14 மாயோனின் மலரோவியம்

Loading

  • மாயோன் 14

” ஹாலோ சரத் இருக்கியா? ”

” என்னடி இப்படி சொல்லுற..  அப்போ அவ்ளோ தானா? பைல் அவன் கிட்ட கிடைச்சிடுச்சா?” என்றவனது பயம் அவனது குரலில் அப்பட்டமாக தெரிந்தது…

” டேய்… கீர்த்தி இல்லாமல் அந்த பையில் யாரு கைக்கும் கிடைக்காது… ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு கீர்த்திக்கே தெரியாது, சோ அவள் விக்ரமன் கிட்ட சொல்ல வாய்ப்பே இல்லை, நீ பயப்பட அவசியம் இல்லை… இப்போ கீர்த்தி நமக்கு வேணும். அதுக்கான வழியை பாரு ”

” ஒருவேளை விக்ரமன், கீர்த்தியை அடிச்சு.. மிரட்டி.. நீ சொன்ன விஷயத்தை ஏதாவது அவன் கிட்ட அவள் சொல்லிட்டால் என்ன பண்ணுறது? அரைகுறையா விஷயம் தெரிஞ்சால் கூட போதும் அவன் எப்படியும் கண்டுபிடிச்சுடுவான் ”

” விக்ரமன் தன் தேவைக்காக அவளை அந்த அளவுக்கு காயப்படுத்துவான்னு எனக்கு தோணல… எனக்கு அவனை நல்லா தெரியும் , அவனால அவளுக்கு கஷ்டம் வர வாய்ப்பில்லை… நீ அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசி ”  என்று கூறி சிவாவிடம் போனை கொடுக்க…

சரத்தோ, சிவாவிடம் தன் தாத்தாவின் கெஸ்ட் அவுஸ் ஒன்றின் முகவரியை சொல்லி அங்கு நந்தினியை தங்க வைக்குமாறு கூறி அழைப்பை துண்டித்தான்…

பின்னர் தனக்கு தெரிந்த யார் யாருக்கு அழைப்பு விடுத்து இறுதியாக அபிமன்யு ஷூட்டிங் நடக்கும் இடத்தை அறிந்து கொண்டான்… அதுவும் சென்னையில் தான் என்று எண்ணி நிம்மதி அடைந்த சரத், விக்ரமனிடம் இருந்து எப்படி கீர்த்தியை தங்கள் பக்கம் வரவைப்பது   என்று யோசிக்க தொடங்கி இருந்தான்…

******

அடுத்த நாள் காலையில் எழுந்த கீர்த்தி தனக்கு அருகில் பார்க்க… அங்கு விக்ரமன் இல்லாமல் இருந்தான்…

அவளது கண்கள் அவனை தேடி அலையவும், அவளது தேடலுக்கு விடையாக அறைக்கதவை திறந்து கொண்டு அவள் கண்முன் வந்து நின்றான் அபிமன்யு…

” எங்க போனீங்க நயிட் இங்க தானே இருந்தீங்க எப்போ எழுந்திங்க ? ”

” நயிட் நீ  தூங்கின உடனே நான் கிளம்பிட்டேன் ” என்று கூறியவனை  விழி சுருக்கி பார்த்தவள் ” ஏன்?  ” என்று கேட்க…

” சும்மா தான்., சரி கிளம்பி வெளியே வா… கார்ல வையிட் பண்ணுறேன் ” என்றவன் சிறு புன்னகையுடன் அங்கிருந்து செல்ல பார்க்க

” ஒன்னு சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ? ” என்றவளை திரும்பி பார்த்தவன்…

” ம்ம் சொல்லு ” என்றான் மென்மையா…

” அது… ” என்றவள் சொல்ல தயங்கவும்…

” சீக்கிரம் சொல்லுறியா? டைம் ஆகுது ” என்றான் விக்ரமன்…

” நான் முதல் முதலில் பார்த்த மாதிரி, நீங்க இப்போ இல்லை.. நீங்க ரொம்ப மாறிட்டீங்க ” என்றவளது முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகளை புரிந்து கொண்டவன்… நொடியில் அவளை நெருங்கினான்…

அவனது அருகாமையில் பெண்ணவள் தயக்கத்துடன் பின்னே நகர்ந்து நிற்க, மேலும் அவளை நெருங்கியவன்… அவளது இடையில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுக்க… அவளோ இமைசிமிட்டி அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

” நான் மாறல ” என்று கூறி அவளது கன்னத்தை மேலும் கீழும் தன் விரல் கொண்டு வருடியவன், மென்மையாக அவளது கழுத்தில்  கைகொடுத்து தன்னை நோக்கி இழுக்கவும், தயக்கமின்றி  இசைந்தவளின்  இதழ் நோக்கி  குனிந்தான்..

இருவரது இதழ்களும் நூலாளவு இடைவெளியில் இருக்க… பெண்ணவளது கண்கள் தானாக மூடிக்கொண்டது..  அவனது கரத்தில் அடங்கி நின்றவளை, ரகசிய புன்னகையுடன் பார்த்தவன் விலகி,  அவளது காதருகில் தனது இதழ் உரச நின்றபடி ” ஆனால் நீ மாறிட்ட ” என்று கூறினான்.

அவன் கூறியதன் அர்த்தம் அவளுக்கு விளங்கவில்லை…

அதை அவள் உணரும் நேரத்திற்குள், அவ்வறையில் இருந்து வெளியேறியிருந்தான் விக்ரமன்…

முன்பெல்லாம் அவனை கண்டு மிரண்ட அவளது விழிகள் இன்று அவனது தொடுகைக்கு வழிவிட்டு தானாக மூடி கொண்டது அல்லவா ? அதுவே அவளது மனமாற்றத்தை அவனுக்கு உணர்த்தியது…

 

அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி வெளியே வந்த கீர்த்தி, வரும் வழி முழுவதும்  அவனது முகத்தை திரும்பி கூட பார்க்கவில்லை…

ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு கீர்த்தியை அழைத்துக்கொண்டு வந்தான் அபிமன்யு…

 

சதிஷிடம் கீர்த்தியை பார்த்துக்கொள்ள கூறியவன் படபிடிப்பில் ஈடுபட்டான்…

அங்கு நடக்கும் அனைத்தையும் கீர்த்தி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்…

வெளியில் ஷூட்டிங் முடிந்து , படபிடிப்பு தளம் மாற்றப்பட்டது… அந்த படத்தின் இறுதி காட்சியாக நாயகனும், நாயகியும் முத்தமிட்டு கொள்வது போல காட்சி வடிவமைக்கபட்டது…

ஆனால் இது வெறும் ஒரு பிம்பம் போன்று தான் … இருவரும் அருகருகே நிற்க… கேமரா ஆங்கிள்  மூலம்… அதில் இருவரும் முத்தமிட்டு கொள்வதை போல மாற்றிவிடும் படி அபிமன்யு கூற… இயக்குனரும் அவன் குணம் உணர்ந்து… ‘சரி’  என்று கூறினார்.

 

அந்த காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்க… கீர்த்தியோ எதிரில் இருந்த அபிமன்யுவையும், அந்த நடிகையையும் கூர்ந்து பார்த்து கொண்டிருந்தாள்…

இயக்குனர் ‘ஆக்சன்’  என்று கூற… அந்த  நடிகையின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்த அபிமன்யுவை விழிவிரித்து பார்த்தாள் கீர்த்தி…

மேலும் அபியோ அந்த பெண்ணை ரசனையுடன் நெருங்க…தன்னையும் அறியாமல் கீர்த்தியின் கண்கள் அதிர்ச்சியில்  விரிந்து கொள்ள, இமைக்காமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

மெதுவாக அந்த பெண்ணை நெருங்கியவனது இதழ்கள், நூலளவு இடைவெளியில் இருக்க.. அந்நேரம் அந்த பெண் தன்னுடைய  பிடிமானத்தை  இழந்து,  தடுமாறி அவனது இதழில் கண நேரத்தில் இதழ் பதித்தாள்… அதனை பார்த்து கீர்த்தி வாயில் கைவத்து இருவரையும் மாறி மாறி அதிர்ந்து பார்க்க… அபிமன்யூவோ கண்களை மூடி திறந்து ஏதோ பேச வரும் முன்னே அந்த பெண் மன்னிப்பு கேட்டு அவனை விட்டு விலகி நின்றுகொண்டாள்..

அது தெரியாமல் நடந்தது என்று இருவருக்குமே தெரியும்  என்பதால் அபியும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அங்கிருந்து விலகி வந்தான்…

அந்த முத்த காட்சி  அழகாக படமாக்க பட்டிருக்க… இயக்குனருக்கு மிகுந்த சந்தோசம்.

படபிடிப்பு முடிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு விடைபெறும் நேரம்.. அபிமன்யூவை தனியே அழைத்து இன்று தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு வரும்படி கூறி இருந்தாள் அந்த பெண்… அவனும் மரியாதை நிமித்தமாக ‘சரி’ என்று கூறிவிட்டு நேராக கீர்த்தியிடம் வந்தான்…

” போலாமா? ” என்று அவன் கேட்க, கீர்த்திக்கு காரணமே இல்லாமல் அவன் மீது கோவம் வந்தது.

” நீங்க அந்த ஹீரோயின் கிட்ட எல்லாம் பேசி முடிஞ்சதுன்னா கிளம்பலாம் ” என்றவளது முகபாவனையை, பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது…

பின்னர் அவளை அழைத்து கொண்டு நகை கடைக்கு சென்றவன்… அங்கு கீர்த்திக்காக ஒரு மோதிரம் வாங்கினான்…

” மோதிரம் யாருக்கு அந்த ஹீரோயினுக்கா ? ” என்று கீர்த்தி தன் மனதின் கேள்வியை அவனிடம் கேட்க… இதழ் பிரித்து சிரித்தவன்…

” என் ஹீரோயினுக்கு ” என்று கூறி அவளை மையலுடன் பார்த்தவன், அவளது கரம் பற்றி வெளியே அழைத்து வந்தான்…

‘ அவங்களுக்கு தான் மோதிரம்னா எதுக்கு என்னை போட்டு பார்க்க சொல்லணும்…  அவங்களையே அழைச்சிட்டு வந்து வாங்கி கொடுக்கலாம் இல்லை ‘ என்று வரும் வழி எங்கிலும் அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டே  வந்தாள்…

அவளது முகபவனையை பார்த்து தனக்குள்ளேயே சிரித்துகொண்டான் அபிமன்யு…

இருவரும் வீடுவந்து சேர்ந்தனர்…  அவளை வீட்டில் இறக்கிவிட்டவன் ” நீ வீட்டில இரு நான் வந்துடுறேன் ” என்று கூற…

” எங்க போறீங்க? ” என்று ஒருவித சந்தேக பார்வையுடன் கேட்டவளை பார்த்து மெலிதாக சிரித்தவன் ” என் ஹீரோயினுக்கு ட்ரெஸ் வாங்க போறேன் ” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றான்..

அவன் அவ்வாறு கூறி விட்டு சென்றதில் இருந்து கீர்த்தியின் முகம் விருப்பமின்மையை உமிழ்ந்து கொண்டிருந்தது.. காரணமே இல்லாமல் அந்த பெண்ணின் மீது அவளுக்கு கோவம் வந்தது…

சிறிது நேரம் கழித்து துணிபையுடன் கீர்த்தியின் அறைக்குள் நுழைந்தான் விக்ரமன்.. அவனை பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள் கீர்த்தி..

அதனை பார்த்து இருபக்கம் தலையாட்டி சிரித்து கொண்டவன் மெத்தையின் மீது துணிபையை  வைத்துவிட்டு ” இன்னிக்கு நயிட் ஒரு பார்ட்டிக்கு போகணும் இதுல ட்ரெஸ் இருக்கு தயாரா இரு ” என்றான்…

” எங்க? என்ன பார்ட்டி? நான் வரல “என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு அவள் கூற…

”  பைன்.. அப்போ நான் மட்டும் அந்த ஹீரோயினோட பர்த்டே பார்ட்டிக்கு போய்ட்டு வரேன் ”

” எந்த ஹீரோயின் ” என்று கீர்த்தி பதறியபடி கேட்க…

” இன்னிக்கு காலையில் கூட பார்த்தியே ? இன்னும் சரியா சொல்லனும்னா என்னை கிஸ் பண்ண பொண்ணு ” என்று வேண்டுமென்றே அவன் கூற..  அவனை சினம் கொண்டு பார்த்தவள்.  அடுத்த நொடியே ” எப்போ போகணும் ” என்று கேட்டாள்…

” ஷார்ப்பா நயன் தேர்ட்டிக்கு கிளம்பனும்” என்று சிரித்தபடியே கூறியவன் அங்கிருந்து சென்றான்..

அவன் வாங்கி வந்த ஆடையை அணிய முற்பட்டவளுக்கு கழுத்து பக்கம் இறுக்கமாக இருந்தது, கடினப்பட்டு அந்த ஆடையை அணிந்தாள்… அப்போது அவள் கழுத்தில் இருந்த v செயின் ஆடையில் மட்டி அறுந்து கிழே விழுந்தது… அதை அவள் சரியாக கவனிக்கவில்லை…

சிறிது நேரம் கழித்து அவளது அறைக்குள் நுழைந்த விக்ரமன்  ஒரு நிமிடம் உறைந்து நின்றான் கீர்த்தியை கண்டு…

அவனை பார்த்தவள் தன் ஆடையை குறிப்பிட்டு “நல்லா இருக்கா? ” என்று சிறுபிள்ளை போல கேட்க… புன்னகை முகமாக அவள் அருகில் வந்தவன் ” க்யூட்டா இருக்க ” என்று கூறி அவள் நெற்றியில் இதமாக முட்டி கண் சிமிட்டினான்.

அப்போது விக்ரமனுக்கு பரதனிடமிருந்து அழைப்பு வந்தது… அழைப்பை ஏற்றவன் வெளியே வந்து பேசத்தொடங்கினான்…

” அண்ணா ”

” சொல்லுடா ”

” நந்தினி மிஸ் ஆகிட்டாள் அண்ணா..  காலையிலயே உங்களுக்கு போன் பண்ணினேன் ஆனால் நீங்கி வேலையா இருந்திருப்பீங்க போல போன் எடுக்கல… ”

” என்னடா பரதா இது… உன்கிட்ட கவனமா இருக்க சொன்னேனா இல்லையா?, சரி அவள் எப்படி தப்பிச்சு போனா யாரு அவளுக்கு ஹெல்ப் பண்ணா ஏதாவது தெரிஞ்சுதா? ”

” இல்லை அண்ணா… நயிட்  அப்படிங்குறதால யாருக்கும் எதுவும் தெரியல… சிசிடீவி வேற அவள் இருந்த இடத்தில ஒர்க் ஆகல, விசாரிச்சுட்டு தான் இருக்கேன்… கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம் ”

” தயவு செய்து காரணம் சொல்லாத பரதா… நான் நாளைக்கே கிளம்பி வரேன் ” என்ற விக்ரமன் அழைப்பை துண்டித்தபடி கீர்த்தியை  அழைத்துக்கொண்டு  காரில் சென்று கொண்டிருந்தான்…

பரதன் கூறிய விஷயத்தை கேட்டு விக்ரமனது முகம் இறுக்கமாக இருந்தது.. அதனால் பயணம் அமைதியாக இருக்கவே, முதலில் பேச்சை தொடங்கினாள் கீர்த்தி,

” உங்களுக்கும் அந்த ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு… பேசாமல் நீங்க அவங்களையே  கல்யாணம் பண்ணிக்கோங்க, உங்க ஜோடி பொருத்தம் பிரமாதம் ” என்று கீர்த்தி அவன் பதில் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கேட்க…

விக்ரமனோ உதடுகள் அழுத்தம் பெற… காரினை வேகமாக ஓட்டினான்…

” என்ன பதிலே சொல்ல மாட்டிங்குறீங்க? ஒஹ் ஒருவேளை கல்யாணம் பத்தி பேசின உடனே உங்களுக்கு வெக்கம் வந்திடுச்சோ… இருக்காதா பின்ன இவ்ளோ வயசுக்கு அப்ரோம் உங்களுக்கு கல்யாணம் அப்படின்னா கொஞ்சம் கூச்சமா தான் இருக்கும் … ஆமா நீங்க ஏன் இவ்ளோ வருசமா கல்யாணம் பண்ணிக்கவே இல்லை ” என்ற கீர்த்தி அவனது முகத்தை கூர்ந்து பார்த்து அவனது பதிலை எதிர் பார்க்க… சினம் துளிர்க்க அவளது முகத்தை திரும்பி பார்த்த விக்ரமன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை…

” எதுக்கு இப்படி முறைக்குறீங்க? ” என்று கேட்ட கீர்த்தியின் முகம் நொடியில் வாடி போனது… அதனை பார்த்து மெல்ல தன் கோவத்தை இழுத்து பிடித்தவன்…

” இங்க பாரு எனக்கு அந்த பொண்ணு மேல எந்த இன்டர்ஸ்டும் இல்லை… தேவை இல்லாமல் பேசி என்கிட்ட அடிவாங்கி சாகதா… வாயை மூடிட்டு அமைதியா வா ”

“இப்படி சொன்னால் நாங்க நம்பிடுவோமா?  இப்போ கூட அந்த பொண்ணோட பர்த் டே பார்ட்டிக்கு தானே போறீங்க? காதல் இல்லாமலா அந்த பொண்ணுக்கு டைமண்ட் ரிங் வாங்கிட்டு போறீங்க? எனக்கு எல்லாம் தெரியும்… வெட்கப்படாமல் சொல்லுங்க நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன் ” என்று அவள் சிரித்து கொண்டே கேட்க…

” என்னடி உனக்கு தெரியும் ?  சும்மா பேசி எரிச்சல் பண்ணிட்டு இருந்த அப்படியே காருக்கு வெளிய தள்ளி விட்டுட்டு போயிடுவேன் ” என்று விக்ரமன் சினத்தில்  பேச…

”  எதுக்கு இப்படி பொய் சொல்லுறீங்க? இன்னைக்கு கூட அந்த பொண்ணு உங்களுக்கு கிஸ் பன்னிச்சே அப்போ அது லவ் இல்லையா? ” என்று கீர்த்தி சிறுப்பிள்ளையாக கேட்க…

” இதுக்கு நான்  விளக்கம் கூறினாலும் உனக்கு புரியாது… ஆனால் இப்போ எனக்கு நேரமில்லை, மரியாதையா அமைதியா வா ” என்று விக்ரமன் கூற… அவளோ மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை பற்றியே  பேசிக்கொண்டு வர… பொறுமை இழந்தவன்.. காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்…

” இறங்குடி கீழ ” என்று விக்ரமன் உரக்க கூற… கீர்த்தியின் உடல் தூக்கிவாரி போட்டது… யார் மீதோ உள்ள கோவத்தை அவள் மீது காட்டினான்..

” உன்னை தான் கீழ இறங்கு ” என்றவன் கதவை திறந்து அவளை வெளியே தள்ளி விட்டான்…

” அப்படியே எங்கேயாவது போய் தொலை.. திரும்ப என் கண்ணு முன்னாடி வராத ” என்றவன் அவளை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து காரை எடுத்து கொண்டு சென்றான்… சிறிது தூரம் சென்றவன்… தன் செயலை உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டான்…

வண்டியை திருப்பி கொண்டு மீண்டும் அவளை அதே இடத்தில் தேடி வர… அங்கு அவள் இல்லை…

உடனே தனது லேப்டாப்பை உயிற்பித்தவன்  அதில் கீர்த்தி லொகேசனை பார்க்க… லொகேஷன் அவனது வீட்டை காட்டியது.  ஒருகணம் அதிர்ந்தவன் அதன் பின்னர் தான் யோசித்து பார்த்தான்..

” ஒஹ் காட் அவள் கழுத்தில் செயின் இருந்த மாதிரி இல்லையே… வீட்டுல லொகேஷன் காட்டுது அப்படின்னா இப்போ அவள் எங்க போனாள்… ஒருவேளை தேவாக்கு நடந்த மாதிரி இவளுக்கும் ஏதாவது ??? இல்லை கண்டிப்பாக அப்படி எதுவும் நடக்காது ” என்று யோசித்தவனுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்தது…

பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவன் கண் முன்னே காட்சிப்படமாக தோன்றி அவனை ரணப்படுத்த

” இல்லை ” என்று அந்த இடமே  அதிரும்வண்ணம் கத்தினான் விக்ரமன்…

தொலைந்தது ‘நிம்மதி’ என்றால்…

தேடல் ரணமானது…

கீர்த்தியை தேடி தடுமாறியவனது மனம், நடுங்க தொடங்கியது.. அன்று வர்ஷாவை தேடும் போது அவன் பார்வையில் இருந்த அதே நடுக்கம் இன்று அவனது விழிகளில் அப்பட்டமாக தெரிந்தது …

” ச்சே  எங்க போனாளோ? போ ன்னு சொன்னா போய்டுவாளா? திரும்ப  மட்டும் கிடைக்கட்டும் கையையும், காலயும் உடைச்சு வீட்டோட போடுறேன், அப்போ தான் சரியா வருவாள்.. ”  என்று   கலக்கத்தில் கூறியவன், அவளை தேடிக்கொண்டே வாகனத்தை ஓட்டி செல்ல… தூரமாக இருந்த பேருந்து நிலையத்தில் யாரோ ஒருவர்  முட்டியில் முகம் புதைத்து அமர்ந்திருப்பது போன்று இருக்கவும்… அந்த பெண்ணின் ஆடையை கொண்டு நிச்சயம் அது கீர்த்தியாக தான் இருக்கும்! என்ற நம்பிக்கையில்  விரைந்து அங்கு சென்றவன், காரில் இருந்து இறங்கி அவள் பக்கம் வந்தான்…

இரவு நேரம் என்பதால் அவ்விடம் ஆள் நடமாட்டமின்றி இருந்தது…

முகம் மறைத்து அமர்ந்திருந்த அந்த பெண்ணின் அழுகுரல் விக்ரமனின் செவிகளில் விழவும்… நடுங்கிய விரல்களுடன், அவளது தலையில் கரம் வைத்தான்…

யாரோ தன்னை தீண்டுவதை உணர்ந்து, அந்த பெண் சற்றென்று நிமிர்ந்து பார்க்க.. அவளது முகம் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டு இரு அடி பின்னே நகர்ந்தவன், அவளை நோக்கி ” ஏன்டி? ” என்று கேட்க… அவனை புரியாத பார்வை பார்த்தவள், மீண்டும் தலையை முட்டியில் புதைத்து அழ தொடங்கினாள், கீர்த்தி…

” போதும்…  வா வீட்டுக்கு போகலாம்  ” என்று தழுதழுத்த குரலில் விக்ரமன் கூற… நிமிர்ந்து அவனை  தீ பார்வை பார்த்தவள்… அங்கிருந்து எழுந்து  அவனை கடந்து செல்ல முற்பட்டாள்…

தன்னை கடந்து செல்பவளின் கரம் பற்றி தடுத்து நிறுத்தியவன் ” கார்ல ஏறு ” என்று கூறி காரின் முன் பக்க கதவை திறந்து விடவும், வெடுக்கென்று அந்த கதவை அடித்து மூடினாள்..

” அது தான் போக சொல்லிடீங்க இல்லை, அப்புறம் என்ன? நான் எங்கேயாவது போறேன் உங்களுக்கு என்ன வந்தது? ” என்றவள் அவனது கரத்தில் இருந்து தனது கரத்தை உருவிக்கொண்டாள்.

” விளையாடதாடி … க்ளைமேட் வேற சரி இல்லை, மழை வரும் போல இருக்கு, நேரம் ஆச்சு வா ”

” ஒஹ்!!! ஆமா நேரம் ஆச்சு தான்… அந்த ஹீரோயினோட  பர்த்டே பார்ட்டிக்கு போகணும் இல்லை…நீங்க போங்க சார் எங்களை நாங்க பார்த்துக்கிறோம் ” என்றவள் அவனது பதிலையும் எதிர்பாராமல்  வேகமாக அங்கிருந்து சென்றாள்..

எப்படியும் அவன் பின்னால் வருவான், என்ற தைரியத்தில் வேகமாக சென்றவள், தொடர்ந்து வரும் அவனது காலடி சத்தம் கேட்காததால் வேகத்தை குறைத்துக்கொண்டு  மெதுவாக பின்னால் திரும்பி பார்க்க… அவனோ இன்னும் அதே இடத்தில் கைகளை கட்டிக்கொண்டு செல்லும் அவளை  எந்த வித உணர்வுமின்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

” கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு இவரு கூப்பிட்ட உடனே நாங்க வந்திடனும் ” என்று அவனை திட்டியபடி, வேக எட்டுவைத்து மீண்டும் அவன் இருக்கும் இடத்தை நோக்கி வந்தவள்.. அவன் முன்பு தானும் கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்து பார்க்க… சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தான் விக்ரமன்…

” மன்னிப்பு கேளுங்க… வீட்டுக்கு வரேன்… இல்லை இப்படியே எங்கயாவது போயிடுவேன்.. ” என்று விரல் நீட்டி தன்னிடம் பேசியவளது கரத்தை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன்,  அவளது முகத்தை இரு கைகளால் தாங்கி, நொடியில் அவளது இதழ்களை தன் இதழ் கொண்டு மென்மையாக மூடினான்…

அவனது செயல் கண்டு திகைத்த பெண்ணவள், இமை சிமிட்டி அவனது முகத்தை பார்க்க முயற்சித்தாள்..

அவனது மென்மையான அணுகுமுறை வன்மையாகவும், எவ்வாறு எதிர்வினை புரிவது என்று அறியாத மங்கைவளுக்கு  அவனது இதழ் தொடுகை புது உணர்வை கொடுக்கவும்… தன்நிலை மறந்து   விழிகளை மூடிக்கொண்டாள்…

தன் இமைகளில் ஈரத்தினை உணர்ந்தவள்… மெல்ல கண்விழிக்க,  அவனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளது இமை தாண்டி கன்னம் நிறைத்திருந்தது ‘ அழுகிறாரா ஏன்? எதற்காக ? ‘ என்ற கேள்வியுடன் அவள் மெதுவாக அவனை தன்னில் இருந்து விலக்க  முயற்சிக்கவும்.. அவளை விட்டு விலகும் எண்ணமே இல்லாதவன் போல அவளது அதரங்களை ஆராய்ந்து  மீட்டியவன்… இசையாய் இசைந்தவளின் இதழ்களில் இருந்து மெல்ல தன் இதழ்களை பிரித்தெடுத்தவன்… ஏக்கத்தோடு அவளது ஆசை முகம் பார்க்க…  அவனது கருவிழிகள் கண்ணீரில் மிதந்து, இமைகளில் நீர் துளிகள் படர்ந்திருந்தது…

உறவுகளை உயிராக எண்ணும் ஆண்களுக்கும் கண்ணீர் வரும்… அந்த கண்ணீரில் துளி கூட வஞ்சமோ,பொய்யோ இருக்காது.

அவனது ஒவ்வொரு செயலும் பெண்ணவளுக்கு புரியாத புதிராகவே இருக்க.. அவன் முகம் பார்க்க முடியாமல் பார்வையை தாழ்த்திக்கொள்ள… அவளது கன்னம் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தியவன் ” ஐ லவ் யூ … ஏன், எப்படின்னு, எதுவும் கேட்காத, எனக்கு பதில் சொல்ல தெரியல, ஆனால் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ” என்று கூறி  நெற்றியில் முட்டியவன், அவளது விழிகளை ஊடுருவி பார்க்க… அவளோ கண்களை உருட்டி உருட்டி அவனை புரியாத பார்வை பார்த்தாள்…

அவளது அமைதியையும், நடுக்கத்தையும் கண்டு ” என்னடி ? ” என்று விக்ரமன் மெல்லிய குரலில் கேட்கவும்…

” ஹான், இப்போ நான் என்ன பதில் சொல்லணும் ” என்று தடுமாறி கேட்டவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன்..

” நீ எதுவும் சொல்ல வேண்டாம் இப்படியே இரு ” என்று கூறியவனை பார்த்து மீண்டும் கண்களை உருட்டியவளை கேள்வியாக பார்த்தவன் ” எதுக்குடி இப்படி பேய் முழி முழிக்குற ? ” என்று சலிப்பாக கேட்டான்…

” ஒன்னும் இல்லை ” என்றவள் தன் கரத்தை  வயிற்றில் வைத்து கொண்டு ” எனக்கு பசிக்குது போல” என்று கூற… கண்களை துடைத்து கொண்டு சத்தமாக சிரித்தவன்…

” உனக்கு ஏதாவது பிரச்சனையா? ” என்று சந்தேகமாக கேட்டான்…

” ஏன் அப்படி  கேக்குறீங்க? ”

” இல்லை நான் இவ்ளோ பேசியும் உனக்கு எந்த பீலும் வரலையா ? ”

” என்ன பீல் வரணும் ”

” ம்ஹும்… உனக்கு ஒன்னுமே வர வேண்டாம்.. வீட்டுக்கு போகலாமா ?”

” சரி அங்கிள் ” என்று கூறிவிட்டு பட்டென தன் நாக்கை கடித்துக்கொண்டாள் கீர்த்தி…

அதிர்ச்சியோடு அவளை நோக்கி திரும்பியவன் ” என்ன சொன்ன? ” என்று கேட்கவும், அவனை பார்த்து திரு திருவென முழித்தவள் அவனுக்கு முன்பாக கார் கதவை திறந்து கொண்டு உள்ளே அமர்ந்து கொண்டாள்.

ஆயிரம் கேள்விகளுடன் அவளை பார்த்தவன்… அதனை பற்றி அவளிடம் கேட்க மனமில்லாமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டான்… பயணம் அமைதியாக இருந்தது,  முதல் முறையாக கீர்த்தியின் மன ஓட்டத்தை அறியமுடியாமல் தடுமாறினான் விக்ரமன்..

வீட்டிற்கு வந்த பிறகும் கூட விக்ரமன் யோசனை பூசிய முகத்தோடு அலையவே..” என் மேல ஏதாவது கோவமா ? ” என்று கேட்டாள் கீர்த்தி

” அப்படி எல்லாம்  இல்லையே ”

” அப்போ ஏன் உங்க முகம் இப்படி இருக்கு, என் மேல கோவம் தானே ”

” டேய்..  கோவம் எல்லாம் இல்லைடா  கொஞ்சம் டயர்டா இருக்கு ,  நாளைக்கு ஈவினிங் மும்பை கிளம்பனும் ஞாபகம் இருக்கு இல்லை, குட் நயிட் ” என்றவன் அங்கிருந்து வெளியே சென்றான்…

*****

அதியனை வைத்த கொண்டு கீர்த்தி விஷயத்தில் எதுவும் செய்யமுடியாமல் இருந்த சரத்… வேறு வழியின்றி அவனுடன் மும்பையில் இருக்கும் தனது தாத்தாவின் கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து சேர்ந்தான்…

நந்தினிக்கோ இப்போது தான் உடல்நிலை சற்று சீராகி இருக்க, வெளியே இருக்கும் தோட்டத்தில் நடமாடி கொண்டிருந்தாள்…

வீட்டிற்குள் அவர்களது கார் நுழைய… அமைதியாக அதனை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் நந்தினி.

காரில் இருந்து அதியன் இறங்கவும் முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட ” அதி ” என்று அங்கிருந்தபடியே அவள் குரல் கொடுக்க… குரல் வந்த பக்கம் பார்வையை திரும்பிய அதியன் அங்கு நந்தினியை கண்டதும் ” ஏய் நந்த் நீ எங்க இங்க ” என்று விரைந்து அவள் பக்கம் செல்ல… அவனை தொடர்ந்து சரத்தும் சென்றான்.

” நந்தினி எப்படி இருக்க பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு ” என்றவன் அவளை அணைத்து கொள்ள, நந்தினியும் ஆதராவாக அவனை அணைத்து கொண்டாள்.

” இப்போ எல்லாம் ஓகே டா நீ எப்படி இருக்க ? ”

”  நல்லா இருக்கேன், சும்மா சொல்ல கூடாது வயசானாலும் உன் ஸ்டையிலும் , அழகும் இன்னும் உன்னை விட்டு போகல ” என்றவனது முதுகில் அடித்தவள்… “அப்போ எனக்கு வயசாகிடுச்சின்னு சொல்லுறியா ? ”

“பின்ன இல்லையா ஆண்டி ஆகிட்டடி நீ.. ஆனாலும் அழகா தான் இருக்க ” என்று கூறிவிட்டு அவன் ஓட அவனை துரத்தி கொண்டு நந்தினியும் பின்னால் ஓடினாள்… அவர்களது இந்த செயலை புன்னகையுடன் பார்த்த சரத் அவர்களை பின்தொடர்ந்தான்.

ஓடி களைத்தவர்கள் ஒரே சோபாவில் ஓய்வெடுக்க,அவர்கள் எதிரில் வந்தமர்ந்த சரத் ” மூணு வருஷத்துக்கு அப்புறம் அவன் சிரிச்சு இன்னிக்கு தான் நான் பாக்குறேன் நந்தினி, தன்க்ஸ் ” என்றவனுக்கு, அதியனது இந்த புன்னகை முகம், மனதில் நிம்மதியை கொடுத்தது.

” மூணு வருஷம் சிரிக்கவே இல்லையா நீ, ஏன்டா பல்லு கட்டியிருந்தியா என்ன? ” என்று கிண்டல் செய்தவளுக்கு. திடீரென வர்ஷாவின் நினைவு வர ” அதி உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம வர்ஸ்… ” என்று அவள் கூற தொடங்கவும்

” ரொம்ப டயர்டா இருக்கு  நந்தினி நாங்க ரெஸ்ட் எடுக்கிறோம் ” என்று அதியனது கரத்தை பற்றி உள்ளே இழுத்து சென்ற சரத் நந்தினியை திரும்பி பார்த்து ‘ வேண்டாம் ‘ என்பது போல கோவமாக சைகை செய்து விட்டு உள்ளே சென்றான்…

அவனது செயல் நந்தினிக்கு குழப்பத்தையும், சந்தேகத்தையும் கொடுத்தது…

********

அடுத்தநாள் கீர்த்தியை அழைத்து கொண்டு மும்பைக்கு வந்திறங்கினான் விக்ரமன்…

அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்தவன்… ‘அடுத்தது என்ன?’ என்ற யோசனையில் பால்கனி பக்கம் நின்றுகொண்டிருந்தான்…   கீர்த்தியோ பிரயாண களைப்பில் அறையில் உறங்கிகொண்டிருந்தாள்.

அப்போது ‘விக்ரமன் மும்பைக்கு  வந்துவிட்டான்’ என்ற தகவலை அறிந்து கொண்டு, சத்யா அவனை காண வந்தான்…

பால்கனியில் நின்றுகொண்டிருந்த விக்ரமன் சத்யனது கார் உள்ளே நுழைவதை பார்த்ததும் ” இவன் எங்க இங்க? ” என்ற யோசனையுடன் கீழே இறங்கி வந்தான்…

அவனது காலடி சத்தம் கேட்டு மெத்தையில் இருந்து மெல்ல கண்விழித்துக் கொண்டாள் கீர்த்தி..

” எப்படி இருக்கீங்க சார் ” என்று கேட்டபடி  சத்யன் வீட்டிற்குள் நுழைய போகவும்…

”  இப்போ எதுக்குடா வந்த ? ” என்று கேட்ட விக்ரமன், கீர்த்தியின் அறையை பார்த்தபடி அவனை வெளியே அழைத்து வந்தான்…

” என்ன ஆச்சு சார்? ”

” பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு என்ன ஆச்சுன்னு கேள்வி வேற? ஸ்ரூதிக்கு உன்னை நல்லாவே தெரியும், அவள் வந்து உன்னை பார்த்துட்டா என்ன ஆகுறது, கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா ”

” இல்ல சார்  மகிழன்  ரொம்ப பிரச்சனை பண்ணுறான்.. வீட்டுக்கு போகணும்,கீர்த்தியை பார்க்கணும், அப்படி இப்படின்னு ஒரே பிரச்சனை.. அதனால் அவன் கிட்ட கீர்த்தி உங்க கூட தான் இருக்காள் அப்படின்னு சொல்லிட்டேன்…  அவன் என்னென்னா அவளை இப்போவே பார்க்கணும் அழைச்சுட்டு போன்னு சொல்லுறான், அதான் உங்களை பார்த்து  விஷயத்தை சொல்லி என்ன பண்ணலாம்ன்னு கேட்க நெனச்சேன்… ”

” ஏன்டா அதை போன் பண்ணி கேட்டு இருக்கலாம் இல்லை ”

” போன் பண்ணனும்ன்னு தான் நெனச்சேன், சரி  அப்படியே உங்களை பார்த்துட்டு, கீர்த்திக்கிட்ட இருந்து பையில் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதான்னு கேட்கலாம்னு வந்தேன்…  இன்னும் மூணு நாளில் லாஸ்ட் ஹியர்ங் என்ன பண்ண போறோம் சார் ”

” எனக்கு புரியுது சத்யா ஆனால் இங்க வச்சு இதை பேசுறது நல்லது இல்லை… ” என்று கூறிய விக்ரமனுக்கு பரதனிடம் இருந்து அழைப்புவர… சத்யனை ஒரு பார்வை பார்த்தபடி அழைப்பை ஏற்றான்…

அந்த நேரம் அபிமன்யுவை தேடி கீழே வந்த கீர்த்தி, வெளியில் சத்யனும், அபிமன்யுவும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து  அப்படியே உறைந்து வாசல் கதவின் புறம் சாய்ந்து நின்றுகொண்டாள்…

அதை எதையும் கவனிக்காத விக்ரமன் பரதனிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் “சொல்லுடா ”

” அண்ணா ஹாஸ்பிட்டல் மெயின் கேட் சிசிடீவி கமெராவை செக் பண்ணும் போது நர்ஸ் சொன்ன நேரம் படி பார்த்தால்   நயிட் அந்த நேரத்தில் மூணு கார் போயிருக்கு… இப்போ அந்த மூணு காரோட நம்பர் வச்சு தான் விசாரிச்சிட்டு இருக்கோம் ” என்று அவன் கூற…

” ம்ம்ம் சீக்கிரம் விசாரிச்சு சொல்லு ” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

அவனது பேச்சை கவனித்து கொண்டிருந்த சத்யன் ” யாரு சார் பரதனா ? ” என்று கேட்க…

” ம்ம்ம் ”

” எதை பத்தி பேசிட்டு இருந்தீங்க என்ன விசாரிக்கனும் ”

” நந்தினி இன்னும் சாகல சத்யா.. அவள் உயிரோட தான் இருக்காள், இவ்ளோ நாள்  அவள் கோமாவில் இருந்தா… ஆனா இப்போ எஸ்கேப் ஆகிட்டாள் ” என்றவன் நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினான். அதை அனைத்தையும் கதவருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த கீர்த்தி வாயை மூடி அழ தொடங்கினாள்.

” இதை ஏன் நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லல, முன்னாடியே சொல்லி இருந்தால் கோமாவிலேயே அவளை கொன்னு இருப்பேனே விக்ரமன் சார் ” என்று அவன் கூறவும்… வீட்டிற்குள் ஏதோ ஒன்று கீழே விழுந்து உடையும் சத்தம் கேட்டது…

அந்த சத்தம் கேட்டு ‘ ஷ்’ என்று சத்யனிடம் சைகை செய்த விக்ரமன் வீட்டிற்குள் வர… அங்கு கதவு பக்கத்தில் கண்ணீருடன் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள் கீர்த்தி… அவளது கரம் பட்டு தான் பூ ஜாடி  கீழேவிழுந்து உடைந்து கிடந்தது..  அதை பார்த்தவன்… சிலையாக நின்றிருந்தவளின் அருகில் வர… கண்களை அகல விரித்து அவனை தீ பார்வை பார்த்தவள்… அவனது கரம் படாமல் விலகி சென்றாள்…

விக்ரமன் அறையில் இருந்து வெளியே வரும் போதே அவனது பதட்டமான முகத்தை கவனித்தவள்.. சிறுது நேரத்திற்கு பிறகு அவனை தேடி வெளியே வந்தாள்… வெளியே வந்தவளுக்கு அங்கு சத்யனது முகத்தை பார்த்ததும் பாதி விஷயம் புரிந்து விட்டது … மேலும் அவர்கள் இருவரும் நந்தினியை பற்றி பேசிக்கொண்டிருப்பதை கேட்டவளுக்கு அனைத்துமே புரிந்து விட்டது…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்