
அத்தியாயம் 23
அவன் தன் ரோல்ஸ் ராய்ஸ் காரை கொண்டு வந்து நிறுத்தியதும் உள்ளிருந்த வீடியோவில் அவன் தெரிய “எஸ்.. தி கிரேட் சித்தார்த் இஸ் கம்மிங்.. வி க்ளேட்லி வெல்கம் மிஸ்டர் சித்தார்த்” என்று சொல்ல அறிவிப்பை கேட்டவன் காரின் மற்ற பக்கம் வந்து கதவை திறக்க அவனின் வலது கையை பிடித்து காரில் இருந்து இறங்கினாள் கனிஷ்கா. அதை உலகமே பார்க்க சித்தார்த்தின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர எடுத்து வாசித்து பார்த்தவன் அதே புன்னகையுடன் மேடையை நோக்கி நடந்தான்.
தொட்டதில் எல்லாம் வெற்றி பெற்ற அவனை பாராட்டாத ஆளே இருக்கவில்லை. அதுவும் கனிஷ்காவை அவனுடன் பார்த்த சிலர் “இது அந்த பொண்ணு தானே” என்று வியக்க அதை ஒரு பொருட்டாக கருதாமல் அவளுடன் தன் இருக்கைக்கு சென்றான்.
வரிசையாக விருதுகள் வழங்க பட்டு வர அடுத்து “வி ஆர் ஹேப்பி டு கிவ் திஸ் அவார்ட் டு மிஸ்டர் சித்தார்த் இன் திஸ் ஹேப்பியஸ்ட் டே” என்று சொல்ல மேடையேறினான் சித்தார்த்.
தன் கோட்டை சரி செய்தவாறே போடப்படாத கடைசி பட்டனையும் போட்டு கொண்டு மேடையில் ஏற அவனை பார்த்த கனிஷ்காவுக்கு அத்தனை பூரிப்பு. காதலோடு அவனை பார்த்து கொண்டிருக்க அவனும் அவளை பார்த்தவாறே விருதை வாங்கினான்.
தொகுப்பாளினி அவனிடம் கேள்விகள் கேட்க நினைக்க “உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா நீங்க கேக்குற கேள்விகளை கடைசியில் கேக்கலாமே.. நீங்களும் சீக்கிரம் விட மாட்டீங்க.. நானும் கொஞ்சமா சொன்னா நல்லா இருக்காது” என்று கூற அவள் சிரித்தபடியே சரியென்று நகர்ந்து விட்டாள்.
விருதை வாங்கியவன் கனிஷ்கா அருகில் அமர “இப்போ எதுக்கு சித்து பேச வேண்டாம் சொன்ன.. கடைசில நிறைய நேரம் ஆக்கிடுவாங்க தானே” என்று சலித்து கொண்டாள்.
“உனக்கு என்ன பிரச்சனை கியூட்டி.. ஏதாச்சும் ஸ்பெஷல் கிப்ட் வச்சிருக்கியா என்ன?” என்று கேட்க “நானே உனக்கு கிப்ட் தான்.. எப்படியோ இருந்த என்னை இப்படி மாத்தி வச்சிருக்க” என்று அவனின் கையை கிள்ளினாள்.
உண்மை தானே.. எங்கோ கஷ்டப்பட்டு கொண்டு வாழ வேண்டியவளை ஆராய்ச்சி எனும் பெயரில் கடத்தி கொண்டு வந்து இப்போது அவளின் காதலையும் பெற்று விட்டானே.
விழா முடியும் தருணத்தில் மீண்டும் சித்தார்த்தை அழைத்தார்கள். “சார் உங்களோட இன்டெர்வியூ கிடைக்குமா?” என்று கேட்க சம்மதமாக தலை அசைத்தான்.
தொகுப்பாளினியோ கனிஷ்காவை பார்த்து விட்டு “சார் உங்களுக்கு இந்த விருது ஒரு பெண்ணின் நினைவுகளை உறைய வைத்து அவர்களை கட்டுப்படுத்த முடியும்னு நீங்க ப்ரூவ் பண்ணினதால் கொடுத்திருக்காங்க.. மிஸ்டர் சித்தார்த் இந்த பெண்ணின் நினைவுகளை உறைய வைக்க வேண்டும் என்ற யோசனை உங்களுக்கு எப்படி வந்துச்சு?” என்று அந்த பெண் கேட்க கனிஷ்காவை திரும்பி பார்த்தான்.
அவளோ அவனின் பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க “அவளோட வாழ்க்கை தான் காரணம்.. அவளுக்கு பழைய கொடுமையான விஷயங்கள் நியாபகம் வர கூடாது.. அதே நேரம் எனக்கும் ஆராய்ச்சி பண்ண ஒரு பெண் தேவை” என்று கூறி கனிஷ்காவை பார்க்க அவளோ முறைத்தாள்.
சிரித்தபடியே சித்தார்த் திரும்ப அவர்களின் பார்வையை கண்ட அந்த பெண் “வெறும் ஆராய்ச்சிக்காக மட்டும் தான்னு தோணலயே சார்..” என்று சிரிக்க “அதை இப்போ தான் புரிஞ்சிக்கிட்டீங்க நீங்க” என்று கூறி பொதுவான கேள்விகளுக்கு பதில் அளித்தான்.
“உங்களுக்கு இப்படியான யோசனை எப்போ தோணுச்சு சார்?”
அவள் கேட்ட கேள்வியில் கசந்த புன்னகையை சிந்தியவன் “இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஆக்சிடென்டில் ஒரு பையனுக்கு மூளைசாவு ஆகி அவன் மொத்தமா கோமா ஸ்டேஜ் போயிட்டான்.. அவனின் பெற்றோர் கண்ணீர் விட்டதில் தோன்றிய யோசனை தான்.. அப்போ சின்ன சின்ன ஆராய்ச்சி பண்ணி கொண்டிருந்தேன்.. அவனை வைத்து ஆராய்ச்சி செய்து முதல் வெற்றியும் கூட” என்று கூற அந்த பெண்ணுக்கு அவனை பாராட்டவே தோன்றியது.
“சூப்பர் சார்.. இப்போ அந்த பையன் எப்படி இருக்கார்?”
“ஹி இஸ் பைன்.. வீட்டில் இருந்தாலும் தனக்கான ஒரு வேலையை தேடி அதில் முழுமூச்சா இருக்கான்”
“ஹவ் கிரேட்..” என்றவள் அடுத்தடுத்து கேள்விகள் கேட்க கனிஷ்கா தான் அயர்ந்து போனாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நேரலைக்கு பின்பு சித்தார்த் எழுந்து வர அவனை கண்களால் எரித்தாள் அவள்.
“உங்க கூட கூட்டிட்டு வர தெரியுது.. பட் நான் தனியா பீல் பண்ணுவேன்னு தோணலையா சித்து? நீ மோசம்” என்று சிணுங்க அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டான் சித்தார்த்.
“சித்து என்ன பண்ற?” என்று சிணுங்க “நீ என் பொண்டாட்டி கியூட்டி” என்று அடக்கினான். அத்தனை கேமராக்களும் அவன் புறம் திரும்ப அதை சிறிதும் மதிக்காமல் தன் கியூட்டியுடன் வெளியேறினான் சித்தார்த்.
அவனை தெரிந்த பலருக்கும் இது ஆச்சர்யம் தான். ஆனாலும் அவனின் நலம்விரும்பிகள் மனதார பாராட்டினர்.
வீட்டிற்கு வந்தவன் கைபேசி அழைக்க எடுத்து காதில் வைத்தவன் “ஹெலோ டேட்.. உங்க மருமக எப்படி?” என்று கேட்க அந்த பக்கம் சிரித்தார் அவர்.
“நீ இப்போவச்சும் செட்டில் ஆனதே எனக்கு சந்தோசம் தான்.. சரி எப்போ இந்தியா வர போற? உன் வைப் பேமிலி இங்க தான் இருக்காங்க” என்று கேட்க “இன்னும் கொஞ்ச நாளையில் வருவேன் டேட்.. எல்லாத்துக்கும் பதில் கொடுக்கணும் இல்லயா?” என்றான். அவன் பதிலில் கோபமும் கூடவே வலியும் இருந்தது.
“அவளை வேலு கூட கல்யாணம் ஆகாமா தடுத்திருக்கலாம்” அவர் வருத்தப்பட
“நான் இங்கு இல்லாத நேரம் வேணும்னே வச்சு செஞ்சிருக்காங்க டேட்.. அவ பட்ட கஷ்டம் என்னன்னு இப்போ பார்க்கும் போது கொலை வெறியே வருது.. அவன் செத்துட்டான்.. ஆனா அவனை பெத்தவங்களுக்கும் பாடம் சொல்ல வேண்டாமா? வருவேன்” என்றவன் “சித்து..” என்று கனிஷ்கா வரவும் “கால் யூ லேட்டர் டேட்..” என்று அழைப்பை துண்டித்தான்.
“சொல்லு கியூட்டி..” என்று அவளின் அருகில் செல்ல அவளோ கையில் உணவு தட்டுடன் வந்தாள்.
“அங்க நீ எதுவும் சாப்பிடலையே.. கொஞ்சம் பாஸ்தா இருக்கு.. சாப்பிடு” என்று கொடுக்க “நீ ஊட்ட மாட்டியா?” என்று அவள் முகம் பார்த்தான்.
“பாஸ்தாவை எங்க ஊட்டுறது?” என்று ஸ்பூனை எடுக்க “நோ..” என்றவன் அவள் கைகளில் அள்ளி தன் வாயில் திணித்தான். சாப்பாட்டோடு அவளின் விரல்களையும் சுவைக்க சட்டென கையை இழுத்து கொண்டவள் அவனை முறைத்தாள்.
“பார்வை எல்லாம் பலமா இருக்கே.. நான் உன் புருஷன்.. லீகலா சைன் போட்டு கல்யாணம் பண்ணிருக்கேன்..”
“ஆமா சைன் போட்டு நல்லா பண்ணுனான்..” என்றவள் எழ முயற்சிக்க அவள் கைகளை பிடித்து இழுக்க அவன் மேலேயே சரிந்தாள் அவள். பாஸ்தா மொத்தமும் அவர்கள் மீது கொட்டி விட “அய்யோ..” என்ற அவளின் பதற்றம் கொஞ்சமும் இல்லாமல் அவளின் உதட்டில் ஒட்டி கொண்டிருந்த பாஸ்தாவை சுவைக்க ஆரம்பித்தான்.
இவர்களின் இரவு சந்தோசமாக கழிய வில்சன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். இன்று சித்தார்த் விருது வாங்கியதை அவனால் சகித்து கொள்ளவே முடியவில்லை. பழைய விஷயத்திற்கே அவன் விருது வாங்கும் போது புதிதாக அவன் கண்டுபிடித்த மாத்திரை யாராலும் ஏற்று கொள்ள முடியாமல் போனது.
அந்த கோபத்தில் தன் ஆஸ்தான அழகி சார்லியை கூப்பிட அவளோ பிசி என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாள். கெவினுக்கு அழைத்தவன் உடனே ஒரு பெண்ணை அனுப்ப சொல்ல அவன் தான் விழி பிதுங்கி போனான். இந்நேரம் பெண்ணுக்கு எங்கே செல்வான்? கடைசியில் யாரிடமோ பேசி ஒரு பெண்ணை அனுப்பி வைக்க வில்சன் அவளை சந்தோசமாக அணைத்தான்.
அவளோ அடுத்த கட்டத்திற்கு நகர செல்ல அவளை நிறுத்தியவன் தன் கையில் இருந்த இரு மாத்திரைகளை அவளின் வாயினுள் திணித்தான். என்னவென்றே தெரியாமல் பயந்து போனவள் “சார்..” என்று பதற “ஜஸ்ட் டு மினிட்ஸ்” என்று கூறி விட்டு சோபாவில் அமர்ந்தான்.
அந்த பெண்ணால் ஒரு நொடி கூட சமாளிக்க முடியவில்லை. தலை சுற்றி பார்வை மங்கலாக மாற “சா..சார்..” என்று வார்த்தை குழறியது.
“எஸ்.. தட்ஸ் இட்” என்று எழுந்தவன் அவளை நேராக நிற்க வைக்க அவளால் நிற்கவே முடியாமல் தடுமாறினாள். படுக்கையில் தள்ளி விட்டவன் யோசித்தான்.
‘என் மருந்தில் எந்த பிரச்சனையும் இல்லை.. அப்போ சித்தார்த் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே மாற்று மருந்தை கொடுத்திருக்கணும்’ இப்போது சரியான வழியில் யோசித்தவனுக்கு சித்தார்த் மேல் கொலை வெறி வந்தது. அத்தனை பேர் முன்னிலையில் அவன் தலைகுனிந்து நின்றது இன்றும் அவமானமாக இருந்தது.
“இதுக்கு உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன் சித்” என்றவன் வழக்கம் போல் தன் கோபம் அனைத்தையும் அந்த பெண்ணின் மீது காட்ட அவனின் செயலில் வலியில் துடித்தாள் அவள்.
போதை மருந்து தான் என்றாலும் எத்தனை மணி நேரம் தான் தாங்குவாள்? அவனின் வக்கிரம் முழுவதும் அவளின் மேனியில் காட்டியிருக்க வெள்ளை மேனி இப்போது வரி வரியாக சிவந்து போயிருந்தது.
“சார்..” அவள் முனக அந்த சத்தம் அவனை தொல்லை படுத்த அவன் கீறிய தலையணை பஞ்சை அவள் வாயில் அடைத்தவன் காலையிலேயே கெவினுக்கு அழைப்பு விடுத்தான்.
அவன் எடுத்ததும் “நேத்து நீ அனுப்புன பெண்ணுக்கு ரிலேஷன் யாராச்சும் உண்டா?” என்று கேட்டான்.
“நோ சார்..”
“அப்படினா இங்கேயே இருக்கட்டும்.. அப்புறம் சித் கூட இருக்குற பொண்ணை பத்தி முழு விவரம் எனக்கு தெரியணும்” என்று கூற “ஓகே சார்..” என்றவன் வேலையை பார்க்க சென்றான்.
திரும்பி பார்க்க அந்த பெண்ணின் கண்களில் மரண பயம் தெரிந்தது. “வாட் இஸ் யூர் நேம்?” என்று அவளின் வாயில் இருந்த பஞ்சை அகற்றி கொண்டு கேட்டான்.
“கேதி..” அவள் சொல்ல “உன் வயசு?” என்ற கேள்விக்கு “ட்வென்ட்டி டூ..” என்றாள்.
“சூப்பர்..” என்றவன் வழக்கம் போல் அவளுக்கு மயக்க மருந்தை செலுத்தி விட்டு வெளியே வந்தான். அவன் மனதில் ஓடி கொண்டிருந்தது ஒன்றே ஒன்று தான். சித்தார்த் போலவே விருது வாங்க வேண்டும்.. ஆனால் சித்தார்த நல்லதும் செய்திருக்கிறான். வில்சன் கெட்டது மட்டுமே செய்பவன். கொஞ்சமேனும் நல்லது செய்தால் தான் அங்கீகாரம் இருக்கும் என்று அவனுக்கு யார் சொல்வது?
சித்தார்த் மடிகணிணியில் வேலை பார்த்து கொண்டிருக்க பென் வந்தான்.
“எஸ் பென்?”
“சார் நீங்க மேடமோட குடும்பத்தை பத்தி விசாரிக்க சொன்னீங்களே.. அங்க மேடமை யாரோ லவ் பண்ணுனதா சொல்லுறாங்க.. பெயர் அருண்..” என்று சொல்ல சித்தார்த்தின் முகம் தீப்பிழம்பாய் கோபத்தில் ஜொலித்தது.
நிமிர்ந்து பார்த்தவன் “யார் அவன்?” என்று கேட்க பென் “கன்னிபுரம்ல மேடம் வீடு பக்கத்துல வாசுவோட பிரண்ட்.. மேடம் அவனை லவ் பண்ணல.. பட் அன்னைக்கு வேலுவுக்கு கேசவ் ஒரு அட்ரஸ் சொல்லி வெளில அனுப்ப சொன்னானே.. அது அருண் அட்ரஸ் தான்” என்றான்.
“உன்கிட்ட அந்த அட்ரஸ் இருக்கா?”
“எஸ் சார்.. பட் விசாரிச்சதில் அவனுக்கு ஒரு பொண்ணு கூட நிச்சயம் ஆகிருக்கு.. மேடம்காக கல்யாணத்தை விட்டுட்டு போயிருக்கான்.. அப்புறம் யாருக்கும் அவனை பத்தி தெரியல..”
“அவனுக்கு பிரென்ட்னு யாரும் இல்லயா?”
“இருக்காங்க சார்.. விஷ்வான்னு ஒருத்தன்.. அவன் இப்போ பெங்களூரில் இருக்கான்.. அருண் அங்க இருக்கலாம்.. கேசவ் விசாரிக்க போயிருக்கான்” என்று சொல்ல “ஹ்ம்ம்..” என்று எழுந்து உள்ளே போனான் சித்தார்த்.
இப்போது அவனிடம் இருந்து யாரும் கனிஷ்காவை பிரிக்க முடியாது தான். ஆனால் அருண் அவளை பற்றி அறிந்தால் பிரித்து விடுவானோ என்ற கலக்கம் அவனுள் மெல்லமாக எட்டி பார்த்தது. அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை சொன்னாலே பிரிந்து விடுவாளே. அவளை தேடி வீட்டிற்குள் செல்ல குளித்து கொண்டிருந்தாள் அவள்.
“கியூட்டி..” அவன் அழைக்க “சித்து குளிக்கிறேன்” என்றாள் அவள்.
“ஓகே..” என்றவன் அவள் வரும் வரை காத்திருந்தான்.
அவள் வெளியே வந்ததும் அவளை தன்னை நோக்கி இழுத்து அணைத்து கொள்ள “சித்து.. ட்ரெஸ் கீழ விழுது” என்று சிணுங்கினாள்.
“விழுந்தா விழட்டும்.. பட் ஐ நீட் யூ” என்றவன் அவளை கட்டிலில் சரிக்க தன் தேடலை முடித்து கொண்டவன் “நான் இந்தியா போக போறேன் கியூட்டி” என்றான்.
இந்தியா என்றதும் அவளின் உடலில் சிறிது அதிர்வு வந்தது. “எதுக்கு சித்து?”
“ஒரு சின்ன வேலைடா.. சீக்கிரம் வந்துடுவேன்.. அதுவரைக்கும் நீ நம்ம வீட்டை விட்டு வெளில போக கூடாது.. யார் கூப்பிட்டாலும் வெளில வரவும் கூடாது”
அவனின் பேச்சு அவளுக்கு புதிதாக இருந்தது. ஆனாலும் அவனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு சரி என்றாள். உடனே பென்னுக்கு அழைத்தவன் இந்தியா செல்ல ஏற்பாடுகள் பண்ண சொன்னான்.

