Loading

மோதும் மேகங்கள்-14

             மறுநாள் காலையில் பகலவன்  இப்பாரினுள் தன் செங்கதிர்களை பரப்ப மலர்கள் மொட்டவிழுத்து மணம் வீச, வழக்கம்போல் குருவி ஒன்று இசையின் அறையில் இருந்த மூடப்பட்ட ஜன்னலில் தன் அலகால் கொத்திக் கொண்டு இருந்தது. அது கொத்தும் வேளையில் இசை எப்போதும் எழுந்து தயாராக இருப்பாள்.ஆனால் இன்று ஏனோ அவள் உறங்கி கொண்டிருந்தாள்.
டொக் டொக் என்னும் சத்தத்தில் கண்விழித்த இசை  கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு “நேத்து இந்த ஆதி குரங்கு பண்ண டென்ஷன்ல அலாரமே வைக்கமா மறந்துட்டு தூங்கிட்டேன்.நல்ல வேலை புஜ்ஜி வந்து எழுப்பி விட்டுட்ச்சு”  எனப் புலம்பிக் கொண்டே எழுந்து சென்று மேசை மீது வைத்திருந்த டப்பாவை திறந்து அதிலிருந்து சிறிது திணைகளை எடுத்து ஜன்னலைத் திறந்து அவளது புஜ்ஜிக்கு வைத்தாள்.

இசைக்கு விலங்குகள் பறவைகள் என்றால் கொள்ளை பிரியம்.ஆனால் அவள் தாய் கவிதா தான் எதையும் அவளை வளர்க்க விடமாட்டார். இசை ஏதாவது கேட்டால் “யார் அவற்றை கவனித்துக் கொள்வது? நீ உன் வேலையை பார்க்க போய்டுவ. அதுக்கு சோறு வெச்சி, யார் அத சுத்தம் பண்ணிட்டு இருப்பா?”  என கேள்வி எழுப்புவார். ஆகையால் இசை இப்போது வளர்க்கும் செல்ல பிராணி இந்த புஜ்ஜியே ஆகும். அதுவும் கவிதாவுக்கும் முகிலனுக்கும் தெரியாமல்.

     தாமதமாக எழுந்தாலும் விரைவாக தயாராகி கவிதாவின் கையால் உண்டுவிட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று விட்டாள் இசை. என்னதான் கோபம் இருப்பினும் காரியத்தில் கண்ணாக இருக்கும் கண்ணாயிரமே இசை. உதவியாளர் இசை வந்து என்ன பிரயோஜனம்?நடிக்க வேண்டிய கதாநாயகன் ஆதி இன்னும் வரவில்லையே. “ஆதி வந்து விட்டானா?”  என இசை விசாரிக்க வரவில்லை என தகவலே கிட்டியது. இவனுக்கு “அஞ்சு வயசு குழந்தை நினைப்பு.யாராவது ஒருத்தர் வந்து டெய்லி எழுப்பிவிட்டு குளிப்பாட்டி விட்டு,சோறு ஊட்டி, ரெடி பண்ணி பேக் பண்ணி அனுப்பி வைக்கனும்.இவனெல்லாம் வெச்சுட்டு..” என புலம்பிக் கொண்டே ஆதிக்கு அழைத்தாள்.

நேற்று ஆதி இசையின் வீட்டு இருந்து வந்ததிலிருந்தே சந்தோஷத்தில் அவன் நண்பர்களை அழைத்து ட்ரீட் வேற கொடுத்தான்.

தருண்  “என்ன மச்சான் இன்னிக்கு நீயே அதிசயமாக வெளியே போலாம்னு வந்து கூப்பிடற?” எனக் கேட்டதற்கு “சும்மா தான்டா உங்க கூட எல்லாம் வெளிய போயி ரொம்ப நாளாச்சுல்ல” எனக் கூறினான் ஆதி.

“எங்களுக்கு இப்ப மூடு இல்ல” என ஆதி அவர்கள்  அழைத்து, அவன் இருமுறை மறுத்தது போலவே ராகுலும் கூறினான்.

         அவன் மறுப்பதை எல்லாம் காதில் வாங்காமல் அவர்கள் மூவரையும் தான் ட்ரீட் தருவதாக அழைத்து சென்றான் ஆதி. சாரா மட்டும் அவர்களுடன் வெளியே சென்றுவிட்டு அவளது இல்லம் சென்று விட, ராகுல் தருண் ஆதி மூவரும் ஆதியின் இல்லத்திற்கு வந்து இரவு முழுவதும் பேசி சிரித்து கும்மாளம் அடித்துக் கொண்டு தூங்கும்போது விடிந்தே விட்டது.

     ஆதியின் அலைபேசி அலறிக் கொண்டே இருக்க, அவனுக்கு தான் தூக்கத்தில் அது கேட்கவே இல்லை.ராகுல்  அந்த சத்தத்தில் கடுப்பாகி பக்கத்தில் இருக்கும் தலையணையை எடுத்து ஆதி மேல் போட்டு “எருமமாடே எடுத்து தொலையேண்டா.எவ்வளவு நேரம் அடிக்குது” என தன் தூக்கம் கெடும் கடுப்பில் கூறினான்.

“எங்கடா இருக்கு?” என தூக்கத்திலே உளறிய ஆதிக்கு, அவன் மேலேயே கைபோட்டு நைட்லேம்ப் அருகிலுள்ள அவனது அலைபேசியை கையில் எடுத்து திணித்தான் தருண்.

    ஆதி அழைப்பை ஏற்றதும் “டேய் குரங்கே. மணி ஒன்பதரை ஆச்சு இன்னும் தூங்கிட்டு இருக்க.எழுஞ்சி செட்டுக்கு வாடா மாடர்ன் கும்பகர்ணனே”  என இசை கத்திக் கொண்டு இருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“மனசாட்சி இல்லாத மனித குரங்கே” என இசை பல்லை கடித்து திட்டிக் கொண்டே ஆதிக்கு மீண்டும் மீண்டும் அழைக்க ரிங் போய்க் கொண்டே இருந்ததே தவிர அவன் அதை எடுத்த பாடில்லை.

         அபி ஆதியுடன் ஏதோ பேச வேண்டும் என வர,அங்கே அவனது அசிஸ்டன்ட்யே கண்டான்.ஆதி வந்து விட்டானா என அவனும் விசாரிக்க அவன் வரவில்லை அவனது அசிஸ்டண்ட் தான் வந்துள்ளார் என செய்தி கிடைக்கவே அவரிடம் சென்று ஆதி எப்போது வருவான் என கேட்க தான் சென்றுள்ளான்.

‘பரவால்ல ஒரே நாள்ல அசிஸ்டென்ட் தேடி கண்டுபிடிச்சு இருக்காரு.ம்ம்ம் அவ்ளோ பெரிய நடிகர் கூப்பிட்டா யார் தான் வரமாட்டேன்னு சொல்வாங்க’ என நினைத்துக் கொண்டே அவன் செல்ல, ஆதியின் அசிஸ்டெண்ட் அபிக்கு முகத்தை காட்டாமல் பின்புறமாக திரும்பி நிற்க, “எக்ஸ்கியூஸ் மீ” என அழைத்தான் அபி.

       “ஹா” என ஆதியின் அசிஸ்டென்டாக இசை திரும்ப அபிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

       ‘அந்த ஆதி குரங்கு கிட்டலாம் மனுஷன் வேலை செய்வாங்களா?சரியான திமிருப்புடிச்சவன்’ என இசை கூறிய வார்த்தைகள் அவனுக்கு நினைவு வர  “இசை..” என அபி கூறி முடிப்பதற்குள் “அபி உன் போனை தாயேன்”  என இசை முந்திக்கொண்டாள்.

              அபினாஷ் சிந்தித்துக் கொண்டே தனது அலைபேசியை பாக்கெட்டில் இருந்து எடுக்க, இசையை அவன் கைகளில் இருந்து அதை பிடுங்கி கொண்டாள்.

             அபியின் அலைபேசியில் இருந்து ஆதிக்கு அழைக்க அழைப்பை ஏற்றுவனோ, “சொல்லு அபி” என தூக்க கலக்கத்திலேயே கூறினான்.

          “நான் இசை பேசுறேன்”  என கரகரப்பான கூறினாள் இசை.

           இசையின் குரலைக் கேட்டதில் கடுப்பான ஆதி எழுந்து அமர்ந்து கொண்டு  “நீ இசை இல்லடி. என்னுடைய இம்சை”  எனக் கூறினான்.

       “யாரடா இம்சைனு சொல்ற?” என இசை கத்த  “உன்ன தான்டி இம்சை”  என ஆதியும் கத்தினான்.

               இசையும் ஆதியும் மாற்றி மாற்றி கத்திக் கொண்டிருக்க இங்கே அபி இசையை அடக்க முயல,அங்கே தருணும் ராகுலும் ஆதியின் கத்தலுக்கு எழுந்தேவிட்டனர்.
   
       இசை அபிக்கு இணங்கி “சீக்கிரம் வந்து சேரு” என கூறி வைத்து விட்டாள்.

         “வரேன்டி வரேன் உன்ன வந்து வச்சுக்கிறேன்”  என ஆதியும் கத்த ராகுல் தருணிடம், “மச்சான் நான் நேத்தே சொல்லல இவன் கூட போக வேண்டாம்னு. இவனுக்கு ஏதோ ஆயிடுச்சுடா. நேத்து சிரிச்சு பேசிட்டு இருந்தான்.இன்னிக்கு என்னன்னா கத்தி கத்தி தூங்க விடாம பண்றான்” என ஆதியை பற்றி குறை கூறிக் கொண்டிருந்தான்.

         “டேய் நான் கத்தலடா. அவதான்” என ஆதி தான் சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்லக் கூட இல்லை அதற்குள் அவனை கையெடுத்து கும்பிட்டு  “எப்பா சாமி ஆள விடு” எனக் கூறிவிட்டு இருவரும் பக்கத்து அறையில் தூங்க ஓடிவிட்டனர்.

            “நீங்களுமாடா?” என கூறி தலையில் அடித்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தான் ஆதி.

             

       

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்