Loading

 ( 26 , oct , 2019 அன்று தொடங்கிய கதை, இன்னும் எழுதி முடிக்கப்படவில்லை . விரைவில் கதையை எழுதி முடிப்பேன்  ) 

அத்தியாயம் 1❤

“காதலியே என் அன்னையின்
 கருவறையில் 
 நான் உயிர்ப் பெற்றது
உன்னுடன் வாழத்தானோ? “

காற்றைக்  கிழித்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டு இருந்தான் கார்த்திக்.

ஆறடிக்கு குறைவான உயரம்
வெண்மை நிறம்
அகன்ற நெற்றி
கூர்மையான நாசி
தலைமுடியை அவ்வப்போது கலைத்து விடும்
போது , இன்னும் அழகாய்த் தெரிவான்.இதழ்களில் எப்போதும் குறுநகையுடன் இருப்பான்.

கார்த்திக்  ” ஏய் தடிமாடு  ! உன்ன சீக்கிரம் கிளம்புன்னு எவ்ளோ தடவை சொன்னேன் ! கேட்டியா ?இப்போ பாரு அரக்கப் பரக்க போய்க்கிட்டு இருக்கோம் “என்று தன் நண்பனைத் திட்டிக் கொண்டே வண்டியை ஓட்டினான்.

” நான் என்னடா வேணும்னே லேட் ஆக்குனேனா ? தண்ணி வரலடா !அதுதான் குளிக்க லேட் ஆகிருச்சு. அந்த  ஹவுஸ் ஓனர் மட்டும் வாடகை வாங்க வரட்டும் . அப்போ இருக்கு அவருக்கு “

என்றான்   நண்பன் தமிழ் .

கார்த்திக் ” அப்படி எதுவும் பண்ணித் தொலஞ்சிடாத !பேச்சிலர்ஸூக்கு வீடு கிடைக்கிறதே பெரிய விஷயம். அந்த ஆளு கைய காலப் பிடிச்சு வீடு வாங்குனோம். ஞாபகம் இருக்குல்ல.”

தமிழ் “ம்! இருக்கு , இருக்கு.  நீ இன்னும் வேகமா போடா “

நண்பனை அவசரப்படுத்திக் கொண்டு இருக்க,
கார்த்திக் பதட்டத்தில் அருகில் செல்லும் காரில் இடித்து விட்டான்.

தமிழ் ” என்னடா மச்சி ! இப்படி பண்ணிட்ட ?”

கார்த்திக்  ” நீ தானடா சீக்கிரமாகப் போக சொன்ன.இப்போ பாரு கண்ணு மண்ணுத் தெரியாம ஓட்டி இடிச்சுட்டேன்  ! “

தமிழ் ” அய்யோ! அந்த கார்காரன் வேற இறங்கி வர்றானே ! ஆத்தாடி! என்னடா இவன் இப்படி மலை மாதிரி இருக்கான் ! 
என்ன தான் சாப்பிட்றானோ “

கார்த்திக் “நான் வேணும்னா அவன்கிட்ட கேட்டு சொல்லவா ?” என்று தமிழை முறைத்தான்.அவன் வாயை மூடிக் கொண்டான்.

இறங்கி வந்த காருக்கு சொந்தக்காரன்.

தமிழ்  “அய்யய்யோ !! புல்டோசர் நம்மகிட்ட வருதே ! என்ன நடக்கப் போகுதோ ?”

கார்த்திக் “வாயை மூடிக்கிட்டு நில்லுடா”

” ஏய் ! உங்களுக்கு என்ன தைரியம் இருந்தா என் காரை இடிச்சுருப்பிங்க
ஒழுங்கா வண்டி ஓட்டத் தெரியாது “
என்று அவன் பாட்டுக்கு சரமாரியாக இவர்களைத் திட்டிக் கொண்டு இருந்தான்.

கார்த்திக் எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருக்க தமிழ் அவனின் காதுகளை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

ஏனென்றால் அவன் கெட்ட வார்த்தைகளால் அவர்களை
அர்ச்சித்தான்.

திட்டம் முடித்தப் பிறகு, 
” யாருடா நீங்க ? “

தமிழ்  “அது எதுக்கு சார் உங்களுக்கு.
 நாங்க உங்க காரை
தெரியாம இடிச்சுட்டோம். அதுக்கு ரொம்ப சாரி.
எங்களுக்கு டைம் ஆச்சுு. நாங்க கிளம்பறோம் ” 

” ஏய் ! என்னங்கடா! என்னோட காரை இடிச்சுட்டு ஒப்புக்கு சாரி கேட்டுட்டு
இருக்கிங்க ?” அவனது காலரைப் பிடிக்க.

அது வரை அமைதியாக இருந்த கார்த்திக்.அந்த கார்க்காரனின் வயிற்றில் குத்தினான்.

 அவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியால் துடிக்க, 

கார்த்திக் “இவ்ளோ நேரம் தப்பு எங்க மேலதான்னு அமைதியா நீ திட்டுறது எல்லாத்தையும் வாங்கிட்டு நின்னா  ! 
என் ஃப்ரண்ட் காலரை பிடிக்கற அளவுக்கு வந்துட்டியா ?ஒழுங்கா கிளம்பு “

என்று சொல்லி அவனை முறைத்துக் கொண்டே தமிழிடம் திரும்பி, 

” மச்சி வண்டியில் ஏறுடா “

வண்டியை ஸ்டார்ட் செய்து அந்தக் கார்க்காரனை ஆள் காட்டி விரலால் எச்சரித்து விட்டு மறுபடியும் வேகமாக
சென்றான்  கார்த்திக்.

 – தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்