அனைவரும் கொஞ்சம் பயத்துடனும், அதே சமயம் பதட்டத்துடனும் நிற்க, அவர்களில் ஒருத்தி “எல்லாமே சரியா செஞ்சாச்சுல்ல?” என்று கையை பிசைந்து கொண்டே கேட்டாள்.
“சரியா தான் செஞ்சுருக்கேன். இருந்தாலும் இவருக்கு இவ்ளோ கோவம் வர கூடாது.” என்று ஒருவள் முனுமுனுக்க, இங்கு அவர்களின் பதட்டத்துக்கு காரணமானவனோ அப்போது தான் எழுந்திருந்தான். அவனது கடிகாரம் காலை ஆறு மணி என்பதை சரியாக காட்டிட, அதே சமயம், அவனது கதவு திறக்கப்பட்டது.
இவன் கண்ணை தேய்த்து விட்டு, அவ்வறையின் வாசலை நோக்கி பார்த்தான். அங்கு ஒரு பெரியவர், கையில் ஃப்லாஸ்கும் ஒரு கப்பும் வைத்துக் கொண்டு நிற்க, இவனோ அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு, குளியலறைக்குள் நுழைந்தான்.
சிறிது நேரத்தில் அவன் பல் துலக்கி விட்டு, வெளியே வந்திருந்தான்.
வெளியே வந்தவன், அந்த ஃப்லாஸ்கில் இருந்த காஃபியை அருகில் இருக்கும் கப்பில் ஊற்றிவிட்டு, எதையோ தேட, அது கிடைக்காமல் போனதினால் கடுப்புடன், அந்த கப்பை தூக்கி எறிய, அதுவோ திறந்திருந்த கதவின் வழியாக சென்று ஹாலில் விழுந்தது.
அதை மற்றவர்கள் பயத்துடன் பார்த்திருந்தனர். அந்த சத்தம் கேட்டு, வீட்டில் இருக்கும் அனைவரும் வெளியே வந்திருந்தனர்.
“இன்னிக்கு என்ன ஆச்சு?” என்று ஆஷிஷின் தங்கையான சாக்ஷ்ஷி வர்மா கேட்டாள்.
“Newspaper வைக்க மறந்துட்டேன் மேடம்.” என்க, சாக்ஷ்ஷியின் இதழ்கள் விரிந்தது.
சாக்ஷ்ஷி : தினம் தினம் எதாச்சும் தப்பு பண்ணிட்டே இருப்பிங்களா?” என்று சிரித்தவாரு கேட்டாள்.
அதே சமயம், ஆஷிஷ் வேகவேகமாக கீழிறங்கி வந்திருந்தான்.
அந்த பெரியவரோ தலை குணிந்து நின்றிருக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாதவன், நேராக சாக்ஷ்ஷியிடம் வந்து, “சாக்ஷ்ஷி. இன்னிக்கு உனக்கு காலேஜ் இல்லையா? போய் ரெடியாகு.” என்று கட்டளை இட்டு விட்டு, மற்றவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தனது அறைக்குள் நுழைய, சாக்ஷ்ஷி பெருமூச்சொன்றை விட்டு விட்டு, தனது அறைக்கு சென்றாள். மற்றவர்களோ பயம் நீங்கி, அவர்களும் நிம்மதியாக தங்கள் வேலையை பார்க்க சென்றனர்.
அமித் வர்மா – சதிகா வர்மா. அவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். மூத்தவன், ஆஷிஷ் வர்மா இரண்டாமவள், சாக்ஷ்சி வர்மா மூன்றாமவள், தீக்ஷ்ஷி வர்மா.
*
*
சாக்ஷ்ஷி வேகவேகமாக தயாராகி கல்லூரிக்குள் நுழைந்தாள். அங்கு இவளது தோழிகள் இவள் வந்ததை கூட உணராமல், தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர். அதை உணர்ந்த சாக்ஷ்ஷி, “என்ன ஆச்சு? எதாச்சும் ப்ரச்சனையா???” என்று கேட்டபடி, அந்த திட்டின் மேல் ஏறி அமர்ந்தாள்.
“சாக்ஷ்ஷி. இந்த இயர்க்கு நமக்கு புதுசா ஒரு ப்ரொஃபசர் வராராம். பாக்க ஹேன்ட்சமா இருப்பாங்கன்னு மத்தவங்க சொல்றாங்க.” என்க, இவள் “நீ படிக்க வந்துருக்கியா, இல்ல சைட் அடிக்க வந்தியா?” என்று ஹிந்தியில் கேட்டவள், பின் “மூடிட்டு போ…” என்று தமிழில் திட்டி விட்டு நகர்ந்தாள்.
தனது தோழியை திட்டி விட்டு நேராக தனது வகுப்புக்குள் அவள் நுழைய, அங்கோ சிலர் மட்டுமே அமர்ந்திருந்தனர். இவளும் உள்ளே நுழைந்து தனது இடத்தில் அமர்ந்து கொண்டு, புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்ள, அனைவரும் இவளை மட்டும் வித்தியாசமாக பார்த்தனர்.
அனைவரும் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், இவள் மட்டும் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தால், வித்தியாசமாக தெரியாதா என்ன?
அதே தான் இங்கேயும். சாக்ஷ்ஷி ஒரு புத்தக புழு. எப்போதும் புத்தகத்தை வைத்துக் கொண்டே திரிபவள். புதிது புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவள். இப்போது அவள் Stephen Hawking எழுதிய ஒரு புத்தகத்தை தான் படித்துக் கொண்டிருக்கிறாள். வசதியானவள் என்பதால், தனக்கு வேண்டுமென்பதை எளிதாக வாங்கி விடுவாள். அவளுக்கென்று தனி நூலகத்தையே வீட்டில் வைத்திருக்கிறாள். என்ன, அது இவளது அறையை விட மிக பெரியது.
சிறிது நேரத்தில், இவளது வகுப்பிற்கு வரும் அந்த ஹேன்ட்சம் ப்ரொஃபசர் உள்ளே நுழைய, இவள் புத்தகத்தை எடுத்து உள்ளே வைத்து விட்டு சுற்றிலும் பார்த்தாள். அனைவரும் வகுப்பிற்குள் வந்து விட்டார்கள் என்பதையே அவள் இப்போது தான் உணர்ந்தாள்.
அனைவரும் எழுந்து நிற்க, அனைவருள் ஒருவளாக இவளும் எழுந்து நின்றாள்.
“Hi guys! I’m Avinash. You can introduce yourself.” என்று கூறியவன், அமைதியாய் சென்று அருகிலுள்ள மேசையில் அமர்ந்து கொண்டான்.
முதலில் சாக்ஷ்ஷி எழுந்து, “I’m Sakshi Varma.” என்று கூறி விட்டு, அமர்ந்து விட்டாள். அவளை தொடர்ந்து மற்றவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள, அவினாஷின் உதடுகள் லேசாய் விரிந்தன.
அவினாஷ் : “ok. எல்லாரும் உங்கள நீங்களே இன்ட்ரோ குடுத்துட்டிங்க. இப்போ நான் உங்கள ஒரு கேள்வி கேட்பேன். அதுக்கு நீங்க பதில் சொல்லனும். என்னன்னா… உங்களுக்கு பிடிச்ச ஜானர் என்ன? I mean, படிக்கவோ, பேசவோ இல்ல பாக்கவோ. It can be anything. Movies, Stories etc.” என்று பேனாவை சுழற்றியவாரு கூற, இப்போதும் முதலில் எழுந்ததென்னவோ சாக்ஷ்ஷி தான்.
சாக்ஷ்ஷி : “எனக்கு Horror, Fantasy, Science Fiction பிடிக்கும் sir.” என்று கூற, அவன் “Ohh. Good. மத்தவங்களும் முதல்ல எழுந்து பேசலாமே. பேசுறதுக்கு தயங்க வேண்டாம். யார் வேணா என்ன வேணா பேசலாம். அது மத்தவங்கள offend பண்ணாம இருக்குற வரைக்கும்.” என்றவன், பாடங்களை நடத்த துவங்கினான்.
*
*
ஆஷிஷ் வேகவேகமாக படிகளை எறி தனது அறை இருக்கும் தளத்திற்குள் நுழைந்தான். அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து, அவனின் பி.ஏவும் வேகவேகமாக படிகளை ஏறினான்.
‘நீங்க தான் காலைல சாப்ட சாப்பாட செரிக்க வைக்க ஏறுறிங்க. நான் ஏன் ஏறனும்??’ என்று மனதில் நினைத்தாலும், ஆஷிஷிடம் கேட்கும் அளவிற்கு அவனுக்கு துணிவில்லை.
வேகமாக தனது அறைக்குள் நுழைந்தவன், தனது பி.ஏவை பார்க்க, அவனோ “அருள் சார் இன்னும் வரல சார்.” என்றான். அருளும் தனது தந்தையின் கம்பனியை விட்டு விட்டு வந்தவன் தான். இருவரின் குறிக்கோளும் ஒன்றாகவே இருக்கும். இருவரும் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
ஆஷிஷ் : “ஏன் வரல? ஏதாச்சும் ப்ரச்சனையா?”
“தெரியல சார். நீங்க வந்தா, அவரோட அப்பார்ட்மென்ட்க்கு வர சொன்னாரு சார்.” என்றான். அவன் கூறிய அடுத்த நொடி, அவன் அவனது இருக்கையில் இருந்து எழுந்திருந்தான்.
*
*
“மம்மி… டாடி…” என்று கத்திக் கொண்டிருந்தாள் அவள். பால் போன்ற முகம். வெறுப்பை கொட்டுபவர்களிடமும் அன்பை கொட்டும் குனம். மேக்கப் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். அவளுக்கு மேக்கப் போடுவதும், போட்டுக் கொள்வதும் மிகவும் பிடிக்கும்.
“என்ன அதிதி?” என்று கேட்டார் அவளின் தாய்.
அதிதி : “ம்ம்மா. நான் வெச்சுருந்த ப்ரஷ் எங்க போச்சு?” என்று சினுங்கினாள். அவள் கேட்பது பல் துலக்கும் ப்ரஷ் இல்லை. Foundation போட பயன்படுத்தப்படும் Brushஐ கேட்கிறாள்.
“நான் தான் அத பூசிட்டு திரியுறேன் பாறு. என் கிட்ட வந்து கேக்குற. போய் தேடு டி.” என்று கத்தி விட்டு அவர் சென்று விட்டார். அவர் சென்றதும், முகத்தை சுறுக்கியவள், குப்பை போல் கிடக்கும் அந்த பெட்டியை மீண்டும் கலக்கினாள்.
அரை மணி நேரம் அரை நொடி போல் கழிய, அதிதி வெற்றிகரமாக தனது ப்ரஷ்ஷை கண்டு பிடித்து விட்டு, சென்று கேமராவின் முன் அமர்ந்தாள். அவளுக்கு மேக்கப் மட்டுமின்றி, யூ ட்யூபிலும் ஆர்வம் அதிகம்.
கேமராவின் முன் அமர்ந்து, ஒரு மேக்கப் டுட்டோரியலை செய்து முடித்து விட்டு, அந்த இடத்தை எல்லாம் சுத்தப்படுத்தி விட்டு, அந்த அறையிலேயே இருக்கும் சோஃபாவில் தொப்பென அமர்ந்தாள்.
ஐந்து நிமிடம் கழித்து எழுந்தவள், தனது மேக்கப்பையெல்லாம் ரிமூவர் கொண்டு அழித்தவள், moisturizerஐ எடுத்து முகத்தில் தேய்த்து விட்டு, உறங்க சென்றாள்.
அதிதிக்கு தந்தை இல்லை. தாய் மட்டுமே. அவளுக்கு ஒரு தமையனும் இருக்கிறான். அவனது பெயர் கார்த்திகேயன்.
*
*
அடுத்த நாள் காலை :
அதிதி வேகமாக எடிட்டிங் செய்து கொண்டிருந்தாள். முந்தின நாள் இரவே செய்து முடிக்க வேண்டிய வேலை. இப்போது தான் செய்து கொண்டிருக்கிறாள்.
ஒரு மணி நேரத்தில் அதை செய்து முடித்தவள், அதை தனியாக எடுத்து வைத்து விட்டு குளிக்க சென்றாள். இன்று அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க செல்கிறாள்.
அப்படியே மளிகை சாமான்களையும் வாங்க திட்டம் போட்டிருந்தாள்.
குளித்து விட்டு, ஒரு பிங்க் கலரில் டி ஷர்ட் அணிந்து, ஜீன்ஸ் போட்டிருந்தாள்.
மெதுவாக அவள் அறையை விட்டு வெளியே வர, அவளது தாயும் தமையனும் பேசியபடி அமர்ந்திருந்தனர்.
அதை பார்த்தவள், “அம்மாவும் பையனும் நல்லா அரட்டை அடிக்குறிங்க போல” என்று கூற, கார்திக்கோ அவளை பார்த்து முறைத்தான்.
அதிதி : “சரி… நான் அப்டியே ஷாப்பிங் போயிட்டு வந்தர்ரேன். வீட்டுக்கு மளிகை சாமான்லாம் வாங்கனும்.” என்க, கார்திகேயன் “போய் தொலையும்.” என்று கூறி விட்டு தனது தாயிடம் விடைபெற்று வேலைக்கு சென்றான்.
அவன் செல்வதை முறைப்புடன் பார்த்த அதிதி, தாயிடம் “போயிட்டு வரேன்மா.” என்று கூறி விட்டு வெளியேறினாள்.
*
*
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.