
அத்தியாயம் – 10
“என்னடா வாசல்ல உட்கார்ந்துட்டு இருக்க, அதுவும் குடியே மூழ்கி போன மாதிரி தலையில துண்டை போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்க” தன் வேலை முடிந்து நித்யாவை அழைத்து செல்வதற்காக அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்த ரிஷி, நண்பனின் நிலை கண்டு என்ன ஏதுவென்று புரியாமல் விசாரித்தான்…
“எல்லாம் உன் பொண்டாட்டியால தான்டா, சரிடா ரெண்டு நாள் ரெண்டே நாள்ல எப்படிடா அவளை உன் பக்கம் சாய வச்ச” வருணேஷ் கூறுவது புரியாத ரிஷி நெற்றி சுருங்க பார்க்க, விளக்கமாக நடந்ததை எடுத்துரைத்தான் வருணேஷ்,…
ரிஷிக்கு ஆச்சரியமாக தான் இருந்தது அவன் கூறியதை கேட்டு, தன் மனைவி தன்னை காட்டி தமையனை மிரட்டினாளா? அந்த கண்கொள்ளா காட்ச்சியை மிஸ் பண்ணிவிட்டேனே என்று வருந்தியவன், இதழில் கர்வ புன்னகையுடன் நின்றான்,…
“சத்தியமா அவ கிட்டருந்து இவ்வளவு சீக்கிரம் நான் இதை எதிர்பார்க்கல மச்சி, மனசுக்கு ரொம்ப நிம்மதியவும் சந்தோஷமாவும் இருக்கு, அவ உன்னை விட்டு போக மாட்டான்னு நம்பிக்கை வந்திடுச்சு” என்றவனை சின்ன சிரிப்புடன் ஏறிட்டவன்,… “அவ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே தான்டா” என அவன் தோளில் அழுத்தம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்,…
‘உன் வாய் தான்டா இப்படி சொல்லுது, ஆனா மனசு எவ்வளவு துடிச்சிட்டு இருக்கும்னு எனக்கு தெரியாதா? அந்த கடவுள் நல்லவர்களை கைவிட மாட்டாருனு எனக்கு நம்பிக்கை இருக்கு’ என மனதில் பேசியபடி நண்பனை பின்தொடர்ந்து சென்றான்,….
செந்தூரம் தந்த தேநீரை பருகிய ரிஷி தாங்கள் கிளம்ப போவதை பற்றி கூற, அவரோ இப்போவே மணி எட்டாச்சு இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தான் போகணும் என அன்பு கட்டளையிட ரிஷியும் அதனை மீறவில்லை, நண்பனுடன் அமர்ந்து பேசியவன், உணவு தயாரானதும் மனைவியுடன் அமர்ந்து உணவுண்டு விட்டு, மாமியார் மற்றும் மச்சானிடம் விடைபெற்றுக் கொண்டு தன் மனைவியுடன் தன் வீடு நோக்கி புறப்பட, செந்தூரம் மனம் நிறைவோடு தன் மகளை அவள் கணவனுடன் அனுப்பி வைத்தார், தமையனை கணவனை சுட்டிக்காட்டி மிரட்டிய போதே அவள் மனம் கணவனை ஏற்றுக்கொண்டு விட்டது என சந்தோசம் கொண்டவர், அந்த கருணா மீண்டும் தன் பெண்ணின் வாழ்வில் நுழைந்து விட கூடாது என மனமுருக வேண்டியபடியே மகளை அனுப்பி வைத்தார்…
ரிஷியும் நித்யாவும் வீட்டிலிருந்து புறப்படும் போது மணி இரவு பத்து, தெருவெங்கும் மயான அமைதி நிலவியது, அவர்கள் வீட்டிற்கு செல்ல ஒன்னரை மணி நேரம் பயணம் எடுத்துக் கொள்ளும் என்பதால், நித்யா விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டு உறங்க முயற்சி செய்ய, ஆங்காங்கே அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ரிஷி,.. “தூங்கிட்டியா நித்து” என்றான்,…
“இல்ல, தூக்கம் வரல” அவள் கண்கள் மூடிய நிலையிலேயே பதில் உரைக்க, “சரி அப்போ ஏதாச்சும் பேசிட்டு வாயேன், போரடிக்கிது” அவன் கூறவும், சில நிமிடங்கள் அமைதி காத்தவள்,… “என் அண்ணனும் நீங்களும் எப்போதுலருந்து பிரண்ட்ஸ்” என்றாள் தன் மனதை போட்டு அரித்துக் கொண்டிருந்த கேள்வியை,…..
“ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே” அவன் கூறவும் அவளுக்கு வியப்பாக தான் இருந்தது, வருணேஷின் நண்பர்கள் அனைவரை பற்றியும் தெரியும் அவளுக்கு, அவர்கள் கூட அவளின் தெருவில் உள்ளவர்கள் தான், இவன் எப்போது அண்ணனுக்கு நண்பனானான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டவள், அவன் பள்ளி தோழன் என்று கூறியதும் கொஞ்சம் வியப்பாக தான் இருந்தது, தன் அண்ணனுடன் பல வருடங்கள் சேர்த்து படித்தவனை தனக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கொஞ்சம் வருந்தியவள், ரிஷி விளக்கமாக கூறியதும், அவளும் “ஓஹ்” என்று மனதிற்குள்ளேயே கூறிவிட்டு இருந்து கொண்டவள், அடுத்ததாக “மதியம் எங்கே போனீங்க அவ்வளவு அவசரமா?” என்றாள்…
அவன் போனில் யாருடனோ உரையாடிவிட்டு கிளம்பும் போதே ஏதோ பிரட்சனை இருப்பது போல் தோன்றவே, அப்படி என்ன பிரட்சனையாயிருக்கும் என்று தெரிந்து கொள்ளவே இப்போது அதை பற்றியும் அவனிடம் கேட்டாள்,…
“அதை உன்கிட்ட நிச்சயம் சொல்லனுமா என்ன” தான் போன விஷயத்தை பற்றி சொன்னால் அவள் பயந்து விடுவாளே என்ற நல்ல எண்ணத்தில் தான் அவன் மறைக்க நினைத்து இவ்வாறு கூறினான், அவளோ அவனுக்கு தன்னிடம் அவன் விஷயத்தை பற்றி கூற விருப்பமில்லை போல என தவறாக புரிந்து கொண்டு,… “சொல்ல தேவை இல்லை, நான் உங்க தனிப்பட்ட விஷயத்தை பத்தி கேட்டே இருக்க கூடாது, தெரியாம கேட்டுட்டேன் மன்னிச்சுக்கோங்க” அவள் கடுகடுப்பாக கூறவும்,… ‘தவறாக நினைத்து விட்டாளே’ என்று “இல்ல நித்து உன் கிட்ட சொல்ல கூடாதுன்னுலாம் இல்ல” என அவளை சமாதானம் செய்ய இறங்கினான்,…
“நீங்க ஒன்னும் சொல்ல வேணாம், தயவு செஞ்சு என்கிட்ட பேச்சு கொடுக்காம வாங்க, நான் பாட்டுக்கு செவனேன்னு வந்தேன், போராடிக்கிது எதாச்சு பேசனுன்னு சொல்ல போய் தான் வாய் திறக்க வேண்டியதா போச்சு” என புலம்பி கொண்டு வர, ஆளரவம் இல்லா அச்சாலையில் ஓரமாக வண்டியை நிறுத்தியவன், அவள் பக்கம் திரும்பி,…. “நான் தான் சொல்றேன்ல, சொல்ல கூடாதுனு நினைச்சுலாம் சொல்லாம இல்லைனு, நீ என் நித்து, உன்கிட்ட போய் நான் மறைப்பேனா? அது அவ்ளோ முக்கியமான விஷயம் இல்லை அதான் உன்கிட்ட சொல்ல வேணாம்னு நினைச்சேன்” என அவளை சமாதான படுத்த, ‘நீ என் நித்து’ என்ற வார்த்தைகளில் உருகி போனவள், “ம்ம்ம்” என்று தலையாட்டிவிட்டு சமாதானமாகிவிட்டாள் பொசுக்கென்று,…
“தட்ஸ் மை கேர்ள், இப்படி தான் டக்குனு புரிஞ்சு நடந்துக்கணும், சரி அப்படியே மாமாக்கு ஒரு கிஸ் கொடு பார்க்கலாம்” அவன் கண்கள் மின்ன கேட்கவும்,… “என்னது” என்று விழிகளை விரித்தவள்,.. “மாட்டேன்” என்றாள் சிணுங்கலாய்,..
“என்ன மாட்டேன், இங்க நம்மள தவிர யாரும் இல்லை, ஸோ நீ தயங்காம தரலாம், ம்ம்ம் கமான்” என அவளை துரிதப்படுத்த, “அதெல்லாம் முடியாது, நான்லாம் தர மாட்டேன்” என்றாள் அதே சிணுங்கலோடு….
“நீ தராட்டா போ, நானே எடுத்துகிறேன்” என்று அவன் அவளை நெருங்க,… “ஐயோ இங்க வேணாம், ப்ளீஸ் போங்க” என்று சிணுங்கி கொண்டே அவன் அவளை தள்ள முயற்சிக்க, அவள் புஜத்தை பிடித்து தன்பக்கம் இழுத்தவன், அவளது கீழுதட்டை கவ்விக் கொள்ள, அந்த நேரம் நித்யாவிற்கு யாரோ தங்களை நோட்டமிடுவது போல் உள்ளுணர்வு எழ, சிரமப்பட்டு அவனிடமிருந்து தன் இதழை விடுவித்து கொண்டவள்,…”நீங்க ரொம்ப பண்றீங்க இது வீடு இல்ல” என்றவாறு அவனது நெஞ்சை பிடித்து தள்ளி விட சரியாக அந்த நேரம் ஒரு துப்பாக்கி குண்டு ஒன்று முன்கண்ணாடியை தாண்டி துளைத்து கொண்டு போய் அவன் அமர்ந்திருந்த சீட்டினுள் புதைந்தது, அவள் மட்டும் தள்ளிவிடவில்லை என்றால் சரியாக அவனது நெஞ்சில் பாய்ந்திருக்கும் அந்த குண்டு,…
நொடியில் நடந்து விட்ட இந்நிகழ்வை அவர்கள் அவதானிக்கும் முன்பே, இன்னுமொரு குண்டு, நித்யாவை நோக்கி குறி வைத்து வர, தன் கழுகு விழிகளினால் அதனை கண்டுகொண்டவன், வேகமாக அவளை பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டான், அந்த குண்டு அவள் அமர்ந்திருந்த சீட்டை துளைத்து கொண்டு செல்ல, அடுத்தடுத்து இரண்டு மூன்று என்று துப்பாக்கி குண்டுகள் அவர்களை தாக்க வரவும், அவளை பாதுகாப்பாக சீட்டுக்கடியில் குனிய வைத்து, தானும் மறைந்து கொண்டவன், தன் முதுகுபக்கம் வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு,…”நித்யா….என்ன ஆனாலும் வெளியே வராத” என கண்டிப்புடன் கூறிவிட்டு, மெல்லமாக எட்டி பார்க்க, சற்று தொலைவில் இருசக்கர வாகனத்தில் முகத்தை கருப்பு துணியால் மறைத்து, கையில் துப்பாக்கியை தயாராக வைத்தபடி அமர்ந்திருந்தான் ஒருவன், மறைந்திருப்பவர்கள் கொஞ்சம் தலையை தூக்கினாலும் அவர்களை பொட்டென்று போட்டு விடணுமென்ற எண்ணத்தில் பார்வை மாறாமல் குறி வைத்து கொண்டிருக்க, அதை அறிந்து கொண்ட ரிஷி, மெல்லமாக கார் கதவை திறந்து கொண்டு, அவன் எதிர்பாரா விதமாக அவனை நோக்கி குறி வைத்து சுட, சுதாரித்தவன் பைக்கிலிருந்து குதித்து விட்டான், ரிஷி அவனை உயிருடன் பிடிப்பதற்காக துப்பாக்கியை அதனிடத்தில் வைத்துவிட்டு அவனை பிடிக்க ஓட, கீழே விழுந்திருந்தவனும் பயத்தில் தப்பித்து ஓடிவிடலாமென்று உயிர்பயத்தில் ஓடினான்,…
பாதி தூரம் ஓடிய பிறகு தான் மனைவியின் நியாபகம் வர, தன் எதிரே வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்தவனை நின்று கூர் விழிகளுடன் பார்த்தவன், போனில் யாருக்கோ அழைத்து ஏதோ பேசி
விட்டு வைத்தவன், நித்யாவை காண வந்தான்,…..
பயத்தில் அவள் சீட்டிற்கு அருகில் குறுகி போய் அமர்ந்திருந்தாள், பயத்தில் உடல் நடுங்க விழிகளில் கண்ணீர் விடாமல் வழிந்து கொண்டிருந்தவளை, முதலில் காரிலிருந்து வெளிக்கொண்டு வந்தவன்,.. அவளுக்கு காயமெதுவும் ஆகிருக்கிறதா என்று பரிசோதித்தான்,…
எதுவும் ஆகவில்லை என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டவன்,… “இப்போ எதுக்கு அழற நித்து” அவள் கண்ணீரை துடைத்து விட்டு சர்வ சாதாரணமாக கேட்டவனை, மலங்க மலங்க பார்த்தவள்,… “என்னை யாரோ கொல்ல பார்க்கிறாங்க அதுவும் துப்பாக்கியை வச்சு, பயமா இருக்காதா, பயத்துல அழுகை வராதா” என மீண்டும் கண்ணில் நீர் வழிய உதடுகள் நடுங்க கேட்டாள்,…
“அவன் உன்னை கொல்ல வரல, ஸோ நீ பயப்படவும் வேணாம், அழவும் வேணாம்” அவன் மென்மையாய் கூற,… “என்னை கொல்ல வரலனா? அப்போ உங்களை கொல்ல வந்தானா?” என்றாள் படபடக்கும் மனதுடன்,…
“ஹ்ம்ம்… “என இயல்பாக கூறிவிட்டு அவன் காரிலிருந்து தண்ணீரை பாட்டிலை எடுத்து திறந்தான்,..
“எதுக்கு? எதுக்கு உங்களை கொல்ல வந்தான், நீங்க என்ன தப்பு பண்ணீங்க? சரி துப்பாக்கிலாம் வச்சிருக்கீங்க நீங்க என்ன கொள்ளைக்காரனா?” என்றாள் விழிகள் மிரள,….
“சொல்லுவடி எல்லாம் சொல்லுவ, என்னை பார்த்தா உனக்கு என்ன கொள்ளைகாரன் மாதிரியா தெரியுது” என்று முகத்தில் பொய்யான கோபத்தை காட்டி, அவளிடம் தண்ணீர் பாட்டியை நீட்டியபடியே வினவினான்,…
“இல்லயா? அப்படினா உங்க கிட்ட எப்படி துப்பாக்கி வந்தது” தண்ணீர் பாட்டிலை கையில் வாங்கி வைத்துக் கொண்டு, குடிக்காமல் அவனிடம் கேள்வியை தொடுக்க,… “சொல்றேன், முதல்ல குடி” என அவளை நீரை குடிக்க வைத்தவன், அவள் தன்னையே மிரள மிரள பார்த்து கொண்டிருக்கவும், அவனுக்கு தான் உள்ளுக்குள் என்னவோ செய்தது,….
வெளிப்படையாகவே கூறிவிட்டான்,… “அப்படியெல்லாம் பார்க்காதடி என்னென்னமோ பண்ணுது, அப்புறம் கார் உள்ளேயே வச்சு எசக்கு பிசக்கா ஏதாவது செஞ்சிட போறேன்” அவன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு கூற, அப்போதும் பார்வையை மாற்றாமல் அவனை பார்த்தவள்,… “உங்களை யார் கொலை பண்ண வந்தது” என்றாள்,…
“என் எதிரிகள்ல எவனாச்சும் ஒருத்தனா இருக்கும்” அவன் சாதாரணமாக கூற,… “உங்களுக்கு எவ்வளவு எதிரிகள் இருக்காங்க” என்றாள் அரண்ட பார்வையில்…..
“கணக்கெல்லாம் வச்சுக்கிறதில்ல நித்து” அவன் இவ்வாறு கூறவும் மேலும் அரண்டு போனவள்,… “ஏன்? ஏன் இவ்ளோ எதிரிகளை சம்பாரிச்சு வச்சுக்கிறீங்க, உங்களால இன்னைக்கு நான் செத்து போயிருப்பேன்” என்றதும் அவனின் முகம் சட்டென்று இறுகியது, ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன்,… “சரி உட்காரு மீதியை வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என அவளை காருக்குள் அமர வைத்தவன், தானும் ஏறி காரை வீட்டை நோக்கி செலுத்தினான்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
+1

