விழி வழியே சரணடைந்தேன் -15

Loading

அத்தியாயம் 15

 

“நீங்க முடியுமா

நினைவு தூங்குமா

காலம் மாறுமா

காயம் மாறுமா

வானம் பிரிந்த மேகமா

வாழ்வில் உனக்கு சோகமா

காதல் போயின் காதல் சாகுமா

காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை

உன்னை தேடுவேன்

உன்னை மீண்டும் பார்த்தப்பின்

கண் மூடுவேன்”

 

அலைபேசியில் பாடல் ஒலித்து கொண்டிருக்க கையில் கனிஷ்காவின் புகைப்படத்தை வைத்து பார்த்து கொண்டிருந்தான் அருண். நேற்று தான் பழைய அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குடியில் மூழ்கி கொண்டிருந்தவனுக்கு நேற்று விஷ்வா அழைத்து பேசிய பின்பே தவறு புரிந்தது. 

 

இனிமேல் தான் இப்படியே குடித்து வாழ்க்கையை கெடுத்தால் என்றாவது ஒருநாள் கனிஷ்கா திரும்பி வந்தால் அதை ஏற்று கொள்ளும் அளவிற்கு தனக்கு தெம்பு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இன்று வேலைக்கு சென்றான். அலைபேசி சிணுங்க எடுத்து பார்த்தவன் விஷ்வாவின் பெயரை பார்த்ததும் பேசினான். 

 

“சொல்லு டா.. இன்னும் தூங்காம என்ன பண்ற?” 

 

“என்னை விடுடா அருண்.. இன்னைக்கு வேலையில் எந்த பிரச்சனையும் இல்லையே” என்று விஷ்வா கேட்க 

 

“இல்லடா.. மேனேஜர் கொஞ்சம் அதிகமாவே திட்டினார்.. அப்புறம் போனா போகுதுன்னு வேலையை குடுத்துட்டார்” என்று சிரித்தவன் “வீட்ல என்ன நிலமைடா?” என்று கேட்க விஷ்வா சிரித்தான். 

 

“உன் அப்பா வேலை செஞ்சு பார்த்துருக்கியாடா? இப்போ அந்த மனுஷன் வெளில அரசியல்வாதி.. வீட்டுக்குள் எலி.. எல்லாம் அம்ருதா செய்யும் வேலை.. நீ கிடைக்கிற வரைக்கும் அவ விட மாட்டா” 

 

“அப்படியாவது மனுஷனுக்கு கொழுப்பு குறையட்டும்.. கனி பத்தி ஏதாவது விவரம் கிடைச்சுதா?” அருணின் கேள்விக்கு விஷ்வா பதில் பேச முடியாமல் திணறினான். 

 

அவனும் தேடி கொண்டு தானே இருக்கிறான். ஆனால் இப்போது அருண் இருக்கும் மனநிலையை இதை வைத்து கெடுக்க விரும்பவில்லை. 

 

“தேடிட்டு தான்டா இருக்கேன்.. நீ பாதுகாப்பா இரு.. இன்னும் நீ வேலை பார்க்கும் இடம் உன் அப்பாவுக்கு தெரியாது.. என்னைக்கு நீ இருக்குற இடம் தெரியுதோ அன்னைக்கு உனக்கும் அம்ருதாவுக்கும் அதே இடத்தில் கல்யாணம் நடக்கும்..” என்று விஷ்வா கூற அந்த நினைப்பே அவனுக்கு கசத்தது. 

 

“என் கனி தவிர யாருக்கும் என் வாழ்க்கையில் இடம் இல்லடா.. அவள் எந்த மூலையில் இருந்தாலும் அவளுக்காக நான் காத்திருப்பேன்.. அவ என்னை தேடி வருவா..” என்று கூற நடக்காத விஷயம் என்று விஷ்வாவுக்கு தோன்றினாலும் ஒன்றும் பேசாமல் இருந்தான். 

 

“சரி டா.. நாளைக்கு வேலை இருக்கு.. அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தாலும் இருவர் மனமும் வேறு வேறு கோணத்தில் சிந்தித்து மனம் வருந்தியது. 

 

 

“ஓ.. மை கியூட்டி பை.. என் டார்லிங்.. சமைக்க தான் வேணுமா? நீயே எனக்கு சாப்பாடாக மாட்டியா?” என்று சித்தார்த் கொஞ்ச அதை கவனிக்காமல் சமைத்து கொண்டிருந்தாள் கனிஷ்கா. 

 

இன்னும் அவளின் இருப்பை வெளியுலகம் அறியவில்லை. அன்று நண்பர்களுக்கு அறிமுக படுத்தியவன் அவளை பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்றே கேட்டு கொண்டான். அவனின் அரசவைக்கு அவள் ராணியாக இருக்க அவனோ அவளை ஆளும் ராஜாவாக இருந்தான். 

 

“ஏய் கியூட்டி இதெல்லாம் ஓவர்.. இப்போ நீ எனக்கு சாப்பாடு தருவியா மாட்டியா? இல்ல நானே எடுத்துக்கவா?” என்று அவளின் ஸ்கர்டை இழுக்க கரண்டியால் கையில் அடித்தாள் கனிஷ்கா. 

 

“ஸ்ஸ்ஸ்…” என்று கையை உதறியவன் அவளை இழுத்து இடையில் தன் கையை படரவிட கண்களால் கேஸை காட்டினாள் அவள். 

 

“ச்சு.. இவ்ளோ தான் மேட்டரா? ஆப் பண்ணிட்டா போச்சு.. சாப்பிடுறதே சைவம்.. இதுல என்ன கூச்சம்?” என்றவன் ஒருகையால் அடுப்பை அணைத்து விட்டு மற்றொரு கையால் அவளை தூக்கி கொள்ள சாசரை போல் கண்களை விரித்தாள் அவள். 

 

“ஒஹ் காட்.. உன் கண்கள் என்னை காந்தமா இழுக்குது” என்று அவள் கண்களில் முத்தம் பதித்தவன் கைகளோ அவள் மேனியில் விளையாட கண்களை மூடி கொண்டாள் அவள். 

 

அவனின் கைகள் அவளிடம் விளையாடினாலும் கண்கள் அவ்வப்போது தனது மடிக்கணினியை நோக்கியது. அவளின் நினைவலைகள் அவனை நோக்கி எழும்ப அதை பயன்படுத்தி கொண்டவன் அசைவம் சாப்பிட ஆரம்பித்தான். 

 

இரவின் தாக்கமும் அந்த அறையில் மெல்லிசையாய் ஒலித்து கொண்டிருந்த இசையின் வரியும் அவளை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றது என்றே கூறலாம். நான்கு மாதங்களுக்கு முன்பு இது வேண்டாமே என்று அழுத நொடிகள் அவள் நினைவில் சிறிதும் இல்லை. இந்த நொடி இன்னும் இன்னும் நீளாதா என்று அவளுக்கு சொர்க்கத்தை காட்டி கொண்டிருந்தான் சித்தார்த். அவனுக்கு தேவையான வீணை அவன் கையில் இருக்கும் போது அவனுக்கு இசை மீட்டிட தானே தோன்றும். ஒவ்வொரு நரம்பாக அவன் தொட அவனுக்கு இசையாக வளைந்து கொடுத்தாள் அவள். 

 

இத்தனை நாட்களும் சைவம் மட்டும் சாப்பிட்ட அவனும் அசைவம் சாப்பிடுவதில் வேகம் காட்டவில்லை. ரசித்து ருசித்து சாப்பிட்டான். ஆவனின் ரசனையில் அவள் தேனாக உருகி கொண்டிருக்க அவனின் ரசனையும் தேடலும் குறையாமல் கொட்டி கொண்டிருந்தது. 

 

அவர்கள் இருவரும் தவறா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லுவான் அவன். அவளின் வாழ்க்கையை முற்றும் அறிந்தவன் அவன். இதுவரை இன்னொரு பெண்ணுடன் இழைந்து அவனும் அவளுக்கு துரோகம் செய்யவில்லை. முதன் முதலில் அவனை ஈர்த்த பெண்ணவள் தனக்கு மட்டுமே வேண்டும் என்று நினைத்ததையும் அவன் தவறாக நினைக்கவில்லை. அவன் அவளை தன் வசம் படுத்த அவளின் மூளையை உறைய செய்ததையும் அவன் பெரிதாக நினைக்கவில்லை. அவன் ஏதோ ஒரு காரணத்திற்காக அவளை அழைத்து வர சொல்லி இன்று அவளுடன் இரண்டற கலந்து விட்டான். பிற்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பற்றி அவனுக்கு கவலையும் இல்லை. ஆனால் அவளோடிருக்கும் ஒவ்வொரு நொடியையும் ஆராதிக்க விரும்பினான். 

 

தேடல் குறைந்து அவன் தூக்கத்திற்கு செல்ல அவன் மார்பில் தலைவைத்து துயில் கொண்டவள் கலைந்த ஓவியமாகவே இருந்தாள். ஆனால் அதை கலைத்தவனின் மீது காதலாக மாறுவதை தான் அவளால் தடுக்க முடியவில்லை. 

 

 

அத்தியாயம் 12

 

அடுத்த நாள் காலையில் எழுந்த சித்தார்த்துக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் எப்போதும் உறங்க விரும்பாத கண்ணாடி அறையில் அவனின் மார்பில் கனிஷ்கா தூங்கி கொண்டிருந்தாள். 

 

“ஷிட்.. என்ன தான் கனி கூட ஸ்பெண்ட் பண்ணினாலும் இந்த இடமா கிடச்சுச்சு” என்று சலித்தவன் எழ முயற்சிக்க கனிஷ்கா இருந்ததால் அவனால் எழ முடியவில்லை. பக்கத்தில் அவனின் தொலைபேசி சிணுங்க எடுத்தவன் “சொல்லு பென்..” என்க அந்த பக்கம் பென் “சார் கெவின் உங்களை பார்க்க வந்திருக்கான்” என்றான். 

 

“நம்ம லேப்ல வெயிட் பண்ண சொல்லு.. நான் வர நேரமாகும்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு கனிஷ்காவை நோக்க அவளோ அவனின் எந்த சத்தத்திலும் தூக்கம் கலையவில்லை. நேற்று இரவு அவன் கலைத்து போட்ட ஓவியமாய் அதே நிலையில் படுத்திருந்தாள். 

 

அவளின் ஸ்கர்ட் வேறு மேலே ஏறி அவனின் ஆசையை பதம் பார்க்க அந்த கால்களில் தன் ஒற்றை விரலால் கோலம் போட்டவன் செயலில் கூச்சம் வர மெதுவாக கண்களை திறந்தாள் கனிஷ்கா. அவன் மீது கிடந்த கோலம் அவளுக்கு சிறிது வெட்கத்தை உண்டு பண்ண அவசரமாக எழும்ப போனவளின் இடையை பிடித்து தடுத்தான் சித்தார்த். 

 

“கியூட்டி..” 

 

அவனின் குரலுக்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக முகத்தை திருப்பி பார்த்தவன் அந்த முகசிவப்பில் ஆச்சர்யம் அடைந்து போனான். 

 

“ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு.. இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு” என்று கண்சிமிட்ட அவ்விடம் விட்டு ஓடியே விட்டாள் கனிஷ்கா. சிரித்து கொண்டே எழும்பிய சித்தார்த்தின் நினைவில் நேற்றைய அவளின் மென்மை மட்டுமே இருக்க அதே புன்னகையுடன் கெவினை சந்திக்க சென்றான். 

 

“குட் மார்னிங் கெவின்.. உங்க சாருக்கு நேரா வர பிடிக்காதா என்ன? நீயே தூது வந்து பல்ப் வாங்கிட்டு போற.. இப்போ என்ன விஷயம்?” என்று கேட்டான். 

 

“இந்த பல்ப் எனக்கு தேவை தான்” என்று உள்ளுக்குள் வருந்திய கெவின் வெளியே “வில்சன் சார் ஒரு ப்ராஜெக்ட் தொடங்க போறாங்க.. அதுக்கு தொடக்க விழாவுக்கு உங்களை அழைக்க சொன்னார்” என்று கூற சிரித்தான் சித்தார்த். 

 

“இப்போ என்ன பிசினஸ் மேன்?” 

 

“மார்கெட்டிங் சார்..”

 

“அது சரி.. நானாச்சும் கொஞ்சம் தான் இல்லீகலா பிசினஸ் பண்றேன்.. வில்சன் பண்றது எல்லாமே இல்லீகலா இருக்கே.. எப்போன்னு பென் கிட்ட சொல்லிட்டு போ.. வரேன்” என்றவன் எழுந்து சென்று விட கெவின் வேலை முடித்து சென்றான். 

 

சித்தார்த் தன் அறைக்கு வரவும் கனிஷ்கா அப்போது தான் குளித்து விட்டு வந்தாள். வந்தவள் சித்தார்த் அறைக்குள் இருந்ததை கவனிக்கவில்லை. அவள் பாட்டிற்கு துணியை மாற்ற தன் இடையில் கட்டி இருந்ததை கழற்றவும் “ஹே நான் இங்கே தான் இருக்கேன்” என்ற குரலில் சட்டென துணியை இறுக பற்றினாள். 

 

“சித்து.. இது நல்லா இல்ல..” 

 

“பார்றா சித்துவாமே.. இது எப்போல இருந்து? பட் ஐ லைக் இட் கியூட்டி..” என்று அருகில் வந்தவன் அவளை தன்னோடு சேர்த்து அணைக்க அவளோ அவனின் நெருக்கத்தில் துணியை தவற விட்டாள். 

 

“அய்யோ…” அவளின் பதற்றத்தில் சிரித்தவன் அவளோடு கட்டிலில் சரிய “நான் இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன்..” என்று முனகினாள் அவள். 

 

“இன்னொரு வாட்டி குளிச்சாலும் தப்பு இல்ல.. பட் இப்போ இதை விட்டா நான் நைட் வர வெயிட் பண்ணனும்” என்றவன் வந்த வேலையை தொடர “சித்து..” என்று அழைத்தாள். 

 

அவனோ தன் வேலையில் மும்மூரமாக இருக்கவும் அவளின் அழைப்பை கவனிக்கவில்லை. கனிஷ்கா அவனிடம் தோற்று அவன் அவளை மொத்தமாக ஆட்கொண்ட பின்னரே “எதுக்கு கூப்பிட்ட?” என்று அவன் கேட்க முறைத்தவள் பின் “என்னை லவ் பண்றியா சித்து?” என்று கேட்டாள். 

 

“லவ்வா? நானா? அது எனக்கு பிடிக்காத வார்த்தை.. எனக்கு நீ வேணும்.. என்கூடவே இருக்கணும் அவ்ளோ தான்.. அதுக்காக லவ்னு எல்லாம் தப்பு கணக்கு போடாத” என்று கூற என்னதான் அவள் இப்போது மேலை நாட்டில் இருந்தாலும் அந்த வார்த்தை அவனின் தொடுகையை கசக்க வைத்தது. 

 

“அப்போ எதுக்காக இப்படி பண்றீங்க?” அவன் கை அவளின் மேனியில் விளையாடுவதை சுட்டி கேட்க “அது தான் சொன்னேனே.. ஐ நீட் யூ தட்ஸ் இட்..” என்று கூறி விட்டு அவளை தொட அவளோ அவனின் கைகளை தட்டி விட்டாள். 

 

“எனக்கு உங்களை பிடிக்கும்.. ஆனா உங்களுக்கு பிடிக்காம இது வேண்டாமே” 

 

“என்னை உனக்கு பிடிச்சா போதும்.. வேற எதுவும் நான் கேட்க விரும்பல” என்றவன் விட்ட வேலையை தொடர கனிஷ்கா முறியடிக்க நினைத்த அனைத்து முயற்சிகளும் தோற்று தான் போனது. 

 

அவன் அவளின் மேலிருந்து எழும்பவும் தன்னை போர்வையால் போர்த்தி கொண்டவள் “இனி மேல் என்னை தொட கூடாது..” என்றாள். உறுதியாக சொல்ல நினைத்தாலும் அவளின் வார்த்தையில் உறுதி இல்லை. அவனின் முழு கட்டுபாட்டில் இருப்பவளுக்கு சொல்ல தான் முடியுமா என்ன? 

 

“இன்னைக்கு நைட் வரைக்கும் இந்த உறுதி இருக்கான்னு பார்க்கலாம்” என்றவன் வெளியே சென்று விட அவனை வெறித்து பார்த்தாள் கனிஷ்கா. ஆனால் அவன் சொன்ன மாதிரியே அந்த உறுதி நிலைக்க போவதும் இல்லை. 

Click on a star to rate it!

Rating 3.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்