
அத்தியாயம் 21
வில்சன் சொன்னது உண்மை தான். சில மருந்துகள் மனநிலையை பாதித்து விடும். மருந்தே இல்லாமல் ஊசியை ஏற்றினால் சிலருக்கு மாரடைப்பு கூட வரும். அதே மாதிரி தலை வலி மாத்திரை என்றாலும் ஒன்றுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் போட்டால் வில்லங்கம் தான். இன்று அவன் கனிஷ்காவின் உடம்பில் ஏற்றியிருக்கும் மருந்து என்னவென்றே தெரியாத போது அவனால் என்ன பண்ண முடியும்? மிக வேகமாக தன் வீட்டிற்கு காரை செலுத்தியவன் மருத்துவரையும் வர சொல்லியிருந்தான்.
அவளை தன் அறைக்கு தூக்கி சென்றவன் கட்டிலில் படுக்க வைத்து விட்டு திரும்ப மருத்துவர் வந்து சேர்ந்தார். கனிஷ்காவின் இரத்த மாதிரியை பரிசோதித்தவர் “சித்.. அவளுக்கு பென்டானில் போதை பொருள் அதிகமாக ஏற்றியிருக்கு.. ப்ளட் டயாலிஸில் பண்ணினாலும் சுயநினைவுக்கு வர கஷ்டம் தான்.. அவளுடைய இரத்த வகை கோடியில் ஒருத்தருக்கு தான் இருக்கும்” என்று கூற “ப்ளட் டயாலிஸில் எவ்ளோ ஹெல்ப் பண்ணும்?” என்று கேட்டான் சித்தார்த்.
“கொஞ்சம் சுயநினைவு சீக்கிரம் வரலாம்.. ஆனால் அந்த ப்ளட் க்ரூப் எங்கேயும் ஸ்டாக் இருக்காது.. கோடியில் ஒருத்தரை எங்கே போய் தேடுவ?” என்று டாக்டர் கேட்க “நான் இருக்கேன்.. எனக்கு அதே பிளட் க்ரூப் தான்” என்றான் சித்தார்த்.
“வாட்?” டாக்டர் ஆச்சர்யப்பட “எஸ் டாக்டர்.. இந்த கோடியில் சிலரை எனக்கு தெரியும்.. அவர்கள் மூலமா சேகரித்த பிளட் என் லேப்ல தான் இருக்கு.. வி ஆர் டோனர்ஸ்” என்றவன் அவளுக்கான சிகிச்சையை ஆரம்பிக்க சொன்னான்.
சில நாட்களுக்கு முன்பு தான் அவளுக்கான குடியுரிமை கிடைத்திருந்தது. எனவே அவளை வெளியில் அழைத்து செல்லவோ அவளுக்கான மருத்துவம் பார்க்கவோ எந்த தடையும் இல்லை. மருத்துவர் அவளுக்கு சிகிச்சை அளித்து விட்டு செல்ல அவளின் அருகில் அமர்ந்தான் சித்தார்த்.
“கியூட்டி.. சாரிமா.. வெரி வெரி சாரி.. நான் எதிர் பார்த்தது தான்.. பட் உன் உயிரை குடிக்குற அளவுக்கு பிரச்சனை ஆகும்னு நினைக்கல.. இவ்ளோ கஷ்ட பட்டும் அவனை எதுவும் பண்ண முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு.. ஐ பிராமிஸ் யூ.. உன்னை அடித்தவன் கை கண்டிப்பாக இன்று உடையும்” என்றவன் வெளியே வந்து பென்னை அழைக்க அவனின் முன் வந்தான்.
“நான் சொல்றதுக்கு முன்னாடியே உனக்கு புரிஞ்சிருக்கும் பென்.. அவன் முழுசா இன்னைக்கு வீட்டுக்கு போக கூடாது.. கண்டிப்பா இந்நேரம் சார்லி கூட தான் இருப்பான்.. அவளை வச்சு குடிக்க வை.. நீ சொல்றது அவ கேக்கலன்னா அவளோட பாய் ப்ரண்டை தூக்கிடு..” என்றவன் கனியிடம் சென்று அமர பென் அவன் சொன்ன வேலையை செய்ய சென்றான்.
அடுத்த நான்கு மணி நேரத்தில் வில்சனுக்கு விபத்து என்ற செய்தி கேட்ட பிறகே அவனால் நிம்மதியாக இருக்க முடிந்தது. கனிஷ்கா கையில் இருந்த ஒரே காரணத்தால் அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை அவனின் விபத்து சிறிது தணித்தது.
அடுத்த இரண்டு நாட்களும் அவன் கனிஷ்கா கண்விழிக்க காத்திருக்க அவளோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். பென்டானில் போதை பொருள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஒன்று. அது அளவுக்கு அதிகமானால் உடல் உறுப்புகளை பாதித்து விடும். இன்று தான் இத்தனை நாள் பூஜித்தவள் தூக்கத்திலேயே இருக்க வில்சனை கொல்லும் வெறி வந்தாலும் அவளுக்காக மட்டுமே பொறுமை காத்து கொண்டிருந்தான்.
“டாக்டர் அவளுக்கு எப்போ தான் கான்ஷியஸ் வரும்?” சித்தார்த் கேட்க “அதை என்னால் சொல்ல முடியாது சித்.. இந்நேரம் கான்ஷியஸ் வந்திருக்கணும்.. பட் இன்னும் வரலன்னா ஏதோ தப்பா இருக்கு” என்றவர் அவளின் ரிபோர்ட்டை பார்த்து விட்டு “ஓ காட்.. இதை எப்படி மறந்தேன்?” என்று அதிர்ந்தவர் “சித்… உடனடியா அவளோட சிப்பை ரிமூவ் பண்ணனும்.. அவளுக்கு தலையில் அடி பட்டிருந்தது.. பட் அதற்கு எதுவுமே பண்ணாம விட்டுருக்கோம்” என்று கூற “வாட்?” என சித்தார்த் அவளின் தலையை தூக்கி பார்க்க பின்னந்தலையில் அடியே கொடுக்காமல் எதையோ வைத்து அழுத்திய தடம் இருந்தது.
“டாக்டர் எப்படி கவனிக்காம விட்டீங்க?” என்று சீறியவன் உடனடியாக சிப் இருக்கும் இடத்தை பரிசோதிக்க அவளின் தலையில் சிப் தடம் மாறியிருந்தது.
“டாக்டர் குயிக்.. ரிமூவ் பண்ணுங்க” என்று அதற்கான ஏற்பாடுகளை பண்ணியவன் கடைசியில் அவளின் மனதை வெல்ல முடியாமல் தான் செய்த செயல் அவளின் உயிருக்கே ஆபத்தை கொடுக்கும் என்று சிறிதும் நினைத்திருக்கவில்லை. சிப்பை அகற்றியதும் அவளின் நிம்மதியான முகத்தை பார்த்தவன் மனதிற்குள் ஒரு பயத்துடனே அந்த நாளை கடத்தினான். ஆனால் மனதிற்கும் மூளைக்கும் பல வேறுபாடு உண்டு என்பதை அவன் யோசிக்கவே இல்லை. என்னதான் அவளை தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைத்தாலும் அவளின் ஆழ்மனதை கவனிக்க தவறி விட்டான். அது சொல்லும் செய்தி அவனுக்கு சந்தோசமா? துக்கமா என்பது அவள் வந்து சொன்னால் மட்டுமே தெரியும்.
—————-
அருணை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தாள் கனிமொழி. இந்த இரண்டு வாரங்களாக அவள் கீதனிடம் பேசவே இல்லை. எவ்வளவு மகிழ்ச்சியாக பெங்களூர் வந்தார்களோ அதை விட பலமடங்கு வேதனை இருவர் மனதிலும் இப்போது இருந்தது. கனி சாப்பாட்டு கேரியரை எடுத்து கொண்டு வெளியே வரவும் கீதன் அவளுக்கு எதிரில் வந்தான்.
“கனி சாரிமா.. ப்ளீஸ் என்கிட்ட பேசுடா” என்றவனை பார்க்காமல் கடந்து சென்றாள்.
அவனோ அவளின் பின்னே சென்று வாசலில் வழிமறிக்க அவனை தள்ளி விட்டவள் வெளியே செல்ல கீதன் தலையை பிடித்து கொண்டு அதே இடத்தில் அமர்ந்து விட்டான். சில நாட்களாகவே தலை வலி அதிகமாக இருக்கிறது தான். மனைவியிடம் சொன்னால் இதையே காரணம் காட்டி அவனுடன் தங்கி விடுவாள். யார் என்றே தெரியாத ஒருவனுக்கு உதவி செய்ய நினைக்கும் அவனுக்கு கனியின் வலியும் புரிந்தது தான். ஆனால் அவர்களின் வலியை விட அருணின் மனநிலை கருத்தில் பட அவளோடு பேசாமல் இருக்கிறான் அவன்.
மருத்துவமனைக்கு வந்த கனியை விஷ்வா அழைத்து கொண்டு அருணின் அறைக்கு செல்ல அருண் அப்போது தான் விழித்திருந்தான்.
“வா கனி..” என்று முகம் பிரகாசிக்க சொல்ல அவளுக்கு கணவனின் நினைவு தான் வந்தது.
இன்று எப்படியேனும் அருணிடம் தன் திருமணத்தை பற்றியும் தான் கனிஷ்கா இல்லை என்பதையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தவள் விஷ்வாவை பார்க்க அவனும் புரிந்தது போல் தலை அசைத்தான். அவனும் அந்த தம்பதியின் வலியை பார்த்து கொண்டு தானே இருக்கின்றான்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அருண்” என்று சொல்ல நிமிர்ந்து அமர்ந்தான் அருண்.
“நான்..” என்று திணறியவள் பின் “எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு..” என்று சொல்ல “வாட்..” என்று அதிர்ந்த அருணின் முகம் சிறிது நேரத்தில் வெளிறியது. கை கால்கள் நடுங்க “என்ன சொன்ன?” என்றவனுக்கு பேச்சே வரவில்லை. மூச்சு திணற ஆரம்பிக்க “டாக்டர்..” என்று கத்தினான் விஷ்வா.
அருணுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி இருக்க அவனை சமநிலைக்கு கொண்டு வர படாதபாடு பட்டு விட்டார் அந்த மருத்துவர். கடைசியில் அவனுக்கு மயக்க மருந்து செலுத்தி தூங்க வைத்து விட்டு வெளியே வந்தவர் விஷ்வா மற்றும் கனியை முறைத்தார்.
“அவரோட நிலைமை தெரிந்தும் எதுக்கு டென்ஷன் ஆக்குறீங்க?” என்று கத்த இருவரும் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தனர்.
“இனி ஒரு முறை இந்த மாதிரி ஆனா எங்களால் எதுவும் பண்ண முடியாது” என்று கூறி விட்டு செல்ல கனி விஷ்வாவிடம் “சாரி அண்ணா.. இன்னொரு முறை இப்படி நடக்காது.. நான் நாளைக்கு வீட்டுக்கு போறேன்.. அங்க செட்டில் பண்ணிட்டு கிளம்பி வரேன்” என்று சொல்லி விட்டு சென்றவள் மனம் முழுவதும் கீதன் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்தவள் கீதனின் முகம் பார்க்காமல் தன் அறைக்கு சென்று விட அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. கொஞ்ச நேரம் முன்பு தான் விஷ்வா அழைத்து நடந்ததை சொல்லியிருந்தான். கீதன் அவளின் அறைக்கு செல்ல அவளோ துணிகளை பெட்டியில் வைத்து கொண்டிருந்தாள்.
“கனி எங்கமா போற?” என்றவனை முறைத்தவள் அவன் சட்டை காலரை பிடித்து “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல.. என்னை மிரட்டி தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க.. ஆனா முதல் நாளே எனக்கு உங்க மேல் ஈர்ப்பு வந்துச்சு.. அடுத்து அது காதலா மாறி என் எல்லாமே நீங்க தான்னு நினைக்கும் போது எவனோ ஒருத்தனுக்கு தாரம் வார்த்து கொடுத்துட்டீங்கல” என்று கேட்க “இல்லமா.. அது..” என்று கீதன் சொல்ல வந்த சமாதானங்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.
கண்களில் வழிந்த நீரை துடைத்தவள் “இங்க வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்க.. இனி உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.. அவனுக்கு ஒரு தோழியா கூடவே இருந்து நீங்க சொன்ன வேலையை செய்யுறேன்.. நம்ம குழந்தை…” என்று திணறி பின் “குழந்தை பிறக்கும் போது முடிஞ்சா கூட இருங்க.. இல்லன்னா உங்களை நினைச்சிட்டு வாழ்ந்துட்டு போறேன்” என்றவளை தன்னோடு அணைத்து கொண்டான் கீதன்.
“ரொம்ப நாள் இல்லடா.. கண்டிப்பா நம்ம குழந்தை பிறக்கும் போது நான் உன் பக்கத்தில் தான் இருப்பேன்” என்று கூற அவனை விட்டு விலகியவள் பெட்டியை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.
அவனும் அதற்கு தான் கிளம்பி இருப்பான் போல. அவளின் பின்னேயே தன் கைப்பையை தூக்கி கொண்டு வந்தவன் ஓட்டுனரிடம் காரை சென்னைக்கு ஓட்ட சொல்ல இருவரும் வெவ்வேறு மனநிலையில் சென்னை வந்து சேர்ந்தனர்.
இரண்டு மாதங்கள் ஆகும் என்று சொன்னவன் இரண்டே வாரங்களில் சென்னை வந்து நிற்க அனுவும் அதிரனும் புரியாமல் திகைத்தனர். கனி மற்றும் கீதன் முகத்தில் இருந்து அவர்களால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.
“என்ன ஆச்சு அதி.. இவ்ளோ சீக்கிரம் வந்துட்டாங்க.. மறுபடியும் எதுவும் பிரச்சனையோ?” என்று அனு வருத்த பட அவளை தேற்றிய அதிரன் கீதனின் அறைக்கு சென்றான்.
கீதன் அப்போது தான் குளியலறையில் இருந்து வெளியே வர அவனை பார்க்க விரும்பாத கனி பால்கனியில் போய் அமர்ந்து கொண்டாள்.
“மச்சி ஏதாச்சும் பிரச்சனையா?” என்று கேட்டான் அதிரன்.
“பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல அதி.. அவளுக்கு அங்க ஒரு காலேஜில் வேலை கிடைச்சிருக்கு.. அதனால் கிளம்ப போறா” என்றவனை சந்தேகமாக பார்த்தான் அதிரன்.
அவன் போக சொன்ன போதே போகாமல் கீதனுடன் அலுவலகம் வந்த கனியை அதிரனுக்கு தெரியுமே. ஆனாலும் இப்போது எதுவும் சொல்லாமல் “சரி மச்சி.. போகும் போது சொல்லு.. இப்போ நாங்க கிளம்புறோம்” என்றவனின் முன்னே “நான் நாளைக்கே கிளம்புறேன்” என்று வந்து நின்றாள் கனி.
கீதன் அவளை அடக்க பார்க்க அவளோ அவனை முறைத்து கொண்டு ஹாலுக்கு சென்றாள். இப்போது அதிரனுக்கு ஏதோ பிரச்சனை என்று உறுதியாகி விட்டது.
கீதன் பதறி கொண்டு கீழே வர அதிரனும் பின்னால் வந்தான். கோபமாக வந்த கனியை அனுவும் எதிர்பார்க்கவில்லை.
“என்ன ஆச்சு அண்ணி?” அனு கேட்க அவளையும் முறைத்தவள் “நான் நாளைக்கு பெங்களூர் போறேன்.. இனிமேல் வர மாட்டேன்” என்று கூற கேட்டு கொண்டிருந்த அதிரனுக்கும் அதிர்ச்சி.
“கனி என்னமா சொல்ற?” அவன் கேட்க “அதை உங்க மச்சான் கிட்ட கேட்டுக்கோங்க” என்றாள்.
கீதன் அவளை பார்த்து கொண்டு இருந்தானே தவிர ஒரு வார்த்தையும் மறுத்து பேசவில்லை. ஆனால் அவன் கண்களோ அவளிடம் யாசித்து கொண்டிருந்தது. கனிக்கும் அழுகை முட்டி கொண்டு வந்தது. அதை கட்டு படுத்தியவள் நிமிர்ந்து பார்க்க அனு “அவர் உங்க புருஷன்.. அவரை விட்டு போக எப்படி மனசு வந்துச்சு?” என்று கேட்டாள்.
“புருஷன்.. ஹ்ம்ம்.. அந்த வார்த்தைக்கு எவ்ளோ மதிப்பு அவர் கொடுத்திருக்கார்ன்னு தெரிஞ்சா நீ இப்படி பேசிட்டு இருக்க மாட்ட.. நான் போறது அவருக்கு தெரியும்.. ஆனா திரும்பி வரவே மாட்டேன்னு இப்போ தான் சொல்றேன்” என்று கீதனை பார்க்க அவன் கண்களில் வலி அப்பட்டமாக தெரிந்தது.
“என் அன்பு உனக்கு எப்போ புரியும் கனி? நான் உன்னை எவ்ளோ காதலிக்குறேன்னு உனக்கு எப்படி புரிய வைக்குறது? உன் நல்லதுக்கு தான்மா” அவனின் ஆதங்கம் அவளுக்கு சிரிப்பாக இருந்ததோ என்னவோ.. அவனை ஒரு ஏளனமான சிரிப்புடன் எதிர்கொண்டாள்.
“என் நல்லதுக்கு.. ஹ்ம்ம்.. என்ன நினைச்சீங்க என்னை பத்தி? பணம் இருந்தா எல்லாம் கிடைச்சிடும்னு நினைச்சீங்களா மிஸ்டர் கீதன்? ஒரு மனுஷனுக்கு பணம் மட்டும் இருந்தா போதாது.. உடல் ஆரோக்கியமாகவும் இருக்கணும்.. அது உங்களுக்கு இருக்கா?” என்று கேட்க அவனின் முகம் வேதனையில் சுருங்கியது.
அவள் கூறுவதும் உண்மை தானே. அவனின் நிலைமை தெரிந்தும் அவளிடம் எதிர்பார்ப்பது தவறு தானே. அவன் வேதனையில் அவ்விடம் விட்டு நகர முயல அவனின் கை பிடித்து நிறுத்தினாள் அனு. இவ்வளவு நேரமும் அத்தனை பேரின் முன்பு வைத்து தானே கீதனை கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் கனி.
“நீ எங்கே அண்ணா போற? அவங்களுக்கு உன் அன்பு எப்பவும் புரியாது… அவங்க உன்னை விட்டு விலகி போகணும்னு தான் அப்படி பேசுறாங்க.. அப்போ தானே அவங்களோட காதலன் கூட நிம்மதியா ஊர் சுத்த முடியும்” என்று கனியை பார்த்து கோபமாக சொல்ல “அனு…” என்ற கோபகுரல் கீதனிடம் இருந்து வந்தது.
“அவளை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுன..” என்று அனுவை எச்சரிக்க அனு கனியை அற்பமாக பார்த்தாள்.
“இது தான் என் அண்ணன்.. அவருக்கு பிரச்சனை உடம்பில் தான்.. ஆனா நீங்க மனசை அழுக்கா வச்சிருக்கீங்க.. அதை கழுவுங்க” என்று கூறி விட்டு செல்ல கனி கீதனை தாண்டி வெளியே சென்றாள்.
கீதனை பற்றி சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் அவளின் நெஞ்சை வாள் போல் அறுத்தது. அவள் அனைவருக்கும் கெட்டவளாக தெரிந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவளின் கீதன் யாருக்கும் பதில் சொல்லி கொண்டு இருக்க கூடாது.
தன் சித்தியின் வீட்டுக்கு அதே கோப முகமூடியை அணிந்து சென்றவளை விசித்திரமாக பார்த்தார் பார்வதி.
“என்ன நீ மட்டும் வந்திருக்க? மாப்பிள்ளை எங்க?” என்று கேட்டவரிடம் “சித்தி.. என்னால் அவன் கூட எல்லாம் வாழ முடியாது.. அன்னைக்கு நீங்க தம்பியை வச்சு பிளாக்மெயில் பண்ணியதால் மட்டும் தான் அவனுக்கு கழுத்தை நீட்டினேன்.. இல்லனா அவனை மாதிரி ஒருத்தனுக்கு வாழ்க்கை கொடுக்க எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று சீற இதை எல்லாம் வெளியில் நின்று கேட்டு கொண்டிருந்த கீதனுக்கு மூச்சை அடைத்து கொண்டு வந்தது.
“என்னடி பேசிட்டு இருக்க?” அவளின் கன்னத்தில் ஓங்கி அறைய உள்ளே செல்ல போன கீதனை கை காட்டி வேண்டாம் என்று தடுத்தாள் அவள்.
“நான் நாளைக்கு பெங்களூர் போறேன்.. இனி வர மாட்டேன்.. இந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை” என்றவள் பார்வதியின் அதிர்ந்த பார்வையையும் தாண்டி வெளியே சென்று விட கீதன் உறைந்து நின்றான்.
அவனுக்காக எத்தனை பேரிடம் கெட்ட பெயர் வாங்க போகிறாள் அவள்? அவள் பேசிய ஒன்றும் அவளின் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அல்ல என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அவளின் நிலை தான் அவனை இன்னும் வருத்தியது.
“என்னை பத்தி தப்பா பேசிட்டு என்னை விட நீதானே கனி கஷ்டப்பட போற” என்றவனுக்கு இன்னும் அவளுக்கு கஷ்டம் தர மனதில்லை.
வெளியில் வந்தவன் மனம் தன்னை நினைத்தே கதறி அழ அடுத்த நாள் அவன் காணாமல் போயிருந்தான்.. “உன் வாழ்வை வாழு..” என்ற வாசகம் மட்டும் கனியை பார்த்து சிரித்தது.
தன் பெட்டியை எடுத்து கொண்டு வெளியில் வந்த கனியோ அதிரனிடம் “இது அவர் கஷ்டப்பட்டு உருவாக்கின சாம்ராஜ்யம் அண்ணா.. கண்டிப்பா காப்பாத்துவீங்கன்னு நம்பிக்கை இருக்கு.. அவர் திரும்பி வரும் போது அவருக்கு துணையா நீங்க எல்லாரும் இருக்கணும்..” என்று காரில் ஏறி சென்று விட அதிரன் மலைத்து நின்றான்.
‘இவ்வளவு அன்பை வைத்திருப்பவள் எதற்காக இந்த நிலையில் அவனை விட்டு செல்ல வேண்டும்?’ என்ற ஒரு கேள்வியே அவனின் மனதை குடைந்து கொண்டிருந்தது. ஆனால் இத்தனைக்கும் காரணம் அன்று அவன் செய்த ஒரு போன் கால் என்றால் அவனால் மன்னிக்க முடியுமா?

