
அத்தியாயம் – 13
ரிஷியும் நித்யாவும் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் கருணா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை நோக்கி, சில நிமிடங்களாகவே மௌனமாகவே வந்த மனைவியை இதழோர சிரிப்புடன், ஓரக்கண்ணால் பார்த்தபடி வந்த ரிஷி…. “என்ன நித்து ரொம்ப எக்ஸைட்மெண்டா இருக்க போலிருக்கு உன் லவவரை பார்க்க போறேன்னு” என்றான் நக்கலாய்,…
பக்கவாட்டாக திரும்பி அவனை முறைத்தவள்,…. “ஆமா” என்றாள் வெடுக்கென்று…
“ஓஹ்… சூப்பர் சூப்பர், ஸோ அப்புறம், லவ்வரை பார்க்க போறீங்க, காதல் வார்த்தைகளை நிறைய அள்ளி தெளிப்பீங்க இல்லயா, இப்போ கொஞ்சம் எடுத்து விடுங்களேன் கேட்போம்” என்றான்,…
தன்னிடம் வம்பு வளர்க்கணுமென்றே தன்னை நோண்டுகிறான் என அறிந்தவள், அவனுடன் பேசி மல்லுகட்ட விரும்பாமல் விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்,…
வீட்டிலிருந்து கிளம்பும் போதே ஒரு வித உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது, ஆனால் கருணா எப்படி இருக்கிறான் என பார்க்க வேண்டிய ஆவல் எழுந்தமையால் தயக்கத்தை தூர போட்டு விட்டு புறப்பட்டு விட்டாள், பாட்டி மற்றும் தாத்தாவிடம் ரிஷியுடன் வெளியே போவதாக மட்டும் கூறி வந்திருந்தாள், புதிதாக கல்யாணமானவர்கள் வெளியில் செல்வதெல்லாம் வழக்கம் என அவர்களும் எங்கே போறீங்க என்று கேட்டு எந்த வித குடைச்சலும் கொடுக்கவில்லை,…
மருத்துவமனை வந்து சேரும் வரையில் அமைதி மட்டுமே நிலவியது இருவருக்குள்ளும், வர வேண்டிய இடம் வந்தவுடன் காரை நிறுத்திய ரிஷி முன் செல்ல, நித்யா அவனை பின்தொடர்ந்தாள்,…
முதல் தளத்திலிருக்கும் ஐசியு வார்டின் முன்பு வந்து நின்றவன்,… “போ” என கூறிவிட்டு, ஐசியுவின் வெளியே வரிசையாக போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் போய் அமர்ந்து கொண்டான்…
மனதை திடப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் நித்யா,…. ஆஜாகுபாவனாக உடல்வாகுடன், அந்த தோற்றத்திற்கு சம்மந்தமே இல்லாத வகையில் கண்மூடி படுத்திருந்தான் கருணாகரன், முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் போடப்பட்டிருந்தது, தலை முடியை முழுதாக மறைத்தவாறு கட்டு போடப்பட்டிருந்தது, ட்ரிப்ஸ் ஒரு பக்கம் ஏறிகொண்ருக்க, அவன் இதயத்துடிப்பை மானிட்டர் கணக்கு போட்டு சொல்லிக் கொண்டிருந்தது,…
அவனை அந்நிலையில் பார்த்ததும் கண்ணீர் நிற்காமல் வழிந்தது நித்யாவிற்கு, அவன் இப்படி பேச்சு மூச்சில்லாமல் கிடக்க அவள் தானே காரணம், குற்றவுணர்வு வாட்டி வதைக்க குலுங்கி அழுதாள் அவள் நிலையை கண்டு, “என்னை மன்னிச்சிடு கருணா” என்றவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது,..
ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கரத்தை பற்றியவள், “தயவு செஞ்சு எழுந்து வா கருணா, நான் உன்கிட்ட பேசணும், நிறைய சொல்லணும், என் வாழ்க்கையில என்னென்னமோ நடந்து போச்சு, அதெல்லலாம் உனக்கு தெரிய வந்தா கண்டிப்பா கோபப்படுவ, ஆக்ரோஷமாவ, உனக்கு நான் எப்படி புரிய வைக்க போறேன்னு தெரியல, எனக்கு பயமா இருக்கு, நீ என்னை பார்க்காமலேயே இருந்திருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்காதுல” என்றவளுக்கு கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை,…
வெகு நேரம் கண்ணீர் வற்றும் அளவிற்கு அழுதாள், அவனை பார்க்க பார்க்க நெஞ்சமெல்லாம் குமுறியது, ஆனால் மனதிற்கு ஒரு வித நிம்மதி கிடைத்தது, அவன் கண்விழித்து விட்டால் அவள் அடையும் சந்தோஷத்திற்கு அளவில்லை, ஆனால் அவனுக்கு நடந்த அனைத்தையும் சொல்லி புரிய வைக்கணுமே, அதை நினைக்க நினைக்க மனம் பாரமானது, மனம் படபடத்தது, கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு பிறகே வெளிவந்தாள்,…
யாருடனோ போனில் உரையாடி கொண்டிருந்த ரிஷி, அவள் தன் முன்னே வந்து நிற்கவும், போனை அணைத்து விட்டு “கிளம்பலாமா” என்றான்,…. அவள் முகம் அழுததை காட்டிக் கொடித்தாலும், அவன் அதை பற்றி எதுவும் கேட்டுக் கொள்ள வில்லை,…..
“கருணாக்கு என்னாச்சு அவன் எப்போ கண்ணு முழிப்பான், டாக்டரை நான் பார்க்கணும், அவனை பத்தி விசாரிக்கனும்” என்றாள் உறுதியான குரலில்,….
அவன் எந்த பேச்சு வார்த்தையும் வளர்க்காமல் டாக்டரின் அறையை கைகாட்ட, அவள் வேகமாய் விரைந்து விட்டாள், போகும் அவளை கூர் விழிகளோடு பார்த்தவன், ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டான்,…
சற்று நிமிடத்தில் வந்தவளை, அவன் ஏற இறங்க பார்க்க அவளோ,… “கிளம்பலாம்” என்றாள் சிறு குரலில்,… எழுந்தவன் காரை நோக்கி நடக்க, அவள் அவனை பின்தொடர்ந்தாள்,…
காரில் ஏறி அமர்ந்தவளுக்கு கார் புறப்பட்டது கூட புத்தியில் பதியவில்லை, டாக்டர் கூறியதை பற்றி தான் சிந்தித்து கொண்டு வந்தாள்,… “பேசண்ட் கருணாக்கு தலையில பலமா அடிப்பட்டத்துல ரத்தம் உறஞ்சு போய் பிரைன்ல பிளட் க்ளாட் ஆகிருக்கு, சர்ஜரி மூலமா தான் கிளாட்டை சரி பண்ண முடியும், அவர் ஹெல்த் வீக்கா இருக்கனால மினிமம் ஒன் மந்த் அப்புறம் தான் சர்ஜரி பண்ண முடியும், கொஞ்ச நாள் பெட் ரெஸ்ட்ல இருந்தா அவர் முழுசா க்யூர் ஆகிடுவாரு” என்று கூறியிருந்தார் மருத்துவர்,…
கருணாவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்ததும் தான் மனம் லேசானது அவளுக்கு, ஆனால் அவன் வந்தால் அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்பதை பற்றியே சிந்தித்து கொண்டு வந்தவளை, நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்தபடி வந்த ரிஷி,… “என்ன நித்து ஃபீலிங்ஸா லவ்வரை நினைச்சு” என்றான்,…
வரும் போதிலிருந்தே தன்னை சீண்டி கொண்டே வந்தவனை எரிச்சலுடன் திரும்பி பார்த்தவள்,…. “ஆமா ஃபீலிங் தான், அதுக்கு இப்போ என்ன பண்ண போறீங்க” என்றாள் சிறுகோபத்துடன்,…
“இப்படி ஃபீல் பண்ணுறதுக்கு பதிலா அவன் கூடவே போய் இருந்து சேவை செய்ய வேண்டியது தானே” என்றான் இவனும் அடக்கப்பட்ட கோபத்துடன்,…
“ரொம்ப கரெக்ட், வண்டியை நிறுத்துங்க நான் போயிடுறேன்” அவள் சும்மா ஒரு பேச்சிற்க்கு தான் சொன்னாள், அவனோ சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டு,… “இறங்குடி” என்று உறுமினான்,…
அவளுக்கும் ரோஷம் வரவே, அவனை மூக்கு விடைக்க முறைத்துவிட்டு இறங்கி நடையை கட்டினாள், அந்த நேரம் பார்த்து அவன் போனும் வேறு ஒலிக்க, திரையில் வந்த நண்பனின் பெயரை பார்த்துவிட்டு,… “சொல்லுடா” என்றான் அழைப்பை ஏற்று..
“எங்கடா இருக்க, பிஸியா?” வருணேஷ் கேட்க,… “பிஸியெல்லாம் இல்ல, வெளிய இருக்கேன்”என்றான்,..
“எங்கே” அவன் வழக்கமாக கேட்பது போல் கேட்க,… “ம்ம்… உன் தங்கச்சு அவ லவ்வரை பார்க்கனும்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் நக்கலாய்,…..
“ரிஷி இப்போ நீ என்ன சொன்ன?” அவன் கூறியதை நம்ப இயலவில்லை வருணேஷால், தன் காதில் தான் தவறாக எதுவும் விழுந்திவிட்டதா என்ற உந்துதலில் மீண்டும் வினவ, மிக தெளிவாக மீண்டும் அதையே கூறினான் ரிஷி,…
“ஏன்டா அறிவுகெட்டவனே என்னடா பண்ணிக்கிட்டு இருக்க நீ, சுயநினைவுல தான் இருக்கியாடா,” அவன் ஆக்ரோஷமாக,… அவன் சொல்லை காதில் வாங்காதவன் காரை விட்டிறங்கிய மனைவியை காணாமல், ரியர் மிரர் வழியாக தென்படுகிறாளா என பார்க்க அவளோ அவன் விழிகளில் படவில்லை,..
“அப்புறம் பேசலாம் மச்சான்” என இணைப்பை துண்டித்தவன் காரை விட்டு இறங்கினான், சுற்றும் முற்றும் பார்த்தவன்… ‘இந்த குட்டச்சி தொல்லை தாங்க முடியல, எங்கே போய் தொலைஞ்சா’ என்றவாறு நெற்றியை நீவியவன், கார் எந்த பக்கத்திலிருந்த வந்ததோ அந்த பக்கமாக நடந்தான், சற்று தொலைவிலிருந்த சந்து பகுதியில் அவள் நின்று கொண்டிருப்பதை கண்டு வேகமாக அவளருகில் வந்தவன்,.. “இங்க என்னடி பண்ணிக்கிட்டு இருக்க” அவள் புஜத்தை தன் பக்கம் இழுத்து கடிந்து கொண்டு வினவ,… “இந்த அக்கா மல்லிகை பூ வித்துட்டு இருந்தாங்க, உங்களுக்கு பிடிக்குமேன்னு” என்று கூறி இழுத்து நிறுத்தியவள் பூ விற்பவள் தங்களை பார்த்து கொண்டிருப்பது கண்டு,… “கைல ஐம்பது ரூபா இருக்கா” என்றாள்,…
அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தவன், தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து நீட்ட, அதனை வாங்கி பூக்கார பெண்ணிடம் கொடுத்தவள்…. “போலாமா” என்றாள் அவனது பார்வையில் கொஞ்சம் தடுமாறியபடி,……
“ம்ம்ம்” என்ற முணங்களுடன் அவள் கரம் பிடித்து அழைத்துக் கொண்டு கார் வந்து சேர்ந்தவன், காரை கிளப்பாமல் அவளையே இமை விலக்காமல் பார்க்க,…. அவன் பார்வை தந்த இன்ப அவஸ்தையில் நெளிந்தவள்,… “கிளம்பலாமா” என்றாள் மெலிதான குரலில்…
“எங்கே” அவன் ஒரு மாதிரி குரலில் வினவ,.. “வீட்டுக்கு தான்” அவள் கையில் இருந்த மல்லிகை பூவை பார்த்து விட்டு அவளையும் பார்த்தவன், இதழில் மந்தகாச புன்னகையுடன்,… “கிளம்பலாமே” என்றுவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்,….
இருவரும் வீட்டிற்க்கு வந்து சேர்ந்த போது மணி மாலை ஏழு, தர்மதுரை வீட்டு கார்டனில் அமர்ந்திருக்க, அவரிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வந்தவன், மனைவியின் பின்னால் உள்நுழைந்தான், செவ்வந்தி அவர் அறையில் இருந்தார் போல், இவர்கள் வரும்போது கண்ணில் படவில்லை…
மனைவியை தள்ளிக் கொண்டு அறைக்கு வந்தவன், அவளுடன் மெத்தையில் விழ, அங்கு அவர்களுக்குள் அழகான காதல் சங்கமம் ஒன்று நிகழ்ந்தேறியது,…. அவள் வாங்கி வந்த மலராத மல்லிகை பூ, இப்போது கசக்கி நார்நாராய் கிடந்தது,….
“நித்து எவ்வளவு முறை உன்கூட ஒன்னு சேர்ந்தாலும் எனக்கு இது போதாது போதாதுன்னே தோணுதே, ஒவ்வொரு முறை நான் கைளாலும் போது புதுசாவே தெரியிர, ஏன் நித்து” என்றான்,… இப்படி கேட்டால் அவளுக்கு என்ன தெரியும், அவன் கேட்டதற்க்கு பதில் தெரியாமல் அவள் மலங்க மலங்க விழிக்க, அந்த பார்வையிலும் மயங்கியவன்,… “நித்து,… ஏன் ஏன்டி உன்னை பார்க்கும் போது மட்டும் எனக்கு என்னென்னமோ ஆகுது, உன் கிட்ட என் கண்ட்ரோல் மொத்தத்தையும் இழந்துடுறேன், நீ என்னை விட்டு போனா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன், உனக்கெப்படி நித்து என் நியாபகமெல்லாம் உனக்கு வருமா, இல்லனா மொத்தமா மறந்துடுவியா என்னை” அவள் கன்னத்தை வருடிக் கொண்டே வினவினான்,…
“மித்து ப்ளீஸ்,… ஏன் திரும்ப திரும்ப இதையே கேட்டு சாகடிக்கிறீங்க, என்னை விடுங்க” என்றவள், அவன் பிடியிலிருந்து விலக பார்க்க, தன் கரங்களால் அவளை இன்னும் நெருக்கமாக தன் பக்கம் இழுத்தவன்,.. “என்ன சொன்ன, என்ன சொன்ன நீ” என்றான் ஆச்சரியமான பார்வையில்,….
“என்ன” அவள் புரியாமல் பார்க்க… “என்னை எப்படியோ கூப்பிட்டியே, ப்ளீஸ் நித்து மறுபடியும் கூப்பிடேன்” அவன் விழிகளில் தெரிந்த ஏக்கமும் மயக்கமும், அவளையும் என்னவோ செய்ய, விழிகளை தாழ்த்திக் கொண்டாள் நாணப்புன்னகையுடன்…
அவனது முழு பெயரும் தெரிந்தவுடன், அவனது பெயரை வைத்து சில நிமிடங்கள் ஆராய்ச்சி செய்தவள், தன் மனதிலேயே சொல்லி பார்த்துக் கொண்டாள், ரிஷி என்ற பெயரை விட மித்ரன் என்ற பெயர் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கவே, மித்ரனை மித்து என சுருக்கி வாய்விட்டே சொல்லி பார்த்தாள், நன்றாக இருந்தது, இத்தனை நாட்கள் தனக்கு தானே சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு, தற்சமயம் தெரியாமல் வாய் வழியாக அவன் முன்னிலையிலும் வந்து விட்டது, அவன் முன்னே கூறவும் ஒரு மாதிரியாக இருக்க, அவன் திரும்ப திரும்ப கூற சொல்லி கேட்டும் அவள் மாட்டேன் என்று மறுத்துக் கொண்டு வந்தவள், அவன் செல்லமாக கோபித்து கொள்ளவும், அதற்கு மேலும் அவனை வாட்டாமல் “மித்து” என்றழைத்தாள் உருக்கமாக,….
அவள் வாய் மொழியாக தனக்காக அவள் வைத்திருக்கும் பிரத்யேகமான பெயரை கேட்டவனுக்கு ஏனென்று தெரியாமல் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி ஏற்பட்டது, அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் பொருட்டாய் மீண்டும் அவளை எடுத்துக் கொண்டான்,…
*****
“சார்” என்றபடி ரிஷியின் முன்பு வந்து நின்றான் கார்த்திக்,… “சொல்லு கார்த்திக்” ரிஷி ஏதோ ஒரு கோப்பை சீரியஸாக நோட்டம்விட்டபடி வினவினான்…..
“சார் ஒரு மர்டர்” குரலில் எந்த வித படபடப்பும் இல்லாமல் கூறினான் கார்த்திக், அவனுக்கு பல அனுபவம் இருப்பது அதில் மறைந்திருந்தது,…
கேள்வியாய் ரிஷி அவனை பார்க்க, அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவன்…. கடகடவென்று விளக்க, நெற்றியில் விரல் தட்டி ஏதோ யோசித்தவன்,…. “கிளம்பு” தலையில் தொப்பியை மிடுக்காக மாட்டிக் கொண்டு விறுவிறுவென்ற நடையுடன் வெளியேறியவன், தனது காவல் துறை வண்டியில் ஏறிக்கொண்டான்,…
அவன் வருவதை கணநேரத்தில் அறிந்து கொன்ட ராமையாவும், அவசரமாக வண்டியில் வந்து ஏறிக்கொண்டவர், வண்டியை உயிர்பித்தார்….
பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் தாங்கள் போக வேண்டிய இடத்தை பற்றி கூற, சற்று நிமிடத்திலெல்லாம் சேர வேண்டிய இடம் வந்து சேர்ந்திருந்தனர்….
கிரைம் ஸ்பாட்டில் ஏற்கனவே மீடியா காரர்களும் போலீஸ்காரர்களும் திரண்டிருக்க, ஆம்புலன்ஸ் தன் நீண்ட ஒலியை ஏற்படுத்தியவாறு அப்போது தான் வந்து சேர்ந்திருந்தது,…. ரிஷியை சூழ வந்த மீடியா காரர்களை காவலர்கள் அவனை நெருங்க விடாமல் பின்னால் நகர்த்த முயற்சி செய்ய, தானே அவர்களின் முன் வந்தவன்,… “கைஸ் இப்போ தானே வந்திருக்கேன், என்ன கேஸ்னு கூட தெரியாம உங்க குவஸ்டீன்க்கு ஆன்சர் பண்ணுறது ரொம்ப கஷ்டம் ஸோ” அவன் தன்மையாக பேச, அவன் சொல்லின் அர்த்தம் புரிந்த அவர்களே விலகி சென்றுவிட்டனர்,…
மரம், புதர், செடி கொடிகள் நிறைந்த காட்டுபகுதி போல் காணப்பட்ட அவ்விடத்தில் தான் ஒரு பெண்ணின் சடலம் துணியால் போர்த்தியபடி கிடந்தது,….
தன் உயரதிகாரியை கண்டதும் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் வரை மரியாதை நிமிர்த்தமாக ரிஷிக்கு சல்யூட் அடித்துவிட்டு நிற்க, சிறு தலையசைப்பில் அதனை ஏற்றவன், சைகையால் சடலத்தின் முகத்திலிருந்த துணியை விலக்க சொல்ல, ஒரு காவலர் விலக்கினார்,…
அப்பெண்ணின் முகம் வீங்கி, மூக்கிலும் இதழோரத்திலும் ரத்தம் கசிந்து காய்ந்து போய் வாய் திறந்த நிலையில் இறந்து கிடந்தாள், “உடம்புல ஒட்டு துணி இல்ல சார், உடலெல்லாம் அதிகப்படியான காயம், கண்டிப்பா கொலை தான் சார், எங்கேயோ வச்சு கொலை செஞ்சிட்டு இங்க கொண்டு வந்து போற்றுக்காங்க” என்றார் இன்ஸ்பெக்டர்,….
“பாடியை யார் முதல்ல பார்த்தது” வழக்கமாக எழுப்பும் கேள்வியை ரிஷி முன்வைக்க,…. “அவரை அழைச்சிட்டு வாங்கயா” என்றதும் ஒருவர் வந்து நின்றார் பவ்யமாக…
“வணக்கம் சார்” என கரங்களை கட்டிக் கொண்டு மரியாதையுடன் வந்து நிற்க,… “ம்ம்ம்… நீங்க தான் முதல்ல பார்த்தீங்களா?” என்றான்…
“ஆமா சார்,… என் வீடு இங்க பக்கத்துல தான் இருக்கு, ஒதுங்குறதுக்காக இந்த பக்கம் வருவேன், இன்னைக்கு அதே போல வந்த போது தான் இந்த சடலத்தை பார்த்தேன், உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்துட்டேன்” என்றார்,….
அவரை தன் கூர் விழிகளால் அளவெடுத்தவன்,.. “உங்க பேர்” என கேட்க,… “பாண்டியன்னுங்க சார்” என்றார்
“யாராவது சந்தேக படுற மாதிரி பார்த்தீங்களா?”
“இல்ல சார் அப்படி யாரையும் பார்க்கல” அவர் கூறவும்,… “சரி ஓகே உங்க நம்பரை கொடுத்துட்டு நீங்க போலாம், தேவை பட்டா கூப்பிட்டு அனுப்புறோம்” என்று கிட்டத்தட்ட ஆணையிட்டவன், கார்த்திக்கிடம் திரும்பி “பாடியை போஸ்ட்மார்ட்டத்திற்க்கு அனுப்புங்க, க்விக்கா எனக்கு ரிப்போர்ட்ஸ் வந்தாகனும், அண்ட் இந்த பொண்ணு யார் என்னங்கிற தகவலும் எனக்கு உடனடியா வந்து சேரனும்” என்று அதிகார குரலில் கூறியவன், வேக நடையுடன் தனது வண்டியை நோக்கி நடந்தான்,…
மூன்று மணி நேரத்திற்கு பிறகு,….
இறந்து போன பெண்ணின் சடலத்தை உடற்கூறாய்வு செய்த மருத்துவரை பர்சனலாக அழைத்து பேசினான் ரிஷி, ரிப்போர்ட்ஸ் வரும் வரைக்கும் அவனால் பொறுமை காக்க இயலவில்லை, ஆகவே நேரடியாகவே அவரிடம் அந்த பெண்ணை பற்றி விசாரிக்க,… அவரோ… “சார் பாதிக்கபட்ட பெண் இரண்டு நாட்களா தொடர்ந்து கொடூரமா ரேப் பண்ண பட்டிருக்காங்க, பிளட் நெறைய லாஸ் ஆகிருக்கு, உடல்ல காயம் இல்லாத இடம்னு எதுவுமே இல்லை, பெண்ணுறுப்பு சிதைஞ்சு போயிருக்கு” அவர் கூறியதை கேட்க கேட்க உடல் இறுகியது, ரத்தமெல்லாம் கொதித்தது, அவனுக்கு..
“அந்த நரக வேதனையிலும் பெண் கழுத்தை நெறிச்சு சாகடிக்க பட்டிருக்கா, அண்ட் சார்” என அவர் இன்னும் ஏதோ கூற வர,… “நீங்க ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ணி அனுப்பி விடுங்க” என போனை அணைத்து விட்டான் அதற்கு மேலும் கேட்க முடியாமல்,….
அதே நேரம்… “சார்” என்றபடி அனுமதி கேட்டு விட்டு உள்ளே நுழைந்தான் கார்த்திக்,…
ரிஷியின் பார்வையே அவன் எதை எதிர்பார்க்கிறான் என்பதை புரிய வைக்க கார்த்திக்கும் வேகமாக கூறினான் அப்பெண் யார் என்ன என்பதை பற்றி….
“சார் பொண்ணு பேரு அன்னம், அம்மா அப்பா இல்ல, அவ அப்பா கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தான் ஒரு விபத்துல இறந்திருக்காரு, அமைச்சர் சந்தனபெருமான் வீட்ல தான் அன்னத்தோட தந்தை வடிவுக்கரசன் ட்ரைவரா வேலை பார்த்திருக்கார், அவர் விபத்துல தவறி போனதுலருந்து அவர் பொண்ணு அன்னம் அங்க தான் வேலை பார்த்துட்டு இருந்திருக்கு, அவர் வீட்டு பக்கத்திலயே சின்ன குடிசை மாதிரி போட்டு அந்த பொண்ணு தங்கிட்டு இருந்திருக்கு, அந்த பொண்ணு அப்பா அம்மா இல்லாததுனால யாரும் எதுவும் கேட்டு வரல சார், புகார் கொடுக்கவும் ஒருத்தரும் இல்ல” என அவன் இறந்து போன பெண்ணை பற்றிய அனைத்து தகவல்களையும் கூற கூற, ரிஷியின் தாடை இறுகி கொண்டே போனது,…
அவளது இந்நிலைக்கு காரணம் யாரென்று நொடியில் புரிந்து கொண்டவன், புறப்பட்டான் அமைச்சர் சந்தன பெருமாளின் வீட்டை நோக்கி,…
“சார்,… எதுக்காக சார் அமைச்சர் வீட்டுக்கு வண்டியை விட சொன்னீங்க” கொஞ்சம் படபப்புடன் கேட்டான் கார்த்திக்,…
“அவன் பையனை இழுத்து வர தான்” ரிஷியின் சினம் ஏறிய சொல்லில் தொண்டையில் எச்சில் விழுங்க பார்த்தவன்,… “சார் என்ன சொல்றீங்க, எந்த ஆதாரமும் இல்லாம எப்படி அமைச்சர் பையனை அரஸ்ட் பண்ண முடியும், அமைச்சர் சந்தன பெருமாளை பற்றி தான் நமக்கு தெரியுமே, ரொம்ப கோபக்காரர் அவர் பையனை வாரண்ட் இருந்தாளே அவர் அரஸ்ட் பண்ண விடமாட்டாரு இதுல அரஸ்ட் வாரண்ட் இல்லாம எப்படி அவர் வீட்டுக்குள்ள நுழையுறது” என்றான்..
அவனுக்கு பதில் அளிக்கவில்லை ரிஷி, மௌனத்தை கடைபிடித்தபடி இறுகிய முகத்துடன் வந்தவன், அமைச்சர் வீடு வந்ததும் காரை விட்டிறங்கி வேக நடையுடன் அவர் வீட்டினுள் சென்றான், காவலுக்கு நின்றவர்கள் கூட அவனது ஒற்றை அழுத்தமான பார்வையில், எதுவும் பேசாமல் வழி விட, வீட்டின் நடு முற்றத்தில் வந்து நின்றவனை, சோபாவில் ஒய்யாரமாய் அமர்ந்து மேகஸீன் பார்த்து கொண்டிருந்த சந்தனபெருமாள் கண்டு கொண்டார்…
“அட எஸ் பி சார் வாங்க வாங்க” முதலில் அவனது திடீர் வருகையை கண்டு கொஞ்சம் திகைத்தவர், பின் ஏளன பார்வையை வீசியவாறு… “என்ன இந்த பக்கம் காத்து வீசுது, வாங்க சார் வந்து உட்காருங்க” என்றார் ஒரு மாதிரி சிரிப்பில்,…
“உங்க உபசரிப்புக்கு ரொம்ப நன்றி சார், ஆனா நான் உங்க வீட்ல உட்கார்ந்து விருந்து சாப்பிட வரல, உங்க பையனை கைது பண்ண வந்திருக்கேன்” என்றான் மிடுக்கான தோரணையில்….
சினம் தலைக்கேற இருக்கையை விட்டு கோபமாக எழுந்தவர்,… “ஏய் எங்க வந்து என்ன பேசிக்கிட்டு இருகேங்கிறது புரியுதா” அவர் எகிற,… “புரியாம உங்க வீட்டு வாசலை ஏறி வரல, எங்கே உங்க பையன், வெளியே வர சொல்லுங்க,” என்றான் குரலை உயர்த்தி..
“என்ன காரணத்துக்காக அரஸ்ட் பண்ண வந்திருக்க, என் பையன் என்ன தப்பு பண்ணான்,” அவர் கேட்க,… “ஒரு சின்ன பொண்ணை பலாத்காரம் பண்ணி கொலை பண்ணிருக்கான்” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்,..
அவர் அவன் கூறியதை கேட்டு கொஞ்சமும் வருத்தம் கொள்ளாமல், அவர் மகனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே “ஆதாரம் இருக்கா? யாராவது கம்ப்லைண்ட் கொடுத்தாங்களா? அதுக்கு முன்னாடி அரஸ்ட் வாரண்ட் இருக்கா?” என்றார் எள்ளலான குரலில்,…
“உங்க வீட்ல வேலை செய்த அன்னம் என்கிற பொண்ணை தான் உங்க பையன் ரேப் பண்ணி கொலை செய்திருக்கான், யாரும் கம்பலைன்ட் கொடுக்கல, பட் ஏகப்பட்ட ஆதாரம் இருக்கு, இதோ அரஸ்ட் வாரண்ட்” என்றவாறு தன் பாக்கெட்டிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து காட்டியன், அவர் அதிர்ந்து நின்ற நேரம் விறுவிறுவென்று ஓரறையை நோக்கி நடந்தான்,..
அமைச்சரின் மகன் தன்னை கண்டதும் பம்மிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டத்தை வந்த மாத்திரத்தில் கண்டு கொண்டான் ரிஷி, உள்ளே நுழைந்து அவன் பின்னங்கழுத்தை தன் விரிந்த கரத்தினால் பிடித்து இழுத்து வந்தவன், சந்தனப்பெருமாள் தடுக்க தடுக்க வெளியே இழுத்து சென்று அவன் ஜீப்பினுள் தள்ளினான்..
அன்று ராமையா வரவில்லை கார்த்திக் தான் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தான், இத்தனை நேரம் அமைச்சருக்கும் ரிஷிக்கும் நடந்த வாக்குவாதத்தை கண்டு படபடக்கும் மனதுடன் நின்றவன், அவர் மகனை அவர் தடுக்க தடுக்க இழுத்து வந்ததில் கொஞ்சமல்ல அதிகமாகவே மிரண்டு போனான்,…
“சார்,… அரஸ்ட் வாரண்ட் எப்போ வாங்குனீங்க” தன் முதல் சந்தேகத்தை முதலில் கேட்டான் ரோட்டை பார்த்து வண்டியை செலுத்திக் கொண்டு வந்த கார்த்திக்,….
“இது அரஸ்ட் வாரண்ட் இல்ல கார்த்திக், வெறும் வெத்து பேப்பர்” என அக்கடித்ததை எடுத்து வெளியே பறக்க விட்டவன், பின்னிருக்கையில் வண்டியின் கம்பியோடு கரத்தை சேர்த்தணைத்து கையில் விளங்கோடு அமர்ந்திருந்தவனை வெறி கொண்ட பார்வையுடன் பார்த்து கூறினான்….
“என்ன சார் சொல்றீங்க, இது அமைச்சருக்கு தெரிஞ்சா பெரிய பிரட்சனையாகிடுமே, இந்நேரம் பெரிய பெரிய தலைகளை எல்லாம் உருட்டிருப்பாரு, ஸ்டேஷன் கொண்டு போறதுக்கு முன்னாடியே இவனை வீட்ல கொண்டு போய் விட சொல்லி போன் மேல போன் வரும்” என்றான்…
“அதான் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்” என்றவன், கார்த்திக்கின் போனையும் வாங்கி தன் கைப்படவே சுவிட்ச் ஆஃப் செய்தான்…
“நீ ரொம்ப தப்பு பண்ணுற, என் அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா உன்னை உரு தெரியாம அழிச்சிடுவாரு, ஒழுங்கு மரியாதையா இப்போதே என்னை விட்டுட்டன்னா உயிராவது மிஞ்சும்” பின்னே இருந்தவன், தவறு செய்த சிறு சுணக்கம் கூட இல்லாமல், குரலை உயர்த்தி பேச, கோபத்தை அடக்க முடியாமல் எக்கி அவன் முகத்திலேயே ஒரு குத்து விட்டான் தன் முழங்கையை மடக்கி,…
ரிஷியின் ஒரே குத்தலில் குத்து வாங்கிய விவேக்கின் மூக்கிலிருந்து ரத்தம் பொழபொழவென்று வெளியேற, அத்தோடு வாய் மூடியவனின் முகத்தில் இப்போது கொஞ்சம் பயம் பரவியிருந்தது….
“சார் இப்போ எங்கே போக?” கார்த்திக் கேட்க, ரிஷி போக வேண்டிய இடத்தை பற்றி கூறினான், பிறகு… “சார் இவன் தான் அந்த பொண்ணு சாவுக்கு காரணம்னு எப்படி உறுதியா சொல்றீங்க” என்றான் சிறு குரலில்…
“நீயே சொல்லு கார்த்திக், உனக்கு என்ன தோணுது, இவன் பண்ணிருக்க மாட்டான்னு தோணுதா?” கார்த்திக் தன்னிடம் கேட்ட கேள்வியை ரிஷி அவனுக்கே திருப்பி விட, இதை எதிர்பார்க்காத கார்த்திக்,… கொஞ்சம் படபடப்புடன். “சார் அது, ஏற்கனவே இவன் ஏகப்பட்ட குற்றம் பண்ணிருக்கான், பல பெண்களை கற்பழித்து நாசம் செய்திருக்கான், ஆதாரம் இருந்தும் இவனை கைது செய்ய முடியல, அரஸ்ட் வாரண்ட் கிடைக்காது, காரணம் இவன் அப்பா, அவரை மீறி நம்மளால எதுவும் பண்ண முடியல இதுவரைக்கும்” என்றவன் தன் உரையை முடிக்க,… “ஸோ இவனை பத்தி தெரிஞ்சி தான் நீ அப்படி ஒரு கேள்வியை என்கிட்ட கேட்டிருக்க ம்ம்ம்” என்றான் வெட்டும் பார்வையில்,…
“சார் சார் கோபப்படாதீங்க, இவன் குற்றம் செய்தவனா இருந்தாலும் இந்த குற்றத்தை செய்தவனும் இவன் தானா அப்டின்ற சந்தேகத்துல கேட்டேன் சார்” என்றான் சமாளிக்கும் விதமாய்,…
“ஊர்ல போற வர பெண்களையே விட்டு வைக்காதவன், தன் வீட்ல இருக்கிற பெண்ணை விட்டு வைப்பானா என்ன?” என்றவன்,… “டேய் நாதாரி சொல்லுடா வெறும் பதினாறு வயதேயான பொண்ணை அப்படி பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்தது” என்றான் அகங்காரமான குரலில்,…
“நான்… எதுவும்… “என கூற வந்தவன், ரிஷியின் அனல் கக்கும் பார்வையில் பயந்து நடுங்கியவனாய்,… “மற்ற பொண்ணுங்களை போல அவளை யூஸ் பண்ணிட்டு விட்டுடலாம்னு தான் நினைச்சேன், ஆனா ரொம்ப முரண்டு பிடிச்சா, அதனால தான் கொல்ல வேண்டியதா போச்சு” என்றான் முகத்தில் கொஞ்சமும் வருத்தம் இல்லாமல்,…
ரிஷிக்கு அவன் பேச பேச கொலைவெறியே வந்தது, எவ்வளவு அசால்ட்டாக கூறுகிறான், ரத்தமெல்லாம் கொதிக்க பற்களை கடித்து தன் கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டு வந்தவன், தாங்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்ததும், கண்களில் ஒரு வித கொடூரத்துடன் காரிலிருந்து இறங்கிவன், அந்த காமுகனின் கை லாக்கை கழட்டி தரதரவென்று வெளியே இழுத்து போட்டான்,…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
+1

