
அத்தியாயம் 16
பெங்களூர் லால் பாக் தாவரவியல் பூங்காவிற்கு கனிமொழியை அழைத்து வந்திருந்தான் கீதன். இங்கு வந்ததே அவர்களின் கவலைகளை சிறிது மறக்க வேண்டி தான். எனவே காலையில் சீக்கிரமாகவே அழைத்து வந்து விட்டான். வெளியில் ஒரு ஹோட்டலில் டிபன் வாங்கி கொடுத்தவன் அவளுடன் அந்த இடத்தை ரசித்து கொண்டிருந்தான்.
லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்’ என்பது பொருள். இந்த பூங்காத் தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது. இங்கு ஆயிரம் வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள செடிகள் வாடாமல் இருப்பதற்கு நன்கு திட்டமிடப்பட்ட நுட்பமான நீர்ப்பாசன முறை உள்ளது. தாமரை தடாகங்கள், பலவிதமான வடிவங்களில் புல் தரைகள், மலர்ப்படுக்கைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமையும் மலர்களுமாக காட்சியளிக்கும் இந்த பூங்காவிற்கு வந்தால் இயற்கை ரசனை தானாக வந்து விடும். மலர்கள் என்றாலே கொள்ளை அழகு தான். அந்த கொள்ளை அழகை தன் மனதிற்கு பிடித்தவர்களுடன் பார்ப்பது இன்னும் அழகு.
கனியும் அதன் அழகை சிறிது சிறிதாக ரசித்து கொண்டிருந்தாள். அந்த அழகை காண அவளுக்கு இரண்டு கண்கள் போதாது. கீதன் அவள் ஒவ்வொன்றையும் ஆச்சர்யத்துடன் சொல்லும் போது ஆதூரமாக கேட்டு கொண்டு வந்தான். ஏதோ அவனால் கொடுக்க முடிந்த சிறிய மகிழ்ச்சி. இருவரும் சுற்றி பார்த்து விட்டு வெளியே வரும் போது மதியத்தை கடந்திருந்தது.
“சாப்பிட போலாமா கனி?” என்ற கீதனின் கேள்விக்கு “இன்னும் என்ன அவசரம்? பக்கத்துல ஏதாச்சும் கோவில் இருந்தா போகலாம்..” என்றாள்.
ஏற்கனவே கோவிலுக்கு போகாமல் இருந்ததால் கோவமாக இருந்ததை நினைத்து பார்த்தவன் எதுவும் பேசாமல் கோவிலுக்கு அழைத்து சென்றான். சாமியின் முன் கண்களில் கண்ணீர் வழிய பிரார்த்தித்தவளை பார்த்து கீதனுக்கு வலித்தது. அவளின் கண்களில் கண்ணீரை காணவே கூடாது என்றும் அவளுக்கு தாய் தந்தை பாசம் அனைத்தும் தன்னால் மட்டுமே கிடைக்க வேண்டும் என்று திருமணம் புரிந்தவனுக்கு அவளின் கண்ணீர் காரணமே தான் எனும் போது கஷ்டமாக இருந்தது.
பூசாரி பிரசாதம் கொடுத்ததும் வாங்கியவர்கள் அங்கிருந்த தூணின் அருகில் அமர்ந்தனர்.
“அன்னைக்கு எதுக்கு அவ்ளோ கோபம் பட்ட கனி?” என்று கீதன் கேட்க புரியாமல் பார்த்தாள்.
“என்னைக்கு?”
“நான் கோவிலுக்கு கூட்டிட்டு போகலன்னு கோவபட்டியே” என்று கூற “அது.. அது உங்க பேர்ல அபிஷேகம் பண்ண சொல்லிருந்தேன்.. அப்புறம் அங்கபிரதட்சணம் பண்ணுறதா வேண்டியிருந்தேன்” என்று கூற அவளை முறைத்தான்.
“உன்னை கஷ்டப்படுத்தி நான் நல்லா இருக்க வேண்டாம்.. கடவுளுக்கு என் மேல மனசு இறங்கினா எல்லாம் சரி ஆகும்” என்று கூறி எழும்ப அவனோடு எழுந்தாள்.
இருவரும் மதியம் சாப்பிட்டு விட்டு அவளை மந்த்ரி ஸ்கொயர் மாலுக்கு அழைத்து சென்றான் கீதன். அவ்வளவு பெரிய மாலை பார்த்ததும் அவளுக்கு ஆச்சர்யம் தான். அவள் மாலுக்கு போவதே பெரிது. தன் தகுதிக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் என்று நினைப்பவள். எனவே சிறிய கடைத்தெருவில் தான் அனைத்தும் வாங்கி கொள்வாள். இன்று அவளை ஒரு துணிகடைக்குள் அழைத்து சென்றான் கீதன்.
“கனி உன்கிட்ட சாரீஸ் நிறைய இல்லல.. சோ அது இங்க வாங்கிக்கலாம்” என்று கூற சில புடவைகளின் விலையை பார்த்தவள் “வேண்டாம்.. சென்னை போய் வாங்கிக்கலாம்” என்று மறுத்தாள்.
“நான் சம்பாதிக்குறது எல்லாம் உன் ஒருத்திக்காக தான்.. இனி அனுவை அதி பார்த்துப்பான்.. அப்படியே அவங்களுக்கு தேவை பட்டாலும் நான் பார்த்துக்குறேன்.. இன்னைக்கு எனக்காக இருபது சாரி நீ செலக்ட் பண்ணியே ஆகணும்” என்று விலை கணக்கில்லாமல் எடுத்து வைக்க கடைசியில் பில்லை பார்த்த கனிக்கு மயக்கமே வந்து விட்டது. ஐம்பதாயிரத்துக்கும் மேல் புடவைக்கு மட்டுமே செலவு பண்ணியிருந்தான். அவளின் கெஞ்சல் எதுவும் பலிக்காமல் போக வீட்டிற்கு வந்த நேரம் அதிரன் கீதனுக்கு அழைத்தான்.
“என்ன மச்சி ஒரே பிசி போல.. போனதில் இருந்து போனே இல்ல..” அதிரன் கூற கீதன் கனியை பார்த்து அனைத்தையும் உள்ளே எடுத்து வைக்க சொன்னவன் மீண்டும் வெளியே வந்தான்.
“நீ அங்க என்ன பண்ணுறியோ அந்த பிசி தான் இங்கேயும்.. என்ன விஷயம்னு நேரடியா சொல்லு” என்று கூறினான்.
“கூல் மச்சி.. உன் தங்கச்சி ரொம்ப ஸ்லோ.. சரி சரி நீ திட்டுறது கேக்குது.. எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட பிரண்ட் அங்க வேலைக்கு சேர்ந்திருந்தார்.. ஏதோ லவ் பெயிலியர்னு இப்போ தான் கொஞ்சம் தேறி வந்தார்.. ஆனா அவர் ஆபீஸ்ல மேனேஜர் சும்மா டார்ச்சர் கொடுக்குறார் போல..” என்று சொல்ல வர
“டேய் மேனேஜர் எல்லாம் அப்படி தான்டா.. இது என்ன ஸ்கூல் பசங்க மாதிரி என்கிட்ட சொல்ற” என்று கூற அதிரன் பல்லை கடித்தான்.
“அடேய் சொல்ல வரத முழுசா கேளு.. அந்த மனுசன் ஏதோ டென்ஷன்ல பைக்கை எடுத்துட்டு போய் கார்ல மோதி விழுந்துருக்கார்.. இப்போ சீரியஸ் கண்டிஷன்” என்று திட்ட “அட உன்னை என்ன சொல்லி திட்டுறதுன்னு தெரியல.. விபத்து நடந்தத இப்படி சுத்தி வளைச்சு பேசுவியா.. இப்போ எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கார்?” என்று கேட்க அதிரன் விவரம் சொன்னதும் மனைவியுடன் அங்கே சென்றான் கீதன். அவன் வாழ்வை மாற்ற போகும் நிகழ்வும் அங்கு தான் நடந்தது.
**************************
“தூரத்து மேகத்தை
துரத்தி செல்லும் பறவை போலே
தொகையே உன்னையும் நான்
தேடியே வந்தேன் இங்கே
பொய்கை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல் எறிந்தாய்
கலங்கினேன் உன் கையில்
வழங்கினேன் என்னை இன்றே”
கனிஷ்காவுக்காக சித்தார்த் எடுத்து வைத்திருந்த தமிழ் பாடல் மெல்லிசையாக ஒலித்து கொண்டிருக்க அவனின் அறையில் கட்டிலில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தாள் கனிஷ்கா.
காலையிலேயே இந்த அறையில் தான் இரவு இருக்க வேண்டும் என்று கூறியதால் அவன் எடுத்து வைத்திருந்த ஷர்ட் மற்றும் நீள் பாவாடையை அணிந்து இருந்தாள். பின்னணி பாடல் வேறு அவளுக்கு அவனின் காதல் கிடைக்காததை எண்ணி வருத்தத்தை கொடுக்க சட்டென அந்த அறையில் பாடல் மாறி ஒலித்தது.
“வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்”
சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு இது யாரின் வேலை என தெரிந்து போனது. அவனும் அவளும் மட்டும் இருக்கும் அந்த வீட்டில் அவர்களை தவிர வேறு யார் வந்து விட போகிறார்கள்? கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்க்க
“எங்கேயும் போகாமல் தினம்
வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்”
என்று பாடி கொண்டே உள்ளே வந்தான் சித்தார்த். அவனின் தொழில் தான் அமெரிக்காவில் தவிர நன்கு தமிழ் அறிந்தவன் அவன். அவளின் அருகில் அவன் நெருங்க நெருங்க அவளுக்கு ஒரு பதற்றம் தொற்றி கொண்டது.
உடல் சட்டென வேர்க்க ஆரம்பிக்க கட்டிலில் இருந்து எழுந்தவள் வெளியே செல்ல நினைக்க அவளை கைகளில் ஏந்தி கொண்டவன் தன் ஆய்வு கூடத்தை நோக்கி நடந்தான். அவன் ஏதோ செய்ய போகிறான் என்பது அவளுக்கு தெரிந்து போனது. இதற்கு முன்பும் கரண்ட் ஷாக் கொடுத்திருக்கிறான். அதே போல் தான் இப்போது செய்ய போகிறானோ என்று நினைத்து பயம் வர அவன் அதை தான் செய்தான்.
“ஒன்னு மட்டும் தான் உன் நினைவில் இருக்கணும் கியூட்டி.. அது நான்.. நான் மட்டும் தான்.. என்னை தவிர்க்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு இது நியாபகம் இருக்கும்” என்று அவளுக்கு ஷாக் கொடுக்க சிறிது நேரம் துடித்த அவளை கண்டு அவனுக்கு சிறிதும் இரக்கம் தோன்றவில்லை. ஆனால் இன்னொரு மனமோ பாரமாக இருந்தது. இரண்டு மணி நேரம் அங்கு காத்திருந்தவனுக்கு அவள் கண் விழித்தது தெரிந்ததும் மீண்டும் அவளை தன் அறைக்கு தூக்கி சென்றான்.
“சித்து…” அரை மயக்கத்திலும் அவள் அவனை அழைக்க “என்ன கியூட்டி?” என்று அவளை படுக்க வைத்து கொண்டே கேட்க “வலிக்குது..” என்று தன் தலையை சுட்டி காட்டியவள் அவனை தன்னை நோக்கி இழுக்க விருப்பப்பட்டே சரிந்தான் அவன்.
“எங்கடா வலிக்குது?” அவளின் தலையை தடவி கொடுத்து கேட்க அவனின் கையை அழுத்தியவள் “ம்மா..” என்று கதற சட்டென அவளை தன்னோடு அணைத்து கொண்டான் சித்தார்த்.
தவறை செய்வதும் அவன் தான். அதை சரி செய்பவனும் அவன் தான். அவளுக்கு வலிக்கும் அளவிற்கு காயத்தை கொடுத்து விட்டு மருந்தாக நினைக்கிறான். அவள் தூங்கும் வரை தட்டி கொடுத்தவன் தூங்கி விட்டாள் எனும் நினைப்பில் எழ முயல “சித்து…” என்று அவனை இழுத்தவள் அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
ஏற்கனவே கட்டுப்படுத்தி வைத்திருந்தவனுக்கு அவளின் இந்த செயல் கட்டவிழ்த்து விட “கியூட்டி இதுக்கு மொத்த பொறுப்பும் நீ தான்” என்று அவளோடு இசைந்து விட அந்த மயக்கத்திலும் அவள் அவனை உணர்ந்தது தான் காதலோ..
கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்தை நோக்கி அவர்களின் நெருக்கம் செல்ல அந்த இரவு சித்தார்த் நினைவில் இருந்து அழிக்க முடியாதது ஆனது. கனிஷ்கா ஒன்றும் அவன் அறியாத பெண்ணல்ல. அவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்பிடி. ஆனால் காதல் என்ற விஷயம் மட்டும் அவளிடம் வெளிபடுத்தாமல் இருந்தான். ஆனால் காதலே இல்லாமல் இன்று அவளின் நினைவில் அவளின் ஸ்பரிசத்தில் தொலைந்து கொண்டிருந்தான்.
அவளை அவனுக்கு பிடிக்கும். ஆனால் காதல் என்று வந்தால் நோ தான். இது என்ன வகையான உணர்வு என்று அவனுக்கே தெரியாத போது எப்படி ஏற்று கொள்வான். கனிஷ்கா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட திரும்பி பார்த்தவன் மனமோ அவளின் அழகை மனப்பெட்டகத்தில் சேர்த்து வைத்து கொண்டது.
“கியூட்டி ஐ பிராமிஸ் யூ.. இந்த நாட்டில் இருந்து உன்னால் வெளியே போக முடியாது.. ஆனால் ஒரு மகளா நீ செய்ய வேண்டிய அனைத்தும் உன் குடும்பத்துக்கு போய் சேரும்.. இது உன் சித்துவின் வாக்கு.. நம்புவியா?” என்று கேட்டு அவள் நெற்றியில் முத்தமிட அவளோ “சித்து..” என்று புரண்டு படுத்தாள்.
அவன் என்ன காரணம் சொல்லி அழைத்து வந்தானோ அந்த விஷயத்தை ஒருக்காலும் செய்யப்போவது இல்லை. அதே நேரம் யாருக்கும் அவளை விட்டு கொடுக்க போவதும் இல்லை. இதை காதல் என்று எப்போது அவன் உணர்ந்து கொள்ள போகிறானோ? அந்நேரம் அவனுக்கு சாதகமாக அமையுமா என்பது எல்லாம் அவனுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் கனிஷ்கா எனும் ஒருத்தி அவனின் மனதோடு கலந்து விட்டாள்.

