Loading

அத்தியாயம் 3
தன் தென்னந் தோப்பிற்கு தேங்காய் பறிக்க வந்த அந்த பெண்ணை வியப்புடன் பார்த்தவன்.. அவள் மெலிந்த தேகத்தை பார்த்து உங்களால மரத்துல ஏற முடியுமா..?” என்று மென்மையாக கேட்க, அவன் கேள்வியில் ரோசம் வரபெற்றவள், “ஏன் பொண்ணுங்களால இந்த சோலி செய்ய முடியாதுன்னு நினைச்சியலோ..” கோபமாக கேட்டவள் தன் இடையில் கயிறு கட்டி லாவகமாக மரத்தில் ஏற,

அவள் செய்கைகளை சத்யன் ஆச்சரியத்தோடு பார்த்து, “ ஆத்தி எவ்வளவு விரசா ஏறுறா.. அவ பாட்டன் பூட்டன் எல்லாம் மந்தி இனத்தை சேர்ந்தவியளா இருப்பாவ போல..” தனக்குள் சொல்லிக் கொண்டு, ஊர் நாட்டாமையா இருந்து நான் மரம் ஏற கத்துக்காம இருக்கோமே.. இனி அது தான் எனக்கு அடுத்த வேலை..” மனதில் உறுதி எடுத்த சத்யன் சாம்பவியை பார்க்க,

“என்ன பங்கு சொல்ற..? உனக்கு மரம் ஏற தெரியாதாடே..” வேந்தன் நம்பாமல் கேட்க, “நான் மனசுக்குள்ள பேசினது உனக்கு எப்படிடே கேட்டுச்சு..?” சத்யன் குழப்பமாக கேட்க, “ ஹி ஹு அது பங்கு நீ மைண்ட் வாய்ஸ் நினச்சு சத்தமா பேசிட்டடே..” வேந்தன் கேலி செய்ய, “அவ்வளவு சத்தமாவாடே கேட்டுச்சு..” சத்யனும் பதிலுக்கு பேச “லைட்டா..” வேந்தன் சொன்ன தினுசில் சத்யன் வாய்விட்டு சிரித்தான்..

”இருவரும் சிரிந்து பேசிக்கொண்டிருக்க, “செத்த அங்கிட்டு நகண்டு நின்னு பேசறியளா.. நான் காய் பறிச்சு போடுதேன்..” சாம்பவி மேல இருந்து குரல் கொடுக்க, ” பங்கு நகரலேன்னா தலை மேல போட்றுவா போலடே.. நமக்கும் தலை முக்கியம்டே” இருவரும் முணங்கியபடி நகர்ந்து நின்றனர், சாம்பவி காய்பறித்து போடும் அழகை சில நிமிடங்கள் நின்று ரசித்தவனை, “அட கூறுகெட்டவனே அவ வேற ஒருத்தனோட பொஞ்சாதிடே..” மனசாட்சி எடுத்துறைக்க
“ அடச்சீ அடங்கு நான் அவ வேலை செய்ற பாங்கை ரசிச்சேன்டே அவளை இல்லை நீ ரொம்ப பொங்காத..” மனசாட்சியை அடக்கியவன் அடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்..

அனைத்து தேஙாய்களும் பறித்து முடித்து கணக்கு பார்த்து அனைவருக்கும் பணத்தை கொடுத்து. ஆளுக்கு மூன்று இளனிகளை கொடுத்தவன், சாம்பவியிடம் வந்ததும், அவளிடமும் சம்பளத்தை கொடுத்துவிட்டு, அவள் குடும்பத்தை பற்றி கேட்பதா? வேண்டாமா..? என தயங்கி நிற்பவனை பார்த்து
“ என் தங்கச்சி நல்லா இருக்கா.. அவ பேர் தேன்மொழி, அப்பறம் அவிய (தன் கணவன்) வீட்டுல்லேயும் ஏல்லாரும் சுகந்தேன்…” என்றவள் வேறெதுவுந் தெரியணுமா..?” என்று கேட்க, ”எத்தனை குழந்தைகள்?’ என்று கேட்க நினைத்தவன், அதை கேட்க மனம் ஒவ்வாமல், அவளை பார்த்துக் கொண்டே மறுப்பாக தலையசைத்தான்..

அவனிடம் பணம் வாங்கி கொண்டு செல்ல போனவள்.. சத்யனிடம் திரும்பி வந்து, “ உமக்கு ஒரு விசயம் கேட்கணும் தோணுச்சினா கண்ணை பார்த்து தயங்காம கேளுங்க.. இந்த தயக்கந்தேன் சந்தேகத்திற்கு முதற்படி..!” என்றவள், “ வேற எதாவது சோலி இருந்தா சொல்லுங்க.. பனைமரத்திலயும் ஏறி பதனி எடுக்கனாலுஞ் சரி, வீட்டு வேலை செய்யனாலுஞ் சரி..” என்று விட்டு தன் சைக்கிளை எடுக்க போனவளை, “செத்த நில்லு சரவெடி..” சத்யன் நிறுத்த,
“என் பேர் சாம்பவி..” என்றுவிட்டு, அவனை என்னவென்று பார்க்கவும், நீ சொல்றது சரிதேன் ஆனால் சிலநேர தயக்கங்கள், நம்ம கேட்கிற கேள்வி மத்தவங்களை காயப்படுத்துமோங்கிற எண்ணத்துல வந்ததாவும் இருக்கலாம்… என்னோட தயக்கம் ரெண்டாவதாக நான் சொன்ன தால வந்தது.. “என்று சிறு சிரிப்புடன் சொல்ல, அவள் சத்யனை முறைத்து கொண்டு, சைக்கிளில் பறந்துவிட்டாள்..

சைக்கிளில் செல்பவளையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சத்யன், “ஏன் பங்கு இந்த பொண்ணை பார்த்தால ரெஸ்ட்டே எடுக்காம வேலை செய்ற மாதிரி தோணூதுடே..” என்று சொல்ல, சத்யனை ஆச்சரியமாக பார்த்த வேந்தன், “பங்கு என்னமோ சரி இல்லையே..” மனதில் நினைத்தவன், “ அந்த பொண்ணுக்கு என்ன கஷ்டமோ..” என்றுவிட்டு தன் வேலையை பார்ர்க்க சென்றான்..

அம்மன் கோவில் தேர் அழகு
ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு
நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்….
வந்து நிற்கும் வண்ண மயில்

வேந்தன் ” தன் போனில் பாட்டை ஓடவிட்டு தேங்காய்களை பிரித்துக் கொண்டிருக்க, இந்த பாடலை கேட்ட சத்யன், “முதல் வரி ரெண்டாவது வரி அவளுக்கு சரியாத்தேன் இருக்கு.. மற்றவரிகள் எல்லம்..” தன்போக்கில் யோசிக்க, எப்போதும் போல் மனசாட்சி வந்து அவனின் மனதை அடக்க.. அதை ஏற்றுக் கொண்டான்.

தன் வீட்டிற்கு வந்த சாம்பவிக்கு, தேங்காய் பறித்ததில் உள்ளங்கை எரிச்சல் எடுக்க, தேங்காய் எண்ணை எடுத்து தடவியவள், வீட்டின் பின்புறம் வந்து, அங்கிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள், அங்கு ஓரத்தில் இருந்த ரோஜா செடியை ஆசையுடன் வருடி கொடுத்து, “ ரோஸ் குட்டி எப்படி இருக்கிய..?” இன்னைக்கு தண்ணி கொடுக்க கொஞ்சம் தாமசம் ஆகிருச்சு.. இன்னைக்கு தேங்கா பறிக்க போனேன், அதனா எனக்கு வருமானம் கொஞ்சம் அதிகம்டி.. மனுசன் அங்க வேலை செய்றவியள நல்லாத்தேன் பார்த்துக்கிறாவ..
அதனாலதேன் அவர் வேலைக்கு கூப்பிட்டதும் முந்தி போறாவ போல,” ரோஜா செடியிடம் அன்று நடந்த விசயங்களையும், தன் மனதில் உள்ள எண்ணங்களையும் அந்த செடியுடன் பகிர்ந்தவள், “உன்கூட பேசினதுல நேரம் போனதே தெரில, தேனு இன்னிக்கு கருப்பட்டி பனியாரம் கேட்டா அதை செய்ய போறேன்.. ஸ்கூல்ல இருந்து வந்ததும் பசின்னு கத்துவா..” தன் தங்கையின் நினைவில் முகம் மென்மையுற, சொன்னவள்,
“சரி ரோஸ் நேரமாகிட்டு நான் பனியாரம் செஞ்சு வச்சுட்டு தேனை கூப்பிட போவணும். வாரேன்..” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.. சாம்பவியின் சுக துக்கங்கள் பகிரப்படுவது அந்த ரோஜா செடியிடம் மட்டுமே.. அவசரமாக தேனு கேட்டதை செய்து வைத்துவிட்டு, தங்கையை அழைக்க பள்ளி சென்றாள்..

அங்கு பள்ளி முடிந்த வெளியே வந்த தேன்மொழி யாருடனும் பேசாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்து.. அக்காவிற்காக காத்திருந்தாள்.. “தேனும்மா..” சாம்பவி அழைக்க, “அக்கா..!” என்ற உற்சாகத்தோடு அக்காவின் சைக்கிளில் அமர்ந்து அவளின் இடையை பிடித்துக் கொண்டாள்..
”போலாமா குட்டிமா.. கெட்டியா பிடிச்சிக்கட்டி..” என்று சொல்லி, தன்னுடய ரதத்தை செலுத்த ஆரம்பித்தாள்.. இன்று பள்ளியில் நடந்த விசயங்கள் அனைத்தும் தன் தமக்கையிடம் சொல்லிக்கொண்டு வர, சாம்பவியும் சலிக்காமல் கேட்டுக்கொண்டு வந்தாள்.. வீடு வந்ததும் தங்கையை முகம் கழுவ சொல்லிவிட்டு, செஞ்சு வைத்த பலகாரத்தை கொடுக்க,
“ ஐ இனிப்பு பனியாரம்..” என்று குதூகலித்தவள்.. ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, ”அக்கா சூப்பரா இருக்கு..” என்று சாம்வியின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்க.. பதிலுக்கு தானும் கொடுத்து, பனியாரத்தை ஊட்டிவிட, பதிலுக்கு தேனும் ஊட்டிவிட.. இருவரும் தங்கள் உலகத்தில் இருந்தனர்..

சிறிது நேரம் தேனுடன் விளையாடி விட்டு, அவளுக்கு பாட புத்தகத்தை எடுத்து படிக்க சொல்லிவிட்டு, தானும் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்..
இங்கு அனைத்து வேலைகளையும் முடித்து வேந்தனுடன் தன் வீட்டிற்கு வந்த சத்யனுக்கு வீட்டில் கேட்ட வடிவுக்கரசியின் குரல், வேலை செய்பவர்களிடம் அதிகாரமாக ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்டவாறு உள்ளே வந்தவன், “ஹேய் வடிச்ச கஞ்சி என்ன சத்தம் ரொம்ப ஓவரா இருக்குதுட்டி, சத்தத்தை குறைட்டி.. இல்லன்னா போற வீட்டுல குறைச்சிருவாவ ”என்றவாறு அவளின் தலையில் குட்டியவன்,
”ஆமா என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்கவ..?” கேட்டவனிடம் “ எப்படி இருந்தாலும் நான் வரப்போற வீடுதான.. எப்ப வந்தா என்ன மாமா..?” சலுகையாக கேட்க, அவளுக்கு பதில் சொல்லாமல், “நான் குளிக்க போறே.. இந்த நேரத்தில் நீ இங்க இருக்கிறது தப்பு.. வீட்டுக்கு போ.” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்… இருக்கட்டும் மாமா எவ்வளவு நாள் நீங்க தாக்குபிடிக்கிறியண்ணு நானும் பார்க்கேன்..” கறுவியபடி தன் வீட்டிற்கு சென்றாள்..

வடிவுக்கரசி சத்யனின் அண்ணி எழிலரசியின் சித்தப்பா மகள்.. எழிலரசியின் குணத்திற்கு நேர்மாறான குணம் கொண்டவள்.. முதலாலி தொழிலாளி என்று பிரித்து பார்ப்பாள்.. வடிவுக்கரசியின் தந்தைக்கு தன் அண்ணன் மகளை போல, தன் பெண்ணும் அந்த குடும்பத்தில் வாக்கப்பட்டு போக ரொம்பவே ஆசை.. அதை சத்யனின் தந்தை செண்பகப்பாண்டியனிடம் தெரிவிக்க, அவருக்கு இதில் விருப்பமில்லை என்றாலும், அவ்வப்போது வந்து செல்லும் வடிவிடம் சத்யன் விளையாட்டு தனமாக பேசுவதை கண்டிருக்க, ஒருவேளை தன் மகனுக்கு விருப்பம் இருந்தால்..” என்று யோசித்து, ’மகனிடம் கேட்டு சொல்வதாக சொல்லியிருந்தார்..
அதற்குள் இந்த விபத்து வரவும், அவரின் மூளை குறுக்குத்தனமாக யோசித்தது.. அதன்படி சத்யனிடம், “தன் மகளை, அவனுக்கு திருமணம் முடிக்க, சத்யனின் தந்தை தன்னிடம் கேட்டதாக சொல்லி, தான் யோசித்து சொல்வதாக சொல்வதற்குள் இந்த விபத்து நடந்துவிட்டதாக சொன்னவர், எனக்கு தெரிஞ்சு உன் அப்பாவோட கடைசி ஆசைய்யா..” என்று அப்படியே மாத்தி உருக்கமாக சொல்ல, சத்யன் யோசனையோட சென்றான்..

அன்றிலிருந்து வடிவும், அவள் குடும்பமும் சத்யனின் வீட்டிற்கு வந்து தங்கள் இருப்பை காட்டிக் கொண்டிருந்தனர்.. அதிலும் வடிவு தினமும் சத்யனின் வீட்டிற்கு வந்து அவனுக்கு உணவு கொடுப்பதும், அவன் இல்லாத நேரங்களில், அங்கு வேலை செய்யும் ஆட்களை அதிகாரம் செய்வதும், வாடிக்கையானது..
சத்யன் வடிவு மீது வெருப்பு, வெறுப்பு எதுவும் இல்லாமல் இயல்பாகவே இருந்தான்.. தந்தையின் கடைசி ஆசை என்ற வார்த்தை, சத்யனின் மனதை ஒரு சதவீதம் வடிவின் மீது சாய்த்திருந்தது.. ஆனால் அதை ஒருநாளும் வடிவிடம் காட்டியதில்லை.. ஏனோ தயக்கம்.. எதோ ஒன்று அவனை திருமணத்திற்கு சம்மதம் சொல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது..

குளித்து முடித்து வந்த சத்யன், இரவு உண்டுவிட்டு படுக்கையில் படுத்தவன், திடீரென்று எழுந்து உட்கார்ந்தவன், சட்டையை மாட்டிக் கொண்டு, வெளியே வந்தவன், சுற்றும் முற்றும் பார்க்க, யாரும் இல்லாததை உறுதி செய்து, வந்தவன், அங்கிருந்த ஒரு மரத்தின் மீது ஏற ஆரம்பித்தான்.. இரண்டு அடி ஏறியவன் சறுக்கி கீழே விழுந்தான்..
அதிக உயரம் இல்லாததால் அடி விழவில்லை.., திரும்பவும் மேலே ஏறியவன் நான்கடி ஏறியதும் மீண்டும் கீழே விழப்போக, இறுக்கமாக பிடித்துக் கொள்ள, “பங்கு பார்த்துடே கீழ விழுந்து ஏடாகூடமா ஆகிறபோகது.. வேந்தன் குரல் கேட்டு, திடுக்கிட்ட சத்யன், “எடே இங்க என்ன செய்றடே..” சத்யன் மேலே இருந்து கேட்க, “அதே தான் டே நானும் கேட்கேன்.. நீ என்னடே செய்றவன்.” வேந்தன் பதிலுக்கு கேட்க.
”ம்ம்.. இந்த மரத்துல பேரிக்கா விளையுதுன்னு சொன்னாவ அதேன்” குரலில் நக்கல் ஒலிக்க “ ஓ தென்னை மரத்துல ஏதுடே பேரிக்கா..” வேந்தன் சிரிப்புடன் கேட்க, “ அதனால தாண்டே கீழ இறங்க போறேன்..” என்ற சத்யனை “கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைங்கிற பழமொழி இப்போதாண்டே உணர்றேன்..” என்று கிண்டல் செய்தவன், சத்யன் இன்னும் கீழே வராமல் இருக்க, “என்ன பங்கு கீழ இறங்காம இருக்க, இன்னும் என்னடே செய்ற மேல?” வேந்தன் கேட்க.. “ஹி.. ஹி அதுக்கு தான்டே பங்கு அப்போ இருந்து முயற்சி செய்றேன் முடியலடே.. பக்கத்தில ஏணி இருந்தா எடுத்தாயேன்..” சிறுபிள்ளை போல் கெஞ்ச
“டேய் பங்கு உன்னோட முடிலடா,, என்னால..” வாய்விட்டு சிரித்த வேந்தன், ஏணியை எடுக்க போனான்.. ஏணியை எடுத்து சத்யன் அருகில் வைக்க, சத்யன் இறங்கவும், “உனக்கெதுக்குடே இந்த வேண்டாத வேலை.. அந்த பொண்ணு மரத்தில ஏறுதான்னா அது அவளுக்கு பழக்கம்டே..” என்ற வேந்தன், “என்னடே ஈகோவா.. ஒரு பொண்ணே மரத்துல ஏர்றா.. நம்மளால் ஏறமுடியலேண்டு..” வேந்தன் கேட்க,

”என்னை பார்த்தாடே அப்படி கேட்கிற..?” கோபத்தோடு கேட்ட சத்யன், “அந்த பொண்ணு மரத்துல ஏர்ற லாவகத்தை பார்த்து எனக்கும் ஆசை வந்துச்சுடே அதான் முயற்சி செஞ்சு பார்த்தேன்.. ஆனால் அது குஷ்டந்தேன் போல..” விளையாட்டாக சொன்ன சத்யனிடம், ”புரிஞ்சா சரி வா போகலாம்.. ” வேந்தன் சத்யனை அழைத்து சென்றான்..
அதிகாலையில் உறக்கம் விழித்த சாம்பவி, தன் அருகில் படுத்திருந்த தேன்மொழியின் உறக்கம் கலையாதவாறு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.. நேரம் ஆவதை உணர்ந்து, தங்கையை எழுப்பிவிட்டு குளிக்க செய்தவள், அவளை சாப்பிட வைத்து தானும் இரண்டுவாய் அள்ளி போட்டவள், பால் கேனை எப்பவும் போல கேரியலில் கட்டி விட்டு தங்கையையும் அமர்த்தி சைக்கிளை ஓட்டி சென்றாள்..

அதே நேரம் சத்யனும், எழுந்து தன் வேலைகளை முடித்து காலாற வெளியே நடந்து வந்தவன், நேற்று சாம்பவியை முதன் முதலில் பார்த்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.. கேள்வி கேட்ட மனதிடம் “ இது என் ஊரு நான் எங்க வேணுண்டாலும் நிப்பேன் நீ போ” என்று அடக்கியவன், மெதுவாக நடக்க, சரியான நேரத்திற்கு சாம்பவியும், தேனும் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்..
தூரத்தில் வந்து கொண்டிருந்த சாம்பவியை பார்த்தவன்.. “இவ ஏன் தனியா இருக்கா.. இவ புருஷன் எங்க போனான் இவ குடும்பம் எங்க இருக்கு..?” என்று யோசித்தவாறே, சாம்பவியை பார்த்திருந்தான்.. இருவரும் இவனின் அருகில் வந்து, அங்கு ஒருவன் இருப்பதையே அறியாமல் அவனை கடந்து சென்றனர்..

ஏனோ சத்யனுக்கு இருவரையும் பார்த்த பிறகு தான் அந்த நாளே அழகா இருப்பது போல் தோன்றியது.. இது சரியா தப்பா என்ற மனதின் கேள்விக்கு, தெரியலை.. ஆனால் இது என் மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கு.. போறவரைக்கும் போகட்டும்..” மனசாட்சிக்கு பதில் சொல்ல, “நான் உன் மனசாட்சி டே என்கிட்ட நீ தப்பிக்க முடியாது என்னிக்காவது மாட்டுவ அப்போ இருக்கு..” என்றுவிட்டு மறைய, சத்யனும் அவ்விடம் விட்டு நகர்ந்தான்
வயக்காட்டிற்கு வந்தவன் அங்கு நாத்து நடவு நடந்து கொண்டிருக்க, சட்டையை கழட்டிவிட்டு தானும் இறங்கி அனைவரையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் ஒரு உருவம் நிக்க, திரும்பி பார்க்க அங்கு வேந்தன் நின்றிருந்தான்..” உன்ன இன்னிகு சர்க்கரை மில்லுக்கு தானடே போக சொன்னேன்.. இங்க நிக்கிறவன்..?” சத்யன் கேட்க, அவனை வியப்பாக பார்த்த வேந்தன்,

“என்னடே சர்க்கரை மில்லுல ஆர்டர் எடுக்க எதோ பார்ட்டி வராவ, நான் அங்க போறேன் நீ வயலுக்கு வந்திருன்னு நீதானடே என்னை இங்க வர சொன்ன,..” என்று சொல்ல, அப்படியா சொன்னேன் லேசாக அசடு வழிய நின்றவன், இல்லடே நீ மில்லுக்கு போ நான் இங்கன இருக்கேன்..” என்றவனை விசித்திரமாக பார்த்தான்.. வேந்தன் அவன் மில்லுக்கு கிளம்ப டேய் பங்கு வர்ற பார்ட்டி புரோக்கரா, இல்லை ஓனரான்னு நல்ல தெரிஞ்சுட்டு விலை பேசுடே..” என்று சொல்ல, சரி என்றுவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் மில்லுக்கு சென்றுவிட்டான்..

வேந்தனை அனுப்பிவிட்டு, நேற்று இருந்த அதே மரத்தடியில் அமர்ந்தவன்.. தன்னை குறித்தே யோசித்தபடி கண்மூடி அமர்ந்திருந்தான்.. தான் என்ன நினைக்கிறோம், தன் மனது என்ன எதிர்பார்க்கிறது.. என்று எதுவும் புரியாமல் குழம்பி இருந்தவன்.. இந்த குழப்பத்திற்கெல்லாம் தீர்வாக, வடிவை மணப்பதுதான் சரி என்று நினைத்து, தன் மாமாவிற்கு சம்மதம் சொல்வதற்காக போனை எடுக்தவன், அவரின் எண்ணிற்கு அழுத்த போகும் சமயம்..
அந்த ஊரின் பள்ளி தலைம ஆசிரியரிடமிருந்து அழைப்பு வர, எடுத்து காதில் வைத்தவன், அந்தப்பக்கமிருந்து தலைமை ஆசிரியர் பேச, தான் இப்பொழுதே பள்ளிக்கு வருவதாக சொல்லிவிட்டு போனை அணைத்தான்..
தன் இருசக்கர வாகனத்தில் வந்தவன், அங்கு தலைமை ஆசிரியரின் அறைக்கு செல்ல, அவனை வரவேற்று அமர வைத்தவர், “அய்யா இந்த வருஷம் ஸ்கூல் ஆண்டுவிழா நடத்திறத பத்தி பேசத்தான் நான் வரேன்னு சொன்னேன்.. ஆனா அய்யா நீங்க வந்துட்டிங்க..” என சொல்ல,
இருக்கட்டும் மேடம் ஸ்கூல் சமந்தமாக நீங்க எப்ப வேண்டுமினாலும் எனக்கு போன் செய்யலாம்.. என்றவன், பள்ளி ஆண்டுவிழா சம்பந்தமாக பேசிவிட்டு மற்ற ஆசிரியர்களிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு வேறு பள்ளிக்கு தேவையானதை கேட்டு அறிந்து, அவன் கிளம்ப மாலை ஆகிவிட்டது.. ஸ்கூல் முடிந்ததற்கு அறிகுறியாக, மணியடிக்க, சத்யனும் கிளம்பினான்..

அவன் கிளம்பி வெளியே வர, அங்கு ஓரத்தில் சற்று மிரட்சியுடன் அமர்ந்திருந்த தேனை பார்த்தவன், அவளை அடையாளம் கண்டு, “ ஹேய் கியூட் கேர்ள் இங்க தான் படிக்கிறியா..? குட்டி பொண்ணு வளர்ந்துட்டிங்களே..” என்று கேட்டவாறே சிறுமியின் அருகில் வர, அவள் சத்யனை பார்த்து மிரண்டு தள்ளி அமர்ந்தாள்.. “ஹேய் குட்டி என்னடா..” என்னை தெரியலையா..?” என்று கேட்டவனுக்கு தன் கேள்வியின் அபத்தம் புரிந்தது.. அவனை பார்த்தே கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்கும்.. எப்படி தன்னை நியாபகம் இருக்கும்..” என்று நினைத்து
”உங்க பேர் என்ன..? எந்த வகுப்பு படிக்கிறிய..” அவளிடம் இயல்பாக பேச,

அவனின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் மிரண்டு அமர்ந்திருந்தவளை யோசனையாக பார்த்தவன், “குட்டிமா.. என்னாச்சு.. யார் அடிச்சாவ என் குட்டிமாவ..” கேட்டுக்கொண்டே, அவளின் தலையை தடவ போக.. அவள் இறுக்கமாக கண்களை மூடிக்கொள்ள..
“அவளை தொடாதிய.. உங்க சுண்டுவிரல் கூட அவமேப படப்படாது..” என்று கத்தியவாறே,, சாம்பவி வர, அக்காவை பார்த்ததும்.. “அக்கா..!” அழுதுகொண்டே சாம்பவியிடம் தஞ்சம் அடைய,

தங்கையை தன் மார்போடு அணைத்து, “ஒண்ணும் இல்லட்டி.. அக்கா இங்க தான் இருக்கேன்..” தைரியம் சொன்னவள், அதுவரை இருவரையும் புரியாமல் பார்த்த சத்யனை முறைத்து பார்த்தவள்,
“உம்மை யாரு இவக்கிட்ட பேச சொன்னா.. பேசமட்டும் இல்லாம தொடப்போறிங்க.. இனி இவ பக்கத்துல நீங்க வரக்கூடாது..” என்று வெறிவந்தவள் போல் ஆவேசமாக கத்த,

முதலில் அவள் சொன்னதில் புரியாமல் குழம்பி நின்றவன்.. பின்பே அர்த்தம் புரிந்து, முகம் அவமானத்திலும், கோபத்திலும் சிவக்க, “யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னட்டி.. என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்காட்டி.. அது குழந்தை அவளை போய்..” என வார்த்தை வராமல் தன் கோபத்தையும் அடக்க முடியாமல், சாம்பவியின் கழுத்தை பிடித்தான்.. தேன்மொழி இருவரையும் மிரண்டு பார்த்தவாறு நின்றாள்..
சரணடைவா(ன்)ள்…….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்