விழி வழியே சரணடைந்தேன் -22

Loading

அத்தியாயம் 22

 

பெங்களூர் வந்தவளை முன்னால் வந்து வரவேற்றதே கீதன் தான். அவனின் வீட்டாரை பொறுத்தவரை அவன் காணாமல் சென்று விட்டான். ஆனால் அவனுக்கான சொத்தை ஒருநாளும் பிரிய மாட்டான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். 

 

அவனை நோக்கி வந்தவளை கைவிரித்து கூப்பிட அவனை அணைத்து கொண்டாள் அவள். 

 

“கோபமாடா?” தன் கை வளைவில் இருந்தவளை பார்த்து கேட்க “கொலை வெறியில் இருக்குறேன்” என்றாள். அவளின் கோபம் கூட அவனின் முன்னிலையில் அதிக நேரம் தாங்காது. 

 

அவன் குனிந்து அவளை பார்க்க “அவன் வீட்ல ஒரு பிரெண்டா மட்டும் தான் தங்க போறேன்.. அதுவும் பக்கத்து பிளாட்ல நீங்க இருப்பீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தான்.. நான் இல்லன்னு மாத்திரை போடாமல் இருக்க கூடாது.. ஆபரேஷன்க்கு டாக்டர் கிட்ட கேக்கணும்.. எப்போ வேணாலும் நான் கூப்பிட்டா பார்க்க வரணும்..” என்றவளை கண்வெட்டாமல் பார்த்தான். 

 

“யாரோ ரெண்டு வாரமா என்கிட்ட பேசாம இருந்தாங்க.. என் வீட்ல அத்தனை பேர் முன்னாடி கத்துனாங்க” அவன் சிரிக்க “சாரி.. உங்ககிட்ட பேசாம இருக்க நான் பட்ட பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்.. பட் இந்த மாதிரி ஒரு விஷயத்தை இனி பண்ண சொல்லாதீங்க” என்று கூற “கண்டிப்பா மாட்டேன்டா.. அதுக்காகவா உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணினேன்? நீ தானே அன்னைக்கு பார்த்த கனி இல்லாத ஒரு வாழ்க்கையில் அருண் படுற கஷ்டம்.. கொஞ்ச நாள் அவரோட மனசு தேருற வரைக்கும் நீ நடிக்க போற அவ்ளோ தான்.. உன்னையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது” என்று அவள் நெற்றியில் முத்தமிட அவள் அவன் முகத்தை வருடினாள். 

 

“கண்டிப்பா உங்களை நீங்க கவனிச்சிக்கணும்.. பிராமிஸ்?” 

 

“அதான் கூடவே விஷ்வாவை விட்டுட்டு போறியே.. உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும் என்னை நல்லா பார்த்துப்பேன்..” 

 

அவனின் பதிலில் திருப்தியடைந்தவள் மருத்துவமனை கிளம்ப அன்று அருண் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தான். அதன் பிறகு அவனிடம் கனியின் திருமணம் மற்றும் பிரிவு என்று புரிய வைக்க அவனுக்கு கனி கிடைத்ததே பெரிதாக இருந்தது. 

 

ஒவ்வொரு நாளும் அவர்கள் கஷ்டப்பட்டு தான் கடத்த வேண்டியிருந்தது. அருண் தங்கியிருந்த வீட்டின் பக்கத்து பிளாட்டில் கீதன் வந்து விட விஷ்வாவும் இருவரின் அன்புக்கும் பாலமாக இருந்தான். தன் நண்பனுக்காக கீதன் செய்த தியாகமே அவனுக்கு கீதன் மேல் நல்மதிப்பை கொண்டு வந்திருந்தது. 

 

பெரும்பாலும் கீதன் வீட்டில் இருந்தே வேலை செய்வதாலும் அருண் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதாலும் அருண் வீட்டில் இல்லாத நேரம் தன் மனைவியை கொண்டாடினான் கீதன். அவன் பெங்களூரில் இருக்கும் விஷயத்தை அதிரனுக்கு மட்டும் தெரிவித்தவன் கனியை பார்ப்பதை பற்றி ஒன்றும் சொல்லியிருக்கவில்லை. நண்பனின் மனம் புரிந்தவனும் துருவி துருவி கேட்கவில்லை. அந்த வகையில் கீதன் அவனை நண்பனாக பெற்றத்துக்கு அதிர்ஷ்டம் செய்தவன் தான். 

 

ஒரு மாதம் கழித்து கனியிடம் பேச வேண்டும் என்று சொன்னான் அருண். இத்தனை நாள் அவன் அவளை நெருங்கவே இல்லை. அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவனுக்கும் தெரியும். எனவே எந்த விஷயத்திலும் அவளை தொந்தரவு செய்தது கிடையாது. இன்று பேச வேண்டும் என்றதும் அவளுக்கு சிறிது பயமாகவே இருந்தது. அவள் பயந்தது போலவே தான் அவனும் கேட்டான்..

 

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா கனி?” அருண் கேட்டதும் தலை சுற்றி மயக்கம் வரும் போல இருந்தது அவளுக்கு. 

 

“என்.. என்ன கேட்ட?” 

 

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” அவன் மறுபடியும் கேட்க அவளுக்கு நிஜமாகவே மயக்கம் வந்து மயங்கி சரிந்தாள் கனிமொழி. 

 

அருண் பதறி “கனி.. கனி..” என்று அவளின் கன்னம் தட்ட அந்நேரம் உள்ளே வந்த விஷ்வா அவளின் நிலை கண்டு அதிர்ந்து விட்டான். 

 

“கனி என்னமா ஆச்சு?” என்று கேட்டு கொண்டே அருணை பார்க்க “நான் கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.. மயங்கி விழுந்துட்டா” என்று கூற விஷ்வா அடுத்த அதிர்ச்சியில் அவனை முறைத்தான். 

 

“போய் தண்ணி எடுத்துட்டு வாடா…” என்று விரட்டியவன் அவளை எழுப்பி அமரவைத்து தண்ணீர் வந்ததும் அவள் முகத்தில் தெளிக்க அவள் மெதுவாக கண்களை திறந்தாள். 

 

விஷ்வா முகம் மட்டுமே தெரிய “அவர் எங்க அண்ணா?” என்று கேட்டவளுக்கு என்ன பதில் சொல்லவென்றே தெரியவில்லை அவனுக்கு. சிறிது நேரத்திற்கு முன்பு தான் பயங்கர தலைவலியில் அவதி பட்டவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டு கனியிடம் சொல்ல வந்தான். இங்கு வேறு ஒரு பிரச்சனை. 

 

அருணை பார்த்தவன் “அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு டா..” என்று சீற “அப்போ எனக்கு கனி இல்லயா?” என்று பதறினான் அருண். 

 

ஏற்கனவே ஒருமுறை இப்படி டென்ஷன் ஏத்தி அனுபவப்பட்டதால் “நான் அவகிட்ட பேசுறேன்” என்றவன் மெதுவாக அவளை வெளியே அழைத்து வந்தான். 

 

“கனி.. கீதனுக்கு தலைவலி அதிகமாகி ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கேன்.. ஆபரேஷன் பண்ணுறது பெஸ்ட்ன்னு டாக்டர் சொல்றாங்க.. பட் ஹோப் இல்ல.. கீதன் குழந்தை பிறக்குற வரைக்கும் முடியாதுன்னு சொல்றான்” என்று கூற அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

 

“அவருக்கு குழந்தையை பார்க்கணும்னு ரொம்ப ஆசை அண்ணா.. பட் இப்படி ஒரு நோய் கடவுள் கொடுத்திருக்க வேண்டாம்” என்றவள் அவனுடன் மருத்துவமனை செல்ல மருந்தின் உதவியால் தூங்கி கொண்டிருந்தான் கீதன். 

 

“என்னங்க..” அவள் அவனின் முடியை கோத அதில் அவன் உள்ளுணர்வு தன்னவளை உணர்த்த மெதுவாக கண் திறந்தவன் “இன்னும் ஏழு மாசம் தான்டா.. அப்புறம் ஆபரேஷன் பண்ணிக்குறேன்” என்று சொல்ல அவனை கட்டாயப்படுத்த அவளுக்கு மனம் வரவில்லை. 

 

மருத்துவரிடம் கேட்க “கண்டிப்பா அவரோட மருந்தை கரெக்ட்டா பாலோ பண்ணினால் இப்போதைக்கு ஆபரேஷன் தேவை இல்லை.. ஒழுங்கா அவரை கவனிச்சிக்கணும்..” என்று கூற கண்டிப்பாக அவனை நன்றாக பார்த்து கொள்வதாக வாக்கு கொடுத்தாள் கனி. 

 

அன்று முழுவதும் மருத்துவமனையில் இருக்க கேள்வி கேட்ட அருணுக்கு எது எதையோ சொல்லி சமாளித்தான் விஷ்வா. அடுத்த நாள் அருண் அலுவலகம் சென்ற பின் கீதன் வீட்டிற்கு வர முந்தைய நாள் அருண் சொன்னதை பற்றி பேசினர் விஷ்வா மற்றும் கனி. 

 

“கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..” சிரித்து கொண்டே கீதன் கூற மற்ற இருவருக்கும் அதிர்ச்சி. 

 

“என்ன சொல்றீங்க?” கனி கோபப்பட “இப்போ நமக்கு அவரோட உடல்நிலை தான் முக்கியம்.. கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி நம்ப வைங்க.. கண்டிப்பா ஒருநாள் நாம சொல்றதை அவர் புரிஞ்சிப்பார்” என்று சொல்ல விஷ்வாவுக்கு அருண் புரிந்து கொள்வானா என்பதில் சந்தேகம் இருந்தாலும் கீதனை நினைத்து பெருமையாக இருந்தது. 

___________

அமெரிக்கா மாகாணம் அன்று கொண்டாட்டத்தில் இருந்தது. தேங்க்ஸ் கிவிங்க் டே (Thanks giving Day) ஒரு பாரம்பரியமான கொண்டாட்டமாக அங்கு நடக்கும். இது ஒரு அறுவடை திருவிழாவாக உருவானது. இதன் மையப்பகுதி நன்றி விருந்தாக உள்ளது. இரவு உணவில் பாரம்பரியமாக அமெரிக்காவிற்கு சொந்தமான உணவுகள் மற்றும் உணவுகள் உள்ளன. அதாவது வான்கோழி, உருளைக்கிழங்கு திணிப்பு, ஸ்குவாஷ், சோளம், பச்சை பீன்ஸ், கிரான்பெர்ரி மற்றும் பூசணிக்காய் போன்றவை. ஏழைகளுக்கு உணவு கொடுத்தல், தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்தல் எல்லாம் இதில் ஒரு பங்கு. அந்த பெரும் கொண்டாட்டத்தில் சிறு பங்காக அன்று சித்தார்த்தின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதற்கான விருந்தும் இருந்தது. 

 

புகழ் பெற்ற ஒரு நிறுவனம் அவனை விழாவிற்கு அழைத்திருக்க தன் மனைவியுடன் கிளம்பினான் சித்தார்த். ஆம் தற்போது கனிஷ்கா அவனின் மனைவி. அந்த அங்கீகாரத்தை ஒரு மாதத்திற்கு முன்பே அவளுக்கு கொடுத்து விட்டான். 

 

அன்று வில்சனிடம் மாட்டி தப்பித்து வந்தவள் இரண்டு வாரங்கள் கழித்தும் கண் விழிக்கவில்லை. அவளுக்கு சிப் தலையில் இருந்து அகற்றியதும் சித்தார்த் பயந்து விட்டான். அவனுக்கு மட்டுமே சொந்தமான அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயம். அதனாலேயே அவளை விட்டு சிறிதும் நகராமல் அவளுடன் இரண்டு வாரங்களை கழித்தான் அவன். 

 

அவள் கண் விழிக்கும் போது முதலில் பார்த்தது அவன் முகம் தான். மங்கலாக தோன்றிய அவன் பிம்பம் அவளுக்கு பழைய நினைவுகளை மட்டும் கொண்டு வரவே இல்லை. ஆழ்மனதில் சேமித்து வைக்கும் அளவிற்கு தனது நினைவுகளை அவளுக்குள் புகுத்தியிருந்தான் சித்தார்த். 

 

அவள் கண்விழித்ததை கூட கவனிக்க விடாமல் அவனின் அலைபேசி சிணுங்க எடுத்து பார்த்தவன் வில்சனின் நம்பர் எனவும் வெளியே சென்றான். 

 

“ஹலோ சித்.. என்னை படுக்க வச்சிட்டா மட்டும் உன் ஏஞ்சல் உனக்கு கிடைச்சிடுவாளா என்ன? கெவின் செக் பண்ணும் போதே நீ சிப் வச்சிருக்குறது பத்தி சொன்னான்.. அப்பவே உனக்கு ஆப்பு வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ரொம்ப எல்லாம் இல்ல.. ஆறே ஆறு முறை அவ மயக்கத்துல இருக்கும் போது தலையை தாக்கினேன்.. எப்படி செமையா இருக்காளா?” என்று சிரிக்க சித்தார்த்க்கு இரத்தம் கொதித்தது. 

 

அவன் அவளை பாதுகாத்தால் அசராமல் தலையை தாக்கினேன் என்று எப்படி சொல்வான்? 

 

“வில்சன் நீ பெரிய தப்பு பண்ணிட்ட.. கண்டிப்பா இதுக்கு அனுபவிப்ப.. உன் கையையும் காலையும் உடைக்கசொன்ன எனக்கு உன் உயிரை எடுக்குறது பெருசா என்ன? கனிகிட்ட இருந்து விலகியே இரு”

 

சித்தார்த்தின் கோபம் அவனை சிறிதும் தீண்டவில்லை போலும். “அய்யோ பயமா இருக்கே” என்று சிரித்தவன் “ஒருநாள் அவளை தொலைச்சிட்டு நிற்கும் போது தெரியும் சித்” என்று அழைப்பை துண்டித்து விட “இவனை சீக்கிரம் மாட்டி விடணும்” என்று சித்தார்த் உள்ளே செல்ல அவனின் கியூட்டி விழித்திருந்தாள். 

 

“கியூட்டி..” அவசரமாக அவள் அருகில் சென்று அவளை அணைத்து கொள்ள “வலிக்குது சித்து” என்று அவனின் மார்பில் சரணடைந்தாள். 

 

சித்தார்த் ஆச்சர்யத்தில் வாயடைத்து போனான். அவள் கண் விழித்தால் மறந்து போவாள் என்று அவன் நினைத்திருக்க அவளின் மனதில் அவன் மட்டுமே இருந்தான். அடுத்து அவன் சிறிதும் தாமதிக்கவில்லை. பென் உதவியுடன் அவளை பதிவு திருமணம் செய்து கொண்டான். அந்த விஷயம் வெளியில் தெரியாதவாறு பார்த்து கொண்டான். 

 

அவனுக்கு ஆபத்து வந்தால் கூட அவன் சமாளித்து விடுவான். ஆனால் அவளுக்கு என்றால் துடிப்பது அவன் மட்டுமே. இன்றும் அழகிய லெஹெங்காவில் தேவதையாய் ஜொலித்தவளை பார்த்து கண்ணடித்தவன் அவளுடன் விழாவிற்கு சென்றான். இப்போது அவளும் அந்த நாட்டு பிரஜை ஆகி விட்டதால் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்