியாத நிலை.

ஆரம்பத்தில் அவளை சுமூகமாக அனுப்பி வைக்கும்போதே, மீண்டும் இந்த வலிதனை தன்னவனுக்குக் கொடுத்திட வேண்டாமென மனதை உறுதியாக்கி கொண்டவள்,

சில வாரங்களுக்கு முன்பு காசியை அனுப்பி பிரச்சினை செய்ய வைத்ததில் திகைத்தாள்.

அந்த அரக்கன் ஒரு விடாக்கொண்டன்! எனப் புலம்பினாலும், எப்படி இவனால் மீண்டும் மீண்டும் தனக்காக மட்டுமே சிந்திக்க இயல்கிறது என்றே சலிப்பாக இருந்தது.

யாஷ் அடைத்து வைத்திருந்த அறையில் காலைக் குறுக்கி அமர்ந்திருந்தவளின் விரல்கள் தானாய் அவள் வயிற்றைத் தடவியது.

‘எனக்கு இந்த உலகத்திலேயே பிடிச்சது உன் அம்மா மட்டும் தான் பேபி’ இறுதியாய் அவள் மயங்கும்போது அவள் காதில் விழுந்த உயிர் விழுங்கும் நேச வார்த்தைகள்!

துளியாய் கண்ணீர் துளிரும்போதே கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, வேகமாய் முகத்தை மாற்றிக்கொண்டாள்.

யாஷ் பிரஜிதன் தான் வந்திருந்தான்.

“கிளம்பு!” சிவந்த இதழ்கள் இறுக கூறியவனைத் திகிலாய் ஏறிட்டாள்.

“எங்க?”

“ம்ம்… பேபி ப்ராசஸ் பண்ண நல்ல இடத்துக்கு போக வேணாமா. டான்ஜுர் போகணும்!” என்றான் நக்கலாக.

“தமிழ்நாட்டு வரைபடத்துல டாஞ்சூர்னு எந்த ஊரும் இல்ல” அவள் நொடித்தாள்.

“வரைபடத்துல இல்லாத இடத்துக்கு உன்னைத் தூக்கிட்டுப் போய் ரொமான்ஸ் பண்றது தான் கிக்கா இருக்கும் நிதர்ஷனா!”

அவனது சில்மிஷக் கூற்றில் தீயாய் முறைத்தவளிடம், “உனக்கு உன் பிரதர் உயிர் மேல அக்கறையே இல்லையா?” என்றான் தாடையைத் தவியபடி.

“சொம்மா மெரட்டுற வேலையெல்லாம் வேணாம்யா.”

“உனக்கு என்மேல பயம் இல்லையா? இல்ல உன் ப்ரதரை எதுவும் செய்ய மாட்டேன்ற நம்பிக்கையா?”

“எனக்கு பயமும் இல்ல நம்பிக்கையும் இல்ல” பொத்தாம்பொதுவாகக் கூறியவளின் அருகில் மூச்சு விடக்கூட இடமின்றி நெருங்கி நின்றவன், “தெரியுது! நம்பிக்கை இல்லைன்னு…” என்றான் சூடாக.

அதில் திகைத்து விழித்தவள், “இல்ல… நான்”’ என ஆரம்பிக்கும்போதே, “லெட்ஸ் கெட் ரெடி’ எனத் தீயாகக் காய்ந்து விட்டே சென்றான்.

தன்னைப் பார்த்தும்கூட, தனக்கான அவள் விழிகளில் மின்னும் காதலைக் காணவில்லை தானே!

வலிக்கிறது! அவள் தன்னை மறந்த நொடிகளை விட மறுக்கும் நொடிகள் ரணமாய் வலிக்கிறது.

எத்தனை நேரம் இந்த நடிப்பென்று தான் அவனும் அமைதி காக்கிறான்.

கதிரவனோ வேகமாய் உள்ளே ஓடி வந்து, “நிதா இங்க பாரு… நிவேவை போட்டு பயங்கரமா அடிக்கிறாங்க” என்று வீடியோ ஒன்றைக் காட்ட, அந்த வீடியோவையும் அவனையும் முறைத்து வைத்தவள், எதுவும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

“என் தங்கச்சி எனக்கு அடிபட்டுச்சுனு சொன்னதும் துடிச்சுருப்பாளே” போலி குருதியை துடைத்தபடி நிவேதன் மெதுவாகக் கேட்க,

“அநேகமா உனக்கு நிஜ குருதியே கொட்டப்போகுதுனு நினைக்கிறேன் மச்சி” என்றான் கதிரவன்.

“ஏண்டா?’

“அன்னைக்கே சொன்னான் யாஷ். இவள் நடிக்கிறான்னு… அப்பலாம், என் தங்கச்சி ஒரு தங்கக்கட்டினு வசனம் பேசிட்டு வந்தியே. இப்ப அவள் உண்மையாவே நடிச்சுட்டு தான் இருக்காளோன்னு எனக்கே சந்தேகமா தான் இருக்கு.”

“டேய் ஒருவேளை அவனைப் பார்த்ததும் ஏதாச்சு ஞாபகம் வந்து கன்பியூஸ் ஆகியிருக்கலாம்ல”

“எனக்கு அப்படி ஒன்னும் தெரியல. உன்னைக் கொலை பண்ணிட்டேன்னு சொன்னா கூட, அவள் ஷாக் ஆக மாட்டா போல. அப்படின்னா என்ன அர்த்தம். யாஷ் உன்னை எதுவும் பண்ண மாட்டான்னு அவளுக்கு கண்டிப்பா தெரியும்னு தான அர்த்தம்.”

யோசனையில் விழுந்த நிவேதன், “தஞ்சாவூர் போனதும் ஒரு முடிவு தெரியும்னு நம்பலாம்!” எனப் பெருமூச்சுடன் அணைப்பைத் துண்டித்தான்.

குளியலறைக்குள்ளே வெகு நேரமாய் புதைந்திருந்த நிதர்ஷனாவிற்கு தஞ்சாவூர் செல்கிறோம் என்றதுமே, மனதினுள் பெரும் புயலே அடித்தது.

என்னவோ, அவளுக்குள் புத்தம் புது உணர்வைத் தோற்றுவித்த இடமாதலால், அங்கு சென்றதுமே அவள் முகம் தானாய் மலர்ந்து விடும்.

இறுதி முறையாய் அங்கு சென்ற போது கூட ஒருவித உணர்வுப்பெருக்கை அங்கு கண்டிருக்கிறானே!

அடுத்த விமானத்தில் யாஷ் பிரஜிதனும் நிதர்ஷனாவும் திருச்சிக்கு விரைய, இருவரிடமும் துளி பார்வை பரிமாற்றமும் இல்லை.

விமான நிலையத்திலிருந்து காரில் தஞ்சாவூருக்குச் செல்ல ஆயத்தமாகினர்.

எதிர்பாராவிதமாக ஏற்பட்ட வாகன நெரிசலால் பயணம் சற்றே தாமதமானது.

என்ன ஆனதென்று பார்க்கச் சென்ற ஓட்டுனரும் திரும்பி வராததால், நெருங்கி நின்ற வாகனங்களை எரிச்சலுடன் பார்த்தபடி, தனது பக்க கதவைத் திறந்தான் யாஷ்.

முன்னால் இருந்த லாரி ஒன்று தனது கரும்புகையை வேறு ஒலியுடன் கக்கிக்கொண்டிருந்தது.

அதனைக் கவனித்த நிதர்ஷனா, வேகமாய் அவனைத் தடுத்தாள்.

“வாட்? “விழி இடுங்க அவன் வினவ, “வெளில ஒரே தூசியா இருக்கு. ட்ரைவர்க்கு கால் வேணா பண்ணி பாருங்க” என்றாள்.

அவளை ஆழப் பார்த்தவன், வம்படியாக காரை விட்டு இறங்கிட, “யாஷ் சொன்னா கேளு” எனப் பதறியவளுக்கோ மறுபுறமும் இறங்க இயலவில்லை. மற்றொரு கார் அடைத்து நின்றது.

கதவை அறைந்து சாத்தியவன் ஓட்டுநர் இருக்கையைத் திறந்து அனைத்து கதவையும் லாக் செய்து விட, மறுபுறம் வந்து இறங்க வந்தவளுக்கோ கதவைத் திறக்க இயலவில்லை.

“யாஷ் யாஷ் கதவைத் திற யாஷ்…” என்றவளுக்கோ நெஞ்சம் படபடவென அடித்தது.

“அரக்கா ப்ளீஸ்!’ அருகில் நின்ற வாகன ஓட்டிகள் அவளை விசித்திரமாகப் பார்க்க, யாஷ் பிரஜிதனோ சாவகாசமாக காரில் சாய்ந்து நின்றான்.

அவளது பதற்றங்கள் எல்லாம் ஓரக்கண்ணில் நிறைந்தே இருந்தது.

சில நொடிகளில் அவள் பயந்தது போன்றே, நிகழ்ந்தது.

அவனது மூக்கில் இருந்து குருதி வழியத் தொடங்க, மெல்ல மயங்கத் தொடங்கினான்.

எப்போதும் உடனே அடுத்தடுத்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கி விடுபவனோ தற்போது கல்போல நிற்க, அவளுக்கு உள்ளம் வெதும்பி விட்டது.

“டேய் அரக்கா கதவைத் திறக்க போறியா இல்லையா?” உள்ளிருந்து வெடித்தவளின் கதறல் கூட அவன் காதில் விழவில்லை.

அதற்குள் ஓட்டுநர் அங்கு வந்து, “டிராபிக் க்ளியர் ஆகிடுச்சு சார்” எனும்போதே அவன் சுயநினைவை இழக்கத் தொடங்க, ஓட்டுநர் உடனடியாய் அவனிடம் இருந்த சாவியை வைத்து கதவைத் திறந்து அவனை உள்ளே அமர வைத்தார்.

“யாஷ் யாஷ் இங்க பாரு யாஷ்…” தன் தோள்மீது மயங்கி இருந்தவனின் நிலையை எண்ணிக் கலங்கியவள், முன்னிருக்கையில் அவனது நாசல் ட்ராப்ஸ் இருக்கிறதா எனத் தேடச் சொன்னாள்.

ஓட்டுநர் எதுவும் இல்லையென்றதும் பரிதவித்துப் போனவள், தனது காலுக்கு அடியில் இருந்த கைப்பையைப் பார்த்தாள்.

கிளம்பும் முன்னே கதிரவனை விட்டு, அவளுக்குத் தேவையானவற்றை அவளது வீட்டில் இருந்து எடுத்து வரச் செய்திருந்தான்.

என்றோ ஒருநாள் அவனுக்காக தனது கைப்பையினுள் பத்திரமாக வைத்திருந்த ட்ராப்ஸ் நினைவிற்கு வர, அதில் இருந்து எடுத்தவள், அவனது மூக்கினுள் மருந்தை நுழைத்தாள்.

ஆடவனின் குருதியை துப்பட்டாவில் துடைத்து விட்டவள், “யாஷ் எந்திரி ப்ளீஸ்…” எனக் கெஞ்சியபடி மருந்தை கொடுத்துக் கொண்டே இருக்க, சில நிமிடங்களில் மெல்லிய இருமலுடன் கண் விழித்தான் அவன்.

அந்த மருந்தை வாங்கி வேண்டுமட்டும் தனக்குள் செலுத்திக் கொண்டவன், மெல்ல மெல்ல சுயநினைவு பெற, காரும் அங்கிருந்து நகர்ந்தது.

“ஹாஸ்பிடல் போகட்டுமாங்க சார்” ஓட்டுனரின் கேள்விக்கு, “போங்க அண்ணா’ என்று அவளும், “நோ நீட்” என்று அவனும் ஒரே நேரத்தில் பதில் கூற, அவள் தவிப்பாய் ஏறிட்டாள்.

“ஹாஸ்பிடல் போகலாமே யாஷ்…” கண்ணில் நிரம்பி நின்ற நீரை வெறுமையாய் ஏறிட்டவன்,

“எனக்காக நீ இவ்ளோ ஹார்ட் பீலிங்சோட நடிக்க தேவையில்லை. ஜஸ்ட் என் கான்டராக்ட் வைஃப் மாதிரி நடிச்சா போதும்…” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பி விட்டு, ஜன்னல் புறம் நகர்ந்து அமர, அவளுக்கு சுருக்கென இருந்தது.

கையில் இருந்த மருந்தை எகத்தாளமாகப் பார்த்தவன், அதனைப் பற்றிய எந்தக் கேள்வியும் கேளாது நக்கல் புன்னகை சிந்தி விட்டு, அதனைத் தூக்கி வெளியில் எறிந்தான்.

“அது தேவைப்படும்ல” அவள் பதறிட,

“உன்கிட்ட இருந்து கடமைக்கான அன்பு எனக்குத் தேவை இல்ல” என்றான் சுள்ளென.

“கடமைக்காக குடும்பம் மட்டும் நடத்தலாம்…” பொங்கி வந்த கேவலுடன் முணுமுணுத்துவிட்டு ஜன்னல் புறம் திரும்பியவளின், முடியைப் பற்றி இழுத்தவன்,

“தேவைன்னா, கடமைக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்” எனத் தங்க விழிகளால் தகதகத்தான்.

அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், விழியில் நிரம்பி நின்ற கண்ணீரை அவனுக்கு காட்ட பிடித்தமின்றி முகத்தை மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

மறந்தும் இருவரும் ஒருவரது ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொள்ள இயலவில்லை.

——

இங்கோ நிவேதன் முகம் முழுக்க போலி காயத்துடன், அவர்களுக்கு முன்னேயே கதிரவனுடன் தஞ்சாவூருக்கு வந்து விட்டான்.

“ஏன்டா… ரீல் அந்து போயி பல மணி நேரம் ஆகுது. இன்னும் நீ அவள் இந்த காயத்தைப் பார்த்து பதறுவான்னு இதே கெட்டப்போட வந்துருக்கியா…” கதிரவன் கிண்டல் செய்ய,

“இருந்தாலும் எனக்கு அவள் நடிக்கலன்னு சின்னதா ஒரு நம்பிக்கைடா” எனும்போதே ஆதிசக்தியின் வீடு வந்திருக்க, அப்போது தான் பக்கத்து வீட்டை சுத்தம் செய்து விட்டு அங்கு வந்த கண்மணி பல மாதங்கள் கழித்து காயங்களுடன் தன்முன் நின்றவனைக் கண்டு அதிர்ந்து விட்டாள்.

கூடவே வந்த சிந்தாமணி கதிரவனைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என்ன ஆச்சு நிவே… ஏன் இவ்ளோ காயம்?” என்ற கண்மணிக்கு இதெல்லாம் இவர்களது திட்டமென தெரியவில்லை.

“அது ஒன்னும் இல்ல” என நிவேதன் மறுக்க வரும்போதே,

“யாரோ உங்க குடும்பத்து எதிரிங்க தான், வரும்போது எங்களை அட்டாக் பண்ணிட்டாங்க. என்னைக் காப்பாத்த என் நண்பன் அடியை எல்லாம் வாங்கிட்டான்…” எனக் கண்ணைக் கசக்கிட, கண்மணி திகைத்தாள்.

“டேய் என்னடா…” நிவேதன் பற்களை கடிக்க,

“அட இருடா… உன்னை எல்லார் முன்னாடியும் பிடிக்கலைனு சொன்னாளே, உண்மையாவே பிடிக்கலையான்னு செக் பண்ணலாம். இந்தக் காயம் இதுக்காச்சு யூஸ் ஆகட்டும்” என்று முணுமுணுத்ததில் நிவேதனின் தவிப்பு அதிகரித்தது.

அவளது அந்த பதிலுக்கு காரணமே அவன் தானே!

“உங்களுக்கு தான் சண்டை போட தெரியும்ல. அடிக்கிற வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க. உள்ள வாங்க மருந்து போடலாம்…” எனப் பாவாடையைத் தூக்கிக் கொண்டு வேகமாக உள்ளே ஓடினாள்.

“என்ன கண்மணி ஏன் இப்படி ஓடுற…” ஆதிசக்தியின் கேள்விக்கு பதில் சொல்லக்கூட அவளுக்குப் பொறுமை இல்லை.

“அவருக்கு அடிபட்டுருக்குமா” என்றதோடு முதலுதவிப் பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் வரவேற்பறைக்கு ஓடி வந்தாள்.

‘எவருக்கு?’ ஆதிசக்தி குழம்பும்போதே, அவனை ஒரு நாற்காலியில் அமர சொல்லி விட்டு, அவளே மருந்து போட விழைய, நிவேதனுக்கு ஐயோ என்றிருந்தது.

அவளுக்கு இருந்த பதற்றத்தில் போலி காயத்தைக் கூட கண்டறிய இயலவில்லை.

வெகு கவனமாய் அவனுக்கு மருந்தைப் போடும் பணியைத் தொடர்ந்தாள்.

வீட்டினரும் அங்கு வந்து நிவேதனிடம் என்னவென பதற, நிவேதனுக்கு அவஸ்தையாக இருந்தது.

கண்மணியை தடுத்தவன், “இவன் சும்மா விளையாட்டுக்கு சொன்னான் கண்மணி. எனக்கு அடியெல்லாம் படல. என் தங்கச்சியை என் மச்சான் வழிக்கு கொண்டு வர, இப்படி மூஞ்சி பூரா அடிபட வைக்க சொன்னான். நான் கேரக்டரை இங்க வரை மெயின்டைன் பண்ணிட்டேன்” என்றதுமே மற்றவர்கள் ஆசுவாசமாக, கண்மணியின் முகம் இறுகியது.

“ஓ!” என்றவள், மருந்தை மீண்டும் உள்ளே வைத்து விட்டு இறுகிய முகத்துடன் அறைக்குள் அடைந்தாள்.

இறுதியாய் ‘என் உணர்வுகள் உங்களுக்கு விளையாட்டுப் பொம்மை தான’ என்பது போல அடிபட்ட பார்வையை அவன் மீது வீசியதில், அவனுக்கு இதயம் நடுங்கி விட்டது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்