Loading

அத்தியாயம் – 9

கணவன் மற்றும் தமையனுடன் ஒன்றாக அமர்ந்து உணவுண்டு முடித்தாள் நித்யா, இடையிடையே “மாப்பிள்ளைக்கு அதை பறிமாறு ஸ்ரீ, மாப்பிள்ளைக்கு இதை பரிமாறு ஸ்ரீ” என குடைச்சல் கொடுத்த அன்னையை முறைத்ததோடு சரி, வாய் திறந்து எதுவும் அதிகபிரசங்கி தனமாக பேசிவிடவில்லை, எல்லாம் அண்ணன் மீதுள்ள பயத்தில் தான், ஏற்கனவே திட்டுவாங்கியவள் மேலும் ஏதாவது திட்டிவிடுவானோ என்று பயந்து வாய் திறக்கவே இல்லை, அன்னையிடம் கூட ஒவ்வொரு வார்த்தை பேசினாள், ஆனால் வருணேஷிடம் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசிடவில்லை, சிறு வயதிலிருந்தே அன்னையை விட தமையனின் மேல் பிணைப்பு அதிகம், தாய் பல நேரம் வேலையில் இருப்பதால், அவள் தமையனிடம் தான் கலகலப்பாக பேசுவாள் பழகுவாள், இருவருக்குமிடையில் ஏழு வயது வித்தியாசம் என்றாலும் தோழர்களை போல தான் விளையாட்டு தனத்துடன் இருப்பார்கள், தற்போது வருணேஷிற்கும் தங்கையின் பாரா முகம் உள்ளுக்குள் வலித்தாலும், அவள் ரிஷியிடமே அவ்வளவு துணிச்சலுடன் கருணாவை பற்றி பேசியது கோபத்தை தந்தமையால் அவனும் வழிய போய் பேசாமலே இருந்துவிட்டான்,….

“மாப்பிளை நீங்க வேணும்னா வீட்டை கொஞ்சம் பாருங்களேன், ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு இருக்கிறதுக்கு அப்படியே நடந்தா வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும்ல, ஸ்ரீமா மாப்பிள்ளையை கூட்டிட்டு போமா” என்றார் மகளிடம்..,

‘ம்ம்… பெரிய அரண்மனை வீடு இதை சுத்தி காட்ட, நான் கைடா போகனுமா, இந்த அம்மாக்கு அறிவே இல்ல’ என்ற புலம்பலுடன் நித்யா நிற்க,… “சரிடா எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு அதை முடிச்சிட்டு நான் வந்திடுறேன், நீ எங்க வீட்டு அரண்மனையை சுத்தி பார்த்துட்டு இரு, உன் பொண்டாட்டியை கைடா வச்சிகோ” என்று கூறி சென்ற வருணேஷை திகைப்புடன் பார்த்தாள் நித்யா தான் மனதில் நினைத்ததை போலவே தன்னை வழிகாட்டியாக்கிவிட்டானே என்ற ஆச்சரியத்திலும் கடுப்பிலும்…

அனைவரும் சென்றதும் ரிஷியும் நித்யாவும் மட்டும் தனித்து நிற்க, தன்னை லேசர் பார்வையில் அளவிட்டபடி நின்றவனை கண்டு இன்றும் தடுமாறியவள்,.. அலைப்பாய்ந்த பார்வையுடன், “வா.. வாங்க” என கூறிவிட்டு முன் நடந்தாள்,….

நித்யாவின் வீட்டில் ஒரு சிறிய முற்றம், இரண்டு சின்ன சின்ன அறைகள், ஒரு சமையலறை, ஒரு குளியலறை, மேலே சிமெண்ட்சீட் போட்ட ஒரு அறை அவ்வளவே, இதில் சுற்றி காட்ட என்ன இருக்கு என்று அவளுக்கும் தெரியவில்லை, பேருக்கு, “இது ரூம், இது இன்னொரு ரூம், இது தான் ஹால், இது பாத்ரூம், அது கிச்சன், மேலே ஒரு சீட் போட்ட ரூம் இருக்கு அவ்வளவு தான்” என்று கூறியவளை குறுகுறுவென்ற விழிகளுடன் பார்த்தான்,….

“என்ன? எதுக்கு அப்படி பார்க்கிறீங்க?” அவள் தடுமாறியபடி வினவ,… “இதுல உன்னோட ரூம் எது?” என்றான்…

“ஏன் எதுக்கு கேட்கிறீங்க” அவள் ஒருவேகத்துடன் கேட்க,… “பொண்டாட்டி ரூமை பார்க்கணும்னு புருஷனுக்கு ஆசை இருக்காதா?” என்றவனை சிறிது நேரம் நின்று பார்த்தவள், எதுவும் பேச விரும்பாமல் “வாங்க” என்றவாறு முன் நடந்தாள்,…

அவளை பின்தொடர்ந்து வந்தவன், அவள் நுழைந்த அறைக்குள் நுழைந்தான், அவன் அறையில் கால் பங்கு தான் இருக்கும் இவளின் அறை, ஆனால் அனைத்தும் அழகாக செட் பண்ணியிருந்தது, அறையை சுற்றி நோட்டமிட்டவனின் பார்வை, அறையின் மூலையில் போடப்பட்டிருந்த மரடேபிளின் மீதுருந்த ஒரு போட்டோவின் மீது வந்து நின்றது,..

அதை நெருங்கியவன், அதனை கையில் எடுத்து பார்த்தான், அவளது மனையாள் சிறு வயதில் எடுத்த புகைப்படம் தான் அது, நான்கைந்து வயதில் எடுத்தது போல் இருந்தது, பார்த்தவுடனே கண்டுபிடித்து விட்டான் நித்யா தான் இதுவென்று, இரட்டை ஜடை தோளில் தொங்க கவுன் ஒன்று அணிந்திருந்து பற்கள் தெரிய சிரித்து கொண்டிருந்தாள், அதை பார்த்ததும் அவனது இதழிலும் புன்னகை அரும்பியது,…

“அது ஒன்னும் நான் இல்லை” போட்டோவை வெகு நிமிடங்களாகவே ரசித்து கொண்டிருந்தவனை விழிகள் சுருங்க பார்த்தவளுக்கு ஒரு மாதிரி இருக்க, சட்டென்று பொய்யொன்றை எடுத்து விட்டாள்,…

“ஹ்ம்ம்… தெரியுது” என்று அதையும் நம்பியது போல் கூறியவன், அறையை மீண்டும் அலச, அவனது முன்னிலையில் வந்து நின்றவள், “பார்த்தாச்சுன்னா கிளம்புங்க”என்றாள்,…

“நான் இன்னும் பார்க்கல நித்து”

“சரி நீங்க நல்லா ஆர அமர பார்த்துட்டு வாங்க, நான் கிளம்புறேன்” என போக முற்பட்டவளின் கரம் பிடித்து இழுத்து அவள் முதுகோடு சேர்த்தணைத்தவன்,… “உன் வீட்ல இருக்கோம்ங்கிறதுகாக நான் அடக்கி வாசிப்பேன்னு ரொம்ப துள்ளாத” அவள் காதுமடலில் தன் உதடுகளால் உரசியபடி கூற,… “இல்ல…நான்” என்றவளுக்கு பேச்சே வரவில்லை, அவனது ஸ்பரிசத்தில் சிலிர்த்து போய் நின்றாள்,…

“நித்து,…. ஏன்டி மல்லிகைபூ வைக்கல” மல்லிகைப்பூவின் நறுமணத்தோடு அவளின் வாசமும் சேர்ந்து வேறு விதமான ஒரு வகை போதையை தரும் அவனுக்கு, அவளது அழகையும் கூட்டியிருக்கும், இப்போது அதை காணாமல் ஏங்கி போய் அவளிடமே கேட்டுவிட,..”அதான் காலையிலேயே கசக்கி போட்டுடீங்களே, மறுபடியும் நான் பூவுக்கு எங்க போக, பாட்டி கூட கேட்டாங்க பூ எங்கே வக்கலயான்னு, அவங்கள சமாளிக்கவே அவ்வளவு கஷ்டமா போச்சு, எல்லாம் உங்களால தான்” என்று சிணுங்கி கொண்டு கூறியவளின் கழுத்தில் கண்களில் சிரிப்புடன் முத்தம் வைத்தவன்,… “ஏன் சொல்ல வேண்டியது தானே” என்றான்,….

“கொஞ்சம் தள்ளுறீங்களா? கதவு வேற திறந்திருக்கு” என்று எங்கே யாரும் வந்துவிடுவார்களோ என்ற பதட்டத்தில், ஆங்காங்கே வெளியே நோட்டமிட்டவாரும், அவனை தள்ளிவிட்டு செல்ல முடியாத தவிப்பிலும் நின்று கூற,.. “கதவை லாக் பண்ணிடட்டுமா?” என்றான் தாபகுரலில்,…

“வேணாம் வேணாம்” அவன் பூட்டிவிட்டு என்ன செய்வான் என்று தான் அவளுக்கு தெரியுமே, அவர்கள் வீடென்றால் மேலறையில் தானே இருப்பார்கள் அதனால் ஒன்றும் பெரிதாக தெரியாது, இங்கு அவள் வீட்டில்  அவனுடன் இணைந்திருக்க ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது, கொஞ்சம் சத்தம் போட்டாலே வெளியே கேட்டுவிடுமே என்று பயந்தாள்,…

“சரி வேணாம்” என்றவன் அவளை தள்ளிக் கொண்டு போய் சுவரில் சாய்த்து நிற்க வைத்தான், கதவிற்கு பின்னால் நின்றனர் இருவரும், அறை பக்கம் வந்து பார்த்தால் கூட வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அறையினுள் யாருமில்லாததாய் தான் தோன்ற கூடும், அதை அறிந்து கதவையும் சாற்ற சங்கோஜபட்டுக் கொண்டு தான் இவ்விடத்திற்கு தள்ளிக் கொண்டு வந்திருந்தான் மனையாளை, அவனுக்கும் மாமியார் வீட்டில் மனைவியுடன் அறைக்குள் சென்று அடைந்து கொள்வது ஒரு மாதிரியாக தான் இருந்தது, வெளியே செந்தூரம் மட்டுமே இருக்க, அவரை தனியே விட்டு, தாங்கள் இருவரும் அறைக்குள் அடைந்து கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை, தங்களது வீடாக இருந்திருந்தால் அவன் இவ்வளவு பொறுமையாகவெல்லாம் இருந்திருக்க மாட்டான், அவள் மேல் ஒரே பாய்ச்சலோடு பாய்ந்திருப்பான், அவளது சிவந்து வெட்கிய முகம் அவனை அந்தளவிற்குள் செயலிழக்க வைத்திருக்கும், இப்போதும் தன்னுடைய தீண்டலால் உருகி போய் நின்றவளை ஆசை தீர ரசித்தான் சின்ன சின்ன முத்தங்களுடன் அவளை மேலும் சிவக்க வைத்துக் கொண்டிருந்தவனும் அவளுள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி கொண்ருந்த நேரம் சரியாக போன் ஒலித்தது,…

“எனக்கு எதிரியே இந்த போன் தான்” என்ற முணங்களுடன் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து பார்த்தவன், திரையில் கார்த்திக் என்ற பெயர் வரவும், மனைவியை விட்டு விலகி அழைப்பை ஏற்று காதில் வைத்தான், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரிஷிக்கு கீழ் பணிபுரிபவன், எந்த ஒரு விசாரணை, கேஸ் என்றாலும் கார்த்திக் தான் ரிஷியின் உடன் செல்வான், ரிஷியை பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவனும் கூட, அவன் கோபத்தில் இருக்கிறானா? நல்ல மனநிலையில் இருக்கிறானா? என்று அவனது முகத்தை கணித்தே தெரிந்து கொண்டு, ஒவ்வொன்றையும் பார்த்து பக்குவமாய் நடப்பவன், தான் விடுப்பிலிருக்கிறோம் என தெரிந்தும் அவன் போன் செய்கிறான் என்றால் ஏதாவது முக்கியமான விஷயமாக தான் இருக்கும் என உடனே அழைப்பை ஏற்று பேசினான் ரிஷி..

அந்த பக்கம் கார்த்திக் என்ன பேசினானோ ரிஷியின் முகம் இறுகியது,… “நான் உடனே வரேன்” என்ற சொற்களோடு இணைப்பை துண்டித்தவன், வேக வேகமாக வெளியேறினான், என்னவானது என்பது புரியாமல் தன்னை பின்தொடர்ந்து வந்த மனையாளை நிதானமாக நின்று திரும்பி பார்த்தவன்,… “ஈவினிங் வந்து உன்னை அழைச்சிட்டு போறேன் நித்து பை” என பறக்கும் முத்தம் ஒன்றை அவளுக்கு கொடுத்துவிட்டு, விறுவிறுவென்று தன் காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டான்,….. அவனது செயலில் கவரப்பட்டவளின் இதழில் நாணப்புன்னகை,…

“என்னடி மாப்பிளை எங்கே போறாரு” தன் பின்னால் கேட்ட தாயின் குரலில் தன் முகத்தை மாற்றிக் கொண்டவள்,… “ஏதோ முக்கியமான வேலையாம்மா” என்பதோடு முடித்துக் கொண்டாள்,….

“அப்படியா சரி சரி, வா என்கூட”என்றவர், பாயை விரித்து அவளுடன் அமர்ந்தார், மகளிடம் அவள் வாழ்க்கையை பற்றி பேச வேண்டும் என மனம் உந்திக் கொண்டே இருந்தது, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தாயிற்று, அதனால் அவள் வாழ்க்கையில் எதுவும் குழறுபடி நடந்து விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது, மகள் வாழ்க்கை அந்த கருணாவால் பாழாகிவிட கூடாதே என்ற பயத்தில் தான் மகன் கூறிய தைரியத்தில் அவள் மறுக்க மறுக்க ரிஷியின் கையில் பிடித்து கொடுத்து விட்டார், அவளை கல்யாணம் பண்ணி கொடுத்து அனுப்பிய நாளிலிருந்தே அவர் மனம் தவியாய் தவித்து கொண்டிருந்தது, காலையில் மகளையும் மருமகனையும் ஒன்றாக சேர்த்து வைத்து பார்த்ததில் மனம் கொஞ்சம் திருப்தியடைந்தாலும், அவள் வாழ்க்கையை ஏற்று கொண்டாளா இல்லையா என்பதை அவள் மூலமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் தான் மகளை அழைத்து வந்து அமர வைத்து விசாரிக்க ஆரம்பித்தார்,…

“சொல்லுடி,… மாப்பிளை கூட நல்லபடியா தானே இருக்க” மீண்டும் மீண்டும் தாய் கேட்ட கேள்வியில் எரிச்சலுற்றவள்,… “இப்படி கேட்க உனக்கே ஓவரா தெரியலயாமா? நான் வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல கேட்காம எனக்கு கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டு இப்போ இப்படி ஒரு கேள்வியை வேறு வந்து கேட்கிற” என்றாள் கோபம் தலைகேற…

“நீ நல்லவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொலிருந்தா கூட, உன் அண்ணன் காரன் கிட்ட சண்டை போட்டு நான் உனக்கு அவன் கூட உன்னை சேர்த்து வச்சிருப்பேன், நீ எவனோ கொலை குத்தம் பண்ணுற ரவுடி பய கூட போறேன்னு சொல்லுற, பெத்தவ என்னால எப்படிடி அதை ஏத்துக்க முடியும்” என்றார் ஆதங்கமாய்,…

“சும்மா இதையே சொல்லாதமா? கருணா ரவுடி தான், அவன் சூழ்நிலை அவனை அப்படி மாத்திடுச்சு, எனக்காக அவன் அந்த ரவுடிசத்தை எல்லாம் விட்டுடுறேன்னு தான் சொன்னான், எல்லாத்தையும் பாடமா படிச்சேன் நான், நீயும் உன் மவனும் கேட்கவே இல்ல, உங்க ரெண்டு பேரையும் சாகுர வரைக்கும் நான் மன்னிக்கவே மாட்டேன்” என்றாள்,…

“மன்னிகாத, யாருக்கு வேணும் உன் மன்னிப்பு” பின்புறம் தமையனின் குரல் கேட்கவே, திகைத்து போய் திரும்பினாள் நித்யா,… முகத்தில் கோபம் கொந்தளிக்க ருத்ரமூர்த்தியாய் நின்று கொண்டிருந்தான் வருணேஷ்,…

அவனது முகத்தை பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தாலும் தன் ஆதங்கங்கத்தை அடக்க முடியாமல் பேசினாள் நித்யா, அவள் பேச பேச வெறி ஏறியது அவனுக்கு, இவளை கைநீட்டி விட்டால் நண்பனை சமாளிக்க முடியாதே என்ற ஒரே காரணத்திற்க்காகவே பற்களை கடித்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், இறுதியாக,… “நல்லா கேட்டுக்கோ, ஏதாவது தப்பு தகிடுதத்தம் பண்ணேன்னு தெரிஞ்சது, குழிதோண்டி புதைச்சிடுவேன் பார்த்துக்கோ” அவன் விரல் நீட்டி மிரட்டவும்…. “இருடா உன்னை என் புருஷன் கிட்ட சொல்லி கொடுக்கிறேன், புதைச்சிடுவியா என்னை நீ ” அவனது திட்டலை கேட்டு உதடு பிதுங்கிய நிலையில் நின்றவளுக்கு தற்சமயம் அவனது கணவன் தான் மனக்கண்ணில் வந்து நின்றான் போலும், அதனால் அவனை வைத்தே  தமையனை மிரட்ட, ‘என்ன கொடுமை இது’ என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக விழித்து போய் நின்றான் வருணேஷ்….

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்