
“ஐயோ யம்மா…” கதிரவன் கைக்கு கட்டு போடும்போது அனத்திக் கொண்டிருந்தான்.
யாஷ் பிரஜிதன் நிமிர்ந்து முறைத்ததும், “ஐயயோ யம்மா யம்மா” என மெதுவாக முணுமுணுக்க, நிதர்ஷனாவிற்கு சிரிப்பை அடக்குவதே பெரும்பாடாக இருந்தது.
சிந்தாமணிக்கோ தனக்காக அவன் இரத்தம் சிந்தியது தித்தித்தாலும், ‘நாசமா போனவனுங்க… பிஞ்ச செருப்பை கூட எடுக்க விடாம வெறும் கால்ல இத்தனை கிலோ மீட்டர் ஓட விட்டுட்டானுங்களே’ என்ற கடுகடுப்பில் இருந்தாள்.
கண்மணியின் நிலையோ வேறு!
தனக்காக நிவேதன் நின்றதும், தன்னைக் காக்க அவன் செய்த முயற்சியும் மனதில் நீங்கா சின்னமாய் நிறைந்து விட்டது.
வயிற்றில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போட்டு விட்டு வெளியில் வந்த நிவேதன், மருத்துவமனை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த கண்மணிக்கு அருகில் அமர்ந்தான்.
அவனைக் கண்டதும், “இப்ப வலி பரவாயில்லைங்க நிவே?” என வருத்தம் தோய்ந்த முகத்துடன் கேட்க, “லேசான கீறல் தான் கண்மணி. வலி எதுவும் இல்ல…” என்றான் சின்னச் சிரிப்புடன்.
“இப்ப ஊசி போட்டுருப்பாங்க. போக போக தான் வலிக்கும்…” என்று விட்டு கையில் வளையல்களை ஆராய்ச்சி செய்ய, அவனோ அவளை ஆராய்ந்தான்.
தனக்கு அடிபட்டதும் தன்னை அணைத்து நின்ற நொடி நினைவில் தோன்றி அலைக்கழித்தது.
வெகு நேரமாக வளையல்களை வருடிக்கொண்டிருந்தவளை ரசனை மிக்க ஏறிட்டவன், “எத்தனை வளையல் இருக்குன்னு எண்ணுறியா?” என்றான் கிண்டலாய்.
“அதில்ல… முதல் முதல்ல வாங்கி குடுத்த வளையல். அந்த பைத்தியக்காரன் உடைச்சுட்டான்… பாருங்க பாதி உடைஞ்சுருச்சு” என்ற கண்மணியின் முகத்தில் டஜன் கணக்காய் வேதனை.
“கண்ணாடி வளையல் எப்டினாலும் உடையும் தான கண்மணி?” நிவேதன் கனிவாய் கேட்க,
“நான் உடையாம வச்சுருப்பேன் நிவே…” என நிமிர்ந்து உரைக்கும் போதே விழி கலங்கியது அவளுக்கு.
அவளை விழியெடுக்காமல் பார்த்திருந்த நிவேதனுக்குள் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓட, கண்ணைத் தாண்டி விழிநீர் கடக்கும் முன்னே பெருவிரலால் அதனைத் தடை செய்திருந்தான்.
கண்ணீர் தடைபட்டுப் போனாலும், பெண்ணின் சருமம் கொடுத்த வழவழப்பில் கிறங்கிப் போனவனுக்கு கையை எடுக்க மனமில்லை.
பெருவிரலால் கண்மணியின் கன்னத்தில் வருடிட, செங்கொழுந்தாய் சிவந்து போனது பெண்ணின் வதனம்.
தனது தீண்டலில் சிலிர்த்துக் கண் மூடிக்கொண்டவளைக் கண்டு அவனிதழ்கள் மென்மையாய் வளைய, வார்த்தைகள் கூறிக்கொள்ளாத காதலை சின்னதொரு தீண்டல் உரக்கக் கூறியது.
“கண்மணி!” வார்த்தைக்கும் வலிக்கும் படி அழைத்தான் நிவேதன்.
“ம்ம்…” அவளது ரீங்காரம் தேனாய் செவியில் மோதிட, எங்கோ ஒலித்த ஹார்ன் சத்தத்தில் தான் சுயநினைவுக்கு வந்தான்.
விருட்டென கையை எடுத்துக் கொண்டவனின் நெஞ்சம் படபடக்க, “இந்த வளையலுக்காக எல்லாம் அழுவாத கண்மணி… எவ்ளோ பத்திரமா வச்சாலும் உடையத் தான் போகுது” என்று வேகமாய் உரைத்து விட்டு அவள் கண் விழிக்கும் முன்னே அங்கிருந்து சென்று விட்டான்.
நான் உடைய விட மாட்டேன் நிவே!’ உதடுகள் மெல்ல அசைந்தது அவளுக்கு.
‘
கோவிலுக்கு வந்த இடத்துல இப்படி ஆகிடுச்சே ஆதிசக்திக்கு மனம் ஆறவில்லை.
இளையவர்கள் மருத்துவமனையில் இருந்த போது அன்னதானத்தை முடித்து விட்டவர்களை அங்கேயே இருக்கும்படி பணித்தான் யாஷ்.
சிகிச்சை முடிந்து நேராக கோவிலுக்கே அனைவரும் வந்தபிறகு, இளவேந்தன் “என்னப்பா இப்டி ஆகிடுச்சு?” எனக் கலங்கி விட்டார்.
“இனி அந்த முருகன் பிரச்சினை பண்ண மாட்டான்ல… லீவ் இட் அங்கிள்!” யாஷ் இயல்பாகக் கூற, கிருஷ்ணவேணியோ “சாமி கும்பிட வந்த இடத்துல அபசகுனம் ஆகிடுச்சே தம்பி. இரத்தக்காவு எல்லாம் வாங்கிருக்கு” என்று வருந்தினார்.
“யார் அந்த குணா?” யாஷ் புரியாமல் வினவ, நிதர்ஷனா முட்டிய சிரிப்பை அடக்கியபடி, அதற்கு பத்து பக்கத்திற்கு விளக்கம் கொடுத்தாள்.
“புல்ஷிட்! இதெல்லாமா நம்புவீங்க?” என நெற்றியை நீவினான்.
அழகேசனும், “இவ்ளோ மோசமா இறங்குவாங்கனு தெரிஞ்சுருந்தா உங்களை அடுத்த பிளைட்ல திரும்பிப் போக சொல்லிருக்கலாம்” என்று வேதனை கொள்ள, மகேந்திரனுக்கும் ஆற்றாமை தாளவில்லை.
மாலையே அனைவரும் மீண்டும் தஞ்சாவூருக்குச் சென்றிருக்க, சிந்தாமணி இன்னுமே வளையல்களை கழற்றாமல் இருந்ததைக் கண்ட கண்மணி, “உனக்குத் தான் நிறைய வளையல் போட்டா தூக்கமே வராதுன்னு சொல்லுவியே சிந்தா… கழட்டல?” எனக் கேட்டாள்.
“இப்ப நல்லாத் தூக்கம் வரும்னு தோணுது” என்றவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவள், “என்னடி நடக்குது இங்க?” என்றாள் இடுப்பில் கை வைத்து.
“நீ தான் முதல்ல சொல்லணும். உனக்கும் நிவே அண்ணாவுக்கும் நடுவுல என்ன இருக்கு” கேலிச் சிரிப்புடன் வினவ, கண்மணிக்கு மேனி சிவந்தது.
“அடடா நிவே அண்ணா பேரை சொல்றதுக்கே சிவக்குறாளே!” கன்னத்தில் கை வைத்து அதிசயித்த சிந்தாமணியின் வாயைப் பொத்தியவள், “கத்தித் தொலையாதடி…” என்றாள் அவஸ்தையாக.
“சரி சொல்லு… அண்ணாவை லவ் பண்றியா?”
தாவணி முந்தானையை திருகியவள் “அவரைப் பார்த்ததுல இருந்தே அவரைப் பிடிக்கும் சிந்தா! ஆனா இந்த லவ்வால நம்ம குடும்பத்துல எவ்ளோ பிரச்சினைல… அதான் குழப்பமா இருந்துச்சு. அண்ணாவையும் அண்ணியையும் பார்த்ததும், அவங்களை மாதிரியே லவ் பண்ணனும்னு தோணுது சிந்தா…” என்றாள்.
“ஹோ… நிவே அண்ணாவை லவ் பண்ணத் தோணுதோ!” சிந்தாமணி மேலுதட்டை மடக்கிக் கேட்க, “அவர் மேல இல்லாம வேற யார்கிட்டயும் இந்த உணர்வு வராது சிந்தா” என்றவளிடம், “அண்ணாட்ட லவ் சொன்னியா?” என்றாள் ஆர்வமாக.
“இல்ல சிந்தா… அவருக்கும் என்னைப் பிடிக்கும்.”
“ஹான் அது தான் தெரிஞ்சுதே இன்னைக்கு. முருகன்கிட்ட பேசுனதை வச்சே!”
கண்மணியின் முகத்தில் பெருமிதமும் கர்வமும் மிதந்தது.
“அவரா சொல்லாம நானா எப்படி?” கண்மணி தயங்கினாள்.
“யார் சொன்னா என்ன? நேரம் பார்த்து சொல்லிடு கண்மணி.”
“ம்ம் சரிடி… நீ என்ன கதை?”
சிந்தாமணி ஒரு நொடி அமைதிக்குப் பிறகு நடந்ததை எடுத்துரைக்க கண்மணி திகைத்தாள்.
“கதிர் அண்ணா, குடும்பத்தை பத்தி யோசிக்கிறாரு சிந்தா”
“புரியுது கண்மணி. அவர் தகுதி தகுதின்னு பேசுறதை கேட்கும்போது எனக்கு கோபமா வருது. வரதராஜனுக்கும், உன் பயலாஜிக்கல் அப்பாவுக்குமே இந்த குடும்பத்து மாப்பிள்ளையாக தகுதி இருக்கும்போது, இவருக்கு என்ன குறைச்சலாம்?”
“கவலைப்படாதடி. அண்ணா புருஞ்சுப்பாங்க!”
“ம்ம்! பேசாம அவர் அம்மாவை கரெக்ட் பண்ணிடலாம்னு பார்த்தா, அந்தம்மா வாயை தொறந்தா காவா தான் ஓடுது. என் காதலை காப்பாத்திக்க போறேனா, இல்ல அந்தம்மாட்ட என்னை அடகு வைக்கப்போறேனா…” என சந்திரமுகி ரஜினி போல மேலே கைகாட்டிக் கொண்டவளைக் கண்டு கண்மணிக்கு சிரிப்பு பொங்கியது.
இங்கோ கதிரவனும் நிவேதனும் கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்திருந்தனர்.
நிவேதன் தான் ஆரம்பித்தான்.
“சிந்தாவோட லவ்வுக்கு ரெட் சிக்னல் காட்டிட்டு, வளையல் வாங்கி கொடுக்குறதும் அவளை சைட் அடிக்கிறதுமா சுத்துறியே என்னடா கதை?”
“அங்க மட்டும் என்ன வாழுதாம்… நாங்களாச்சு வளையல் தான் வாங்கி கொடுத்தோம். அங்க போட்டு விடவே செஞ்சாங்க ஒருத்தங்க” என்று சாடினான்.
நிவேதன் அமைதி காக்க, “கண்மணியை லவ் பண்றியா நிவே!” என அவன் புறம் திரும்பிக் கேட்டதில், அவனிடம் பதில் இல்லை.
“இப்ப இதை பத்தி பேச வேணாமே!” என்று கண்மூடி உறங்க முயன்றதில், “பாத்துடா அப்பனும் அண்ணனும் வெளிநாட்டுக்காரனுங்க… சாண்ட்விச் மாதிரி டோஸ்ட் பண்ணிட போறானுங்க” என்று கேலியாய் சிரித்தபடி அவனும் உறங்கிப் போனான்.
——
“உங்களை கூட்டிட்டு வந்ததுக்கு நான் வெயில்ல காஞ்சது தான் மிச்சம்” யாஷ் பிரஜிதன் சிடுசிடுத்தான்.
நிதர்ஷனாவோ காலையில் ஆரம்பித்த சிரிப்பை இன்னும் நிறுத்தவில்லை.
“சிரிச்சு கடுப்பேத்தாதடி!”
“அயோ என்னால முடியல. குரங்குக்கு வாழ்க்கை பட்டா, மரத்துக்கு மரம் தாவ தான் செய்யணும் அரக்கா!” என நாக்கைத் துருக்கிட,
“குரங்குன்னு ஒத்துக்கிட்டா சரி தான்”
“நான் மங்கினு ஒத்துக்குறேன். நீ டாங்கினு ஒத்துக்கோ”
“ஹார்ஸ்னு வேணும்னா காட்டவா ஆலம்பனா?” விஷமத்துடன் அவள் அருகில் வர, “கோவிலுக்குப் போயிட்டு வந்துருக்கோம் அபச்சாரம்!” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
“ஏய்… நேத்து நைட்டு தானடி கோவிலுக்குப் போறோம். ஒன்னும் வேணாம்னு சொன்ன. இப்ப தான் போயிட்டு வந்தாச்சே!”
“போயிட்டு வந்தாலும் சுத்த பத்தமா இருக்கணும் யாஷ்!” கீழுதட்டைக் கடித்து சீண்டினாள்.
அவளது குறும்பு புரிந்தவன், “ஓஹோ சுத்த பத்தமா தான இருந்துடலாம்… சுத்தமா குளிச்சுட்டே…” என்றபடி அவளைக் கையில் அள்ளியவன், குளியலறை நோக்கிப் படையெடுக்க, “யாஷ் விடு யாஷ்… ஐயோ வேணாம்… பாத்ரூம்!” என்றவளின் சிணுங்கல்கள் மெல்ல மெல்ல அடங்கியது.
மறுநாள் எழும்போதே, நிதர்ஷனாவின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டான்.
தன் மீது பரவி இருந்த பெண்ணின் கரங்களை மென்மையாய் வருடி விட்டவன், திகைத்தான்.
வளையல்கள் கீறி, ஆங்காங்கே காயத்தைக் கொடுத்திருந்தது.
“மின்னல்… மின்னல்!” தன்னவளை உலுக்கிட, “ம்ம்… போயா தூக்கம் வருது!” என்று மீண்டும் தலையணைக்குள் முகத்தைப் புதைத்தாள்.
“ஏய் உன் கைல பாருடி” யாஷ் கோபத்துடன் எழுந்ததில், அவளும் “என் கைல என்ன?” எனக் குழம்பியபடி எழுந்தாள்.
“என்னடி இப்படி ரெட்டிஷ் ஆகியிருக்கு?” யாஷ் பதற்றத்துடன் அவள் கையைப் பிடிக்க,
“ச்சே இதானா பயந்தே போய்ட்டேன். நீ பண்ண வேலைல கண்ணாடி வளையல் உடைஞ்சுருச்சு யாஷ். நானும் கவனிக்கல…”
வலியில் துடிப்பாளென எதிர்பார்த்தவனுக்கோ கையில் இருந்த காயத்தைக் கண்டு அவள் வெட்கப்பட்டதில், தீயாய் முறைத்தான்.
உணர்ச்சி மிகுதியில் கூட, அவள் மேனியில் சிறு பற்தடங்களும் உருவாக்கியவனில்லை!
“பைத்தியக்காரி! இதைக் கழட்டி வச்சுருக்க வேண்டியது தான?” உச்சபட்சமாக கத்தினான்.
அவனது கோபத்தில் மிரண்டவள், “நேத்து தான வாங்கி குடுத்தான். உடனே கழட்ட முடியுமா? அதுவே கொஞ்ச கொஞ்சமா உடைஞ்சு” எனும்போதே அவள் கையைப் பிடித்து வளையல்கள் முழுவதையும் கழற்றி தூக்கி எறிந்தவன், “அவன் மூஞ்சில விட்டெறிஞ்சுட்டு வா! இன்னொரு தடவை இந்த மாதிரி சீப்பான பாங்கிள்ஸ் போட்ட… கொன்னுடுவேன்!” என்று நரம்பு புடைக்க சீறியதில், அவளுக்கு முகமே சுருங்கி விட்டது.
“கத்தாத யாஷ். அவனுக்கு கேட்டுட போகுது…” நிதர்ஷனா சங்கடமாக பதறிட,
“கேட்டா கேட்கட்டும். கொஞ்சமாவது அறிவு வேணாம். இடியட்ஸ்!” எனக் கத்தி விட்டுக் குளியலறைக்குச் சென்றான்.
பல நாள்கள் கழித்து அவனது கோபத்தைக் காண்பதாலோ என்னவோ, இந்தத் தணலை அவளால் ஏற்கவே இயலவில்லை.
விழிகள் தானாக கலங்கி பெருமழையை உருவாக்கியது. கட்டிலில் இருந்து இறங்கி, தரையில் நொறுங்கி இருந்த வளையல்களை மெல்லக் கூட்டி அள்ளியவளுக்கு கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
சில நிமிடங்களில் குளித்து விட்டு வந்த யாஷ் பிரஜிதன், கன்னத்தில் வழிந்த நீருடன் தரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தவளைக் கண்டு, “ஏய்!” என மீண்டும் உறுமினான்.
“நீ எதுக்கு மறுபடியும் இதுல கை வச்சுட்டு இருக்க?” என்று எரிந்து விழுந்தவன், தரை துடைக்கும் இயந்திரத்தை ‘ஆன்’ செய்தான்.
நொடியில் அந்த வளையல்களை தனக்குள் அடக்கிச் சுத்தம் செய்து விட்ட இயந்திரத்தை அடக்கி வைத்திருந்த கோபத்தின் காரணமாக காலாலேயே எத்தி விட்டவன், நிதர்ஷனாவின் அதிர்ந்த வதனத்தை ஒரு முறை அழுத்தமாய் ஊடுருவிவிட்டு கிளம்பினான்.
பாதி படிக்கட்டுகளுக்கு மேல் கடக்க இயலாமல் நின்றவன், ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு சினம் சற்று தணிந்தபிறகு மீண்டும் அறைக்குச் சென்றான்.
அவனால் அடிபட்ட இயந்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிதர்ஷனா, அதிலிருந்த குப்பையை ஒரு கவரில் கொட்டி விட்டு, தூசியின்றி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
முகம் மட்டும் அத்தனை கலங்கி இருந்தது.
விறுவிறுவென உள்ளே வந்தவன், ஒரு ட்ராயரைத் திறந்து ஆயின்மெண்ட்டை எடுத்து அவளருகில் வந்து கையைப் பிடிக்க, கையை உருவியவள், “நான் போட்டுக்குறேன்” என்றாள் அழுகுரலில்.
“மருந்தை போட்டு விட்டதுக்கு அப்பறம் எவ்ளோ நேரம் வேணாலும் உக்காந்து அழுகு…” கடுகடுப்பாய் கூறியவனை நிமிர்ந்து பாராமலே, புதிதான கண்ணீர் உருப்பெற்றது அவளுக்கு.
எப்போதும் இந்த வாசகத்தைக் கூறினால், ‘நான் இன்னாத்துக்கு அழுவனும்’ என்று எதிர்த்து நிற்பவள், தற்போது உடைந்திருப்பதைக் கண்டபிறகே முழுதாய் நிதானித்தவன், கையில் ஏற்பட்ட கீறலுக்கு மருந்திட்டுப் பின் அவளை இறுக்கி அணைத்திருந்தான்.
அதில் அவன் உடல் வெளிப்படுத்திய நடுக்கம் அவளுக்குப் புதிது!
“சாரிடி!”
“ஒன்னும் வேணாம் போ…”
“ப்ச், சாரி ஆலம்பனா. ஐ ஆம் அவுட் ஆஃப் கண்ட்ரோல். உன் கைல இருக்குற காயத்தைப் பார்த்ததும், ஐ ஆம் டோட்டலி அப்செட். அதுவும் என்னால ஆகிடுச்சுனு…” சொல்லும்போதே அவன் குரல் உடைந்திருக்க, அதற்கு மேல் அவனிடம் கோபம் கொள்ள எப்படி இயலும்.
“நீ தமிழ் படமெல்லாம் பார்த்தது இல்லல. அதான் ஒனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு” கண்ணைத் துடைத்துக்கொண்டு கூறியவளைக் குழப்பமாகப் பார்த்தவன், “ஏன் தமிழ் படத்துல என்ன ஆகும்?” என்றான் புரியாமல்.
“இங்க தமிழ்நாட்டுல கண்ணாடி வளையல் போடுறதும், அது ஹஸ்பண்டால உடையிறதும் பொண்ணுங்களுக்கு ஒரு கிக்கு அரக்கா!” அவனது சட்டை பட்டனைத் திருகியபடி உரைக்க,
“அரை மெண்டல்… அதுக்கு பேர் கிக்கு இல்ல கிறுக்கு. ஃபிஸிக்கல் இன்டராக்ஷன் பண்றது, உடம்பையும் மனசையும் ஒரு நிலைப்படுத்துற விஷயம். இட்ஸ் ஜஸ்ட் அ ப்ளஷர், அதைத் தாண்டி உங்கிட்ட நான் உணர்ற ஒரு ஃபீலிங் இட்ஸ் டிஃபரென்ட். பட் அதுக்காக உடம்புல காயத்தை ஏற்படுத்திக்கிறது ஃபில்டர் இடியாடிக் கான்சப்ட்!” என்றவனை விழி அகல நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் கண்களில் சின்னதாய் ஒரு வலி. அது அவளுக்குள்ளும் ஊடுருவ, “சரி இனிமே நான் கண்ணாடி வளையல் போட மாட்டேன் போதுமா?” எனத் தலை சாய்த்து கூறியவள், “இனி இப்படி மூஞ்சியை வைக்காத. எனக்கு கஷ்டமா இருக்கு” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
அவளது நெற்றி முட்டியவன், “ம்ம்ம்! ஐ டீப்லி லவ் யூ ஆலம்பனா. இட் மீன்ஸ் அ லாட்!” என்றவனின் வார்த்தைகள் கொடுத்த ஆழம், அவளை அதிகம் தாக்கியது.
அந்த காதலின் ஆழமே இருவருக்குள்ளும் பிரிவை ஏற்படுத்தப் போவதை இருவருமே அறியவில்லை.
அரக்கன் தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
59
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Adutha ud podunga sis